We stayed in relative's house

Experiential sharing of people evicted from the north in the 1990s


අපි ඥාතියෙක්ගේ නිවසේ රැඳී සිටියා

1990 ගනන්වල උතුරෙන් ඉවත් කරන ලද ජනතාවගේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම


உறவினரின் வீட்டில் தங்கினோம்

1990களில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தொடர்பான பதிவு



CMP/MN/MU/PN/02
I am 52 years old. In the year 1957 my father lived in a village called Marakkaavur. That place got badly affected by flood in that year, till today we haven’t seen such flood. Musali got inhabited for the first time, due to this flood. We were raising goats, cows and hens nearby the streams. They all got washed out in the stream due to the flood. Later when I was 15 we did agriculture in a village called Poonochchikulam. People raised livestock, we too had them.
We had terrorist issues in our village. But we lived there and got displaced only in 1990. On that year one day around 10pm LTTE informed all the mosques that the Musali area people should leave the village by next day morning around 10am to 12noon. They ordered that we should go somewhere to save our lives and for that they would give us only a short time period.
That time I had gone to Puththalam district for business purposes. I got this message and immediately came to my village Poonochchikulam from Kalpity. Together with Musali area people I went in just the cloths we were wearing, unable to take any of our possessions with us. My elder brother and I were staying together. My elder brother had a vehicle; we had removed some parts from it because the LTTE takes it in the nights. When we went to take it we found them (LTTE) standing on the roads with their guns. To save our lives we left the vehicle there and ran away through the forests towards Silaapaththurai Military point. Not only us, all the Musali area people had to face this difficulty.
We stayed in the camps alongside the sea shore day and night with military protection since there were no vehicles to go to Puthalam. There were not enough boats for everyone to travel. We stayed in the sea shore day and night. For about one weak people were taking boats to Puthalam. The roads for vehicle transport were blocked. That’s how we came to Puthalam district. For few months, we stayed at known persons’ houses. We received some help from them. For some time we lived in Kalpity. Then we went to Poolaachenai village. There we made temporary huts in government land and stayed there. Then we moved to Theni Eathaalai and lived in a land belongs to the mosque. They told us that they have no objections for us to stay there till we decide to leave.
During the 2002 cease fire time, our Rishad Pathiutheen gave us an assurance that he would make arrangements for us to go and clear up our lands and resettle in our own places. Based on that assurance I sold my vehicle and brought our people here thinking that we should go and live in our native place. When we came we couldn’t see the paths. We doubted whether it was our Musali area. We were so eager to go to our village so we somehow found our way through the bushes. We couldn’t figure out the paths. We were scared to enter in to the forested areas.
We cleared up the forests little by little and entered the village. After seeing the Boe tree, the bridge and next to it the Mosque we were assured that it was our village. Later we cooked and ate and then returned to Puthalam. We took all our belongings and came back and stayed here and started clearing up the lands. During the day time we would clear up the lands and we would all stay together at a place during the night. We were facing so many troubles from elephants. We stayed in the mosque. We were resettled in 2006.
We were resettled in a place which was under the control of the terrorists. Hundreds of men entered our village claiming they were military who came to destroy the terrorists in our village. But this area was kept under the control of the terrorists; therefore it was not possible for the military men to enter the village, so we didn’t believe what they said. But we kept quiet. I thought that they were LTTE, and was lying. I thought that they were using this strategy to get few words out from us. Few minutes after they said shells started to fall from Mannar. They got the garden spade from us dug bunkers and stayed inside that. We stayed inside the houses. The bombs started to fall; it was nothing like that we have seen before. We doubted whether we would be alive after this. There was no body for us, except for God.
We went to Potkeni village 3 kms away from here, boarding people as much as possible in a tractor. The military claims that it is to protect us they launch shells but they were hidden inside the bunkers. Then we spoke to the military and took all the people in a bus to a place called Don Bosco. We stayed there for some time. We were given food. Though it was not sufficient they helped us to survive. Then we stayed in a place called Rasul for eight years. We received essential goods from organisations. We also had medical facilities. They embraced and looked after us very well and we lived in peace there.
