CMP/MN/MU/SIL/02
My father’s name is Anthony Michael. Mother’s name is Amalathevi and I am Kavitha. We were in Kilinochchi before, later got displaced and lived in Mannar. I was 16 years old then, after displacement I got married as a second wife. He already had two children from the first wife. At that time my father had left my mother. We were 7 children in the family. My mother couldn’t send us to school. We were having such a hard time. When we go to school we get beaten for not having foot wears or the covers to our books. Then we use cement bags as covers to our books.
Our mother had a very hard time and my father was a drunkard. My father being drunk would threaten us with a knife. I felt like crying when that happens. All 7 of us were studying at the same school in Kanakapuram. Later due to our hardship I left school when I was at Grade 3 and went to work for Rs.15 wage. With that I stopped my schooling.
I was just 14 then. I didn’t know anything about working or digging wells. Men get paid Rs 180 and women get Rs 75. But they gave me the men’s wage and call me for work often. I would get inside the well with a help of a robe and fill the bags with soil and send it up. Likewise I had a very difficult childhood.
When I was 16, due to economic difficulties, my mother brought this proposal and told me to either marry him or else join the Movement. So I got married to him as a second wife. He got two children and I was just 16. I didn’t even know how to cook. Life was very hard. There were seven siblings at my mother-in-law’s place and I was cooking for all of them.
I later came to Mannar and worked at salterns. (1997-2006). I managed my life with the day to day wage. I even sold my ear rings to have food.
One month after marriage my husband started to beat and trouble me a lot. He will get drunk and beat me. I was having a very hard life. After coming here, even now he would get drunk and beat me chasing me around the house. Even the children don’t bring peace to my life.
Since I couldn’t tolerate all this I went to Colombo to work as a house maid. My husband reported to police and due to their intervention I came back. Now he doesn’t take alcohol and we are living happily.
I got 3 children and his first wife got 2 that makes 5 children to us. 2 got married 2 are studying and one daughter is just staying at home, she doesn’t study. Because of our financial difficulties I left her in a hostel and went abroad to work. But my husband had taken her out. I stayed abroad for 2 years and the money I sent back home was also used for his alcohol and nothing got saved. In 2007 we got displaced and stayed in Mullikkulam. Since we were the only family left there, later we moved to Puthukkudiyiruppu (Saveriyarpuram). Later we received a house through the housing scheme and now we are having a happy life.
I am the one who went through difficulties in our family. But my mother didn’t give me anything. She gave jewelries and money to those who haven’t contributed anything to the family. My husband would also sometimes point out that I haven’t got anything from my mother. I have come here and live like an orphan. All my siblings are living closer to my mother. My mother is staying with my youngest brother.
I think that my children should not suffer the same way we have suffered. I have to somehow educate them, no matter how difficult it is. Sharing my life story and my sufferings and sorrows through this Ninaivalaihal project gives me great pleasure.
CMP/MN/MU/SIL/02
මගේ තාත්තාගේ නම අන්තෝනි මයිකල්. මගේ අම්මාගේ නම අමලාදේවී. මගේ නම කවිතා. අපි ඉස්සර කිළිනොච්චියේ හිටියා. ඊට පස්සේ අවතැන් වෙලා මන්නාරමේ හිටියා. එතකොට මට වයස 16යි. අවතැන් වෙලා ඇවිල්ලා ඉන්නකොට මම විවාහ වුනා. මම විවාහක පුද්ගලයෙක් එක්ක විවාහ වුනා. එයාගේ පළමු විවාහයේ දරුවන් දෙදෙනෙකු හිටියා. ඒ කාලේ අපේ තාත්තා අම්මව දාලා ගියා. අපි සහෝදරයෝ හත් දෙනයි. අපේ අම්මා අපිට ඉගැනුවේ නැහැ. හරි කරදරයි. අපි පාසල් ගියත් කකුල්වල සෙරෙප්පු නැහැ. පොත්වලට කවර නැහැ කියලා එහෙදී ගහනවා. අපි සිමෙන්ති කොලවලින් කවර දාගෙන ගියා.
අම්මට හරි කරදරයි. තාත්තත් හරියට බොනවා. එනිසා තාත්තා බීලා ඇවිත් පිහියෙන් බෙල්ල කපන්න යනවා. ඒ වෙලාවට අපි අඬනවා. අපි හත්දෙනාම ඉගෙන ගත්තේ කනගපුරම්වල එකම පාසලක. කරදරමැද තුන වසරට ඉගෙනගෙන රුපියල් පහළොවට වැඩට ගියා. ඊට පස්සේ ඉගෙන ගන්න ගියේ නැහැ.
