We did not have healthy food

Experience sharing on war life


අපි සෞඛ්ය සම්පන්න ආහාර තිබුණේ නැහැ

යුද්ධයේ හවුල් වීම අත්දැකීම


சுத்தமான உணவுகள் கிடைக்கவில்லை

போர் கால வாழ்க்கை தொடர்பான அனுபவ பகிர்வு



CMP/MN/MN/MTN/01

My name is Jeyantha. I was born in Periyapandivirichan village. Mother, father, 5 sisters and one brother were my family. We were 7, including my parents we were 9. From Grade 1 to Grade 9 I studied at Periyapandivirichan Mahavidyalayam. Later I studied one year in Vangkalai in Grade 10. Then I came back again and studied from Grade 11 to A/L in Periyapandivirichan School. I am more interested in sports than in studies. During my A/L time I participated in sports at the national level. Later after A/L I applied for Training Collage. They sent me an interview letter, but that was 2006, the war started and I couldn’t attend the interview since I couldn’t get the ‘pass’ (permit) to go out from our place.
Since there were youngsters at home, and the war was ongoing, we received a letter asking us – me and my two sisters - to join the Movement. They asked one person from each family to join the Movement since it was the need of the country. So my younger sister joined the Movement. She was with them for about 2 years and during that time the others got married.
At the time I completed my A/L, I was having a relationship with Suresh. I had this relationship for 3 years. On February, 2007 we got married in our village. On the same year March we got displaced due to shell attack from the side of Periyathampanai, and came to Madu and stayed there.
On 2008 January 29th, he (husband) died on a claymore attack on a bus. He was not working but just went as a conductor to help someone. Later I came and stayed with my mother. This incident happened when we were staying in Madu after 6 months of stay with our mother-in-law.
We got displaced to places such as Periyamadu, Thevanpitty, Mulangkaavil, Mayilvahanapuram, Kalmadu later to Iruttumadu…in Iruttumadu the place was this size.. likewise so many places.. some places I don’t remember. Sometimes we stay for 10 day and other times for a week.. or we would have stayed for a month.. or six months. From 2007, 2008 February, March, it was like that, till 2009 February 4th we were on the move due to displacement.
When we were staying in Iruttumadu, they have suddenly declared the place as Security Zone. Iruttumadu, Suthanthirapuram, Mayilvahanapuram..some three places were declared. We were staying in the Security Zone. But when we were staying there we faced shell attacks. One lady was cooking, and in front of my eyes her head got cut off and just fell on the spot and died. So many people got injured. Then we were all staying together.
With that attack we thought it is not a good idea to stay there. On February 4th at around 12 pm, we left that place. We missed our mother. She moved along with our elder sister and gone where she went. When the three of us reached Omanthai, because we three were alone they have started asking so many questions. They have asked why we were alone. Since we all had same Identity card (same sir name) they understood we were from the same family. But still the CID asked us so many questions. They asked me how my husband died, whether he died while on the Movement. Likewise they asked so many questions, and then from there we went to Nelukkulam School.
In Nelukkulma School we were kept inside barbed wire. We came leaving our parents. We three were crying inside. It was like a hell, since we came leaving everyone behind. When we came this side our sister and father were injured and admitted in the hospital. Only on 8th we got to know that our parents have come. Somehow from Vavuniya hospital she had informed us that she had come this side. We went to visit them and found out that my sister got injured in her forehead. She was in a serious condition. We would get a visiting card; only one person can see the patient on a day. They will take us from the camp in a vehicle and drop us back. We cannot talk to people outside. We would have to get in to the vehicle, go to hospital, after visit - get back into the vehicle again on time. If we don’t behave such we would not be allowed to visit again.
When I visited the hospital like that, I saw my mother’s saree stained with blood. It’s from the injury of my sister. Even I saw my mother in a very deteriorated condition. She was so weak. The hospital also kept telling, there was no hope of survival for my sister. She was kept in ICU then. My father was in the next ward. After sometime, my mother and sister were united with us under the “Uravuppinaippu” scheme. We didn’t have any facilities. We had to stand on queues to go to toilet. We would take water in a small coconut oil tin.
The food wasn’t clean that much. They would just give us boiled vegetables. The military would bring water in a bowser truck to fill in. when we were taking bath they would be watching us from up. They would be holding the water for us. There was only a little water. It was not enough for bathing,
Even if we have money we couldn’t go out to buy things that we like. I would give the money to someone outside and send to shop. Those who come to see us from outside talked with us standing at least 10 meters away from us. The things that were brought to us would be checked before given to us.
Our life went inside that barbed wire, the visitors would stand outside and we would be inside. We were not allowed to touch the people with whom we talk. But later they started to bring them inside.
We came with just one set of cloth. We had an uncle outside. If we give money to him he would buy some dress to us - fitting or non-fitting. Later one of my mother’s relative stitched some dress for us.
Later after our sister had joined us, one day they have announced those who had been with the Movement, even if it’s for one day, to come and report. My sister didn’t like to report. She had been in the hospital in a very serious condition. She didn’t like at all to let them again to take her away. But then she thought it would be a problem not doing so, thus she gave her name. None of them liked it, they all went wailing in grief.
We didn’t know where they were taken to. One day had passed, we were not aware of their whereabouts. So what we did, we all went to the GS and protested, demanding to show them to us. Next day we were told that they are kept in Poonthoottam and they showed them to us.
We would have been in the Nelukkulam School for about 5 to 6 months. I don’t remember it. Later from there they shifted us to a place called Zone 6, it was like a forested area. It was very hot there. It was a tent with sheet roofing. It was very hot. We didn’t get enough water to bath. It was very crowded…no bathrooms.. it was surrounded with forests. It was too scary to stay inside there. That time Nanthini was the AGA, she got some people from Mannar released. So we were taken to a camp in Ilanthakulam.
But what they did there was again an inquiry with a help of “Thalaiyaatti” (identifiers). Each and every one was inquired again; if the identifier nods his head that person would be taken away. The identifier would be seated inside a black vehicle, dressed in black. We would all be going in line. They would ask me, “you are alone, so has your husband died being in the Movement?” nobody believed that he died in a public bus. I would say that I can show photos for proof. But they would say I was lying, till the end they haven’t believed me. It was like that there. Later when one of my uncle died they didn’t allow us to go, they just took our mother.
On December, 2009 they brought us to Mannar and dropped in front of the DS office. Later we stayed at Panangkattikottu. I stayed there about 2 years, with my sisters. One sister was at the Rehabilitation Center. We would go visit her. It would be a day visit, since we lived faraway. But after so much of waiting we would get just a little time to see her. She would say that there were no water facility, and food. We would take her cloths. It was like that.
Later she was released in 2010, after we have launched a case. We took a medical certificate from Vavuniya claiming that she is a sick person and launched a case in Vavuniya court. After that she was released in Vavuniya and then she stayed with us. Later since we had an aunt in Switzerland my sister went there. Later I studied here. When I came from there I have studied a bit of computer but have no certificate. I have just studied and have done A/L. Here I studied hardware, MS Office, graphic designing. Then I received a training conducted by the UNDP NGO, as a Community Catalyst. I was there on that training for three months. One Women’s Group hired me as their staff for a UNDP funded program. I got selected in the interview and worked in Naanaattaan Division. At that time I didn’t have any experience of working with those communities. I was not brave enough to stand and talk even. It was a fresh experience for me, I was scared thinking how to stand in front of the GS personals and others and talk. I was the field officer and responsible to organize programs. I would have to explain things. Later I somewhat learnt to work with those communities and in addition to that I did STEP English course, offered by GIZ. Then I received a course of training on feminism in India. It was a training on gender. Later I got myself registered to do BA. I first registered to do my degree in Tamil. I couldn’t afford to have a tutor to study Tamil. Later I changed it to Public Administration and now I am in my second year.
