Unforgettable incident in my life

The story of a woman who lost her life in ethnic conflict.


මගේ ජීවිතයේ අමතක නොවන සිද්ධිය

ජනවාර්ගික ගැටුමට ඇගේ ජීවිතය අහිමි වූ කාන්තාවක් පිළිබඳ කතාව.


எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்

இனக்குழப்ப காலத்தில் தனது இளைமைக்காலத்தை தொலைத்த பெண்ணின் கதை.



CMP/MN/MW/SAL/06

I was born on 10.04.1985 at Salampan as the eldest child of Anthony and Sepamali. My first sister was born after 5 years of my birth. Then second sister, then third sister. Even if my father was a differently abled person, our mother brought up four of us by engaged in grinding flour, grinding chilli powder and agriculture.

I got my pre-school education at ‘Adaikkalamatha’ Pre-school. When I was studying in Grade one at Manmarathu R.C.T.M School, we were affected by the invasion of the Indian army which took place in 1990 and later in the war by the army in 1990, we displaced to Madu and temporarily stayed there for one year. During the Madu feast, I was lost and saved by our village headman.

From Grade 6, I studied at Mn/Aandankulam R.C.T.M School. There was an unforgettable incident in my life. My sister studied in Grade 5. I got 5 marks for English and my sister got 100 marks. Indicating this, I was beaten by our teacher and I hated studying. Nevertheless, having no choice, I continued studies up to Grade 11. I engaged in sports and got Championships in District and Provincial levels. As I could not continue, I stopped studies in the middle.

In 2003, I was joined in the Liberation Tigers movement on the basis one person per house, and after much struggling for two years, I joined my parents and sisters. There, I was a driver and I got ‘Karate’ training and movement training and worked there toiling up physically. Later, in 2006, I came to Mullaitivu and lived with my father, mother, sisters and auntie’s family. As I was injured in Muhamalai, I could not walk and they looked after me. They told me that I get illness as I have injured. Then in the shell attack in Mulliwaikkaal, my mother, father, three sisters, uncle, brother and I were all injured.

When entering into the army controlled area, two of my cousins died on the spot in shell attack at Nandikkadal area. Then we entered into barbed wire fenced area. Then all were in queue. As it was said that all whether they had joined the Liberation Tigers organization even for a day or half they should be kept, all surrendered to the army. But I did not surrender as my grandmother was sick. Then we went to Cheddikulam Aananda Kumaraswami Camp by us and stayed there. When we were living in the camp without food and clothing, the ICRC provided everything and basic facilities. Due to the bad weather condition in the camp, one of my sisters and grandmother got fever. Although they took medicines, firstly my grandmother died. Then my sister who was 22 years old was treated in the camp for fever and the illness worsened. Owing to the mistake of the translators in the camp, my sister was sent to Vavuniya General Hospital only after she lost consciousness and she expired there. Then with the help of our uncle, we buried her body in Poonthoddam in Vavuniya and again we were sent to the camp. Then my mother became a psychiatric patient.

After undergoing all sufferings, owing to fear of the army, I got married and resettled in our village in 2009. I got a male child and now we are gradually coming up economically in life. Now, I am working as a three wheeler driver.
Thanks.


Note:
Personal Opinion
I want to go up in life and want to make my child a doctor.
Society
• Crimes should be addressed.
• Corruption should be eliminated
• Reconciliation should be created.





CMP / MN / MW / SAL / 06

මම ඉපදුණේ 1985 අප්රේල් 10 වන දින සල්පම්පන්හි ඇන්තනී සහ සෙසුමාලිගේ වැඩිමහල් දරුවා ලෙසය. මගේ පළවෙනි සොහොයුරිය ඉපදුණේ අවුරුදු 5 කට පසුවය. දෙවනි සහෝදරිය, තුන්වෙනි සහෝදරිය. මගේ තාත්තා විවිධ ආබාධිත පුද්ගලයෙක් වුවද, අපේ අම්මා හතරක් පිටි ඇඹරීම, ඇඹරුම් මිරිස් කුඩු හා කෘෂිකාර්මික කටයුතුවල නියැලුණා.

