CMP/AMP/POT/INE/20
Forty years ago we came from Pothuvil town and settled down here to do ‘Chena’ cultivation. Each of us had extensive lands. Later on lands were sold and people bought them and settled here. I bought this land in 1977 for only Rs500. This place is rather high. 35 feet higher than Pothuvil. No water facilities. Then an Inspector had come from Thirukovil. And elephant had attacked him in Eatham. Hence the name Inspector Eatham.
I was born and brought up in the area Pothuvil P-20, Koddukallai. I am the 3rd child. I had 2 elder brothers. Father brought me up lovingly. He was a Kankani at an estate then. All of a sudden he got a tummy disease and died of it. I was around 6 years of age then. After that mother educated us by hand labour.
We had a coconut estate. From its revenue and her earnings by hand labour, she brought us up. I wasn’t well educated. When I was around 10 years of age my mother developed a tummy disease. We educated our brothers. It was a Muslim area. As we were in a private area, attending school was difficult. As mother was also sick I stopped my education halfway. I stopped on my own.
Mother died when I was 16. When father was alive, he had fixed his sisters son as my future husband. My brother was a Kankani at an estate. They got me married when I was 18. He was a government officer in the irrigation department. In 1988, a time when terrorism has begun, we were in Hithayapura Estate. In 1988, on his way to work he got injured and passed away.
In the meanwhile I had had 5 kids- of this 2 had died and 3 survived – 1 girl and 2 boys. Can’t live there alone, so we came here. There I had lost my husband and my house had been damaged. In 1990, due to war, we were displaced and had to live in Komari, 10 miles away. We came here only with the clothes we had been wearing. Our house had been burnt down. We were refugees, no men to earn a living. We had already lost all our possessions and faced great difficulties. We survived by hand labour. Morning school – 8am to 12 noon – was for Komari children. Evening school – 1pm to 3pm was for displaced children. That’s how my children were studying here.
One of our boys had leg trouble – he was born with defective legs. One leg had been treated when his father had been alive. Now, after his demise the other leg had to be operated on. Amidst great difficulties I took him to clinics. My sufferings were great. I don’t want anyone to suffer thus.
My child had defective legs. One day he returned from school, sobbing out that he had been called out a lame boy. This is very painful. We had only government relief rations to live on and to attend clinics. I sold the rice to get money to attend clinic. I had fields in Pothuvil where rice is grown twice a year. I have leased them and with that money I attend clinics and buy clothes. I make and sell string hoppers and Pittu for survival. Thus, I brought up my children.
When things were so, we were asked to return to our own area. I had a younger sister – a cousin- my uncle’s daughter who was brought up by me. I brought her and other children here and left them in my elder brother s’ care. We were resettled on the 6th. I must take my son to hospital on the 8th. His operation was to be on the 10th. When I was a refugee I had to leave the children alone when I went to clinics. He was 12 when the operation was over. By God’s grace – I had taken vows – a message that a new neurologist was available and I was to come, reached me. The operation took place in Baticaloa hospital. We were discharged after 10 days. We were to attend clinic monthly. I was all alone I left my children alone and went. I had nobody to come to my help. It was resettlement time. My brother’s couldn’t leave their children and come because of troubles. People were kidnapped at nights, they were rounded up and caught. I was happy because despite of the doctor’s doubts my boy got healed. The doctors had advised me not to expect too much. The leg would straighten. But as to being able to walk- it should be left to God. When the bandage was removed, my child was able to walk well. The surgeon was happy. My joy knew no bounds. It was as if I had regained all that I had lost. My boy’s leg was healed.
Things were thus. We had a field. We lease it. I make and sell string hoppers and Pittu. With these means, I educated my children. When my daughter was in A/L she got married to my nephew. It was a love match. The other 2 are graduates. Now my family is well off. But none would have suffered like me. No one should suffer as I did. Because when I had lost everything and was on the roads at God’s mercy my hand labour (skills) came to my rescue. I am skilled in everything. I can knit coconut leaves (ready for thatching roofs and fence) – I can sew- I can weave boxes (out of palmyra leaves)
At one stage, when we went to Komari we had no mat to sleep on. The mat we got as relief was torn off the next day as we had to step on it. I cut palmyra leaves, dried them and weaved a mat for us. Then I got many orders from others who were watching me. Thus I took orders and got paid. I made uniforms for my children by hand. Again I got orders from others. Although I sew by hand, I saw well, they tell me. I myself made the dress I’m wearing now. I can sew more quickly by hand than by machine.
It is hand labour that saved me. I never went abroad. I never worked as a coolie. I didn’t earn even a single rupee as a labourer. I did only hand labour. I get up early in the mornings, make string hoppers, and send the children to school. We didn’t have water to drink. We had to go to Pothuvil town for it. We went to a river a mile away to bathe. Not only me. All of us in Eatham suffered due to this problem. But now government has changed and after Tsunami we have few wells here and we get tap water also. Now our courtyards are full of greenery. At one time water was a problem – we didn’t have water to drink or to bathe. Even at such times I had planted many coconut trees. People ask me if I have a well. No, I water them at nights is my reply. I get up at 2 am. I carry home 2 or 3 pots of water before I start to make hoppers. Nights are like daytime for me. Because I worked hard day and night, my children are doing well now. I am also doing well.
No money lender has even come to my gate asking for returns of money- not even a rupee. Nobody could find fault in my conduct. God should continue to protect me like this in future too. Not an ill word about me. My elder son wanted to marry a girl of his choice. I granted him permission. He has got married. Other son is a graduate. He tried for jobs – but failed to find one. He went abroad and has returned. Then there was no one to encourage him to study – neither did we have the means to send him for tuition. He passed out by his own efforts. Education is not bright in Inspector Eatham. So he is coaching children for scholarship exam. In 2010 he made 10 children pass the scholarship exam. This is a great joy to us. He doesn’t charge even a rupee for his service. It’s free service. He teaches in the mornings and in the evenings.
One morning in 1990 there was a wedding. I was invited to participate in the ceremonial bath. I got up early, and made 150 string hoppers for a shop order, and then went for the ceremony. As I was pouring water we heard blasts. My boys had gone to school. Younger son was not of school age then he had gone to the nursery. From the wedding I ran to the nursery, brought my son home and then got my younger brother to get the other children from school. “All are running away, what are you doing,” my brother said angrily. There were no phone facilities then. We had a small house and land in Koddukal. Hoping to live there I started packing our clothes. But my brother stopped me, saying “we would stay in our land, we have vessels there to make tea”. So I took some sugar and Anchor and left with only the clothes we were wearing.
It was 10 days after my younger brother’s wedding. It had taken place in my house. Even the festive shed hadn’t been dismantled. The house was full of goods. People were running by. We didn’t even have slippers on our feet. Walking on the hot sands we reached Oorani and from thence to Komari. When my brother, with wife and children, was going along the road, they were rounded up. When a shepherd boy said they belonged to ‘….’ family, the army set about to beat up my brother. Then, my sister-in-law, with kids, started to scream. When my brother said “No, I only cultivate the field,” they let him go.
We had left behind 28 acres of fields which were ready for harvest. Here we were refugees. When the army rounded up, my younger brother had run away in to the forest. Are we to look for him or look after our children? We would cry day and night. There was no trace of the people who had gone in to the forest – and we faced hunger and starvation here. The children had no clothes to wear. That relief rations- that was our means of food. When we hang out washed clothes to dry, they got lost. Amidst such great difficulties only my hand labour came to my rescue.
It was after 3 years that we returned. Only the walls of our house remained when we returned. Our poultry and dairy farm was there. I had to sell 10 cows to put the beams for roofing. I thus rebuilt the house after returning and after my husband’s demise. I couldn’t live alone. It was a Muslim area. The sea was in front of our house and ‘kalappu’ on the other side. Only behind our house there was a resident – A Muslim lady. I’ve done a lot for their family. She was a great help to me. She would come and stay with me when my brother was away. She would help me in my work. When we had gone as refugees she had saved our property for us. When ‘….’ had come to seize, she had kept our land along with hers and saved it. When we had returned she had got a machine and had sent us 600 coconuts from our land. I sold them and used the money to make and sell hoppers and pittu. I also had a small shop. ‘Hand labour’ was our means of livelihood.
I was 31 when my husband died – not so old. I don’t go out alone. Good relationship prevailed among us neighbors. Lookers on would gossip that so and so came and talked with so and so. So even now I don’t go out alone. I take 2 or 3 of my neighbors. I give coconuts to all who come with me.
One morning, in 1995, when I pluck coconuts, gunshots were heard from the direction of Eatham. I told back door neighbors and walked to the vicinity of Pillayar temple without exposing ourselves. We went to a person’s house. But they locked their gates on us and told us to go away. Then we went to a cousin brother’s house. He asked from where we had come. I said we had gone to pluck coconuts and had heard gunshots. Then he said whole of Eatham was on fire. Then my daughter and my uncle’s daughter were at home. The police had rounded up.
