We went through Nandhikkadal

A collection of tragic experiences during the war.


අපි නන්දිකක්කඩල් හරහා ගියා

යුද්ධය පැවති සමයේ ශෝචනීය අත්දැකීම් එකතුවක්.


பிள்ளைகளுடன் நந்திக்கடலூடாக சென்றோம்

யுத்த காலத்தில் ஏற்பட்ட துன்பகரமான அனுபவங்களின் தொகுப்பு.CMP/MN/MW/SAL/04

I, Mrs. A. Loorthakevi was born on 25.03.1964 at Adampan hospital and live in Saalampan village in Mannar district. My father was doing agriculture. Mother was engaged in housework. I have ten brothers. I am the 7th child of my parents. My father worked hard in agriculture, brought us up well and also educated us well. I studied up to Grade 11. As my father felt ill, I could not study. I stayed at home and did house work. When I was 25 years old, my parents gave me in marriage. I got my first child, a girl in 1991. Next was a male child and was born in January 1997. My husband worked in the Agriculture Department. We lived a happy life with his income.

When the war between L.T.T.E. and army took place in 1991, we displaced to Madu. We experienced lot of difficulties there and again in 2002, we returned to Saalampan, our native place. While living there, again war began in 2007. We displaced with our children to Mulangkaavil, Vanneri, Jeyapuram and so on to many places and finally went to Mulliwaikkal.

While displacing, we suffered a lot with our children to find food. We had to bare all pain to save our children. When we went to Nanthikkadal to go to the army, shell attacks and shootings took place. However, as we thought of safeguarding our children and while going through Nanthikkadal, cluster bombs were fired and my two children were wounded. We could not treat their wounds. Then, the army took us to Mancholai hospital in an ambulance. Then they took us to Anuradhapura hospital by helicopter. Later, we were transferred to Vavuniya hospital.

During the final stage of war, my husband was missed in the crowd. Later he came into the army controlled area. My husband was searching for us. We also were searching for him. When we enquired the people known to us about him, we were told that he was in the Zone 4 Camp in Vavuniya. We went to the Camp to meet him but he was not there. He was at hospital and later came to the camp. We felt very happy seeing him.

We stayed in the camp for 5 months continuously. Then in October 2009, we were resettled in our own village Saalmpan. As our house had been damaged in the war, we were given assistance to repair the damages.

We repaired the house and lived there happily. Later, we were given a housing scheme by an organization. The government had been providing us various grants.

My family is now living very happily. My elder daughter is married and lives happily. While studying, my son is engaged in agriculture also. Now, I have no problems and am content with my life.

I am now engaged in various social activities in order to develop our village. Especially, I am the President of the Women’s Society and have been a member of the Society since 2004. Also, I am the Treasurer of the Library. I am very keen on the wellbeing of the society and am engaged in various activities for the development of it. I also help students to get various grants for education. As I informed the relevant authorities about the dilapidated condition of our village road, it is now being renovated. If the others also could spare some time and work for the society, we could well develop our village.

The future generation should be saved from destruction. As the society is now modernized, from children to everyone is being abused these days. We all have the responsibility of safeguarding them. The government also should implement this. The present society is addicted to drugs. Therefore, a society non – addicted to drugs be created.

Our village got the name “Saalmpan” as there were lot of “Saalmpan” trees in the area. Also there is a tank called “Salmpan Kulam”. There are about 75 families living in this village and the main occupation of the people is agriculture.