After such displacements, in the year 2009 we got resettled in our own village and live there. I wish that our children don’t experience displacement, war and ethnic conflict in their lives like we had.


CMP/MN/MU/PN/02
මට වයස 52 යි. 1957 දී අපේ තාත්තා මරක්කඌර් කියන ගමේ ජීවත් වුනා. 1957 දී මහා ගංවතුරක් ආවා. අද වෙනක්ම්ම ඒ වගේ ගංවතුරක් ආවේ නැහැ. මුස්ලිම් ප්‍රදේශවල ගංවතුර ඇතිවෙලා නැවත පදිංචි වෙච්ච පළවෙනි වතාව මේක. අපි අරුවියාරුවලට කිට්ටුව එළුවෝ, හරක්, කුකුලෝ එහෙම හදාගෙන හිටියා. මේ ගංවතුරට අරුවියාරු ගමම යටවෙලා ගියා. ඊට පසසේ පූනොච්චිකුළම් කියන ගමේ මට අවුරුදු 15 ක් විතර වෙච්ච කාළේ අපි ‍ගොවිතැන් කළා. ගොඩක් අය සත්තු ඇති කළා. අපිටත් සත්තු හිටියා.
අපේ ගමේ ත්‍රස්තවාදී කළබල තිබුනා. එතකොට අපි අපේ ගමේ තමයි හිටියේ. 1990 දී අවතැන් වෙලා ගියා. 1990 දී එල් ටී ටී ඊ එක මුස්ලිම් ප්‍රදේශවල මිනිස්සුන්ට හැම පල්ලියකටම තොරතුරක් දුන්නා. උදේ 10 ට 12 ට ඉස්සෙල්ලා ඔයගොල්ලන්ගේ ගම අතඇරලා යන්න ඕන. ඔයගොල්ලෝ කොහේ හරි ගිහිල්ලා ජීවිතය බේරගන්න. ඔයගොල්ලන්ට පොඩි අවස්ථාවක් දෙනවා කියලා අණතුරු ඇඟවීමක් කළා.
ඒ වෙලාවෙ මම ව්‍යාපාර වැඩකට පුත්තලම් දිස්ත්‍රික්කයට ගිහින් හිටියේ. මේ තොරතුර මම දැනගත්තා. ඉක්මන්ට මම කල්පිටියේ ඉඳන් අපේ ගමවන පූනොච්චිකුළම් වලට ආවා. මුස්ලිම් ප්‍රදේශයේ මිනිස්සු මුකුත්ම ගන්න විදියක් නැති තත්ත්වයක ඇඳගෙන හිටපු ඇඳුම පිටින්ම ගියා. මායි මගේ අයියයි එකට තමයි හිටියේ. අයියට වාහනයක් තිබුනා. ඒ වාහනේ එල් ටී ටී ඊ එක රෑට අරන් යන නිසා ඒකේ කොටස් ගළවලා තියාගෙන හිටියා. ඒක ගිනියන්න එනකොට පාරේ තුවක්කු තියාගෙන ඒගොල්ලෝ හිටපු නිසා ජීවිතය බේරගන්න ඕන නිසා ඒවා අතඇරලා කැළේ මැදින් දුවගෙන ගිහිල්ලා සිලාවතුරේ හමුදාව ඉන්න පැත්තට ගියා. අපි විතරක් නෙවෙයි, මුස්ලිම් ප්‍රදේශයේ හිටපු හැමෝම ඒ තත්ත්වයට පත්වුනා.
පුත්තලමට යන්න වාහන නැති නිසා වෙර‍ළ පැත්තේ හමුදා ආරක්ෂාව ඇතුව කෑම්ප් එකක රෑ දවල් හිටියා. හැමෝටම මුහුද පැත්තෙන් යන්න බෝට්ටු නැහැ. වෙරළේ රෑ දවල් හිටියා. සතියක් විතර බෝට්ටුවේ පුත්තලමට ගියා. වාහන යන පාර වහලා. මේ විදියට පුත්තලම දිස්ත්‍රික්කයට ආවා. අපි දන්න කීප දෙනෙක්ගේ ගෙවල්වල මාස කීපයක් නැවතිලා හිටියා. ඒගොල්ලෝ අපිට සමහර උදව් කරා. ටික කාලයක් කල්පිටියේ ජීවත්වුනා. ආයෙත් පූලාන්චේනෛයි ගමට ගියා. ආණ්ඩුවේ ඉඩමක තාවකාලික කූඩාරම් ගහගෙන හිටියා. ඊට පස්සේ තේනිඒත්තාලෛයි කියන ගමේ පල්ලියේ ඉඩමක හිටියා. ඒ ගොල්ලෝ කිව්වා ඔයගොල්ලෝ යනකන් කරදරයක් නැතිව මෙහේ ඉන්න පුලුවන්. අපිට ප්‍රශ්නයක් නැහැ කිව්වා.
