Pains of the life

Experiential sharing of an Ex combatant


ජීවිතයේ පීඩා

හිටපු සටන්කරුවෙකුගේ ජීවිත අත්දැකීම්


வாழ்க்கையின் வலிகள்

முன்னாள் போராளியின் வாழ்க்கை அனுபவங்கள்






CMP/MN/MN/VAT/01


There are six of us in my family. At first my mother and all were rather well off. But later on, after the birth of children we were in great difficulties. There were no facilities to educate the children. With great efforts mother educated the children. It's not that the elder two were uneducated. They did study. But now they feel, had mother not met with difficulties, they would've been better educated. Thus they yearn. We feel that this should not happen again. In future the children should be well brought up and educated. This consciousness is there in us.

Our family was in great difficulties. We were five girls and one boy. Mother suffered untold difficulties. She had been well off once. But later on, when she was educating the children amidst great difficulties, war broke out.

When we were being thus educated, forcible recruitment- one for each family- began. Can't blame them, because the other society was such. What should we do for our cause? We had strong feelings, we don't deny it. We did have them

I'm different and you're different, such a division was there. Our community should not be allowed to become extinct. So 'one for each family ' - forcible recruitment was there. We also went with a strong feeling we should capture our areas. We can't say we didn't feel. But what we suffered because of it can't be expressed in words. If I had had a loss in my life, it is this. This is a great loss

You know what I had lost? - a limb in my body. But during some work, I can't run. In eating, sometimes even in talking, I encounter obstacles. This is a drawback due to war. Scars in life- can't forget all my life- until I die. I'm not one to forget, because we suffered shortage of food. We had no clothes to wear, no Bata to walk with, we had no hospital to go for treatment when we fell sick. We had gone without food for days on end. Our sufferings were severe. Many died due to lack of medical facilities.

I went in 2007. By 2008--2009 I had come to this side. I had undergone severe suffering. Mother and all believed we were dead. After that, due to God's grace maybe, we came to the camp with others, stayed there and had come after agonizing sufferings.

Last stages. We couldn't do anything. We can't blame them- You know why? The army was attacking. These people also attacked. Who is to save who's life? It was a question mark. We couldn't blame them, neither could we blame these people. Our sufferings were great

We were forcibly registered in camp. “Why did you behave thus? Why did you go?. We were severely harassed with such questions. We were severely harassed. We would've stayed in camp for about one year, maybe. We came to our place at the end of 2009

On going there, we had to queue up for meals. We come crying and shouting. Then our parents weren't there. We lived with another one's help. I needed others' help even to take water for bath. I can't even carry water when I go to toilet. We were so weak.

We had no means for food. I can't even go to the toilet and sit- such a state of affairs. I'd become dependent on others. To think of this is agony. I think of this even now. They'd looked after me like a child. In the absence of mother and all they had helped me to go to the toilet, to bathe, they bring me food. They run from camp to camp to get me food. Thus, they looked after me so well.

Because of war, mother and all, who had been affluent, had to go places, suffered without food and became dependent on others for a meal. Such was the circumstances. Economic difficulties and ethnic riots, all happened. Both parties were responsible for this. Up to now, we are at a loss as to who is right and who is wrong.

Problems arose, we ran away got injured, lost our properties and parents, and have now come back to live without any peace of mind. Apart from that all had got married and gone away. I'm left all alone. I've no help. What to do? I think I shouldn't be alone- live alone. I try to change my mind that I should contribute to society, but at times, I get frustrated that I've no one to turn to.

What is behind this state of affairs? My parents? Or the wars that followed? It's a question mark. I'm at a loss as to what to say or what to do. Such happenings should never take place in future Whoever may it be, whatever their problem, the solution should be amicable. This is our view.

We should develop an attitude of giving in to each other. Only because both parties tried to assert superiority, we suffered such heavy losses. We're unable to clear out of this mess. As far as I'm concerned, I've never enjoyed a happy life. I'm putting up with everything and leading my life.

No such wars should ever break out again. We have lost our property- our economy- our siblings- our relatives- we're in a desperate situation. There is no use at all, of this war.

Will there ever be a better society in the future as a result of this (war)? It's a question mark now. But it should not be so. We hope a better society would develop. There should be tolerance. Problems exist- we don't deny it. But we should give a hearing to each other- bow down to each other's opinion and learn
coexistence. If not we will have more sufferings and hardships. Both parties will be losers. This is my opinion. I think.

The future society should not suffer like us. It should be a good society. Priority should be given to the children's education because education is conducive to good society. We have allowed education to be ruined. We are now unable to answer the questions children raise. When a small child asks questions- we can't answer for a while. We're not knowledgeable. If we consider today's children the society has grown and developed. They're more knowledgeable. The society should develop with the times. There ought to be a change in children. We should create a good society. Such are our expectations.

My heart aches. Why are things so? Had we been united, our society wouldn't have suffered such great losses. Lack of understanding has resulted in this terrible war. Because of it we suffered great losses. The greatest loss was Human Lives. They did not give any value to lives. They've killed people. This is a heartache. This should never have happened. The problems between the two have resulted in the destruction of society. Problems existed between the two parties. We don't deny it. But it could have been solved amicably via discussion.

My parents are rather aged. Mother fell sick. She was warded for 15 to 20 days. Then she was asked to be taken home. She was at home for 3 days. Then she passed away. She had been somewhat OK after displacement. She had looked after me. Now I suffer terribly.

After mother's death, my father was with me. Later father also passed away. Siblings are there. But they are married and gone, can't look after me. They were not interested in looking after me. They had looked after me- I don't deny it. But now I'm lonely. My heart aches to be living alone. Who would look after me? This question kept cropping up in my mind. Siblings? But they're married- so can't say they'll look after me. Not all are alike, and they have kids. Such is the problem.

Rarely have I been happy in my life. But there is one thing I'm happy about. I've done a diploma. I passed it. This is a great joy!

For the last 8 years I'm working as a school teacher. I solve everything and go to school. It gives me great satisfaction, had I abstained from doing this, I'd have been badly affected. As I go there, as I talk to the children, as I laugh with them, their company, all these make my heart full. When I leave them and come home, I find it difficult. As I have classes in the evening, it's a bit OK. After that the question in my mind is this- "Why does night come? Why does God give us nights?"-For, if the night were daytime, I could be taking to people and time would be sweet. When I'm alone questions keep cropping up in my mind. What would I do in the next stage? Where could I go? How would I be in future? The problems in my life.

What is called war should never break out again. The word itself is taboo. Had there been mutual understanding, had they listened to each other and accepted each other’s views, so many lacks of people wouldn’t have lost their lives. The society would have fared well. But no war – not anymore.

The future should not be like this. They should understand and accept each other’s views and act accordingly. They should give in to each other. The children too should be educated and be worthy of due respect. We want such a society. Furthermore there should be no place for even the word war. We want such a society.

I have expressed all the problems in my mind. I feel relaxed. If we keep the problems to ourselves, its rubbish. If we throw it out it leaves our mind. We feel happy. At first I don’t talk to anyone. I won’t dare to go to others. I feel afraid. Now after my experiences I approach and talk to anyone. I ask for and get my want.

If we speak out about the problems in our mind, they get solved and we feel happy. At the same time we should have a positive environment. If we face problems, it’s because of our environment. If we move to a different place, we relax.

If we meet new people and not see the same old faces, if we talk to people, if we share our troubles with another person, even if we are afraid, they will be able to guide us if we go wrong. It’ll be good for me. I’ll be guided. Thus, if I talk out, I’ll feel contented.