A.Loorthakevi
Saalampan
Aaandankulam
Mannar
ඒ. ලූර්තුදේවි වන මම 25.03.1964 අඩම්පන් රෝහලේ උපත ලැබුවා. දැනට මන්නාරම දිස්ත්‍රික්කයේ සාලම්බන් ග‍්‍රාමයේ ජීවත් වෙනවා. පියා සුළු වශයෙන් ගොවිතැන් කටයුතුවල යෙදී සිටියා. මව ගෘහිණියක්. මට සහෝදර සහෝදරියන් 10 දෙනෙක් සිටිනවා. මම මගේ දෙමව්පියන්ට 7 වෙනි දරුවා. මගේ පියා දුක් මහන්සිවී ගොවිතැන් කටයුතුවල යෙදී අපව හදා වඩා ගත්තා. අපට හොඳ අධ්‍යාපනයක් ලබා දුන්නා. මා වසර 11 දක්වා ඉගෙන ගත්තා. පියා අසනීප වූ හේතුවෙන් දිගටම අධ්‍යාපනය කර ගන්න හැකියාවක් ලැබුණේ නැහැ. මා නිවසේ සිට ගෙදර දොර වැඩ කටයුතු කරගෙන සිටියා. පසුව මට අවුරුදු 25 වන විට දෙමව්පියන් මාව විවාහ කර දුන්නා. පළමුවැනි ගැහැණු ළමයා 1991 වසරේදී ලැබුණා. දෙවැනි පිරිමි දරුවා 1997 දී ඉපදුණා. මගේ සැමියා කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුවේ සේවය කළා. ඔහුගේ ආදායමෙන් අපි සතුටින් ජීවත් වුණා.

1991 වසරේ හමුදාව හා විමුක්ති කොටි සංවිධානය අතර යුද්ධය ඇවිලූණු නිසා අපි අවතැන්වී මඩු ප‍්‍රදේශයේ පදිංචි වුණා. එහි විවිධ දුක් කරදරවලට මුහුණ දුන්නා. නැවතත් 2002 වසරේ අපේ මුල් ගමවන සාලම්බන් ගම්මානයට ඇවිත් පදිංචි වුණා. නැවතත් 2007 වසරේ යුද්ධය පටන් ගත්තා. අපගේ දරුවන් සමඟ අවතැන්වී මුලන්ගාවිල්, වන්නේරි, ජයපුරම් වැනි විවිධ ප‍්‍රදේශවල ජීවත් වුණා. අවසානයේදී අපි මුල්ලිවයික්කාල් ප‍්‍රදේශයට පැමිණියා.

අවතැන්වීමේදී අපිට ආහාර හෝ ජලය ලැබුණේ නැහැ. දරුවන් සමඟ දහදුක් වින්දා. යුද්ධයේ බලපෑම්වලින් මගේ දරුවන් ආරක්ෂා කර ගැනීමට නොයෙකුත් කරදරවලට මුහුණපෑමට සිදුවුණා. හමුදාව වෙත භාරවීම සඳහා නන්දිකඩාල් හරහා ගමන් කරන විට ෂෙල් ප‍්‍රහාර, වෙඩි ප‍්‍රහාර මධ්‍යයේ තමයි අපි ගියේ. පොකුරු බෝම්බද වැටුණා. එම අවස්ථාවේ මගේ දරුවන් දෙදෙනෙකු තුවාල ලැබුවා. ඔවුන්ට බෙහෙත් බැඳීමට අවස්ථාවක් තිබුණේ නැහැ. පසුව හමුදාව අපව ගිලන් රථයක නංවා ගෙන මාන්චෝලෙයි රෝහල වෙත ගියා. ඉන්පසු හෙලිකොප්ටරයකින් අනුරාධපුර රෝහලට රැගෙන ගියා. අවසානයේදී වවුනියා රෝහලට මාරු කළා.

අවසන් යුද්ධය සිදුවන අවස්ථාවේ ජන ගංගාවේ මගේ සැමියා අතුරුදහන් වුණා. පසුව ඔහු හමුදා පාලන ප‍්‍රදේශයට පැමිණියා. ඔහු අපව සොයා ගෙන සිටියා. අපි ඔහුව සොයා ගෙන හැම තැනම ගියා. පසුව දන්නා හඳුනන අයට මේ බව පැවසූ විට ඔහු වවුනියාවේ කලාප 4 කඳවුරේ සිටින බව ඔවුන් සඳහන් කළා. ඔහු බැලීම සඳහා අප කලාප 4 කඳවුරට ගියා. නමුත් ඔහු එහි සිටියේ නැහැ. ඔහු අප සොයා රෝහලට පැමිණියා. ඉන්පසු ඔහු කඳවුරට ආවා. ඔහු දැකීමෙන් අපට දැඩි සතුටක් දැනුණා.

