I am happy now

Life story of a disabled person


දැන් මම සතුටුයි

ආබාධිත පුද්ගලයාගේ ජීවිත කතාව


நான் இப்போது சந்தோசமாக்க உள்ளேன்

அங்கவீனர் ஒருவரின் வாழ்க்கை பற்றிய பகிர்வு



CMP/MN/MN/PES/01
P. Yukarista - Peasaalai
I was born in Mannar. At present I am living in Pesalai. When I was 10 months old, my hand got deformed. My mother had given birth to my elder sister. When she was expecting me, she believed I was a boy. When I was born a girl, my mother was disappointed. She had no affection for me. She gave me to my paternal grandma in Thaalvupaadu. My mother was in Pesalai. When I was 10 months old I got fever. There was no Polio vaccine then.
I lacked mother’s love and mother’s breast feeding. Grandma gave me bottle milk. There were no telephones or transport facilities then. I was taken to Mannar hospital in a rich man’s vehicle.
My hand got deformed by Polio in spite of all the doctors’ efforts. I was taken to Jaffna Hospital. I was there for 1 ½ months. Then my mother came. She had had some jewels. As my father lived a jolly life my mother had to sell them all. This, and the fact that the 2nd child too was a girl, affected Mom. She believed she lost her jewels because I was an unlucky baby. To add to this, I was born a deformed child. So mother developed a hatred for me. Then I was taken home. I got all this information verbally by my grandma’s mouth. I reached the age of 10. I was studying in Grade 5. They stopped my schooling.
As I was a deformed child, I wanted to study and become a sister or get employed. It would help me survive. Who would marry a deformed girl? This was my attitude. Though I lacked education I had common sense. My mother’s younger sister was in Mannar. She was expecting twins. She needed a domestic help. My education was stopped and I was sent there. How should a mother treat a deformed child? They should have kept me in their care and looked after me. They didn’t do so. I was made to work as a domestic servant.
I stayed there until the twins were 4 years old. I wasn’t given anything but food. They wouldn’t even buy me clothes. But I worked well. I cooked and did all work. We had to get water from a tap on the road. I would stand in a queue and get water. During Srimavo Bandaranayake’s regime I stood in a queue at 4 am and got bread.
My aunty had 7 children. She went for a government job in Chilapathurai. Though I was deformed I cooked, did shopping, cleaned the house and did all the work.
My mother often came to see me. I told her I didn’t want to stay with my aunty and asked to be taken home. “No, you stay here,” I was told. My Aunty’s husband my uncle had an eye on me. I told mother about my plight. “He is not like that. You are imagining things,” I was told. I sat alone and cried. I accepted my fate. The children grew up. I told my Auty I couldn’t stay with her any longer and came home.
I stayed there. After a few days they wouldn’t leave me alone. I was taken to get firewood and to Panavadi. The burden of whole house work was on my head. I had an elder sister. She had wheezing from childhood. She was attached to mother. My mother would buy her jewels and everything. But I wasn’t given anything. I used to shout that they are doing everything for my elder sister but nothing for me. I used my elder sister’s old cloths. I yearned for new cloths in vain.
My father was in Karai Valai. Had to cook for 25 people. Had to grind ½ kg of chilli manually. A basket of fish would be given for that. At night, in lamplight I grind chilli manually on the grinding stone. I make a big ball of chilli paste. My hands smart while doing it. If I labour thus, I was given a box of fish on Sundays. It could be sold for Rs 50. In those days Rs 50 was like Rs 1000 today. With that money I buy cloth (Rs7 per yard) for 2 dresses and a pair of slippers. Thus I fended for myself. This gave me great satisfaction.
Then, my father’s sister was expecting a baby – her 4th child. She lived in Pesalai, 4th circle. They took me there to work for her. I didn’t like it. I was sad they were treated me thus. My aunty (father’s younger sister) treated me well.
But my Aunty’s husband was not a good person. I went and slept in the shed where grandma was making hoppers. “Why do you come and sleep here .Go inside and sleep” grandma told me. “I am scared” I answered. “But your uncle is there” Grandma said. “He is in the Veranda. I am in the room, I am scared,” I lied.
Then the next door boy fell in love with me he was a Sinhalese. I was yearning for love and affection, so I was taken up. We loved each other in earnest. My grandma got wind of this. She scolded me and took me to my home. At first he was at his sister’s place and then after my move he came to his brothers’.
He came here to be near me. One day I asked him directly,”I am a deformed person, why do you love me? “You don’t look deformed. You work well. A pot in the hip and a pot in hand, you carry. You don’t look like a deformed person. You have developed a complex that you are deformed, he said and promised to marry me.
In my family, mother and others said he was a Sinhala, low caste, a Chakiliya. They beat me up. My father beat me and locked me out in the rain and went to sleep. My face was all bloodied.
My next door lady reported these happenings to my lover. “The girl you love is badly beaten up and locked out in the rain. She will die if you don’t go to her,” she told him. He broke the fence and rescued me. He kept me next door. He dried my hair and bought me Soda and Panadol. Then my parents got up and came and said, “She is our daughter. Hand her over to us.” “You will kill her if I do so. I want her. I will take her,” he said.
My next door aunty scolded my mother. “She is a deformed child. He loves her. You ought to get them married. Why are you wasting time in speech,” she said. “Cant trust him, he is a Sinhalese,” said my mother. “All his relations are here. You can find out,” the next door aunty said. A good neighbor advised my lover “Leave her and go. They will get you married. Running away with her will be a disgrace”.
He got a promise that not a single blow will fall on me and left me and went. My mother and all were discussing whispers. They planned to marry me off to my uncle’s son – a useless drunkard. My mother believes I can marry a drunkard, but not a Sinhalese, low caste. My mother believes in caste. I called my lover and said, “They are going to marry me off to a drunkard. I can’t stay here any longer.” “I will save some money and take you” he said.
In the meanwhile I got pregnant. “Tell him to take her,” my next door aunty was told. Since I got pregnant he was asked to take me away. He took me- with only the dress I was wearing. We made an entry at Murungan Police station to this effect. “We are going willingly – don’t search for us.” His mother looked after me well. Then he took me to his sister’s in a car.