I had a friend in Batticaloa, she said it’s good to learn counseling. UNICEF helped me to do that. They got that fund through an organisation called NISD. But before that my mother gave me Rs 15,000 for my studies. I paid that money and the rest I received from this organisation. I have completed two years and in my second semester now. It’s how my life is.
Now I am doing a lot of work for the society. I talk to those women who were affected like me. I would hear about their issues. And get some help through someone or else direct them to the appropriate persons. I am not satisfied with the government officers. It’s challenging to work as a women. May it be the DS or a GS, they treat us differently.
They see us as weak and poor people. The community now looks at a widow with a wrong intention. Even the Tamils are in the same state of mind now.
Honestly, in this society, though some women like me work bravely, I could see them get affected. So many people ask for sexual bribery. They would get their (these women’s) contact numbers.. Some Samurthi officers would make frequent visits to some houses. If there is a proper structure in the government, women wouldn’t be facing such difficulties. If they closely monitor these officers and punish them for inappropriate behaviors we women wouldn’t be facing such challenges. We should bring some change in this, that’s my opinion.
I would have been part of a perfect size family, my own family. But now I am working for so many families.
We cannot deny the fact that people live in harmony. Even now they live in harmony. In Mannar Muslims and Tamils lived together but the politicians manipulate things. Earlier the Muslims would share their Haj and other festival foods with Tamils and Tamils would share their Thaipongal and New Year foods with Muslims. Likewise those days there were exchanges taking place in the society.
But that is still there in some places. Even I go to some people’s places for Haj festivals. I am not denying that. But because they got displaced from here, it brought a 30 years gap in the relationship between the two groups. It is our politicians who want to widen the gap. The higher level officers, the politicians are the once who would come and repeatedly remind these people that they were chased out from this place. These politicians would not let these communities to reconcile. This is the reality. Those communities who could understand this scenario would co-exist. Initially when I go for field visits I have seen many incidents. But now this society is somehow getting along, I am not denying that. But the politicians are the reason for the division of these communities who could coexist. But people still coexist. Even though they have that mindset they get caught in political conspiracy, and find it difficult to coexist.
Now there are so many women like me. They would also face the same issues I have faced. Not only from my society, nowadays there are so many women like me, who represents all the societies. They would have also had the same experience like mine. So it is possible for them to think that if they had also received some supports like I got they could have also progressed in life. For me, my mother supported a lot - For my studies and everything. I sometime think that not everyone could have a mother like her. Sometimes a mother who listens to my story could think that their daughters would have been there if she had given the necessary support. That’s why I like to tell my story to them.
I have told my story for a good cause. I think it would reach good places. To make a change.


CMP/MN/MN/RC/01
මගේ උපන් ගම අඩම්පනේ තාල්බුවට්ටකන්ඩාල්. මාන්තෛයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයිති. 1985 - 1990 කාලයේ ගොඩක් ප්‍රශ්න ඇතිවුනා. ශ්‍රී ලංකන් ආමි ගම්මානවලට ඇවිල්ලා මහජනතාව මරපු එක අමතක කරන්න බැරි ඇත්තක්. මගේ තාත්තත් අපේ ගමේ දී මගේ ඇස් ඉදිරිපිටම වෙඩි තියලා පිදුරු දාලා ගිණිතියපු එක මට අමතක කරන්න බැහැ. ඒ මට වෙච්ච ඇත්තක්.
ඒ වගේම අපි ජීවත් වෙච්ච කාලේ 1985 - 1990 ශ්‍රී ලංකා ආමි එකෙන් ප්‍රසිද්ධියේ වෙඩි තියපු අවස්තා ගොඩක් තියෙනවා. මගේ නෑදෑයෝ ගොඩක් ඇස් ඉදිරිපිටදිම වෙඩිනිසා මැරුම් කෑවා.
ටිකෙන් ටික වැඩිවෙලා භයානක යුද්ධයක් තිබිලා වන්නියේ 2009 අවුරුද්දේ දී යුද්ධය ඉවර වුනා. මම මඩු පල්ලි‍යේ සහකාර ලිපිකරුවෙකු ලෙස 2007 අවු‍රුද්දේ වැඩකලා.
රාජකාරි කරපු කාළේ වැඩිපුරම වන්නි කියන ප්‍රදේශය හමුදා පාලනයක් නැති සාමාන්‍ය ප්‍රදේශ වලින් එකක්. මන්නාරම් දිස්ත්‍රික්කය බැලුවොත් මොන ප්‍රශ්නය තිබුනත් මොකද ෂෙල් ගැහිලි, වෙඩිතැබිලි තිබුනත් මිනිස්සු ගිහින් වඳින තැනක් තමයි මඩු දේවාලය. ඒවාගේ වෙලාවට මඩු දේවාලය අනාථ කඳවුරක් වගේ රතුකුරුසයෙන් පවත්වාගෙන ගියා. ඒ නිසා ඒ වගේ අවස්තාවට හැමෝම මඩු පල්ලියට තමයි දුවන්නේ. ඒවගේ කාලවලත් මඩු පල්ලියට ඇවිල්ලා හිටියා. අන්තිම යුද්ධෙදීත් හැමෝම මඩු පල්ලියට ඇවිත් හිටියා. තවත් කියනවා නම් මාන්තෛයි හමුදා පාලනයට නැති ප්‍රදේශවල මිනිස්සු කන්ඩිවිරිච්චාන්, මඩු කියන ගම්වල හිටපු හැමෝම එහෙ තමයි හිටියේ. එතකොට දරුණුම යුද්දේ. මිනිස්සුන්ට අවතැන් වෙන්න සිද්ධ වුනා. මිනිස්සුන්ට එහෙ ඉඳන් පිටත් වෙන්න කියලා තිබුනා. ඒත් සමහරු හිටියා. හමුදාව දම්පනේ කුලමටයි, මඩු කියන ගමටයි අතරේ මඩු පල්ලිය කවුද අයිති කරගන්නේ කියන යුද්ධෙදි දෙපැත්තම අය හොඳටම යුද්ධ කළා. ඒ වෙලාවේ පාස් අරගෙන තමයි මඩුවලට යන්න ඕන. මම මඩුවලට ගිහින් සමහර අයව බලලා ආවා. ඒවගේ අවස්ථාවල ජනතාවට මෙහෙ ඉන්න එපා. පිටත්වෙන්න කියනකොට එහෙ හිටපු මිනිස්සු පිටත් වුනා.
මිනිස්සු පිටත් වෙනකොට මඩු පල්ලිය ගොඩක් පරණ වටිනා ගොඩනැගිල්ලක්. අවුරුදු සිය ගානකට කළින් හිටපු මරුදමඩු මාතා පිළිරුවක් තියෙනවා. කොහොමහරි මේ පිළිමය පරෙස්සම් කරන්න ඕන නිසා මිනිස්සු ඉන්න තැනට පිළිමය ගෙනියන්න ඕන වුනා. ඒ නිසා එළියට අරන් ගියා. අපේ දිස්ත්‍රික්කයේ සීමාවේ තියෙන මීසම, දේවන්පිටිය පල්ලියේ මාස හතක් විතර මඩු මාතාව තියාගෙන හිටියා. එතැන මාත් හිටියා. වෙන පල්ලියක ෆාදර් කෙනෙක් විදියට ඉන්නකොට මායි තව ෆාදර්ලා කට්ටියකුයි කණ්ඩායමක් විදියට මිනිස්සුත් එක්ක වැඩකළා.