Thank you






CMP/MN/MN/VAT/01

எங்கட குடும்பத்துல நாங்க ஆறு பேர். முதல்ல அம்மாக்கள் கொஞ்சம் வசதியா இருந்தாங்க.பேந்து தான் பிள்ளைகள் எல்லாம் பிறந்து, சரியான கஷ்டமா போயிட்டு. பிறகு பிள்ளைகளுக்கு படிக்கிறதுக்குரிய வசதியில்லாம இருந்து, அம்மாக்கள்ட்ட முயற்சியால் பிள்ளைகளை படிக்க வெச்சாங்க. மூத்தாக்கள் ரெண்டுபேர் படிக்க இல்ல என்றில்லை, படிச்சாங்க தான், இப்ப நினைக்கிறாங்க என்னன்னா அம்மா கஷ்டமில்லாம இருந்தா தங்க படிக்க வெச்சிருப்பாங்க என்று சொல்லி, ஒரு ஏக்கம் மாதிரி இருக்குது. அந்த நிலைமை எங்களுக்கு இன்னும் வரக்கூடாதுன்னு சொல்லி, இனி இருக்குற காலத்துல உள்ள அந்தப்புள்ளைங்களையும் நல்லா வளர்க்கோணும் என்கிற எண்ணம் இருக்குது.
எங்கட குடும்பத்துக்குள்ள சரியான கஷ்டம். 5 பொம்புளப்புள்ளைங்களும் ஒரு ஆம்புளைப்புள்ளையும் தான். அம்மா படாத பாடுபட்டவை. எங்கட அம்மா ஒரு காலத்துல நல்லா இருந்தவ. அதுக்குப்பிறகு சரியான கஷ்டப்பட்டு, புள்ளைகள் கொஞ்சம் படிச்சு அப்படி வர, அதுக்குப்பிறகு யுத்தம் வந்தது.
படிப்பிச்சுக்கொண்டு இருக்கேக்கையே வீட்டுக்கொறாள் கட்டாயம் வரோணும் என்று சொல்லி, , அவங்கள பிழையும் சொல்ல ஏலாது. ஏனென்றா அடுத்த சமூகம் அப்படி இருக்கேக்க, நாமளும் என்ன செய்யோணும்...நம்மட இதுக்காக...விடக்கூடாது என்ற ஓர்மமும் இருந்தது. இல்லன்னு இல்ல. இருந்தது.
நான் வேறு..நீ வேறு என்றொரு பிரிவொன்றிருந்தது. எங்கட சமூகத்தை அழிக்கக்கூடாதென்று சொல்லி, வீட்டுக்கு ஒராள் வாங்க என்று சொல்லி, கட்டாயப்படுத்தி புடிச்சிட்டு போனாங்க. நாங்களும் போய் எங்கட இடத்தை நாங்களும் புடிக்கோணும் என்றொரு ஆர்வம் இருந்தது தான். இல்லையென்று இல்ல. ஆனால் அதால பட்ட துன்பம் சொல்லிலடங்காத துன்பம். என்னால இந்த வாழ்க்கையில முதல்ல எனக்கு ஒரு இழப்பு என்றா அதான் ஒரு இழப்பா இருக்கு.
