we displaced to Puttalam

Experiential sharing of people evicted from the north in the 1990s


අපි පුත්තලම අවතැන් වෙලා

1990 ගනන්වල උතුරෙන් ඉවත් කරන ලද ජනතාවගේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම


நாங்கள் புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தோம்

1990களில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தொடர்பான பதிவு



CMP/MN/MU/PN/03
I was born in Puthuvazhi. It got flooded in 1957. We got displaced and moved to Silaavaththurai because water came inside our houses, we couldn’t stay there. We stayed in Silaavaththurai for a week and little by little brought our belongings from Puthuvazhi. We returned after 15 days when the flood had drained. Then we started to do agriculture in our own land. But ever since we started that there was famine. There was no rain. If we had rain for one year the following three years there won’t be any rain and our cultivation would be ruined. So once we will have good harvest and the next three years the plantation would be destroyed. It was like that, but for the last two three years we are having good harvest.
In 1990 due to troubles from LTTE, we got displaced to Puthalam without taking any of our belongings with us. One night there was an announcement in the Mosque, asking us to pack our valuables. Next morning people started to vacate, carrying loads of their belongings. We even didn’t have our breakfast. People left on foot, what things we could take with us? we just went empty handed.
We stayed in Silaavaththurai for 2 days and then the third day we went to Kalpity by boat. The local people welcomed us hearing that some Muslim people have come, and they let us stay in their lands. Later we received some goods and constructed houses in the Mosque land. This displacement had destroyed my children’s education. When we went to Puththalam I had three young girls. We managed our lives doing labor work.
We returned from Puthalam in 2002. Again due to military actions we got displaced in 2007 and stayed in Rasuvupoli. Later in 2009 we returned to our native village Poonochchi. From 2002 to 2007 there were only 9 families living there. There was no water, vegetables or any other resources. To buy anything we had to go to Naanaaddaan by cycle. Only after 2009 people came and settled here.
I have two children; they were not well educated because I didn’t have the means. Now one of my sons is working in Colombo. After returning to the village people are living happily with their children.
We don’t have the means to educate our children. We received a house and one of my daughters got married and live in that house. We got displaced twice. I wish all the people live in harmony without any ethnic or religious discrimination.