He bought me clothes and jewels and our father got us married in church. No member of my family was in touch with us. When our children were born they called us to the street to talk. Even when they had functions we were not invited. We were out casts. My siblings were all well married. To my mother I was an outcast because I had married a Sinhalese. When matters were like this, my husband’s two kidneys failed to function and he died.
When they attended his funeral they neither gave me money nor stay for long. They left soon after the funeral. Our mother sold coconut estates, lands and gave money to all her children but me.
On the 23rd of December – around 1am – we heard gunfire. When we looked there were sparks of fire. The navy men pointed guns at us through the windows and ordered us to come out. Army surrounded us. Our walls had holes all over due to gun shot. We had to kneel down. Our mouths dried up due to thirst. Only when our holy father showed up around 7 am, we were given water, all of us went with father without even taking our clothes. There was a Sinhalese father also with us. The army and navy were all over. They held our Sinhalese father by his neck and harassed him saying, “Even though you are a Sinhalese, you are helping them,” We were all crying. At last we reached the church. There was no food or clothing. The army also had camped there. Then we got pass from the navy, collected a few things and lived in rented houses until 2009. Only God knows what I suffered without a male to help during these problem days. Later we heard a bus carrying 40 army men had been burnt. Around 40 had died. Turbulence arose because of the Movement. Now we have no Movement boys – hence no problem.
I suffered a lot after losing my husband. Now all my children are married and I live in their care. I educated all my 3 children. One of them was a volunteer teacher. People say you have to lose something to gain something. Two years after my husband’s demise my daughter’s job had been made permanent. I am living happily with my children now.


CMP/MN/MN/PES/01
බී යූකරිස්තා පේසාලෛයි.
මම ඉපදුනේ මන්නාරමේ. ඉන්නේ පේසාලෛයිවල. මම ඉපදිලා මාස 10කින් අත පණ නැති වුනා. අ‍පේ අම්මට ඉස්සෙල්ලම අක්කා ඉපදුනා. මම බඩේ ඉන්නකොට අම්මා හිතාගෙන ඉඳලා තිබුනේ මම පිරිමි ළමයෙක් කියලා. මම කෙල්ලෙක් හැටියට ඉපදුන නිසා අම්මට මාව වැඩිය අල්ලන්නේ නැහැ. ඉපදුන ගමන්ම තාල්ලුපාට්ටුවල අපේ ආච්චි අම්මාට මාව දීලා. අම්මා පේසාලෛයිවල හිටියා. මට ඉපදිලා මාස දහයකින් උණක් හැදිලා. ඒකාලේ පෝලියෝ බෙහෙත් බිංදුවක් ලැබෙන්නේ නැහැ.
මට අම්මගේ ආදරෙත් නැහැ. මව්කිරිත් නැහැ. ආච්චි අම්මා කිරිපිටි තමයි දුන්නේ. ඒ කාලේ දුරකථනත් නැහැ. වාහන පහසුකමුත් නැහැ. කිට්ටුව හිටපු සල්ලිකාරයෙකුගේ වාහනයක් ඉල්ලගෙන මම මන්නාරමේ රෝහලට අරන් ගියාලු.
මට එතකොට පෝලියෝ හින්දා අත පණ නැති වුනා. වෛදවරු කොච්චර උත්සාහ කළත් හරිගියේ නැහැ. යාපනයේ මහ රෝහලට අරන් ගියා. එහේ හරියටම මාස එකහමාරක් ඉඳලා තියෙනවා. එතකොට අපේ අම්මා එහෙ ආවා. අම්මට රත්ත්‍රන් බඩු ටිකක් තිබුනලු. තාත්තා ටිකක් විනෝදෙට බරයි. ඒ නිසා ඔක්කොම විකුණලා දැම්මලු. විකුණපු නිසා අම්මට දෙවැනි පාරටත් දුවෙක් ඉපදුනා කියලා දුකයිලු. රත්ත්‍රන් බඩු නැතිවු‍නේ මං හින්දා කියලා හිතුවලු. මමත් ආබාධිතවුන නිසා මං ගැන තරහයි වගේ. පස්සේ ගෙදරට ගෙනාවා. මේ හැම දෙයක්ම මට කීවේ ආච්චි අම්මා. ප‍ස්සේ මට අවුරුදු දහයක් වුනා. මම පාසලේ 05 වසරේ ඉගෙනගත්තේ. මාව පාසල් යවන්නේ නැතිව නවත්තලා දැම්මා.
මම ආබාධිත නිසා ඉගෙනගෙන සිස්ටර් කෙනෙක් හරි නිලධාරියෙක් හරි වුනානම් පස්සේ මට ජීවත් වෙන්න පුලුවන්. ආබාධිත මාව කවුරුවත් කසාද බඳියි ද? මෙහෙම හිත හිතා තමයි මම හිටියේ. ඉගෙනගන්න බැරිවුනත් අත්දැකීම් ලැබෙනව‍නේ. මම එහෙම හිතුවා. එතකොට මගේ අම්මගේ නංගී මන්නාරමේ හිටියා. එයාට නිවුන්නු ලැබෙන්න ඉන්නකොට එයාට වැඩකාරයෙක් ඕනවෙලා මම 05 වසරේ ඉගෙනගන්න කොට ඉගෙනීම නවත්තලා එහෙ ගිහින් දැම්මා. හරි අම්මා කෙනෙක් නම් ‍ආබාධිත ළමයෙකුට මොනවද කරන්න ඕන. එයාව හොඳින් බලාගන්න ඕන. එහෙම නොකර මාව වැඩකාර කමට යැව්වා.
පුංචි අම්මට ළමයි හම්බවෙලා එයාලට අවුරුදු හතර වෙනකම්ම එහෙ තමයි හිටියේ. එයාලා මට කෑම හැර වෙන මොකුත් දුන්නේ නැහැ. ඇඳුමක්වත් අරන් දෙන්නේ නැහැ. ඒත් මම හොඳට වැඩ කරනවා. උයනවා. හැමදේම කරනවා. ඉස්සරහ පාරේ තියෙන ටැප් එකෙන් තමයි වතුර ගන්න ඕන. මම පෝළිමේ ඉඳලා වතුර අරන් එනවා. සිරිමාවෝ බණ්ඩාරණායකගෙ කාලේ උදේ හතරට පෝළිමේ ඉඳලා තුණ්ඩුව දීලා පාන් ගන්නවා. මගේ පුංචි අම්මට ළමයි හත් දෙනයි. එයා සිලාවතුරේ. ආණ්ඩුවේ රස්සාවක් කළේ. උයනවා.. කඩේ යනවා.. ගේ අස් කරලා අතුගානවා.. වගේ වැඩ ආබාධිතව ඉඳගෙනත් මම කළා.
