CMP/MN/MU/ARI/10
I was born in 1975, and was living with my mother throughout.
I studied up to A/L in school. Due to troubles and difficulties we got displaced and I was studying in Naanattan. Later I moved to Mannar due to the troubles caused by the Military and LTTE and I studied there. Even though I have completed my grades it was useless, because we were always on the move and our studies got interrupted. The education we received didn’t help us, we couldn’t study further, our lives got destroyed and I had to marry someone whom I didn’t like. It was a sad life.
My first child is a boy and I was living a happy life. Three months after my second son’s birth I had to experience so many difficulties and sadness in my life. I made frequent visits to hospitals which became the core of my life. But still during that difficult time God showered me with his love which I cannot forget till today. God didn’t let me beg even one rupee from others.
My husband is greater than God to me. He doesn’t take alcohol and he takes very good care of the children and me. Where ever he goes we will be in his thoughts. Therefore he tried his best to save that child, but failed ultimately. Then he died. After that we face much difficulties and sadness in our life. I am ignorant about the outside world. He left me with another child – a daughter. But I had to face difficulties again with her, till today I have been praying to cure her heart disease. Though I had to face so much difficulties and sadness in my life I somehow survive due to the mercy of God.
After marriage, in addition to the tough experiences we faced due to our children we also went through difficulties due to military actions, which brought us to a position to beg even for one rupee. We were dependent on organisations for food and clothing. Then we were able to progress by our own efforts. We spoke to the Navy and began a self-employment.
I was able to bring my children up where ever I lived because my husband was not an alcoholic. But we were suffering due to poverty. We have lost many things at that time. There were deaths of siblings and other relatives and our relatives got scattered, we were wandering off throughout the year 2007 with all these experiences.
We had to pay tax, for an income of Rs100 we had to pay Rs10 as tax. It was LTTE who takes the tax money. They were dependent on us. I don’t blame them for taxing us, they too are our children. They were fighting for our sake. They asked for Rs10 as tax because they were in a difficult situation at that time. Many have agreed for that and many have protested. The situation was such, therefore we have supported them. We didn’t happily let our children go join them. Some children had join them looking at the situation and thinking that it’s not safe to stay with their mother. It is because of the situation, children went and joined them. Those people have also joined due to the circumstances.
The military was focusing on our village Arippu in 2007 because it was under LTTE’s control. We had to face great loss because of LTTE’s presence in our village. We had fully trusted them but they left us and went, that’s why we had to loose so much.
When people left this place 6 or 7 families died at Kokkuppudaiyan. We ran away from Arippu after seeing that. We feared that we could face the same fate. Those people who died were trying to save their lives by running towards Mullikulam, at that time the military’s claymore attack had killed them. Those who died on these attacks were not having any connections to LTTE. Those who had such connections haven’t died. It’s true. Those who have supported them and those who were actually part of them haven’t died. It was the innocents who had no connections that we lost in these attacks.
Now those widows are surviving by knitting nets by the sea. They make these nets like slaves to some other people and get Rs 300. They manage their lives with that income.
9 people who went to sea in a boat to collect the worms were beaten to death by the military. Till today we cannot forget how we have arranged those 9 bodies of our relatives. Two of them were young people the rest were all married and the wives live their life as widows.
When we got displaced in 2007, two of our boys went to Vangaalai for work and were shot by the military at Achchangkulam. Even there we had to experience difficulties and lost many things. We got displaced and stayed at Kovvangkulam area in Naanaattan. We stayed there in a temporary hut which we built.
We came back to our village in 2009. Some organisations helped us to improve our livelihood. The military helped us to start our work.
I can never forget the difficulties I faced with my son. There was some issue during my delivery and the nerves connected to the brain got damaged. The treatment wasn’t success though we went up to Appolo for his treatment. When he died he was four. Though we sacrificed four years of our lives for him we couldn’t save him. We spent lacks on him yet we couldn’t save him, that’s our worry.
