They tortured us badly

Miserable experiences in camps


ඔවුන් වධ දී

කඳවුරුවල කාලකණ්ණි අත්දැකීම්


எங்களை கடுமையாக துன்புறுத்தினார்கள்

தடுப்பு முகாம்களில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள்



CMP/AMP/ALA/AKK/03
On 22nd, December, 1985, Sunday, we were taken away on the first round up. The military had packed people in about 7,8 Lorries and took them away. We were soaked up in rain, we were packed tightly inside and it was so hot. It was such a torture; they took us and beat, kicked and even shot us. Two died on the spot. The rest were taken away. We got caught on 22nd ad taken away on 26th, after the Christmas. They pushed our heads inside the sacks filled with chilies, tied our hands and kicked us hard. That cannot be described through words. When they hit the other person I would feel the pain, when they hit me the others would feel it. They would knock my head with the other person’s hand and I would have to knock the head of the other person. Everyone around should do the same - knocking on heads. By doing that our heads became like tomatoes. Teeth got uprooted. They would kick us wearing boots. I don’t have a count of the number of people they took but they took us in 7 to 8 Lorries. Some got released in 3 days.
Later they sent us to Poosa camp. We got beaten up even there. They called it a welcome treat. They tortured us everywhere. The food was unpalatable; it was like food for donkeys. Only by experience one could feel the effect of those tortures. Instead of catching the real terrorists, they caught us.
On the first round up that too place in Akkaraipaththu, they took about 122 people. We were reassured saying that we would be released in 3 months. We had the scars of their beating on our back for about two and a half years. They expected us to agree whatever they do. Did you give rice? Did you go for training?... even if we haven’t done anything, we would get released if we say yes. We were tortured terribly, some things that they have done to torture us cannot even be told.
My teeth had come off… got beaten up with boots. They would hit us with their guns in our heads and backs while holding the heads down. Brother of Thevaraj, Suntharalingam, he was also one of us. He had gone through hardships. “What work you do? Let me see your hands” they would ask us in Sinhalese. If the hands were rough they would be suspicious. Hands would get rough even if we work in paddy fields holding the hoe. They would say that we are lying and would hit us.
They would pull our nails out. Prick us with headpins. Hit us with batons. It’s the work of 4th floor CIDs. To inquire us they would come from there. Many CID officers would be inquiring us separately. They kept us for 3 years, even though they said it would be only for 3 months. Some of us were taken to Palawaththa. We felt a bit free over there, since we were found innocents. We could sleep on mats. Also received bed and pillows. We would play Dam and Karam freely. We were there for 6 months. We received several trainings there – Mulberry course, carpenter, wiring, driving etc.
Later when the Indian Army came they gradually released us. From Poosa we were taken to Palawaththa in Mathugama district. There we saw the blood stained places where the Cheguevara people were locked up, it was very scary. During the Cheguevara time they have kept many people there. The places were so bloody. They took us and showed those places.
Even after release, Indian army took me and beat me. They kept me for a week. How much we could endure? They would take us if they feel suspicious. Even the Movement people would take us on suspicious, but would release after inquiry.
I was born in Akkarapaththu, studied there and even got caught in there. During that time we supported all. We gave rice and water. We didn’t go for the training in India. But our entire neighborhood was supporting them. We too should show our support, if not what sort of Tamils are we? That time we did paddy cultivation. Those who did paddy cultivation would give them rice packed in boxes. We would cook rice for 10, 15 people and deliver them.
At that time if the situation was conducive for us we would have also joined them. In Colombo they dig out the eyes including Kuttymani and Jegan’s. We haven’t directly seen them. We saw these news in notices. How much injustice happened to Tamils? We heard about what Premadasa did. We are Tamils right?
Now I am 59. I got married when I was 23. They arrested me when I was 25, no life for me after that. My wife died. I have children, my daughter got married. Beating me when I was 25, how much effect that would have on me? Now I am sick, wouldn’t know where I would fall down. Now I work as a driver. I have an auto.
Our life is destroyed. We cannot recreate that. We went through hardship; our children shouldn’t be going through such pain. Our children should not experience such difficulties, sorrow. Even if the terrorism reemerges, we are in a mentality to protest them. It’s not necessary. Nobody can do anything. Those who have entered politics are having a comfortable life. They don’t think about others, they do, only when they enter politics. Parliament has old Cheguevara people with them… our Tamil Alliance also there. They cannot talk anything. Even if they attempt to talk, they are not united. They don’t think about others, it’s not possible to think about others. They expected that they could achieve. But never know what would happen.