මඩු දේවාලයේ ඉඳන් පිළිමය ගෙ‍නියන්න කලින් මඩු දේවාලය ඇතුලට ෂෙල් වැදුනා. ඒ පල්ලියට සම්බන්ධ පොඩි පල්ලියක් තිබුනා. මහා පල්ලියේ එක පැත්තකට ෂෙල් වැදිලා ගොඩනැගිල්ලට හානි වුනා. ඊට පස්සේ ඒකේ ඉන්න බෑ කියලා කට්ටිය පිටත් වුනා. පස්සේ අපි වන්නි ප්‍රදේශයේ ඉන්නකොට යුද්ධෙට මිනිස්සුන්ට එකතුවෙන්න කියලා එක පවුලකින් එක්කෙනෙක් යවන්න කියලා අනිවාර්ය කරපු නිසා ඒ මිනිස්සුන්ට හරියට කරදර වුනා. අපි දේවන්පිටියේ ඉඳන් අන්තිමට මාතලන් වෛලෙයියර්මඩම් ආදී තැන් එකොළහකට අවතැන් වුනා. එක පාරක් එක තැනක ඉන්නවා. පස්සේ එතැන බෑ කියලා තව කිලෝ මීටර් දහයක් විතර එහාට යනවා. එහාට ගිහින් ටෙන්ට් ගහගෙන මාසයක් දෙකක් ඉන්නවා.
මේ විදියට අරන් ගිහිල්ලා ගිහිල්ලා අන්තිමේ දී මිනිස්සු එක තැනක දී හිරවුනා. සිද්ධවෙච්ච ඇත්තම තමයි කියන්නේ. මම දැක්කා හමුදාවෙ ෂෙල් වැදිලා මිනිස්සු දාස් ගාණක් මැරෙනවා. මම 2009 පස්වෙනි මාසේ යුද්ධය ඉව‍රවෙන්න මාසයකට කළින් තමයි මාතලන්වල ඉඳල පිටත් වුනේ. මේ යුද්ධයෙන් දෙමළ මිනිස්සුන්ට ගොඩක් පාඩු සිද්ධ වුනා. මිනිස්සුන්ට මහ කරදරයක්. දිගටම යුද්ධෙ නිසා ජීවිත නැති වෙනවා විතරක් නෙවෙයි මිනිස්සුන්ට කන්නත් නැහැ. ෆාදර්ලා හැටියට අපට කෑම ප්‍රශ්නයක් තිබුනේ නැහැ. කොහේ හිටියත් කොහොමහරි කෑම ලැබෙනවා. අපිටත් බඩගින්නේ ඉන්නවෙන තත්ත්වයක් වන්නියේ තිබුනා.
කන්ඩ කිසිම දෙයක් නැති තත්ත්වයකුත් තිබුනා. ඒ වෙලාවට මිනිස්සු ගොඩක් දුක් වින්ඳා. පළවෙනි දේ ජීවිත විනාශය. කෑම නැහැ. බෙහෙත් නැහැ. මූලික මිනිස් අවශ්‍යතා මොකුත් නැහැ.
එහෙම ඉන්නකොට වැහි කාලෙට ගංවතුර. ගංවතුර නිසා බංකර් අල්ලගෙන ඉන්නත් බැහැ. හෑරුවොත් වතුර එනවා. මේ වගේ දුර්භාග්‍යමත් දුක්බර තත්ත්වයක ඉඳලා ආරක්ෂිත කලාපය කියලා කියපු තැනකට මිනිස්සු දුවගෙන යනකොට ඒකටත් ෂෙල් ගහනවා. අත්බෝම්බ, කාල බෝම්බ මම කෙලින්ම එතැන බොඩිස් බැලුවා. එහෙම තැනක් දකිනකොට මිනිස්සු ගොඩක් දුක් විඳලා තියෙනවා.
ශ්‍රී ලංකා හමුදාවට විතරක් අන්තිම වෙලාවේ චෝදනා කරන්න බැහැ. කොටි ළඟ ඉද්දි මිනිස්සුන්ට ප්‍රහාර සිද්ධවෙනවා. අපිට ඒක අමතක කරන්න බැහැ. දෙපැත්තම බැලුවොත් යුද්ධය කියලා අන්තිමේ දී දුක්වින්දේ අහින්සක දෙමළ මිනිස්සු. මේ තත්ත්වය දැන් නැහැ. තිබුනත් මොන තත්ත්වයකට එයිද කියලා හිතාගන්නත් බැහැ.
මඩු පල්ලියේ ‍බෝම්බ ප්‍රහාරය පළවෙනි පාර. මට අවුරුද මතක නැහැ. මිනිස්සු අවතැන්වෙලා එතැන ඉන්නකොට ෂෙල් වැදිලා 60ක් විතර මැරුණා. දෙවැනිපාර සටනේ දී මිනිස්සුන්ට කරදර වුනේ නැහැ. පල්ලියට හානි වුනත් මිනිස්සුන්ට හානි වුනේ නැහැ. 1998 දී මඩු පල්ලිය අනාථ කඳවුරක් විදියට රතුකුරුස සංවිධානය හඳුන්වලා දුන්නා. මිනිස්සු ගොඩක් එහෙ එකතුවෙලා හිටියා. එදින තමයි මෙවැනි ප්‍රහාරයක් සිද්ධ වුනේ. හමුදාවෙන් ඉස්සරහට එනවා. චන්ද්‍රිකාගේ කාළේ. හමුදාවටයි, කොටින්ටයි අතරේ ප්‍රශ්නයක් ඇතිවුන වෙලාවේ තමයි මඩු දේවලයට ප්‍රහාර වැදිලා මිනිස්සු මැරුණේ.
හරියටම ඉතිහාසය බලනකොට යුද්ධය ඇතිවෙන්න හේතුවුන කාරණය බලනව නම් දෙමළ ජනතාවට උරුමය ඕන. සමාන අයිතීන් ඇතිව ජීවත් වෙන්න ඕන කියන අරමුණින් යුද්ධෙ පටන් ගත්තා. දැන් යුද්ධයක් නැහැ. ඒ අරමුණ ඉටුවුනේ නැහැ. ඒක විතරක් පේන්න තියෙනවා.
මිනිස්සුන්ට අයිතීන් සහ හොඳින් ජීවත් වෙන්න පසුබිමක් හදලා දෙන්න ඕන කියන එක තමයි අපේ කැමැත්ත. ඒක යුද්ධයෙන් කරගන්න බැරි වුනොත් දේශපාලනයෙන් කරගන්න පුලුවන්. අනික සිදුවෙච්ච යුද්ධයේ දී මානව හිමිකම් උල්ලංඝනය කිරීම් හා හින්සනවලට තීන්දුවක් ලැබෙන්න ඕන කියන එක හැමෝගෙම බලාපොරොත්තුවයි. දඬුවම් විඳපු ජනතාවට තවත් දඬුවම් කරන්නේ නැතිව ඒ ගොල්ලන්ට හොඳින් ජීවත් වෙන්න ඉඩදෙන්න ඕන. වගකිව යුතු ආණ්ඩුව ඒවාට මූලික පියවර ගන්න ඕන. ජාත්‍යන්තර බලපෑම් එනකොට ඒවා අමතක කරලා කටයුතු කරනඑක කණගාටුවට කරුණක්.
තවත් කරුණක් පැහැදිළි වෙනවා. දෙමළ අය සුළු ජාතියක් තමයි. නෑ කියන්න බැහැ. ඒ ගොල්ලන්ට සාධාරණ ජීවිතයක් ලබාදෙන්නවත් මේ ආණ්ඩුව ඉදිරිපත් වෙන්නේ නැහැ. ඉදිරිපත් වෙන්නේ නැත්‍නම් ඒගොල්ලන්ගේ මානසිකත්වය කොහොම තියේවිද? ඒක හිතලා බලන්න ඕන. මේ රටේ හැමෝම සතුටින් ජීවත් වෙන්න ඕන. හොඳින් ජීවත් වෙන්න ඕන. මේ ගොල්ලෝ දුක් ‍විඳින බව හොඳින්ම පේනවා. මේ ගොල්ලන්ට සමහර පක්ෂග්‍රාහීත්වයන් සිද්ධවෙනවා. ඒත් එයාලට හොඳින් ජීවත්වෙන්න ඉඩ දෙන්න ඕන කියන දේ ගැන ආණ්ඩුවේ මානසිකත්වය මොකක්ද කියලා මට තේරෙන්නේ නැහැ. ඒක ඉටු‍වුනොත් තමයි ඇත්තටම සන්තෝෂයක් ඇතිවෙන්නේ.
