My son was killed in a bomb attack

Experiential sharing on war life


මගේ පුතා බෝම්බ ප්රහාරයකින් මැරුවා

යුධ ජීවිතයේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම


என் மகன் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டான்

போர் கால வாழ்க்கை தொடர்பான அனுபவ பகிர்வு



CMP/MN/MN/MTN/03
I was born in Mannar. We are 11 siblings. Out of 11, now only 7 of us are alive. Out of that seven, one is living in India. The rest are living in different places here. Only I am living in this house. I had 5 children and two of them have passed away. Among the rest three, one got married. Now two girls are here. Out of the two boys one had died in claymore attack at the age of 24. The other one got abducted by the white van and he is no more now. He went to school and hasn’t returned home. The situation is such, and my husband is a Polio patient. His one leg is affected. In my family I am the one who went through so much difficulty and still that continues. This is my situation. My husband is a drunkard. Children cannot go to faraway places. It’s so scary. They are girls. One girl is in O/L, that’s my second one. The eldest sat for O/L and now work in Colombo. These are my troubles.
My child was working as a cleaner of a school bus. At first I wasn’t happy about sending him to work as a cleaner. He studied up to Grade 7. But he wasn’t good at studies. The school had informed me that he wasn’t able to study, they advised me to get him introduced to some jobs, so that he would get better on it. I didn’t like that idea. I want my child to study. I wasn’t educated so I wished that my child would get educated. But my child refused it. He said “mother, I don’t want to go to school, I don’t want to study”. The school also advised me to stop him from school and send him to learn some work.
We sent him to work in a garage. He even refused to work there. He liked to work in bus. He wanted to work as a cleaner. We told him not to work as a cleaner, told him that the situation is not good. “I would go only today” he said and went. That was 2007, April, 23rd. Near Settikulam he died on a claymore attack. It was the police who shot my child. The claymore attack took place on the C.T.B bus that went in front. My child was in the second bus, a private bus that followed it. Police had shot my child. After shooting him, they told me that he was injured. They didn’t tell me that he was dead.
Due to claymore attack the backside of the CTB bus was completely destroyed. The private bus went behind it and my son was in it, as a cleaner. Even in that bus only 4 or 5 people survived. The rest died inside - The driver, my son, one other boy, one old man and a lady. Four people have died, the rest survived.
We went to Settikulam and first visited the hospital. There they said, “Mother, not here. It’s going to be 12, go to Vavuniya”. Then we visited the ward at 12pm. After my son’s injury I couldn’t walk. I became numb. I didn’t know what happened after that. Later when they brought the corpse, they brought me in the van. When I came here I couldn’t even talk. I cannot tell. I brought up my children well. They are very clever. I wasn’t educated well. I don’t know a word. I cannot write. After I have educated my children and brought them to this level God has done this. I am very sad.
They abducted in year 2004….2006. Will tell his story. We were in Santhipuram. Then one morning when he got ready to go to school I said “boy, wash the shirts and iron them before you leave”. I sent him off that day and he never came back home. After 2 or 3 days people said he was abducted from the junction by a white van.
If they have told me he was abducted I would have searched for him. My son’s friends told me “this is where he got abducted, they came to catch me, I ran away, he got caught”.
My child got caught. I searched for him all over, but my child wasn’t found. When I thought of informing the police, people told me it’s not possible to inform police, because the elder son died in the claymore attack - he was actually shot by the police. So it would be an issue they said. And they advised me not to put the entry. Since I haven’t put a police entry I still think that my son is there. I live with the thought that he is alive. The school gave me a certificate informing from which date he wasn’t present to school. I keep it with me. Other than that there is no other thing I keep regarding him.
From here I went to Kilinochchi, thinking he would have gone there. Some people said he went to Puthukkudiyiruppu, so I went there. Some said the Movement had taken him, so I went and searched there. Everywhere I went they said, he is not there. Monitoring Mission was in Mannar then, I went and reported there. I cried “give me my child, my husband is a sick man, my children should look after me, give me back my child”. “Mother we cannot go and check, we cannot check with the Movement, if we saw him we will take you there” they said. They neither took me, nor have they checked. Even now I don’t know what happened to my child.
We got displaced. We went to Erukkalampity. We stayed there. Later, here, we stayed in a house over there for a long time. We were scared to stay here due to army’s presence. It’s scary for women; we cannot stay here during the night. So we stayed far away from here. We didn’t stay here. We came here after sometime.
This is the land I received from my mother after marriage. After this I didn’t receive anything from the government or anyone. I lost two of my children but received no help. But when the eldest son died, Rishad gave Rs 50,000.00 in my husband’s hands. He got drunk. He was sad, since he lost the child. We lost two children and he was very sad. That’s why he got drunk so badly. That is the only help we received. Even last time people came and took all the information. They got the information about our children’s death. He has the letter regarding that. But we didn’t hear anything regarding that.
My children should have a good life. Even after my death they should have a good life. That’s my expectation.
Thank you.