CMP/AMP/ALA/AKK/03
85ம் ஆண்டு 12ம் மாதம் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் ரவுண்ட் அப்பில எங்கள பிடிச்சிக்கொண்டு போனாங்க. ஆமி ஒரு 7 8 லொறியில அடைச்சு கொண்டு போனாங்க. மழையில நனைஞ்சு அடைஞ்சு போனதில ஒருத்தருக்கு மேல ஒருத்தர் உரைஞ்சி காத்தில்லாம வெக்கை அப்படி ஒரு சித்திரவதை அங்க கொண்டு போய் எங்களுக்கு சரியான அடி அடிச்சாங்க. மிதிச்சாங்க, துவைச்சாங்க. சுட்டாங்க. சுட்டத்தில இரண்டு பேர் அவ்விடத்திலேயே மோசம் போயிட்டாங்க. மற்றவங்கள ஏத்திட்டாங்க. 22ம் திகதி நாங்க பிடிபட்ட எங்கள ஏத்தின 26ம் திகதி நத்தார் முடிஞ்சி. சாக்குக்குள்ள கொச்சிக்காயை போட்டு எங்கட தலையை உள்ளுக்குள்ள அமத்தி கையை கட்டி மிதி மிதி என்டு மிதிச்சாங்க. சொல்ல ஏலாது. அவருக்கு அடிக்கேக்க எனக்கு நோவும். எனக்கு அடிக்கேக்க அவருக்கு நோவும். அவரிட கையால எனக்கு குட்டுவாங்க. என்ட கையால அவருக்கு குட்டோனும். வளைச்சு இருக்கிற ஆட்கள் எல்லாம் அதே மாதிரி தலையில குட்டோனும். குட்டி குட்டி தலை அப்படி தக்காளிப்பழம் மாதிரி போயிட்டு பல்லெல்லாம் கழண்டுட்டுது. பூட்ஸ் காலால அடிப்பாங்க. மிதிப்பாங்க. எவ்வளவு பேர் என்டு கணக்கெடுக்கேலாது 7, 8 லொறியில கொண்டு போனாங்க. 3 நாளில கொஞ்சப் பேர ரிலீஸ் பண்ணிட்டாங்க.
பிறகு எங்கள பூசா கேம்பிற்கு அனுப்பிட்டாங்க. அங்க போனா அங்கேயும் அடிதான். வரவேற்பு அடி என்டு அடிப்பாங்க. எல்லா இடத்திலேயும் சித்திரவதைதான். கழுதைகளுக்கு கொட்டுற சாப்பாடு மாதிரி சாப்பாடு வாயில வைக்கேலாது. சித்திரவதைகளை அனுபவிச்சி பார்த்தாத்தான் தெரியும். தீவிரவாதி, உண்மையான பயங்கரவாதி எல்லாத்தையும் விட்டு போட்டு எங்களை எல்லாம் பிடிச்சாங்க.
அக்கரப்பத்தில நடந்த முதல் ரவுண்ட் அப் 122 பேரை ஏத்திட்டாங்க 3 மாதத்தால விட்டிருவாங்க பிரச்சனையில்ல என்டு ஆறுதல் சொன்னாங்க. எங்களுக்கு கம்பால அடிச்ச அடி குறி மட்டும் முதுகில இரண்டரை வருடம் வரை இருந்தது. எது செய்தாலும் ஒத்துக் கொள்ளோனும். சோறு கொடுத்தியா, ரெயினிங் போனியா ஒன்டும் செய்யாட்டியும் ஒத்துக் கொண்டா விட்டிருவான். அப்படி சித்திரவதை நிறைய உங்களிட்ட சொல்ல கூடாத சித்திரவதையெல்லாம் செய்தாங்க.
