My past

Life history of an elder woman


මගේ අතීතය

වැඩිහිටි කාන්තාවකගේ ජීවිත ඉතිහාසය


என் கடந்த காலம்

வயோதிப பெண்ணொருவரின் வாழ்க்கை பற்றியது



CMP/MN/MW/KUM/01

Kumanayangkulam
Age 77
If I were to tell about my life, I lost my mother when I was eight. I had Epilepsy disease. Though we have consulted many traditional doctors, it was not cured. There was a traditional doctor in Vaakkuppaddaangkandal. My father took me there. That time most of the lands of this village belonged to my father. They pulled a nerve and burnt it to cure me from Epilepsy. All together I got burnt like that for seven times. On the last time I got blisters. After that I didn’t get those fits.
Then I joined St.Johns Collage. At that time we had to pay Rs 40 for the hostel. They give us beef but I don’t eat it. I would give that to the boy next to me and eat only with the gravy. Then gradually I grew accustomed to eat it. After sometime I studied in Adamban. During that time there was a holy father.
He was a white man. He was one of those people who ran the hostel. I stayed with him and studied. After completing A/L, everyone who studied with me started doing office work. They now get their pensions. They say official works are like slavery.
My father had a lot of lands, goats and cattle. I did agriculture, rearing the cows and milk them. My father became ill. I had three sisters. I started thinking about my marriage only after getting them all married.
After long time I was ill with TP. I went to Mannar to take an x-ray. There they said this disease is related to heart disease. Now I am off from that disease but it would come back after five years. They advised me to eat well and I did so. After two years there was a fat block in the tube that goes to the lungs. They took me to Mannar. I was admitted in the Mannar hospital for three days. After that they asked me to go for regular clinic for checkup.
We got displaced and went to Madu. Later from Madu we went and stayed in Thatchanamadu for about 15 days. After some days we came back to our own village. We stayed in our houses. Then after 9 months we went to Paaliyaru. I had a daughter; she cooks meals for the Movement. She refused to come back to the village. One day we heard from the Movement’s news channel that my daughter was dead. Still I prayed and pleaded to God, not wanting to believe the news. Then a person I knew confirmed me that my daughter was actually dead and he had seen her. I was very sad. They gave Rs 50,000. But we didn’t take it since she died while being in the Movement.
We stayed in Paliyaaru for about six months. From there we got displaced to Kilinochchi. Later we went to Mullaitheevu. Army had surrounded us. We made bunkers and stayed inside. We went to our native place with our family. The living cost had increased due to the displacement. Many of my belongings and assets got damaged.
In the year 1957 there was a huge flood because the Kaddukkarai Pond got damaged. All the paddy fields got damaged. People should live in harmony and peace. Discrimination based on ethnicity and villages should be eliminated. Only a person who is ready to give up something for others can get progressed in life.