මම මගේ පෙර පාසැල් අධ්යාපනය ලබා ගත්තේ අඩික්කලමතා පෙර පාසලෙන්. මාන්මරුත් ආර්.සී. ටී.එම්. පාසලේ පළමු ශ්රේණියේ ඉගෙනුම ලබන විට 1990 දී ඉන්දියාවේ හමුදාව ආක්රමණය කිරීමත් 1990 දී හමුදාව විසින් යුද්ධයෙන් පසුව ආක්රමණයට ලක් වූ අතර, අපි මඩු වෙත අවතැන් වූ අතර වසරක් තාවකාලිකව එහි රැඳී සිටිමු. මඩු මංගල්යයේ දී මම අපේ ගමේ ප්රධානියා විසින් අහිමි කරගනු ලැබුවා.

6 වන ශ්රේණියේ සිට, මම / ඇන්ඩන්කුලම් ආර් සී. මගේ ජීවිතයේ අමතක නොවන සිද්ධියක් තිබුණා. මගේ සොහොයුරිය 5 වන ශ්රේණියේ ඉගෙන ගත්තා. මට ඉංග්රීසි ලකුණු 5 යි. මගේ සහෝදරිය ලකුණු 100 යි. මේක පෙන්නන්න, අපේ ගුරුවරයා මට පහර දුන්නා. මම පාඩම් කරන්න අකමැති වුණා. කෙසේ වෙතත්, කිසිදු විකල්පයක් නොමැතිව මම 11 වන ශ්රේණියට අධ්යාපනය හැදෑරීය. මම ක්රීඩා කටයුතුවල යෙදී සිටියෙමි. දිස්ත්රික් හා පළාත් මට්ටමින් ශූරතාවලියක් ලැබිණි. මම දිගටම කරගෙන ගිය නිසා මම මැද භාගයේ අධ්යාපනය නතර කළා.

වර්ෂ 2003 දී මා එක් පුද්ගලයෙකුගේ පදනම මත එක් එක් පුද්ගලයා යටතේ මා එක්රැස් වූ අතර, වසර දෙකක කාලයක් තිස්සේ අරගල කළ පසුව, මම මගේ දෙමව්පියන් හා සහෝදරියන් සමඟ එකතු විය. එහිදී මම රියැදුරෙක් විය. මම කරාටේ පුහුණුවීම් සහ චාරිකා පුහුණුව ලබා ගත්තා. පසුව 2006 දී මම මුලතිව් වෙත පැමිණ මගේ පියා, මව, සහෝදරියන් සහ නංගී පවුල සමඟ ජීවත් වුණා. මුහමලේහිදී මා තුවාල ලැබූ විට මට ඇවිදීමට නොහැකි වූ අතර ඔවුන් මා දෙස බලා සිටියහ. මට කිව්වා මට තුවාල වෙලා කියලා මම අසනීපෙන් කියලා. ඊට පස්සේ, මුල්ලිවයික්කාල්වල ෂෙල් ප්රහාරයේදී මගේ අම්මා, තාත්තා, තුන් සහෝදරියන්, මාමා, සහෝදරයා සහ මම තුවාල වුණා.

හමුදා පාලන ප්රදේශයට ඇතුල් වූ විට නන්දිකඩාල් ප්රදේශයේදී ෂෙල් ප්රහාරයකට ලක්වූ මගේ ඥාති සොහොයුරන් දෙදෙනෙකු මිය ගියේය. ඊට පස්සේ අපි කම්බි වැටක් තිබ්බා. එතකොට හැමෝම පෝලිමේ ඉන්නවා. විමුක්ති කොටි සංවිධානයට දින දෙකහමාරකට හෝ එකහම ඒවා තබා තිබුනේ නම් සියලු දෙනාම හමුදාවට බාර වූ බව කියනු ලැබූවක් මෙන් ම කියැවුණා. නමුත් මගේ අත්තම්මා අසනීප වූ විට මම යටත් වූයේ නැත. එතකොට අපි චෙඩ්ඩිකුලම් ආනන්ද කුමාරස්වාමි කඳවුරට ගියා. ආහාර සහ ඇඳුම් නොමැතිව කඳවුර තුල ජීවත් වූ විට, ජාත්යන්තර රතු කුරුස කමිටුව සියල්ල සහ මූලික පහසුකම් සැපයීය. කඳවුරේ ඇති වූ නරක කාලගුණික තත්ත්වය නිසා මගේ සහෝදරියන් සහ මිත්තණියගෙන් උණ රෝගය වැළඳී ඇත. ඔවුන් ඖෂධ ලබාගත් නමුත් පළමුව මගේ ආච්චි මිය ගියේය. පසුව 22 හැවිරිදි මගේ සොහොයුරිය උණ රෝගයට ගොදුරු වූ අතර රෝගය නරක අතට හැරුණා. කඳවුරේ පරිවර්තකයන්ගේ වැරැද්ද නිසා මගේ සොහොයුරිය වවුනියා මහ රෝහල වෙත ඇයගේ විවේචනය අහිමි වූවා පමණක් නොව ඈ කල් ඉකුත්වී ඇත. ඊළඟට අපේ මාමාගේ උපකාරයෙන් අපි වවුනියාවේ පූන්තෝට්ටම්වල ඇගේ දේහය තැන්පත් කර නැවත කඳවුරට යැව්වා. එතකොට මගේ අම්මා මානසික රෝගියෙක් වුණා.