CMP/MN/MN/MTN/03
நான் பிறந்தது மன்னாரில் தான். நாங்க பதினோரு சகோதரங்கள். பதினோரு சகோதரத்துல எல்லாம் போய் இப்ப ஏழு சகோதரம் இருக்கிறோம். ஏழு சகோதரத்திலயும் ஒரு சகோதரம் இந்தியால இருக்கிற. மற்ற எல்லாம் இங்க எல்லா இடத்துலயும் கலந்து இருக்கிறாங்க. நான் மட்டும் தான் இந்த வீட்ட இருக்கிறன்.எனக்கு அஞ்சு புள்ளைகள்ல ரெண்டு புள்ளைகள் மோசம் போயிட்டு. மிச்சம் மூன்று புள்ளைகள் இருக்கு. மூன்று புள்ளைகள்லயும் ஒரு புள்ள கட்டிக்கொடுத்தது. ரெண்டு பொம்புளப்புள்ள இருக்குது. ரெண்டு ஆம்புள புள்ளைகள்ல எனக்கு ஒரு புள்ள வந்து 24 வயதில கிளைமோரில மோசம் போயிட்டு. மற்றப்பிள்ளை வெள்ளைவேன் கொண்டு கடத்தி புள்ள இல்ல. பள்ளிக்கூடத்துக்கு ஸ்கூலுக்கு போன புள்ள திரும்பி வரயில்ல என்ற வீட்ட. இந்த நிலைமையில அவர் போலியோ வருத்தம். அவருக்கு ஒரு கால் ஏலாது. இதைவிட என்ற குடும்பத்துல நான் சரிக்கஷ்டப்பட்டவ. ஆனா இன்னுமே எனக்கு கஷ்டமாவே இருக்கு. எண்ட நிலைமை. அவர் ஒரே குடிக்கிற. பிள்ளைகள். தூரத்துக்கு போக ஏலா. பயமாயிருக்கும். பொம்புள புள்ளைகள். ஒரு புள்ள ஓ எல் செய்றா. ரெண்டாவது புள்ள. மூத்த புள்ள ஓ எல் செய்திட்டு கொழும்புல வேல செய்றா. இதான் எண்ட பிரச்சினை.
என்ற பிள்ளை பள்ளிக்கூடத்து பஸ்ல கிளீனரா இருந்தவர். கிளீனரா முதல்ல எனக்கு விட விருப்பமில்லை. அவரு ஏழாம் ஆண்டு படிச்சவர். ஏழாம் ஆண்டு படிச்சு.. படிப்பு அவருக்கு ஏற மாட்டெண்டுட்டு. ஸ்கூலால கூப்பிட்டு சொன்னாங்க இவருக்கு படிப்பு ஏறுதில்லம்மா. வேறு என்னென்றாலும் தொழில் காட்டுங்க அவருக்கு. இப்பயே தொழில் காட்டுனா இவரு தொழில் படிப்பார் என்று. அது எனக்கு விருப்பமில்லை. எண்ட புள்ள படிக்கோணும். நான் படிக்கயில்லை. அதால எண்ட புள்ள படிக்கோணும் என்று எனக்கு ஆச. அவர் மாட்டெண்டுட்டார். தான் ஸ்கூலுக்குப் போக இல்லம்மா. நான் படிக்கயில்லம்மா என்று. அப்போ பள்ளிக்கூடத்தாலயும் சொன்னாங்க நிப்பாட்டுங்க. வேறு தொழில் செய்யுங்க என்று.
கரேஜுக்கு அனுப்பினோம் பிள்ளைய. கரேஜூலையும் வேல செய்ய மாட்டெண்டுட்டு. பஸ் அவருக்கு விருப்பம் வந்திட்டு. கிளீனரா போறது விருப்பம் என்று. கிளீனரா போக வேணாம். வேணாம் இப்படி பிரச்சினை நடக்கு வேணாம் என்க இல்ல இண்டைக்கு மட்டும் தான் என்று சொல்லிட்டு அவரு வெளிக்கிட்டு போன. 2007 நாலாம் மாசம் 23ஆம் திகதி அண்டைக்கு போனவர் தான்..அந்த செட்டிக்குளத்துக்கிட்ட இவர் கிளைமோருக்கு பலியாயிட்டார். அது போலீஸ் தான் சுட்டது என்ற பிள்ளைய. கிளைமோர் முதல் வெடிச்ச சி.டி.பி. பஸ்ல. ரெண்டாவது பஸ் போனது தனியார் பஸ். அதுல தான் இவர் போனது. தனியார் பஸ்ல போலீஸ் சுட்ட எண்ட பிள்ளைய. சுட்ட பிறகு எனக்கு சொன்னாங்க. காயம் என்று தான் சொன்னாங்கள்.. பிள்ளை மோசம் போயிட்டண்டு எனக்கு சொல்லேல்ல.
