Our village is Puthukudiyiruppu

Experiential sharing of war life


අපේ ස්ථානය පුදුකුඩිඉරිප්පු

යුධ ජීවිතයේ අත්දැකීම් බෙදාහදා ගැනීම


எங்களது ஊர் புதுக்குடியிருப்பு

போர் வாழ்க்கை தொடர்பான அனுபவ பகிர்வு



CMP/MN/MU/PN/04
We are from Puthukkudiyiruppu. My father due to his illness (wheezing) moved to Marikkaavur with the children to do agriculture. We had cattle and goats there. I was born in Marikkaavur. In our family there are three boys and six girls. Later they all got married. We use to go to Potkeny to study.
When I was about three years old I dropped my ball in to the well and I too have jumped in. There was a snake in the well and it kept coming repeatedly winding around my neck. My mother saw this and started to scream but there were nobody around. Later a lady came and she sent the bucket down in to the well and helped me get out. When I came out I fell down and broke my leg, which took a month to heal.
I was seven years old when we had flood in 1957. The whole place got flooded. At that time we were staying at Pandaraveli where my elder sister got married. My brother-in-law asked me to go and check about the safety of my parents. I went there but the whole road was flooded, therefore I stayed at my uncle’s place in Koolaangkulam.
During the night my brother came with all our goats. When coming through the flood so many cows, goats and buffaloes died. We spent the night at Poolaangkulam at one of my uncle Rafeek’s shop.
It was a terrible flood, we thought that it was going to destroy us and we would not be able to stay there anymore, so we left to Silapaththurai. All the places got flooded except for Silapaththurai. When we returned after staying there for 4 to 5 days we found all our cattle, plantations and house destroyed. So we went to Poonochchi. At that time only Uthuman Leppai and his wife were living there. Since that place was not flooded we got settled there and after that our relatives also followed us.
Later the terrorist issue began. Each Movement would come and get money from us; they will take our vehicles too. When they take the vehicles from us the military would come and trouble us. Likewise there were so many issues, which ultimately made us leave that place too.
During that time I was hiding inside the forest for 15 days. I told my family to lock the house and come without taking anything from there. My son took only the Machine box and came; on the way because of the firing he dropped the box and ran inside the forest. Later, we were all standing in the sea, while running away I dropped all the money kept in the pocket. We had no money to go. Later one of our cousin came with a Borat and took us with him.
Thereafter I went to my cousin’s place in Poolachchenai via the sea. We stayed there for 23 years. Then we returned thinking that the situation would be normal by then. We came to our village in 2010. Even though I faced so many troubles and difficulties by God’s grace I was alive with no harm to my body.
Tamils and Muslims used to live in harmony. Because Muslim’s in Batticalo attacked the Tamils over there, they started to trouble the Muslims here, it’s a great atrocity. We have not harmed anybody, though we have lost so many of our assets, by God’s grace, still we are doing well.