Then I said I had to go home my daughter and younger sister were there. As I and a sister were coming, in Kundumadu area the police had tied cloth around their mouths and were setting fire. They were all drunk. They sent the people inside their houses, poured kerosene, removed the clips of grenades and threatened to kill them all. They were stopped from harming the innocent people and taken away by 2 policemen who came later. Stealthily, hiding here and there, we reached home. The children were bathed in kerosene oil. A person called Kanaharasa was beaten up so badly that his hands were split and bleeding profusely. The army came and took the injured to hospital. By God’s grace our children were unharmed.
Here 75 huts occupied by refugees had been burnt down. They had lost all their possessions in 1990 and had again collected some clothes and things little by little. Now these also had been burnt. Among them two women also had been taken away by the police. We protested against this. We fasted and marched along the roads blocking vehicles. We demanded that these 2 women should be set free. The MP and ASP apologized and promised to free them. Again refugee life. My house had not been burnt down because it had a tin roof. Only my kitchen was burnt down. If we are alive today it is after suffering so many difficulties.
When we were living as refugees in a temple, they had knocked down and killed 2 boys by their ‘…..’ tanks. After this it was no longer safe to live there. Under the cover of night we walked to Saraswathy Vidyalaya in Thirukovil. We stayed here for 7 days. Then we were in Thandiyadi. Later on we moved to Komari. After wandering thus, we had relief supplies in Komari. We had lived for 3 ½ to 4 years here in Komari. Later on Janasakthi provided us with relief supplies. We lived thus for some time.
Tsunami came. But no water in Eatham Kundumadu. Next to us was a 200 acre estate. After the 83 riots, the owners had abandoned these and gone to US and UK. In this estate the Movement intervened and made the Tamils occupy areas with water facilities, thereby preventing occupation by the Sinhalese. They got an organisation to provide us with huts and wells – huts only – not houses. At that time I too occupied a hut there. In 2002 Eatham people went there. The water was good. We take our clothes and go there to bathe, cook, eat and return home in the evening. We had to send the children to school. In 2004 when Tsunami struck 11 died. All our houses in Koddukadal area were gone. Sea in front, estate on a side, ‘Kalappu’ on the other side. Then we got Tsunami relief. We also got a house in the Ball Housing Scheme.
There should never again be such difficulties. Tamils should never suffer so. Pothuvil was the first to get affected by war. There are 65 widows here. There are around 15 mothers who had lost their sons. I have been head of ‘Swad’ for 5 years. Via this, I have got help for those who had been affected.
CMP/AMP/POT/INE/20
අවුරුදු 40කට ඉස්සර පොතුවිල් ටවුමේ ඉඳලා හේන් ගොවිතැන් කරන්න අපි මෙහෙ ඇවිත් පදිංචි වුනා. එක එක්කනාට ලොකු ලොකු ඉඩම්. පස්සේ පස්සේ තමයි කට්ටිය ඉඩම් විකුණලා වෙන කට්ටිය අරගෙන පදිංචි වුනේ. 77 දී රුපියල් 500කට තමයි මම මේ ඉඩම ගත්තේ. මෙතැන හරි උසයි. වතුර නැහැ. පොතුවිල් වලට වඩා අඩි 35ක් උසයි. එතකොට ඉන්ස්පෙක්ටර් කෙනෙක් තිරුක්කෝවිල් ඉඳලා අවා. එයාට කන්දේ දී අලියා ගහලා. එදා ඉඳන් මෙතැනට ඉන්ස්පෙක්ටර් ඒත්තම් කියලා නම වැටිලා තියෙන්නේ.
පොතුවිල් පී - 20 කොට්ටුගල කියන තැන තමයි මම ඉපදිලා හැදී වැඩුනේ. ගෙදර මම තුන්වෙනි ළමයා. මට වැඩිමල් දෙන්නා පිරිමි ළමයි. තාත්තා මට හරි ආදරෙන් හැදුවා. ඒ කාලේ අපේ තාත්තා එක වත්තක කන්කානම් වැඩේ කළා. තාත්තට හදිස්සියේ බඩේ අමාරුවක් හැදිලා නැතිවුනා. එතකොට මට වයස 06 යි. ඊට පස්සේ අම්මා එක එක වැඩ කරලා තමයි අපිට ඉගැන්නුවේ.
අපිට පොල් වත්තක් තිබුනා. ඒකේ ආදායමයි, දෑතේ වැඩවල ආදායමයි එකතු කරලා තමයි අම්මා අපිව බලාගත්තේ. මම වැඩිය ඉගෙන ගත්තේ නෑ. මට අවුරුදු 10 වෙනකොට අම්මට බඩේ අමාරුවක් හැදුනා. අයියලා ඉගෙන ගත්තා. අපි හිටපු පැත්තේ මුස්ලිම් අය වැඩියි. අපි වෙනම පැත්තක හිටපු නිසා ඉස්කෝලේ ගිහිල්ලා එන්න අමාරුයි. අම්මටත් සනීප නැතිවුන නිසා ඉගෙනීම අතරමඟ දී නැවැත්තුවා. මම නැවතුනා.
පස්සේ වයස 16 වෙනකොට අම්මා නැතිවුනා. තාත්තා ඉන්න කාළෙම තාත්ගෙ අක්කාගේ පුතාව මට කතා කරලා තිබුනා. පොඩි කාලෙම මට කතා කරලා තිබුනා. අයියා ඉඩමක කංකානම් වැඩේ කළා. මට 18 වුනාම බන්දලා දුන්නා. එයා රජයේ නිලධාරියෙක්. වාරිමාර්ග දෙපාර්තමේන්තුවේ වැඩකළේ. රටේ තිබ්බ තත්ත්වය අනුව ත්රස්තවාදය ආරම්භ වෙච්ච කාළේ 1988 දී අපේ අරහේ හිඩායපුරම් වත්තේ හිටපු කාළේ එයා වැඩට ගිය වෙලාවේ වෙඩි වැදිලා නැතිවුනා.
එතකොට මට ළමයි තුන්දෙනයි. එක ගෑණු ළමයයි. පිරිමි ළමයි දෙන්නයි. ළමයි පස්දෙනාගෙන් දෙන්නෙක් නැති වෙලා දැන් ළමයි තුන් දෙනයි. එහෙ තනියම ඉන්න බෑ කියලා අපි මෙහෙට ආවා. එහෙ අපේ ගේත් කැඩිලා. එයත් නැහැ. අපි මෙහෙට ආවා. මෙහෙ ඇවිල්ලා 1990 තිබ්බ යුද්ධෙ දී අවතැන් වෙලා 10 කණුවට එහා කෝමාරි කියන ගමේ ඉන්න සිද්ධවුනා. අපේ ගෙවල් ගිණිතියලා ඇඳගෙන හිටිය ඇඳුම පිටින් තමයි අපි ගියේ. අනාත ජීවිතේ. අනාත ජීවිතේ කියන්නේ හම්බ කරන්න පිරිමියෙකුත් නැහැ. එතකොටත් හැමදේම නැතිවෙලා කරදරයි. හරියට දුක් විඳලා වැඩකරලා තමයි ළමයි බලාගත්තේ. එහෙත් හවස පංති තමයි තිබුනේ. කෝමාරි ගමේ ළමයින්ට උදේ 8 ඉඳන් 12 වෙනකනුත් අවැතැන් වෙච්ච ළමයිට හවස 1 ඉඳන් 3 වෙනකම් පංති තියලා එයාලා ඉගැන්නුවේ.
ඒ අතරේ අපේ එක පුතෙකුට කකුලේ අමාරුවක්. ඉපදෙනකොටම කකුලේ අමාරුවක්. නමාගෙනම හිටියා. තාත්තා ඉන්නකොටම එක කකුලක් සනීප කළා. එයා නැතිවුනාට පස්සේ එක කකුලක් ඔපරේෂන් කරන්න ඕන. ක්ලිනික් එහෙම ගිහිල්ලා මහා කරදර මැද්දේ තමයි මම ක්ලිනික් ගියේ. ඒ වගේ කරදර වින්දා. මම විඳපු දුක වෙන කාටවත් ලැබෙන්න එපා.
ළමයට කකුලේ අමාරුවක්. දවසක් එයා ඉස්කෝලේ ගිහිල්ලා ඇවිල්ලා අඬනවා.. මට කොරා කියනවා කියලා. ඒවට හරි දුකයි. අපිට රජයෙන් දුන්න සහනාධාරයෙන් ගෙදර වියදමත් කරගන්නත් ඕන, ක්ලිනික් යන්නත් ඕන. ඒ හාල් ටික විකුණලා තමයි ක්ලිනික් ගිහින් ආවේ. මට පොතුවිල්වල කුඹුරක් තිබ්බ නිසා ඒකේ බදු මුදල අරගෙන කන්න දෙකම වැඩකරන කුඹුරක්. ඒ බදු මුදල අරන් තමයි ක්ලිනික් යන ඒවයි ළමයින්ට ඇඳුම් පැළඳුම් ගන්න වියදමයි කළේ. ඒත් අපි කෑමට වියදම් කළේ පොඩි පොඩි රස්සාවල් කරලා. ඉඳිආප්ප පිට්ටු තම්බලා විකුණලා තමයි ළමයිව හැදුවේ.