I have one son and two daughters, the eldest have heart disease. My daughter gets fits when having fever; I am fully depending on God for all my issues. My son is studying now; I wish that he would obtain good results. Doesn’t matter if he cannot take care of us but he should look after his two younger sisters and he too should have a good life.
CMP/MN/MU/ARI/10
මම 1975 දී ඉපදුනා. තේරෙන කාළේ ඉඳන්ම අම්මා එක්ක ජීවත් වෙනවා.
ඉස්කෝලේ දී ඒ ලෙවෙල් දක්වා ඉගෙන ගත්තා. එතකොට කරදර මැද්දේ, ප්රශ්න මැද්දේ අවතැන් වෙලා නානාට්ටාන්වල ඉගෙන ගන්න කාළේ හමුදාවයි එල් ටී ටී ඊ එකයි අතරේ ගැටුම නිසා මන්නාරමට ගිහින් ඉගෙන ගත්තා. ඒ තත්ත්වෙදි මම සම්පූර්ණයෙන් ඉගෙන ගත්තත් ඒකෙන් ප්රයෝජනයක් නැතුව ගියා. ඇයි කිව්වොත් දුව දුවා ඉගෙන ගෙන අපේ ජීවතයට ඒක දරාගන්න බැරි තැනට ගිහිල්ලා අන්තිමේ දී ඉගෙනීම නවත්තලා අපේ ජීවිත විනාශ වෙලා අකමැති දෙයක් වෙනුවෙන් කණගාටුවෙන් ගියා.
මට ඉස්සෙල්ලම පුතෙක් හම්බ වුනා. ඒකෙන් සතුටෙන් ජීවත් වුනා. ඊ ළඟට දෙවැනි පුතා ඉපදුනා. එයා ඉපදිලා මාස තුනකට පස්සේ එයා හින්දා ගොඩක් දුක් කරදර වින්දා. ඉස්පිරිතාලවලට ගිහිල්ලා ගිහිල්ලා අපේ ජීවිතය රෝහල් ජීවිතයක් බවට පත්වුනා. ඒ තරම් දුක්බර වෙලාවේ දීත් දෙවියෝ මට ආදරය කරා කියන එක අද වෙනකම් අමතක කරන්නේ නැහැ. කෙනෙක් ළඟට ගිහිල්ලා රුපියලක්වත් ඉල්ලන්න මට ඉඩ තිබ්බේ නැහැ.
මට හම්බ වෙච්ච මහත්තයා දෙවියන්ගෙත් දෙවි කෙනෙක්. බොන්නේ නැහැ. හැම වෙලේම මම ගැනයි, ළමයි ගැනයි කල්පනාව. කොහේ ගියත් එයා අපි ගැන හිත හිතා ඉන්නවා. ඒ නිසා ඒ ළමයාව බේරගන්න ඕන කියලා හැම දෙයක්ම කළත් අන්තිම වෙනකම්ම අත හැරියේ නැහැ. අන්තිමේ දී එයා නැති වුනා. ඊට පස්සේ සැරින් සැරේ විවිධ දුක් ගැහැට විඳිමින් අපේ ජීවීතේ දුකින්ම ගෙවිලා ගියා. බාහිර ලෝකය මොන වගේද කියලා දන්නේ නැතිව ජීවත් වෙනවා. එයා නැති වුනාට පස්සේ දුවෙක් දීලා එයාගෙනුත් පපුවේ අමාරුවක් හින්ඳා දුක් විඳින ගමන් දෙවියන්ට යාඥා කරනවා. දුක් කරදර කොච්චර තිබුනත් දෙවියන්ගේ කරුණාවෙන් අද වෙනකම් මම ජීවත් වෙනවා. ඊට පස්සේ විවාහ කරලා දීලා ළමයින්ගේ අත්දැකීම්වලින් ඈත් වෙනකොට හමුදාවේ වැඩ නිසා රුපියලකට හරි අතපාන්න තත්ත්වයක් අපට ආවා. ආයතනවලින් දුන්නොත් තමයි අපට කන්න පුලුවන්. ඒගොල්ලෝ ඇඳුමක් දුන්නොත් තමයි අපට අඳින්න පුලුවන් කියලා ජීවිතය ගතවුනා. මගේ උත්සාහයෙන් නාවුක හමුදාවට ගිහින් කතා කරලා අපේ ස්වයං රැකියාව කරගෙන යන්න අවස්ථාව ලැබුනා.
