We had no food

Sharing of people evicted from the north in the 1990s.


අපිට කෑම තිබුණේ නැහැ

1990 ගනන්වල උතුරෙන් ඉවත් කරන ලද ජනතාව බෙදා ගැනීම.


எங்களுக்கு உணவும் இருக்கவில்லை

1990களில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தொடர்பான பதிவு.



CMP/MN/MU/PN/01
My name is S.Haipaththulla and I am from Poonochchikkulam. My father was living in Puthuvazhi village. After the flood in 1956 they got displaced and settled here and named this place as Poonochchi.
By 1990 the Movements were formed and troubles started. They made an announcement at night 8 pm. And people left in the morning by 6 am. What could we take? We didn’t take anything with us. Some people even didn’t have their sarongs on. When we were chased as we ran even my loin cloth fell off, I ran with my underwear. We rented a boat from the army camp and traveled. We traveled by boat with so much agony and suffering. I went empty handed, with no money.
Later we went to Puththalam and stayed at Kalpity Allasaar School for some time and moved on to the village Nuraichcholai. People over there helped us to have a better life. They gave us their own lands and coconut farms for our living.
We bought a land in Poolaachchenai, put a hut and lived there with my mother, father, children and siblings. After some time minister Aboobakkar gave us a land in Paalaavi, Karambai. I got a small portion of it where I put up a hut and a shop and lived there. I have seven children, due to my economic difficulties they all studied only up to O/L.
Two of my children got married. After the displacement in year 2000 we returned to our own village with the rest of our children. Now one of my sons is studying O/L, two have sat for the Grade 5 scholarship exam. One son and a daughter are staying at home.
Job related troubles are always there. I don’t have a proper work, and we are facing lot of problems. I am 46 years old. From the time I know Tamils and Muslims are living in this place as Tamil speaking community. We had good relationship there was no discrimination as Tamils and Muslims.
Only after the formation of the Movements the problem of racism arose. Late they ejected the Muslims from the Movement. They even said that those ones should be sent out of the country as well. Later ethnic conflicts and troubles have begun. Now things are coming back to normal. But when we got displaced in 1990 it was the time of ethnic conflict.
Now there is no space for ethnic conflict, during the time of Mahintha Rajapaksha government the issue of racism got eradicated. We lived with the worry whether we would get back our own village. I thank God for having it back again. Now again we all live together without any issues. Mostly Muslims live in Musali, Tamils live mostly in the surrounding villages. There are no discrimination among us, the relationship we had during the year 1990 is still maintained.
I wish that our children should not suffer the same way we have suffered. They should study well and reach better standards. Tamils and Muslims should live in harmony without any discrimination.