අම්මා මාව බලන්න වරින්වර එනවා. එතකොට මම අම්මට කිව්වා මම මෙහෙ ඉන්න කැමැති නැහැ. එක්කන් යන්න කියලා. කමක් නෑ උඹ හිටපන් කියලා අම්මා කිව්වා. පුංචි අම්මගේ මහත්තයා ඒ කියන්නේ බාප්පා. එයාගේ බැල්මත් මට කරදරයක් වෙලා තිබුනේ. බාප්පගේ බැල්ම හොඳ නැහැ කියලා අම්මට කිව්වහම එයා එහෙම නැහැ. උඹ තමයි වැරදියට හිතන්නේ කියලා බැන්නා. මම තනියම ඇඬුවා. මේක තමයි මගේ ඉරණම කියලා හිතාගෙන හිටියා. පස්සේ ළමයි ලොකුවුනාම මෙහෙ ඉන්න බෑ කියලා පුංචි අම්මට කියලා ගෙදර ආවා. මෙහෙ ඇවිල්ලා ටික දවසක් ඉන්නකොට ඒ ගොල්ලෝ මට ඉන්න දෙන්නේ නැහැ. දර කඩන්න එක්ක යනවා. ගල් වැඩපොළට එක්ක යනවා. හැම වැඩක්ම මගේ ඔලුවට දානවා. මට එක අක්කා කෙනෙක් ඉන්නවා. එයාට පොඩි කාළේ ඉඳන් හැම දේම ලැබෙනවා. එයා අම්මත් එක්ක හොඳයි. අම්මා මගේ ඉස්සරහ දීම එයාට රත්ත්‍රන් බඩු හදනවා වගේ දේවල් කළා. ඒත් මට කිසිදෙයක් කරලා දෙන්නේ නැහැ. එතකොට මම කෑ ගහනවා. අක්කට විතරක් හදලා දෙනවා. මට මොකුත් දෙන්නේ නැහැ කියලා. අක්කා ඇඳලා පරණවෙච්ච ඇඳුම් තමයි මම ඇන්‍‍ඳේ. අලුත් ඇඳුම් අදින්න ආසයි තමයි. ඒත් ලැබෙන්නේ නැහැ.
අපේ තාත්තා වෙරළේ දැල්වල වැඩකළා. විසිපස් දෙනෙකුට උයන්න ඕන. මිරිස් 500ක් මිරිස් ගලේ අඹරන්න ඕන. ඇඹරුවොත් මාලු කූඩයක් දෙනවා. රෑට මිරිස්ගල ලඟින් ලාම්පුවක් තියාගෙන අඹරනවා. ඇඹරුවාම ලොකු ගුලියක් වගේ එනවා. ඒක අඹරනකොට අත්දෙකම දැවිල්ලයි. මෙහෙම කරලා දුන්නම ඉරිදට මාලු පෙට්ටියක් දෙනවා. මේ මාලු පෙට්ටියේ මිල රුපියල් 50 යි. ඒ කාලේ රුපියල් 50 දැන් රුපියල් 1000ක් වගේ. ඒ මුදල අරගෙන කූපන් කඩෙන් චීත්ත යාරෙකුයි, ගවුම් රෙදි දෙකකුයි, සෙරෙප්පු දෙකකුයි අරගෙන මගේ දේවල් කරගත්තා. ඒක ගැන මට සතුටුයි.
එහෙම ඉන්නකොට තාත්තාගේ නංගිට ළමයි හම්බවෙන්න හිටියා. එයා පේසාලෛයි හතරවෙනි කොළනියේ හිටියා. එයාට ළමයි ‍තුන්දෙනයි. හතරවෙනි ළමයා ඉපදෙන්න යනවා. උඹ ගිහින් එහෙ වැඩකරපන් කියලා මාව එහෙ යැව්වා. එතකොටත් මම කැමති වුනේ නැහැ. අපිව එක්ක ගිහින් එහෙ මෙහෙ දානවා. නිදහසේ ඉන්න දෙන්නේ නෑනේ කියලා හිතුවා. ‍මගේ නැන්දා (තාත්තාගේ නංගී) ‍මම හොඳට බලාගත්තා.
නැන්දාගේ මහත්තයා හරි නැහැ. ආච්චි අම්මා ආප්ප පුච්චන කුස්සියට ගිහින් මම දවසක් නිදාගත්තා. ඇයි එතන නිදාගන්නේ අර එහා පැත්තට ගිහින් නිදාගනින් කියලා ආච්චි අම්මා කියනකොට මට එහෙ නිදාගන්න බයයි කියලා කීවා. ඇයි මාමා නිදිනේ කියලා කියනකොට මාමා එළියේ තමයි නිදාගෙන ඉන්නේ. ඒකයි බය කියලා බොරු කිව්වා.
එහෙම ඉන්නකොට එහා ගෙදර කොල්ලෙක් මට ආදරය කළා. එයා සිංහල කෙනෙක්. එතකොට තමයි මට ආදරය කියන දේ දැනුනේ. එයා මාත් එක්ක හොඳින් කතා කරනකොට මගේ හිතත් එයා ළඟට ඇදිලා ගියා. එතකොට අපි දෙන්නම ඇත්තටම ආදරය කරා. මේ කතාව ආච්චි අම්මා දැනගත්තා. ආච්චි අම්මා මට බැනලා මාව මගේ ගෙදරට එක්ක ගියා. ඉස්සෙල්ලා එයා එයාගේ අක්කගෙ ගෙදර හිටියේ. ‍මෙහෙට ආවට පස‍්සේ එයාගේ අයියගෙ ගෙදරට ආවා. එයා මාව බලන්නම එහෙ ඇවිත් ඉන්නවා. මම දවසක් මෙයාගෙන් කෙළින්ම ඇහුවා ඇයි ඔයා මට ආදරය කරන්නේ... මම ආබාධිත කෙල්ලක් කියලා. එයා කිව්වා මම දිහා බැලුවම ආබාධිත බවක් පේන්නේ නැහැ. හැම වැඩක්ම කරනවා. උකුළේ එක කළයක්, අතේ එක කළයක් උස්සගෙන යනවා. බැලුවාම ආබාධිත බවක් පේන්නේ නැහැ. උඹ තමයි මගේ හිතේ පදිංචිවෙලා ඉන්න කෙනා. මම උඹව කසාද බඳිනවා කිව්වා.