මගේ මහත්තයා බොන කෙනෙක් නොවුන නිසා කොහේ හිටියත් මගේ ළමයින්ව හදාගන්න පුලුවන් පරිසරයක් තිබුනා. දුප්පත් කමින් අපි ගොඩක් බැට කෑවා. ඒ කාළේ අපේ ගොඩක් දේවල් නැතිවුනා. සහෝදරයෝ නැති වෙලා නෑදෑයෝ එක එක පැත්තට ගිහිල්ලා නෑදෑයොන්ගේ ජීවිත ඈත්වෙලා 2007 දී මේ විදියටම ඇවිද ඇවිද හිටියා.
වරිපණම් බඳින්න සිද්ධවුනා. රුපියල් 100 ක් හම්බ කළා නම් රුපියල් 10 ක් වරිපණම් ගෙවන්න වුනා. ඒ මුදල එල් ටී ටී ඊ එක ගන්නවා. ඒගොල්ලොත් අපිව විශ්වාස කරලා තමයි හිටියේ. ඒගොල්ලෝ වරිපණම් ගත්තා කියලා ඒකේ අඩුපාඩුවක් කියනවා නෙමේ. ඒගොල්ලොත් අපේ ළමයි. අපි වෙනුවෙන් තමයි ඒ ගොල්ලෝ සටන් කළේ. ඒ වෙලාවේ ඒ ගොල්ලෝ හිරවෙලා හිටපු නිසා අපේ රුපියල් 10 දෙන්න කියලා ඉල්ලලා ගත්තා. ගොඩක් අය කැමති වුනා. ගොඩක් අය විරුද්ධ වුනා. ඇයි කිව්වොත් පරිසරය එහෙම තමා. ඒ නිසා අපි උදව් කළා. අපේ ළමයි සතුටින් යැව්වේ නැහැ. ඒ ගොල්ලොම පරිසරය බලලා අම්මලත් එක්ක හිටියොත් අපට ජීවිතයට තර්ජනයක්. මේ ගොල්ලොත් එක්ක එකතුවෙමු කියලා ගිය ළමයිනුත් ඉන්නවා. පරිසරය නිසා තමයි ඒ ළමයිනුත් ගියේ. ඒ ගොල්ලොත් පරිසරය නිසා තමයි ගියේ.
2007 දී එල් ටී ටී ඊ එක අපේ ගම (අරිප්පුව) ආක්රමණය කරලා තිබ්බ නිසා හමුදාව අපේ ගම මධ්යස්ථානයක් විදියට තියාගෙන හිටියා. ඒ අතරෙදිම එල් ටී ටී ඊ එක අපේ ගමේ හිටිය නිසා අපට ගොඩක් දේවල් නැතිවුනා. අපි ඒගොල්ලන්ව විශ්වාස කරලා හිටපු නිසා. ඒ ගොල්ලෝ අතරමග දී දාලා ගියා. ඒ නිසා තමයි අපට මේ තරම් හානියක් වුනේ.