CMP/MN/MU/PN/01
මගේ නම එස් හෛයිබතුල්ලා. ගම පූනොච්චිකුළම්. මගේ තාත්තා පුදුවලි කියන ගමේ ජීවත් වුනා. ඊට පස්සේ 1956 වසරේ දී ගං වතුර එනකොට එහෙන් අවතැන්වෙලා ඇවිත් මෙහෙ පදිංචි වුනා. ඊට පස්සේ පූනොච්චි කියන නම හදාගත්තා. එහෙම ඉන්න‍කොට 1990 දී සංවිධාන ඇතිවෙලා ප්‍රශ්න පටන් ගත්තා. රෑ 8.00ට කියනවා උදේ 6.00ට හැමෝම පිටත් වෙනවා. ගන්න ඕන මොනවද ගන්න මොකවත් නෑ. ඒ විදියටම ඇඳගෙන හිටිය සරමවත් සමහරුන්ට තිබුනේ නෑ. ඒ ගොල්ලන්ව එලවනකොට සමහරු ඇඳගෙන හිටිය ඇඳුමවත් නැතිව යට ඇඳුම පිටින් තමයි ගියේ. ආමි කෑම්ප් එකට ගිහිල්ලා එහෙ ඉඳන් කුළියට බෝට්ටුවක් අරගෙන තමයි අපි ගියේ. බෝට්ටුවේ ගිහිල්ලා දුක් විඳලා කොහොමහරි අපි ගියා. ඇඳගෙන හිටිය සරම පිටින් තමයි අපි ගියේ. වියදමටවත් සල්ලි තිබුනේ නෑ.
පස්සේ අවතැන්වෙලා පුත්තලමට ගියා. එහෙ ගිහිල්ලා කල්පිටියේ අල් අසාර් කියන ඉස්කෝලේ ටික දවසක් නැවතිලා ඉඳලා ඊට පස්සේ නොරෙච්චොලෛයි කියන ගමට ගියා. එහෙ හිටපු කට්ටිය අපිට හොඳට ජීවත් වෙන්න උදව් කළා. ඒගොල්ලන්ගේ ඉඩම් දීලා ඒගොල්ලන්ගේ පොල්වතු දීලා අපිට ජීවත්වෙන්න උදව් කළා.
එහෙ පූලාච්චේනෛයි කියන දිහාවේ ඉඩමක් සල්ලිවලට අරගෙන එහෙ ගොවිපළක් දාගෙන එහෙම අම්මා, තාත්තා, ළමයි ඔක්කොම ජීවත් වුනා. ඊට පස්සේ එහෙ ඉඳලා ටික කාලෙකට පස්සේ පාලාවි වලින් අබුබකර් ඇමතිතුමා ඉඩම් ලබා දුන්නා. එහෙදී මට ඉඩම් කෑල්ලක් ලැබුනා. ඒකේ මම පොඩි ගොවිපළකුයි පොඩි කඩයකුයි දාගෙන අවුරුදු පහළොවක් විතර හිටියා. මට ඔක්කොම ළමයි හත් දෙනයි. එගොල්ලෝ ඔක්කොම ආර්ථික ප්‍රශ්න නිසා කොහොමහරි ඕ ලෙවල් දක්වා ඉගෙන ගත්තා.
එයින් ළමයි දෙන්නෙක් විවාහ වුනා. ඉතුරු පුතාලා එක්ක 2000 අවුරුද්දේ දී අවතැන් වුනාට පස්සේ ‍අපේ ගමට ආවා. දැන් එක පුතෙක් ඕ ලෙවෙල් ඉගෙන ගන්නවා. තව පුතාලා දෙන්නෙක් මේපාර 5 ශිෂ්‍යත්වය ලියනවා. එක පුතෙකුයි, දුවෙකුයි ගෙදර ඉන්නවා.