දෙමළ මිනිස්සු ගැන හිතුවොත් ජාතික කොඩියට, ජාතික ගීයට ගරු කිරීම මදිබව පේනවා. ඒ ඇයි කිව්වොත් තාත්තා ගෙදර ඇවිල්ලා ළමයින්ට ගහනවා නම් ළමයි තාත්තට ආදරේ අඩුයි. තරහක් ඇතිවෙනවා. ඒ වගේ දෙමළ ජනතාවට මට මොනවා කරනවද කියන එක අනුව තමයි ඒකට ගෙරවය ලැබෙන්නේ. ජාතික ගීය වුනත් ජාතික කොඩිය වුනත් ඒකට ගෙරවයෙන්, භක්තියෙන් සළකන්න ඕන. එහෙම වුනොත් ඒ මිනිස්සුන්ට තමුන් ඒ රටේ අය කියලා දැනෙනවා.
ඒක වෙන්නේ නැහැ. ඒක කරන්නේ නැතිව අඩුවෙන් සළකලා ගෙරවය දෙනනේ නෑ කියලා කියනවා. ඒක හරිද කියලා දන්නේ නැහැ. ඒත් එක රටක ‍ජනතාවගේ වගකීමත් වෙන්නේ ජාතික ගීයට හා ජාතික කොඩියට ගරු කිරීමයි. නෑ කියන්න බැහැ. ඒ ගොල්ලන්ගේ මානසිකත්වය මෙයාට කොහොමද, ඇයි එයාට එහෙම ඒ කරුණට අවධානයක් නැතුව ඉන්නවද කියලා දන්නේ නැහැ. මගේ අයියා නැති වුනා. අපි කොටි සංවිධානයට එකතුවෙන්න කියද්දී කියද්දී ගෙදරකින් එක්කෙනෙක් එන්න කියලා කියපු වෙලාවේ එයා එකතු වුනා. එයා දැන් ඉන්වද නැද්ද කියලා දන්නේ නැහැ. මම අයි සී ආර් සී එකට කෙළින්ම මේක ගැන දන්වලා තියෙන්නේ.
ඒක විතරක් නෙමෙයි තවත් වැදගත් කරුණක් ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මඩු පල්ලියට ඇවිල්ලා ෆාදර්ලව මුණ ගැහුනා. අයියර්ලා, ෆාදර්ලා ඔක්කොම එකතුවෙලා කතා කරනකොට මම එයාව හම්බවෙලා කථා කළා. ඒක මගේ විතරක් ප්‍රශ්නයක් නෙවේ. ගොඩක් දෙනෙක්ගේ දුකට වේදනාවට තීන්දුවක් අරගෙන නැහැ. සමහරු නැති වෙලා. කවුරුවත් එයාලව අතුරුදහන් කළේ නැහැ. ඒ ගොල්ලෝ රට ගිහින් කියලා කියනවා. පස්සේ මම මගේ අයියගේ ප්‍රශ්නේ ගැන ඇහුවා. ඒකට එයා මගෙන් සමාව ඉල්ලුවා. එහෙම වෙලානම් අපි ඒගැන විමර්ශනය කරන්නම් කියලා කිව්වා.
මේ විදියට ගොඩක් දේවල්වල අම්මලාගේ කඳුලු එයාලාගේ ළමයි ඉන්වද නැද්ද කියලා. හරියටම කිව්වොත් ආණ්ඩුව කියන කිසි දෙයක් ඇත්ත නෙවෙයි කියලා පැහැදිළිව පේනවා. ලෝකයේ රටවල්වලටත් තේරෙනවා. මොකක්ද වුනේ.. මොකක්ද ඇත්තටම වුනේ... මේගොල්ලෝ මොනවද කියන්නේ කියලා හැමෝටම තේරෙනවා. ඇත්ත තියෙන්නේ කොහෙද කියලා අපි තමයි තීරණය කරන්න ඕන. සමහර නිහඩ විරෝධතා පැවැත්වෙනවා. ඒ නිදහස් විරෝධතාවල දුක්බර හේතුව මොකක්ද කියනවා නම් අතුරුදහන් වෙච්ච ළමයින්ගේ දෙමාපියන්ට මොකක් වෙයිද කියන්න බැහැ. ඒ‍ ගොල්ලෝ කඳුළු සළාගෙන විරෝධතා පවත්වලා එක්සත් ජාතීන්ට පවා දන්වලා තියෙනවා. ඒත් මේ ආණ්ඩුව පොඩ්ඩක්වත් ඒක දකින්නේ නැතිඑක ගැන හරිම දුකයි.
යුද්ධය නැවතුනා. ඉන්නවද නැද්ද කියලා තීරණයක් දෙන්න ඕන. මේ ආණ්ඩුව වගකියන ආණ්ඩුවක්. කෙළින්ම ඒගොල්ලන්ට තීරණයක් දෙන්න ඕන. ඒගොල්ලෝ උත්සාහ කරන්නේ මොනවද කියලා කියන එක ප්‍රශ්නයක්.
මගේ බලාපොරොත්තුව මොකක්ද කියනවා නම් අනාගතයේ දී හරි සිංහල අය දෙමළ අය හැමෝම සහයෝගී තීන්දුවකින් උතුරු නැගෙනහිර එකතු කරලා පළාත් සභාවට බලයක් ලබා දීලා දේශපාලන තීන්දුවක් ගන්න ඕන කියන බලාපොරොත්තුවෙන් ඉන්නවා.
මිනිස්සුන්ගේ දුක් අ‍ඳෝනා ගැන අවධානය යොමු කරලා හොඳින් ජීවත් වෙන්න ඕන කියලා දෙවියන්ට ප්‍රාර්ථනා කරනවා ඇරෙන්න වෙනත් කරන්න දෙයක් නැහැ.



CMP/MN/MN/MTN/01
என்ட பெயர் ஜெயந்தா. நான் பெரிய பண்டிவிரிச்சான் என்ற கிராமத்திலதான் பிறந்தது. அம்மா, அப்பா, 5 பொம்புள சகோதரங்களும் ஒரு ஆம்புள சகோதரமும் எனக்கு. மொத்தம் 7 பேர். அம்மா, அப்பாவோட சேர்த்து 9 பேர் நாங்க. நான் முதலாம் ஆண்டுல இருந்து ஒம்பதாம் ஆண்டு வரையும் பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்துலதான் படிச்சனான். பிறகு ஒரு வருஷம் 10ஆம் ஆண்டு வங்காலையில படிச்சனான். பிறகு திருப்பவும் வந்து 11 ஆம் ஆண்டு.. A/L வரையும் வந்து பெரியபண்டிவிரிச்சான் ஸ்கூல்லதான் படிச்சனான். எனக்கு படிப்பென்றத விட விளையாட்டுல நல்ல இன்ட்ரெஸ்ட் இருக்கு. நான் தேசிய மட்டம் வரையும் விளையாட்டுல போய்வந்தனான் A/L படிக்கேக்குள்ள. பிறகு அப்பிடியே இருந்து A/L எடுத்து… ஏலெவல்ல வந்து ட்ரைனிங் கொலீஜ்ஜிக்கு நான் போட்டன். ஆனா எனக்கு இன்டர்வியுக்கு லெட்டர் போட்டிருந்தாங்க. அந்த டைம் 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஸ்டார்ட் பண்ணினதால அங்கயிருந்து பாஸ் எடுத்துப் போகவேண்டியதால என்னால போக முடியாது.