CMP/MN/MU/PN/04
අපේ ගම පුදුකුඩු ඉරුප්පු. ඒ ගමේ සිට මගේ තාත්තා අසනීපයක් (හතිය) නිසා ළමයිනුත් අරගෙන මරික්කාවූර් ගමට ගොවිතැන් කරන්න ආවා. එහි හරකුන්, එළුවන් හැමදෙයක්ම තිබුනා. මම මරික්කාවූර්වල ඉපදිලා තියෙන්නේ ඊට පස්සේ. අපේ පවුලේ පිරිමි ළමයි තුන් දෙනෙකුයි ගැහැණු ළමයි හය දෙනෙකුයි හිටියා. ඊට පසුව ඔවුන් විවාහ වුනා. අපි ඉගෙන ගන්න ගියේ පොට්කේනි කියන තැනට.
එතකොට මම පොඩියි අවුරුදු තුනක් විතර. අතේ තිබුන බෝලය ලිඳට වැටුනා. මමත් ලිඳට පැන්නා. ඇතුලේ සර්පයෙක් හිටියා. ඌ මගේ බෙ‍ල්ලේ එතෙන්න වගේ ආවා. මගේ අම්මා ඇවිත් කෑ ගැහුවා. කවුරුවත් හිටියේ නෑ. ඊට පස්සේ එක ගෑණු කෙනෙක් ඇවිත් බාල්දිය ලිඳට දාලා මාව එළියට ඇදලා ගත්තා. ඇදලා අරන් අත ඇරපු වෙලාවේ වැටිලා මගේ කකුල කැඩුනා. මගේ කකුල හරි ගියේ ඊට මාසෙකට පස්සේ.
1957 අවුරුද්දේ ගංවතුර එනකොට මම අවුරුදු හතක ළමයෙක්. ඒ කාලේ ගංවතුරක් ඇවිත් මුලු පළාතෙම ගං වතුර. ඒ කාලේ අපි මගේ අක්කා විවාහවෙලා හිටපු බණ්ඩාරවෙල ප්‍රදේශයේ හිටියා. එවිට මස්සිනා අම්මා තාත්තා බලන්න යමු කීවාම මාත් ගියා. පාරවල් ඔක්කොගෙම ගං වතුර. පසුව කුළාන්කුළමේ මගේ මාමගේ ගෙදර හිටියා. රෑ ඉන්‍නකොට අයියා අපේ එඵවන් ඔක්කොම හොයාගෙන ආවා. වතුරේ අරන් එනකොට අපේ හරක් එළුවන් මීහරක් ගොඩක් මැරුණා. කුළාන්කුළන් කියන දිහාවේ අපේ මාමා කෙනෙක් හිටියා රෆීක් කියලා. ඔහුගේ කඩයේ රෑට හිටියා.
හොඳටම ගංවතුර. තවත් ඉන්න බැහැ. හැමෝම මැරෙයි කියලා හිතලා සිලාවතුරට ගියා. හැමතැනම වතුර. සිලාවතුරේ වතුර නෑ. එහෙ දින හතර පහක් ඉඳලා ආයෙත් ඇවිත් බලනකොට එළුවන් හරක් ගොවිතැන් ගෙවල් මොකුත් තිබුනේ නෑ. ඊට පස්සේ පූනොච්චි කියන තැනට ගියා. එහෙ ඇවිත් බලනකොට උදුමාලෙබ්බේ කියන කෙනයි එයාගේ බිරිඳයි විතරයි හිටියේ. ගංවතුර මෙහෙට ආවේ නෑ කියලා මෙහෙ ඇවිත් ඉන්න පටන් ගත්තා. ඊට පසුවයි අපේ නෑදෑයෝ හැමෝම මෙහෙ ඇවිත් පදිංචි වුනේ.
ඊට පසු ත්‍රස්තවාදී කළබල ආරම්භ වුනා. හැම සංවිධානයක්ම අපෙන් සල්ලි ගත්තා. වාහනයත් අරගෙන යනවා. එයාලා වාහනේ ගෙනිච්චාම ආමි කට්ටිය අපිට කරදර කරනවා. මේ වගේ ප්‍රශ්නවලට හිරවෙලා ඉන්නකොට ගම හැරදා පිටත්වෙන්න සිදුවුනා.
ඒ කාලේ දවස් පහළොවක් කැලේ හැංගිලා හිටියා. එවිට මම ගෙදර අයට ගේ අගුලු දාලා විතරක් එන්න වෙන මොකුත් ගේන්න එපා කියනකොට පුතා ‍මැෂින් පෙට්ටිය විතරක් අරගෙන එනකොට වෙඩි තිබ්බම එය අත ඇරලා කැලේට දිව්වා. පසුව හැමෝම වෙරළේ හිටියා. දුවනකොට වැටිලා සාක්කුවේ තිබිබ සල්ලි ඔක්කොම වැටුනා. යන්න සල්ලිත් නෑ. පසුව එක් මස්සිනා කෙනෙක් බෝට්ටුවක් ගෙනත් එක්කගෙන ගියා.
පසුව මුහුදු මාර්ගයෙන් මස්සිනාගේ ගමවන පූලාන්චේනෙයි වලට ගියා. එහි අවුරුදු විසි තුනක් හිටියා. පසුව හිතුවා ගමේ තත්ත්වය හොඳ ඇති කියලා මෙහෙ ආවා. 2010 වසරේ දී අපේ ගමට ආවා. ප්‍රශ්න ‍කොච්චර ආවත් දෙවියන්ගේ පිහිටෙන් මගේ ජීවිතයට වත් ශරීරයටවත් කිසිම කරදරයක් වුනේ නැහැ. ඉස්සර දෙමළ මුස්ලිම් අය සහයෝගයෙන් තමා හිටියේ. මඩකලපුවේ මුස්ලිම් අයට ගහනවා කියලා ඔවුන් මෙහෙ ඉන්න මුස්ලිම් අයට ගහලා විශාල හානි වුනා. අපි අද දක්වාම කාටවත් අසාධාරණයක් කළේ නෑ. මෙච්චර දේවල් නැති වෙලත් දෙවියන්ගේ පිහිටෙන් හොඳින් තමා ඉන්නේ.