අපි කඳවුරේ මාස 5 ක් රැඳී සිටියා. පසුව 2009 වසරේ ඔක්තෝබර් මාසයේ නැවතත් අපේ මුල් ගම වන සාලම්පත් ගමේ පදිංචි කෙරුවා. අපේ නිවසට යුද්ධයෙන් හානිවී තිබූ නිසා අඩක් පමණ වන්දි මුදලක් ලබා දුන්නා. අප එම නිවස අලුත්වැඩියා කර දැනට එහි සතුටින් ජීවත් වෙනවා. ඉන්පසු ආයතනයක් අපට නිවාස යෝජනා ක‍්‍රමයක් යටතේ නිවස තනා දුන්නා. රජයෙනුත් අපට විවිධ සහනාධාර ලැබුණා.
අපේ පවුල දැනට ඉතා සතුටින් ජීවත් වෙනවා. මගේ වැඩිමහල් දියණිය විවාහවී සතුටින් සිටින අතර, මගේ පුතා අධ්‍යාපනය ලබමින් සිටිනවා. ගොවිතැන් කටයුතුවලත් යෙදෙනවා. දැන් කිසිම ප‍්‍රශ්නයකින් තොරව අපි අපේ ජීවිතය ගෙවනවා.

අපේ ගම සංවර්ධනය කිරීම සඳහා මා දැන් විවිධ ක්‍රියාකාරකම්වල යෙදී සිටිනවා. විශේෂයෙන් කාන්තා සංවිධානයේ සභාපති වශයෙන් කටයුතු කරන අතර, 2004 වසරේ සිට කාන්තා සංවිධානයේ සාමාජිකත්වය දරනවා. පුස්තකාලයේ භාණ්ඩාගාරික තනතුරද දරනවා. මම සමාජය කෙරෙහි උනන්දුවක් දක්වන අතර සමාජ සංවර්ධනය සඳහා විවිධ ක්‍රියාකාරකම්වල යෙදෙනවා.

අධ්‍යාපනය ලබන දරුවන්ට විවිධ සුභසාධන වැඩසටහන් අප ක්‍රියාත්මක කරවා, අපේ මාර්ග දැඩි ලෙස අබලන්වී තිබෙන තත්ත්වය තුළ අපි එය පිළිබඳ අදාළ බලධාරීන්ට දැනුම් දුන්නා. දැනට එම මාර්ග පිළිසකර කරමින් සිටිනවා. මා වාගේ අන් අයත් සමාජය සඳහා තමන්ගේ කාලය කැපකර කටයුතු කළහොත් අපගේ ගමට මනා සංවර්ධනයක් ළඟා කර ගත හැකිය.

අනාගත සමාජය පිරිහීමෙන් තොරව යහපත් සමාජයක් විය යුතුයි. දැන් ශිෂ්ඨාචාරය වැඩිදියුණු වී තිබෙන නිසා දරුවන්ගේ සිට සියලු දෙනාගේම විවිධ පිරිහීම්වලට ලක්වී සිටිනවා. ඔවුන්ට ආරක්ෂාව ලබාදීම අප සියලු දෙනාගේම වගකීමක් වෙනවා. මෙය රජයත් ක්‍රියාත්මක කළ යුතුයි. අද පරම්පරාව මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහිවී සිටිනවා. එම නිසා මත්ද්‍රව්‍යවලින් තොර සමාජයක් ගොඩ නැගිය යුතුය.

සාලම්බන් ග‍්‍රාමය එම නම ඇතිවීමට හේතුව එහි බොහෝ සාලම්බන් ගස් තිබීමයි. මෙම ගමේ සාලම්බන් වැවකුත් තිබෙනවා. මෙහි පවුල් 75 ක් පමණ පදිංචි වී සිටින අතර ඔවුන් බොහෝ දෙනෙක් කෘෂිකර්මය තමන්ගේ රැකියාව වශයෙන් කරනවා.