මේක අතහැරලා යනකොට කොක්කුපුඩයාන්වල පවුල් හය හතක ජීවිත බිළි ගත්තා. ඒක දැක්ක ගමන් අපිටත් මෙහෙම වෙයි කියලා හිතලා තමයි අරිප්පුව අත හැරලා දිව්වේ. ජීවිතය බේරගෙන මුල්ලිකුළම් පැත්තෙන් යමු කියලා යනකොට හමුදාව ක්ලේමෝර් දාලා ඒ ගොල්ලන්ගේ ජීවිතය බිළි ගත්තා. සම්බන්ධයක් නැති මිනිස්සු මැරුණා මිසක් සම්බන්ධ මිනිස්සු කවුරුවත් මැරුනේ නැහැ. ඒක තමයි ඇත්ත. එල් ටී ටී ඊ එකට උදව් කරපු අයයි, එල් ටී ටී ඊ එකේ හිටපු අයයි කවුරුවත් මැරුණේ නැහැ. නිකම් හිටපු අහින්සක අයගේ ජීවත තමයි බිළි දුන්නේ.
දැන් ඒගොල්ලන්ගේ ගෑණු ඔක්කොම වැන්ඳඹුවෝ වෙලා වෙරළේ දැල් ගොතලා තමයි බත් කන්නේ. තවකෙනෙක් යටතේ දැල් ගොතලා දුන්නොත් රුපියල් තුන්සීයක් දෙනවා. ඒක තමයි ඒගොල්ලෝ ජීවනෝපාය කරගෙන ජීවත් වෙන්නේ.
හමුදාව කූඩැල්ලෝ අල්ලන්න ගිය නව දෙනෙක් එකම දවසේ ගහලා මැරුවා. අපේ නෑදෑයින්ගේ මිනී නවයක් අපි තියාගෙන හිටපු එක තාම අමතක කරන්න බැහැ. දෙන්නෙක් තරුණ ළමයි. අනිත් ඔක්කොම කසාද බැඳලා. අද වෙනකනුත් වැන්ඳඹුවෝ විදියට ඉන්නවා.
2007 දී අපි අවතැන්වෙලා ගිහිල්ලා අපේ කොල්ලෝ දෙන්නෙක් බෙංගාලයට රස්සාවට ගිහිල්ලා අච්චංකුළම් වල ඉන්නකොට හමුදාවෙන් ඇවිත් වෙඩි තියලා මැරුවා. එහෙදී ගොඩාක් දේවල් නැතිවුනා. අවතැන්වෙලා නානාට්ටාන් වල කොව්වන්කුළම් වල හිටියා. එහේ තාවකාලික කූඩාරම් ගහගෙන හිටියා. 2009 දී ආපහු අපේ ගමට ආවා. අපේ ජීවනෝපාය ඉහළ නංවන්න ආයතනවලින් උදව් කළා. හමුදාව රස්සාවල් කරන්න පහසුකම් හදලා දුන්නා. මට අමතක කරන්න බැරි සිද්ධිය තමයි මගේ පුතත් එක්ක මම විඳපු දුක. ඉපදෙනකොට මොකක්දෝ ප්රශ්නයක්. ඔලුවේ නහරයක ප්රශ්නයක්. අන්තිමේ දී ඇපලෝ එකටත් ගියා. අන්තිම වෙනකම් ප්රතිකාර අත හැරියේ නැහැ. පුතා මැරෙණකොට අවුරුදු 4 යි. අවුරුදු 4 ක් තිස්සේ අපි පුතා වෙනුවෙන් කැප කරලත් පුතා බේරගන්න බැරිවුනා. ලක්ෂ ගාණක් වැය කරලත් එයාව බේරගන්න බැරිවුන එක ගැන අපිට දුකයි.
දැන් මට එක පුතයි දුවල දෙන්නයි. ලොකු දුවට පපුවේ අමාරුවක්. අනිත් දුවට උණ හැදුනොත් ෆිට් එක හැදෙනවා. හැමදේකටම දෙවියන්ට බාර වෙලා ඉන්නවා. දැන් මගේ බලාපොරොත්තුව මොකක්ද කිව්වොත් මගේ පුතා දැන් ඉගෙන ගන්නවා. එයා හොඳට ප්රතිඵල අරගෙන එයා අපිව බලාගත්තේ නැතත් කමක් නැහැ එයාගේ නංගිලා දෙන්නව බලාගෙන එයත් හොඳ තැනක ඉන්න ඕන කියලා බලාපොරොත්තු වෙනවා.
