We thought he is alive

A collection of experiences related to ethnic conflict


අපි හිතුවේ එයා ජීවතුන් අතර ඉන්නවා කියලා

ජනවාර්ගික ප්රශ්නයට අදාළ අත්දැකීම් රාශියක්


அவர் உயிருடன் இருப்பதாக நாங்கள் நினைத்தோம்

இனப்பிரச்சினை தொடர்பான அனுபவங்களின் தொகுப்பு



CMP/AMP/POT/KAM/01
In school I studied only up to Grade 5. At that very young age someone got interested in me, but their mother and all said he was young therefor they would not marry him off. My parents also got in to an argument and my father was determined to marry me off to that boy. My mother told them, “you are Hindus, you should convert to our religion - Christianity, and then only I can give my child, also you should wait till our child attains age”. But he came with the poison bottle. But the neighborhood people have prevented him from taking it. Then he started working and I attained age at 16. My parents marry children off at the very young age. At the age of 15 they stopped me from school and got me married off. I was very ignorant then. I was leading a carefree life.
After getting married to him at the age of 18, in 1978 August, I gave birth to my son. When my son was about one and a half years old, my husband got a bus license and was working as a lorry driver. Troubles started then. He was taken away and got beaten up in the camp, tied up with chains saying he was supporting….. , later he was released with a warning. He was asked to place his signature every month, he told them it wasn’t possible since he has to travel far for work, but they insisted. He got scared and went to Colombo for work, his elder sister was there. But till now I haven’t seen him again. 1991, January, 17th he left home. At that time my youngest son was one year old, and he was on bottle feeding. Elder son was 13 and the daughter was 10.
He went in 1991. We went to check at his elder sister’s place, they said he had been there but left saying he was going home. Then only they realized he is missing. We had thought he was there and they have thought he had come home. We don’t know what happened to him, whether the military had done something to him or not. We don’t know. He just went and never came back. He loved us so much. It’s because he is dead he hadn’t come back to us. We had a ceasefire. During that time many have returned. He cannot bear not seeing the children for even half a minute. He wouldn’t have hit the children not even by a small stick. He had never hit me. He would take us in his lorry to buy slippers and dress. When he was there I wear Pottu and flower, now I don’t have my husband to wear Pottu and flower.
I gave his photo to publish on the paper. I don’t know whether they have published it or not. What am I supposed to do? Take care of children or go in search for him? Till now I live with a thought that he is alive. When the commission came and I went to register and sign in Akkarappaththana, they scolded me saying how he could be alive for all these years. They asked me to get the death certificate immediately and got it done. I didn’t receive anything from any organisation.
There was no soap; I would wash cloths in just plain water. There was no raw rice, would pound the parboiled rice and make porridge before I go for weeding in the paddy fields. I would build sand walls for about Rs 200 or Rs 300. Weave palmarah leaves to thatch the roofs of huts, would cook meals for my children and also if somebody asks then take care of patients in the hospital for daily wage. I educated my children and bore the other expenses too. I educated my daughter up to Grade 10.
The youngest son didn’t study; he doesn’t know a single alphabet. Because I went abroad to work, he didn’t go to school. One day I asked him to find the Akkarapaththu bus, and he made me board the Ampara bus since he saw the letter ‘Aa’ in it. That much low his reading skills was. Only after boarding the bus we realized it was the wrong one. If he was alive would he have left the children uneducated? I educated them as much as I could. They are not educated to become officers but they know to read and write.
I don’t know who took my son but he is also not here now. I left my two children with my neighbors and went abroad to work. I pawned my land for Rs10,000 to go abroad. I don’t know how to write letters. I would send my salary in a registered post but it doesn’t reach my family. I also don’t get the letters from my children; my employers don’t give them to me. In such a situation I got mentally ill. I missed my children and worried a lot, which made my legs to swell and I was suffocating. They took me to the hospital and there they were told that I am mentally ill and it’s better to send me back to Sri Lanka. So they sent me in 11 months. At that time Rs 400 was my monthly salary, with that money I redeemed my land and then started looking for my son. But I couldn’t find my son.
I lost my house and all my things in Tsunami. Mahashakthi had given me a sewing machine as Tsunami aid. I came to my daughter’s place on 24th and left on 26th. Nothing is left, we lost everything including the house. That’s why we received the house.
Later with so much difficulty I brought up my children and married them off. I went through difficulties during that time and now I am sick. Even now I spent Rs 5000 and did a medical checkup. It came out that I have cholesterol, so I am dieting now. The government gave me a house with a land as Tsunami aid. Due to the war my son came here from Vanni with his wife and children. I was in financial difficulties and was in debt. I pawned this land for one lakh and managed my daily life. So I couldn’t do anything I sold the land for Rs300,000 and shared the money among my daughter and two sons and being on my own now. If I had that house I would have been witnessing my three children quarreling with each other. So I divided that among the three children and worked in Colombo for 11 months. I couldn’t manage there; my legs were swelled, so I have come back one year before. Now I am with my daughter, doing plantation and raise 5 to 6 hens. I have decided to stay with her till my end. Only God knows how much I suffered to raise these kids. Now I am 56 years old, how much I have to do at this age. This is my life story.