என்ட பல்லெல்லாம் கழண்டிருக்கு. பூட்ஸ் அடி. தலையை சவட்டி பிடிச்சி அவங்கட துவக்குல தலையில, முதுகில அடிப்பாங்க. தேவராஐட அண்ணன் சுந்தரலிங்கம் அவரும் ஒரு ஆள். அவர் நிறைய அடிபட்ட ஆள். என்ன வேலை செய்யிறாய் கையை பார்ப்போம் என்று சிங்களத்தில கேட்பான். கையை காட்டினா அவனுக்கு சந்தேகம் கை காச்சிருக்கா, வயல் வேலை செய்து மம்மட்டி பிடிச்சிருந்தா கை காச்சிருக்கும். பொய் சொல்லுறாய் என்டு அடிப்பாங்க
நகத்த புடுங்குவாங்க. குண்டூசி ஏத்துவாங்க பெட்டண்ட் பொல்லால அடிப்பாங்க அதெக்கெண்டு நாலாம் மாடி சிஐடி இருப்பான். அங்க இருந்து வருவான் விசாரிக்க. இந்த சிஐடி முடிய இன்னொரு சிஐடி மாறி மாறி போட்டு விசாரிப்பான். எங்கள 3 மாதம் என்டு சொல்லிட்டு 3 வருசம் வைச்சிட்டாங்க. அதில இருந்து கொஞ்சப் பேர பலவத்தைக்கு மாத்திட்டாங்க. குற்றம் இல்லாத ஆட்கள் என்டு அங்க போனோன கொஞ்சம் சுதந்திரம். பாயில படுக்கலாம், பெட் தலையணி எல்லாம் தருவாங்க கொஞ்சம் சுதந்திரமா டாம் கரம் விளையாடிக் கொண்டிருப்போம். 6 மாதம் இருந்தோம். அங்க டிரெயினிங் கொடுத்தாங்க மல்பேரி கோர்ஸ், காப்பெண்டர் வயரிங், டிரைவிங், எல்லாம் கொடுத்தாங்க
அதில இருந்து இந்தியா ராணுவம் வந்தோன ஆட்கள மெல்ல மெல்ல கரையேத்திட்டாங்க. எங்கள பூசா என்ட இடத்தில வச்சிருந்து பிறகு மத்துகம டிஸ்டிக் பலவத்தக்கு மாத்தினாங்க. அங்க சேகுவாரவ கொண்டு வந்து அடைச்ச இரத்தம் வடிஞ்ச இடங்கள் பார்க்க பயமா இருந்த. சேகுவார டைமில நிறைய பேர வச்சிருந்திருக்காங்க. அப்படி இருந்தது இரத்தம். எங்கள கொண்டு போய் காட்டினாங்க.
வந்தும் இந்தியா ராணுவம் பிடிச்சு என்னை கொண்டு போய் அடிச்சது. ஒரு கிழமை வச்சிருந்தாங்க எவ்வளவுக்கு தாங்கலாம்.சந்தேகப்பட்டா கொண்டு போவான். இயக்கக்காரங்களும் சந்தேகம் என்டா பிடிச்சிக்கொண்டு போவாங்க. விசாரிச்சிட்டு விட்டுறுவான்