එහෙම ඉන්නකොට අවතැන්වෙලා ගමට යන්න කිව්වා. එක නංගී කෙනෙකුත් හිටියා. එයාව මමයි බලාගත්තේ. බාප්පගේ දුව. එයාවයි අනෙක් ළමයිනුයි මෙහෙ ගෙනත් දාලා අපේ අයියලාට බලාගන්න කියලා 06 වෙනිදා අපි නැවත පදිංචි වුනා. 08 වෙනිදා මගේ පුතා එක්ක යන්න ඕන. 10 වෙනිදා එයාට කකුලේ ඔපරේෂන් එක. මඩකලපුවේ ඉස්පිරිතාලේ. එතකොට අවතැන්වෙලා ඉද්දී ළමයිව දාලා තමයි මම ක්ලිනික් ගිහින් ආවේ. එතකොට එයාට කකුල ඔපරේෂන් කරලා. එයාට අවුරුදු 12 වුනා. දෙවියන්ට බාරවෙලා ඉද්දී දෙවියන්ගේ පිහිටෙන් කොහෙදෝ ඉඳලා ස්නායු ඩොක්ටර් කෙනෙක් එනවා. ඉක්මනට එන්න කියලා මැසේජ් එකක් ලැබුනා. මඩකලපුව ඉස්පිරිතාලේ දී පුතාට හදිසි සැත්කමක් කරලා අරගෙන දවස් 10කින් ටිකට් කපාගෙන ඇවිල්ලා මෙයාව මාසෙකට සැරයක් ඉස්පිරිතාලේ අරන් ගියා. එතකොට මම තනියම. මම ළමයිව මෙහෙ තනියම දාලානේ ගියේ. මට උදව්වට ඇවිල්ල ඉන්න කෙනෙක්වත් නැහැ. ඒ කියන්නේ අපි නැවත පදිංචි වුන කාළේ. ඒ කියන්නේ මගේ සහෝදරයින්ට එයාලගෙ ළමයි දාලා එන්නත් බැහැ. එහෙ ප්රශ්න. රෑට ඇවිල්ල පැහැරගෙන යනවා. රවුන්ඩ් අප්වලදී අල්ලගෙන යනවා. මට ඊට වඩා සතුටුයි ඒ කියන්නේ ඩොක්ටර්ලා ඔක්කොම කිව්වා වැඩිය බලාපොරොත්තු තියාගන්න එපා. කකුළ දිගෑරෙයි. වැඩිය බලාපොරොත්තු තියාගන්න එපා. කකුළ දිගෑරෙයි. ඒත් ඇවිදින එක දෙයියෝ තමයි බලාගන්නේ කියලා. බැන්ඩේජ් එක කපලා ළමයා ඇවිද්දෙව්වම ළමයා හොඳට ඇවිද්දා. එතකොට ඔපරේෂන් කරපු ඩොක්ටර්ට හරි සතුටුයි. මටත් කවදාවත් නැති සතුටක්. ළමයෙක් ආයේ හැදුවා වගේ සතුටුයි. ඒ ළමයාගේ කකුල සනීප වුනානේ.
එහෙම ඉන්නකොට කුඹුරක් තිබුනා බදු දීලා. අනික පොඩි පොඩි රස්සාවල් කරලා තමයි ළමයින්ට ඉගැන්නුවේ. ඒ ලෙවල් ඉගෙනගන්න කොට දුව බැන්දා මස්සිනාගේ පුතාට එයා කැමතිවෙලා. අනිත් දෙන්නා උපාධි ගත්තා. දැන් අපේ පවුල හොඳ තැනකට ඇවිල්ලා. මම වගේ කවුරුවත් දුක් විඳලා නැතුව ඇති. අනිත් අයට ඒවගේ අමාරුකම් එන්න එපා. ඒ කියන්නේ හැම දේම නැතිවෙලා අතරමන් වෙලා ඉද්දී කවුදෝ දෙවි කෙනෙක් දුන්න භාග්යයක්. මට දෑතේ වැඩ කොයිකත් පුලුවන්. පොල් අතු වියනවා. මහනවා. පෙට්ටි වියනවා.
එක කාලෙක දී කෝමාරිවලට ගිය කාළේ අපිට නිදාගන්න පැදුරක්වත් නැහැ. සහනාධාර දුන්න පැදුරු තමයි බිම දාලා ඇවිදිනකොට ටික ටික ඉරිලා යනවා. මම තල්කොළ කපලා වේළලා පැදුරක් වියා ගත්තා. ඒක දැකලා කට්ටිය අහලා එයාලට පැදුරු වියලා විකුන්නා මම. ළමයින්ට ඉස්කෝලේ යන්න යුනිෆෝම් මැහුවම වටේ පිටේ කට්ටියත් ඇවිල්ලා දෙනවා අපිටත් මහලා දෙන්න, අතින් වුනත් ඔයා ලස්සනට මහනවා කියලා. දැන් මම ඇඳගෙන ඉන්න ගවුමත් මම මහපු එකක්. මැෂින් එකෙන් මහනවට වඩා ඉක්මනට මම අතින් මහනවා.
කර්මාන්ත වලින් තමයි ජීවත් වුනේ. මම රට ගියෙත් නැහැ. එක රුපියලකටවත් මම කුළියට වැඩට ගියෙත් නැහැ. දෑතේ වැඩ තමයි ඔක්කොම කළේ. උදේ නැගිටලා ඉඳි ආප්ප තම්බලා තියලා ළමයිව ඉස්කෝලේ යවනවා. අපේ පැත්තේ වතුර නැහැ. බොන්න වතුර ගන්න පොතුවිල් ටවුමට යන්න ඕන. නාන්න යන ගඟට මෙහෙ ඉඳන් හැතැම්මක් විතර තියෙනවා. මට විතරක් නෙමේ මේ කන්ද නිසා හැමෝටම වතුර ප්රශ්න. ඒත් දැන් ආණ්ඩු මාරු වෙලා සුනාමියට පස්සේ දැන් කන්දේ ළිං කීපයක් තියෙනවා. අනික රජයෙනුත් වතුර ලයින් දීලා දැන් අපේ වගාවලට හොඳට වතුර ලැබෙනවා. එක කාලෙක වතුර නැති ප්රශ්නේ. බොන්නයි නාන්නයි ප්රශ්නේ. ඒ කාලේ මම පොල්පැළ ටිකක් හිටෙව්වා. කට්ටිය අහනවා ළිඳක් තියෙනවද කියලා. මම කියනවා නෑ මම රෑට වතුර ගෙනල්ලා දානවා කියලා. මම දෙකට අවදි වෙනවා. ළඟ ළිඳක් තියෙනවා. ඒකෙන් බාල්දි දෙක තුනක් ගෙනෙල්ලා තියලා ආප්ප පුච්චනවා. රෑ මට දවල් වගේ. රෑ දවල් නැතුව මහන්සිවුන නිසා දැන් මගේ ළමයි හොදින් ඉන්නවා. මමත් හොඳින් ඉන්නවා.
මගේ දොර ළඟට කවුරුවත් එක රුපියලක් වත් ණය දෙන්න තියෙනවා කියලා ඇවිල්ලා නැහැ. මෙයා මෙහෙමයි, මෙයා අරහෙමයි කියලා වචනයක්වත් මම අහලා නැහැ. ඉස්සරහටත් මාව දෙවියෝ ඒ විදියට ආරක්ෂා කරන්න ඕන. නරක කතාවක්වත් මොනවත් නැහැ. ලොකු පුතා කැමති වෙච්ච කෙල්ල බඳිනවා කිව්වා. හරි පුතේ උඹ කැමති කෙල්ල බැඳපන් කියලා මම කිව්වා. එයත් බැන්දා. අනිත් පුතා උපාධිධාරියෙක්. එයා රස්සාවකට ට්රයි කළා ලැබුනේ නැහැ. රට යනවා කියලා රට ගිහින් ආවා. එතකොට මට මෙහෙම උනන්දු කරලා උගන්වන්න කෙනෙක් හිටියෙත් නැහැ. ටියුෂන් යවන්නත් ආර්ථික පහසුකමක් නැහැ. එයාගේ දක්ෂතාවයෙන් ඉගෙනගෙන පාස් වුනේ. රට ඉඳන් ඇවිල්ලා ඉන්පෙක්ටර් ඒත්තම්වල ළමයිගේ ඉගෙනීම මදි කියලා ළමයිට ශිෂ්යත්වයට ඉගැන්නුවා. 2010 දී ළමයි දහ දෙනෙක් පාස් කළා. ඒක අපට ලොකු සතුටක්. එයා රුපියලක්වත් ගන්නේ නැහැ. මහජන සේවයක් හැටියට කරනවා. උදෙයි හවසයි උගන්වනවා.