CMP/AMP/POT/KAM/01
මම ඉස්කෝලේ 05 වසරට විතරයි ඉගෙන ගත්තේ. ඒ තරම් පොඩි කාලෙම මට එක්කෙනෙක් කැමති වෙලා බඳින්න ඕන කිව්වා. එතකොට එයාගෙ අම්මයි තාත්තයි කිව්වා අපි මෙයාව බන්ඳලා දෙන්නේ නෑ කියලා. පොඩි ළමයෙක් කියලා. තාත්තා අම්මත් ‍එක්ක රණ්ඩු වුනා. මම ඒ කොල්ලට තමයි බන්දලා දෙන්නේ කියලා. එතකොට අම්මා කිව්වා ඔයා සයිවම් අපේ වේද ආගමට එන්න ඕන. එතකොට තමයි ළමයව බන්දලා දෙන්නේ. ළමයා ලොකු වෙන්න ඕන. එතකම් ඉන්න කියනකොට එයා වස බෝතලයක් අරගෙන ආවා. පස්සේ වටේ පිටේ හිටපු අය අල්ලලා බේරලා යැව්වා. ඊට පස්සේ එයා වැඩට ගියා. මම අවුරුදු 16 දී ලොකු ළමයෙක් වුනා. අපේ අම්මා තාත්තා පොඩි කාළෙම බන්දලා දෙනවා. අවුරුදු පහළොවේ දී මට ඉස්කෝලේ යන්න දෙන්නේ නැතුව බන්දලා දුන්නා. ඒ කාලේ මට මොකවත් තේරෙන්නේ නෑ. මම එත‍කොට සෙල්ලම් කර කර විනෝදයෙන් හිටියා.
එයා ඇවිල්ලා බැඳලා අවුරුදු 18 දී පුතා ඉපදුනා. 78 අටවෙනි මාසේ පුතා ඉපදුනේ. එතකොට පුතාට අවුරුදු එක හමාරක් විතර ඇති. මෙයා බස් ලයිසන් එකක් අරගෙන ලොරියක් පැද පැද හිටියා. ඒ කාළේ ප්‍රශ්නේ ආවා. එල් ටී ටී එකට සපෝට් කරනවා කියලා මෙයාව අල්ලගෙන ගිහිල්ලා කෑම්ප් එකේ දී දංවැලකින් බැඳලා ගහලා තියෙනවා. පස්සේ කිසිම ප්‍රශ්නයකට යන්න එපා කියලා නිදහස් කළා. නිදහස් කළාම ගෙදර ඇවිත් හිටියා. මාසයක් ගානේ ඇවිල්ලා අත්සන් කරන්න කිව්වා. එයා මාසයක් ගානේ සයින් කරන්න බෑ කියලා මම දුර පළාතකට යනවා කිව්වා. එතකොට අනිවාර්යෙයන්ම මාසයක් ගානේ සයින් කරන්න ඕන කියලා ඒගොල්ලෝ කිව්වා. මෙයාට බයක් තිබුනා. මෙයාගේ අක්කා කො‍ළඹ හිටියා. එහෙ වැඩට යනවා කියලා ගියා. අද වෙනකම් එයා දැක්කේ නැහැ. එයා ගියේ 1991 ජනවාරි 17 වෙනිදා. එතකොට පොඩි පුතාට අවුරුද්දයි. එයාට පිටිකිරි දෙන්නේ. ලොකු පුතාට 13 යි. දුවට වයස 10 යි.
1991 දී ගියේ. කොළඹට ගිහිල්ලා එයාගේ අක්කගේ ගෙදරට ගිහින් බැලුවම එයා ආවා. පස්සේ ගෙදර යනවා කියලා ගියා කියලා කිව්වා. ඊට පස්සේ තමයි එයාලත් දන්නේ මෙයා නැති වෙලා කියලා. මම හිතාගෙන හිටියා එයා එහෙ ඉන්නවා කියලා. එයාලා හිතාගෙන හිටියා එයා ගෙදර ආවා කියලා. ඒ නිසා මොකක් වුනාද දන්නේ නැහැ. හමුදාවෙන් මොනවා හරි කරාද දන්නෙත් නැහැ. කොච්චර ආදරෙන් හිටිය කෙනෙක්ද? පණ තිබ්බේ නැති නිසා තමයි අපේ ළඟට ආවේ නැත්තේ. සටන් විරාම එහෙමත් ආවා. ඒ වෙලාවෙත් කට්ටිය ගොඩක් ආපහු ආවා. ළමයිව නොබලා විනාඩියක් ඉන්නේ නැහැ. කිසිම දවසක ළමයින්ට ‍කෝටුවකින් ගහලා නැහැ. මට ගහලා නැහැ. ලොරියේ නග්ගවාගෙන ගිහින් තමයි අපට සෙරෙප්පු, ඇඳුම් අරන් දෙන්නේ. එයා හිටපු කාළේ පොට්ටු තිබ්බා, මල් ගැහුවා. දැන් පොට්ටු තියන්නෙත් නෑ... මල් ගහන්නනෙත් නෑ... පොට්ටු තියන්න මල් ගහන්න දැන් මගේ මනුස්සයා නෑ.
පත්තරේකට පොටෝ එක දුන්නා. එගොල්ලෝ දැම්මද නැද්ද දන්නේ නෑ. ළමයිව බලාගන්නවද එයාව හොයනවද? අද වෙනකම්ම එයා ඉන්නවා කියලා හිතාගෙන තමයි මම හිටියේ. කොමිෂන් සභාවෙන් ඇවිල්ලා අක්කරපතනේ දී ලියාගෙන අත්සන් ගන්න ගිය වෙලාවේ එයා මට බැන්නා. මෙච්චරකල් එයා ඉඳීද කියලා. එහෙමම මරණ සහතිකය ගන්න කියලා මරණ සහතිකය අරන් දුන්නා. කිසිම ආයතනයකින් මට බඩුවත් මොකවත් ලැබුනේ නැහැ.
සබන් නැහැ. රෙදි නිකම් තමයි සෝදන්නේ. හාල් නැහැ. සුණු සහල් කොටලා කැඳ හදලා තියලා මම කුඹුරුවල වල් නෙලන්න යනවා. මම කුළීවැඩ කරනවා. දෙසීයට තුන්සීයට කතා කරලා කරනවා. පොල්අතු වියලා කූඩාරම්වල ඉන්න අයට උයලා දීලා සල්ලි ගන්නවා. ඉස්පිරිතාලේ කවුරුහරි ළඟ ඉන්න ‍කෙනෙක් හෙවුවොත් පඩියට යනවා. ළමයිට උගන්වනවද හැම වියදමක්ම කරගත්තා. මේ තරම් දුක් විඳලා දුවට 10 වසරට එනකම් ඉගැන්නුවා.
පොඩි පුතා ඉගෙන ගත්තේ නැහැ. අයන්න වත් දන්නේ නැහැ. මම රට ගිය නිසා මේ ගොල්ලෝ ඉස්කෝලේ ගියේ නැහැ. දවසක් පුතාට අක්කරපත්තුව බස් එක බලන්න කිව්වහම ගිහිල්ලා අම්පාර බස් එකේ අයන්න දැකලා එන්ඩ කියලා අම්පාරේ බස්එකටත් නැග්ගට පස්සේ තමයි දන්නේ ඒක අම්පාර කියලා. ඒවගේ කියවන්න දන්නේ නැහැ. එයා හිටියානම් ළමයින්ට උගන්වන්නේ නැතුව අරියි ද? මම 07 වසර වෙනකම් ඉගැන්නුවා. රස්සාවක් ගන්න ඉගැන්නුවේ නැහැ. ඉතුරු දෙන්නටම ලියන්න කියවන්න පුලුවන්.