என்னென்றா எண்ட உடலில ஒரு அங்கத்தையே நான் இழந்ததான். ஆனா இப்ப நடக்கக்கூடிய சில வேலைல ஓடயெல்லாம் ஏலாது. ஓடேலாது. சாப்பிட்றதுக்கு... சிலவேளை கதைக்கிறதுக்குகூட எனக்கு தடங்கலா இருக்குது. ஏனென்றா அதால வந்த பின்னடைவு. யுத்தத்தால் வந்த பின்னடைவும் வடுக்களும். அத வாழ்க்கையில என்ற இறப்பு வரையும் அத நான் மறக்கயும் மாட்டேன். மறந்து போறதுக்கான ஆளும் இல்ல. ஏனென்றா சாப்பாட்டுக்கு கஷ்டம். உடுத்துறத்துக்கு உடுப்பில்லாம இருந்த நாங்கள். நடக்குறதுக்கு பாட்டா இல்லாம இருந்த நாங்கள். ஒரு வருத்தம் வந்தா ஹொஸ்பிடலுக்கு போய், மருந்து வாங்குறதுக்கு ஹாஸ்பிடல் இல்லாம இருந்த நாங்கள். மற்றது உண்ணுறதுக்கு உணவில்லாமகூட நாங்க எத்துணை நாள் இருந்தோம். அப்படியெல்லாம் கஷ்டப்பட்ட நாங்க. மருத்துவ வசதியில்லாம நெறைய்யப்பேர் செத்தாங்க.
2007 போனனான். 2008....2009 ஆகக்கொள்ள வந்திட்டேன். நான் இங்கால வந்திட்டேன். சரியா கஷ்டப்பட்ட நான். நாங்க செத்துட்டோம் தான் என்று அம்மாக்கள் நெனச்சவய. அதுக்குப்பிறகு எதோ கடவுள்ட சித்தமோ என்னவோ தெரியாது. நாங்க பிறகு வேற ஆட்களோடு மூலமா வந்து, முகாம்ல இருந்து, படாத துன்பப்பட்டு தான் வந்தனான்.
கடைசிக்கட்டம். ஒண்ணுமே செய்ய ஏலாம போயிட்டு. நாங்க அவங்கள பிழை சொல்ல ஏலா. ஏன்னா.. ராணுவம் அடிக்குது. இவியலும் அடிக்கிறாங்க. அப்ப அதால ஆர்.. ஆர்ர...உயிரை ஆர் பாதுகாக்கிற என்ற ஒரு கேள்விக்குறியா இருந்தது. நாங்க அவையளை சொல்ல ஏலாது. இவையளையும் சொல்ல ஏலாது. அப்படி ..சரியா கஷ்டப்பட்டோம்.
முகாமுல வலுக்கட்டாயப்படுத்திப் பதியோனும். ஏன் நீங்க இப்படி இருந்தீங்க? ஏன் போனனீங்க? என்று ஆக்கின செய்தாங்க. ஆமி சரியான அளவுக்கு செய்தாங்க. முகாம்ல. ஒரு வருஷம் இருந்திருப்போம் நாங்க. 2009 கடைசில தான் இங்க எங்கட ஊருக்கு வந்த நாங்க...
அங்க போனா லைன்ல தான் நிக்கணும் சாப்பாட்டுக்கு. கத்திக்கொண்டு. அழுதுகொண்டு வருவோம் நாங்க. அதே நேரத்துல எங்கட அம்மா அப்பாக்கள் இல்ல. இன்னொருவருட உதவியோடு தான் இருந்த நாங்கள். ஒரு குளிக்கக்கூடிய தண்ணியெடுத்தன் என்றா ... இன்னொருவருடைய உதவியோடு தான் நாங்க போகோணும். டொய்லெட்டுக்கு தண்ணி தூக்குற என்றாலும் என்னால ஏலாது. அவ்வளவு ஏலாம இருந்த நாங்க.
