My daughter

An elder describes about his past life and the daughter.


මගේ දුව

ඔහුගේ අතීත ජීවිතය හා දුව ගැන වැඩිමහල්ලෙකු විස්තර කරයි.


எனது மகள்

ஒரு முதியவர் தனது கடந்த கால வாழ்க்கையையும் மகள் பற்றியும் விவரிக்கிறார்.



CMP/MN/MU/ARI/09
My name is S.Anthony. I live in Diviya. I was born in Silapaththurai, Arippu. My father’s name is Vijayaselvam. Mother Elizabeth Morais. We are three girls and four boys. I have an elder sister. We are all settled in different places after marriage. I got married in 1990.
Those days I go to Vangalai for work. I go to sea to collect worms. We can get in to the sea only with Nevy’s permission. Only 6 people would get IC at once. One day I went with a relative and while putting the net I fell inside the boat and broke my knee. I was bedridden for 6 months. After that the food and comfort all came from my wife’s income. She took care of me by selling coconuts and mangoes in Vangalai.
The treatment I took in Vangalai didn’t work out. The operation I underwent in Anuradhapura also failed. I cannot bend my leg now. By God’s grace I am somehow moving about. I would just go to collect crabs in the shores. That’s how my daily life goes. I live with my wife and a daughter. I am 53 now.
My younger brother was with LTTE for one year. I requested to release him for my wedding; they agreed but didn’t do that. They caught me once since I was in to smuggling, and made me dig bunkers. When I was there at around 10am they told me to go home. I asked them why, and then I was told that my younger brother was dead in Mullaitheevu Sea.
The military also beat and kick us. They kept me in Thalladi for one month and beat me. They caught me from Silapaththurai camp. They caught me at Naanaattan since I didn’t have my IC. It was the holy fathers who got me released. The military caught me about 3 times, it was before the war.
During the war time there used to be military roundups. They brought 16 people here to the pond sideand made them stand facing the cemetery. All the military stood behind them and they chose 2 from the middle and told the rest to go. One of those two was my wife’s younger brother. They took those two in to a kitchen and attempted to put them on fire by putting a tire on them. But one military man stopped them and released all. There are good and bad army fellows. During the war time we were so scared of military fellows. In 2006 we got displaced and lived in Madu for 4 years. After the last war we stay under military control and there are no troubles now.
We adopted our daughter from Nanaattan as a 6 months old baby, she is not aware of that. We didn’t have children and an elderly person told us about this mother from Nanaattan who had many children and selling them due to poverty. So we took one of them.
I wish to marry her off. We are old now, it’s now her time. She shouldn’t leave us, I wish she would stay with us.