CMP/MN/MU/ARI/10
1975 ம் ஆண்டு பிறந்தேன். விபரம் தெரிந்த காலத்தில இருந்து என்ட அம்மாவோட வாழ்ந்து வந்தன்.
பாடசாலையில் A/L மட்டும் கல்வி கற்றேன். இதன் போதும் கஸ்ரத்தின் மத்தியிலும் பிரச்சினையின் மத்தியிலும் இடம் விட்டு நானாட்டானில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது இராணுவம் LTTE ஆகியோரின் கெடுபிடி காரணமாக மன்னாரில் போய் கல்வி கற்றேன். அந்த தரத்திலே நான் முழுமையாகக் கல்வி கற்றாலும் எங்களுக்கு அது பயன் தராத நிலையில் போயிற்று ஏன் என்றால் ஓடி ஓடிக் கல்வி கற்று அது எங்கட வாழ்க்கைக்கு ஒவ்வாத நிலையில் போய் இடையில் கல்வியை நிறுத்தி எங்கட வாழ்க்கையும் சீரழிஞ்சு விருப்பமில்லாத துணைவரைத் தேடி சோகமாகப் போய்க் கொண்டிருந்தது.
எனக்கு மூத்ததாக மகன் ஒருவன் பிறந்தான்.அத்தோடு சந்தோசமாக வாழ்ந்து வந்தேன்.அடுத்து 2 வது மகன் பிறந்தான்.அவர் பிறந்து 3 மாதத்திற்குப் பிறகு அவரால பல வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தேன்.பல வைத்தியசாலைகள் ஏறி இறங்கி எங்களுடைய வாழ்க்கை வைத்தியசாலை வாழ்க்கையாகவே மாறிவிட்டது.அந்தத் துன்பமான நேரத்தில் கூட என்னை கடவுள் அன்பு செய்தார் என்பதை இன்று மட்டும் மறக்க மாட்டேன்.மற்றவங்கிட்ட போய் 1 ரூபா வேண்டும் என்று என்னைக் கையேந்த விடவில்லை.
எனக்குக் கிடைத்த கணவர் தெய்வத்திலும் தெய்வம் குடிக்க மாட்டார் என்றுமே பிள்ளைகளிலும் என்னிலும் மிகுந்த அக்கறை உள்ளவர்.எங்க போனாலும் அவர் எங்கட சிந்தனையாகவே இருப்பார்.அதால அந்த பிள்ளையைக் காப்பாற்றனும் என்று கூடிய வீதம் எல்லா முயற்சி செய்தும் ஆனால் அது இறுதி மட்டும் கைகூடவில்லை.இறுதியில் இறந்தார்.அதன் பிறகு ஒவ்வொரு நேரத்திலும் பல துன்பங்களை அனுபவித்து வருத்த துன்பத்தோடு எங்கட வாழ்க்கை போயிற்று வெளியுலகம் என்னவென்று தெரியாது வாழ்ந்து வருகின்றேன்.பிறகு அவர் இறந்து விட்டும் மகள் ஒன்றைத் தந்து அவளிலயும் துன்பப்பட்டு இருதய வருத்தம் காரணமாக இன்று வரை கடவுளிடம் ஜெபிச்சுக் கொண்டிருக்கின்றேன்.துன்பங்கள் வேதனைகள் நிறைய இருந்தாலும் கடவுளின் கடவுளின் இரக்கத்தினால் இன்று வரை நான் வாழ்ந்து வருகின்றேன்.