අපේ ගෙදර අම්මලා එහෙම කට්ටියම එයා සිංහල. ජාතිය හොඳ නැහැ. සක්කිලියෙක්. මෙහෙම අම්මා මට හරියට බැන්නා. හොඳටම ගැහුවා. තාත්තා ගහලා මගේ මූණෙන් ලේත් ආවා. තාත්තා වැස්ස වෙලාවේ මාව එළියට දාලා දොර වහගෙන නිදා ගත්තා.
ඒක එහා ගෙදර අක්කා දැකලා එයා ගාවට ගිහින් කිව්වලු උඹ ආදරය කරන කෙල්ලට ගෙදරින් ගහලා වැස්සට අතඇරලා ඉන්නවා කියලා. උඹ ගියේ නැත්නම් එයා මැරෙයි කියලා කිව්වලු. එතකොට එයා දුවගෙන ඇවිල්ලා මාව එක්ක ගිහින් එහා ගෙදර නවත්තගෙන හිටියා. මට පැනඩෝල් සෝඩා එහෙම දීලා ඔලුව පිහදැම්මා. එහෙම ඉන්න‍කොට අම්මයි තාත්තයි නැගිටලා ආවා. අපේ දුව එවන්න කියලා එයාට කිව්වා. මම එයාව එව්වොත් ඔයගොල්ලෝ එයාව මරණවා. එයා මට ඕන. මම එයාව එක්ක යනවා කියලා කිව්වා.
එහා ගෙදර නැන්දා ඇවිල්ලා අම්මට බැන්නා. මෙයා ආබාධිත කෙල්ලක්. මෙයාට මේ කොල්ලා කැමතියි. බන්දලා දෙන්න ඕන. එහෙම නොකර බොරුවට බැන බැන ඉන්නවා කියලා කිව්වා. අම්මා කිව්වා එයා විශ්වාස කරන්න බැහැ එයා සිංහල කෙනෙක් කියලා. ඒකට නැන්දා කීවා. එයාගේ නෑදෑයෝ ඔක්කොම මෙහෙ ඉන්නවානේ... එතකොට ඔයා දන්නේ නැද්ද කියලා ඇහුවා. එතකොට එහා ගෙදර මාමා කෙනෙක් ඇවිල්ලා මල්ලි ඔයා මෙයාව අතහැරලා යන්න. මෙයාව ඔයාට බන්දලා දෙයි. නිකම් එක්ක ගියොත් අවනම්බු වෙනවා කියලා කිව්වා.
එතකොට එයා මේ කෙල්ලට කිසි කෙනෙක් අත තියන්න එපා කියලා කට්ටිය පොරොන්දු කර ගත්තා. පස්සේ මාව අතහැරලා ගියා. උදේ අපේ අම්මලා කසුකුසු ගානවා ඇහුනා. ඒ මොකක්ද කිව්වොත් මාමගෙ පුතෙක් ඉන්නවා. එයා හොඳම බේබද්දෙක්. එයාට මාව බන්දලා දෙන්න ගෙදර කට්ටිය කතා වුනා. බේබද්දෙක් බඳින්න හොඳයි. සිංහල මිනිහා නරකයි කියලා අම්මා කියනවා. අම්මා ජාතිය බලනවා. මම එයාට එන්න කියලා මාව මස්සිනාට බන්දලා දෙන්න යනවා. මම තවත් මෙහෙ ඉන්නෙ නැහැ. මාව එක්ක යන්න කියලා කිව්වා. මම සල්ලි ටිකක් එකතු කරලා මාව එක්ක යන්නම් කියලා කිව්වා.
ඒ අතරේ මට බබෙක් හම්බවෙන්න ආවා. එතකොට අර අක්කට කියලා එයාට නම්බු ඇතිව මෙයාව එක්ක යන්න කියලා බන්දලා දෙන්නම් කියලා ඒක දැනගත්තු ගමන් කිව්වා. එයා මම ඇඳගෙන හිටිය ඇඳුම පිටින්ම එක්ක ගියා. මම කැමැත්තෙන් තමයි ආවේ. අපිව කවුරුවත් හොයන්න එපා කියලා මුරුන්ගන් පොලිසියේ එන්ට්‍රියක් දැම්මා. එයාගේ අම්මා මාව හොඳට බලාගත්තා. පස්සේ එයාගේ කාර්එකේ නැගලා එයාගේ අක්කගේ ගෙදරට ගිහිල්ලා නැවැත්තුවා.
එයා මට රත්ත්‍රන් බඩු එහෙම ඔක්කොම අරගෙන අපේ පල්ලියේ ෆාදර්ට කියලා විවාහ වුනා. අම්මා, තාත්තා, සහෝදරයෝ කවුරුවත් මාත් එක්ක සම්බන්ධයක් නෑ. ළමයි හදලා පාරට අතහරිනවා වගේ. හැම දේකදීම මාව කොන් කරා වගේ. අනිත් හැමෝම හොඳ හොඳ තැන්වලින් විවාහ කරගෙන. අපේ අම්මා මෙයා බැඳපු කෙනා සිංහල, ජාතියක් නෑ කියලා කියවනවා. මෙහෙම ඉන්නකොට එයාගේ වකුගඩු දෙකම නරක් වෙලා මැරුණා.