CMP/MN/MW/KUM/01
කුමානයන්කුළම්
වයස 77. මගේ ජීවිතේ ඉතිහාසය ගැන කියනව නම් මගේ අම්මා මට වයස 08 දී නැතිවුනා. මට මීමැස්මොරය තිබුනා. මට ඒ අසනීපෙට කොයිතරම් වෙද මහත්තුරු ළඟට ගිහින් බැලුවත් හරි ගියේ නැහැ. පාර්කුප්පට්ටාන්කණ්ඩල් වල වෙදමහත්තයෙක් හිටියා. එයා ළඟට තාත්තා මාව එක්ක ගියා. ඒ කාළේ ගමේ තිබ්බ ඉඩම් වලින් වැඩි කොටසක් අපේ තාත්තාගේ. මීමැස්මොරයට මගේ නහරයක් ඇදලා පුච්චලා බැලුවා. හත් පොළකින් පිච්චුවා. අන්තිම පාර පුච්චනකොට මට දිය බුබුළු ආවා. ඊට පස්සේ මට මීමැස් මොරය හැදුනේ නැහැ.
ඊට පස්සේ සෙන් ජෝන්ස්වල ඉගෙන ගන්න ගියා. ඒ කාළේ හොස්ටල් එකට රුපියල් 40/= ක් ගෙවන්න ඕන. හරක් මස් දෙනවා එත් මම කන්නේ නැහැ. ළඟ ඉන්න කොල්ලගේ පිඟානට දාලා මම හොදිත් එක්ක බත් කෑවා. පස්සේ ටික ටික කාලා පුරුදුවුනා. ටික කාලෙකට පස්සේ අඩම්පන්වලදී ඉගෙන ගත්තා. ඒ කාළේ මීසම් ෆාදර් කෙනෙක් හිටියා. එයා ‍සුද්දෙක්. එයාට එකතුවෙලා හොස්ටල් එක පවත්වාගෙන ගියා. මම එයත් එක්ක ඉඳගෙන ඉගෙන ගත්තා. ඒ ලෙවෙල් ඉගෙන ඉවරවුන ගමන් මාත් එක්ක ඉගෙන ගත්ත ඔක්කොම රස්සාවල්වලට ගියා. දැන් පෙන්ෂනුත් ගන්නවා. රස්සාවල්වට ගියාම පල්ලෙහා තනතුරු කියලා කියනවා.
තාත්තට ගොඩක් ඉඩම්, හරක්, එළුවෝ එහෙ‍ම හිටියා. මම හරක් බලාගන්න එක, කිරිදොවන එක, ගොවිතැන් කරනඑක වගේ දේවල් කරගෙන හිටියා. තාත්තටත් බැරුව ගියා. මට සහෝදරි‍යෝ තුන් දෙනෙ‍ක් ඉන්නවා. ඒ ගොල්ලෝ තුන් දෙනාම බන්දලා දුන්නට පස්සේ තමයි මට බඳින්න ඕන කියලා අදහසක් ආවේ.
ගොඩක් කාළෙකට පස්සේ මට ටී බී උණ හැදුනා. මන්නාරමට ගිහින් එක්ස් රේ අරන් බැලුවා. එත‍කොට මේ අසනීපේ පපුවේ අමාරුවක් එක්ක සම්බන්ධයි කියලා කිව්වා. දැන් ඒ අසනීපේ නැහැ. ඒ වුනත් අවුරුදු 05 කට පස්සේ එනවා. හොඳට කන්න ඕන කියලා මට උපදෙස් දුන්නා. මම හොඳට කෑවා. පස්සේ අවුරුදු දෙකකට පස්සේ ශ්වසනාලෙට යන නහරයක මේද තැම්පත් වුනා. මන්නාරමට ගෙනිච්චා. මම මන්නාරමේ ඉස්පිරිතාලේ දවස් තුනක් හිටියා. පස්සේ ක්ලිනික් දාලා දුන්නා.
අපි අවතැන් වෙලා මඩුවලට ගියා. පස්සේ මඩුවල ඉඳලා තච්චනාමඩුවල දවස් 15 ක් හිටියා. ටික දවසකට පස්සේ අපේ ගමට ආවා. අපේ ගෙවල්වල හිටියා. ආයෙත් මාස නවයකට පස්සේ පාළිආරුවලට ගියා. මගේ දුවෙක් හිටියා. එයා සංවිධානයට කෑම උයලා දෙන කෙනෙක්. එයා ආයේ ගමට එන්නේ නැහැ කියලා කිව්වා. සංවිධානේ ප්‍රවෘත්තිවල දවසක් කිව්වා එයා මැරුණා කියලා. ඒත් මට විශ්වාස නැහැ.දෙවියන්ට යාඥා කළා. මම දන්නා කෙනෙක් දුව ඇත්තටම දැක්කා මැරිලා කියලා සහතිකේටම කිව්වා. මම ගොඩක් දුක් වුනා. රුපියල් 50000/= ක් දුන්නා. සංවිධානෙදි මැරුණ නිසා අපි ගත්තේ නැහැ.
මාස හයක් විතර පාළිආරුවල හිටියා. එහෙන් අවතැන් වෙලා කිළිනොච්චියට ගියා. ආයෙත් මුලතිව් වලට ගියා. හතර පැත්තෙම ආමි. අපි බංකර් ගහගෙන ඒක ඇතුළට වෙලා හිටියා. අපේ පවුලේ අයත් එක්ක ගමට ගියා. අවතැන්වුන නිසා ජීවන වියදම ගොඩක් වැඩිවුනා. ගොඩක් බඩු භාණ්ඩ, දේපළ හානිවුනා.
1957 දී කට්ටුක්කරෙයිකුලම් යටකරගෙන මහ ගංවතුරක් ආවා. කුඹුරු වතුපිටි ඔක්කොටම හානි වුනා. හැමෝම සහයෝගයෙන්, සමාදානයෙන් ජීවත් වෙන්න ඕන. ජාතිභේද ගම් අතර භේද නැති කරන්න ඕන. අනිත් එක්කනාටත් තැන දීලා ජීවත්වෙන එක්කනාට ජීවිතයේ ඉස්සරහට යන්න පුලුවන්.