இனி கல்யாணம் முடிச்சி பிள்ளைகளுடைய அநுபவம் போக ராணுவத்திட கொடுபிடியால 1 ரூபாவிற்கு கூட கையேந்திர நிலைமை கூட எங்களுக்கு வந்தது. நிறுவனங்கள் தந்தால்தான் நாங்க சாப்பிடலாம். அவங்க உடுப்பு தந்தால்தான் உடுத்தலாம் என்று வாழ்க்கை போய் கொண்டிருந்தது. எங்கட முயற்சியினால நேவியிட்ட போய் கதைச்சி எங்கட சுய தொழிலை செய்து நாங்க முன்னேறுறதுக்கு வாய்ப்பாக இருந்தது.
எனது கணவர் குடிகாரன் இல்லாமையினால் எந்த இடத்தில் இருந்தாலும் என்ர பிள்ளைகளை வளர்க்கக் கூடியதான சூழ்நிலை காணப்படுகின்றது.வறுமை என்றால் எங்களை வாட்டி வதைத்தது.அந்நேரத்தில் நாங்கள் நிறைய இழப்புக்களைச் சந்தித்தோம். சகோதரங்கள் இறந்து உறவுகள் திக்குத் திக்காகப் பிரிந்து உறவுகளின் உயிர்களைப் பிரிந்து 2007 ம் ஆண்டு இப்பிடியே அலைமோதி திரிந்தோம்.
வரி கட்டவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. 100 ரூபாய்க்கு உழைத்தால் 10 ரூபா வரி கட்ட வேண்டிய நிலை காணப்பட்டது.அந்த வரியை LTTE எடுக்கும் அவங்களும் எங்கள நம்பிதான் இருந்தாங்க. அவங்க வரி எடுத்தாங்க என்டு நாங்க குறையா சொல்ல வரேல அவங்களும் எங்கட பிள்ளைகள்தான் எங்களுக்காகத்தானே அவங்க போராடுனாங்க அந்த நேரம் அவங்க ஒரு சிக்கலான நிலையில இருந்ததால எங்கள ஒரு 10 ரூபா வரி தாங்க என்று கேட்டு வாங்கினாங்க நிறைய பேர் சம்மதிச்சாங்க. நிறைய பேர் எதிர்ப்பு குரல் கொடுத்தாங்க. ஏனென்றால் சூழ்நிலை அப்படி அதனால நாங்க ஆதரவு கொடுத்தோம் சந்தோசமா எங்கட பிள்ளைகளை விடேல. அவங்க அவங்களா சூழ்நிலையைப் பார்த்திட்டு அம்மாவோட இருந்தா எங்கட உயிருக்கு ஆபத்து இவங்களோட போய் சேர்வோம் என்று போன பிள்ளைகளும் இருக்கு. சூழ்நிலை காரணமாத்தான் பிள்ளைகளும் போனது. அவங்களும் சூழ்நிலை காரணமாத்தான் போனது.
2007 LTTE எங்கட கிராமத்தை (அரிப்பு) ஆக்கிரமித்து இருந்தால் இராணுவம் எங்கட கிராமத்தை மையமாக வைத்திருந்தனர். அதே நேரம் எங்கட ஊரில் LTTE இருந்தலால் நாங்க பெரிய இழப்புக்களைச் சந்தித்தோம் நாங்கள் அவர்களை நம்பி இருந்ததால அவங்க இடையில விட்டுட்டு போயிட்டாங்க அதனால தான் எங்களுக்கு இவ்வளவு இழப்பு
இதை விட்டு போகேக்க கொக்குப்புடையான் இல் 6,7 குடும்பத்தோட உயிரைப் பறிகொடுத்தனர். அதைக் கண்டவுடன் தான் எங்களுக்கும் இப்படி நடக்கும் என்று எண்ணித்தான் அரிப்பை விட்டு ஓடினோம். உயிர் தப்பி முள்ளிக்குளம் பக்கம் போவோம் என்று போன இடத்தில இராணுவம் கிளைமோர் வைத்து அவர்களின் உயிரைப் பறியெடுத்தனர். சம்பந்தப்படாத ஆட்களே செத்தது ஒழிய சம்பந்தப்பட்டவங்க யாருமே சாகல. அதுதான் உண்மை. LTTE துணை செய்த ஆட்கள் LTTE இருந்த ஆட்கள் யாருமே சாகேல. சும்மா இருந்த அப்பாவிகளைத்தான் நாங்க பறிகொடுத்தோம்.
