We spent twenty years in Kalpitya

Experiential sharing of people evicted from the north in the 1990s


අපි කල්පිටිය අවුරුදු 20 ක් ගත කළා

1990 ගනන්වල උතුරෙන් ඉවත් කරන ලද ජනතාවගේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම


கல்பிட்டிவில் நாங்கள் இருபது ஆண்டுகள் கழித்தோம்

1990களில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தொடர்பான பதிவுCMP/MN/MU/PN/05
I was born in Poonochchi. When my father was alive we used a tiny lantern to manage our daily life. Even to go work in agricultural lands we go with a help of the lantern. Those days there were many snakes. During my father’s time there were no doctors, snake bites were treated through native practices.
During those days we could do agriculture only when if it rains. We didn’t have machines for harvesting. We use scythes for the reaping. During the night, people would light a lamp and stay inside their houses.
There were no facilities available during my father’s time. They didn’t have lights. He brought me up with so much difficulty.
For some time I lived in the village I was born, now I am a father of four children. One day I got bitten by a snake and got treated in the hospital.
Then the LTTE issues have started and I moved to Kalpity to save my children. Even in Kalpity we faced difficulties, we didn’t have a place to stay. Later they built refugee camp for us. I educated my children being there.
We were in Kalpity for 20 years. All my children got educated there and now have come here to our own village. By God’s grace we are well off now. All four children are having a job. We did agriculture here; in Kalpity we planted chilies and onions.
Those days Muslims and Tamils lived in harmony, even now we live together happily.
The Movements here asked us to leave this place within 24 hours. And we had to get displaced while it was raining and became refugees, which I can never forget in my life.


CMP/MN/MU/PN/05
මම ඉපදුන ගම පූ‍නොච්චි. තාත්තා හිටපු කාලයේ අපි ලාම්පුවක් තියාගෙන තමයි කාලය ගත කළේ. කුඹුරට ගියත් ලාම්පුව අල්ලගෙන යන්න ඕන. ඒ කාලයේ සර්පයෝ වැඩියි. මගේ තාත්තා හිටපු කාලේ සර්පයෙක් කෑවොත් වෙදකම් කරන්න වෙදෙක් නෑ. කෑවොත් ගුරුකම් කරලා තමයි සනීප කළේ.
ඒ කාලේ වැස්ස ආවානම් තමයි ගොවිතැන් කරන්න පුලුවන්. අස්වනු කපන්න මැෂින් නැහැ. ගොයම් කපන්නේ දෑකැත්තෙන්. රෑට ගිණි මැලයක් ගහලා ගෙදර ඉන්නවා. මගේ තාත්තගේ කාලයේ කිසිම පහසුකමක් තිබුනේ නැහැ. දැන් වගේ ලයිට් නැහැ. ගොඩක් දුක් විඳලයි මාව හදා ගත්තේ.
උපන් ගමේ ටික කාලයක් හිටියා. දැන් ළමයි හතර දෙකනකුගේ තාත්තා කෙනෙක්. එහෙම ඉන්න‍කොට මට සර්පයෙක් ගැහුවා. ඉස්පිත්තාලෙට ගියා. බෙහෙත් කරලා සනීප වුනා.
එහෙම ඉන්නකොට එල් ටී ටී ප්රශ්නෙ පටන් ගත්තා. ඒකෙන් දරුවන් ආරක්ෂා කරගන්න කල්පිටියට අරන් ගියා. කල්පිටියට ගිහින් දුක් වින්දා. ඉන්න තැනක් නෑ. පස්සේ තමයි අනාථ නිවාස හදලා දුන්නේ. එහි දී දරුවන්ට ඉගැන්නුවා. ඉස්සර දෙමළ මුස්ලිම් කියලා භේදයක් නැතිව හිටියා. ඒවගේම අදත් එකමුතුව සතුටින් ඉන්නවා.
මගේ ජීවිතයට අමතක කරන්න බැරි සිදුවීම නම් මෙහෙ හිටපු සංවිධානවලින් පැය 24ක් ඇතුළත පිටත් වෙන්න කියලා වැස්ස වෙලාවක අනාථ වෙලා අවතැන් වෙච්ච එකයි.CMP/MN/MU/PN/05
நான் பிறந்த ஊர் பூநொச்சி. வாப்பா இருந்த காலத்தில நாங்க ஒரு குட்டி லாம்ப வச்சிக்கிட்டு அந்த லாம்பிலதான் காலம் போறது. கமத்திற்கு போறதெண்டாலும் லாம்ப பிடிச்சிட்டு போறது. அப்ப பாம்புகள் கூடத்தானே. எனது வாப்பாவினுடைய காலத்தில் பாம்பு கடித்தால் வைத்தியம் பார்ப்பதற்கு வைத்தியர் இல்லை. அண்ணாவிமாரிடம் குலை அடித்துத்தான் பார்ப்பது.
அந்த நேரம் மழை வந்தால்தான் வெள்ளாண்மை செய்யலாம். வெள்ளாண்மை வெட்டுவதற்கு மிசின் இல்ல..வெள்ளாண்மை வெட்டுவதென்றால் அரிவாளால் வெட்டுவார்கள். இரவில் விளக்கைப் பற்றி விட்டு வீட்டில் இருப்பார்கள்.
எனது அப்பாவினுடைய காலத்தில் எந்த வசதியுமே இல்லை. இப்போது போல மின்குமிழ் இல்லை. மிகவும் கஸ்ரப்பட்டு என்னை வளர்த்தார்.
பிறந்த ஊரிலே கொஞ்சக் காலம் இருந்தேன். இப்போது 4 பிள்ளைகளுக்கு தகப்பனாகி விட்டேன். அப்பிடி இருக்கேக்க ஒருநாள் எனக்கு பாம்பு கடித்தது. வைத்தியசாலைக்குச் சென்றேன். மருந்து போட்டு மாற்றினார்கள்.
அப்பிடி இருக்கேக்க LTTE பிரச்சினை ஆரம்பமாகியது. இதனால் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக கற்பிட்டிக்கு கொண்டு சென்றேன். கற்பிட்டியில் போயும் கஸ்ரப்பட்டோம். இருக்க இடமில்லை. பிறகுதான் அகதி முகாம் மாதிரி அமைத்துத் தந்தார்கள். அங்கேயே பிள்ளைகளை படிக்க வைத்தேன்.
கற்பிட்டியில் 20 வருடங்களாக இருந்தோம். பிள்ளைகள் எல்லாம் அங்கே படிச்சி பிறகு இங்க வந்திட்டோம். பின் எங்கட சொந்தக் கிராமத்திற்கு வந்தோம். இப்ப கடவுளே என்று நல்ல வசதியா இருக்கிறோம். 4 பிள்ளைகளும் உத்தியோகத்தில் இருக்கின்றார்கள். இங்கு விவசாயம் செய்தோம். கற்பிட்டியில் இருக்கேக்க கொச்சிக்காய், வெங்காயம் போன்ற விவசாயமாக பயிரிட்டு வந்தோம்.
ஆரம்பகாலத்தில் தமிழர் முஸ்லீம் என்ற வேறுபாட்டின்றி வாழ்ந்து வந்தோம். அதே போலவே இன்றும் ஒற்றுமையாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றோம்.
என் வாழ்நாளிலே என்னால் மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால் இங்குள்ள இயக்கங்கள் 24 மணித்தியாலத்துக்குள்ளே வெளியேறச் சொல்லி மழை வந்த நேரத்தில் அகதியாக இடம் பெயர்ந்ததையே குறிப்பிடலாம்.

A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License