சாப்பிடவே வழியில்லாம ஒரு...டொய்லெட்டுக்கு போகக்கூடிய என்னால இருக்க ஏலாத ஒரு நிலமய...இன்னொருவர் எனக்கு செய்ய வேண்டியது வந்திட்டு. அத நெனச்சு நான் வேதனப்படறன். அத இப்பயும் நெனைக்குறது. தங்களோடு ஒரு புள்ளைய வெச்சுப் பார்க்குற மாதிரி பார்த்தவையள் என்னைய. டொய்லெட்டுக்கு.... குளிக்க... அம்மாக்களிட தொடர்பு இல்லாத நேரமெல்லாம் அவையள் எனக்கு சாப்பாடு கொண்டுவந்து தாறது....ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு ஓடிப்போய் சாப்பாடு கொண்டுவருவாங்க. அப்படி நல்லா என்னைப் பாத்தாங்க
யுத்தத்தால் நிறைய இடம்போய் அடிபட்டு, சாப்பிடேலாம வசதியாயிருந்த அம்மாக்கள்...கடைசியா இன்னொருவர்ட்ட போய் வாங்கிச் சாப்பிடக் கூடியளவுக்குத்தான் இருந்தாங்க. அப்படி சூழல் அமஞ்சிட்டு, பொருளாதாரக் கஷ்டம், மற்றது இனக்கலவரம் எல்லாம் நடந்தது.. ஆனா அதுக்கு ரெண்டு பகுதியாலயும் காரணம் இருந்தது. அதுல ஆர்ல பிழை, ஆர்ல சரி என்று எங்களுக்கு இதுவரையும் தெரியாமல் தான் இருக்குது.
பிரச்சினை வந்து, ஓடிப்போய்...நாங்களும் காயப்பட்டு, அம்மாக்களையும் இழந்து, சொத்துக்களையும் இழந்து, இப்ப மீண்டும் வந்து ஒரு நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கை தான் இப்பயும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைவிட, எல்லாரும் கல்யாணம் கட்டிப் போயிட்டுதுகள்.. நான் தனியாத்தான் இருக்கிறன். ஆர்ரயும் உதவி இல்ல. நானும் என்ன செய்ய? நான் தனிய இருக்கக்கூடான்னு, தனிமைல வாழக்கூடான்னு நெனச்சு என்ற சிந்தனையெல்லாம் மாத்தி, நானும் ஒரு இப்படி சமூகத்துல சில வேலைகள் செய்யோணுமென்று எனக்கு இருந்தும் சில நேரத்துல ஒருத்தரும் இல்லையே என்ற ஒரு விரக்தி ஒன்று இருக்குது.
இதுக்குப் பின்னணி என்னுடைய தாய்...தகப்பனோ..இல்லாட்டி பின்னால வந்த யுத்தங்களா...என்றா ஒரு கேள்விக்குறியாத்தான் இருக்குது. என்ன சொல்றது என்ன செய்றது என்று தெரியாம இருக்குது. இனிமேல் பட்டு இப்படியான சம்பவத்துல நடக்கக்கூடாது. பிரச்சினை யாராயிருந்தாலும் அத சுமுகமான முறையில தீர்த்துக் கொள்றதுதான் நல்லது என்று நாங்க நெனைக்கிறோம்.
ஓராள ஒராள் விட்டுக்குக்கொடுக்கிற மனப்பான்மை இருக்கோணும். இப்ப நான் பெரிசு..நீ பெரிசென்று பார்த்ததால் தான் பெரியயோரு இழப்பை நாங்க சந்திச்சிச்தது. அதில இருந்து இப்ப மீள ஏலாம இருக்கிறோம். என்னைய பொறுத்தவரையில நான் சந்தோசமா இருந்த வாழ்க்கையென்று எனக்கு இல்ல.. எல்லாத்தயும் சகிச்சுக்கொண்டு தான் நான் போய்க்கொண்டிருக்கிறன்.
