My expectation

The experiential sharing of war


මගේ අපේක්ෂාව

යුද්ධයේ අත්දැකීම් බෙදාහදා ගැනීම


எனது எதிர்பார்ப்பு

போரினால் பாதிப்புற்றவரின் அனுபவ பகிர்வு



CMP-MN-Md-PV-08
I was born in 1984. From my young age I had a comfortable life. There were six in our family. The eldest was forcefully recruited to the Movement and later he died. I am the second one. Youngest died in a shell attack while we were getting displaced. When I was in school I got forcefully recruited and taught by them. Later they took us to Palai for training.
On 24th April 2001, I lost my leg by stepping on a land mine during the war. I was in the hospital during the year 2002 and 2003. We had a place called ‘Nobari Madam’ to study. While I was studying there my father got me married off in 2006.
Later during the displacement my husband lost one eye site due to a shell which fell on our house. I lost my sister also in that attack. We got displaced and came to Pandivirichchan. Later we went to our own village. There my husband got arrested on suspicious. They released him after 2 years. They didn’t arrest me because my daughter was a baby. They released me after inquiry but kept my husband under arrest.
When I had lost my leg I was at a place called Umaripuram, and there I suffered a lot. I thought it was only me who was disabled there. Later I met so many children like me where I studied. There were people who lost both legs, both hands and also both eyes. That made me think that I was better off, I just lost one limb. With that attitude I started studying happily.
I was a singer for some time. The musical group would give me some songs and I would memorize them and sing. I would also play organ. They themselves taught me. I was very happy then without any troubles except for the worry about my leg.
My husband was blind and he was upset because both our children were girls. He had a splinter in his head. This caused some confusion and he just got in to a train in Madu. I wasn’t aware of that until people started to ask me about his whereabouts. He had gone to Colombo airport and told that he was a member of the Movement. He was arrested and got released after two years.
We were having a very hard time when we got displaced. Our eldest daughter was just an infant then. There was no food. We would eat boiled Channa dhal. There was heavy shelling and because I was lame I couldn’t run to bunker for shelter carrying my daughter. A shell fell on our house too and my sister died. So my husband said it’s better to move further interior. But we got trapped in between the military and the Movement. We were confused and didn’t know what to do. At that point many people died due to shelling.
That was the road. If we pass that road and go to their side we would be safe. That’s how he ran taking this child. Earlier I had issues with the fixing of my limb. While running I fell down by stepping in the hole in the ground due to shelling. It was the military men who lift me up and helped me go to the other side. Likewise I went to the safer place with so many difficulties.
Both of us are disabled. He doesn’t have an eye and I don’t have a leg. We are very poor. But however I am educating my children. My husband goes for labor work; we are managing our lives with that income. I want my children to get educated and progress in life without suffering like us. My both kids should get educated and rise to a good position in their lives that is my wish and expectation.