හමුදාවේ භීතිය නිසා මම දුක් විඳපු නිසා 2009 දී අපේ ගමේ නැවත පදිංචි කරවූවා. මට පිරිමි ළමයෙක් ලැබුණා. දැන් අපි ටිකෙන් ටික ආර්ථික ජීවිතය තුළට පැමිණෙනවා. දැන් මම ත්රිරෝද රථ රියදුරෙකු ලෙස කටයුතු කරනවා.
ස්තුතියි.


සටහන:
පෞද්ගලික මතය
මට ඕනෑ ජීවිතේට යන්න ඕනේ, මගේ දරුවා වෛද්යවරයෙක් කරන්න ඕන.
සමාජය
• අපරාධ සම්බන්ධ විය යුතුය.
• දූෂණ අහෝසි කළ යුතුය
• ප්රතිසන්ධානය සකස් කළ යුතුය.

CMP/MN/MW/SAL/06

சாளம்பனை பிறப்பிடமாகக் கொண்ட அந்தோனி செபமாலை தம்பதியினரின் மூத்த புதல்வியாக 1985-04-10 பிறந்தேன். நான் பிறந்து 5 வருடங்களுக்குப் பின் எனது முதலாவது தங்கை பிறந்தார். பின் இரண்டாவதுதங்கை பின் மூன்றாவது தங்கை. அப்படி மூன்று தங்கைகள் பிறந்தனர். எனதுதந்தை ஒரு மாற்றுதிறனாளியாக இருந்த போதும் எனதுஅம்மா எங்கள் நான்குபேரையும் மா இடித்து தூள் இடித்து விவசாயம் செய்து வளர்த்துவந்தார்.

பின் எனது ஆரம்பக் கல்வியை அடைக்கலமாத முன்பள்ளியில் கற்றேன். எனது முதலாவது வகுப்பை மன் மறத்தி றோ. க.த.க. பாடசாலையில் கற்றுக் கொண்டு இருக்கும் போது 1990ம் ஆண்டு இந்திய இராணுவம் ஆக்கிரமிப்பில் துன்புற்று. பின்1990ம் ஆண்டு இராணுவு ஆக்கிரமிப்பின் யுத்தத்தில் தாடுத்திருப்பதியை நோக்கி அங்கு தஞ்சம் புகுந்து அங்கு ஒருவருடம் தற்காலிகமாக இருந்தோம். அந்த காலப்பகுதியில் மடுமாதா திருநாள் நடக்கும் வேளையில் நான் தொலைந்து பின் எங்கள் ஊர் பெரியரால் மீட்கப்பட்டேன்.

பின் ஆண்டு6 தொடக்கம் மன் ஆண்டாங்குளம் றோ.க.த.க. வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எனது தங்கை 5 ஆண்டில் கல்வி பயின்று வந்தாள். எனக்கு ஆங்கிலத்தில் 5 புள்ளி எடுத்தேன். எனது தங்கைக்கு 100 புள்ளி. அப்போது எங்கள் ஆசிரியர் சுட்டிக்காட்டி அடிக்க எனக்கு கல்வி கற்பது கடுப்பாக மாறியது. மாறினாலும் என்ன செய்வதுஎன்று 11 தரம் மட்டும் கல்வி பயிற்சி, விளையாட்டுக்களில் மாவட்டம்,மாகாணம், என்று சம்பியன்களை பெற்று எனது படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் படிப்பை நிறுத்தினேன்.

பின் 2013ம் ஆண்டு வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டு போராட்டம் என்ற போர்வைக்குள் அமிழ்த்தப்பட்டு 2 வருட காலம் சரியான துன்பத்தின் மத்தியில் எனதுதாய் தந்தை சகோதரர்களுடன் இணைந்தேன். இங்குநான் சாரதியாக பணி புரிந்தேன். கராத்தே, பயிற்சி என்று உடம்பை வருத்தி எனதுகடமையில் விழுங்கி வந்தேன்.