இப்படியான ஒரு யுத்தங்கள் இனி நடக்கக்கூடாது. சொத்தை இழந்து...பொருளாதாரத்தை இழந்து... மற்றது சகோதரங்களை இழந்து...உறவுகளை இழந்து....சரியான ஒரு பாதிப்புல தான் இப்ப நாங்க வந்து இருக்கிறோம். மற்றது அதால எங்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்ல.
.இனிவார காலகட்டத்துலயும் இதால நல்லொரு சமூகம் வளருமா என்றொரு கேள்விக்குறிதான் இப்ப இருக்குது. அப்படி இருக்கக்கூடாது. இனி நல்லொரு சமூகம் வளரனும் என்று சொல்லித்தான் நாங்க எதிர்பாக்கிறோம். மற்றது ஒராள் ஓராள புரிந்துணர்வோட, விட்டுக்கொடுத்து, ஒற்றுமையா எல்லாருக்கும் பிரச்சினை இருக்கு. இல்லையென்று இல்ல. அத நாங்க ஒராள் சொல்றத ஏற்றுக்கொண்டு, மற்றாள் பணிஞ்சு...அதுக்கேற்ற மாதிரி நடக்கணும். அப்படியில்லாம அவரிருந்தா நாம இன்னுமின்னுமே .துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிப்போமே ஒழிய அதால யாரும் பெரிதா போறதும் இல்ல. என்ற கருத்து இதுதான். நான் நெனைக்குறன்.
இனி வார சமூகம் எங்களைப்போல துன்ப துயரத்தை படக்கூடாது. நல்லொரு சமூகமா இருக்கணும். அதனால பிள்ளைகளின்ர கல்வியில முக்கியமா இருக்கோணும். ஏனென்றா இப்பத்தைய காலகட்டத்துல சமூகத்துல ஒரு நல்லவொரு வளர்ச்சிக்கு வாறது கல்வி. அந்தக் கல்வியை நாங்கெல்லாம் பாழடைச்சு விட்டுட்டோம்.. இப்பத்த பிள்ளைகள் கேக்குற கேள்விக்கு நாங்க இந்த காலத்துல பதில் சொல்ல ஏலாம இருக்குது. சின்னப்புள்ள ஒரு கேள்வி கேட்டா... எங்களுக்கு சில நேரத்துக்கு விளக்கம் கொடுக்கேலாம இருக்கு. அந்தக்காலகட்டத்துல எங்களுக்கு போதிய அறிவு இல்லாம இருந்தது. ஆனா இப்பத்தைய காலகட்டத்துல புள்ளைகளைப் பார்க்கப்போனா, சமூகம் வளர்ந்துதான் இருக்குது. அறிவுலயும் வளர்ந்துதான் இருக்கிறாங்க. அதுக்கேத்த மாதிரி இனிவார கால சமூகங்களும் இருக்கோணும். புள்ளைகளும் மாற்றமா இருக்கோணும். நல்லொரு சமூகமா உருவாக்கோணும் என்கிறது தான் என்ற எதிர்பார்ப்பா இருக்குது.