එතකොට මට වයස 14යි. වැඩට යනවා. ලිං කපනවා කියන්නේ මොකක්ද කියලාවත් දන්නේ නැහැ. පිරිමින්ට රුපියල් 180යි. ගැහැණුන්ට රුපියල් 75යි. ඒ කාලේ මට පිරිමි අයගේ පඩියම දුන්නා. මට දිගටම වැඩට අඬගහනවා. කප්පියේ එල්ලිලා ළිඳට බැහැලා පස් පුරවලා උඩට යවන්න ඕන. ලණුව අල්ලගෙන බැහැලා මල්ලට පස් පුරවලා කප්පියෙන් ඒවා උඩට යවනවා. පොඩි කාලේ ඉඳන්ම එහෙම දුක් විඳලා තමයි හැදුනේ. මට වයස 16ක් වුනා. අම්මට අපිව හදාගන්න බැරි කරදර නිසා මෙයාව බඳින්න නැත්නම් සංවිධානයට යන්න කිව්වා. එතකොට මම ඔහුගේ දෙවන විවාහයට කැමති වුනා. එයාට ළමයි දෙන්නයි. මට එතකොට 16යි. උයන හැටි වත් දන්නේ නැහැ. එහෙමයි හැදුනේ. නැන්දම්මගෙ පවුලේ සහෝදරයෝ හත් දෙනයි. ඒ ඔක්කොටම උයලා දීලා හිටියා.
මම පස්සේ මන්නාරමට ඇවිත් ලේවායේ වැඩකරා. (1997-2006) එදා පඩියෙන් එදාට එදාට වියදම් කරගෙන හිටියා. පසුව කනේ තිබ්බ කරාබු දෙකත් විකුණලා කෑමට වියදම් කළා. එහෙම බැඳලා මාසයක් විතර යනකොට එයා ගහන්න බණින්න පටන් ගත්තා. මෙයා හොඳටම බීලා ඇවිල්ලා ගහනවා. බනිනවා. ඒවගේ කරදර මැද්දේ ජීවත් වුනා. දැන් මෙහෙ ඇවිත් බීලා ගේ වටේ එළවාගෙන ගිහින් ගහනවා. ගෙදරින් එළවනවා. ළමයින්ගෙන් මට නිදහසක් නෑ.
මේ වගේ කරදර ඉවසන්න බැහැ. මම කොළඹ ගිහින් වැඩ කළා. මෙයා ඇවිල්ලා පොලිසිට කියලා පස්සේ පොලිසිය එහෙට දැනුම් දීලා මම මෙහෙ ඇවිල්ලා දැන් බීම අතහැරලා සතුටින් ඉන්නවා.
මට ළමයි තුන්දෙනයි. එයාගේ පළමු විවාහයේ ළමයි දෙන්නයි. ඔක්කොම පස් දෙනයි. දෙන්නෙක් විවාහ වුනා. දෙන්නෙක් ඉගෙන ගන්නවා. දුව ගෙදර ඉන්නවා. ඉගෙන ගන්නේ නැහැ. මම කරදර නිසා දුව හොස්ටල් එකක දාලා රට ගියා. සැමියා එයාව හොස්ටල් එකෙන් අරන් ගිහින්. මම අවුරුදු දෙකක් රට හිටියා. හම්බකරන සල්ලි මෙහෙ එවලත් දිගටම බීලා. ඒ සල්ලි මොකවත් දැන් නැහැ. 2007 දී අවතැන් වෙලා මුල්ලිකුලමේ හිටියා. අපේ පවුල විතරක් මුල්ලිකුලමේ හිටිය නිසා පුදුකුඩු ඉරුප්පුවට ගියා. ඊට පස්සේ නිවාස ව්යාපෘතියක් ඇවිල්ලා දැන් සතුටින් ඉන්නවා.
අපේ පවුලේ දුක් වින්දේ මම විතරයි. ඒත් අම්මා මට මොනවාවත් දුන්නේ නැහැ. නිකම් කකා හිටිය අයට රත්තරන් බඩු එහෙමත් දුන්නා. එත් මට මොකුත් නැහැ. මෙයත් වෙලාවකට ඒක කියනවා. උඹට මොකුත් නෑ. දැන් තමයි අනාතයෙක් වගේ ඇවිල්ලා ඉන්නේ කියලා. හැම ළමයම අම්මා වටේ ඉන්නවා. අම්මා පොඩි මල්ලි එක්ක ඉන්නේ.