நாங்கெல்லாம் இளமாக்கள் இருந்ததால யுத்தமும் நடந்துகொண்டு இருக்கேக்குள்ள இணைய சொல்லி எங்களுக்கும் கடிதம் தந்திட்டாங்க. நான், இருக்கிற ரெண்டு தங்கச்சியாக்களயும். எல்லாரும் நாட்டின்ற தேவையப்பொருத்து வீட்டுக்கு ஒராள இணைக்கச் சொன்னதால எனக்கடுத்த தங்கச்சி இயக்கத்தில இணைஞ்சுகொண்டா. இணைஞ்சிகொண்டு ரெண்டு வருஷம் அப்பிடி அவ இருந்தா. அவ இயக்கத்தில இருக்கேக்குள்ள எங்களுக்கும் கலியாணம்
நான் A/L படிச்சி வெளியேறின காலத்திலேயே நான் சுரேஷ விரும்பியிருந்தனான். மூன்று வருஷம் விரும்பியிருந்தனான். 2007ஆம் ஆண்டு மாசி மாதம் எனக்கு எங்கட ஊர்லதான் கல்யாணம் எழுதினது. 2007 ஆம் ஆண்டு பங்குனி மாதமே இடம்பெயர்ந்து நாங்க மடுவுக்கு வந்திட்டம். ஏனென்டா அப்ப வந்து இஞ்சால பெரியதம்பனப் பக்கத்திலயிருந்து ஷெல் அடிச்சிக்கொண்டிருந்தாங்க.அதனால நாங்க இடம்பெயர்ந்து மடுவுக்கு போகவேண்டி வந்திட்டு. பிறகு மடுவுல போயிருந்தம்.
2008 ஜனவரி 29ஆம் திகதி இவர் பஸ்ஸில வேல செய்யயில்ல ஒராளுக்கு உதவிக்காக கண்டெக்டராக போன இடத்தில கிளைமோர்ல இவர் செத்துட்டார். பிறகு வந்து நான் அம்மாவோடதான் இருந்தனான் ஆறு மாசம் எங்கட மாமியாக்களோடு இருந்து பிறகு மாமியாக்கள் இடம்பெயர்ந்து அப்பிடியே நாங்கஅப்ப மடுவுல இருக்கேக்குள்ளதான் இது நடந்தது. இவரு செத்தது
நாங்க இடம்பெயர்ந்து பெரியமடு, தேவன்பிட்டி, முழங்காவில், மயில்வாகனபுரம், கல்மடு பிறகு இருட்டுமடு அப்பிடியே வந்து இருட்டுமடுவுல இவளவு இடம்… இதப்போல நிறைய இடங்கள் எனக்கு ஞாபகமில்ல சில இடங்கள். சிலநேரம் பத்து நாள் இருந்திருப்போம்… சிலநேரம் ஒரு கிழம இருந்திருப்போம்… ஒரு மாசம் இருந்திருப்போம். ஆறு மாசம் இருந்திருப்போம். இப்படித்தான் 2007, 2008 மாசி,பங்குனியிலயிருந்து இடம்பெயர்ந்து 2009 மாசி மாதம் 04ஆம் திகதி வரையும் இப்பிடி இந்த இடங்கள்ள இருந்திருந்து எழும்பியெழும்பி போனனாங்க.
நாங்க இருட்டுமடுவுல இருக்கேக்குள்ள வந்து திடீரென்று பாதுகாப்பு வலயமா பிரகடனப்படுத்தியிருந்தாங்க. இருட்டுமடு, சுதந்திரபுரம், மயில்வாகனபுரம் ஏதோ மூன்று இடத்த பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பு வலயத்துக்குள்ளதான் நாங்க இருந்தம். இருந்தநேரம் ஷெல்லடிச்சி என்ட கண்ணுக்கு முன்னாலயே ஒரு அம்மா சமச்சுக் கொண்டிருந்தவ. அவக்கு அப்பிடியே தல துண்டிச்சு அப்பிடியே அதிலேயே செத்துட்டா. அதுல நிறையப்பேர் காயப்பட்டாங்க. அப்ப நாங்க எல்லாரும் ஒண்டாத்தான் இருந்தோம்.
பிறகு திருப்ப நாங்க அதோட பார்த்தோம் இனியிருந்தா எங்களுக்குப் பிரச்சினையாகிடும் என்டுசொல்லி… ஒரு பன்னெண்டு மணியிருக்கும் நாலாம் திகதி… மாசி மாதம் 04ஆம் திகதி 12 மணியிருக்கும்… அப்பிடியே வெளிக்கிட்டு நாங்க அம்மா, அப்பாவ மிஸ் பண்ணிட்டோம். ஏனென்டா எங்கட அம்மா, அப்பா அக்கா போன இடத்துல அங்க போயிட்டா. நாங்க மூணுபேரும் வந்து ஓமந்தைல வந்தவுடனயோ நாங்க மூணுபேரும் தனிய வந்தத்தால அவங்க நிறையக் கேள்வி கேக்க வெளிக்கிட்டாங்க. ஏன் நீங்க தனிய வந்தீங்க அப்படியென்று சொல்லி. ஒரே ஐசி இருந்தத்தால நாங்க ஒரே குடும்பத்தாக்கள் என்றத கொஞ்சம் அவங்க விளங்கிக்கொண்டாங்க. அப்பிடி இருந்தும் CID நிறைய கேள்வி கேட்டான். இவரு எப்படி செத்ததென்டு. இயக்கத்தில இருந்து செத்ததா அப்டியென்டு நிறையக் கேள்வி கேட்டு பிறகு நாங்க அதிலயிருந்து நெலுக்குளம் ஸ்கூலுக்கு போனோம்.
நெல்லிக் குளம் ஸ்கூலுக்கு போனா கம்பிக்குள்ள இருக்கிறோம். அப்பா அம்மாவ விட்டுட்டு வந்திட்டோம். அதுக்குள்ள அழுதுகொண்டு நாங்க மூன்றுபேரும் இருக்கிறம் அதுக்குள்ள இந்த நரகம் மாதிரி. ஏனென்டா எல்லாரையும் விட்டுத்து வந்திட்டம்தானே. அம்மா அப்பாவும் தங்கச்சியும் வரையக்குள்ள தங்கச்சி காயப்பட்டு அப்பாவும் காயப்பட்டு ஹொஸ்பிடல்ல இருந்தாங்க. எங்களுக்கு எட்டாம் திகதிதான் தெரியும் அம்மாவும் அப்பாவும் வந்தது. எப்படியோ அம்மா வவுனியா ஹொஸ்பிடல்ல இருந்து எங்களுக்கு அறிவிச்சிட்டா நாங்க வந்திட்டம் அப்பிடியென்டு சொல்லி. அப்ப அங்கபோய் பார்த்தா தங்கச்சிக்கு நெத்தியில காயம். அவக்கும் சரியான சீரியஸ்ஸாகத்தான் வச்சிருக்கிறாங்க. விசிட்டிங் காட் மாதிரித் தருவாங்க. ஓராள்தான் ஒரு நாளைக்கு பாக்கலாம். முகாமில இருந்துதான் எங்கள ஏத்திட்டுப் போவாங்க வெஹிக்கில்ல. ஏத்திட்டுக் கொண்டுவந்து விடுவாங்க. நாங்க வெளியிடங்கல்ல கதைக்கேலாது. நேரே போனா அவங்க திறந்து விடுவாங்க ஹொஸ்பிடலுக்குள்ள போறது. பாத்த உடனயோ அடுத்த கட்டம் அந்த டைமுக்கு வந்து ஏறியிருந்து வந்திடனும். இல்லன்டு சொன்னா அடுத்த நாள் விடமாட்டாங்க.