CMP/MN/MW/KUM/01
குமானயங்குளம்
வயது-77
நான் எனது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கூறுவதனால் எனது அம்மாவை நான் 8 வயதிலேயே இழந்தேன். எனக்கு காக்காவலிப்பு நோய் இருந்தது. எனக்கு அந்த வருத்தத்திற்கு எத்தனையோ பரியாரியிடம் சென்று பார்த்தும் சரிவரவில்லை வாக்குப்பட்டாங்கண்டலில் ஒரு பரியாரி இருந்தார். அவரிடம் அப்பா என்னை அழைத்துச் சென்றார். அந்த வேளை இந்த ஊரிலே பெருமளவு காணி எனது அப்பாவினுடையது. காக்காவலிப்புக்கு நரம்பை இழுத்து சுட்டுப் பார்த்தனர். மொத்தமாக 7 சூடு சுட்டனர். கடைசியாக சுட்டபோது எனக்கு பொக்களித்து விட்டது. அதற்குப் பிறகு எனக்கு காக்காவலிப்பு வரேல.
பிறகு சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்கச் சென்றேன். அப்போது கொஸ்ரலுக்கு ரூபா 40 கட்ட வேண்டும். மாட்டிறைச்சி தருவாங்க ஆனால் நான் சாப்பிடுவதில்லை. பக்கத்திலுள்ள பையனுக்கு அள்ளிக் கொடுத்து விட்டு வெறும் சொதியுடனே சாப்பிடுவேன். பிறகு படிப்படியாக சாப்பிட்டுப் பழகினேன். சிறிது காலத்தின் பின்னர் அடம்பன் இல் கல்வி கற்றேன். அக்காலத்தில் பங்குத் தந்தை ஒருவர் இருந்தார்.
.அவர் வெள்ளைக்கார பங்குத்தந்தை அவரும் சேர்ந்தே கொஸ்ரல் நடத்தினார் நான் அவருடன் நின்று படித்தேன். A/L படித்து முடித்தவுடன் என்னோடு படித்தவர்கள் எல்லோரும் உத்தியோகத்திற்கு சென்றார்கள். இப்ப பென்சனும் எடுக்கிறாங்க. உத்தியோகத்திற்கு போனா அடிமைத் தொழில் என்று சொல்வாங்க
அப்பாவிடம் நிறைய காணி ஆடு மாடு என்பன இருந்தன. மாடு மேய்த்தல், பால் கறத்தல், விவசாயம் என்பவற்றை வேலையாக செய்து வந்தேன். அப்பாவுக்கும் இயலாது போய்விட்டது. எனக்கு 3 சகோதரர்கள் (பெண்) இருந்தார்கள். அவர்கள் 3 பேருக்கும் திருமணம் செய்த பிறகுதான் எனக்கு திருமணம் என்ற யோசனையே தோன்றியது.
கனகாலத்தின் பின்னர் எனக்கு TP வருத்தம் வந்தது. மன்னாருக்குச் சென்று படம் எடுத்துப் பார்த்தேன். அப்போது இந்த நோய் இதய நோயோடு சம்பந்தப்பட்டது என்று கூறினார்கள். இப்ப இந்த வருத்தம் இல்லாது போய் விட்டது. இருந்தாலும் 5 வருடங்களுக்குப் பிறகு தொடரும். நல்லா சாப்பிட வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள் நான் நன்றாக சாப்பிட்டேன். பின்பு 02 வருடங்களுக்கு பிறகு சுவாசப்பைக்கு போற குழாயில் கொழுப்பு அடைத்தது. மன்னாருக்கு கொண்டு சென்றார்கள். மன்னார் வைத்தியசாலையில் 3 நாட்கள் இருந்தேன். பின் கிளினிக் போட்டுத் தந்தார்கள்.
நாங்கள் இடம்பெயர்ந்து மடுவுக்குச் சென்றோம். பின்பு மடுவில் இருந்து தட்சினாமடுவில் ஓர் 15 நாட்கள் இருந்தோம். சிறிது நாட்களின் பின்னர் எமது சொந்தக் கிராமத்திற்கு வந்தோம். எமது வீடுகளில் இருந்தோம். மீண்டும் 9 மாதங்களின் பின்னர் பாலியாறு சென்றோம். எனது மகள் ஒருவர் இருந்தார் அவர் இயக்கத்துக்கு சாப்பாடு சமைத்து கொடுக்கிறவர். அவர் திரும்பவும் ஊருக்கு வர மாட்டன் என்று சொன்னாள். இயக்க செய்தியில் ஒரு நாள் மகள் இறந்து விட்டதாக செய்தி வந்தது. இருந்தும் எனக்கு நம்பிக்கை இல்லாது கடவுளை மன்றாடினேன். எனக்கு தெரிந்த ஒருவரே மகளை உண்மையாக நான் கண்டேன் இறந்து விட்டார் என்று உறுதியாகக் கூறினார். மிகவும் கவலை அடைந்தேன். காசு 50 ஆயிரம் எண்டு கொடுத்தாங்க. நாங்க இயக்கதில செத்ததால எடுக்கேல
சுமார் 6 மாதங்கள் பாலியாற்றில் இருந்தோம். அங்கிருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தோம். பின்னர் முல்லைத்தீவுக்கு சென்றோம். நான்கு பக்கமும் சுற்றி ஆமி . நாங்கள் பங்கர் அடித்து அதற்குள்ளேயே இருந்தோம். எனது குடும்பத்தாருடன் ஊருக்குச் சென்றோம். இடப்பெயர்வின் காரணமாக வாழ்க்கைச்செலவு அதிகரித்து விட்டது. நிறைய பொருட்கள் சொத்துக்கள் சேதமடைந்தன.
1957ம் ஆண்டு கட்டுக்கரைக்குளம் அழித்து பெருவெள்ளம் வந்தது வயல் வெளிகள் எல்லாம் பாதிக்கப்பட்டது. மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும். இன பாகுபாடு, ஊர்ப்பாகுபாடு என்பவை அகற்றப்பட வேண்டும் எவன் ஒருவன் விட்டுக்கொடுத்து வாழ்கின்றானோ அவனே வாழ்க்கையில் முன்னேற முடியும்.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License