We moved to Pandivirichan

Experiential sharing on war life


අපි පන්දිවිචිචන් වලට ගියා

යුධ ජීවිතයේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම


நாங்கள் பண்டிவிரிச்சனுக்கு சென்றோம்

போர் வாழ்க்கை தொடர்பான பகிர்வு



CMP/MN/MW/PM/02
My parents were born and grew up in Vidathaltheevu. Due to lack of space we were settled in Periyamadu in the year 1951. Our houses were made of tin sheets at that time. The houses were far apart, two acer of land would have only one house.
We had a school in our village. It offered lessons for up to Grade 5. It had only one teacher; there was no school for students above Grade 5. Initially only three students were there in the school. When people started settling in the village the school started to offer lessons for up to O/L. We went to Vidathaltheevu for A/L lessons. I sat for A/L exam there. Those who studied there are now working as doctors and teachers.
When things were such we got affected by storm and all the houses got damaged. At that time a baby who was sleeping inside a cradle in a tin sheet hut got blown away and hanged on a tree with the cradle. We took the baby and came. Nothing was there. They gave us food from a helicopter. By staying inside the mosque people got diseases. So many people got affected and returned to Vidaththaltheevu.
Later they gave us a house, gave trees. We raised poultry and cattle, did farming. Likewise gradually the country got developed in education and other things. Transport is difficult, other than that there are no other issues.
When things were such the Movements evolved. We helped for all the Movements. Whether they ask for a goat or a hen, we gave anything they wanted and looked after them well.
We never thought that they would ask us to leave our houses. They told us to lock the houses, and come taking the key and meals enough only for three times. We took only that. Didn’t take anything else. We left everything as it is thinking that we would return. They chased us out, threatening that if we don’t leave soon we would be cut with a knife. We asked them to take us to our destination and they agreed to take us till Poonthoattam. They asked us to pay Rs500 for each, which would have cost us Rs4500 for 9 people. We couldn’t get that money immediately so we gave our jewelries.
I gave a pot to my son and asked him to fetch some water. He was chased away saying no water can be given to him. We all started to cry and went to the mosque and prayed through tears. One Tamil lady cried hard and died due to the sorrow. We went there and got labled as ‘refugees’. Whether we received pittu or soap, they were named as refugee pittu, refugee soap. Everything is about refugee.
We lived there for 24 years. Till the children complete their studies and got married. We came back here in 2010. The house is no more. Everything looked like forest. We stayed in the mosque and cleared the lands and identified the house. Government gave us tin sheets. We built a temporary house with that and stayed there, only now we built the house. Those who didn’t have paths got them; those who didn’t have drinking water also got them. Small huts became large concrete houses. Everything got progressed well.
Now we have troubles from elephants. Cannot do any plantation. They would destroy the plants during the nights. We are living in fear of these elephants.
We got displaced and went to Poonthoattam from Pandivirichan. There small children couldn’t get drinking water. When we seek for hot water to make milk for them, we couldn’t get because people were told not to give water to the Muslims. Two died in this situation. It was raining hard; we would take small breaks resting in cattle sheds and reached Vavuniya. We didn’t have money in hands so we used the jewelries. People there gave us food, and then we went to Puthalam. Puthalam people also didn’t accept us in the beginning, later they allowed us to stay in the school for three days and provided food. Then we stayed in a place for rent. Children couldn’t study. They go to study in the evening, still, it’s the students from Mannar who got good results. Puthalam people got jealous about this. We stayed in Puthalam for 24 years.
I got seven children. Except for one son all the others got married. The other son got ill due to Malaria; he is 35 years old and stays at home. We all lived in harmony without any discrimination based on ethnicity. Tamil people here didn’t like us coming here from Puthalam. But we came here to live together in harmony.
In future people should live together without any discrimination as Tamils and Muslims. Though there are different religions, people can be divided only in two groups as men and women. We all are same; it is us who divide as Tamils and Muslims. We shouldn’t be doing that, but live together in harmony.



CMP/MN/MW/PM/02
අපේ අම්මයි, තාත්තයි විඩත්තල්තීව්වල තමයි ජීවත් වු‍නේ. ඉඩම බැලුවොත් අපිව 51 අවුරුද්දේ තමයි මඩුවල පදිංචි කරලා එතකොට ටකරන් ගෙවල් තමයි තිබුනේ. අක්කර දෙකකට එක ගෙයක් ගානේ දුරින් දුරින් තිබුනේ.
