My brother was killed

Experience sharing of war life


මගේ සහෝදර වාස් ගිලට්

යුද්ධයේ හවුල් වීම අත්දැකීම


என் சகோதரன் கொல்லப்பட்டான்

போர் கால வாழ்க்கை தொடர்பான அனுபவ பகிர்வு



CMP/MN/MW/VID/02
I was born and brought up in a village called Periyamadu in Mannar district. I studied up to O/L there. My husband is also from Periyamadu, ours was a love marriage. In the year 1998 there was a riot, LTTE and TELO had a dispute, and my husband’s brother supported TELO. My elder brother was also supporting TELO, therefore they took him away and shot him. They started looking for my brother-in-law. He went on hiding. Due to all these issues, they have decided we shouldn’t be staying here and sent us away to Vidaththal Theevu village. They didn’t let us even to do the burial. They sent us away without giving us time to prepare or take anything. We requested them to let us do the burial, but they said “you cannot do that, you get out, you don’t have the rights”.
With that, we came here to Vidaththal Theevu, in December, 1998. I was pregnant then with my third child. I gave birth after 18 days of coming here. Since it was not our village we faced so many difficulties. I was facing economic hardships even when i got married, after coming here also we suffered. I was in agony and was crying thinking when we would be able to go to our village. Later with the help of the people from this village we got progressed a bit. In addition to fishing we were also running a small shop here. When people started to go to India, we opened a small tea shop. From that income we brought up our children, educated them. Through our own efforts we were progressing in life.
When things were like that, later problems between LTTE and military began. Since our house was built in the sea shore, it got damaged several times due to this trouble. We faced bomber attacks. They might have assumed that the tea shop would be often visited (by LTTE), so it would be destroyed, and then we would rebuild, again it would get destroyed, it went like that. Several times we changed places.
They took one of my sons to the Movement, under the policy of ‘one person from each family’. I had only one son and three daughters. He was in the Movement for 6 years, he went there when he was 15 and later they brought him to us as a dead body, when he was 27. Till then they didn’t show him to us. Once he escaped and came to us since he didn’t like it over there. They again forcefully took him away.
After that we faced a huge displacement. After that displacement took place we lost our livelihood, our financial condition got worst. When we move from place to place we were not able to do any work. Having the daughters with us, it’s not possible to do any kind of work. There were shell attacks at each place we get landed. It’s not possible to buy things at shops, cannot do any job. My husband was lame in his leg, he could only do small jobs. Cannot go to sea, cannot even do small jobs. Some organisations gave us some things, pots and pans. They gave us cloths. But how many places we could carry those things with us? One day we would put up a hut and stay, the next day there would be shell attacks. What could we take with us? - the things or the children? We would take few things here and there and run away. Initially we had vehicles - auto, motorbike, so we were able to take some things carefully. But at the later stages we were not able to take anything, can’t even run. Finally from a place called Vattuvaayil, we held our children’s hands and ran away without taking anything with us. That’s how we were able to come to this side without any harm to my children or husband.
First we were at Iluppakadavai. Within a month we got displaced from there and went to Thevanpitty. Later to Tharmapuram, Vellangkulam, Vanni like that we would stay one day at a place and then run away from there. Likewise we went to so many places, went through so much difficulty and reached Vavuniya, empty handed – without a thing with us. Finally we went inside the military controlled area.
Later they brought us to this village. But the army was occupying my house. They have taken over the sea side lands and put up camps there. Since we didn’t have a place to stay and I was already in hardship I borrowed some money from one of my brother, bought this land and stayed in the house we made. After the Indian Housing Scheme was introduced, they have built this house for me.
When we were with the Movement, all our earnings went for taxes. Now we are stuck with our debt issues. In future we should be peaceful without any debt issue. Since there are no troubles now we are able to have a peaceful sleep. It was not like that before; when a Kibir plane comes while we were eating we would leave the plate and run. When we come back, the food would be eaten by a dog or a cat. People would take – cannot lock the drawers and the money. Whether it’s a Kibir or a bomber plane it would always attack the seashores. Since we were living in the seashores our legs were all wounded by the running we did. We would runaway hearing even a small sound.
Eldest daughter was educated and married. She got teaching appointment. The other one did A/L and does Sinhalese, English, and Computer etc. She is facing the challenge of unemployment. I got married off my third daughter last month; second daughter is not married yet.