அப்பிடிப் போய்ப் பாத்த நேரம் அம்மாவப் பாக்கேக்குள்ள அம்மா அந்த போட்டிருந்த உடுப்பு சாரியெல்லாம் ரெத்தம். தங்கச்சி காயப்பட்டு வந்ததுதானே அப்ப அந்த ரெத்தம். அம்மாவும் வந்து என்னென்டு சொல்ற.. உருக்குலஞ்ச நிலைலதான் நான் பாத்தநான். ஏனென்டா அந்தளவுக்கு அவக்கு ஏலாம போயிட்டு. என்னென்டா இவ செத்திடுவான்டு சொல்லிக்கொண்டே இருக்கிறாங்க. அப்ப ICUக்க வச்சிருக்கிறாங்க தங்கச்சிய. பிறகு அப்பா அங்கால வோட்ல இருந்தாரு. கொஞ்ச நாளைக்குப் பிறகு தங்கச்சியையும் அம்மாவையும் எங்களோட உறவிணைப்புல இணைச்சாங்க. இணைச்சா அந்தநேரம் வசதியில்ல எங்களுக்கு. வசதியில்லன்டு சொன்னா டொய்லட்டுக்கெல்லாம் வந்து நிறைய லைன்ல நிக்கனும். சின்ன தேங்கெண்ண டின்லதான் தண்ணி கொண்டு போவோம்.
சாப்பாடெல்லாம் அந்தளவுக்கு கிளீனா இருக்காது. மரக்கறிய சும்மா அவிக்கவச்சி அப்பிடித் தருவாங்க. இந்த ஆமிக்காரன் பவுஸர்ல தண்ணி பவுஸர்ல தண்ணி கொண்டந்து அடிப்பான். அவன் மேல நிண்டு பார்த்துக் கொண்டிருப்பான் நாங்க கீழ நிண்டு குளிக்கிறது. அவனுகள்தான் கொண்டந்து புடிச்சி விடுவாங்க. அப்பிடி தண்ணியெண்டா சரியான குறைவா இருக்கும். எங்களுக்கு போதிய அந்தளவு தண்ணி குளிக்கிற அந்தளவுக்கு இல்ல.
காசிருந்தாலும் வெளியில போய் எங்களுக்கு புடிச்ச சாமான் வேண்ட ஏலாது. வெளியில இருக்கிறாக்களுக்கு நான் காசக் குடுத்து விட்றதுதான். எப்பிடியும் வெளியில இருந்து எங்கள பார்க்க வந்தாலும் எப்படியும் ஒரு பத்து மீற்றர் அப்பிடி தள்ளி நிண்டுதான் கதைப்பாங்க. எங்கட சாமான வேண்டி அவங்க செக் பண்ணிப்போட்டு எங்களுக்குத் தருவாங்க
அந்தக் கம்பி முட்கம்பியிலதான் எங்கட வாழ்க்க அங்கால அவங்களும் நாங்க இங்கால நிண்டு அதக் கதைக்கிறது. ஒரு தொட்டுக் கதைக்கிறதுக்குக்கூட முதல் விட்றதில்ல. பிறகு பிறகு ஒரளவு கொணந்து உள்ள இருத்தி விடுவாங்க
நாங்க வரைக்குள்ள வந்து ஒரொரு உடுப்போடத்தான் வந்த நாங்க. எங்கட மாமா ஒராள் இருந்தவர் வெளியில. அவருக்கு காசக் குடுத்தா போய் உடுப்புகள் அளவோ அளவில்லயோ ஏதோ பாத்து மனிசன் வாங்கிக் கொண்டந்து தந்தாரு அதுக்குப் பிறகு அதுகள போட்டுப்போட்டு இனி எங்கட அம்மாட ஒரு உறவு அங்கால இருந்து கொஞ்ச சட்டைகள் தச்சி கொணந்து தந்தா.
பிறகு தங்கச்சி எங்களோட வந்து இணைஞ்ச பிறகு திருப்ப அறிவிக்கிறாங்க எல்லாரையும் இயக்கத்தில இருந்தாக்கள் ஒருநாள் இயக்கத்தில இருந்தாலும் அங்க வரனுமென்டு. அப்ப எங்கட தங்கச்சி ஹொஸ்பிடல்ல வருத்தமா இருந்தவதானே. அப்ப வருத்தம்னு சொன்னா சரியான சீரியஸ்ஸாக இருந்தவ. அவவுக்கு விருப்பமே இல்ல. அதுக்குள்ள இருந்திட்டு இஞ்ச வந்து இங்கயும் திருப்பி கொண்டுபோப்பறாங்க என்டு சொல்லி அப்ப அவவென்டா போக விருப்பமில்ல. பிறகு ஒரு மாதிரி பேரக் குடுத்து பிறகு பிரச்சினையா போயிடனுமென்டு சொல்லி பேரக்குடுத்து வெளிக்கிட்டாள். ஏதோ விருப்பமில்லாமலேயே எல்லாப் புள்ளைகளும் அழுது ஒப்பாரி வெச்சித்தான் போனாங்க.
இவவ கொண்டுபோய் முடிய அன்டு புள்ளைகள எங்க கொண்டுபோனான்டு தெரியாது. அப்ப எங்களுக்கு ஒரு நாளாயிற்று எங்க புள்ளைகள வச்சிருக்கிறான்டு தெரியாது. அப்ப நாங்க என்ன செய்தயென்டு சொன்னா ஜீயெஸ்ஸிட்ட போய் புள்ளைகள கொண்டே காட்டுன்னு சொல்லி சனமெல்லாம் எதிர்த்து போராட்டமெல்லாம் நடத்தினாங்க. அடுத்தநாள் பூந்தோட்டத்துலதான் இருக்கிறான்டு சொல்லி கொண்டேந்து காட்டினாங்க..
நாங்க வந்து ஒரு ஆறு அஞ்சி மாசத்துக்குக்கிட்ட இருந்திருப்பம் நெலுக்குளம் ஸ்கூல்ல. எனக்கு ஞாபகமில்ல. திருப்ப ஏத்தி எங்கள சோன் சிக்ஸ் (Zone 6) என்டு சொல்லி கொண்டந்து ஒரு காட்டுத்துண்டுல வச்சிருந்தாங்க. அதுன்டா சரியான வெக்க எங்களுக்கு. சீட் கொட்டில். அதுக்குள்ள சரியான வெக்கையும்.. குளிக்கிறதுக்கும் ஒழுங்கா தண்ணி வராது… இனி அவளவு சன நெருக்கம்… பாத்றூமுகள் இல்ல.... காடு.. சரியான காடு. சுத்திவரக் காடு. எங்களுக்கு சரியான பயங்கரம் அதுக்குள்ள இருக்கிறதுக்கு.. அந்தநேரம் வந்து இவ நந்தினிதான் இங்க ஏஜீஏயா (AGA) இருந்ததால அவ வந்து மன்னார்ல இருந்த கொஞ்சப்பேர எடுத்தாங்க. எடுத்தவுடனேயே நாங்க இலந்தக்குளம் என்டு சொல்லி ஒரு இடத்துல வந்து ஒரு முகாம் இருந்தது. அங்க கொண்டந்து எங்கள இருத்தியாச்சு.