CMP-MN-Md-PV-08
මම ඉපදුනේ 1984 දී. පොඩි කාලේ ඉඳන්ම හොඳට සැප සම්පත් ඇතිව ජීවත් වුනා. අපේ ගෙදර හයදෙනෙක් ඉන්නවා. වැඩිමලා සංවිධානයට අල්ලගෙන ගියාට පස්සේ නැතිවුනා. මම දෙවැනියා. අවතැන් වෙලා යනකොට තමයි ෂෙල් වැදිලා නැතිවුනේ. මම ඉස්කෝලේ ඉගෙන ගන්න අතරේ ඇවිත් අල්ලගෙන ගිහිල්ලා අපිව එහෙ තියාගෙන ඉගැන්නුවා. පුහුණුවක් කියලා එක්කගෙන ගිහින් පලෛයිවල නැවැත්තුවා. ‍
2001 අප්‍රේල් 24 වෙනිදා මගේ කකුල නැතිවුනා. යුද්ධයේ දී බෝම්බයක් වැදිලා කකුල කැඩුනා. ඊට පස්සේ 2002, 2003 රෝහලේ හිටියා. ඊට පස්සේ අපිට ඉගෙන ගන්න තැනක් තිබුනා නෝබරි මඩම කියලා. එහෙ ඉඳන් ‍ඉගෙන ගත්තා. එහෙම ඉන්න කොට 2006 දී තාත්තා මාව විවාහ කරලා දුන්නා. ඊට පස්සේ අවතැන් වුනා. එහෙම අවතැන්වෙලා යනකොට ෂෙල් එකක් වැදිලා මහත්තයාගේ ඇහැක් නැතිවෙලා තිබුනා. එවෙලේ අපේ නංගී නැතිවුනා. එහෙමම අපි අවතැන් වෙලා පන්ඩිවිරිච්චාන්වලට ආවා. පස්සේ අපේ ගමට ආවා. ආවට පස්සේ සැකපිට මගේ සැමියා අත්අඩංගුවට ගත්තා. අවුරුදු දෙකක් රඳවාගෙන ඉදලා නිදහස් කළා. දුව පොඩි නිසා මාව අත්අඩංගුවට ගත්තේ නැහැ. ප්‍රශ්න අහලා නිදහස් කළා. එයාව එක්කගෙන ගියා කඳවුරට.
මම කකුල නැතිවෙලා උමරිපුරම් ඉද්දී ගොඩාක් දුක් වින්දා. කකුල නැති‍ වෙච්ච වෙලේ මම හිතුවා මට විතරයි කකුල නැති වුනේ කියලා දුකින් හිටියේ.
ඉගෙන ගන්න තැනට ආවට පස්සේ තේරුනේ මං වගේම ගොඩක් අය ඉන්නවා කියලා. කකුල නැති, අත්දෙක නැති, ඇස් දෙක නැති, කකුල් දෙක නැති අය හිටියා. එතකොට මම බැලුවා මට ප්‍රශ්නයක් නෑනේ. මට දණහිසට පහලින්නේ කකුල නැත්තේ කියලා සතුටින් ඉගෙන ගත්තා. ඊට පස්සේ ටික කාලයක් සිංදු කිව්වා. බෑන්ඩ් එකේ සිංදු දෙනවා ඒවා පාඩම් කරගෙන කිය කියා හිටියා. මම ඔගනුත් ගැහුවා. ඒවගේ වැඩත් කළා. එයාලම ඉගැන්නුවා. කිසිම දුකක් නැතිව සතුටින් තමයි මම හිටියේ. මට කකුල නැති දුක විතරයි. ඒ ඇරෙන්න කිසිම ප්‍රශ්නයක් නැහැ.
මගේ ස්වාමියාට ඇස් පේන්නේ නැහැ. පළවෙනියත් දුවෙක්. දෙවෙනියත් දුවෙක් කියලා හරියට කල්පනා කර කර හිටියා. එයාගේ ඔලුවට ෂෙල් කෑල්ලක් වැටුනා. ඒකෙන් එයාට මොකවත් මතක නැතිව කෝච්චියේ නැගලා කොළඹ ගිහින්. අපි දන්නේ නැහැ. මිනහ කෝ මොකද වුනේ කියලා මිනිස්සු අහනකොට තමයි මම දැනගත්තේ. කොළඹ ගිහින් එයාපෝට් එකට ගිහින් එයා සංවිධානයේ කියලා කිව්වලු. එතකොට එයාව අත්අඩංගුවට අරගෙන අවුරුදු දෙකකට පස්සේ නිදහස් කළා.
අපි අවතැන් වෙලා යනකොට හරියට දුක්වින්දා. ලොකුදුව ඉපදුනා විතරයි. කන්න දෙයක් නැහැ. කඩල පරිප්පු තම්බලා තමයි කෑවේ. පුදුම විදියට ෂෙල් ගැහුවා. බංකරය ඇතුළට දුවන්නත් බෑ දරුවත් අරගෙන. ගෙදරටත් ෂෙල් වැදුනා. ෂෙල් වැටිලා තමයි අපේ නංගී නැතිවුනේ. එතකොට මෙයා කීවා එන්න ඇතුළට යමු කියලා. ගියතැන එහාපැත්තේ සංවිධානය. මෙහා පැත්තේ ආමි එක. මොනව කරනවද කොහේ යනවද කියලා හිතාගන්න බැරිව ඉන්නකොට ෂෙල් වැටිලා සෑහෙන සෙනගක් මැරුණා.
අතනින් අන්න අර පාර පැනගත්තොත් ඇතුළට ගියා වගේ තමයි. මෙයා මෙන්න මේ ළමයත් අරගෙන දිව්වා. ඉස්සෙල්ලා මගේ කකුලෙත් රොකට් එකේ බෙල්ට් එකක් තිබුනා. ඒ බෙල්ට් එකත් කැඩුනා. දුවගෙන යනකොට ෂෙල් වැටෙන අතරේ කකුලත් ගැලවිලා මම වැටිලා හිටියා. ආමි කාරයෙක් උස්සලා තමයි මාව එහා පැත්තේ වෙරළින් තිබ්බේ. හරියට දුක් විඳලා ඒ පැත්තට ගියේ.
අපි දෙන්නම ආබාධිතයි. මෙයාට ඇස් පේන්නේ නැහැ. මටත් කකුල නැහැ. අපි දෙන්නම මේ වෙනකොට හොඳට දුක් විඳලා තියෙනවා. දුක් විඳගෙන මේ දරුවන්ට උගන්වන්නේ. මෙයා එදාට එදාට කුළී වැඩ කරලා තමයි කන්න හොයාගන්නේ. අපි දුක් වින්ඳා වගේ අපේ ළමයි දුක් විඳින්න ඕන නැහැ. හොඳට ඉගෙනගෙන ඉස්සරහට යන්න ඕනෑ කියන එක තමයි මගේ ආසාවයි බලාපොරොත්තුවයි.