1990 දී දවසක් උදේ මගුල් ගෙයක්. වතුර අදින්න එන්න කියලා තිබුනා. මම උදේ නැගිටලා ඉඳිආප්ප 150ක් තම්බලා කඩේට දීලා ගිහිල්ලා වතුර අදින අතරේ වෙඩි සද්දයක් ඇහුනා. ළමයි දෙන්නෙක් ඉස්කෝලේ ගිහිල්ලා. මගේ පොඩි පුතා ඉස්කෝලේ ගියේ නැහැ. ඉස්කෝලේ යන්න වයස නැහැ. මොන්ටිසෝරි තමයි ගියේ. මගුල් ගෙදර ඉඳලා දුවලා ඇවිල්ලා මොන්ටිසොරියට දුවල ගිහිල්ල පුතාව එක්කගෙන ඇවිලා අපේ මල්ලිව යවලා ඉස්කෝලෙට ළමයිව ගෙන්නගෙන මොකුත් ගත්තේ නැහැ. මල්ලි බනිනවා මිනිස්සු ඔක්කොම දුවනවා උඹ මොනවද හොයන්නේ කියලා. එතකොට ෆෝන් පහසුකමුත් නැහැ. අපිට එතකොට කොට්ටුකල්වල ඉඩමකුයි පොඩි ගෙයකුයි තිබ්බා. එහෙ ගිහිල්ලා ඉමු කියලා මම පෙට්ටි රෙදි එහෙම ගත්තා. මල්ලි කිව්වා එපා අපේ ඉඩමේ ඉමු කියලා. තේ හදාගන්න එහෙ භාජන තියෙනවානේ කියලා සීනියි කිරිපැකට් එකකුයි අරගෙන උදේට කෑවෙත් නැහැ, ඇඳගෙන හිටපු ඇඳුම පිටින්ම මම ගියා.
මගේ මල්ලී බැඳලා දවස් දහයයි. අපේ ගෙදර දී තමයි බැන්දේ. හට් ගලවලත් නෑ. ගෙදර ගොඩක් බඩු. හැමෝම කෑ ගගහ දුවනව. කකුල්වල සෙරෙප්පුත් නැහැ. ඒ රත්වෙච්ච වැලිවල ඌරණියට ගිහින් කෝමාරිවලට පයින් තමයි අපි ගියේ. එහෙ ගිහිල්ලා අවතැන් වුනා. අපේ අයියයි එයාගෙ පවුලයි ළමයිනුයි පාරෙ එනකොට හමුදාව රවුන්ඩ් අප් කරනකොට අහුවෙලා. හරක් බලන කෙනෙක් මෙයාලා එල් ටී ටී ඊ පවුලක් කියලා කීවම අයියව අල්ලගෙන ගහන්න යනකොට අක්කා ළමයිනුත් එක්ක කෑ ගහලා. අයියා කියලා නෑ අපි ගොවිතැන් කරන්නේ කියලා. ඊටපස්සේ හරි කියලා යන්න කියලා.
අක්කර 28ක් ගොවිතැන් කරලා ගොයම් කපන්න තියෙද්දි තමයි ගියෙ. එහෙ ගිහින් අනාථ වුණා. එහෙත් හමුදාව රවුන්ඩ් අප් කරපු වෙලේ මල්ලි අපි ඔක්කොම දාලා කැලේ හැංගුනා. එයාව හොයනවද ළමයිව බලාගන්නවද? රෑ දවල් අඬනවා. කැලේට ගිය ළමයි නැහැ. මෙහෙ බඩගින්නේ. ළමයිට අඳින්න ඇඳුම් නැහැ. සහනාධාරෙන් තමයි කෑවේ. වෙලාවකට රෙදි සෝදලා වැනුවොත් රෙදි නැතිවෙනවා. හරි කරදරයි. දෑතේ වැඩ තමයි මට අත දුන්නේ.
එහෙ ඉඳන් එනකොට අවුරුදු තුනක් ගියා. එනකොට ගෙදර බිත්ති විතරයි තිබුනේ. අනිත් හැම දේම පිච්චිලා. හරක් පට්ටියක් තිබුනා, කුකුළු ගොවි පොළත් තිබුනා. අපිට මෙහෙ එන්න වහලෙ ගහගන්න සල්ලි නැතිව හරක් දහ දෙනෙක් විකුණලා තමයි මම ඇවිල්ලා මේ ගෙදරට වහලේ ගහලා උළු දැම්මේ. මම මේක හැදුවේ එහෙ ඉඳන් එන්න. එයා නැතිවුනාට පස්සේ මට තනියම ඉන්න බෑනේ. එහෙ මුස්ලිම් ඒරියා. අපේ වත්තට එහා පැත්තේ කළපුව. ඉස්සරහ පැත්තේ මුහුද. පිටි පස්සෙන් විතරයි ගෙවල්. එක මුස්ලිම් ගෑණු කෙනෙක් මම ඒ පවුලට ගොඩක් උදව් කළා. එයා මට ගොඩක් උදව් කළා. අයියා නැති වෙලාවට මාත් එක්ක ඇවිල්ලා ඉන්නවා. වැඩ කරලා දෙනවා. එහෙම ගොඩක් උදව්. අපි අවතැන් වෙලා ගිය වෙලාවේ ඉඩම බලාගත්තෙත් එයා තමයි. එස් ටී එෆ් ඇවිත් අල්ලගන්නකොට අපේ ඉඩමත් එයාගේ ඉඩමට යා කරලා බලාගත්තා. අපි ආවම මැෂින් එකක් ගෙනෙල්ලා කුරුම්බා කපලා දුන්නා. අපේ ඉඩම තමයි. පොල්ගෙඩි 600ක් විතර තිබුනා. ඒක විකුණලා පිට්ටු හැදුවා. තේ කඩයකුත් දාගෙන හිටියා. දෑතේ මහන්සියෙන් තමයි මම ජීවත් වුනේ.
මහත්තයා නැතිවෙනකොට මට වයස 31 යි. වැඩි වයසකුත් නැහැ. තනිවුනේ නැහැ. වටේම අය අපෙත් එක්ක හොඳයි. දැක්කොත් කියනවා මෙන්න මෙයා ඇවිල්ලා මෙයත් එක්ක කතා කරනවා කියලා. ඒ හින්දා අද වෙනකම් කවදාවත් මම තනියම යන්නේ නැහැ. වටේ ඉන්න දෙතුන් දෙනෙක් අඬගහගෙන තමයි යන්නේ. මම එක්ක යන අයට පොල් දෙනවා.
1995 දී දවසක් උදේ නැගිටලා ගිහිල්ලා පොල් කඩන වෙලේ කන්ද පැත්තෙන් වෙඩි සද්දයක් ඇහුනා. එතකොට පිටිපස්සේ ගෙදර එක්කනාට කියලා එහෙමම ඇතුළෙන් ඇවිල්ලා පිල්ලයාර් කෝවිල ළඟට ඇවිල්ලා එක ගෙදරකට ගියා. එතකොට මෙහෙ එන්න එපා කියලා ඒ ගොල්ලෝ ගේට්ටුව වැහුවා. එතකොට මම අයියගේ ගෙදරට ගියා. එතකොට එයා ඇහුවා කොහේ ඉඳන්ද එන්නේ කියලා. මම කිව්වා පොල් කඩන්න ගිහින් ඉන්නකොට වෙඩි සද්දයක් ඇහුනා කියලා. එතකොට එයා කිව්වා කන්ද පැත්තෙන් ගිණි ගන්නවා කියලා. එතකොට මගේ බාප්පගේ දුවයි, මගේ දුවයි ගෙදර හිටියේ. පොලිසිය රවුන්ඩ් අප් කළා.
එතකොට මම කිව්වා මම ගෙදර යන්න ඕන. නංගියි, දුවයි ගෙදර කියලා. මමයි ඒ අක්කයි එනකොට ගුණ්ඩුමඩු හරියේ දී පොලිසියෙන් කට රෙදි කෑල්ලකින් බැඳලා ගිණි තියෙනවා. ආපු අයට හොඳට වෙරි. හැමෝම ගෙවල්වලට යන්න කියලා ලාම්පුතෙල් දාලා ග්රැනයිට් දානවා කියලා කියනකොට පස්සේ ආපු පොලිස් දෙන්නෙක් මේ අහිංසකයෝ දෙන්නා මොකුත් කරන්නේ නෑ කියලා අපිව එක්ක ගියා. අපි හැංගි හැංගි තමයි ගෙදරට ගියේ. ළමයි ලාම්පුතෙල් නාගෙන හිටියා. කණගරාසා කියන කෙනාට ගහලා අතපය තුවාළ වෙලා ලේ එනවා. ආමි ඇවිල්ල තමයි පොලිසියේ තුවාළ වෙච්ච අයව ඉස්පිරිතාලේ එක්ක ගියේ. දෙවියෝ තමයි බලාගත්තේ. අපේ ළමයින්ට මොකුත් වුනේ නැහැ.