අපේ ගමේ එක ඉස්කෝලයක් තිබුනා. එකේ 5 වසර වෙනකම් තිබුනා. එක ගුරුවරයයි. 5 වසරෙන් ඉහළට පංති නැහැ. මුල දී ඉස්කෝලේ ඉගෙන ගත්තේ ළමයි තුන් දෙනයි. ගමේ පදිංචි වෙන කොට, පදිංචි වෙන කොට ඉස්කෝලේ සාමාන්‍ය පෙළ දක්වා පංති තිබුනා. ඕ ලෙවෙල් ඉවර වෙලා ඒ ලෙවෙල් ඉගෙන ගන්න විඩත්තල්තීව් වලට ගියා. එහෙ ඉගෙන ගත්ත අය තමයි වෛද්‍යවරු, ගුරු‍වරු වෙලා තනතුරුවල ඉන්නේ.
එහෙම ඉන්නකොට සුළි සුළඟක් ඇවිත් ගෙවල් ඔක්කොම කඩාගෙන ගියා. එතකොට ටකරං ගෙයක තොටිල්ලක නිදාගෙන හිටපු ළමයෙක් තොටිල්ලත් එක්කම ගහක එල්ලිලා තිබුනා. අපි ඒ ළමයව අරගෙන ආවා. මුකුත් වෙලා නැහැ. හෙළි‍කොප්ටරෙන් ඇවිල්ලා අපට කෑම දුන්නා. පල්ලියේ නැවතිලා ඉඳලා මිනිස්සුන්ට ලෙඩත් ආවා. කට්ටියට බෝවෙනකොට කට්ටිය විඩත්තල්තීවී වලට ගියා.
පස්සේ අපිට ගෙයක් දුන්නා. පැළ දුන්නා. එළුවෝ, හරක් දුන්නා. ගොවිතැන් කළා. මේ විදියට ටිකෙන් ටික රට දියුණු වෙලා ආවා. ගමනා ගමනය තමයි අමාරු. ඒ ‍ඇරෙන්න වෙන කිසිම ප්‍රශ්නයක් නෑ.
එහෙම ඉන්නකොට සංවිධානවලින් ආවා. හැම සංවිධානයටම අපි උදව් කළා. එළුවෝ ඉල්ලුවත්, කුකුළෝ ඉල්ලුවත් මොනවා ඉල්ලුවත් දීලා හොඳට හිටියා.
ගෙවල් අතහැරලා යන්න කියයි කියලා අන්තිම වෙනකම්ම දන්නේ නැහැ. ඒ ගොල්ලෝ කිව්වා ගේ යතුර දාලා යතුර අරගෙන තුන්වේලට කෑමත් අරගෙන එන්න කියලා. අපි ඒක විතරක් අරගෙන ගියා. කිසිම දෙයක් අරගෙන ගියේ නැහැ. අපි ආයෙත් එනවානේ කියලා හැම දේම එහෙම එහෙම අතහැරලා දාලා ගියේ. එතන ඉඳන් පළයල්ලා කියලා එළවලා දැම්මා. එහෙම ගියේ නැත්නම් ඔයගොල්ලන්ව මරයි, ඉක්මනට යන්න කිව්වා. අපිව ගිහින් දාන්න කිව්වහම පුන්තෝට්ටම් වලට ගිහිල්ල දාන්නම් කියලා කැමති වුනා. එක්කෙනෙකුට රුපියල් 500 ක් දෙන්න කිව්වා. එක්කෙනෙකුට 500 ගානේ 9 දෙනෙකුට 4500 ක්. හදිස්සියට ගන්න බැහැ. අතේ සල්ලි තිබුනේ නැහැ. රත්ත්‍රන් බඩු තමයි දුන්නේ. මම මගේ පුතාට පොඩි කළයක් දීලා වතුර අරන් එන්න කියලා කිව්වහම මෙහෙ උඹලට වතුර නැහැ. පළයල්ලා කියලා එළවලා දැම්මා. පස්සේ එහෙමම අඬාගෙන ගිහිල්ලා පල්ලියට කිව්වා. ‍එතනැදී එක දෙමළ ගෑණු කෙනෙක් දුකට අඬලා මැරුණා. එහෙ ගිහිල්ලා සරණාගතයෝ කියන නම වැටුනා. එහෙදී පිට්ටු දුන්නත්. අනාථ පිට්ටු. සබන් දුන්නත් අනාථ සබන්. ඔක්කොම අනාථ.