2002 දී සටන් විරාම කාළේ අපිට අපේ රිෂාඩ් බදුර්දීන් මැතිතුමා ඔයගොල්ලෝ ඔයගොල්ලන්ගේ ගමට ගිහිල්ලා ඔයගොල්ලන්ගේ ඉඩම් සුද්ද කරගෙන නැවත පදිංචි වෙන්න පුලුවන්. ඒකට ඕන කරන දේවල් මම ලෑස්ති කරලා දෙන්නම් කියලා කිව්වා. ඒකට අනුව අපි ගමේ කට්ටියත් එක්ක ආවා. මට වාහනයක් තිබුනා. ඒක විකුණලා අපේ ගමේ කට්ටියත් එක්ක අපි අපේ බිමට ගිහිල්ලා එහෙ ජීවත් වෙන්න ඕන කියලා ඒ ගොල්ලොත් එකතු කරගෙන ආවා. ඇවිල්ලා බලනකොට පාරවල් හොයාගන්න බැහැ. මේක අපේ ගමද කියලත් සැකයක් ඇතිවුනා. කොහොමහරි අපේ ගමට යන්න ඕන කියලා කැළේ මැදින් රිංග රිංගා ආවා. පාර මොකක්ද කියලා හොයාගන්න බැහැ. කැළේ අස්සෙන් එනවා වගෙයි දැනුනේ. කැළේ ටික ටික කපාගෙන සුද්දකරගෙන ගමට එනකොට නුග ගහයි, පාලමයි, ඊළඟට පල්ලියයි තිබුනා. මේක තමයි අපේ ගම කියලා විශ්වාසයක් ආවා. පස්සේ උයලා කාලා ආපහු පුත්තලමට ගියා. එහෙන් බඩු අරගෙන ආයෙත් ඇවිල්ලා මෙහෙ නැවතිලා ඉඩම් සුද්ද කළා. දවල්ට ඉඩම් සුද්ද කරනවා. රෑට හැමෝම එක තැනක ඉන්නවා. අලින්ගෙන් හරි කරදරයි. පල්ලියේ ගිහිල්ලා ඉන්නවා. 2006 අවුරුද්දේ ආපහු පදිංචි වුනා.
ත්‍රස්තවාදී කරදර තිබ්බ ප්‍රදේශයක තමයි නැවත පදිංචි වුනේ. ත්‍රස්තවාදියෝ සම්පූර්ණයෙන්ම දුරු කරන්න ඕන කියලා හමුදාව අපේ ගමට අරගෙන හිටියා. සීයක් විතර හමුදාවේ අය ‍අපේ තැනට ඇවිල්ලා අපි හමුදාව කියලා කිව්වා. ඒත් මේක ත්‍රස්තවාදීන්ගේ පාලනය යටතේ තියෙන නිසා, හමුදාව එන්න ඉඩක් නැති නිසා අපි ඒක විශ්වාස කළේ නැහැ. ඒත් ඒක අපි කාටවත් කිව්වේ නැහැ. මම හිතුවා මේගොල්ලෝ එල් ටී ටී ඊ කට්ටිය තමයි, මේ ගොල්ලෝ බොරු කියනවා කියලා. අපෙන් වචනයක් ගන්න මෙහෙම කපටිකමක් කරනවා කියලා මම හිතුවා. ඒ ‍ගොල්ලෝ කියපු සමහර වෙලාවට මන්නාරමේ ඉඳන් ෂෙල් ඇවිල්ලා වැටෙන්න පටන් ගත්තා. ඒගොල්ලෝ අපෙන් උදලු ඉල්ලගෙන බංකර් කපාගෙන ඒවා ඇතුළේ හිටියා. අපි ගෙවල්වල හිටියා. ෂෙල් ඇවිල්ලා වැටෙනවා. අපි ආයෙත් ජීවත්වෙයිද කියලා හිතන්න පටන් ගත්තා. අපිට දෙවියෝ ඇරෙන්න වෙන කවුරුවත් නැහැ.