මම කොච්චර දුක් වින්දත් ඒ දුක මගේ ළමයින්ට එන්න ඕන නැහැ කියල මම හිතනවා. කොහොම හරි දුක් විඳලා ළමයින්ට උගන්වන්න ඕන කියන එක තමයි මගේ බලාපොරොත්තුව. මේ මතක අනුස්මරණ වැඩසටහනට සහභාගී වෙලා මගේ ජීවිත කතාව ඔයාලට කිව්වට පස්සේ මගේ ලොකු බරක් නිදහස් වුනා වගේ දැනෙනවා. හිතට සනීපයක් දැනෙනවා.
CMP/MN/MU/SIL/02
எனது அப்பாவின் பெயர் அந்தோனி மைக்கல். அம்மாவின் பெயர் அமலாதேவி எனது பெயர் கவிதா. நாங்கள் ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இருந்தோம். அதன் பிறகு இடம் பெயர்ந்து மன்னாரில் இருந்தோம். அப்போது எனக்கு 16 வயது இடம் பெயர்ந்து வந்திருக்கேக்க நான் திருமணம் செய்தேன். 2ம் தாரமாக நான் முடித்தேன். அவரின் முதல் தாரத்துக்கு 02 பிள்ளைகள் இருந்தது. அப்ப அந்த நேரம் எங்கட அம்மாவை அப்பா விட்டுட்டு போயிட்டார். நாங்கள் 07 சகோதரர்கள். எங்கட அம்மா எங்களை படிக்க வைக்கவில்லை. சரியான கஸ்ரம். நாங்கள் பாடசாலை போனா காலில் செருப்பு இல்லை, புத்தகத்திற்கு உறை இல்லை என்று அங்க அடிப்பார்கள். நாங்கள் சீமெந்து பையை உறையாக போட்டுட்டுப் போனோம்.
அம்மாவுக்கு சரியான கஸ்ரம். அப்பாவும் சரியான குடி. அதனால் அப்பா குடிச்சுப்போட்டு வந்து கத்தியால கழுத்திலே வெட்டப் போவார். அந்த நேரம் அழுகைதான் வரும். நாங்கள் 07 பேரும் கனகபுரத்தில்) ஒரே பாடசாலையில் தான் படித்தோம்.பிறகு கஸ்ரத்தின் மத்தியிலே 03ம் தரத்தோட பாடசாலையை நிப்பாட்டி விட்டு 15 ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப் போனேன். அதிலிருந்து படிக்கப் போறதில்லை.
அந்த நேரம் எனக்கு 14 வயதுதான். வேலைக்குப் போறது. கிணறு வெட்டுவதென்றால் என்னவென்று தெரியாது. ஆண்களுக்கு 180 ரூபா. பெண்களுக்கு 75 ரூபா. அந்த நேரம் ஆண்களின் சம்பளம் போன்றே எனக்குத் தருவார்கள். தொடர்ந்து என்னை வேலைக்கு கூப்பிடுவார்கள். கிணற்றுக்குள் மூலக்கப்பில் ஏறி பிக்கான் அடிக்கிறது (மண் கொழுவி அள்ளி மேலே அனுப்புறது) . கிணற்றுக்குள் கயிற்றைப் பிடித்து இறங்கி பையில் மண் அள்ளி கப்பியில் அதனை மேலே அனுப்புதல். அவ்வாறு சின்ன வயதிலே கஸ்ரப்பட்டு வாழ்ந்து வந்தேன்.
எனக்கு 16 வயதாகி விட்டது. அம்மாவுக்கு வளர்க்க முடியாத கஸ்ரத்தினால் இவரைத் தான் நீ திருமணம் செய்ய வேண்டும். இல்லாட்டி இயக்கத்துக்குப் போ என்று கூற நான் இவரை 2ம் தாரமாக திருமணம் செய்தேன். இவருக்கு 02 பிள்ளைகள். எனக்கு அப்போது 16 வயது. எப்பிடி சமைப்பது என்றே தெரியாது அப்பிடி கஸ்ரத்தில் வாழ்ந்தேன். மாமியார் குடும்பத்தில் 07 சகோதரங்கள் அவ்வளவு பேருக்கு சமைச்சுக் கொடுத்திட்டு இருந்தேன்.