அது கிளைமோர் வெடிச்சது பின்பக்கம் அப்படியே இல்ல. இது பின்னுக்கு போன பஸ் தனியார் பஸ். அதுலதான் இவர் இதா போனவர். கிளீனரா. போன இடத்துலயே..அதுலயே நாலஞ்சு பேர்தான் தப்பினது. மிச்ச பேரெல்லாம் அதுக்குள்ளே ..ட்ரைவர் மோசம் போயிட்டார். இவர் மோசம் போயிட்டார். இன்னொரு பொடியன் ரெண்டு..ஒரு வயது போன ஐயாவும் மோசம் போயிட்டார். ஒரு பொம்பிளை ஒன்னு மோசம் போயிட்டு. நாலு பேர் செத்திட்டு..மோசம் போயிட்டு. மற்ற எல்லாம் தப்பியிருக்கிறாங்க.
நாங்க செட்டிக்குளத்துக்குப் போனவுடனே முதல் ஆஸ்பத்திரிக்குத்தான் போனோம். போக...அவங்க சொன்னாங்க அம்மா இங்க இல்லம்மா..பன்னிரண்டு மணியாகுது. வவுனியாக்கு போங்க என்று. அதோட பன்னிரண்டு மணிக்கு வார்டு பாக்க போன. புள்ள அடிபட்டண்டவுடனே எனக்கு நடக்க ஏலாம போயிட்டு. எனக்கு அங்கால ஒண்டும் தெரியாது. அதுக்குப்பிறகு என்ன நடந்ததென்று தெரியா. அதுக்குப்பிறகு பொடிய தூக்கிக்கொண்டு வரக்கொள்ளையும் வேன்ல தான் என்ன ஏத்திட்டு வந்தாங்க இங்க. கொண்டுவந்த பிறகு எனக்கு அங்கால கதைக்கவும் ஏலுதில்ல. சொல்லவும் ஏலுதில்ல. அப்படியொரு புள்ளைகளா நான் வளர்த்திட்டேன். அந்தப் புள்ளைகள் அப்படியொரு கெட்டிக்கார புள்ளைகள் எண்டா... நான் இவ்வளவு படிக்கயில்லை. ஆனா..ஒத்த சொல்லு தெரியா. எனக்கு எழுதத் தெரியாது. என்ற புள்ளைகள அவ்வளவு தூரத்துக்கு நான் படிக்க வெச்சு இவ்வளவு தூரத்துக்கு வெச்ச பிறகு கடவுள் இப்படி வெச்சார். சரியான கவலை.
கார்த்திய 2006...2004ஆம் ஆண்டு கடத்திட்டு போனவங்க.அவரிட விபரம் என்னென்று கேட்டா...நாங்க வந்து சாந்திபுரத்துல இருந்தோம். அப்ப இவரு வெள்ளன ஸ்கூலுக்கு போகப்போறண்டு சொல்லக்கொள்ள நான் சொன்னேன் தம்பி ஷேர்ட் எல்லாம் அங்க வீட்டை கழுவிப்போட்டு அயன்பண்ணி போட்டுட்டு போங்கன்னு தான் சொல்லிட்டு விட்ட. விட்ட புள்ள திரும்பி வரவே இல்ல என்ற வீட்டை. ரெண்டு,மூணு நாள் சென்ற பிறகுதான் சொன்னாங்க அந்த...சந்தியில் வெச்சு உங்கட புள்ளைய வெள்ளை வேன்ல கடத்தின என்று. வேன் கடத்தின என்று.
கடத்தின என்று எனக்கு சொல்லியிருந்தா நான் தேடியாவது பாத்திருப்பேன். அவன்..அந்த..மகனின்ற பிரண்ட்ஸ் பொடியன் தான் எனக்கு சொன்னது இந்த இடத்திலதான் வெச்சு கடத்தின. என்னைப்பிடிக்க வந்த. நான் பாஞ்சு ஓடிட்டன். இவன் புடிபட்டுட்டான் என்று.