CMP/MN/MU/PN/04
எங்களுடைய ஊர் புதுக்குடியிருப்பு. அந்த ஊரில் இருந்து எனது அப்பா சுகயீனம் (முட்டு) காரணமாக பிள்ளைகளைக் கொண்டு மரிக்காவூர் கிராமத்திற்கு விவசாயம் செய்வதற்காக வந்தார். அங்கு ஆடுகள் மாடுகள் எல்லாம் இருந்தது. அதுக்குப் பிறகுதான் நான் மரிக்காவூரில் பிறந்தேன். ஆண் 3 பெண் 6 பேர் எங்களுடைய குடும்பத்தில் காணப்பட்டனர். அதன் பிறகு திருமணம் செய்தார்கள். நாங்கள் பொற்கேனி என்ற இடத்திற்குத்தான் படிக்கப் போவோம்.
நான் சின்னப்பிள்ளையில ஒரு 3 வயது இருக்கும். கையில் உள்ள பந்தை கிணற்றுக்குள்ள போட்டுட்டன். நானும் கிணற்றுக்குள்ள பாஞசிட்டன். உள்ளுக்குள்ள பாம்பு கிடந்தது. பாம்பு என்ட கழுத்தில வந்து சுத்துறதும் போறதுமா இருக்கு. என்ற தாய் வந்து பார்த்து கத்துனோன அங்க யாருமே இருக்கேல. ஒரு மனுசி மட்டும் வந்து வாளிய கிணற்றுக்குள்ள போட்டு என்ன வெளியில இழுத்து விட்டா. வெளியில இழுத்து விட்டோன கீழ விழுந்து என்ற கால் உடைஞசிட்டுது. பிறகு ஒரு மாதத்திற்கு பிறகுதான் என்ற கால் சுகமானது.
1957ம் ஆண்டு வெள்ளம் வரேக்க நான் 7 வயது பிள்ளையாகக் காணப்பட்டேன். அந்த நேரம் வெள்ளம் வந்தவுடன் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளம் தான். நாங்கள் அந்த நேரம் என்ர அக்கா திருமணம் செய்த பண்டாரிவெளி என்ற இடத்திலே இருந்தோம். அப்போது மச்சான் அப்பா அம்மாவை என்னைப் போய் பார்க்கச் சொல்ல நானும் போனேன். வீதி எல்லாம் வெள்ளம் திரும்ப கூளாங்குளத்தில் உள்ள எனது மாமா வீட்டை தங்கினேன்.
இரவு இருக்கேக்க எங்கட ஆடுகளை எல்லாம் அண்ணா கலைத்துக் கொண்டு வந்தார். தண்ணீருக்குள்ளால் கொண்டு வரும்போது நிறைய ஆடுகள், மாடுகள் எருமை, மாடுகள் எல்லாம் இறந்து விட்டன. பூலாங்குளம் என்ட இடத்தில எங்கட மாமா இருந்தார். ரபீக் என்று. அவரிட கடையில இரவு இருந்தோம்.
சரியான வெள்ளம் இனி இருக்கேலாது, எல்லோரும் அழியப்போகிறோம் என்று சிலாபத்துறைக்குப் போனோம். முழு இடமும் தண்ணீர். சிலாவத்துறையில் மட்டும் தண்ணீரில்லை. அங்க 4,5நாள் இருந்து எங்கட இடத்திற்கு வந்து பார்த்தா ஆடு ,மாடு, வீடு, விவசாயம் ஒன்றுமே இல்லை. பிறகு பூநொச்சி என்ற அந்த இடத்திற்குப் போனோம். இங்க வந்து பார்க்கும்போது உதுமான் லெப்பை என்றவரும் அவரிட பெண்சாதியும் மட்டும்தான் இங்க இருந்தாங்க. வெள்ளம் இங்க வரல என்று இங்க வந்து இருக்க ஆரம்பித்தோம். அதற்குப் பிறகுதான் எங்கட சொந்தக்காரங்க எல்லாம் வந்து இங்க குடியேறினாங்க.