CMP/MN/MW/VID/02
நான் மன்னார் மாவட்டத்த சேர்ந்த பெரியமடு என்ட கிராமத்திலதான் பிறந்து வளர்ந்தனான். அங்கயிருந்துதான் O/L வரைக்கும் படிச்சனான். என்ர கணவரும் பெரிய மடுதான். அவர நான் விரும்பித்தான் கல்யாணம் செய்தனான். 1998 இல ஒரு கலவரம் LTTE க்கும் டெலோவிற்கும் பிரச்சனை அதில என்ட கணவருடைய தம்பியார் டெலோவிற்கு சப்போர்ட்டாக இருந்தவர். என்ட அண்ணனும் டெலோவோட இருந்தவர். இதன் காரணமாக எங்கட அண்ணன கொண்டு போய் சுட்டுப் போட்டாங்க சுட்டுப் போட்டு இவர்ட தம்பிய தேடின இடத்தில அவர் ஓடி ஒளிச்சிட்டேர். அதனால இவங்க எங்கட ஊரில இருக்கக் கூடாது என்டு விடத்தல் தீவு கிராமத்திற்கு எங்கள அனுப்பி வச்சிட்டாங்க. போட்டது போட்டபடி எங்கள பொடிய தாக்கக் கூட விடேல. தாக்கம் செய்திட்டு போறோம் என்டு கேட்கப் போன இடத்தில அதெல்லாம் நீங்க செய்ய ஏலாது வெளியேறு உங்களுக்கு உரிமையில்ல என்டு சொல்லிட்டாங்க.
நாங்க அதோட 1998 இல இந்த விடத்தல் தீவுக்கு மார்கழி மாதம் வந்தனாங்க. வரேக்க நான் கர்ப்பிணியாக இருந்தன். 3 வது பிள்ள. இங்க வந்த 18 நாளில பிறந்தது. எங்கட கிராமம் இல்லதானே எனக்கு சரியான கஸ்டம் அப்ப கல்யாணம் முடிச்ச முதலிலும் என்னட்ட ஒரு பொருளாதாரம் இல்லாம இருந்தது. இங்கேயும் வந்து சரியான கஸ்டப்பட்டு எப்ப நான் ஊருக்கு போவன் என்டு அழுது வேதனையோட இருந்தனான். பிறகு இந்த ஊர் சனங்கள் உதவி செய்து நாங்க ஓரளவிற்கு முன்னேறி கடற்தொழிலும் செய்து கொண்டு சிறிய கடையும் நடத்திக் கொண்டு வந்தம். இந்தியாவிற்கு சனங்கள் போகேக்கதான் நாங்க ஒரு தேத்தண்ணி கடைய உருவாக்கினாங்க. அதில இருந்து பிள்ளைகள வளர்த்து எல்லாரையும் படிப்பிச்சு சீவியத்திற்கு எங்கட முயற்சியில நாங்க முன்னேறி வந்து கொண்டிருந்தனாங்க.
இருக்கும்போது பிறகு LTTE க்கும் ஆமிக்கும் பிரச்சனை ஒன்டு வந்ததால எங்கட வீடுகள் பல தடவைகள் உடைக்கப்பட்டது. ஏனென்றா நாங்க கடற்கரையிலதான் வீடு கட்டியிருந்தோம். பல தடவைகள் பொம்பர் அடிக்கும் தேத்தண்ணி கடைதானே அங்க வந்து போவாங்க எண்டு அடிக்கிறதும் உடைக்கிறதும் நாங்க போய் கட்டறதும் அப்படியாக இருந்தது நாங்க எத்தனையோ தடவைகளில இடம் மாத்தி மாத்தி இருந்தோம்.
வீட்டுக்கு ஒரு பிள்ள வேண்டும் என்று ஏன்ர மகன் ஒருத்தர இயக்கத்திற்கு கொண்டு போயிட்டாங்க ஒரு மகனும் 3 பொம்பிள பிள்ளைகளும்தான் எனக்கிருந்தது. அவர் இயக்கத்திற்கு போய் 6 வருசம் 15 வருசத்தில போனவர் 27 வயசில பொடியாக கொண்டு வந்து தந்தவங்க. அதுவரைக்கும் எங்களுக்கு காட்டேல. பிள்ளைக்கு விருப்பமில்லாம ஒருமுறை ஓடி வந்தது. இவங்க திருப்பியும் வந்து வில்லங்கமாக பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்க
அதற்குப் பிறகு நாங்க பெரிய ஒரு இடம் பெயர்வை சந்திச்சோம். அந்த இடம் பெயர்விற்கு பிறகு எங்கட பொருளாதாரம் எல்லாம் அழிஞ்சது. ஒவ்வொரு இடம் மாற மாற தொழில் இல்ல பொம்பிள பிள்ளைகள வச்சுக் கொண்டிருந்தது. வேற ஒரு தொழிலும் செய்ய ஏலாது இடம் பெயரேக்க ஒவ்வொரு இடத்திலும் செல் அடி கடைகள் வழிய சாமான் வேண்டேலாது தொழில் செய்யேலாது எங்கட அவருக்கு கால் ஏலாது ஆகையினால சின்ன சின்ன தொழிலைத்தான் செய்யலாம் கடலுக்க