We were not given any information

A woman who lost her husband in the conflict, appealing for the assistance.

අපට කිසිදු තොරතුරක් ලබාදී නැත

இன வன்முறையில் கணவனை இழந்த மனைவியொருவர் அரசாங்கத்திடம் உதவி கூறுகின்றார்.

எங்களுக்கு எந்தவிதமான தகவல்களும் தரப்படவில்லை

ගැටුමෙහිදී තම ස්වාමි පුරුෂයා අහිමි වූ කාන්තාවක්, ආධාර සඳහා ආයාචනා කළේය.

ஐயா,
பொத்துவில் P/10 தொகுதியை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட பீ.விசாலாட்சி ஆகிய நான் தெரிவித்து கொள்வது என்னவெனில், எனது கண்ணீர் கலந்த மேன்முறையீடு;. 1990 ஆண்டு பிரச்சனை ஏற்பட்ட போது பயங்கரவாதம் காரணமாக பீதி அடைந்திருந்த அவ்வேளையில் எனது கணவ ஜி.சந்திரரத்னம் என்பவர் அவருடன் இன்னும் சிலரும் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக சென்றனர் . அவரும் சென்றார் . அவ்விடத்திலிருந்து சற்றுதூரத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. குஞ்சன்ஒயா பகுதியில் வைத்து எனது கணவரை துப்பாக்கிதாரிகள் பிடித்துக் கொண்டனர் . அதன் பின் சற்றுநேரத்திற்கு பின்பு நானும் மற்றவர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு சென்றேன். ஆனால் அந்த நேரத்தில் எதுவும் செய்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் பிரச்சனை அதிகரித்துக் கொண்டு போனதால் எமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அண்மையில் உள்ள கோமாரிக்கு சென்றௌம். அங்கு சென்று எனது கணவரை பற்றி விசாரித்த போதும் தகவல் கிடைக்க வில்லை. அங்கு அகதிமுகாமில் 3வருடம் இருந்துவிட்டு பிரச்சனைகள் சற்று குறையத் தொடங்கிய பின் சொந்த ஊருக்கு சென்று குடியேறினேன்.

எனது கணவர் ஒரு அப்பாவி அவர் சிறிய கடையொன்று நடாத்தி வந்தார் . அவர் எந்தவொரு தவறும் செய்யாதவர் . அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. என்னுடைய உடமைகள் எல்லாவற்றையும்; நான் இழந்து விட்டேன். வீடு வாசல் ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் இழந்து விட்டேன். இந்த துன்பத்தால் நான் இழந்தவைதான் அதிகம். ஆனால் நான் அரசாங்கத்திற்குப் பலமுறை எனது கவலைகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.
எனக்கு எவரும் உதவி செய்யவில்லை. அன்று முதல் இன்று வரை நான் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றேன். ஆனால் அந்த நேரம் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எனது கணவர் இருந்திருந்தால் எனக்கு எந்தக் குறையும் இருந்திருக்காது என்று. நானும் சளைக்கவில்லை. நான் முன்னேறிச் சென்றேன். எனது கணவர் நடாத்தி வந்த கடையைபோல் சிறிதாக ஒரு கடையை அமைத்தேன். (மண்ணுடன் சீமெந்து கலந்து) சிறிய அளவில் கடையை நடாத்தி வந்தேன்.

எனது தனிமையான வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றேன். சில நாட்களின் பின் பிரச்சனை ஓரளவுக்கு குறைந்ததும் அந்த நேரத்தில் எனது கணவர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார் . அந்த நேரத்தில் வெளியில் சொல்ல முடியாத அளவூக்கு வேதனைகள் எனக்குள் இருந்த போதும் ஒரு வீரியம்மிக்க பெண்மணியாக அவற்றுக்கு நான் முகம் கொடுத்தேன். அந்த நேரத்தில் எனது கணவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அரசாங்கம் அவருக்கு மரணச்சான்றிதழ் வழங்கியது.

எனது வருங்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அச்சமயம் அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அரசிடம் பல தடவைகள் கடிதம் மூலம் கேட்டுக்கொண்ட போதும் அவற்றுக்கு பதிலும் கிடைக்கவில்லை. எனது இழந்த சொத்துக்களுக்கு நஷ்டஈட்டு தொகை