CMP/MN/MU/ARI/09
මගේ නම එස් අන්තෝනි. මම ඉන්නේ ඩිවියාවල. මම ඉපදුනේ සිලාවතුරේ අරිප්පුවේ. මගේ තාත්තාගේ නම විජය‍සෙල්වන්. අම්මාගේ නම එළිසබත් මොරායිස්. වැඩිමලා අක්කා. ගෑණු ළමයි තුන්දෙනයි. පිරිමි ළමයි හතර දෙනයි. හැමෝම එක එක දිහාවල්වල කසාද බැඳලා ඉන්නවා. මම 1990 දී බැන්දා.
එත‍කොට මම රස්සාවට බෙංගාලෙට ගියා. මුහුදු කූඩැල්ලෝ අල්ලන්න යනවා. නාවික හමුදාවේ අනුමැතිය අරගෙන තමයි රෑට මුහුදට බහින්න පුලුවන්. අයිඩින්ටි දෙන්නේ හය දෙනෙකුට පමණයි. එතකොට මම නෑදෑයෙක් එක්ක දැළක් බාන්න හදන‍කොට බෝට්ටුවේ දී ලිස්සලා වැටිලා දණහිස කැඩුනා. මාස හයක් ඇවිදින්න බැරුව ඇ‍ඳේම හිටියා. එතකොට පවුල තමයි කන්න දුන්නේ.. බලාගත්තේ. අඹ පොල් වගේ දේවල් විකුණලා තමයි මාව බලාගත්තේ..
බෙංගාලයට එක්ක ගිහිල්ලා බෙහෙත් කළත් හරිගියේ නෑ. ප‍ස්සේ අනුරාධපුරේ ගිහිල්ලා ශල්‍ය කර්මයක් කරලත් හරි ගියේ නැහැ. දැන් කකුල නවන්න බැහැ. ඒ නිසා දෙවියෝ කරපු දෙයින් මෙච්චරකල් ඇවිද ඇවිද ඉන්නවා. නිකම් තෙප්පමේ නැගලා කකුලුවෝ අල්ලන්න යනවා. මෙහෙමම මායි මගේ පවුලයි එදිනෙදා ජීවිකාව කරගන්නවා. වයස 53 යි.
මල්ලී එක අවුරුද්දක් එල් ටී ටී ඊ එකේ හිටියා. මගේ මගුලට මල්ලිව නිදහස් කරන්න කිව්වම නිදහස් කරන්නම් කිව්වා. එත් නිදහස් කළේ නෑ. පැහැර ගත්තා කියලා අල්ලගෙන ගියා. ගිනිහිල්ලා බංකර් කපන්න දැම්මා. එහෙ ඉන්නකොට උදේ දහයට විතර ඇති මල්ලී ඔයා ගෙදර යන්න කියලා කිව්වා. මම ඇයි කියලා ඇහුවම ඔයාගේ මල්ලී මැරිලා මුලතිව් මුහුදේ ගිහින් කියලා කිව්වා.
හමුදාවෙනුත් ගුටිබැට තමයි. කල්අඩිවල එක මාසයක් ඉඳලත් එහෙ ගහනවා. සිලාවතුර කෑම්ප් එකේ දී අල්ලා ගත්තා. නානාට්ටන්වල දී අයිඩින්ටි එක නැතුව ඇල්ලුවා. ෆාදර්ලා ඇවිල්ලා තමයි එළියට ගත්තේ. මේ විදියට හමුදාවෙන් තුන් පාරක් ඇල්ලුවා. එතකොට යුද්ධේ නැහැ. යුද්ධෙට කළින්.
යුද්ධෙ කාළේ ගමේ හැම වෙලේම රවුන්ඩ් අප් කරනවා. 16 දෙනෙක් මෙහේ කුලක්කට්ටුවලට එක්ක ඇවිල්ලා සොහොන බලාගන්න කිව්වා. පිටිපස්සෙන් හමුදාව. එතැන මැද ඉඳලා දෙන්නෙක්ව ඉස්සුවා. එතැන මගේ පවුලගේ මල්ලී කෙනෙක් හිටියා. අපි ඔක්කොටම යන්න කිව්වා. ඒ ගොල්ලෝ ඒ දෙන්නව එහෙමම එක්ක ගිහිල්ලා එක කුස්සියක දාලා ටයර් එක ගානේ දාලා ගිණි තියන්න හදනකොටම හමුදාවේ තව කෙනෙක් ඇවිල්ලා නවත්තලා ඔක්කොටම යන්න කිව්වා. හමුදාවෙත් හොඳ අය ඉන්නවා. නරක අයත් ඉන්නවා. හමුදාවට බයේ බයේ තමයි යුද්ධෙ කාළේ හිටියේ. 2006 දී අවතැන් වෙලා ගියා. අවුරුදු 04 ක් මඩුවල හිටියා. අන්තිම පාර කරදර වෙනකොට හමුදාවේ යටතේ තමයි හිටියේ.
දුව ඉපදිලා මාස 06 යේ දිම නානාට්ටාන්වල ඉඳලා අපි අරන් හදාගත්තා. ඒත් එයා ඒක දන්නේ නැහැ. අපි ළමයි නෑ කියනකොට එක වැඩිහිටියෙක් නානාට්ටාන්වල එක අම්මා කෙනෙකුට ළමයි ගොඩක් ඉන්නවා. දුප්පත්කම නිසා විකුණනවා කියලා කියනකොටම අපි එයාව ගත්තා.
මගේ බලාපොරොත්තුව නම් ‍මගේ දුවට විවාහයක් කරලා දෙන්න ඕන. අපට දැන් වයසයි. ඉස්සරහට එයාගේ කාළේ. එයා අපිව දාලා යන්න එපා. අපිත් එක්ක ඉන්න ඕනේ කියන එකයි.