ඒ. දුර්තුදේවි.
සාලම්බන්,
ආන්ඩාන්කුලම්,
මන්නාරම.CMP/MN/MW/SAL/04

திருமதி. ஏ லூஈத்தகேவி ஆகிய நான் 1964.03.25ம் திகதி அடம்பன் வைத்தியசாலையில் பிறந்து சாலம்பன் கிராமத்தில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறேன். அப்பா விவசாயத்தினைத் தொழிலாக செய்து வந்தார். எனக்கு பத்து சகோதரர்கள். நான் எனது தாய் தந்தைக்கு 7வது பிள்ளை. எம்மை அப்பா சரியான கஸ்டப்பட்டு விவசாயத்தினை செய்துஎம்மை சிறப்பாக வளர்த்ததுடன் எம்மை பாடசாலையில் நன்றாக படிக்க வைத்தார். நான் தரம் 11ஆம் வகுப்புவரையும் படிச்சேன். அப்பாவுக்கு வருத்தம் வந்ததனால் தொடர்ந்து என்னைப் படிக்க வைக்கவில்லை. நான் வீட்டில் இருந்த வீட்டு வேலைகளை பார்த்து வந்தேன். பின்னர் 25 வயதில் எனக்கு எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். முதல் குழந்தை (பெண்) 1991ஆம் ஆண்டு கிடைத்தது. அடுத்தது ஆண் குழந்தை 1997ஆம் ஆண்டு பிறந்தது. எனது கணவர் விவசாயத் திணைக்களத்தில் வேலை பார்த்து வந்தார். அவரின் சம்பாத்தியத்தில் எமது வாழ்க்கை இனிதே சிறப்பா நடைபெற்றது.

1991ஆம் ஆண்டு எல்.ரி.ரி.ஈக்கும் இராணுவத்திற்கும் போர் ஏற்பட்டதனால் இடம்பெயர்ந்து மடுவில் குடியமர்ந்தோம். அதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மீண்டும் 2002ஆம் ஆண்டு எமது சொந்த இடமாகிய சாலம்பனில் குடியமர்ந்து வாழ்க்கையினை நடத்தி வந்த போது மீண்டும் எமது பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்து முழங்காவில், வன்னேரி, ஜெயபுரம் என பல்வேறு இடங்களாக இடம்பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் வரைக்கும் இடம்பெயர்ந்தோம்.

இடப்பெயர்வின் போது உணவு உண்பதற்கு எனது பிள்ளைகளுடன் பல்வேறு கஸ்டப்பட்டதுடன் போரின் தாக்கத்தில் இருந்து எனது பிள்ளைகளை காப்பாற்ற எத்தனையோ துன்பங்களினை அனுபவித்து வந்ததுடன் இராணுவத்திடம் செல்வதற்காக நந்திக்கடலுக்குள் செல்லும் போது செல் வீச்சு துவக்குச் சூடுகள் இடம்பெற்றது. ஆயினும் எமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என நினைத்து எனது பிள்ளைகளுடன் நந்திக்கடலூடாக சென்றோம். செல்லும் போது கொத்துக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. அப்போது எனது பிள்ளைகள் இருவரும் காயத்துக்கு உள்ளாகினார்கள். அவர்களுக்குமருந்து கட்டவே எங்களால முடியவில்லை. பின்னர் இராணுவம் எங்களை அம்புலன்சில ஏத்திக் கொண்டு போனாங்க. மாஞ்சோலை வைத்திசாலைக்கு பின்னர் கெலியிலை எங்களை ஏத்திக் கொண்டு போய் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு போனாங்கள். பின்னர் எங்களை வவுனியா வைத்தியசாலைக்கு மாத்தினார்கள்.

இறுதிக் கட்டம் நடைபெற்ற யுத்தத்தின் போது எனது கணவர் சனநெருக்கடியில் காணாமல் போனார். பின்னர் அவர் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்திட்டார். எங்களைக் காணவில்லை என எனது கணவர் தேடிக் கொண்டு திரிந்தார். நாங்களும் அவரைத் தேடி தேடி அலைந்து திரிந்தோம்.பின்னர் தெரிந்தவர்கள் அறிந்தவர்களிடம் விசாரித்த போது அவர் வவுனியா சோன் 4 முகாமில் இருப்பதாக சொன்னார்கள். நாங்களும் அவரைப் பார்க்க சோன் 4 முகாமுக்குச் சென்றோம்.

