They thought I am dead

Experiential sharing of an ex combatant


ඔවුන් හිතුවේ මම මැරිලා කියලා

ஒரு முன்னாள் போராளியின் அனுபவ பகிர்வு


நான் இறந்துவிட்டேன் என்று அவர்கள் நினைத்தார்கள்

හිටපු සටන්කරුවෙකුගේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම



CMP/MN/MW/VID/01
I was born in Vidaththal Theevu on 1989, June, 22nd. My mother is working in a hospital. My father is a mechanic. I studied at Maththiyamahavithyalayam. I studied in Vidaththal Theevu, up to O/L. When I was studying A/L, during the LTTE trouble, they recruited 18 year old people to their movement. During that time they caught me at home and forcefully made me join them.
They catch 18 year old people to their Movement, but I was 17 then. Then I was hiding in a temple. We sleep with our uniforms on, thinking that they wouldn’t catch us with that dress. They will not come inside the temple, because it was the bishop’s order, that they shouldn’t come and catch people inside the temple. So then they would take the parents, lock up fathers and mothers demanding their children and forcefully recruited.
I was with the Movement for about 2 years. Since it was war time, there were trainings and fights. When they take us there, the thoughts of our parents would be haunting us. They took us and put in camps, we suffered without proper food. Later they changed us to another camp and trained us for three months and sent us off for battle fields. When we were with our parents we had a carefree life, but here we won’t get food on time and wouldn’t get medicines when we get wounded.
I studied medicine in the Movement. One girl got injured. So there was an urgent call for people to work under medicine team, so I was sent with another two girls. We got caught in a shell attack when we were walking in a line behind the Puthukkudiyiruppu bus stand. I was standing under a Bo-tree. I got wounded in my leg and hand. I lost my leg on the spot. I rolled over to this side. The tree was burnt. I fainted and didn’t realize that I lost my leg. Later they took me to the hospital. There when they were fixing a leg for me it was attacked by Kibir air plane. Then from there they took us to different places. They thought I was dead and left me with other corpses. But then when they came to take the bodies they found out that I was groaning. After realizing that I was alive they took me back and treated. I didn’t think that I would come alive through that.
We got displaced and came to this side facing so many difficulties. We didn’t know where our parents were. They let out the newly recruited first to go, till the end they didn’t let us go inside (area under government control???). When I got injured my parents came and asked them to release me, but they didn’t hand me over. They didn’t let us to go, but the more senior people have come inside. I didn’t have my parents to come and take me. Finally a brother I know came and asked me whether I wasn’t going inside. I told him “I don’t have my parents, how can I go? I don’t have a leg. I can’t walk”. He then carried and left me at Oamanthai and sent me to Rehabilitation. There I was down with Typhoid for 21 days, and I was admitted in a hospital. Then I came here. My parents came to see me only after 3 months. They were also staying in a camp, so they could come and see me only if they were permitted to go out. Only after the resettlement process started they were permitted to come and see us. That too for once in 15 days.
On 11th May, 2009, when everyone came inside the controlled area I too have come and stayed in the Rehabilitation camp. I sat for my A/L exams there and got three passes. In that situation we were mentally affected and were suffering without proper food. We came out after one month being in the disabled section. Initially there were so many issues. While in detention we were not allowed to talk to people. Once when we were talking to someone, the army commander caught us and warned us not to talk. We didn’t have permission for that. Every month they would come and register our presence. They were registering us till the government got changed. After the change of government till now we don’t face any issues. We are going to places and doing things like a normal person.
We came over here only after all the troubles got cleared. We got resettled in our own place. So far government hasn’t given any help to me. No livelihood support or money given for my disability. Some people have received livelihood support and loans. But still they come and register us.
After losing my leg, I couldn’t accept my disability. Later in the camp I met people without both legs and both hands. Looking at them I consoled myself. Otherwise I wouldn’t have got consoled. After coming here, he got interested in me. I wasn’t interested; since I don’t have a leg I thought marriage is useless to me. But later my family and village people convinced me saying that he would take care of me well. Later I got married to him. My husband was a friendly easy going man. We don’t quarrel; he would adjust well with me. I would finish all the house work in the morning before leaving to work. If I couldn’t do, he would cook and take care of the children. He goes for fishing.
I got married in 2012. I have one child. Now I work in an organisation. I work in a small Fishermen Organisation. Though I don’t have a leg, I do all my work on my own. I am able to live like a normal person. Because I got married I received support from the Indian Housing Scheme.
I don’t like other people looking down on me since I am disabled. I can do everything, I have talents. I should always be working and keep me mentally healthy. I shouldn’t get mentally disturbed; if I am alone I would start thinking a lot. My child should study well. I am working in a 5 year project. I would continue to work there. It would be good if I get a government job, I am trying for it.