රස්සාවක් කරගන්න හරි අමාරුයි. රස්සාවල් නැහැ. ප්‍රශ්න ගොඩක් මැද්දේ දැන් ජීවත් වෙනවා. මට දැන් අවුරුදු 46 යි. මට තේරෙන කාලේ ඉඳන්ම දෙමළ කතා කරන ජනතාව කියලා දෙමළ අයයි, මුස්ලිම් අයයි මේ පැත්තේ ජීවත් වෙනවා. ඒ අතින් අපි හොඳ සහයෝගයෙන් ජීවත් වුනා. දෙමළ අය වෙනස් මුස්ලිම් අය වෙනස් අය වෙනස් කියලා දෙයක් තිබුනේ නැහැ.
සංවිධානය ආවට පස්සේ තමයි ජාතිවාදය කියන ප්‍රශ්නය ඇතිවුනේ. පස්සේ මුස්ලිම් අය සංවිධානයෙන් අයින් වුනා. සංවිධානයේ හිටපු සටන්කරුවොත් අයින් වුනා. අපි රට හැරදාලම යන්න ඕන කියලා ඒගොල්ලෝ කීවා. ඊට පස්සේ ජාති භේදයි, ප්‍රශ්නයි පටන් ගත්තා. දැන් ඉස්සර තත්ත්වයට එමින් තියෙනවා. අපි ඒ කාලේ 1990 අවතැන් වෙලා ගියේ ජාති‍ භේදය හින්දයි. දැන් ජාති භේදයකට ඉඩක් නැහැ. ඒ තරමටම අපේ මහින්ද රාජපක්ෂගේ ආණ්ඩුව තියෙන කාලේ ජාති භේදය නැතිකළා. දැන් අපේ ගම අපිට ලැබෙයිද කියන සිතුවිල්ලෙන් ජීවත් වෙනවා. දෙවියන් විසින් අපේ ගම අපිට ලබා දුන්නට දෙවියන්ට අපි ස්තුතිවන්ත වෙනවා. අපි දැන් ‍හොඳ සහයෝගයෙන් ජීවත් වෙනවා. කිසිම ප්‍රශ්නයක් නැහැ. මුස්ලිම් ප්‍රදේශ ගැන බැලුවොත් මුස්ලිම් අය වැඩියෙන් ඉන්නවා. අහළ ගම්වල දෙමළ අය ඉන්නවා. දෙමළ මුස්ලිම් කියලා බෙදාගෙන පාලනයක් නෑ. 1990 කාලේ කොච්චර සහයෝගයෙන් හිටියද ඒ විදියටම දැනුත් සහයෝගයෙන් ඉන්නවා.
ආයෙත් අපි විඳපු මේ දුක අපේ ළමයින්ට එන්න හොඳ නැහැ. අපි දුක්වින්දා වගේ අපේ ළමයි දුක් විඳින්නේ නැතිව හොඳට ඉගෙනගෙන හොඳ තැනකට එන්න ඕන. ඒ වගේම දෙමළ මුස්ලිම් කියන භේදයක් නැතිව සහයෝගයෙන් ජීවත් වෙන්න ඕන කියන එක තමයි මගේ බලාපොරොත්තුව.