நான் பிறகு மன்னாருக்கு வந்து உப்பளத்தில் வேலை செய்தேன். (1997-2006) அன்று சம்பளத்தை வாங்கியே அன்றாட சீவியத்தை கொண்டு நடத்தினேன். திரும்ப காதிலுள்ள தோட்டைக் கழற்றி விற்று சாப்பாட்டை கவனித்தோம்.
அப்பிடி கல்யாணம் முடித்து 1 மாதத்திற்கு பின்னர் அவர் ஒரே அடியும் ஆக்கினையும் . இவர் சரியான குடி குடிச்சுப்போட்டு அடியும் ஆக்கினையும் அப்பிடி ஒரு கஸ்ரத்தில் வாழ்ந்து வந்தேன். இப்ப இங்க வந்து இருந்தும் குடிச்சுப் போட்டு வீட்டைச் சுற்றி திரத்தி அடிப்பார். பிள்ளைகளால எனக்கு நிம்மதி இல்லை.
இவற்றின் ஆக்கினை தாங்க முடியாது. நான் கொழும்புக்கு போய் அங்க வீட்டு வேலை செய்தேன்.இவர் வந்து பொலீஸிடம் சொல்லி பிறகு பொலிஸ் அங்க அறிவித்து நான் இங்க வந்து இப்ப குடியை விட்டு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றோம்.
எனக்கு 03 பிள்ளைகள். அவருடைய முதல் தாரத்திற்கு 02 பிள்ளைகள். மொத்தம் 05 பேர். 02 பேர் கல்யாணம் செய்திட்டாங்க . 02 பேர் படிக்கிறார்கள். மகள் வீட்ட இருக்கின்றாள். படிக்கவில்லை. நான் கஸ்ரத்தில் மகளை கொஸ்ரலில் விட்டுட்டு வெளிநாடு போனேன். கணவர் கொஸ்ரலை விட்டு நிப்பாட்டி விட்டார். நாள் வெளிநாட்டில் 02 வருடம் இருந்தேன். உழைத்து பணத்தை இங்கே அனுப்பியும் ஒரே குடி. எந்தப் பணமும் இப்ப இல்லை. 2007 ம் ஆண்டு இடம்பெயர்வு காரணமாக முள்ளிக்குளத்தில் இருந்தோம். நாங்கள் ஒரு குடும்பம் தான் முள்ளிக்குளத்தில் இருக்கின்றோம் என்பதால் புதுக்குடியிருப்பு (சவேரியார்புரத்தில்) இருந்தோம். அதுக்குப் பிறகு வீட்டுத்திட்டம் தந்து இப்போது சந்தோசமாக வாழ்ந்து வருகின்றோம்.
எங்கட குடும்பத்தில கஸ்ரப்பட்டது நான் மட்டும் தான். ஆனால் அம்மா எனக்கு ஒன்றுமே தரவில்லை சும்மா இருந்து சாப்பிட்ட பிள்ளைகளுக்கு நகை காசு எல்லாம் குடுத்தார்கள். ஆனால் எனக்கு ஒன்றுமே இல்லை. இவரும் அதை சில வேளைகளில் சொல்லிக்காட்டுவார். உனக்கு ஒன்றுமே இல்லை என்று இப்ப நான் இங்க அநாதை மாதிரி வந்து இருக்கின்றேன்.எல்லாப் பிள்ளைகளும் அம்மாவோட சுற்றி இருக்கிறார்கள். அம்மா கடைசித் தம்பியோடதான் இருக்கின்றார்.
நாங்கள் எப்பிடி கஸ்ரப்பட்டமோ அதே கஸ்ரம் என்ர பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்று நான் யோசிக்கின்றேன். பிள்ளைகளை எப்பிடிக் கஸ்ரப்பட்டாவது படிப்பிக்க வேண்டும் என்றுதான் என்னுடைய எதிர்பார்ப்புக்கள் ஆகும். இந்த நினைவலைகள் திட்டத்தின் கீழ் என் வாழ்க்கை வரலாற்றினை என் துன்பங்களை கவலைகளை உங்களிடம் சொல்லியதால் பெரிய பாரம் குறைந்த மாதிரி இருக்கின்றது. மனம் குளிர்ச்சியாக இருக்கின்றது.