CMP-MN-Md-PV-08
1984ம் ஆண்டு பிறந்தேன். சின்ன வயதில் இருந்தே நல்ல வசதியாக வாழ்ந்து வந்தேன். எங்கட வீட்ட 06 பேர். மூத்தவர் இயக்கத்தக்குப் பிடித்துட்டுப் போய் இறந்து விட்டார். 2 வது நான். கடைசித் தங்கை செல் விழுந்து செத்திட்டா. இடம் பெயர்ந்து போகேக்கதான் செல் விழுந்து செத்தவ. நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கேக்க வலுக்கட்டாயமாக வந்து பிடித்துக் கொண்டு போய் அப்பிடியே எங்களை அதிலே வைத்து படிப்பித்தார்கள். பயிற்சி என்று கொண்டு போய் பழை என்ற இடத்தில் விட்டாங்க.
22001 04ம் மாதம் 24ம் திகதி எனக்கு கால் இல்லாமல் போய்விட்டது. சண்டையில மைன்ஸ் பட்டு கால் இல்லாமல் போய் விட்டது. அதற்குப் பிறகு 2012, 2013 வைத்தியசாலையில் இருந்தேன். அதன் பின்னர் எங்களுக்கு படிக்கிறதுக்கு என்று நோபரி மடம் என்று, அதிலே இருந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்பிடி இருக்கேக்க 2006ம் ஆண்டு எனக்கு அப்பா திருமணம் செய்து வைத்தார்.
பின் இடப்பெயர்வு வந்தது. இடம்பெயர்ந்து போய்க் கொண்டிருக்கேக்க வீட்டுக்கு மேல் செல் விழுந்து கணவருக்கு ஒரு கண் இல்லை. அதிலே எங்கட தங்கை இறந்தார். பிறகு அப்பிடியே இடம்பெயர்ந்து பண்டிவிரிச்சானுக்கு வந்தோம். பிறகு எங்கட ஊருக்கு வந்தோம். வந்த பின்னர் சந்தேகத்தின் பெயரில் எனது கணவனை கைது செய்தனர். 2 வருடம் தடுப்பில் வைத்து விட்டு விட்டார்கள். மகள் குழந்தையாக இருந்த காரணத்தினால் என்னை தடுப்பிற்கு எடுக்கவில்லை விசாரித்துப் போட்டு விட்டார்கள். கணவரை தடுப்புக்கு கொண்டு போனார்கள்.
நான் கால் இல்லாமல் இருந்த பொழுது உமரி புரம் என்ற இடத்தில் சரியாகக் கஸ்ரப்பட்டேன். நான் கால் இல்லாமல் போகேக்க நினைச்சன். இதுக்குள்ள நான் மட்டுந்தான் கால் இல்லாமல் இருக்கின்றேன் என்ற அந்தரிப்பில் இருந்தேன்.
பிறகு படிக்கின்ற இடத்தில் பார்க்கும் போதுதான் என்னைப் போல நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். கால் இல்லாமல், 2 கை இல்லாமல், 2கண் இல்லாமல், 2 கால் இல்லாமல் இருந்தார்கள். அப்போது நான் பார்த்தேன். நான் பிரச்சினை இல்லை தானே எனக்கு முழங்காலுக்கு கீழே தானே கால் இல்லை என்று எண்ணி சந்தோசமாகப் படித்தேன்.
அதிலிருந்து ஒரு கட்டத்தில் பாடகராக இருந்தேன். இசைக்குழுவில் அவர்கள் கொஞ்சம் பாட்டுத் தருவார்கள் அதைப் பாடமாக்கி படித்துக் கொண்டு திரிந்தேன். அத்தோட ஓகன் வாசிப்பேன். அப்பிடி வேலைகளும் செய்தேன். அவங்களே படிப்பித்தார்கள். எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாகத்தான் இருந்தனான். எனக்கு கால் இல்லை என்ற கவலைதான் மற்றும்படி எந்த் பிரச்சனையும் இல்லை.