இருத்தினா அங்கவந்து என்ன செய்தாங்கன்டு சொன்னா தலையாட்டி கொண்டந்து வச்சி திருப்ப விசாரண எங்களுக்கு. ஸ்டார்ட்ல இருந்து ஒவ்வரொவ்வராள விசாரிச்சி அவன் தலைய ஆட்டினா அந்தாளக் கொண்டு போயிடுவாங்க அங்கயிருந்து. அப்ப அந்த கறுத்த வாகனத்துக்குள்ளதான் அவரு கறுத்த உடுப்புப்போட்டு இருப்பார். அப்ப எங்கட எல்லாரையும் லைன்ல விட்டுட்டு அப்ப என்னையெல்லாம் கேப்பாங்க.நீ தனிய இருக்கிறாய்… தனிய இருக்கிறன்டு சொன்னா உன்ட புருசன் இயக்கத்திலயிருந்து செத்ததா? அந்த யாரையும் அவங்க நம்பயில்ல இவரு இந்த பொதுவா ஒரு வாகனத்துல செத்தென்டு சொல்லி. அப்ப உங்களுக்கு போட்டோவெல்லாம் காட்றென்டு சொல்லி சொன்னாலும் இல்ல பொய் சொல்றா அப்பிடியென்டே இருந்தாங்க கடைசிமட்டும். அப்பிடியிருந்து திருப்பி வந்து பிறகு எங்கட மாமா ஒராள் செத்ததுக்கு எங்களையெல்லாம் விடயில்ல எங்கட அம்மாவ மட்டும் கூட்டிட்டுப் போனாங்க
2009 மார்கழி மாசம் எங்கள வந்து மன்னாருக்கு கொண்டந்து இறக்கிவிட்டாங்க டீயெஸ் (DS) ஒப்பிஸஷுக்கு முன்னால இறக்கிவிட்டாங்க. பிறகு வந்து நாங்க பனங்கட்டிக் கொட்டுலதான் இருந்தநாங்க. அப்பிடியே ரெண்டு வருசம் அப்பிடி இருந்திருப்பன். நானும் தங்கச்சியாக்கள் எல்லாம் இருந்தது. பிறகு தங்கச்சி புனர்வாழ்வுலதான் இருக்கிறா. இருந்து பிறகு அவவ நாங்கபோய் பார்க்கிறது. பாக்கப்போனாலும் வந்து என்ன செய்வாங்க நாங்க இப்ப தூரத்துலதானே இருக்கிற. அங்கயும் வந்து காலைல போனா பின்னேரம்தான் வரனும். அங்கயும் போய் அவங்கள்ட நின்டு மினக்கெட்டு போய் ஒராள பாத்திட்டு கொஞ்ச டைம்தான் தருவாங்க அதுக்குள்ள திரும்பி வரனும்தண்ணி அள்ள வசதியில்ல சாப்பிடயில்ல அப்பிடியென்டு சொல்லி. நாங்க இஞ்சயிருந்து உடுப்புகள் எடுத்துக்கொண்டு குடுக்கிறது அப்பிடியுமா இருந்த நாங்க.
பிறகு அவவ 2010 விட்டுட்டாங்க. விட்டுட்டாங்கன்டா நாங்க கேஸ் போட்ட நாங்க அவ வருத்தக்காராள் என்டு சொல்லி வவுனியாவுல இருந்து மெடிக்கல் எடுத்து வவுனியா கோட்ஸ்ல கேஸ் போட்டனாங்க. போட்டு பிறகு அவவ வவுனியால வச்சி விட்டாங்க. விட்டு பிறகு அவ வந்து எங்களோடதான் இருந்தா. பிறகு அம்மாட தங்கச்சி ஒராள் சுவிஸ்ல இருந்ததால அவ அங்கால போய்ச் சேர்ந்திட்டா. பிறகு நான் வந்து இங்கயிருந்து படிச்சனான். படிச்சென்டு சொன்னா அங்கயிருந்து வரேக்குள்ள இந்தக் கம்பியூட்டர் ஒரளவு அங்க படிச்சிருந்தாலும் அதுல சேர்ட்டிபிகட் என்டு ஒன்டுமில்ல. சும்மா படிச்சிருந்தனான். ஏலெவல் செய்திருந்தன். பிறகு இங்கவந்து ஹாட்வெயார் மற்றது எம்.எஸ்.ஒப்பிஸ், மற்றது கிரபிக் டிசைனிங் அதுகளெல்லாம் படிச்சனான். படிச்சிட்டு பிறகு யூ.என்.டி.பி. என்ஜியோவால வந்து ட்ரைனிங் ஒன்டு குடுத்தாங்க கொமியூனிட்டி கட்டலிஸ் என்டு சொல்லி. அப்ப அதுல போய் ஒரு திரீ மன்த் இருந்தனான். மாதர் ஒன்றியத்துல வந்து வேர்க்குக்கு. யூ.என்.டி.பி அந்த பன்ட் (fund) என்னவொரு ஸ்டாபா (staff) எடுத்தாங்க. நான் இன்டவியூக்குப் போன நேரம் செலக்ட் பண்ணுப்பட்டு நானாட்டான் டிவிசன்ல வேல செய்தம். அப்பயெல்லாம் எனக்கு அந்த சமூகங்களோட வேல செய்த எக்ஸ்பீரியென்ஸ் இல்ல. எனக்கு நின்டு கதைக்கிற அளவுக்கு அந்த தைரியமும் இல்ல. முதல் ஸ்டார்ட்தானே. பெரிசா நான் கதைக்கமாட்டன்னு சொன்னா எனக்கு பயம் அப்ப டீயெஸ்மாருக்கு முன்னால இவங்களுக்கு முன்னால எப்பிடி கதைக்கிறது அப்பிடி என்டு பயமா இருந்தது. அப்ப field officer ஆ நான்தான் புரோக்ராம் அரேன்ஜ்மன்ட் பன்னனும். நான்தான் அதபற்றி சொல்லனும் அப்பிடியென்டு. பிறகு அதிலயிருந்து ஓரளவு அந்த சமூகங்களோட வேல செய்ய ஒரளவு கற்றுக்கொண்டு… வேலைக்கும் போறதோட வந்து சில ஸ்டெப்ஸ் கோர்ஸ் என்று சொல்லி ஒரு இங்லிஷ் கோஸ் செய்தனான் GIZ ல. அதுக்குப்பிறகு வந்து பெமினிஸம் தொடர்பாக வந்து இந்தியாவுக்குப் போய் ஒரு ட்ரெயினிங் எடுத்தனான். ஜென்டர் ட்ரெயினிங் ஒன்று. அதுக்குப்பிறகு தொடர்ச்சியா வந்து BA ரெஜிஸ்டர் பண்ணியிருந்தனான் தமிழுக்குத்தான் முதல்ல ரெஜிஸ்டர் பண்ணினனான். பிறகு இங்க எனக்கு வசதி இல்லாம போயிட்டு ஒரு டீச்சர் எடுத்து படிக்கிற அளவுக்கு தமிழில. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு திருப்ப மாத்தி அத ரெஜிஸ்டர் பண்ணி இப்ப இந்த வருஷம் எனக்கு செகண்ட் இயர் முடியுது.
அதோட இடையில எண்ட பிரண்ட் ஒராள் பட்டிக்களோவில இருந்தா. அவ வந்து சொன்னா இப்படி கவூன்சலிங் படிக்கிறது நல்லம் அப்படியென்று சொல்லி அதுக்கு யுனிசெப் தான் எனக்கு ஹெல்ப் பண்ணினது. அது NISD என்ற நிறுவனம் அவங்களூடாகத் தான் அவங்க எடுத்துத் தந்தாங்க அந்தக் காச. ஆனா அதுக்கு முதல் என்னட்ட இருந்து அம்மா எனக்கு ஒரு பதினையாயிரம் தந்தா படிக்கிறதுக்கு. அத கட்டிட்டு இருந்தனான். மிச்ச காச அவங்க தந்தாங்க படிக்கிறதுக்கு. பிறகு அதில ரெண்டு வருஷம் முடிஞ்சு ரெண்டாவது செகண்ட் செமஸ்டர் செய்யப்போறன். இப்படித்தான் எண்ட வாழ்க்கையிருக்குது…
நான் இப்ப வந்து சமூகத்துக்காக நெறைய வேல செய்துகொண்டிருக்றன் என்ன மாதிரி பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களுக்காக வந்து நான் அவங்களோட போய்க் கதைக்கிறது.அவங்கட பிரச்சினைகளக் கேக்கிறது.யார்ட்டயும் ஊடாக உதவியப் பெற்றுக் கொடுக்கிறதோ இல்லன்டா அவங்கபோய் யாரோடத் தொடர்புகொண்டு அந்த சேவையப் பெர்ரெண்டாலும் நான் அந்த வேலைகளையும் செய்து குடுக்கிறது இது போக எனக்கு சவாலா இருந்த விசயம் என்டா நான் பெண்ணா இருந்த போது எனக்கு அரச அதிகாரிகளில வந்து பெரிசா திருப்தி இல்ல. அது வந்து இப்ப டீ எஸ் ஆ இருக்கலாம். ஜீ எஸ் ஆ இருந்தாலும் சரி. அவங்கட பார்வை வந்து வித்தியாசம்.