මළගෙදරට ඇවිල්ලා සල්ලි දුන්නෙත් නෑ. හිටියෙත් නෑ. එහෙම්මම ගියා. දැන් අපේ අම්මගේ ගේ විකුණලා. පොල්වතු ඉඩම් ඔක්කොම විකුණලා. හැම ළමයටම අම්ම සල්ලි දුන්නා. ඒත් මට දුන්නෙ නැහැ.
දෙසැම්බර් මාසේ 23 දා එකට විතර වෙඩි සද්දයක් ඇහුනා. ඇවිල්ලා බලනකොට ගිණි ගන්නවා. නේවි එකෙන් ඇවිල්ලා ජනේලෙන් තුවක්කුව තියාගෙන එළියට වරෙන් කිව්වා. එළියේ ආමි කට්ටිය වටකරලා හිටියා. වෙඩි වැදිලා බිත්තිවල හිල්. අපි හැමෝම එළියේ දණගස්සලා තිබ්බා. තිබහට දිව වේලෙනවා. හතට විතර ෆාදර් ආවට පස්සේ තමයි අපිව නැගිට්ටවලා වතුර දුන්නේ. අඳින්න ඇඳුමක්වත් ගන්නේ නැතිව හැමෝම ඒ ෆාදර් එක්ක ගියා. අපෙත් එක්ක සිංහල ෆාදර් කෙනෙකුත් හිටියා. මග දිගේ ආමි නේවි කට්ටිය හිටියා. එක්කෙනෙක් සිංහල ෆාදර්ගේ බෙල්ලෙන් අල්ලගෙන සිංහල කෙනෙක් වෙලත් ඒ ගොල්ලන්ට උදව් කරනවද කියලා ඇහුවා. අපි හැමෝම කෑ ගැහුවා. පසසේ අපි කොහොමහරි පල්ලියට ආවා. කෑමකුත් නැහැ. අඳින්න ඇඳුමකුත් නැහැ. ආමි එකෙන් තව කෑම්ප් එකක් දැම්මා. පස්සේ නේවි එකෙන් පාස් එකක් අරන් ඇවිල්ලා බඩු ටිකක් අරන් ගිහින් කුළී ගෙදරක 2009 වෙනකම් හිටියා. කරදර ආපු වෙලාවේ පුතෙක් නැතිව විඳපු දුක මම විතරයි දන්නේ. පස්සේ දැනගත්තා ආමි කට්ටිය ආපු බස් එකට ගිණි තියලා 40ක් විතර මැරුණා කියලා. සංවිධානය හැදිච්ච හින්දයි ආමි ප්‍රශ්නය ආවේ. දැන් සංවිධානයත් නැහැ. ප්‍රශ්නත් නැහැ.
මහත්තයා නැතිව මම හරියට දුක් වින්දා. නමුත් දැන් ළමයි ඔක්කොම බන්දලා දීලා එ‍්ගොල්ලන්ගේ ආදරය ලබාගෙන සන්තෝෂයෙන් ජීවත් වෙනවා. තුන්දෙනාටම හොඳට ඉගැන්නුවා. එක්කෙනෙක් ස්වෙච්ඡා ගුරුවරයෙක්. මාව නැතිවුනොත් තමයි එකක් ලැබෙන්නේ කියලා කියනවා. මහත්තයා නැතිවෙලා අවුරුදු දෙකකින් පසු දුවට ස්ථිර රස්සාවක් ලැබුනා. දැන් ළමයිනුත් එක්ක සන්තෝෂයෙන් ඉන්නවා.





CMP/MN/MN/PES/01
பி..யூக்கரிஸ்ரா-பேசாலை
நான் மன்னாரில் பிறந்தேன். பேசாலையில் இருக்கின்றேன். நான் பிறந்து 10 மாதத்தின் பின்னர் கை ஊனமுற்று விட்டது. அப்ப எங்கட அம்மாவுக்கு மூத்தது அக்கா பிறந்தாள். நான் வயிற்றில் இருக்கும் போது நான் ஆண் குழந்தை என்று தான் அம்மா எண்ணி இருந்தார். நான் பெண்ணாகப் பிறந்ததனால் அம்மாவுக்கு என் மீது பெரிதாகப் பிடிப்பு இல்லை. பிறந்தவுடன் தாழ்வுபாட்டில் எனது அப்பம்மா ஒருவர் இருந்தார் அவரிடம் கொண்டு போய் கொடுத்தார். அம்மா பேசாலையில் இருந்தார். அப்போது எனக்கு பிறந்து 10 மாதத்திலேயே காய்ச்சல் ஒன்று வந்தது. அந்த நேரம் போலியோ சொட்டு மருந்து கிடையாது.
எனக்கு தாயின் அரவணைப்பும் இல்லை. தாய்ப்பாலும் இல்லை. அப்பம்மா புட்டிப்பால் தான் ஊட்டுவார். அந்த நேரம் தொலைபேசியும் இல்லை. வாகன வசதியும் இல்லை. பக்கத்தில் ஒரு பணக்காரன் ஒருவரிடம் வாகனம் கொண்டு வரச் சொல்லி என்னை மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள்.
எனக்கு அப்போது போலியோவால் கை இழுத்து விட்து. வைத்தியர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தும் அது பயனளிக்கவில்லை. யாழ்ப்பாணம் பெரிய வைத்தியசாலைக்கு கொண்டு போனார்கள். அங்கு சரியாக ஒன்றரை மாதங்கள் இருந்தேன். அப்போது என்ர அம்மா அங்கு வந்தார். அம்மா கொஞ்சம் நகைகள் வைத்திருந்தாள். அப்பா கொஞ்சம் ஜொலி வாழ்க்கை வாழுறவர் அதனால் நகைகள் எல்லாம் விற்று விட்டார். வித்ததால அம்மாவுக்கு 2 வதும் பெண்குழந்தை பிறந்தது என்ற தாக்கம். நகை எல்லாம் என்னால போயிட்டு என்ற தாக்கம். நானும் ஊனமாகக் பிறந்ததனால் என்னில் ஒரு வெறுப்பு மாதிரி பிறகு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள். இவ்வளவு கதையும் எனக்கு அப்பம்மாதான் அவரின் வாயாலே சொன்னார். பின்னர் எனக்கு 10 வயதாகி விட்டது. நான் பாடசாலையில் 5ம் தரம் படித்துக் கொண்டிருந்தேன். என்னை பள்ளிக்கூடம் போக விடாது நிப்பாட்டி விட்டார்கள்.