CMP/MN/MW/VID/01
நான் விடத்தல் தீவிலதான் 89ம் ஆண்டு 6ம் மாதம் 22ம் திகதி பிறந்தனான். எங்கட அம்மா ஆஸ்பத்திரியில் வேல செய்யிறா. அப்பா மெக்கானிக். படிச்சது மத்திய மகா வித்தியாலயத்தில விடத்தல் தீவிலதான் O/L வரை படிச்சனான். A/Lபடிச்சுக் கொண்டிருந்த காலத்தில டுவுவுநு பிரச்சனை இருந்த நேரத்தில 18 வயதில இருக்கிற ஆள இயக்கத்திற்கு இணைச்சவங்க. அந்த நேரம் என்னையும் வீட்டில இருந்து கட்டாயமாக பிடிச்சுக் கொண்டு போனவங்க.
18 வயசிலதான் எல்லாரையும் இயக்கத்திற்கு பிடிக்கிறது. அப்ப எனக்கு 17 வயது. அப்ப நான் கோயிலில ஒளிஞ்சிருந்தன். எல்லாரும் யூனிபோமோடதான் படுத்திருக்கிற யூனிபோமோட எங்கள பிடிக்க மாட்டாங்க என்டு அங்க கோயிலுக்குள்ள வரமாட்டாங்க. ஏனென்றா பிசப் ஓடர் கொடுத்திருந்தவர் கோயிலுக்குள்ள வந்து பிடிக்கக் கூடாது என்டு. அவங்க பிறகு வலுக்கட்டாயமாக பேரண்ட்ஸ்ச கூப்பிட்டு அப்பாமார அடைச்சு அம்மாமார அடைச்சு பிள்ளைகள நீங்க தரவே வேண்டும் என்று சொல்லி பைபோஸாசவே எழுதி எடுத்தவங்க.
2 வருசம் இயக்கத்தில இருந்தது. போர்க்காலம்தானே. பயிற்சிகள் சண்டைகள். அங்க கொண்டு போனா எங்களுக்கு அம்மா அப்பா நினைவாகத்தானே இருக்கும். கொண்டு போனோன எங்கள ஒரு முகாமுக்குள்ள விட்டு சாப்பாடுகள் இல்லாமல் நாங்க சீரழிஞ்சு கஸ்டப்பட்டோம். அதற்குப் பிறகு வேற முகாமுக்கு மாற்றி 3 மாதமாக பயிற்சி தந்து திருப்பி சண்டையில கொண்டு போய் விட்டு இங்க அம்மா அப்பாவோட இருக்கேக்க நாங்க சுதந்திரமா திரிஞ்சனாங்கதானே அங்க சாப்பாடுகள் எங்களுக்கு டைமிற்கு வராது காயப்பட்டா எங்களுக்கு மருந்துகள் கிடைக்காது
இயக்கத்தில மெடிசின்தான் படிச்சனான். ஒரு பிள்ள காயப்பட்டுட்டுது. உடனடியா மெடிசினுக்கு ஆள் தேவ அனுப்புங்க. என்டு சொல்ல என்னையும் இன்னும் 2 பிள்ளைகளையும் அனுப்பினது. புதுக்குடியிருப்பு பஸ் ஸ்டேண்ட்டுக்கு பின்னால ஒருவர் பின்னால ஒருவர் போய்க் கொண்டிருந்தோம். இடையில போய் கொண்டிருக்கேக்க செல் அடிச்சது. நான் ஒரு பெரிய ஆல மரத்திற்க கீழதான் நிண்டு கொண்டிருந்தது அந்த இடத்த பார்த்து அடிச்சோன எனக்கு அதிலேயே கால் போயிட்டுது கையிலயும் காயம் கால்லயும் காயம் உடன நான் உருண்டு இங்கால வந்திட்டன் அந்த மரம் அப்படியே எரிஞ்சிட்டுது. எனக்கு கால் இல்லாதது உடன தெரியேல உடன மயங்கிட்டன். பிறகு என்ன ஏத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவங்க. அங்க கால் செய்து கொண்டிருக்கிறான். அந்த ஆஸ்பத்திரியில கிபிர் அடிக்கிறான். பிறகு அதில இருந்து