எங்கள பலவீனமா பாக்கிறாங்கள். பலவீனமா என்றா ஒண்டு வறுமைய பாக்றாங்கள். இவங்களுக்கு கணவன் இல்லத்தானே. நாங்க மிஸ்யூஸ் பண்ணலாம் என்ற அந்தப் பார்வையிலயும் பார்க்கின்ற ஒரு சமூகம் தான் இப்ப. அது தமிழராக இருந்தாலும் அது அந்த நிலைல தான் இப்பவும் இருக்கிறாங்கள்.
உண்மையிலேயே இந்த சமுகத்துக்குள்ள வேலை செய்யுற எங்கள மாதிரி தற்றுணிவா இருந்தாலும் என்னைய போல பெண்கள் பாதிக்கப்பட்றத நான் பாக்கக்கூடிய நிலைல இருக்குது. அப்ப அதுல வந்து நிறையப்பேர் பாலியல் லஞ்சம் கோரப்பட்றது. அவங்கட நம்பர்கள எடுத்து வைக்கிறது. சமுர்த்தி ஒபீசரெல்லாம் நிறையத்தரம் சில வீடுகளுக்குப் போற அளவு நிலைகூட இருக்குது. இதெல்லாம் அந்த அரசாங்கத்துல வந்து சரியான ஒரு கட்டமைப்பு இருக்குமாக இருந்தால் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வராது. அந்தக் கட்டமைப்பினூடாக இவங்கள போலோ பண்ணிக்கொண்டு வந்தாங்க என்று சொன்னா அரச அதிகாரிகள் வந்து நீங்க இப்படி செய்தீங்க என்று சொன்னா தண்டனை இருக்குது. அந்தத் தண்டனைய சரியா நடைமுறப்படுத்துவாங்களாக இருந்தா இப்ப எங்கள மாதிரிப் பெண்களுக்கு வந்து சவால்கள் இருக்காது. இதுகள வந்து மாற்றத்துக்குக் கொண்டு வரணும் என்றதுதான் என்ட கருத்து.?
முன்னுக்கென்று சொன்னா அப்ப ஒரு குடும்பத்துலநல்ல அளவான ஒரு குடும்பத்துல இருந்திருப்பன். எனக்கென்ற ஒரு குடும்hத்துல இருந்திருப்பன். இப்ப எத்தனயோ குடும்பத்துக்காக நான் வேலை செய்யுறன்.
மக்கள் வந்து ஒற்றுமையா இருக்கிறாங்கள் என்றத இல்ல என்றும் சொல்ல ஏலாது. இப்பயும் இருக்கிறாங்க ஒற்றுமையா. சிலவேளைல இந்த அரசியல்வாதிகள் இப்ப முஸ்லிம்சும் தமிழும் வந்து இணைந்து வாழ்ந்த சமூகம் தான் மன்னார்ல. ஆனா அத வந்து அரசியல்வாதிகள் தான் வந்து திரிபுபடுத்துறாங்களே ஒழிய அந்தக்காலத்துல வந்து ஒரு ஹஜ்ஜூப் பெருநாளா இருந்தாலும் சரி, நோன்புப் பெருநாளா இருந்தாலும் சரி, அவங்க எங்கட தமிழருக்கு உணவு கொடுத்து… எங்கட தைப்பொங்களா இருந்தாலும் சரி, வருசப் பிறப்பா இருந்தாலும் சரி அவங்களுக்கு உணவு கொடுத்து.. அப்படி ஒரு பரிமாற்றமான ஒரு சமூகந்தான் ஆரம்ப கட்டத்துல இருந்தது.
ஆனா அது இப்பயும் சில இடங்கள்ளில இருக்குது. நானும் சில இடங்கள்ளில அவங்கட வீட்ல போய் ஹஜ்ஜூப் பெருநாள் அதுக்கெல்லாம் போறனான். இல்லன்னு சொல்ல வரேல்ல. அது மாற்றத்துக்கு இப்ப இங்கிருந்து இடம்பெயர்ந்து அவங்க போனதால வந்து அவங்களுக்குள்ளயும் இவங்களுக்குள்ளயும் உறவு ஒரு முப்பது வருடம் பிரிவக் கொண்டு வந்திட்டு. கொண்டு வந்தாலும் அத இன்னும் பிரிக்க நினைக்குறது எங்கட அரசியல்வாதிகள். மேல்மட்டங்கள்ல இருக்கிற ஆக்கள்தான் வந்து அத நீங்கள் துரத்தப்பட்டுப் போனாக்கள் தானே. உங்கள துரத்தி விட்டவங்கள் தானே அதத் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர்ற அளவுக்கு வார சமூகத்த பிரிச்சு வைக்கிற அரசியல்வாதிகளாகத்தான் இருக்கிறாங்க. இதுதான் யதார்த்தமான உண்மைகள். ஆனால் அத விளங்கிக் கொள்ற சில சமூகம் இணைந்து வாழ்றாங்க. ஆரம்ப காலத்துல நான் சில பீள்ட்ஸ்க்குப் போகேக்கொள்ள கண்கூடாக நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. ஆனா இப்ப வந்து அந்த சமூகம் ஏதோ ஒரு வகைல ஒத்துப் போகுது. இல்லண்டு சொல்லேல்ல. அந்த ஒத்துப்போற சமூகங்களயும் பிரிக்கிறதுக்கு எங்கட சில அரசியல்வாதிகள் இருக்கிறது தான் கூடக் காரணமாக இருக்குது. ஆனா சேர்ந்து வாழ்றது. அந்த ஒற்றுமப்பாடு இப்பயும் இல்லண்டு சொல்லல. இவிட மனசளவுல இருந்தாலும் இந்த அரசியல்வாதிகள் செய்ற சூழ்ச்சிகளால வந்து அதுகள் இணைந்து வாழ்றதுக்கு கஷ்;டப்பட்றாங்க.
இப்ப என்ன மாதிரி நிறைய பெண்கள் இருக்கிறாங்க. இப்ப நான் எதிர்கொண்ட பிரச்சினைகள் அவங்களும் எதிர்கொள்ளுவாங்க. என்ட சமூகம் என்றில்ல. எல்லா சமூகத்தயும் பிரதிநிதித்துவப்படுத்துற பெண்கள் வந்து இப்ப என்னப்போல நிறையப்பேர் இருக்கிறாங்க. அப்ப அவங்களுக்கும் இது நான் கற்றுக்கொண்ட விசயங்கள் அவங்கட லைப்லயும் நடந்திருக்கும். அப்ப இதன்மூலம் அவங்க பாக்கிற நேரம், அவங்கள் சில விசயங்கள நாங்களும் இப்படி முன்னுக்கு வரலாம். எங்களுக்கும் இந்த சப்போர்ட் கிடைச்சா நாங்களும் முன்னுக்கு வந்திருக்கலாம் என்ற இதுல வந்து அவங்களும் வாழ்;றதுக்கு சந்தர்ப்பங்கள் இருக்குது. இப்ப எனக்கெல்லாம் எங்கட அம்மா நிறைய சப்போர்ட் செய்தாங்க. நான் படிக்கப் போறனோ எல்லா விசயத்துக்கும் செய்தாங்க. அப்ப சில வேளைல நான் யோசிக்ற என்னப்போல எல்லாத் தாய்மாரும்.. எல்லாருக்கும் அமைஞ்சிருக்காது. சிலவேள என்ட கதையக் கேக்குற ஒரு தாய் வந்து நினைக்கலாம் என்ட புள்ளக்கு நான் இப்படி சப்போர்ட் கொடுத்திருந்தா இந்த நேரத்துல இருந்திருப்பா என்றது. அதனால நான் அவங்களுக்கு சொல்றதுக்கு விரும்புறன்.
நான் ஒரு நல்ல விசயத்துக்காக என்ட கதைய நான் சொல்லியிருக்றன். நல்ல இடத்துக்குப் போய் சேரும் என்று நினைக்கிறன். மாற்றத்துக்காக.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License