நான் ஊனமுற்று இருந்ததனால் படித்து சிஸ்ரராகவே இல்லாட்டி ஒரு உத்தியோகத்தில் இருந்தால் பிற்காலத்தில் என் வாழ்க்கை ஓடும் தானே. ஊனமுற்ற என்னை யார்தான் கல்யாணம் செய்வார். அப்பிடி ஒரு மனநிலையில் வளர்ந்தேன். படிப்பறிவு இல்லாவிட்டாலும் பகுத்தறிவு வரும்தானே. அப்பிடி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது அம்மாவின் தங்கை மன்னாரில் இருந்தார். அவருக்கு வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்த படியினால் வேலைக்கு ஆள் தேவைப்பட்டதன் காரணத்தினால் 5ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த என்னை படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு கொண்டு போய்ச் சேர்த்தனர். ஒரு தாய் வந்து ஊனமுற்ற பிள்ளையை என்ன செய்ய வேண்டும் அவங்கட கண்காணிப்பில் வைத்து பிள்ளையைப் பார்க்க வேண்டும். அப்பிடிப் பார்க்காமல் என்னையைக் கொண்டு வந்து வேலைக்குச் சேர்த்தனர்.
அவவுக்கு பிள்ளைகள் பிறந்து பிள்ளைகளுக்கு 4 வயதாகும் மட்டும் அங்கேயேதான் இருந்தேன். அவங்க எனக்கு சாப்பாட்டைத் தவிர வேற ஒன்றும் செய்ய மாட்டார்கள். உடுப்புக் கூட எடுத்துத் தர மாட்டார்கள். ஆனால் நான் நன்றாக வேலை செய்வேன். சமைப்பேன், எல்லாம் செய்வேன் முதல் ரோட்டில் உள்ள பைப்படியில் தான் தண்ணீர் எடுக்க வேண்டும். நான் வரிசையில் நின்று தண்ணீர் எடுத்து வருவேன். சிறிமாவோ பண்டாரநாயக்கா இருக்கேக்க வரிசையில் நிண்டு துண்டு கொடுத்து 4 மணிக்குப் போய் பாண் வாங்குவேன்.
எங்கட சித்திக்கு 7 பிள்ளைகள் அவர் சிலாவத்துறையில் அரசாங்க வேலை செய்தார். சமையல் வேலைகளைச் செய்வது, கடைக்குப் போவது, வீடு வாசல் கூட்டுவது பெருக்குவது போன்ற வேலைகளை ஊனமாக இருந்த போதிலும் செய்து வந்தேன்.
என்னை அம்மா அடிக்கடி பார்க்க வருவார். அப்ப நான் அம்மாவிடம் சொன்னேன். எனக்கு இங்க இருக்க விருப்பம் இல்லை, கூட்டிட்டு போங்க என்று சொன்னேன். இல்லை நீ இரு என்று அம்மா கொன்னார். சித்திட கணவர் சித்தப்பா அவரின் கண்ணோட்டமும் எனக்கு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அம்மாவிடம் சித்தப்பாவின் கண்ணோட்டம் பிழையாக இருக்கு என்று கூற, அவர் அப்படியில்லை நீதான் அப்பிடி நினைக்கின்றாய் என்று பேசினார். தனியே இருந்து அழுவேன். என்ர நிலை இதான் என்று இருப்பேன். பிறகு குழந்தைகள் வளர விட்டு இங்க இருக்க ஏலாது என்று சித்தியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன்.
இங்க வந்து கொஞ்ச நாள் இருந்தால் அவங்க என்னை விடுற மாதிரி இல்லை. விறகுக்கு கூட்டிட்டுப் போறது , பனவாடிக்கு கூட்டிட்டுப் போறது. வேலை முழுக்க என்ர தலைப்பாரம் தான். எனக்கு ஒரு அக்கா இருந்தாள். அவளுக்கு சிறுவயதில் இருந்தே இழைப்பு வரும். அவள் அம்மாவுடன் நல்ல பாசம். அம்மா எனக்கு முன்னாலே அவளுக்கு நகை செய்யிறது அப்பிடி எல்லாம் செய்வாங்க ஆனால் எனக்கு ஒன்றுமே செய்ய மாட்டாங்க. அப்ப நான் கத்துறது அக்காக்கு மட்டும் செய்து கொடுக்கின்றீர்கள். எனக்கு ஒன்றும் செஞ்சு தாரிங்க இல்லை என்று கூறுவேன். அக்கா போட்டுட்டு கழித்த பழைய உடுப்பையே நான் போடுவேன். புது உடுப்பு போட ஆசை தான். ஆனால் முடியாது
எங்க ஐயா கரை வலையில் இருந்தார். 25 பேருக்கு சமைக்கிறது அரை கிலோ மிளகாய் அம்மியில அரைக்கோணும். அரைத்தால் 1 கூடை மீன் கொடுப்பார்கள். இரவில் அம்மிக்குப் பக்கத்திலே இலாம்பு வைத்து அரைப்பேன். அரைத்தால் பெரிய உருண்டையாக வரும். அதனை அரைக்கேக்க கை எல்லாம் எரியும். இப்படிச் செய்து கொடுத்தால் ஞாயிற்றுக் கிழமை 1 பெட்டி மீன் தருவார்கள். அந்த ஒரு பெட்டி மீனின் விலை 50 ரூபாய். அந்த நேரம் 50 ரூபா, இந்த நேரம் 1000 ரூபாய்க்குச் சமன். அந்தக் காசை வாங்கி கூப்பன் கடையிலே சீத்தை விற்பாங்க. ஒரு யார் சீத்தை 7 ரூபா எனக்கு 2 சட்டைத் துணி 1 செருப்பு எடுத்துக் கொண்டு எனது தேவையை நானே பூர்த்தி செய்து கொள்வேன். அது எனக்கு திருப்தியா இருந்தது.