CMP/MN/MU/PN/01
எனது பெயர் S.ஹைபத்துல்லா. இடம் பூநொச்சிக்குளம். எனது அப்பா புகுவழி என்ற கிராமத்தில் வசித்து வந்தார்கள். அதன் பின்பு 1956ம் ஆண்டு வெள்ளம் வர அங்கிருந்து இடம் பெயர்ந்து இந்தக் கிராமத்தில் குடியேறினோம். அதற்குப் பிறகு பூநொச்சி என்ற பெயரை உருவாக்கினார்கள்.
இப்பிடியே வாழ்ந்து கொண்டிருக்கேக்க 1990 ம் ஆண்டு இயக்கங்கள் உருவாகி பிரச்சினைகள் வந்தது. இரவு 8 மணிக்கு அறிவிக்கிறாங்க. காலைல 6 மணிக்கு எல்லா சனமும் வெளிக்கிடுறாங்க. என்ன எடுக்கேலும். ஓன்றுமே எடுக்கேல. அதே மாதிரி உடுத்தின சாரம் கூட ஒரு சிலருக்கு இருக்கேல. அவங்க துரத்தின நேரம் உடுத்தின சாரம் கூட கழண்டு விழுந்து ஐட்டியோடதான் நான் ஓடுனன். ஆமி கேம்பிற்கு போய் அங்கிருந்து வாடகைக்கு போர்ட் எடுத்துதான் போய் சேரந்தோம்.போட்டில் போய் கஸ்டப்பட்டு பெரிய துன்பத்தோட போய்ச் சேர்ந்தோம். உடுத்தின சாரத்தோடதான் போனோம். செலவிற்குக் கூட காசு எடுக்கேல.
பிறகு இடம்பெயர்ந்து புத்தளம் போனோம். அங்க போய் கற்பிட்டி அல்லஸார் என்ற என்ற பாடசாலையில் கொஞ்சக்காலம் இருந்து விட்டு அதன் பிறகு நுரைச்சோலைக் கிராமத்திற்குப் போனோம். அங்குள்ள மக்கள் எல்லாம் எங்கள சிறப்பா வாழ வைச்சாங்க. அவங்கட காணி பூமியை தந்து அவங்கட தென்னந் தோட்டங்கள தந்து வாழ்ந்தோம்.
அதிலே பூலாச்சேனை என்ற இடத்தில் ஒரு காணித்துண்டை விலைக்கு வாங்கி அதிலே கொட்டில் ஒன்று அமைத்து அதிலே அம்மா அப்பா பிள்ளைகள் சகோதரங்கள் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருந்தோம். திருப்பி அதிலிருந்து சிலகாலங்களின் பின் பாலாவி கரம்பையில் அபூபக்கர் மினிஸ்ரரினால் காணி கொடுக்கப்பட்டது. அதிலே எனக்கு ஒரு துண்டுக் காணி கிடைத்தது. அதை நான் விலையாக எடுத்து கொட்டகை அமைத்து சின்னக் கடை ஒன்று அமைத்து சுமார் 15 வருடகாலங்கள் இருந்தோம். மொத்தம் எனக்கு 7 பிள்ளைகள். அதிலே அந்த நேரம் பொருளாதாரப் பிரச்சினையால எல்லோரும் O/L மட்டும் படிச்சிருக்காங்க.
அதிலே 2 பிள்ளைகள் கல்யாணம் முடிச்சிட்டாங்க. மற்ற பொடியன்மார் திருப்பி 2000 ம் ஆண்டு இடம்பெயர்ந்து போன பின்பு சொந்த ஊருக்கு வந்தோம். இப்போதைக்கு ஒரு மகன் O/L படித்துக் கொண்டிருக்கின்றான். மற்றது 2 மகன்மார் இந்த முறை 05ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதி இருக்கின்றார்கள். ஒரு மகளும் மகனும் வீட்டில் இருக்கின்றார்கள்.
தொழில் ரீதியான கஸ்ரங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. தொழில் இல்லை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனக்கு 46 வயது. எனக்கு அனுபவம் தெரிந்த வயதில் இருந்து தமிழ் பேசும் மக்கள் என்று தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாங்கள் நல்ல உறவுகளாக வாழ்ந்து வந்தோம். தமிழர் வேறு, முஸ்லீம்கள் வேறு என்ற பிரிவினை இல்லாது வாழ்ந்தோம்.
இயக்கம் வந்தவுடன் தான் இனவாதம் என்ற பிரச்சினை உருவாகியது. பிறகு முஸ்லீம்கள் இயக்கத்தில் இருந்தும் வெளியேற்றினர். இயக்கத்தில் இருந்த போராளிகளைக் கூட வெளியேற்றினர். அவர்கள் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறினர்.அதன் பிறகு இனக்கலவரங்களும் பிரச்சினைகளும் ஆரம்பமாகத் தொடங்கின. இப்ப பழைய நிலைக்கு வந்து கொண்டிருந்தது. நாங்கள் ஆரம்ப காலத்திலே 1990 ம் ஆண்டு இடம்பெயர்ந்து போகேக்க இனப்பிரச்சினையோட போனோம்.
இப்ப இனப்பிரச்சினைக்கே இடமில்லை அந்தளவக்கு நம்மட மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் இருக்கின்ற காலகட்டத்தில் இனவாதம் ஒழிக்கப்பட்டு இனி எங்கட ஊர் எங்களுக்கு கிடைக்குமா என்ற அந்த சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். கடவளால் எங்கட ஊரை திரும்பவும் மீட்டு எடுத்துத் தந்ததக்கு இறைவனுக்கு நன்றியைக் கூறிக் கொள்கின்றேன். இப்ப நல்ல உறவாக வாழ்ந்து வருகின்றோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. முசலிப் பிரதேசத்தைப் பொறுத்த மட்டில் முஸ்லீம் மக்கள் அதிகம். பக்கத்து கிராமங்களில் தமிழர்கள் இருக்கின்றார்கள். தமிழர், முஸ்லீம் என்று பிரித்து நடத்துகின்ற அமைப்பு இல்லை. 1990ம் ஆண்டு எப்பிடி உறவாக இருந்தோமோ அதே உறவு இப்போது பேணப்பட்டு வருகின்றது.
இனியும் நாங்க பட்ட துன்பங்கள் பிள்ளைகளுக்கு வரக்கூடாது. நாங்கள் பட்ட கஸ்ரம் போல எனது பிள்ளைகள் கஸ்ரப்படாது நன்றாக கல்வி கற்று நல்ல நிலையில் இருக்க வேண்டும் அத்தோடு தமிழ் முஸ்லீம் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License