சரியானதொரு வேதனையா இருக்கு. ஏன் அப்படி இருக்கோணும்? ரெண்டு பெரும் ஒற்றுமையா இருந்திருந்தா இவ்வளவு இழப்பு எங்கட சமூகத்துக்கு வந்திருக்காது. இந்த புரிந்துணர்வு இல்லாததுனால இப்ப ஒரு கொடிய யுத்தம் நடந்து,. அதால இழப்பத்தான் சந்திச்சோம். முதலாவது இழப்பு மனிதன்ர உயிர்களை...ஒரு துச்சமென மதிச்சிட்டாங்க. மனிதர்களக் கொன்னுட்டாங்க. அது சரியான வேதனையா இருந்தது. அப்படியெல்லாம் செய்திருக்கக்கூடாது..ரெண்டு பேருக்குள்ள நடந்த பிரச்சினையால தான் இப்படி நம்மட சமூகம் அழிஞ்சதுக்கு காரணம். ரெண்டு பேருக்குள்ளேயும் பிரச்சினை இருந்ததுதான். இல்லையென்று இல்ல. சுமுகமான வழியா அத தீர்த்திருக்கலாம். கதைச்சு தீர்த்திருக்கலாம்
அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் வயசுபோனாக்கள். அம்மாக்கு வருத்தம் வந்திட்டு. வருத்தம் வரவும்... ஒரு 15, 20 நாள்தான் வோட்ல இருந்திருப்பா..அப்படியே வீட்டை கொண்டுபோகச் சொன்னாங்க. வீட்டை கொண்டு போகவும்...அம்மா ஒரு மூணு நாள்...வீட்டை இருந்திருப்பா..அதுக்கு பிறகு அம்மா இறந்திட்டாங்க. இடம்பெயர்ந்து வந்த பிறகு அம்மா ஓரளவு நல்லா இருந்தவ. அம்மா என்னையைத்தான் பார்த்தவ. அப்ப நான் சரியா கஷ்டப்பட்டனான்.
அம்மா செத்த பிறகு அப்பாவும் நானும்தான் இருந்தோம். பேந்து அப்பாவும் இறந்துட்டார்.மற்ற சகோதரங்கள் இருக்கிறாங்க.. அவையள் கலியாணம் கட்டிப்போயிட்டாங்கள். என்னைய பாக்கையும் ஏலாது. அவையளுக்கு செய்யோணுமென்று இதுவும் இல்ல. பாத்தவையள் தான். இல்லையென்று இல்ல. இப்ப எனக்கு தனிமை. தனிமைல இருக்க மனசுக்கு சரியான கஷ்டமா இருக்கு. தனிமை என்று சொல்லி அந்த ஒரு கேள்விக்குறி தான் மனசுக்குள்ள வந்து கொண்டிருக்குது. இனி யார் பார்ப்பாங்க?.மற்றது சகோதரங்கள்.. இனி கல்யாணம் முடிச்சிட்டு போனத்துல அவையள் பார்ப்பங்கன்னு நாங்க சொல்ல ஏலாது. எல்லாரும் எல்லார் மாதிரியும் இருக்க மாட்டாங்க. மற்றது அவையளுக்கும் புள்ளகுட்டிகள் இருக்கேக்க.. அப்படியொரு பிரச்சினையும் இருக்குது.
நான் சந்தோசமான வாழ்க்கையென்று அனுபவிச்சது குறைவு. ஒரேயொரு விசயத்துல சந்தோசப்படறன். என்ன விஷயமென்றா நான் ஒரு டிப்ளமோ ஒன்று செய்து .பாஸ் பண்ணினது. அது சரியான ஒரு சந்தோஷமாவும் இருக்கு
ஸ்கூல் டீச்சரா எட்டு வருஷம் வேலை செய்றன் எல்லாத்தயும் சால்வ் பண்ணிக்கொண்டு ஸ்கூலுக்கு போறனான். இது எனக்கு.மனசுக்கு திருப்தியா இருக்குது. ஏனென்றா இப்ப நான் சிலவேளை ஸ்கூலுக்கு போகாம இருந்தென்றா, அது நிறைய்ய எனக்கு பாதிப்பா இருந்திருக்கும். அங்க போறதால... அந்த புள்ளைங்களோட கதைக்கிறதால... சிரிக்கிறதால, அவையளோட இருக்கிறதால, மனசுக்கு சரியான சந்தோசமா இருக்கு. அதைவிட்டு நான் வீட்டுக்கு வந்தன் என்றா, கொஞ்சம் கஷ்டமா இருக்கு எனக்கு. அதுக்குப்பிறகு பின்னேரமெலாம் கிளாஸ் எடுக்குறதால அது கொஞ்சம் ஓகே. அதுக்குப்பிறகு ஏன் இரவாகுது? அப்படியொரு...