போகேலாது சின்ன தொழில்களும் செய்ய ஏலாது சில நிறுவனங்கள் எங்களுக்கு சாமான்கள் பொதிகள் சட்டி பானைகள் எல்லாம் கொண்டு வந்து தந்தவங்க உடு புடவைகள் எல்லாம் தந்தவங்க அதையெல்லாம் எத்தனைக்கென்டு கொண்டு காவுறது. முதல் நாள் கொட்டில போட்டு இருக்கேக்க அடுத்த நாள் அடிப்பாங்க செல் அடிச்சோன அந்த சாமான தூக்கிறதா பிள்ளைகள கொண்டு ஓடுறதா என்டு இங்க கொஞ்ச சாமானும் அங்க கொஞ்ச சாமானுமா ஓடுறது. முதல்ல எங்களுக்கு வாகனங்கள் ஆட்டோ மோட்ட பைக் நின்டது இதுகள்ல சாமான்கள ஓரளவு பக்குவப்படுத்திக் கொண்டு போனனாங்க கடைசியான நேரத்தில எதையும் கொண்டு போகேலாது ஓடவும் ஏலாது கடைசியா வட்டுவாயில் என்ர இடத்தில போயிட்டு ஒன்றையுமே எடுக்க ஏலாது ஆளையாள் பிள்ளைகளை கையில பிடிக்கிறதோட ஓடிப் போனதால பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொண்டு புருசனுக்கும் காயங்களோ எதுவுமே இல்லாம கொண்டந்து இங்க சேர்த்தோம்.
இங்கேயிருந்து இலுப்பக்கடவையில முதலாவது இருந்தோம் அங்கயிருந்து ஒரு மாதத்திற்குள்ளேயே திரும்ப எழும்பி தேவன்பிட்டி போனோம் பிறகு தர்மபுரம் வெள்ளாங்குளம் வன்னி என்று ஒருநாள் இருக்கிறது பிறகு எழும்பி ஓடுறது இப்படி நிறைய இடங்களுக்கு போய் சரியான கஸ்டப்பட்டுக் கொண்டு பொருள் பண்டம் ஒன்றும் இல்லாத நிலையில நாங்க வவுனியாவிற்குள்ள போனோம் கடைசியில ஆமிட கட்டுப்பாட்டுக்குள்ள போய் சேர்ந்தோம்.
பிறகு அங்க இருந்து திரும்ப கொண்டு வந்து இந்த ஊரில எங்கள விட்டாங்க விட்டா என்ர வீட்டில ஆமி கடற்கரை ஓரத்தில ஆமி வந்து பிடிச்சு தங்கட காம்புகள போட்டுக் கொண்டு இருக்கிறாங்க எங்களுக்கு இருக்க இடமில்லாததாலேயும் ஏற்கனவே கஸ்டப்பட்டு வந்தனான். போய் என்ர சகோதரர் ஒருத்தர்ட தான் கடனாக தாங்க காசை தாறன் என்டு சொல்லி சொல்லி இந்த காணிய வேண்டி வீடு அமைச்சு இருந்தனாங்க இந்தியன் வீட்டுத் திட்டம் வந்ததற்குப் பிறகு எனக்கு இந்த வீட்ட கட்டி தந்திருக்கிறாங்க
இயக்கத்தோட இருக்கேக்க உழைச்சு உழைச்சு வரி கட்டினம். இப்ப வந்து கடன் தொல்லையில இறுகி போய் இருக்கிறம். எதிர்காலத்தில கடன் தொல்ல இல்லாமல் நிம்மதியா இருக்கோணும். இப்ப பிரச்சன இல்லதானே. நாட்டுக்குள்ள நிம்மதியா படுக்கிறம் முந்தி படுக்கேலாது சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க கிபிர் வந்தது எண்டா சாப்பிட்ட பீங்கானையும் விட்டுட்டு ஓட வேண்டியதுதான். எங்கேயாவது போய் கிடந்துட்டு வந்தா இங்க நாய் தின்னுரும் பூனை தின்னுரும். ஆட்கள் எடுத்துருவாங்க காசெல்லாம் லாச்சியெல்லாம் பூட்டவே ஏலாது நாங்க கடற்கரையில இருந்ததால கிபிர் வந்தாலும் பொம்பர் வந்தாலும் கடற்கரையிலதான் அடிக்கும் ஓடி ஓடியே கால்கள் எல்லாம் காயப்பட்டுட்டு. சின்ன சத்தம் கேட்டாலும் ஓட வேண்டியதுதான்
மூத்தவ படிச்சு அவ கல்யாணம் செய்திருக்கிறா. அவவிற்கு டீச்சிங் கிடைச்சிருக்கு மற்றவ A/ L படிச்சுப் போட்டு இங்கிலீஸ் சிங்களம் கம்பியூட்டர் எல்லாம் செய்வா. வேலையில்லாத திண்டாட்டத்தில இருக்கிறா 3 வது மகள போன மாதம் கல்யாணம் கட்டி கொடுத்திட்டன் இரண்டாவது பிள்ள இன்னும் கட்டேல






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License