நான் அக்கரபத்தில பிறந்து அக்கரபத்திலதான் படிச்ச அக்கரபத்திலதான் பிடிபட்ட. அந்நேரம் நாங்க எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணினாங்க. சோறு கொடுத்தோம். தண்ணி கொடுத்தோம் இந்தியா ரெயினிங் போகேல. அக்கம் பக்கத்தில இருந்த ஆட்கள் எல்லாம் சப்போர்ட் பண்ணினாங்கதான். நாங்களும் சப்போர்ட் பண்ணத்தான் வேணும். சப்போர்ட் பண்ணாட்டி என்ன தமிழன்; அந்த நேரம் வெள்ளாண்மை செய்தனாங்க. வெள்ளாண்மை செய்தாக்கள் எல்லாம் பெட்டியில சோறு கட்டி கொண்டு போய் கொடுக்கிறனாங்க. 10 ,15பேருக்கு சோறு சமைச்சுக் கொண்டு போய் கொடுப்போம்.
அந்த கால கட்டத்தில எங்களுக்கும் வசதியிருந்தா நாங்களும் போய்த்தான் இருப்போம். குட்டிமணி, ஐகன் உட்பட கொழும்பில கண்ணை தோண்டினாங்க. இதெல்லாம் நாங்க நேரடியா பார்க்கல. எல்லாம் துண்டு பிரசுரத்தில வந்திச்சிது. பார்த்தோம் தமிழனுக்கு எவ்வளவு அநியாயம் நடக்குது. பிரேமதாசா செய்ததுகள நாங்க கேள்விப்பட்டோம். நாங்க தமிழன்தானே
இப்ப என்ட வயசு 59. 23 வயசில கல்யாணம் முடிச்சனான் 25 வயசில பிடிச்ச அதற்குப் பிறகு என்ர வாழ்க்கை எல்லாம் போச்சு. மனிசி மோசம் போயிட்டா. பிள்ளைகள் இருக்கு பொம்பிள பிள்ளை கல்யாணம் முடிச்சிட்டா. 25 வயசில பிடிச்சி அடிச்சா எனக்கு எப்படி இருக்கும் அந்த தாக்கம் இப்ப எங்களுக்கு வருத்தம். எவ்விடத்தில விழுவம் என்டு தெரியாது. நான் இப்ப டிரைவிங் வேலைதான் செய்யிறன். ஆட்டோ ஒன்டு வச்சு ஓடிக் கொண்டு இருக்கிறன்.
எங்கட வாழ்க்கை அழிஞ்சு போயிட்டு இப்ப திரும்ப உருவாக்க ஏலாது. நாங்க அடிபட்ட நாங்க. எங்கட வேதனை பிள்ளைகளுக்கு வரக்கூடாது. பிள்ளைகள் இப்படியான துன்பங்கள் கஸ்டங்கள் படக்கூடாது. இனியொரு பயங்கரவாதம் வந்தாலும் பயங்கரவாதத்த எதிர்கிற அளவிலதான் எங்கட மனநிலை இருக்கு தேவையில்ல. ஒருவராலும் எதுவும் செய்ய ஏலாது. அரசியலுக்கு போனவங்களும் சொகுசான வாழ்க்கைதான் வாழுறாங்க. அடுத்தவங்கள பற்றி சிந்திக்கிறதில்ல. போகேக்க மட்டும்தான். பழைய சேகுவாரவில இருந்தவங்களும் பார்லிமண்டில இருக்கிறாங்க. அடுத்தவங்க எங்கட கூட்டணியில இருக்கிறவங்க, அவங்களும் இருக்கிறாங்க அவங்களால ஒன்டும் பேச ஏலாது. பேசினாலும் பேசிற அளவிற்கு ஒற்றுமை கிடைக்காது. மற்றவங்கள பற்றி சிந்திக்கிறதில்ல. சிந்திக்க முடியாது. எதிர்பார்த்தாங்க கிடைக்கும் என்டு. என்ன நடககும் என்டு தெரியாது.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License