கேள்விக்குறி மனசுக்குள்ள வருது. ஏன் கடவுள் இரவத் தாறார் என்ற ஒரு கேள்விக்குறி என்ற மனசுக்குள்ள விழுது. ஏனென்றா அந்த இரவுப்பொழுதும் எனக்கு பகலா இருந்தா ஒரு.. ஆக்களோட எல்லாம் கதைச்சுக்கொண்டிருந்தா... அந்தப்பொழுதும் எனக்கு ஒரு இனிமையா போகும். தனியா இருக்கேக்க .... அதுல பல ஒரு கருத்து வரும் எனக்கு. நான் அடுத்த கட்டம் என்ன செய்வேன்...எங்க போவேன்? எப்படியெல்லாம் வருவன். இனி என்ற வாழ்க்கை பிரச்சினை... இந்த அப்படி ஒரு கேள்விக்குறி என்ற மனசுக்குள்ள அடிக்கொருக்கா விழுந்துகொண்டிருக்குது.
இந்த யுத்தம் என்றது வரக்கூடாது. அந்த வார்த்தையே வரக்கூடாது. எல்லாரும் ஓராள ஒராள் புரிந்துகொண்டு, ஒராள் சொல்ற கதையை ஒராள் ஏற்றுக்கொள்ற தன்மை இருந்தென்றா இத்துணை லெச்சம் சனம் இறந்திருக்கையும் இருக்காது. இப்படியொரு பொருளாதார பிரச்சினையும் வந்திருக்காது. சமூகம் நல்லாவும் இருந்திருக்கும். ஆனா இனி வரக்கூடாது.
இனிவார சமூகம் அப்டி இருக்கக்கூடாது. எல்லாரும் ஒராள் சொல்றத ஒராள் ஏற்றுக்கொண்டு, புரிந்துணர்வோட செயல்படுற சமூகமா இருக்கோணும். விட்டுக்கொடுக்குற சமூகமா இருக்கோணும். அதே மாதிரி புள்ளைகள் கல்வியிலயும் நாலு பேர மதிக்கக்கூடிய புள்ளைகளா இருக்கோணும் இந்த சமூகத்துல இனி விரும்புற நாங்க. மற்றது இனி, எக்காரணம் கொண்டும் யுத்தம் என்றொரு வார்த்தை இனி இருக்கக்கூடாது. அந்த சமூகத்தை நாங்க விரும்புறோம்.
மனசுல உள்ள பிரச்சினைகளை சொன்னது ஒரு ரிலாக்ஸாக இருக்கு. பிரச்சினையை மனசுக்க வெச்சிருந்தா...அது இன்னம் குப்பையாதான் எனக்கிருக்குது. அத வெளில தூக்கி வீசினா அது மனச விட்டு கொஞ்சம் அகன்ற மாதிரி இருக்கும். சந்தோசமா இருக்கும். முதல் நான் யாரோடயும் கதைக்க மாட்டேன். மற்றோரிடத்துல துணிஞ்சு போக மாட்டேன். சரியான ஒரு பயம். இப்ப எல்லாத்தயும் அனுபவிச்ச பிறகு, நான் யாரோடயும் போய் கதைக்கிறதுக்கு, நான் எல்லாரோடையும் போய்க் கதைப்பேன். எனக்குத் தேவையானதை நான் போய்க் கேப்பேன். வாங்குவேன்.
மனசுல உள்ள பிரச்சினைகளை சொன்னா ஒரு பிரச்சினை தீர்ந்து, சந்தோசமா இருக்கும். ஆனா அதே நேரத்துல நமக்கு சூழல் அமையோனும். முதலாவது இப்ப நமக்கொரு பிரச்சினை வருவதற்கு காரணமாக இருந்தா...அது சூழல்தான் முதலாவது காரணமாக இருக்கும். அந்த சூழலிலே இருந்து வேற இடத்துக்கு நாங்க மாறினோம் என்றா, ரிலாக்ஸாக இருக்கலாம்
எந்நேரமும் ஒரே பார்த்த முகங்களை பார்க்காம இன்னொருவர்ட முகங்களை பார்த்தா ஆட்களோடு கதைச்சா...என்ற மனசுல உள்ள துன்பத்தை இன்னொரு ஆளிட்ட சொன்னா, பயமா இருந்தாலும் என்ற மனசில உள்ள துன்பத்தை அவங்களும் ஏற்றுக்கொள்கின்ற தன்மை, நான் பிழையான வழியில நடந்திருந்தாலும், அவங்க எனக்கு இப்படித்தான் செய்யோணும் என்று நல்ல ஒரு அறிவை சொல்லக்கூடிய ஆட்களா இருப்பாங்க. அது எனக்கொரு நல்ல வழி தானே. வழிகாட்டியா இருக்குது. அப்படி கதைச்சா எனக்கொரு திருப்தியா இருக்கும்
நன்றி.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License