வேற வேற இடத்திற்கு கொண்டு போகிறாங்க நான் செத்திட்டன் எண்டு பொடி என்டு பொடிகளோட போட்டுட்டாங்க பொடிய எடுக்க வரேக்க பார்க்கையில நான் அணுங்கிக் கொண்டிருந்தன். உயிரோட இருந்த பிள்ளைய போட்டிட்டோம் என்று பிறகு எடுத்துக் கொண்டு போய் டிரீட்மண்ட் செய்துதான் என்ன காப்பாற்றினவங்க. நான் நினைக்கேல அந்த நேரம் உயிரோட இருப்பன் என்டு
சரியான கஸ்டப்பட்டுதான் நாங்க இடம் பெயர்ந்து இங்கால வந்தனாங்க. அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்கிறாங்க என்று தெரியாது. புதுசா பிடிச்சுக் கொண்டு போனவங்களதான் முன்னுக்கு விட்டாங்க எங்கள கடைசி மட்டுமே உள்ளுக்குள்ள போக விடேல. நான் காயப்பட்ட நேரம் எங்கட அம்மா அப்பா வந்து கேட்ட நேரம் குடுக்கேல. எங்கள குடுக்காம பெரிய ஆட்கள் உள்ளுக்குள்ள வந்திட்டாங்க நான் கடைசியா எனக்கு அம்மா ஆட்கள் இல்ல. தனியா எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணா வந்து கேட்டவர் என்ன நீங்க போகேலயா என்டு. நான் அம்மா ஆட்கள் இல்ல நான் என்ன என்டு போறது எனக்கு ஒரு கால் இல்ல. நான் நடக்கமாட்டன் என்று சொல்ல அந்த அண்ணாதான் என்ன தூக்கி கொண்டு வந்து ஓமந்தையில விட்டு புனர் வாழ்விற்கு அனுப்பி எனக்கு 21 நாள் நெருப்புக் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில வச்சி பிறகு அங்க இருந்து வந்தது. 3 மாதத்திற்கு பிறகுதான் அம்மா அப்பா வந்து எங்கள பார்த்தவங்க. அவங்களும் முகாமில இந்தவங்கதானே. அவங்களையும் விட்டாத்தானே எங்கள பார்க்க வருவாங்க. மீள் குடியேற்றம் வந்த பிறகுதான் எங்கள வந்து பார்க்கலாம். அதிலயும் 15 நாட்களுக்கு ஒருக்காதான் வந்து பார்க்கலாம்.
2009ம் வருடம் 5ம் மாதம் 11ம் திகதி எல்லாரும் கட்டுப்பாட்டுக்குள்ள வரேக்க நானும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்;தனான். வந்து புனர்வாழ்வு முகாமில இருந்தனான். அங்;கதான் என்ர A/L எக்சாம் எழுதினான். எழுதி 3 பாடம் பாஸ் செய்தனான். அந்த சூழல்ல எங்கட மனநிலை பாதிக்கப்பட்டிந்ததுதானே சாப்பாடு இல்லாம கஸ்டப்பட்டதுதானே நாங்க ஆரம்பத்திலேயே ஊனமுற்ற பகுதியில 1 மாசத்தாலேயே வெளியே வந்திட்டோம். ஆரம்பத்தில ஓரே பிரச்சனை இருந்தது. தடுப்பில இருந்து ஆட்களோட கதைக்க ஏலாது அப்படி கதைச்சுக் கொண்டிருக்கேக்க ஆமி கொமாண்டர் எங்கள பிடிச்சு நீங்க அப்படி எல்லாம் கதைக்க ஏலாது என்று சொன்னவர். அதற்கு எல்லாம் அநுமதி இருக்கேல. ஓவ்வொரு மாசமும் வந்து பார்ப்பாங்க இருக்கிறமா இல்லையா என்று பதிவு எடுப்பாங்க. ஆட்சி மாறுமட்டும் வந்து வந்து பதிவெடுப்பாங்க. ஆட்சி மாறின பிறகு இவ்வளவு காலமாக எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. சராசரி மனிசராகவே எல்லா இடமும் போய் வாரம் எல்லாம் செய்யிறம்.