அப்பிடி இருக்கேக்க அப்பாட தங்கைக்கு குழந்தை பிறக்கப் போகுது. அவர் பேசாலை 4ம் வட்டாரத்திலே இருக்கின்றார். அவர்களுக்கு 3 குழந்தைகள். 4 வது குழந்தை பிறக்கப் போகுது. நீ போய் அங்க வேலை செய் என்று என்னைக் கொண்டு போய் அங்க விட்டாச்சு. அப்போதும் எனக்கு விருப்பமில்லை. நம்மளைக் கொண்டு போய் அங்கயும் இங்கயும் மாட்டுறாங்களே. நிம்மதியாக இருக்க வழியில்லையே என்று நினைப்பேன். என்னை மாமி (அப்பாவின் தங்கை) நன்றாகப் பார்த்தனர்.
மாமியின் கணவர் சரியில்லை அப்பம்மா அப்பம் சுட்டுக்கொண்டிருக்கின்ற குசினிக்குள்ள போய் படுத்திட்டேன். என்னடி இதுக்க வந்து படுக்கிறா. அங்க போய்ப் படு என்று அப்பம்மா சொல்ல எனக்கு அதுக்க படுக்க பயமா இருக்கின்றது என்று கூறினேன். ஏன் மாமா படுத்திருக்கிறேர் தானே என்று கூற, மாமா விறாந்தையில் நான் அறைக்குள்ளே அதான் பயமாக இருக்கு என்று பொய் சொல்லி விட்டேன்.
இப்படி இருக்கேக்க பக்கத்து வீட்டில உள்ள ஒரு பையன் என்னை காதலித்தான். அவர் சிங்கள ஆள் அந்த நேரம் தான் அன்பு பாசத்திற்காக ஏங்கித் திரிந்தேன் தானே. அவர் என்னுடன் அன்பாகப் பேசி அரவணைப்பு வழங்க எனக்கு அதிலே ஒரு ஈடுபாடு வந்து விட்டது. அப்ப நாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்துக் கொண்டிருந்தோம். இந்தக்கதை அப்பம்மாவுக்கு தெரிய வந்து விட்டது. அப்பம்மா எனக்கு பேசி என்னைக் கொண்டு வந்து எனது வீட்டிலே விட்டு விட்டார்கள். முதல் அவர் அவரின் அக்கா வீட்ட நின்றார். நான் இங்க வந்ததும் அவருடைய அண்ணாவின் வீட்டுக்கு வந்து விட்டார்;.
அப்ப என்னைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்து நின்றார். ஒருநாள் நான் இவரின் நேரடியாக கேட்டேன் நீங்கள் என்னத்துக்காக என்னை காதலிக்கின்றீர்கள். நான் ஒரு ஊனமுற்ற பிள்ளை என்று கூறினேன். அவர் உன்னைப் பார்த்தால் ஊனமுற்ற மாதிரி தெரியவில்லை. நல்லா வேலையெல்லாம் செய்கின்றாய் இடுப்பில் ஒரு குடம், கையில் ஒரு குடம் தூக்கிக் போகின்றாய். பார்க்க ஊனம் என்று தெரியவில்லை. நீதான் மனசிலே நினைச்சிட்டு இருக்கின்றாய் என்று கூறினார். நான் உன்னைய முடிப்பேன் என்றார்.
எங்கட வீட்ட அம்மாக்கள் எல்லாம் அவன் சிங்களவன், சாதி கெட்டவன் , சக்கிலியன், இப்பிடி அம்மா எனக்கு சரியான பேச்சு சரியான அடி அப்பா எல்லாம் அடிச்சு முகமெல்லாம் ரத்தம் மழைக்குள்ளே கிடந்தனான். அப்பா என்னை மழையில் வெளியால விட்டு கதவைப் பூட்டிட்டுப் படுத்து விட்டார்கள்.
இதை பக்கத்து வீட்டு அக்கா பார்த்து விட்டு இவரிட்ட போய் நீ காதலிக்கும் பிள்ளைக்கு வீட்டில் அடி விழுந்து மழையிலே விட்டு இருக்கின்றார்கள். நீ போகாவிட்டால் அவள் செத்து விடுவாள் என்று கூற அவன் வேலியை முறித்து பாய்ந்த வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போய் பக்கத்து வீட்டில் வைத்திருந்தார். எனக்கு பெனடோல் சோடா எல்லாம் வாங்கித் தந்து தலையை துடைத்து விட்டார். இப்பிடி இருக்கேக்க அப்பா அம்மா எழும்பி வந்திட்டார்கள். என்ர மகளை விடுங்க என்று இவரிடம் சொன்னார்..நான் அவளை விட்டா, நீங்க அவளைக் கொன்று விடுவீர்கள், அவள் எனக்கு வேண்டும் , நான் அவளை கூட்டிக் கொண்டு போறேன் என்று கூறினார்.
பக்கத்து வீட்டு மாமி வந்து அம்மாவை பேசினாங்க. இவள் ஒரு ஊனமுற்றவள். இவளை அவர் விரும்புவது , கல்யாணம் செய்து கொடுக்கனும். அதை விட்டுட்டு சும்மா பேசிட்டு இருக்கின்றீர்கள் என்று கூறினார். அம்மா அவனை நம்ப ஏலாது அவன் சிங்களவன் என்று கூறினார். அதற்கு மாமி அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் இங்க இருக்கின்றார்கள் தானே. அதை வைத்து நீங்க தெரிந்து கொள்வது இல்லையா என்றார். அதோட பக்கத்து வீட்டு பெரியவர் ஒருவர் தம்பி நீங்க அவவை விட்டுட்டுப் போங்க. அவளை உங்களுக்கு கட்டித் தருவாங்க கூட்டிட்டுப் போனிங்க என்றால் அவமானமாகி விடும் என்று கூறினார்.