මෙහේ ගෙවල් 75ක විතර කට්ටිය අවතැන්වෙලා ඉඳලා කූඩාරම් ගහගෙන හිටියා. මේ ඔක්කොම පුච්චලා දැම්මා. මුලින්ම 1990 දී ඔක්කොම නැතිවෙලා ආයෙත් 95 දී රෙදි එහෙම හොයාගෙන ඇවිල්ලා ඉන්නකොට ආයෙත් ගිණි තිබ්බා. ඇඳුමක්වත් නැහැ. මෙහෙ ගෑණු දෙන්නෙක් පොලිසියෙන් ගෙනිච්චා. එයාලා වෙනුවෙන් අපි විරෝධතාවක් කරලා උන්නාවිරදම් ඉඳලා පාරේ ගිහිල්ලා වාහනවලට යන්න දෙන්නේ නැතුව ගෑණු දෙන්නම ඕන කියලා එතකොට එම් පී, ඒ එස් පී කණ්ඩායමක් ඇවිල්ලා සමාව ඉල්ලලා එයාලව නිදහස් කරන්නම් කිව්වා. ආයෙත් අනාථ ජීවිතය තමයි. මගේ ගෙට ටකරන් ගහලා තිබ්බ නිසා පිච්චුනේ නෑ. කුස්සිය පිච්චුනා. ගොඩක් කරදර විඳලා තමයි අපි අද ජීවතුන් අතර ඉන්නේ.
අවතැන් වෙලා කෝවිලේ ඉන්නකොට එස් ටී එෆ් වාහනයකින් කොල්ලෝ දෙන්නෙකුට ගහලා මරලා දැම්මා. ඒක අහලා එහෙ ඉන්න බෑ බයයි. රෑට පයින් ගිහිල්ලා තිරුක්කෝවිල් සරස්වතී ඉස්කෝලේ දවස් හතක් හිටියා. පස්සේ තාන්ඩිඅඩිවල හිටියා. පස්සේ කෝමාරිවලට ආවා. මෙහෙම ඇවිදලා ඇවිදලා අන්තිමේ දී කෝමාරිවල දි ආධාර දුන්නා. අවුරුදු තුන හමාරක් හතරක් විතර කෝමාරිවල ඉන්නවා. පස්සෙත් ඇවිල්ලා ජනශක්ති එකෙන් ආධාර ටිකක් දීලා එහෙ තමයි ටිකක් කල් හිටියේ.
සුනාමියක් ආවා. ඉන්සපෙක්ටර් ඒත්තම්, ගුණ්ඩුමඩුවල වතුර නෑනේ. ළඟ අක්කර දෙසීයක වත්තක් තිබුනා. 83 කළබල කාලේ ඒකේ අයිතිකාරයා ලන්ඩන් යූ එස් ගියා. ඒ වත්තේ සංවිධානය රැස්වෙලා හිටියා. වතුර තියෙන පැත්තක පදිංචි වෙන්න කියලා සිංහල අයට පදිංචි වෙන්න නොදී දෙමළ අය පදිංචි කළා. එක් ආයතනයකින් ළිං එහෙම හදල දීලා. කූඩාරම් තමයි. ගෙවල් හදල දුන්නේ නෑ. එතකොට මමත් එහෙ 2002 දී කූඩාරමක් ගහගෙන හිටියා. ඒත්තම්වල කට්ටිය 2002 දී එහෙ ගියා. වතුර හොඳයි. මෙහෙ ඉඳන් රෙදි ගෙනහිල්ලා නාලා උයලා කාලා හවස එනවා. ළමයි ඉස්කෝලේ යවන්න ඕන. 2004 දී සුනාමි ගහපු වෙලාවේ 11ක් එකෙන් මැරුණා. ඔට්ටුක්කල් ඉඩමේ අපේ ගේ එහෙම ගියා. ඔක්කොම කළපුවට ගහගෙන ගියා. ඉස්සරහින් මුහුද. මේ පැත්තෙන් වත්ත. අනිත් පැත්තේ කළපුව. පස්සේ සුනාමි ආධාරත් ලැබුනා. බෝල් කියන ගෙවල් වැඩසටහනෙන් ගෙවල් ලැබුනා.
අපි දුක් වින්දා වගේ ආයේ මේ වගේ කරදරයක් එන්න එපා. දෙමළ අයට විඳින්න වෙන්නත් එපා. ඉස්සර යුද්ධයෙන් පීඩා වින්දේ පොතුවිල් තමා. මේහේ වැන්දඹුවෝ 65 දෙනෙක් ඉන්නවා. පුතා නැතිවෙච්ච අම්මලා පහළොවක් විතර ඉන්නවා. මම ස්වොට් එකේ සභාපති හැටියට අවුරුදු පහක් තිස්සේ ඉන්නවා. ඒකෙන් පීඩාවට පත්වෙච්ච අයට උදව් අරන් දෙනවා.
.
CMP/AMP/POT/INE/20
40 ஆண்டுகளுக்கு முன்ன பொத்துவில் டவுனில இருந்து சேனப்பயிர் செய்யிறதுக்குதான் இங்க வந்து குடியேறினங்க ஒவ்வொரு ஆளுக்கும் பெரிய பெரிய காணிகள் பிறகு பிறகுதான் காணிகள விற்று ஆட்கள் வாங்கி குடியேறினவங்க. 77 இல நான் 500 ரூபாவிற்குதான் இந்த காணிய வாங்கினன் இந்த இடம் சரியான ஏத்தம் தண்ணி இல்ல பொத்துவில விட 35 அடி உயரம் அப்ப இன்ஸ்பெக்டர் ஒருவர் திருக்கோயிலில இருந்து வந்தவர் அவர ஏத்தத்தில யானை அடிச்சிருக்கு அதில இருந்துதான் இந்த ஊருக்கு இன்ஸ்பெக்டர் ஏத்தம் என்டு பெயர் வந்திட்டுது
பொத்துவில் P-20 கொட்டுக்கல்லை என்ட இடத்திலதான் பிறந்து வளர்ந்தனான். குடும்பத்தில் நான் 03வது பிள்ளை எனக்கு மூத்தது 02 ஆம்பிளபிள்ளைகள் அப்பா என்ன செல்லப்பிள்ளையாகத்தான் வளர்த்தவர். அந்த காலகட்டத்தில் என்ட அப்பா ஒரு தோட்டத்தில கங்காணியாக இருந்தவர். திடீரென்று அப்பாக்கு வயிற்றில ஒரு வருத்தம் வந்து மோசம் போயிற்றார் அப்போது எனக்கு 06 வயசு இருக்கும் அதற்குப்பிறகு அம்மா கைத்தொழில் செய்துதான் எங்களைப் படிப்பித்தா
எங்களுக்கு ஒரு தென்னந்தோட்டம் இருந்தது அதில இருந்து வரும் வருமானத்தையும் கைத்தொழில் செய்து வரும் வருமானத்தையும் கொண்டு தான் அம்மா எங்களை பார்த்தா பெரிசா நான் படிக்கல எனக்கு 10 வயசு இருக்கக்கொள்ள அம்மாக்கு வயிற்றுக்குள்ள வருத்தம் ஒன்று வந்தது அண்ணாவங்கள படிப்பிச்ச நாங்க இருந்த பகுதி முஸ்லிம்கள் கூட நாங்க தனிப்பட்ட ஏரியாவில இருந்தபடியாக ஸ்கூலுக்கு போய் வாரது எல்லாம் கஸ்டம். அம்மாக்கும் வருத்தம் என்டதால இடையிலே படிப்ப நிப்பாட்டி போட்டன். நானே நின்டு கொண்டன்.
பிறகு 16 வயசு வரக்கொள்ள அம்மா மோசம் போயிற்றா. அப்பா இருக்கும்போதே அப்பாட அக்காட மகன சின்ன வயசிலேயே எனக்கு பேசி வைச்சவங்க அண்ணா தோட்டத்தில கங்காணியாக இருந்தவர். எனக்கு 18 வயசில கல்யாணம் கட்டி வச்சாங்க. அவர் அரச உத்தியோகஸ்தர் நீர்பாசன திணைக்களத்தில உத்தியோகஸ்தர். நாட்டில நடந்த சூழ்நிலையால பயங்கரவாதம் ஆரம்பித்த நேரம் 1988 நாங்க அங்கால ஹிதாயாபுரம் தோட்டத்தில இருந்த நாங்க 1988ல அவர் வேலைக்கு போன நேரம் அடிபட்டுட்டாரு மோசம் ( இறந்து) போயிட்டார்
இதற்கிடையில எனக்கும் 03 பிள்ளைகள் 01 பொம்புள பிள்ளையும் 02 ஆம்புள்ள பிள்ளையும 05 பிள்ளைகளில 02 மோசம் போயிற்று 03 பிள்ளைகள். அங்க தனியே இருக்க ஏலாது என்று இங்க வந்த நாங்க. அங்க எங்கட வீடும் அடிபட்டுட்டு அவரும் மோசம் போய் நாங்க இங்க வந்த. இங்க வந்து 1990ல நடந்த யுத்தத்தில நாங்க இடம்பெயர்ந்து 10 மையிலுக்கு அப்பால கோமாரி என்ற கிராமத்தில இருக்க வேண்டிய சூழ்நிலை வந்திட்டு, எங்கட வீடெல்லாம் எரிக்கப்பட்டு கட்டின உடுப்போடதான் போன நாங்க அங்க போன அகதிவாழ்க்கை அகதி வாழ்க்கை என்றா உழைக்க ஆம்பிளையும் இல்ல. ஏற்கனவே எல்லாம் அடிபட்டுட்டு கஸ்டம். மிச்சம் கஸ்டப்பட்டு கைத்தொழில் செய்துதான் பிள்ளைகளைப் பார்த்த அங்கயும் பின்நேர வகுப்புதான் நடந்த காலையில கோமாரி பிள்ளைகளுக்கு காலத்தால 08 மணியில இருந்து 12 மணி வரைக்கும் கோமாரி பிள்ளைகளுக்கு பின்நேரம் 01 மணியில இருந்து 03 மணிவரை இங்க இருந்து இடம்பெயர்ந்த பிள்ளைகளுக்கும் அதில அப்படி படிச்சிக்கொண்டு வந்தவையல்.