අපේ ගමේ ඉඳන් ගොයන් කපන මැෂින් එකේ පුලුවන්තරම් කට්ටිය නංගාගෙන කිලෝ මිටර් තුනක් එහා තියෙන පොට්කේනි කියන ගමට ආවා. හමුදාව කියනවා අපේ ආරක්ෂාවට තමයි ගහන්නේ කියලා. ඒත් ඒගොල්ලෝ ඉන්නේ බංකර ඇතුළේ. ඊට පස්සේ හමුදාවට කතා කරලා බස් එකකට ඔක්කොම නංගවාගෙන දොන් බොස්කෝ කියන තැනට ආවා. එහෙ ටික කාලයක් හිටියා. එහෙදී කෑම දුන්නා. ප්‍රමාණවත් නැති වුනාට අපට ජීවත් වෙන පමණට උදව් කළා. ඊට පස්සේ රසූල් කියන තැන අවුරුදු 8 ක් හිටියා. ආයතනවලින් අපිට අවශ්‍ය බඩු දුන්නා. ලෙඩ්ඩුන්ට බෙහෙතුත් දුන්නා. අපිට හොඳ විදියට උදව් කරලා රණ්ඩු වෙන්නේ නැතිව ජීවත් වෙලා හිටියා.
මේ විදියට අවතැන්වෙලා 2009 අවුරුද්දේ ආයෙත් අපේ ගමේ නැවත පදිංචි වෙලා ජීවත් වෙනවා. මගේ බලාපොරොත්තුව මොකක් ද කිව්වොත් අපේ ජීවිතවල ඇතිවෙච්ච අවතැන්වීම්, යුද්ධය, ජාති භේදය කියන ප්‍ර‍ශ්න අපේ ළමයින්ගේ ජීවතවල ඇතිවෙන්න එපා කියලා.



CMP/MN/MU/PN/02
எனக்கு வயது 52 1957ம் ஆண்டு எங்கட அப்பா மரக்காவூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார்கள். 1957ம் ஆண்டு பாரிய ஒரு வெள்ளம் ஏற்பட்டது. இதுவரைக்கும் அப்பிடி ஒரு வெள்ளம் ஏற்பட்டதில்லை. முசலியில் வெள்ளம் ஏற்பட்டு மீள்குடியேற்றப்பட்ட முதல் நேரம் இதுவேயாகும். நாங்கள் அருவியாற்றுக்கு பக்கத்திலே ஆடு,மாடு,கோழி எல்லாம் வளர்த்து வந்தோம். இந்த வெள்ளத்திலே அருவியாற்றிலே அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு பூநொச்சிக்குளம் என்ற கிராமத்திலே எனக்கு 15 வயது இருக்கும் போது நாங்கள் விவசாயம் செய்தோம். ஏனையோர் கால் நடைகள் வளர்த்தாங்க. எங்களிட்டையும் கால் நடைகள் இருந்தது.