கடைசியா எல்லாப் பிரச்சனையும் முடிஞ்ச நேரத்திலதான் இங்கால இடம் பெயர்ந்து வந்தனாங்க. மீள் குடியேறி எங்கட சொந்த இடத்திற்கு வந்திட்டோம்.அரசாங்கத்தால இதுவரை எனக்கு எந்தவித உதவியும் செய்யேல. ஊனமுற்றதுக்கு எதுவித காசோ வாழ்வாதார உதவியோ இதுவரைக்கும் இல்ல. ஒரு சிலபேருக்கு கொடுத்திருக்கிறாங்க. வாழ்வாதார உதவிகளும் கடன் உதவிகளும் கொடுத்தி;ருக்கிறாங்க. ஆனா இப்பயும் வந்து பதிவு எல்லாம் எடுக்கிறாங்க
கால் இல்லாம போனோன என்ன நானே ஏற்றுக் கொள்ளேல. முகாமிற்கு வந்து பார்த்தோன இரண்டு கால் இல்லாம இரண்டு கை இல்லாம அப்படியான ஆட்களப் பார்த்து பார்த்து நான் என்ன நானே தேற்றிக் கொண்டன் அப்படி இல்லாட்டி நான் தேற்றி இருக்க மாட்டன் பிறகு இங்க வந்ததும் அவராவே என்ன விரும்பி கேட்டவர் எனக்கு விருப்பம் இருக்கேல கால் இல்லதானே நான் கல்யாணம் முடிச்சு என்ன செய்யப் போறன் என்டு பிறகு விட்டாலேயும் ஊர் ஆள்தான் முடிச்ச நல்லா வைச்சிருப்பான் என்று சொல்லித்தான் நான் கல்யாணம் முடிச்சனான். சந்தோசமா ஒரு பிரச்சனையும் இல்லாம அனுசரிச்சு போற ஆளாத்தான் இருக்கிறார். நான் வேலைக்குப் போவன் வெள்ளன எல்லாம் செய்து வைச்சுட்டு போவன் அப்படி இல்லாட்டி அவர் சமைச்சு வச்சிருவார் பிள்ளையை பார்த்துக் கொள்வார் அவரும் கடற்தொழிலுக்கு போகிறேர்.
2012ம் ஆண்டு கல்யாணம் முடிச்சனான். எனக்கு ஒரு பிள்ளை இருக்கு. இப்ப ஒரு நிறுவனததில வேலை செய்யிறன். சிறு மீனவ சம்மேளத்தில வேலை செய்யிறன். ஒரு கால் இல்லதான் ஆனா என்ர வேலைகள நானே செய்து கொள்றன். சராசரி மனிசர் போல நான் வாழ உதவியா இருக்குது. கலியாணம் முடிச்சதால இந்தியன் வீட்டுத் திட்டம் கிடைச்சது.
எனக்கு எப்பவுமே எனக்கு ஏலாது என்று யாரும் என்ன தாழ்த்தி வைக்கிறது விருப்பமில்ல எனக்கு எல்லாமே செய்ய ஏலும் என்ன எண்டாலும் செய்யக் கூடிய டெலண்ட் இருக்கு எப்பவுமே எனக்கு ஒரு வேலையில இருக்கோணும் என்ர மனநிலையை நான் நல்லா வச்சிருக்கோணும் என்ர மனநிலை பாதிக்கப்படக் கூடாது. நான் தனியா இருந்தா பல யோசனை வரும் என்ர பிள்ளை நல்லா படிக்கோணும் இது 5 வருட புரொஐட் தொடர்ந்து செய்வன் . ஒரு கவர்மெண்ட Job கிடைச்சா நல்லம் முயற்சி செய்து கொண்டிருக்கிறன்





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License