அதன் பிறகு பயங்கரவாதப் பிரச்சினை ஆரம்பமாகியது. ஒவ்வொரு இயக்கங்களும் எங்கட்ட வந்து காசு வாங்குவார்கள். வாகனத்தையும் கொண்டு போவாங்க. இவங்க வாகனத்தைக் கொண்டு போனா ஆமிக்காரங்க வந்து எங்கட்ட பிரச்சன பண்ணுவாங்க. இப்படி பல பிரச்சனைகளில சிக்குபட்டு கிடந்து ஊரை விட்டு வெளிக்கிட வேண்டி வந்தது.
அந்த நேரம் 15 நாள் காட்டில ஒளிஞசி இருந்தேன். அப்ப நான் வீட்டில இருந்தவங்களுக்கு வீட்ட பூட்டி போட்டு மட்டும் வாங்க வேற எதுவும் வேணாம் என்று சொல்ல மகன் மிசின் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு வரேக்க சூட் பண்ணினதால அத விட்டுட்டு காட்டுக்குள்ள ஓடிட்டார். பிறகு எல்லோரும் வந்து கடலுக்க நிக்கிறம் ஓடுனதில கீழ விழுந்து பொக்கட்டில இருந்த காசெல்லாம் விழுந்திட்டுது. போறதிற்கு காசும் இல்ல. பிறகு மச்சான் ஒருவர் போரட் கொண்டு வந்து கூட்டிப் போனாங்க.
பிறகு கடல் மார்க்கமாகப் மச்சானின் ஊராகிய பூலாச்சேனைக்குச் சென்றேன். அங்கு 23 வருடங்கள் இருந்தோம். பிறகு யோசித்தோம். ஊரில் நிலைமை சரியாகியிருக்கும் போவோம் என்று எண்ணி இங்க வந்தோம். 2010ம் ஆண்டு எங்கட கிராமத்திற்கு வந்தோம். எத்தனை பிரச்சினையோ கஸ்ரங்களும் வந்த போதும் எனக்கு உடல் நிலைக்கோ உயிருக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. இது இறைவனுடைய துணையாகும்.
முன்பு தமிழ் ஆட்களும் முஸ்லீம் ஆட்களும் ஒற்றுமையாத்தான் இருந்தாங்க. மட்டக்களப்பில் முஸ்லீம்கள் அடிக்கிறாங்க என்ற பிரச்சனையில் அவங்க இங்க இருக்கிற முஸ்லீம்களுக்கு பிரச்சனை கொடுத்தது பெரிய பாதிப்பு. நாங்க இதுவரைக்கும் யாருக்கும் அநியாயம் செய்யேல. எவ்வளவுதான் சொத்துக்கள் போனாலும் இன்டைக்கும் கடவுள் புண்ணியத்தில நல்லாத்தான் இருக்கிறம்







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License