CMP-MN-Md-PV-05
I was born in Jaffna in the year 1985. My initial education was at Sakthy Amman School in Chavakacheri. Later, in 1996 during the exodus we went to Pandivirichan. My education, from Grade 6 to A/L, was here. In the year 2013, when I was studying, my father broke a bone in small sports and died. Mother brought us up with great difficulty. We are three girls. A cousin married my 2nd sister. Another sister is abroad.
In 2007, when I was doing my A/L exam, I was forcibly recruited and made to fight. One person from each family should join the Movement was their policy. There was no one to look after my mother. In the year 2008 I came home. I escaped from the Movement when my mother was in Iruddumadu Camp. They kept me in hiding.
Here I was caught by the army. Immediately ex-tigers were asked to register for the detention camp. For one and a half years I was here. I was in the Pampaimadu camp. Jaffna people were transferred to Tellippalai Rehabilitation Centre. When the army caught us here I sought refuge in Omanthai and went to Detention Camp.
I went to this camp in 2009, the fifth year. We get up in the mornings, go for breakfast when our names are called, go for work, get back and go to bed. I was happy there. But, though we were asked to forget all about the Movement in the rehabilitation camp, memories of hardships and loss and our destitute state kept flooding repeatedly. We were liberated on the tenth month of 2010.
I got married in 2011. In 2012 we cancelled our registration In Jaffna and came here and are living happily. We've no problems. We've opened a shop. My husband is a laborer. We have a daughter. We have no worries and living happily. She is my only future. We must educate her well and give her a good position in life. That's my sole goal in life.
CMP-MN-Md-PV-05
මම 1985 අවුරුද්දෙ යාපනේදි ඉපදුනා. මුලදි චාවකච්චේරි ශක්ති අම්මාන් කොවිලේ ඉගෙනගත්තා. පස්සෙ 1966 අවුරුද්දෙ අවතැන් වෙනකොට අපි පණ්ඩිවිරිච්චාන් වලට ආවා. මෙහේ අවුරුදු තුනක් ඉඳලා උසස් පෙළ දක්වා ඉගෙනගත්තා. ඉගෙන ගන්න කාලෙ 2013 දි පොඩි සෙල්ලමක් කරද්දි කොන්ද කැඩිල තාත්තා නැතිවුණා. ඒ නිසා අම්මා හරියට දුක් ව්ඳලා අපිව හදාගත්තේ. අපේ ගෙදර ගෑණු ළමයි තුන්දෙනයි. දෙවෙනි අක්කව මස්සිනා බැඳලා ඉන්නේ. එක අක්කා කෙනෙක් රට ඉන්නවා.
2007 අවුරුද්දෙ ඒ ලෙවල් කරන කාලෙ මාව සන්විධානෙට අල්ලගෙන ගෙහුන් දැම්මා. 2007 අවුරුද්දෙ ගෙදරකින් එක්ක්කෙනෙක් සන්විධානෙට එන්න ඕනි කියලා අනිවාර්ය කරපු වෙලාවෙ අපිව අල්ලගත්තේ. අම්මව බලාගන්න කවුරුත් නැහැ. 2008 අවුරුද්දෙ මම ගෙදර ආවා. අම්මා ඉරුට්ටුමඩු කඳවුරේ ඉන්නකොට මම පැනලා ආවෙ. එතකොට මාව හන්ගාගෙන තමයි හිටියේ.
ආපු තැනදි මාව හමුදාවෙන් අල්ලාගත්තු වෙලාවෙ සන්විධානෙ හිටපු අයට රැඳවුම් කඳවුරට ලියාපදින්චි වෙන්න කීවා. අවුරුදු එකහමාරක් ඇතුලේ හිටියා. යාපනේ කට්ටිය තෙල්ලිප්පලෛ පුනරුත්ථාපන කඳවුරට මාරු කළා. මේ පැත්ත හමුදාවෙන් අල්ලගත්තාට පස්සේ ඕමන්තෙදි සරණාගත වෙලා කඳවුරට ගියේ.
මම රැඳවුම් කඳවුරට 2009 අවුරුද්දෙ පස් වෙනි මාසෙ ගියා. උදේම නැගිට්ටවනවා, නම් අඬගහනවා, කෑමට යනවා, ඇවිල්ලා නිදාගන්නවා ඔය විදියට ජීවිතේ සතුටින් ගතවුණා. ඒත් පුනරුත්ථාපනයට ගිහින් සන්විධානෙ ගැන අමතක කරන්න ඕනි ඒවම හිතන්න හොඳ නෑ කීවට ඒ දේවල් අමතක කරන්න බෑ. හැමතැනම ගිහින් ගුටිකාගෙන ආවා. හැමදෙයක්ම නැති කරගෙන ආපු එක අමතක කරන්න බෑ. ඒකෙ ඉඳලා 2010 ඔක්තෝබර් මාසෙ 10 වෙනිදා එළියට ආවා.