ஐயா, யு

பொத்துவில் P/10 தொகுதியை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட பீ.விசாலாட்சி ஆகிய நான் தெரிவித்து கொள்வது என்னவெனில்இ எனது கண்ணீH கலந்த மேன்முறையீடு;. 1990 ஆண்டு பிரச்சனை ஏற்பட்ட போது பயங்கரவாதம் காரணமாக பீதி அடைந்திருந்த அவ்வேளையில் எனது கணவ ஜி.சந்திரரத்னம் என்பவர் அவருடன் இன்னும் சிலரும் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக சென்றனர் . அவரும் சென்றார் . அவ்விடத்திலிருந்து சற்றுதூரத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. குஞ்சன்ஒயா பகுதியில் வைத்து எனது கணவரை துப்பாக்கிதாரிகள் பிடித்துக் கொண்டனர் . அதன் பின் சற்றுநேரத்திற்கு பின்பு நானும் மற்றவர் களுடன் சேர் ந்து அருகில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு சென்றேன். ஆனால் அந்த நேரத்தில் எதுவும் செய்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் பிரச்சனை அதிகரித்துக் கொண்டு போனதால் எமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அண்மையில் உள்ள கோமாரிக்கு சென்றௌம். அங்கு சென்று எனது கணவரை பற்றி விசாரித்த போதும் தகவல் கிடைக்க வில்லை. அங்கு அகதிமுகாமில் 3வருடம் இருந்துவிட்டு பிரச்சனைகள் சற்று குறையத் தொடங்கிய பின் சொந்த ஊருக்கு சென்று குடியேறினேன்.

எனது கணவர் ஒரு அப்பாவி அவர் சிறிய கடையொன்று நடாத்தி வந்தார் . அவர் எந்தவொரு தவறும் செய்யாதவர் . அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. என்னுடைய உடமைகள் எல்லாவற்றையும்; நான் இழந்து விட்டேன். வீடு வாசல் ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் இழந்து விட்டேன். இந்த துன்பத்தால் நான் இழந்தவைதான் அதிகம். ஆனால் நான் அரசாங்கத்திற்குப் பலமுறை எனது கவலைகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.
எனக்கு எவரும் உதவி செய்யவில்லை. அன்று முதல் இன்று வரை நான் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றேன். ஆனால் அந்த நேரம் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எனது கணவர் இருந்திருந்தால் எனக்கு எந்தக் குறையும் இருந்திருக்காது என்று. நானும் சளைக்கவில்லை. நான் முன்னேறிச் சென்றேன். எனது கணவர் நடாத்தி வந்த கடையைபோல் சிறிதாக ஒரு கடையை அமைத்தேன். (மண்ணுடன் சீமெந்து கலந்து) சிறிய அளவில் கடையை நடாத்தி வந்தேன்.
எனது தனிமையான வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றேன். சில நாட்களின் பின் பிரச்சனை ஓரளவுக்கு குறைந்ததும் அந்த நேரத்தில் எனது கணவர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார் . அந்த நேரத்தில் வெளியில் சொல்ல முடியாத அளவூக்கு வேதனைகள் எனக்குள் இருந்த போதும் ஒரு வீரியம்மிக்க பெண்மணியாக அவற்றுக்கு நான் முகம் கொடுத்தேன்.
அந்த நேரத்தில் எனது கணவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அரசாங்கம் அவருக்கு மரணச்சான்றிதழ் வழங்கியது.
எனது வருங்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அச்சமயம் அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அரசிடம் பல தடவைகள் கடிதம் மூலம் கேட்டுக்கொண்ட போதும் அவற்றுக்கு பதிலும் கிடைக்கவில்லை. எனது இழந்த சொத்துக்களுக்கு நஷ்டஈட்டு தொகையூம் கிடைக்கவில்லை.
என்னுடைய இன்றைய நிலை. எனக்கொரு வீடு இல்லை. தற்போது குயிருக்கும் வீடு வேலைகள் முடிக்கப்படாத நிலையில் இருப்பதால் பொருளாதார நிலை கஷ்டமாக இருப்பதால் எனது இந்த நிலை குறித்து கவனம் செலுத்தி எனக்கு உதவி செய்யுங்கள்.
யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்திருந்த போதும் எமது இழந்த சொத்துக்களுக்கு எந்தவித நஷ்டஈடும் கிடைக்கவில்லை. ஆகவே எமது துன்ப நிலையைப் பார்த்து எமக்கு உதவி செய்யுங்கள் என மிகவூம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்னுடைய இன்றைய நிலை. எனக்கொரு வீடு இல்லை. தற்போது வீடு வேலைகள் முடிக்கப்படாத நிலையில் இருப்பதால் பொருளாதார நிலை கஷ்டமாக இருப்பதால் எனது இந்த நிலை குறித்து கவனம் செலுத்தி எனக்கு உதவி செய்யுங்கள்.

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்திருந்த போதும் எமது இழந்த சொத்துக்களுக்கு எந்தவித நஷ்டஈடும் கிடைக்கவில்லை. ஆகவே எமது துன்ப நிலையைப் பார்த்து எமக்கு உதவி செய்யுங்கள் என மிகவூம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

A PROJECT BY

DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License