අවුරුදු 24 ක් ජීවත් වුනා. ළමයි ඉගෙනගෙන කසාද බඳිනකම්ම එහෙ හිටියා. එහෙ ඉඳලා 2010 දී මෙහෙට ආවා. ගෙවල් නැහැ. ඔක්කොම කැළෑවට යටවෙලා. පල්ලියේ ඉඳලා ඉඩම් සුද්ද කරගෙන ගෙවල් අඳුරගත්ත. පස්සේ ආණ්ඩුවෙන් ටකරං දුන්නා. ඒකෙන් ගෙවල් හදාගෙන හිටියා. දැන් තමයි ගෙවල් හදාගෙන ඉන්නේ. පාරවල් නැති අයට පාරවල් හදලා දුන්නා. බොන්න වතුර නැති අයට වතුර හම්බවුනා. කූඩාරම් ගහගෙන හිටිය ඔක්කොම ස්ථිර ගෙවල් වුනා. දැන් හොඳ දියුණුවක් තියෙනවා.
දැන් අලි කරදරේ. කිසිම වගාවක් කරන්න බැහැ. රෑට රෑට ඇවිල්ලා ඔක්කොම විනාශ කරනවා. ඒ විදියට අලියට බයේ ජීවත් වෙනවා.
අපි ‍අවතැන් වෙලා පණ්ඩිවිරිච්චාන්වල ඉඳලා පූන්තෝට්ටම් වලට ගියා. එහේ පොඩි පොඩි ළමයින්ට බොන්න වතුර නැහැ. එහෙ ළමයින්ට කිරි හදන්න උණුවතුර ගේන්න ගියාම මුස්ලිම් අයට දෙන්න එපා කියලා නීතියක් තිබුනා. එහෙදි දෙන්නෙක් මැරුණා. හොඳටම වහිනවා. හරක් මඩුවක ඉඳලා පස්සේ වවුනියාවට ගියා. අතේ සල්ලි නැහැ. රත්ත්‍රන් බඩු තමයි දුන්නේ. ඒ ගොල්ලෝ කෑම දුන්නා. පුත්තලමට ගියා. පුත්තලමේ අයත් අපිව බාරගත්තේ නැහැ. පස්සේ එයි කියලා ඉස්කෝලේක ඉන්න දුන්නා. දවස් තුනක් ඉන්න දීලා කෑම දුන්නා. ඊට පස්සේ ඉන්න තැනක් ඕන කියලා කුළියට හිටියා. ළමයිට ඉගෙනීමක් නැහැ. හවසට තමයි ඉගෙන ගන්න යන්නේ. එහෙම ඉඳලත් මන්නාරමේ ළමයින්ගේ ප්‍රතිඵල හොඳයි. ඒ නිසා පුත්තලමේ අය ඉරිසියයි. පුත්තලමට ගිහිල්ලා අවුරුදු 24 ක් හිටියා.
මට ළමයි 7 දෙනයි. එක පුතෙක් හැර ඔක්කොම විවාහ වුනා. අනිත් පුතාට මැලේරියා උණ ඇවිත් සනීප නැහැ. වයස 35 යි. ගෙදර තමයි ඉන්නේ. හැමෝම ජාති ආගම් භේදයක් නැතිව සහයෝගයෙන් ජීවත් වුනා. අපි පුත්තලමේ ඉඳන් මෙහෙ ආවට දෙමළ අය වැඩිය කැමති නැහැ. ඒත් අපි සහයෝගයෙන් ජීවත් වෙන්න තමයි ආවේ.
අනාගතයේ දී දෙමළ මුස්ලිම් කියලා භේදයක් නැතිව එකම ජාතියේ මිනිස්සු හැටියට ජීවත් වෙන්න ඕන. ආගම වෙනස් වුනත් ජාතිය එකයි. පිරිමි ජාතිය, ගැහැණු ජාතිය හැමෝම එකම මිනිස්සු. අපි තමයි දෙමළ මුස්ලිම් කියලා වෙන්වෙලා ජීවත් වෙන්නේ. එහෙම නැතිව අපි සහයෝගයෙන් ජීවත් වෙන්න ඕන.