பின் 2016ம் ஆண்டு முல்லைத்தீவில் எனதுதந்தை தாய் சகோதரர் அம்மம்மா அன்ரி குடும்பம் என்றுஅவர்களுடன் வாழ்ந்து வந்தேன். முகமாலையில் நான் காயமுற்ற படியால் நடக்க இயலாது. என்னை பராமரித்து வந்தார்கள். நான் காயமுற்றபடியால் எனக்கு ஒரு வருத்தம் வருவதாக சொல்லுவார்கள். பின் நாங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் செல் வீச்சில் எனதுஅம்மா அப்பா மூன்றுதங்கைமார் சின்னையா தம்பி நான் என்று எல்லோரும் காயமுற்றோம்.

பின் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழையும் போது செல் வீச்சில் அதாவது நந்திக்கடல் பகுதியில் செல் வீச்சில் எங்கள் மச்சிமார் இருவர் அதே இடத்தில் பலியானார்கள். பின் முள்வேலிக்குள் புகுந்தோம். அப்போது எல்லோரும் வரிசையாக இருந்தார்கள். அப்போது 1 நாள் என்றாலும் சரி பாதி நாள் என்றாலும் சரி எல்லோரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இருந்தால் தடுப்புவைக்கப்படல் வேண்டும் என்றுசொல்ல எல்லோரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால் நான் இராணுவத்திடம் சரணடையவில்லை. ஏன் என்றால் எனது அம்மம்மா உடம்பு முடீயாத ஒரு வயோதிபர். அதனால்தான் நான் இணையவில்லை. பின் பஸ்சில் எல்லோரும் ஏறி செட்டிக்குளம் ஆனந்தகுமாரசுவாமி முகாமில் ஜெ பிளாக்கில் தற்காலிக அகதிகளாக வசித்து வந்தோம். பின் உருக்க உடை இன்றி உண்ண உணவின்றி முகாமில் வந்து வரும் வேளையில் ஐ.சி.ஆர்.சி என்ற நிறுவனத்தினரால் எல்லாம் வழங்கப்பட்டு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யப்பட்டு வசித்து வந்தோம். அப்போது முகாமின் காலநிலை ஒவ்வாமையினால் எனது குடும்பத்தில் இரண்டு பேர் அதாவதுஎனதுதங்கை அப்பம்மா என்ற இருவரும் காய்ச்சல் வந்து மருந்துமாத்திரைகள் என்றுகொடுத்து முதலாவதாக எனதுஅம்மமா இறந்துவிட்டார். அதன் எனது தங்கை வயது22 இவருக்கு காய்ச்சல் என்று முகாமில் மருந்து எடுத்து வுருத்தம். பிற்பாடு மொழிபெயர்ப்பிற்கு நின்றவர்கள் விட்ட பிழையால எனது தங்கைக்கு சுயநினைவு இழந்த பிற்பாடு வவுனியா பொது வைத்தியசாலைக்குஅனுப்பி அங்குஎனதுதங்கை உயிர்விட்டார். பின் அவரை வவுனியா பூந்தோட்டத்தில் எனது சின்னையா மூலம் பூதவுடலை நல்லடக்கம் செய்து எங்களை மீண்டும் முகாமிற்கு அனுப்பினார்கள். அப்போது எனது அம்மா ஒரு மனநோயாளியானார்.

எனது துன்பங்களையும் அனுபவித்து நான் இராணுவத்தின் பயத்தால் திருமணம் முடித்து எங்கள் கிராமத்தில் 2009ம் ஆண்டு குடியமர்ந்து எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஓரளவுபொருளாதரத்தில் முயன்றுதற்போது ஆட்டோ சாரதியாக கடமை புரிந்துவாழ்ந்து வருகிறேன்.

குறிப்பு - தனிப்பட்ட கருத்து
நான் ஒரு நல்ல நிலை அடைந்து எனது பிள்ளையை ஒரு வைத்தியராக்க எனது ஆசையாக உள்ளது.

சமூகம்.
குற்றங்களை தட்டிக் கேட்டல்.
லஞ்ச, ஊழல்களை இல்லாது ஒழித்தல்.
நல்லிணக்கம் ஏற்படுத்தல்.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License