CMP/MN/MU/ARI/09
எனது பெயர் S.அந்தோனி. டிவியா எனது இருப்பிடம். பிறந்தது சிலாவத்துறை அரிப்பு. எனது அப்பாவின் பெயர் விஜயசெல்வம். அம்மாவின் பெயர் எலிசபேத் மொறைஸ். மூத்தது அக்கா 03 பெண்கள், 04 அண்கள் எல்லாம் திக்குத்திக்காக கல்யாணம் செய்து இருக்கின்றார்கள். நான் 1990 ம் ஆண்டு திருமணம் செய்தேன்
அப்போது வங்காலைக்கு தொழிலுக்குச் சென்றேன் கடலில் அட்டை குளிக்க போறது. நேவிட்ட அனுமதி எடுத்துத்தான் இரவில கடலில் இறங்க முடியும். IC 06 பேருக்குத்தான் தருவான் அப்போது சொந்தக்காரன் ஒருவனைக் கூப்பிட்டு வலை இறங்கப் போகேக்க போட்டுக்குள் விழுந்து முழங்கால் முறிந்து விட்டது. 6 மாதங்களாக நடக்க இயலாது படுக்கையிலேயே இருந்தேன். அதோடு மனைவியின் உழைப்புத்தான் சாப்பாடு, சௌக்கியம் எல்லாம். தேங்காய், மாங்காய் என்பவற்றை வங்காலைக்கு கொண்டு போய் விற்றுதான் என்ன காப்பாத்தினா
வங்காலையில் வைத்தியம் செய்தும் சரி வரவில்லை. பின்னர் அநுராதபுரம் சென்று சத்திரசிகிச்சை செய்தும் சரி வரவில்லை. கால் இப்ப மடக்க ஏலாது. அதோட கடவுளின் செயலால இவ்வளவு காலம் நடந்து திரியுதுதான். சும்மா கரவெளி தெப்பத்தில் நண்டுக்குப் போவேன். இப்படியே அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றேன். நானும் எனது மனைவியும் ஒரு மகளும் வாழ்ந்து வருகின்றோம். 53 வயது
தம்பி 1 வருடம் LTTE ல இருந்தார். என்னுடைய திருமணத்திற்கு நான் தம்பியை விடச் சொன்னேன் விடுறன் என்று சொன்னார்கள் ஆனால் விடவில்லை. கடத்தல் செய்ததென்று பிடிச்சுக் கொண்டு போனாங்க.. கொண்டு போய் பங்கர் வெட்ட விட்டனர். அங்க இருக்கும் போது காலை 10 மணி இருக்கும். தம்பி நீங்கள் வீட்ட போகலாம் என்று கூறினார்கள். நான் என்ன காரணம் என்று கேட்க உங்கட தம்பி இறந்து முல்லைத்தீவு கடலில் போய் விட்டார் என்று கூறினார்கள்.
இராணுவத்திலும் அடியும் உதையும் தான். தள்ளாடியில் 1 மாதம் வைத்தும் ஒரே அடிதான் சிலாவத்துறை கேம் இல் வைத்து பிடித்தனர். நானாட்டானில வைத்து IC இல்லாமல் பிடித்தாங்க. பாதர்மார் வந்துதான் வெளியே எடுத்தாங்க இப்படி இராணுவத்தால் 3 தடவை பிடித்து விட்டனர். அப்ப யுத்தம் இல்ல யுத்ததிற்கு முதல்
யுத்த காலத்தில ஊரில எப்பவும் ரவுண்ட் அப்தான் 16 பேர இங்க குளக்கட்டுக்கு கொண்டு வந்து சவக்காலையை பார்த்துக் கொண்டு நிற்கச் சொன்னாங்க பின்னுக்கெல்லாம் ஆமி அதில நடுவில இருந்து 2 பேரை தூக்கினாங்க அதில என்ட மனிசிட தம்பி ஒராள் எங்களை எல்லாம் போங்க என்டான். ஆவங்க இரண்டு பேரையும் அப்படியே கொண்டு போய் ஒரு குசினிக்க போட்டு ஆளுக்கு ஒரு டயரை போட்டு கொளுத்த வெளிக்கிட ஆமியில இன்னொரு ஆள் வந்து தடுத்து எல்லாரையும் போகச் சொல்லிட்டான். ஆமியிலயும் நல்லவனும் இருக்கிறான். கெட்டவனும் இருக்கிறான் ஆமிக்கு பயந்து பயந்துதான் யுத்த காலத்தில இருந்தது. 2006 இல் இடம் பெயர்ந்து சென்றோம். 4 வருடம் மடுவில் இருந்தோம். கடைசியா அடிபட்டதோட ஆமிக்குள்ளதான் இருந்தது இப்ப பிரச்சன இல்ல.
மகள் பிறந்து 6 மாதத்திலேயே நானாட்டானில் இருந்து நாங்கள் எடுத்து வளர்க்கின்றோம் ஆனால் அவளுக்கு இது தெரியாது. நாங்கள் எங்களுக்கு பிள்ளை இல்லை என்று கூறவே ஒரு பெரியவர் நானாட்டானில் ஒரு தாய்க்கு அதிக பிள்ளைகள் வறுமையின் காரணத்தினால் விற்கிறார் என்று கூறவே நாங்கள் அவளை வாங்கினோம்.
என்ர எதிர்பார்ப்பு என்னவென்றால் எனது மகளுக்கு திருமணம் ஒன்று செய்து வைக்க வேண்டும் எங்களுக்கு வயது போய் விட்டது.இனி அவளுடைய காலம் அவள் எங்களை விட்டு போய் விடக்கூடாது எங்களோட இருக்க வேண்டும் என்பதாகும்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License