CMP/MN/MU/PN/03
මම පුදුවලිවල ඉපදුනේ. එහෙ ඉන්නකොට 1957 වසරේ දී ගංවතුර ආවා. ඉන්න බෑ ගේ පුරාම වතුර. එනිසා අවතැන් වී සිලාවතුරට ගියා. සිලාවතුරේ සතියක් හිටියා. ගෙදර තිබුන බඩු ටික ටික ගෙනිච්චා. දවස් පහලොවකට පස්සේ ගංවතුර අඩුවුනා. ආයෙත් අපේ ගමට ආවා. එහෙ ඇවිල්ලා අපේම ඉඩමේ ගොවිතැන් කළා. එදා ඉදන් කරදරයි. වැස්ස නෑ. එකපාරක් වහිනවා. ඒ වැස්සෙන් ගොවිතැන් කරලා තියෙද් දී ගොවිතැන වේලිලා යනවා. එහෙම අවුරුදු තුනක් ගොවිතැන් පාඵ වුනා. එක අවුරුද්දක අස්වැන්න ලැබෙනවා. මෙහෙම තමයි තියෙන්නේ. දැන් වසර දෙක තුනක ඉඳන් ගොවිතැනෙන් හොඳට අස්වැන්න ලැබෙනවා..
1990 වසරේ එල්.ටී.ටී ප්‍රශ්න නිසා බඩු මොනවාවත් නැතිව අවතැන් වෙලා පුත්තලමට ගියා. දවසක් රෑ පල්ලියේ දී තියෙන වටිනා දෙයක් බෑග් එකට දමාගන්න කීවා. පහුවෙනිදා උදේම හැමෝම බඩුපොදි උස්සගෙන යන්න පිටත් වුනා. අපි උදේට මොකවත් කෑවේ නෑ. හැමෝම පයින් ගියේ. අපිත් මොනවා ගෙනියන්නද? හැම දෙයක්ම අත ඇරලා ඇඳගෙන හිටිය ඇඳුම පිටින්ම ගියා.
සිලාවතුරේ දින දෙකක් ඉඳලා තුන්වෙනි දවසේ බෝට්ටුවෙන් කල්පිටියට ගියා. එහෙ හිටපු අය මුස්ලිම් අය ඇවිල්ලා කියලා එක්කන් ගිහින් ඔවුන්ගේ ඉඩමේ රදවාගෙන ඉඳලා පසුව පල්ලියේ ඉඩමක හැම දෙයක්ම දුන්නා. එහි ගෙවල් හදාගෙන හිටියා. එහෙ ගිය නිසා දරුවන්ගේ අධ්‍යාපනය කඩා වැටුනා. පුත්තලමට යනකොට ගැහැණු දරුවන් තුන් දෙනයි. එහෙ කුළී වැඩ කරලා තමයි ජීවත් වුනේ. පුත්තලමේ ඉදලා 2002 වසරේ දී ආපසු ආවා. නැවත 2007 වසරේ දී හමුදාවෙන් එළවනකොට අවතැන් වුනා. එහෙ රසවුපොලි කියන දිහාවේ හිටියා. 2009 දී අපේ ගම වන පූ‍නොච්චියට ආවා. ඉස්සර 2002-2007 දක්වා පවුල් 09 ක් පමණයි හිටියේ. වතුර පහසුකම් අඩුයි. එළවඵ බඩු කිසිම දෙයක් නෑ. අපිට හැම දෙයක්ම බයිසිකලයෙන් නානාට්ටාන් වලට ගිහින් ගේනන සිදුවුනා. 2009ට පසු තමයි හැමෝම ඇවිත් පදිංචි වුනේ.
මට දරුවන් දෙදෙනෙක් ඉන්නවා. වැඩිය ඉගෙන ගෙන නෑ. උගන්වන්න පහසුකම් මොකුත් නෑ. දැන් එක පුතෙක් කොළඹ වැඩ කරනවා. අවතැන් වෙලා ගිහින් ආයෙත් ගමට ආවට පස්සේ හැමොම සන්තෝෂයෙන් දරුවන් සමග ජීවත් වෙනවා. ඉගෙනගන්න ව‍යසෙ දරුවන්ට උගනන්නන්න පහසුකම් නෑ. එහෙ ගෙයක් හදලා දුන්නා. එක දුවක් විවාහ වෙලා ඒ ගෙයි ඉන්නවා. අපි දෙපාරක් අවතැන් වුනා. මගේ බලාපොරොත්තුව හැමෝම ජාති, ආගම්, භේද නැතිව සන්තෝෂයෙන් ඉන්න ඕන කියලා.