அதற்கிடையில எங்கட பெடியன் (மகன்) ஒருவருக்கு கால் வருத்தம் பிறக்கக்கொள்லேயே கால் வருத்தம் மடங்கின மாதிரி தகப்பன் இருக்கக்கொள்ளயே ஒரு கால் செய்தவர். பிறகு அவர் மோசம் போனதற்கு பிறகு ஒரு கால் ஒப்பரேசன் பண்ண வேணும். கிளினிக் எல்லாம் போய் பெரியதொரு கஸ்டத்திற்கு மத்தியிலதான் கிளிக்கெல்லாம் போனனான். அப்படி ஒரு கஸ்டம் நான் அநுபவிச்ச நான். நான் அனுபவிச்ச மாதிரி வேற ஆட்கள் அனுபவிக்க கூடா.
பிள்ளைக்கு கால் வருத்தம் அவர் ஒருநாள் ஸ்கூலுக்கு போய் வந்து குழறுறாறு என்ன முடவன் என்று சொல்லுறாங்க, இதெல்லாம் வேதனைக்குரிய விடயம். எங்களுக்கு அரசாங்கள் தந்த நிவாரணத்தோட குடும்பத்தையும் எடுத்துக்கொண்டு போகணும் கிளினிக்கும் போகனும். அந்த அரிசிய வித்துப்போட்டுதான் கிளினிக்கு போய்வந்த. எனக்கு பொத்துவிலில வயல் இருந்த படிய அந்த குத்தகை காச எடுத்து, 02 போகம் செய்கிற வயல் அந்த குத்தக கச எடுத்துதான் கிளினிக் போறதோ வாறதோ பிள்ளைகளின்ட உடுப்பு சாமன்கள் செய்தாலோ ஆனா நாங்க சாப்பிட்டதெல்லாம் கைத்தொழில் செய்து, இடியப்பம் பிட்டு அவிச்சி விற்றுத்தான் பிள்ளைகள வளத்தனான்.
இப்படி இருக்கிற நேரம் இடம்பெயர்ந்து சொந்த ஊருக்கு போங்க என்று சொல்லிட்டாங்க கொண்டு வந்து விட்டுப் போட்டு தங்கச்சி ஒரு ஆள் அவவ நான்தான் வளத்த நான் சித்தப்பாட மகள் அவவும் மற்ற பிள்ளைகளையும் இங்கு கொண்டு விட்டுப்போட்டு எங்கட அண்ணாவங்கட பாதுகாப்பில அவங்கள பாக்கச் சொல்லிப் போட்டு, 06ம் திகதி மீளக் குடியமர்ந்த நாங்க 08ம் திகதி என்ட பொடியன எடுத்துக்கொண்டு போகனும் 10ம் திகதி அவருக்கு கால் ஒப்பரேசன் மட்டக்களப்பு ர்ழளிவையட இல அப்ப அகதியாக இருக்ககொள்ள பிள்ளைகள விட்டுப் போட்டுதானே கிளினிக் எல்லாம் போயிற்று வநதனான். அப்ப அவருக்கு கால் ஒப்பரேசன் பண்ணி அவருக்கு 12 வயசாகிட்டு நேத்திக்கடன் வைத்துத்தான் கடவுள் புண்ணியத்தில எங்கேயோ இருந்து திடீரென்று சொல்லி ஒரு நரம்பு டொக்டர் வாரார் நீங்க உடனே வாங்க என மெசேஸ் ஒன்று கிடைச்சித்து மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் பொடியனுக்கு உடனே ஒப்பிரேசன் பண்ணி எடுத்திட்டு; 10 நாள் முடிய இவர டிக்கட் வெட்டிக்கொண்டு வந்து மாசத்திற்கொருமுறை ஆஸ்பத்திரிக்கு போனது. அப்ப நான் தனியத்தான். நான் பிள்ளைகள இங்க தனியத்தானே விட்டுட்டு போன நான. ; எனக்கு உதவிக்கு வந்து நிக்கவும் ஆளில்ல. ஏனென்றால் நாங்க மீளக் குடியமர்ந்த ரைம் ஏனென்றால் எனது சகோதரங்கள் அவர்களது பிள்ளைகள தனிய விட்டுப்போட்டும் வர முடியாது அங்க பிரச்சின இரவில வந்து கடத்திக்கொண்டு போறது. ரவுண்டப்புல பிடிச்சிக்கொண்டு போறவங்கள் எனக்கு அதவிட சந்தோசம் என்ன காரணமெண்டா எல்லா டொக்டர்களும் சொன்ன பெரும்பாலும் நீங்க எதிர்பார்க்கவேணாம் கால் நிமிறும் ஆனா நடக்கிறது கடவுள் கையிலதான் இருக்கு என டொக்டர்மாரெல்லாம் சொன்னவங்க பெண்டேச்சை வெட்டி பிள்ளைய நடப்பிச்சவுடன் நல்லா நடந்தார். அந்த நேரம் ஒப்பரேசன் பண்ணின டொக்டருக்கும் நல்ல சந்தோசம். எனக்கும் இனி இல்லண்ட சந்தோசம். இழந்ததையெல்லாம் திரும்ப பெற்றமாதிரி ஒரு சந்தோசம் அந்த பெடியன்ட கால் சுகமானது.
இப்படி இருக்கக்கொள்ள வயல் ஒன்று இருந்தது குத்தகைக்கு கொடுத்துக்கொள்கிற, மற்றது கைத்தொழி; செய்துதான் பிள்ளைகளை படிப்பிச்ச A/L படிக்கக்கொள்ள மகள் கல்யாணம் கட்டிட்ட சொந்தத்துக்குள்ள மருமகன்கார பொடியனத்தான் விரும்பி கல்யாணம் கட்டினவ. மற்றாக்கள் 02 பேரும் பட்ட படிப்பு படிச்சவங்க இப்ப எங்கட குடும்பம் நல்ல நிலைக்கு இருக்கு நான் பட்ட மாதிரி யாரும் கஸ்டப்பட்டிருக்க மாட்டாங்க மற்றவங்களுக்கும் அப்படியான கஸ்டம் வரக்கூடாது ஏனெண்டா எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவில இருந்த போது ஏதோ கடவுளென்று; தந்த பாக்கியம் கைத்தொழில் நான் எல்லாம் செய்வன் கிடுகு இழைப்பன், தைப்பன், பெட்டி பின்னுவன்.
ஒருகால கட்டத்தில் கோமாரிக்கு போன டைம்ல எங்களுக்கு படுக்கிறதுக்கு பாயும் இல்ல நிவாரணம் தந்த பாய்தான் மண்ணில போட்டு நடக்கக்கொள்ள அடுத்தநாள் பொந்து பொந்து பிஞ்சுபோயிடும். நான் பனையோலை வெட்டி காயவைச்சி பாய் ஒன்று இழைச்சன் அத பார்த்து பக்கத்தில இருக்கிறவங்களும் கேட்டு அவங்களுக்கு ஓடருக்கு பாய் இழைச்சி வித்த நான், ஸ்கூலுக்கு போறதுக்கு யூனிபோம் என்ட பிள்ளைகளுக்கு தைக்கிற நேரம் பக்கத்தில இருந்தெல்லம் வந்து தருங்கள் எங்களுக்கும் தைச்சித் தாங்க கையால என்றாலும் நீங்க வடிவாத் தைக்கிறீங்க என்று, இப்போ நான் போட்டிருக்கிற சட்டையும் நான் தைச்சதுதான் மெசினால தைக்கிறதவிட கையால கொஞ்சம் குவிக்கா தைப்பன்.