2011 අවුරුද්දෙ විවාහ වුණා. 2012 දි යාපනේ පදින්චිය අයින් කරලා මෙහේ අවිල්ලා දැන් සතුටින් තමයි ඉන්නේ. දැන් කිසිම ප්රශ්නයක් නෑ. අපි කඩයක් දාගෙන ඉන්නවා. මෙයා කුළී වැඩට යනවා. එක දුවෙක් ඉන්නවා. නැත්නම් කිසිම දුකක් නැහැ. සතුටින් ජීවත් වෙනවා. අනාගතේ කියලා මට මේ කෙල්ල විතරයි. මෙයාට හොඳට උගන්නන්න ඕනි. අපි දුක් වින්ද වගේ එයා දුක් විඳින්න ඕනි නැහැ. හොඳට ඉගෙනගෙන හොඳ තැනකට එන්න ඕනි කියන එක තමයි.
CMP-MN-Md-PV-05
நான் 1985ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். ஆரம்பத்தில் சாவகச்சேரி சக்தி அம்மன் பாடசாலையில் கல்வி கற்றேன். பின்பு 1966ம் ஆண்டு இடப்பெயர்வின் போது இடம்பெயர்ந்து பண்டிவிரிச்சானுக்கு வந்தனாங்க. இங்கு 6ம் ஆண்டில் இருந்து A/L வரை படித்தேன். படித்துக் கொண்டிருக்கேக்க 2013ம் ஆண்டு சின்ன விளையாட்டில் எலும்புடைந்து அப்பா இறந்து விட்டார். அதோடு அம்மா சரியான கஸ்ரப்பட்டு எங்களை வளர்த்தார். நாங்கள் வீட்டில் 3 பெண் பிள்ளைகள். 2வது அக்காவைத்தான் மச்சான் திருமணம் செய்து இருக்கின்றார். ஒரு அக்கா வெளிநாட்டில் இருக்கின்றார்.
2007ம் ஆண்டு A/L Exam எடுக்கக்கதான் என்னை இயக்கத்துக்குப் பிடித்துக் கொண்டு போய் சண்டையில் விட்டார்கள். 2007ம் ஆண்டு வீட்டுக்கொருவர் இயக்கத்திற்கு வர வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் பிடித்தனர். அம்மாவைப் பார்ப்பதற்கு ஒருவரும் இல்லை. 2008 ம் ஆண்டு நான் வீட்ட வந்து விட்டேன். அம்மா இருட்டுமடு முகாமில் இருக்கேக்க நான் ஓடி வந்தேன். அப்போது என்னை ஒழித்து வைத்திருந்தார்கள்.
வந்த இடத்திலே என்னை இராணுவம் பிடித்தவுடனே இயக்கத்தில் இருந்தவர்களை தடுப்புக்குப் பதியச் சொன்னார்கள். ஒன்றரை வருடங்கள் தடுப்பில் இருந்தேன். நான் பம்பைமடு முகாமில் இருந்தேன். யாழ்ப்பாண மக்களை தெள்ளிப்பளை புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றினார்கள். இங்கால இராணுவம் பிடித்தவுடன் ஓமந்தையில் தஞ்சம் புகுந்து தடுப்புக்குப் போனேன்.
தடுப்புக்கு 2009 ம் ஆண்டு 05ம் ஆண்டு போனேன். காலையில் எழும்புவது பெயர் கூப்பிட்டதும் சாப்பிடப் போவது வேலைக்குப் போவது வந்து தூங்கிறது இப்பிடியே சந்தோசமாகப் போனது. ஆனால் புனர்வாழ்வுக்குப் போய் இயக்கத்தைப் பற்றி மறக்கனும். நினைவிலே இருக்கக் கூடாது என்று கூறியும் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. எல்லா இடத்திலயும் போய் அடிபட்டு வந்தது, எல்லாத்தையும் இழந்து விட்டு வந்ததை மறக்க முடியாது அதிலிருந்து 2010. 10ம் மாதம் 20ம் திகதி வெளியே விட்டார்கள்.
2011ம் ஆண்டு திருமணம் செய்தேன். 2012ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவை வெட்டி இங்க வந்து இப்போது சந்தோசமாகத்தான் வாழ்ந்து வருகின்றோம். இப்ப எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் கடை போட்டிருக்கின்றோம். கணவர் கூலிவேலை ஒரு மகள் இருக்கின்றாள். மற்றும்படி எந்தக் கவலையும் இல்லை. சந்தோசமாக வாழ்ந்து வருகின்றோம். எதிர்காலம் என்று எனக்கு இவ ஒராள் தான். இவளை நல்லா படிக்க வைக்க வேண்டும். நாங்கள் கஸ்ரப்பட்ட மாதிரி கஸ்ரப்படக் கூடாது நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதேயாகும்.