CMP/MN/MW/PM/02
எங்கட அப்பா அம்மா விடத்தத்தீவிலேதான் பிறந்து வளர்ந்தார்கள். இடம் பத்தாததால எங்கள 51ம் ஆண்டு தான் பெரிய மடுவில குடியேற்றி அப்போது தகர வீடுதான் இருந்த. 2 ஏக்கருக்கு 1 வீடு என்று தூரத் தூர இருந்தோம்.
எங்கட ஊரில் ஒரு பாடசாலை இருந்தது. அதில் 5ம் தரம் வரை இருந்தது. ஒரு ஆசிரியர் தான். 5ம் ஆண்டுக்கு மேலே பாடசாலை இல்லை. அப்போது ஆரம்பத்தில் 3 பிள்ளைகள் தான் பாடசாலையில் படித்தார்கள். ஊரில் மக்கள் குடியேறக் குடியேற பாடசாலையில் O/L வரை வகுப்பு வந்தது. O/L படித்து A/L படிக்க விடத்தத்தீவுக்குப் போனோம். அங்க போய் A/L பரீட்சை எழுதினேன். அங்கு படித்தவர்கள் தான் இப்போது வைத்தியர், ஆசிரியர் அப்பிடி உத்தியோகத்தில் இருக்கின்றார்கள்.
அப்பிடி இருக்கேக்க புயல் வந்து வீடு எல்லாம் அழிந்து விட்டது. அந்த நேரம் தகரக்கொட்டிலுக்குள் தொட்டிலில் தூங்கிய பிள்ளை தொட்டிலுடன் மரத்தில் தொங்கி இருந்தது. பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்தோம். ஒன்றுமேயில்ல. எஉறலிகொப்டராலதான் எங்களுக்கு சாப்பாடு தந்தாங்க பள்ளிவாசல்ல இருந்து மக்களுக்கு நோய் வந்தது. கனபேர் பாதிக்கப்பட்டு வந்த மாதிரி திருப்பி விடத்தல் தீவிற்கே போயிட்டாங்க
பிறகு எங்களுக்கு ஒரு வீடு தந்தார்கள். மரங்கள் தந்தார்கள். ஆடு, மாடு வளர்த்தார்கள். விவசாயம் செய்தார்கள்.இப்படி படிப்படியாக படிப்பு எல்லாவற்றிலும் நாடு முன்னேற்றமடைந்து வந்தது போக்குவரத்துத்தான் கஸ்ரம். மற்றும்படி எந்த பிரச்சினையும் இல்லை.
அப்படியிருக்கேக்க இயக்கங்கள் வந்திட்டுது.. எல்லா இயக்கத்துக்கும் நாங்கள் உதவி செய்தோம். ஆடு கேட்டாலென்ன கோழி கேட்டாலென்ன என்ன கேட்டாலும் கொடுத்து நல்லா வச்சிருந்தாங்க
வீட்ட விட்டு போகச் சொல்லுவாங்க என்டு கடைசிவரைக்கும் தெரியாது. அவங்க சொன்னது வீட்ட பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு 3 நேர உணவு மட்டும் கொண்டு வாங்க என்டாங்க. நாங்க அது மட்டும் கொண்டு போனோம். ஒண்டுமே கொண்டு போகேல்ல. திருப்பி வாரதுதானே என்று எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு போனோம் அங்கயிருந்து போங்க என்டு துரத்தி விட்டாங்க. அப்படி போகாட்டி உங்களை வெட்டப் போறாங்க சீக்கிரம் போங்க நாங்க எங்கள கொண்டு போய் விடுங்க என்று கேட்க பூந்தோட்டத்திற்கு கொண்டு போய் விடுறம் என்று ஏற்றுக் கொண்டாங்க. ஒரு ஆளுக்கு 500 ரூபா கேட்டாங்க. ஒருவருக்கு 500 ரூபாய் படி 9 பேருக்கு 4500 ரூபாய் உடனே எடுக்க ஏலாது. கையில காசில்ல நகையைத்தான் கொடுத்தோம்
நான் எனது மகனிடம் குடம் ஒன்றைக் கொடுத்து தண்ணீர் எடுத்திட்டு வா என்று அனுப்ப இங்க உங்களுக்கு தண்ணீர் இல்லை.ஓடுங்கடா என்று துரத்தி விட்டார்கள். பிறகு அப்பிடியே அழுத படியே பள்ளிவாசலில் போய் அழுதழுது துவா செய்தோம். இதிலே ஒரு தமிழ் பொம்பிள்ளை கவலையிலேயே அழுது இறந்து விட்டார். அங்க போய் அகதிகள் என்ற பெயரைப் பெற்றோம். அங்கு பிட்டு தந்தாலும் அகதிப்பிட்டு சவர்க்காரம் தந்தாலும் அகதி சவர்க்காரம். எல்லாமே அகதி