CMP/MN/MU/PN/03
நான் புதுவழியில் பிறந்தேன். அங்க இருக்கேக்க 1957ம் ஆண்டு வெள்ளம் வந்தது. நிக்க ஏலாது. வீடு எல்லாம் தண்ணீர். அதன் காரணத்தினால் இடம்பெயர்ந்து சிலாவத்துறைக்குச் சென்றோம். சிலாவத்துறையில் 1 கிழமை தங்கி இருந்தோம். வீட்டில் இருந்த சாமான்களை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போய்ச் சேர்த்தோம். இப்படி 15 நாட்களில் வெள்ளம் ஓய்வடைந்தது. திரும்ப எங்கட சொந்த ஊருக்கு வந்தோம். அங்க வந்து எங்கட சொந்தக் காணியில் விவசாயம் செய்தோம். அதிலிருந்த பஞ்சம் தான். மழை பெய்வது இல்லை. ஒரு முறை மழை பெய்யும். அந்த மழையில் விவசாயம் செய்தால் விவசாயம் பட்டுப் போய்விடும். அப்பிடி 3 வருடம் விவசாயம் பட்டுப் போகும். 1 வருடம் விளைச்சலைத் தரும். இந்த மாதிரித்தான் காணப்படுகின்றது. இப்ப 2,3 வருடங்களாக விவசாயம் நல்ல விளைச்சலைத் தருகின்றது.
1990ம் ஆண்டு LTTE பிரச்சினையால் எந்தவித சாமானும் எடுக்காமல் புத்தளத்திற்கு இடம்பெயர்ந்து சென்றோம். இரவு ஒருநாள் பள்ளியில் அறிவித்தார்கள். உங்களுடைய பெறுமதியான பொருட்களை பைகளில் கட்டுங்கள் என்று கூறினார்கள். அடுத்த நாள் காலை எல்லோரும் மூட்டை முடிச்சுக்களுடன் போனார்கள். காலம சாப்பாடு கூட நாங்க சாப்பிடல்ல. நடையிலே எல்லாரும் போறாங்க. நாங்களும் என்ன கொண்டு போறது எல்லாத்தையும் விட்டுட்டு உடுத்தின உடுப்போடதான் போனனாங்க.
சிலாவத்துறையில் 02 நாள் இருந்து தான் 3ம் நாள் படகினால் கற்பிட்டிக்குப் போனோம். அங்குள்ளவங்க முஸ்லீம் ஆட்கள் வந்திருக்கிறாங்க என்று வந்து கூட்டிக் கொண்டு போய் அவங்கட காணில எங்கள வச்சிருந்து பிறகு பள்ளிக் காணியில சாமான்கள் எல்லாம் தந்தாங்க அங்க வீடு கட்டித்தான் இருந்தோம். அங்க போனதால பிள்ளைகளுடைய படிப்பை இழந்திட்டாங்க புத்தளத்துக்கு போகேக்க 3 குமர்ப் பிள்ளைகள். அங்கு கூலி வேலை செய்துதான் வாழ்க்கை நடத்தினோம்.
புத்தளத்தில் இருந்து 2002ம் ஆண்டு திரும்பி வந்தோம். மீண்டும் 2007ம் ஆண்டு இராணுவம் துரத்த இடம்பெயர்ந்தோம். அங்கு ரசுவுபொலி என்ற இடத்தில் இருந்தோம். 2009 இல் எங்கட சொந்த ஊராகிய பூநொச்சிக்கு வந்தோம். முதல் 2002-2007 மட்டும் ஒரு 9 குடும்பங்கள் மாத்திரமே இருந்தோம். தண்ணீர் வளம் குறைவு. மரக்கறி சாமான் எல்லா வகையாலும் குறைவு. நாங்கள் என்ன வாங்குவதென்றாலும் சைக்கிளில் நானாட்டானுக்கு போய் வாங்கி வர வேண்டிய நிலை காணப்பட்டது. 2009 இற்குப் பிறகுதான் எல்லா சனங்களும் வந்து குடியேறினர்.
எனக்கு 2 பிள்ளைகள். பெரிதாகப் படிக்கவில்லை. படிக்க வைப்பதற்கு வசதியுமில்லை. இப்ப ஒரு மகன் கொழும்பில் வேலை செய்கின்றான். இடம் பெயர்ந்து சென்று மீண்டும் ஊருக்கு வந்த பின்னர் சந்தோசமாக எல்லோரும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
படிக்கிற வயதில் உள்ள பிள்ளைகளைப் படிப்பிக்க வசதி இல்லை. அங்கு ஒரு வீடு கட்டித் தந்தார்கள். அதில் இப்போது மகள் ஒருவர் திருமணம் செய்து அந்த வீட்டிலே இருக்கின்றார். நாங்கள் 2 தடவை இடம்பெயர்ந்தோம். என்னுடைய எதிர்பார்ப்பு இன மத பேதமின்றி எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதேயாகும்.








A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License