அதோட அவர் ஒரு அடி கூட இனி இவள் மீது விளக்கூடாது என்று சத்தியம் வாங்கினார். பிறகு என்னை விட்டுட்டுப் போனார். விடிய எங்கட அம்மாக்கள் எல்லாம் குசுகுசு என்று கதைத்தனர். அது என்னவென்றால் மாமாட மகன் ஒருவன் அவன். ஒரு அறுந்த குடிகாரன். அவனுக்கு என்னைக் கட்டி வைப்பதற்கு வீட்டில் பேச்சுவார்த்தை நடக்கின்றது. குடிகாரனை முடிக்கலாம் ஆனால் சிங்களவன் சாதிகெட்டவனை முடிக்கக்கூடாது என்று அம்மா. அம்மா சாதி பார்ப்பவர். நான் காதலனைக் கூப்பிட்டு எனக்கு இப்பிடி மச்சானை முடித்து வைக்கப் போகின்றார்கள். இனி நான் இங்க இருக்க மாட்டேன் என்னைக் கூட்டிட்டுப் போங்க என்று கூறினேன். நான் கொஞ்சம் காசு சேகரித்து விட்டு வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன் என்று கூறினார்
அதற்கிடையில் நான் கர்ப்பிணி ஆகி விட்டேன் அந்த அக்காவிடம் அவனை மரியாதையாக கூட்டிட்டுப் போகச் சொல்லுங்கள் கட்டித் தருவம் என்று சொன்னவரை கர்ப்பிணி ஆக்கியவுடன் கூட்டிட்டுப் போகச் சொல்லியாச்சு. அவர் என்னைய போட்டிருந்த சட்டையுடன் கூட்டிட்டுப் போனார். அவர் விரும்பித்தான் வந்தோம் எங்களை யாரும் தேட வேண்டாம் என்று கூறி முருங்கன் பொலிஸில் என்றி போட்டோம். அவருடைய அம்மா என்னை நன்றாகப் பார்த்தார். பின் அவருடைய காரில் ஏற்றி வந்து அவருடைய அக்காவின் வீட்டில் கொண்டு போய் விட்டார்.
இவர்தான் எனக்கு நகை உடுப்பு எல்லாம் எடுத்து எங்கட கோயிலில் பங்குத் தந்தை கைப்பிடித்து விட்டார். அம்மாவோ அப்பாவோ சகோதரமோ யாரும் என்னுடன் தொடர்பில் இல்லை. பிள்ளைகள் பிறக்கவிட்டு வீதியில் கூப்பிட்டு கதைப்பார்கள். நன்மைக் காரியங்கள் எல்லாம் வந்தால் கூட என்னை ஒதுக்கி வைக்கின்ற மாதிரி. மற்றைப் பிள்ளைகள் எல்லாம் வசதியான இடத்திலே கல்யாணம் செய்து இருக்கின்றார்கள். எங்கட அம்மாவுக்கு நான் திருமணம் செய்தவர் சிங்களம் சாதி இல்லை என்ற தாழ்வு இப்படி இருக்கேக்க இவருக்கு 02 சிறுநீரும் பாதிப்படைந்து இறந்து விட்டார்.
இறப்பு வீட்டுக்கு வந்தும் காசும் தரவில்லை நிற்கவும் இல்லை உடனே போய் விட்டார்கள் இப்ப அம்மாட வீடு விற்றார்கள். தென்னந்தோப்பு காணிகள் என்பன விற்று எல்லாப் பிள்ளைகளுக்கும் அம்மா காசு கொடுத்தார். ஆனால் எனக்குத் தரவில்லை.
டிசம்பர் மாதம் 23ம் திகதி 1 மணி இருக்கும். வெடிச்சத்தம் கேட்குது. வந்து பார்த்தா நெருப்பு பொறி எழும்புது. நேவிமார் வந்து ஐன்னலால் துப்பாக்கியை வைத்து வெளியே வா என்று சொன்னாங்க. வெளியில ஆமிகாரங்க சுற்றி நிக்கிறாங்க. வெடி வைச்சு சுவரெல்லாம் ஓட்டை. எங்கள எல்லாம் வெளியில முழங்காலில வைச்சாங்க. தண்ணி தாகம் நாக்க வரட்டுது. 7 மணி போலத்தான் பங்குத்தந்தை வந்த பிறகுதான் எங்கள எழுப்பி தண்ணி கொடுத்தாங்க. உடுத்த உடுப்பு கூட எடுக்காம எல்லோரும் பாதரோட போனோம். எங்களோட ஒரு சிங்கள பாதரும் இருந்தார். வழியில எல்லாம் நேவி,ஆமிகாரங்க நிக்கிறாங்க. அதில சிங்கள பாதரோட கழுத்தை பிடிச்சி சிங்களவனாக இருந்து கொண்டு இவங்களுக்கு உதவி செய்யிறாயா என்று பிரச்சனை கொடுத்தாங்க. நாங்க எல்லாம் கத்துறோம். பிறகு ஒரு மாதிரி கோயிலுக்குள்ள வந்து சேர்ந்தோம். சாப்பாடு ஒன்றும் இல்ல. உடுத்த உடுப்பும் இல்ல. ஆமி வேற கேம்ப் போட்டுட்டாங்க. பிறகு நேவிட்ட பாஸ் எடுத்து கொண்டு வந்து கொஞசம் சாமான்கள் எடுத்துக் கொண்டு போய் வாடகை வீட்டிலதான் 2009 வரை இருந்தோம். பிரச்சனை நேரம் ஆண்பிள்ளை இல்லாமல் நான் பட்ட துன்பம் எனக்குத்தான் தெரியும். பிறகுதான் தெரியும் 40 ஆமி வந்த பஸ்ஸ எரிச்சிட்டாங்க 40 பேர் கிட்ட செத்திட்டாங்க என்று. இயக்கம் வந்ததால்தான் ஆமி பிரச்சனை வந்தது. இப்ப இயக்கமும் இல்ல பிரச்சனையும் இல்ல.
கணவர் இறந்தும் எனக்கு சரியான கஸ்ரம். ஆனால் இப்போது பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் செய்து கொடுத்து இப்ப அவங்கட ஆதரவில் வாழ்ந்து வருகின்றேன். 3 பேரையும் நன்றாகப் படிக்க வைத்தேன். ஒருவர் வொலன்டியராகத்தான் படிப்பித்தார். ஒன்னை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும் என்பார்கள். கணவர் இறந்த 02 வருடத்தின் பின்னர் மகளுக்கு வேலை நிரந்தரமாக ஆக்கினார்கள். இப்போது சந்தோசமாக பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றேன்.








A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License