24 வருசம் வாழ்ந்தோம் பிள்ளைகள் படித்து கல்யாணம் முடிக்கும் மட்டும் அங்கேயே வாழ்ந்தோம். அங்க இருந்து 2010 ம் ஆண்டு இங்கு வந்தோம். வீடு இல்லை.எல்லாம் காடாகக் காணப்பட்டது. பள்ளிவாசலில் இருந்திட்டு காணியை துப்பரவாக்கி வீட்டை அடையாளம் கண்டோம். பிறகு அரசாங்கம் தகரம் தந்தது. அதனால் வீடு அமைத்து இருந்தோம். இப்பதான் வீடு கட்டி இருக்கின்றோம். பாதை இல்லாத ஆக்களுக்கு பாதை வந்து விட்டது. குடிக்க தண்ணீர் இல்லாத ஆக்களுக்கு தண்ணீர் வந்து விட்டது. மற்றது கொட்டில குடிசைகள் எல்லாம் பெரிய கல்வீடாக மாற்றப்பட்டுள்ளது. இப்ப நல்ல முன்னேற்றமா இருக்குது
இப்போது யானைத்தொல்லை. எந்தப் பயிரும் வைக்க முடியாது. இரவிரவாக வந்து அழித்து விடும். அப்பிடி யானைக்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருந்தோம்.
நாங்கள் இடம்பெயர்ந்து பண்டிவிரிச்சானால் பூந்தோட்டத்திற்குப் போனோம். அங்கு சின்னச் சின்ன பிள்ளைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அங்கு குழந்தைகளுக்கு பால் கரைக்க சுடுதண்ணீருக்குப் போனால் முஸ்லீம்களுக்கு குடுக்கக்கூடாது என்று கட்டளை. அதிலே 02 பேர் இறந்து விட்டனர். நல்ல மழையும் மாட்டுக்கொட்டில அப்படியே நின்டு நின்டுதான் பிறகு வவுனியாவுக்குப் போனோம். கையில காசில்ல நகையைத்தான் கொடுத்தோம அங்குள்ளவங்க சாப்பாடு தந்தாங்க புத்தளத்திற்கு போனோம் புத்தளத்து மக்களும் எங்கள ஏற்றுக் கொள்ளேல பிறகு சொல்லி ஸ்கூலில தங்க வைச்சாங்க 3 நாள் தங்க வைச்சி சாப்பாடு தந்தாங்க அதற்கு பிறகு இருக்க இடம் வேண்டுமெண்டு சொல்லி வாடகைக்கு இருந்தோம். பிள்ளைகளுக்கு படிப்புமில்ல. பின்னேரத்திலதான் படிக்க போற அப்படியிருந்தும் மன்னார் பிள்ளைகளுக்குதான் நல்ல ரிசால்ட். அதனால புத்தளம் ஆட்களுக்கு பொறாமையும் கூட புத்தளத்திற்குப் போய் 24 வருடங்கள் இருந்தோம்.
எனக்கு 7 பிள்ளைகள். ஒரு மகனத் தவிர எல்லோரும் திருமணம் செய்து விட்டார்கள். மற்ற மகனுக்கு மலேரியா காய்ச்சல் வந்து வருத்தம் 35 வயது வீட்டிலதான் இருக்கிறார். எல்லோரும் இன மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். நாங்கள் புத்தளத்தில் இருந்து இங்க வந்தது தமிழர்களுக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால் நாங்கள் ஒற்றுமையாக வாழத்தான் வந்தோம்.
எதிர்காலத்தில் தமிழ், முஸ்லீம் என்ற பேதமின்றி ஒரு இன மக்கள் என்று வாழ வேண்டும். மதம் வேறாக இருந்தாலும் சாதி இரண்டுதான். ஆண்சாதி, பெண்சாதி. எல்லாம் ஒரே ஆக்கள் தான். நாங்கள் தான் தமிழர், முஸ்லீமர் என்று பிரிந்துவாழ்கின்றோம். இப்பிடி இல்லாது நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License