அவரைக் காணவில்லை. அவர்எங்களைத் தேடி வைத்தியசாலைக்கு சென்றார். பின்னர் முகாமுக்கு வந்தார். அவரைக் கண்டு மிகவும் சந்தோசமாக இருந்தோம்.

தொடர்ந்து 5 மாதங்களாக முகாமில் இருந்து வந்தோம். பின்னர் 2009ம் ஆண்டு 10ஆம் மாதம் எங்களை மீண்டும் எமது சொந்தக் கிராமமான சாலம்மன் கிராமத்தில் மீள்குடியமர்த்தினார்கள். பின்னர் எங்களுக்கு போரினால் வீடு சேதமுற்று இருந்ததால், அதற்கான பகுதி அழிவு தந்தார்கள். நாங்கள் அதனைத் திருத்தி தற்போது சந்தோசமாக இருந்தோம். பின்னர் எங்களுக்கு நிறுவனம் ஒன்றினால் வீட்டுத் திட்டம் ஒன்று கட்டித் தந்தார்கள். அத்துடன் எங்களுக்குபல்வேறு உதவிளை அரசாங்கம் செய்துவந்தது.

எனது குடும்பம் தற்போது மிகவும் சந்தோசமாக இருப்பதுடன் எனது மூத்த மகள் திருமணம் செய்து சநதோசமாக இருப்பதுடன் எனது மகன் தற்போது படித்து வருவதுடன் விவசாயத்தினையும் செய்து வருகின்றான். தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சந்தோசமாக வாழ்க்கையினை நடத்தி வருகின்றேன்.

நான் இப்போது எமது கிராமம் அபிவிருத்தி அடைய வேண்டும் என பல்வேறு செயற்பாடுகளைச் செய்து வருகின்றேன். குறிப்பாக மாதர் சங்கத்தில் தலைவியாகவும் இருப்பதுடன் 2004ஆம் ஆண்டில் இருந்து மாதர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து வருகின்றேன். மற்றும் படிப்பகத்தின் பொருளாளராக இருந்து வருகின்றேன். நான் சமூகத்தின் மீது அக்கறையாக இருந்து வருவதுடன் சமூகத்தின் அபிவிருத்திக்காக செயற்பாடுகளை செய்து வருகின்றேன்.

நான் படிக்கும் பிள்ளைகளுக்கும் பல்வேறு உதவித் திட்டங்களை எடுத்துக்குடுத்து இருப்பதுடன் எமது கிராமத்தின் வீதி பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பொறுப்பான அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியதனால் அந்த வீதி தற்போது திருத்தப்பட்டு வருகின்றது. என்னைப் போல் மற்ற மக்களும் சமூகத்துக்காக கொஞ்சு நேரத்தினை ஒதுக்கி செயற்பட்டதால் எமதுகிராமத்தினை சிறப்பாக அபிவிருத்தி அடைய வைக்கலாம்.

எதிர்கால சமூகமானது சீரழியாமல் சிறப்பா இருக்க வேண்டும். இப்போது நவநாகரிகம் அதிகரித்து உள்ளதால். சிறுவர்கள் முதல் இன்று பல்வேறு சீரழிவுக்கு உள்ளாகி கொண்டு வருகின்றனர். இவர்களினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு. இதனை அரசாங்கமும் செயற்படுத்த வேண்டும். இன்றைய சமூகம் போதைக்கு அடிமையாகி உள்ளது. எனவே போதையற்ற சமூகத்தினை உருவாக்க வேண்டும்.

சாலம்மன் கிராமமானது பெயர்வரக் காரணம். அங்கு அதிக சாலம்பன் மரங்கள் நின்றதால் இக்கிராமத்தினை சாலம்மன் கிராமம் என அழைக்கப்படுவதுடன் இங்கு சாலம்மன் குளம் என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. இக்கிராமத்தில் 75 வரையான குடும்பங்கள் குடியிருந்து வருவதுடன் பெரும்பாலான மக்கள் விவசாயத்தினையே தமது தொழிலாக செய்து வருகின்றனர்.A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License