எனது கணவரக்கு கண் தெரியாது. மூத்ததும் பெண்பிள்ளை 2 வதும் பெண் பிள்ளை என்றதும் பிரச்சனைபட்டு யோசிக்கத் தொடங்கி விட்டார். அவருக்கு தலையில் பீஸ் இருந்தது. அந்த பீஸ் குத்தித்தான் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் மடுவில் வந்த ரயிலில் ஏறிப் போய்விட்டார். எனக்குத் தெரியாது. உன்னுடைய கணவன் எங்கே என்ன நடந்தது என்று கேட்டபோதுதான் எனக்கு தெரியும். கொழும்பிற்கு போய் ஏர்போர்ட்டுக்கு போய் நான் இயக்கத்தில இருக்கிறன் என்று சொல்லியிருக்கிறார். பிறகு அவரை பிடித்து அடைத்து 2 வருடம் வைத்து விட்டு இப்ப விட்டு விட்டார்கள்.
நாங்கள் இடம்பெயர்ந்து போகேக்க சரியாகக் கஸ்ரப்பட்டோம். மூத்த மகள் பிறந்து பச்சைக் குழந்தை சாப்பாட்டுக்கு வழி இல்லை கடலைப் பருப்பை அவித்துத்தான் சாப்பிடுவோம். எனக்கும் கால் ஏலாத செல்லடி என்றால் இனி இல்லை என்ற செல்லடி. பங்கருக்குள்ளயும் மகளைக் கொண்டு ஓட ஏலாது. வீட்டுக்கு மேலேயும் செல் விழுந்தது. செல் விழுந்துதான் எங்கட தங்கச்சி செத்தவ. அப்போது எனது கணவர் சொன்னார் வாங்க உள்ளுக்குள் போவோம் என்று. போன இடத்திலே அங்கால இயக்கம், இங்கால ஆமி, எங்க என்ன செய்வதென்று தெரியாமல் நிக்கேக்க செல் விழந்து நியாயமான சனம் செத்திட்டுது.
அதிலே தான் அந்த வீதியைத் தாண்டினால் அவங்கட பக்கம் போனால் உள்ள போனதுக்குச் சமம் அப்படி தாண்டித்தான் இவர் இந்த பிள்ளையை கொண்டு ஓடினார். முதல்லில எனக்கு இந்த காலில சொக்கட்டில பெல்ட். அந்த பெல்ட் கூடி அறுந்திட்டுது. ஓடிப் போனாப் போல செல் விழுந்து கிடங்கிக்க விழக்கில என் கால் புதைந்து கீழே விழுந்திட்டன். ஆமிக்காரன் தூக்கித்தான் அங்கால கரையில சேர்த்து கஸ்டப்பட்டுதான் அங்கால போய் சேர்ந்தோம்.
நாங்கள் 2 பேரும் ஏலாத ஆக்கள். இவருக்கும் கண் இல்லை. எனக்கும் கால் இல்லை. நாங்க இரண்டு பேரும் ஏற்கனவே சரியான கஸ்டப்பட்ட ஆக்கள் கஸ்டத்தின் மத்தியில் இந்த பிள்ளைகளை வைத்து படிப்பிக்கிறன். இவர் அன்றன்று கூலி வேலை செய்துதான் சாப்பிட்டுக் கெண்டிருக்கிறோம். நாங்கள் கஸ்ரப்பட்டது போல எங்கட பிள்ளைகள் கஸ்ரப்படக் கூடாது நன்றாக படிச்சு முன்னேற வேண்டும் என்பதுதான் என்ட குறிக்கோள். ஆகவே எனது 2 பிள்ளைகளும் படித்த நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதே ஆசையும் எதிர்பார்ப்பும் ஆகும். என்பதாகும்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License