இப்ப அவங்கட பொம்பிளைகள் எல்லாம் விதவைகள் ஆக்கப்பட்டு கடற்கரையில வலை தெறிச்சுதான் சோறு சாப்பிடுதுகள். இன்னொருவங்களுக்கு அடிமையா வலை தெறிச்சுக் கொடுத்தா 300 ரூபா காசு கொடுப்பாங்க. அத வைச்சுதான் அவங்கட வாழ்வாதாரத்த பார்த்துக் கொண்டு இருக்கிறாங்க
ராணுவம் கடலில ஒரு போர்டில அட்டைக்கு போன 9 பேரை ஓரே நாளில அடிச்சசுக் கொன்றார்கள். எங்கட உறவினர்கள்ட 9 பொடியையும் நாங்க அடுக்கி வைச்சிருந்ததை இன்னும் மறக்க ஏலாது. இளம் பிள்ளைகள் இரண்டு பேர் மற்றவர்கள் எல்லாம் கல்யாணம் முடிச்சவங்க. இன்டைக்கும் விதவையாக இருக்கிறாங்க.
2007 நாங்கள் இடம்பெயர்ந்து போயும் அங்கே எங்கட 2 பொடியன்கள் வங்காலைக்கு தொழிலுக்கு போய் அச்சங்குளத்தில் இருந்தவர்களை இராணுவம் வந்து சுட்டுக் கொன்றான்.அங்கேயும் இழப்புக்களைச் சந்தித்து வந்தோம். இடம்பெயர்ந்து நானாட்டான் கொவ்வங்குளம் பகுதியில் இருந்தோம்.அங்கு தற்காலக் கொட்டில் அமைத்து இருந்தோம்.
2009 ம் ஆண்டு திரும்பவும் எங்கட கிராமத்திற்கு வந்தோம்.எங்கட வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு நிறுவனங்கள் உதவி செய்தனர்.இராணுவம் தொழில் செய்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
என்னால் மறக்க முடியாத சம்பவம் என்ர மகனோட நான் பட்ட துயரங்கள் பிரசவத்தில் ஏதோ பிரச்சினை அவருக்கு மூளையில நரம்பில பிரச்சனை. கடைசியில் அப்பலோ மட்டும் போனோம் இறுதிவரை சிகிச்சை கைகூடவில்லை.மகன் இறக்கும் போது அவருக்கு 04 வயது 04 வருடங்களாக நாங்கள் மகனுக்காக தியாகம் செய்தும் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. லட்சக்கணக்கில செலவழிச்சும் அவர காப்பாற்ற முடியாமல் போயிட்டே என்பதுதான் எங்களுக்கு கவலை
இப்ப எனக்கு 1 பொடியன் 2 பெண் பிள்ளைகள் மூத்தவக்கு இதயநோய். அடுத்த மகளுக்கு காய்ச்சல் வந்தா வெட்டுக்குணம் வரும் எல்லாமே கடவுளிடம் பலியை போட்டுட்டு இருக்கின்றேன். இப்போது என்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் என்னுடைய மகன் படித்துக் கொண்டிருக்கின்றான்.அவன் நல்ல பெறுபேறு கிடைத்து அவர் எங்கள பார்க்காட்டியும் பரவாயில்லை அவருடைய 02 தங்கச்சிமாரையும் பார்த்து அவரும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.