எங்கட கிராமத்தில பயங்கவாத பிரச்சனை இருந்தது. அப்ப நாங்க எங்கட கிராமத்திலதான் இருந்தோம். 1990 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றோம். 1990 ம் ஆண்டு டுவுவுநு முசலி பிரதேச மக்களைஇரவு 10 மணிக்கு ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் தகவல் தரப்படுது காலைல 10 12 மணிக்கு முன்ன உங்கட கிராமத்த விட்டு வெளியேறி செல்ல வேண்டும் நீங்க எங்காவது சென்று உங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்க உங்களுக்கு சிறிய அவகாசம் தரப்பட்டிருக்குது என்று உத்தரவு தரப்பட்டிருந்தது
அந்த நேரம் புத்தளம் மாவட்டத்திற்கு நான் வியாபாரத்திற்காக போயிருந்தேன். இந்த தகவல் எனக்கு கிடைத்தது. உடனே நான் கல்பிட்டியில இருந்து உடனடியாக நான் எங்கட கிராமமான பூநொச்சிக்குளத்திற்கு வந்தேன். நானும் முசலிப் பிரதேச மக்களும் எதுவுமே எடுக்க ஏலாத நிலையில் நாங்கள் அணிந்த உடுப்போட சென்று கொண்டிருந்தோம். எங்கட அண்ணனும் நானும் ஒன்றாகத்தான் இருந்தோம். என்ட அண்ணனிடம் ஒரு வாகனம் இருந்தது. அந்த வாகனத்தை LTTE இரவில வந்து கொண்டு போவதால் அதன் பாகங்களை கழட்டி வச்சிருந்தோம். அதனை கொண்டு போக வரும் வழியில் பாதையில் துப்பாக்கியோடு அவர்கள் நின்றதால் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ரீதியில் அவற்றை விட்டு விட்டு காட்டோரமாக ஓடிச் சென்று சிலாபத்துறை இராணுவப் படையை நோக்கி சென்றோம். நாங்கள் மட்டுமல்ல முசலிப் பிரதேச மக்கள் அனைவரும் அந்நிலைக்கு ஆளானார்கள்.
புத்தளதிற்கு செல்ல வாகனங்கள் இல்லாததால் கடற்கரையின் ஓரமாக இராணுவப் பாதுகாப்போடு கேம்பில இரவு பகலாக தங்கியிருந்தோம். எல்லோரும் செல்வதற்கு கடலில் போக போட் இல்லை. கடற்ககரையில் இரவு பகலாக இருந்தோம் 1 கிழமை மட்டும் போட்டில் புத்தளத்திற்கு போய்க்கொண்டிருந்தார்கள். வாகனம் செல்லும் பாதை தடை செய்யப்பட்டிருந்தது. இப்படியாக புத்தளம் மாவட்டத்திற்கு வந்தோம். எங்களுக்கு தெரிந்த சில நபரின் வீட்டில் சில மாதங்களாக தங்கி இருந்தோம். அவர்கள் எங்களுக்கு சில உதவிகளை வழங்கினார்கள். சில காலங்களாக கல்பிட்டியில் வாழ்ந்து கொண்டிருந்தோம். திரும்பி பூலாச்சேனை கிராமத்திற்கு போனோம். அரச காணியில தற்காலிக கொட்டகை கட்டி வசித்து வந்தோம். அதற்குப் பிறகு தேனி ஏத்தாளை என்ற கிராமத்தில் பள்ளிக் காணியில தங்கி வாழ்ந்து வந்தோம். அவர்கள் நீங்கள் செல்லும்வரை இங்கு தாராளமாக தங்கலாம். எங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றார்கள்
2002 இல் யுத்த நிறுத்த காலகட்டத்தில் எமக்கு எங்களது றிசாட் பதியுதீன் அவர்கள் நீங்கள் உங்களது சொந்த இடத்திற்கு சென்று அங்கு உங்களது காணிகளை துப்பரவாக்கி மீள்குடியேறலாம் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருவேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதற்கிணங்க நாம் எமது கிராம மக்களை என்னிடம் வாகனம் ஒன்று நின்றது. அதனை விற்று விட்டு எங்களது மக்களிடம் நாம் எமது சொந்த மண்ணுக்குப் போய் அந்;த இடத்தில் வாழ வேண்டும் என்று அவர்களை அழைத்து வந்தோம். வரும் போது பாதைகளைக் காணவில்லை. இது எமது முசலி பிரதேசம் தானா என்று ஒரு சந்தேகம் காணப்பட்டது. எப்படியாவது எமது கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று அவாவில் பத்தையின் ஊடாக பூந்து பூந்து வந்தோம். எது பாதை என்று காண்பதற்கு கஸ்டமாக இருந்தது. காடுகளுக்குள் நுழைவதற்கு அச்சமாக இருந்தது.
காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி துப்பரவு செய்து ஊருக்கு வரும்போது ஆலமரமும் பாலத்தையும் அதை அடுத்து பள்ளி இருந்தது. இதுதான் நம்முடைய கிராமம் என்ற நம்பிக்கை வந்தது. பிறகு சமைத்து சாப்பிட்டு விட்டு மீண்டும் புத்தளத்திற்குச் சென்றோம். அங்கிருந்து பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மீண்டும் எல்லோரும வந்து இங்கு தங்கியிருந்து காணிகளைத் துப்பரவாக்கினோம். பகலில் காணிகளை துப்பரவு செய்வோம். இரவில் எல்லோரும் ஒரு இடத்தில் தங்குவோம். யானையின் தொல்லை மிக அதிகம். பள்ளியில் போய் தங்குவோம். 2006ம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டோம்.
பயங்கரவாத கட்டுப்பாட்டுக்குள்ள இருந்த பிரதேசத்திலதான் மீள் குடியேற்றப்பட்டோம்;. பயங்கரவாதிகளை முறியடிக்கவேண்டும் என்று ராணுவம் எமது கிராமத்திற்கு உள் வாங்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் எங்களிடத்திற்கு வந்து நாங்கள் ராணுவத்தினர் என்றார்கள். ஆனால் இது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ராணுவம் வருவதற்கு சாத்தியமில்லை என்பதால் நாங்கள் அதனை நம்பவில்லை. ஆனால் அதனை வெளியே சொல்லவில்லை. நான் மனதிற்குள் நினைத்தேன் இவர்கள் LTTE தான் இவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று எங்களிடம் இருந்து சில வார்த்தைகளை எடுப்பதற்காக இவ்வாறு தந்திரோபாயங்களை அவர்கள் மேற் கொள்கிறார்கள் என்று நினைத்தேன். அவர்கள் கூறிய சில நிமிடங்களில் மன்னாரிலிருந்து செல் வந்து விழ ஆரம்பித்தது. அவர்கள் எங்களிடம் மண்வெட்டி வாங்கி பங்கர்கள் வெட்டி அதற்குள் இருந்து விட்டார்கள். நாங்கள் வீடுகளில் இருந்தோம். இதுவரை பார்க்கத அளவில் குண்டுகள் வந்து விழுகின்றது. நாங்கள் எல்லாம் இனி சீவிப்போமா என்று நினைக்க ஆரம்பித்தோம் இறைவன் ஒருவன் இருக்கிறான் வேறு யாரும் எங்களுக்கில்லை.
எமது கிராமத்திலிருந் உணவு இயந்திரத்தில் முடிந்தளவு எல்லோரையும் ஏற்றிக் கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொற்கேணி என்ற கிராமத்திற்கு சென்றோம். ராணுவம் கூறுகிறது எங்களுக்கு பாதுகாப்பிற்கு அடிக்கிறார்கள் என்று ஆனால் அவர்கள் பங்கருக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அதன்பிறகு ராணுவத்திடம் கதைத்து பஸ்ஸில் அனைத்து மக்களையும் ஏற்றி டொன் பொஸ்கோ என்ற இடத்திற்கு கொண்டு சென்றோம். அங்கு சில காலம் வசித்தோம். அங்கு உணவுகள் தந்தார்கள். போதுமான அளவு இல்லாட்டியும் எங்களை காப்பாற்றக் கூடிய நிலையில் அவர்கள் உதவினார்கள். பிறகு ரசூல் என்ற இடத்தில் 8 வருட காலம் தங்கி இருந்தோம். நிறுவனங்களால் எங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை தந்தார்கள் நோயாளிகளுக்கான மருத்துவ வசதியும் கொடுக்கப்பட்டது. எங்களை நல்ல முறையில் அரவணைத்து சண்டை சச்சரவு இல்லாத நிலையில் வாழ்ந்து வந்தோம்.
இப்பிடி இடம்பெயர்ந்து 2009ம் ஆண்டு திரும்பவும் எமது சொந்தக் கிராமத்தில் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றோம். என்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் எங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இடப்பெயர்வு போர் இனப்பிரச்சினை என்பன பிள்ளைகளின வாழ்க்கையில் ஏற்படக் கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License