எண்ட புள்ள புடிபட்டுட்டு. புடிபட்டவுடனே என்ற புள்ளய நா தேடினா.. நானும் எல்லா இடமும் தடவிப்பாத்தேன் கிடைக்கல்ல என்ற புள்ள. அப்ப போலீசில் சொல்லலாமென்று சொன்னா.. போலீசில் சொல்ல ஏலான்று சொன்னாங்க. ஏனென்றா நீங்க முதல் புள்ள அந்த கிளைமோர் வெடிச்சு மோசம் போனதுதானே. இது போலீஸ் சுட்டது. இப்ப போனீங்க என்றா பிரச்சினை. போலீஸ் என்ட்ரி போடாதீங்க என்று. அதால போலீஸ் என்ட்ரி போடாம இருந்ததால என்ற புள்ள இருக்கு..இருக்கு என்றே நான் இருக்கிறன் பள்ளிக்கூடத்தாலயே எனக்கு செர்டிபிகேட் தந்திட்டாங்க. என்ற புள்ள பள்ளிக்கூடத்துக்கு இத்தனையாம் திகதில இருந்து வரயில்ல. அத நான் வெச்சிருக்கிறன். வேற எந்தவிதமான இதுவும் இல்ல அவரிட.
நான் இங்க இருந்து கிளிநொச்சிக்கு போன. கிளிநொச்சில போய் இருப்பாங்கன்னு போன. பிறகு பார்த்தா புதுக்குடியிருப்பு போனென்று சொன்னாங்க. புதுக்குடியிருப்பு போய்ப்பார்த்தன். இயக்கம் கொண்டு போயிருக்கம்மா பாருங்க என்று. நான் அங்க எல்லாம் போய்ப்பார்த்தன். இல்லையென்றே சொல்லிட்டாங்க. பிறகு கடைசியா வந்து போர்க் கண்காணிப்புக்குழு இருந்தது முதல் மன்னாரில. அவங்களிட்ட போய் அழுதேன். என்ற புள்ளய தாங்க. அவரும் ஏலாத மனுஷன். என்ற புள்ளைகள் தான் எண்ணெயை பாக்கோணும். என்ற புள்ளய தர சொல்லி. ஆனா அவங்க சொன்னாங்க " அம்மா நாங்க போய்ப்பாக்க ஏலா. இயக்கத்துல நாங்க போய்ப்பாக்க ஏலாது. பார்த்தா உங்களை கூட்டிக்கொண்டு போய் காட்டுவோம் என்று. அவங்களும் என்ன கூட்டிக்கொண்டு போக்கவுமில்லை. அவங்க பாக்கவும் இல்ல. எண்ட புள்ளைக்கு என்ன நடந்த என்று எனக்கு தெரியாது. இப்பயும்.
இடம்பெயர்ந்தோம். நாங்க எருக்கலம்பிட்டிக்கு போனோம். எருக்கலம்பிட்டில போய் இருந்தோம். பிறகு இங்க இருக்கம்மா..தள்ளி ஒரு வீட்டில இருந்தோம் கனநாள். இஞ்ச ஆமி இருக்கென்று சொல்லி பயத்துல. ஆமி இருக்கு இருக்கென்றே சொல்லி இந்த ராவுல நம்ம இருக்கேலா. பொம்புளைகளுக்கு. நாங்க தள்ளித்தள்ளித்தான் இருந்தோம். இந்த வீட்டில இருக்கேல்ல. அதுக்குப்பிறகு தான் இங்க வந்தோம்.
கல்யாணம் கட்டின பிறகு அம்மா எனக்கு தந்த காணி. இதுக்குப்பிறகு எனக்கு எந்தவிதமான இதுவும் அரசாங்கமோ..யாருமே எனக்கு உதவி செய்ய இல்ல. ரெண்டு புள்ளைகளும் மோசம் போனது தான் . ஆனா எந்த விதமான உதவியும் எனக்கு இல்ல. ஆனா..புள்ள..மூத்தது மோசம் போகக்கொள்ள ரிஷாட் அவரு வந்து ஒரு அம்பதாயிரம் காச இவருக்கு.. எங்கட மனிசனின்ற கையில கொடுத்திருந்த. அவரு நல்லா குடிச்சிருக்கிற. புள்ள மோசம் போனா அவருக்கும் கவலை தானே? துன்பம். ரெண்டு புள்ளைகள் என்று. நல்லா குடிச்சிருக்கிற. இதுதான் எங்களுக்கு உதவி. போனமுறையும் வந்து இவங்க விபரம் எடுத்தாங்க. புள்ளைகள் இப்படி மோசம் போன விபரங்களை கேட்டு ..இவங்களிட்ட கடிதம்..லெட்டர் இருக்கு. அந்த லெட்டர் எல்லாம். எந்த விதமான விபரம் இல்ல.
நான் என்ற புள்ளைகள் நல்லா இருக்கோணும். நான் இல்லாத காலமும் என்ற பிள்ளைகள் நல்ல இருக்கோணும் என்றது தான் என்ற எதிர்பார்ப்பு.
நன்றி.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License