கைத்தொழில்தான் பாதுகாத்து வந்தது. நான் வெளிநாடு போகவுமில்ல ஒரு ரூபா காசிக்கும் கூட நான் கூலிவேலை செய்யப் போனதுமில்ல. கைத்தொழில்தான் எல்லாம் செய்வன், விடிய எழும்பி காலையில இடியப்பம் அவிச்சி வைச்சிப் போட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புறது. எங்கட பிரதேசத்தில தண்ணி இல்ல. குடிக்கிறதுக்கு பொத்துவில் டவுனுக்குத்தான் போவம் குளிக்கிறதுக்கு இங்க இருந்து 01 மைல் தூரம் இருக்கும் அந்த ஆத்துக்குதான் குளிக்கப் போற. நான் மட்டுமில்ல இந்த ஏத்தத்த பொறுத்தவரையில் எல்லாருக்கும் அதே தண்ணி பிரச்சினை ஆனா இப்ப அரசாங்கங்கள் மாறி, சுனாமிக்குப் பின் இப்போது ஏத்தத்தில சில கிணறுகளும் இருக்கு மற்றும் அரசாங்கமும் பைப் லைன் தந்தத்தால இப்ப எங்கள் வளவெல்லாம் பச்சப்பசேல் என இருக்கு. ஒரு காலத்தில தண்ணி இல்லாத பிரச்சினை குடிக்கிறதுக்கும் குளிக்கிறதுக்கும் பிரச்சினை அந்த டைமிலேயே நான் நிறைய தென்னம்பிள்ளை வைச்சனான். ஆக்கள் வந்து கேட்பாங்கள் கிணறு இருக்கா என்று நான் சொல்லுவன் இல்ல நான் இரவல தண்ணி அள்ளி ஊத்துவன் என்று, நான் 02.00 மணிக்கே எழும்பிடுவன் பக்கத்தில ஒரு கிணறு இருக்கு அதில 02, 03 குடம் தண்ணி அள்ளிகொண்டு வைச்சிட்டுதான் அப்பம் சுடுவன். இரவு எனக்கு பகல் மாதிரி இரவு பகலா கஸ்டப்பட்டத்தால இன்றைக்கு என்ற பிள்ளைகளும் நல்லா இருக்குதுகள் நானும் நல்லா இருக்கின்றன்.
என்ட வாசலுக்கு ஒரு ரூபா கடன் தரனும் என்று ஒரு மனுசனும் வரல இவ அப்படி இப்படி என்று ஒரு வார்த்த நான் கேட்கவும் இல்ல இனிமேலும் என்ன கடவுள் அப்படி காப்பாத்தனும். கூடாத வார்த்தைகளோ அவதூரான வார்த்தைகளோ இல்ல. மூத்தமகன் விரும்பின பிள்ளைய கட்டப்போறன் என்றன் சரி மகன் நீங்க விரும்பின பிள்ளைய கல்யாணம் கட்டுங்க என்றன் அவரும் கல்யானம் கட்டிட்டார், மற்ற மகன் பட்டதாரி அவர் வேலைக்கு டிரை பண்ணினார் கிடைக்கல்ல, வெளியில போப்பரன் என்று வெளியில போயிற்று வந்தவர். அப்போ எனக்கிட்ட இப்படி ஊக்கம் கொடுத்து படிப்பிக்கவும் ஆள் இல்ல டியூசனுக்கு அனுப்பி படிப்பிக்கவும் பொருளாதார வசதியில்ல. அவரிட திறமையைக் கொண்டு படிச்சு பாஸ் பண்ணினவர்தான். வெளிநாடு இருந்து வந்தும் இன்ஸ்பெக்டர் ஏத்தத்தில பிள்ளைகளிட படிப்பு மந்த நிலையில் இருக்குது என்று பிள்ளைகளுக்கு ஸ்கொலசிப் படிப்பிக்கிறார். 2010ல 10 பிள்ளைகள பாஸ் பண்ண வைத்தவர் அது எங்களுக்கு பெரியதொரு சந்தோசம் அவர் ஒரு ரூபா காசி கூட வாங்காமத்தான் பொதுச் சேவையாச் செய்யிறார். காலையிலேயும் பின்னேரமும் படிப்பிக்கிறார்.
1990ம் ஆண்டு காலையில கல்யாண வீடு ஒன்று தண்ணீ ஊத்துறதுக்கு வரச்சொல்லியிருந்தார்கள் நான் காலையில எழும்பி 150 இடியப்பம் அவிச்சு கடைக்கு கொடுத்துவிட்டு நான் போயிருந்தன் தண்ணி ஊத்திக் கொண்டிருக்கும் போது வெடித்தான் எழும்புது பிள்ளைகளும் ஸ்கூலுக்கு போயிற்றுதுகள். எனது கடைசிப் பெடியன் ஸ்கூலுக்கு இற்கு போகல ஸ்கூலுக்கு போற வயசு வரவில்ல. நேசரிக்குத்தான் போறது. கல்யாண வீட்டில இருந்து ஓடிவந்து நேசரிக்கு போய் பெடியன கொண்டு வந்து விட்டுட்டு எங்கட தம்பிய அனுப்பி ஸ்கூலுக்கு இற்கு அனுப்பி பிள்ளகளை எடுத்துக்கொண்டு ஒன்றுமே எடுக்கல, தம்பிக்கு கோபம் சனம் எல்லாம் ஓடுது நீ என்ன இருக்கிற என்று அந்ந நேரம் போன் வசதிகளும் இல்ல. எங்களுக்கு கொட்டு;கல்லில ஏற்கனவே வளவும் சின்ன வீடு ஒன்றும் இருந்த. அங்கபோய் இருப்பம் என்று பெட்டி உடுப்பெல்லாம் எடுத்த நான் தம்பி சொல்லிட்டான் வேணாம், நம்ம வளவுக்குள்ள போய் இருப்பம் தேத்தண்ணி வைச்சி குடிப்பதற்கு அங்க பாத்திரங்கள் இருக்குத்தானே எங்க சீனியும் ஒரு அங்கரும் எடுத்துக் கொண்டு காலைச் சாப்பாடும் சாப்பிடலே. உடுத்த உடுப்போட போனனான்,
எங்கட தம்பி கல்யாணம் கட்டி 10 நாள் என்ட வீட்டிலதான் கல்யாணம். பந்தலும் பிரிக்கல. வீடு நிறைய சாமான்கள். சனங்கள் எல்லாம் அதால கத்திக்கொண்டு ஓடுதுகள் காலில செருப்பு கூட இல்ல அந்த சுடு மணணால ஊரணிக்கு போய் கோமாரிக்கு நடந்துதான் போனனாங்க. எங்கட அண்ணாவும் பெண்சாதி பிள்ளைகளும் ரோட்டால வார நேரம் வந்திருக்காங்க அப்ப இராணுவம் ரவுண்டப் பண்ணிட்டுது. மாடு மேய்க்கிறவன் ஒருவன் இவங்க டுவுவுநு குடும்பம் என்று சொல்ல அண்ணாவ பிடிச்சு அடிக்கப் போக அண்ணண்ட பெண்சாதி சின்னப ;பிள்ளைகளுடன் கத்தியிக்கிறாள் அண்ணா இல்ல நான் வயல்தான் செய்கிற என்று சொல்ல சரி போ என்றுட்டான்.
28 ஏக்கர் காணி வெள்ளாமை செய்து வெட்டுற பருவம் விட்டுப்போட்டுதான் போன அங்க போன அகதி அங்கையும் இராணுவம் ரவுண்டப் பண்ணின தம்பி எங்கள எல்லாம் விட்டுட்டு காட்டுக்கு ஓடிட்டார்.அவர தேடித்திரியுறதா அல்லது பிள்ளைகள பாக்கிறதா? இராப்பகலா அழுரதுதான் காட்டில போன பிள்ளைகள் இல்ல இங்க பசி பட்டினி. பிள்ளைகளுக்கு போட உடுப்பில்ல அந்த நிவாரணம் அத வச்சிதான் சாப்பாடு, சில நேரம் உடுப்ப கழுவி போட்டா உடுப்புகளும் இல்லாம போயிடும் பெரிய கஸ்டம் கைத்தொழில் ஒன்று;தான் எனக்கு கை தந்தது.
அங்க இருந்து வார நேரம் 03 வருடமாக போயிற்று வார நேரம் வீட்டுல சுவர் மட்டும் தான் இருந்தது மற்றது எல்லாம் எரிந்து போயிற்று. மாட்டு பட்டி இருந்தது கோழிப் பண்ணை இருந்தது. நாங்க இங்க வாரதுக்காக கோப்பிசம் அடிக்க காசு இல்லாம 10 மாடுகள விற்றுத்தான் நான் வந்து இந்த வீட்டுக்கு கோப்பிசம் அடிச்சி ஓடு போட்டனான். நான் இத கட்டினது அங்க இருந்து வாரதுக்கு அவர் மோசம் போனதுக்கு பிறகு நான் தனிய இருக்க ஏலாது தானே அது முஸ்லிம் ஏரியா. எங்கட வளவுக்கு இங்;கால கலப்பு, முன் பக்கம் கடல் பின்பக்கம் மட்டும்தான் ஒரு முஸ்லிம் பொம்பில அந்த குடும்பத்திற்கு நான் நிறைய செய்திருக்கிறன். அவ எனக்கு நல்ல உதவி அண்ணா இல்லாத நேரம் என்னோட வந்து நிற்பா வேலைகளை செய்து தருவா அப்படி நல்ல உதவி. நாங்க அகதியாக போனபோது காணிய காப்பாத்தி வைச்சிருந்ததும் அவதான். ளுவுகு வந்து அடைக்க எங்கட வளவ அவவோட வளவோட சேர்த்து வைச்சிருந்தவ. நாங்க வந்ததும் மெசின் ஒன்ற எடுத்து வரச்சொல்லி தேங்காய் ஆய்ந்து வரக்காட்டினவ. எங்கட காணிதான் கிட்டத்தட்ட 600 தேங்காய் இருந்தது. அத விற்றுதான் அப்பம் புட்டு செய்கிறதும், சிறியதொரு தட்டிக்கடையும் வைச்சருந்தனான். கைதொழில் செய்துதான் எனது வாழ்க்கை சென்றது.
என்ட கணவர் சாகிற நேரம் எனக்கு 31 வயசுதான் பெரிசா வயசும் இல்ல. தனியாப் போற இல்ல வளச்சி இருக்கிற ஆட்கள் நம்மலோட நல்லம். பாக்கிற ஆட்கள் சொல்லுவாங்க இன்னார் வந்து இன்னாரோட கதைக்கிறாங்கள் என்று இதனால நான் இன்றைக்கும்தான் தனிய ஒருநாளும் போகமாட்டன். பக்கத்தில 02, 03 பேரக் கூட்டித்துதான் போற. நான் கூட்டிட்டு போற ஆட்களுக்கெல்லாம் தேங்காய் கொடுக்கிற.
1995 இல காலையில எழும்பி போய் தேங்காய் ஆயிகிற நேரம் ஏத்தத்து பக்கம் வெடி கேக்குது அப்போ பின் வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு அப்படியே உள்ளால வந்து பிள்ளையார் கோவிலுக்கு கிட்ட வந்து ஒரு வீட்டுக்கு போனம் இங்க வராதங்க என்று சொல்லி கேட்ட சாத்திட்டாங்க அப்போ எனக்கு ஒன்ற விட்ட அண்ணா வீட்ட போன அப்போ அவர் கேட்டார் எங்க இருந்து வாறியல் என்று அப்போ தேங்காய் ஆயப்போனோம் அப்ப வெடிசத்தம் கேட்டுது என்று சொன்னன். அவர் சொன்னார் ஏத்தம் பத்தி எரியுது என்று, அப்போ என்ற சித்தப்பாட மகளும் என்ட மகளும் வீட்டில இருந்தவங்க பொலிஸ் ரவுண்டப் பண்ணிட்டான்
அப்ப நான் சொன்னன் நான் வீட்ட போகனும் அங்க தங்கச்சியும் மகளும் இருக்கு என்று. நானும் அந்த அக்காவும் வாரம் குண்டு மடு ஏரியாவில பொலிஸ் வாயில துணிய கட்டிட்டு நெருப்பு வைக்கானுங்க. வந்தவனுகள் கடும் வெறி எல்லாரையும் வீட்டுக்குள்ள போகச் ;சொல்லி போட்டு லாம்பெண்ணைய ஊற்றி கிரனைட்ட கழற்றி போடுவன் என்று சொல்லிக் கொண்டிருக்க பிறகு வந்த 02 பொலிஸ்காரன் அப்பாவிகள ஒன்று செய்யாத என்று சொல்லி கூட்டிட்டு போயிற்றான். நாங்க ஒழிச்சி ஒழிச்சிதான் வீட்டுக்கு வந்த. பிள்ளைகள் எல்லாம் லாம்பெண்னை முழுகிப் போய் இருக்குதுகள். கனகராசா என்ட ஆள போட்டு அடிச்சி கையெல்லாம் வெடிச்சி வெடிச்சி இரத்தம் ஓடிக் கொண்டிருக்கு ஆமி வந்துதான் பொலிஸ் காயப்பட்டவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றவன். கடவுள்தான் காப்;;பாத்தின எங்கட பிள்ளைகளுக்கு ஒன்டும் இல்ல.
இதில 75 வீடு (குடில்) அகதி வாழ்கையில இருந்து போட்டு சிறு குடில் அமைந்து இருந்தவங்கள் இதையெல்லாம் எரிச்சுப் போட்டாங்கள் ஏற்கனவே 1990 இல எல்லாத்தையும் இழந்து மீண்டும் 1995 இல உடுப்புக்கள் எல்லாம் தேடிவந்து இருந்த போது திரும்பவும் எரிச்சுப் போட்டாங்கள். உடுப்பு கூட இல்ல. இதில் 02 பெம்பிளைகள பொலிஸ் எடுத்துக்கொண்டு போயிற்றான.; அவங்களுக்காக நாங்க போராட்டம் ஒன்ற நடத்தினோம் உண்ணாவிரதம் இருந்து வீதியில போய் மறித்து வாகனங்கள் போகக்கூடாது அந்த 02 பெண்பிள்ளைகளும் வேண்டும் என்று, அப்ப கூட்டணி MP, ASP எல்லாம் வந்து மன்னிப்பு கேட்டு விடுறம் என்று சொன்னவங்க. மீண்டும் அகதி வாழ்க்கைதான். என்ட வீடு தகரம் அடிச்சிருந்ததால பத்தல குசினிதான் பத்தினது. பெரிய இன்னல்கள் பட்டுதான் நாங்க இன்டைக்கு உயிரோட இருக்கிறோம்
அகதியாக கோவிலில இருக்கக்கேக்க ளுவுகு கவச வாகனத்தால 02 பெடியனுகள அடித்து சாகடிச்சுப் போட்டானுங்கள் அதக் கேட்டு அங்க இருக்கேலாது பயம். இரவோட இரவாக நடந்து திருக்கோவில் சரஸ்வதி வித்தியாலயத்தில 07 நாள் இருந்தோம் பிறகு தாண்டியடில இருந்தோம் பிறகு கோமாரிக்கு வந்தோம். இப்படி அலைந்து திரிந்து கடைசியாக கோமாரியில தான் இருந்து நிவாரணம் தந்தாங்கள். கிட்டத்தட்ட 3 ½ இ 04 வருடம் கோமாரியில இருந்திருக்கிறம். பிறகு வந்தும் ஐனசக்திதான் நிவராணம் தந்து அதிலதான் கொஞ்ச காலம் வாழ்ந்தோம்.
சுனாமி வந்தது. இன்ஸ்பெக்டர் ஏத்தம் குண்டுமடு தண்ணீ இல்லதானே பக்கத்தில 200 ஏக்கர் தோட்டம் ஒன்று இருந்தது. 83 கலவரத்தில அத விட்டுப்போட்டு லண்டன யு.எஸ் என்று தோட்டத்து சொந்தக்காரங்க போயிட்டாங்க அந்த தோட்டத்தில இயக்கம் முன்னின்டு தண்ணி இருக்கிற ஏரியாவிற்கு போய் குடியேறுங்க என்டு சிங்கள ஆட்கள குடியேற விடாம தடுத்து தமிழ் ஆட்கள கொண்டு குடியேற்றினாங்க. ஒரு நிறுவனம் ஊடாக கிணறு எல்லாம் கட்டிக் கொடுத்து குடிசைதான் வீடுகள் கட்டிக் கொடுக்கேல. அந்த நேரத்தில நானும்தான் அங்க ஒரு குடில் ஒன்று கட்டிக்கொண்டு 2002 இல ஏத்தம் சனம் அங்க போனது நல்ல தண்ணி இங்கயிருந்து உடுப்பெல்லாம் கொண்டு போய் குளிச்சி சமைச்சு சாப்பிட்டு பின்னேரம் வாரது ஸ்கூலுக்கு பிள்ளைகள அனுப்போனும்;தானே 2004 இல சுனாமி அடிச்ச நேரம் 11 பேர் அதில செத்ததுகள். கொட்டுக்கடல் காணியில எங்கட வீடுகள் எல்லாம் போயிட்டு எல்லாம் அடிச்சுக் கொண்டு கலப்புக்குள்ள போயிட்டு முன்னுக்கு கடல் இங்கால தோட்டம் மத்த பக்கம் கலப்பு பிறகு சுனாமி உதவியும் கிடைச்சது. போல (Ball) வீடு திட்டம் என்றதில வீடு கிடைச்சது
நாங்க பட்ட கஸ்டம் மாதிரி இன்னொரு கஸ்டம் வரவும் கூடாது தமிழ் மக்கள் அநுபவிக்கவும் கூடாது. இலங்கையில முதல் யுத்ததால பாதிக்கப்பட்டதென்டா அது பொத்துவில்தான் இங்க 65 விதவைகள் இருக்கிறாங்க மகன இழந்த தாய்மார்கள் ஒரு 15 பேருக்கு கிட்ட இருக்கிறாங்க நான் சுவாட்டில 5 வருடம் தலைவியாக இருந்திருக்கிறன். அதன் மூலம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவிகள் எடுத்துக் கொடுத்திருக்கிறன்.