පුතාව කවුරු එක්කන් ගියාද දන්නේ නැහැ. පුතත් නැහැ. ළමයි දෙන්නම එහා ගෙදර අයට බාර දීලා මම රට ගියා. ඉඩම රුපියල් 10000/=කට උගස් තියලා ඒ සල්ලි බැඳලා තමයි මම රට ගියේ. ලියුමක් ලියන්න දන්නෙත් නැහැ. පිස්කල් ලියලා එව්වත් මෙහෙට එන්නේ නැහැ. ළමයි ලියලා යැව්වත් ඒ ගෙදර අයිතිකාරයා දෙන්නේ නැහැ. එහෙම ඉන්නකොට ඉන්නකොට මට මානසික රෝගයක් වගේ ආවා. එහෙ ගිහින් ළමයිනුත් නැතුව කල්පනා කර කර ඉඳලා මගේ කකුල් ඉදිමෙන්නයි පපුව හිරවෙන්නයි පටන් ගත්තා. එයාලා මාව ඉස්පිරිතාලෙට ගෙනිච්චා. එතකොට එයාලා කිවිවා මෙයාට මානසික රෝගයක් වගේ.. ඉක්මනට ලංකාවට යවන්න කියලා. කිව්වවට පස්සේ මාව මාස 11න් ආපසු එව්වා. එතකොට මාසෙකට රුපියල් 400/= ඒක අරගෙන ඒකෙන් ඉඩම ආපහු අරගෙන පුතාව හොය හොයා හිටියා. එයාව හම්බුනෙත් නැහැ.
සුනාමියෙන් පස්සේ මහාශක්ති එකෙන් මහන මැෂිමක් දීලා තියෙනවා. ගෙදර තිබ්බ හැම දෙයක්ම ගහගෙන ගියා. මම 24 වෙනිදා දුවගේ දිහා ගිහිල්ලා 26 ගෙදර යනකොට ගේ ඔක්කොම ගහගෙන ගිහිල්ලා. ඒ නිසා තමයි ගෙයක් දුන්නේ.
ඊට පස්සේ මෙහෙමම දුක් විඳලා මේ ළමයිව ලොකු කරලා එයාලව බන්දලා දුන්නා. ඒ කාලේ දුක් විඳපුවට මට දැන් ලෙඩ. ළඟදී තැනකට ගිහිල්ලා මේ ඔක්කොම චෙක් කළා. රුපියල් 5000/=කට. කොලෙස්ටරෝල් තියෙනවා කියලා ඒකට ගැලපෙන කෑම තමයි කන්නේ. මට රජයෙන් සුනාමියට පස්සේ ගෙයක්, ඉඩමක් දුන්නා. මේ ගේයි ඉඩමයි පුතා යුදුධෙ කාලේ වන්නියේ ඉඳන් පවුලයි ළමයිනුයි එක්කන් ආවා. මම ටිකක් ණය වුනා. මේ ඉඩම ලක්ෂයකට උගස් තියලා තමයි මම කෑමට වියදම් කළේ. ඒ හින්දා මොකුත් කරන්න බැහැ. ඒක ලක්ෂ තුනකට විකුණලා දුවටයි, පුතාලා දෙන්නටයි බෙදලා දීලා මම දැන් තනියම ඉන්නවා. ඒ කියන්නේ ඒ ගේයි ඉඩමයි තිබ්බා නම් තුන් ගොල්ලම මගේ ඉස්සරහ දී රණ්ඩු වෙනවා. ඒ නිසා තුන්දෙනාටම ඒක බෙදලා දීලා මම කොළඹ වැඩකට ගිහින් මාස 11ක් වැඩ කරලා. මට බෑ. කකුල් එහෙම ඉදිමුනා. ඇවිල්ලා දැන් අවුරුද්දක් වෙනවා. දැන් දුවත් එක්ක ගොවිතැන් කරගෙන කුකුලෝ පස් හය දෙනෙක් ඇති කරගෙන ඉන්නවා. මැරුණත් දුව එක්ක ඉන්නකොට එයා බලයිනේ කියලා එයත් එක්ක ඉන්නවා. මම කොච්චර දුක් විඳලා මේ ළමයි හැදුවද කියලා දෙවියෝ තමයි දන්නේ. මට දැන් වයස 56 යි. මේ වය‍සේ මට කොයිතරම් දේවල් ඉටු කරන්න තියෙනවද? මේක තමයි මගේ ජීවි‍‍තේ ඉතිහාසය.




CMP/AMP/POT/KAM/01
நான் ஸ்கூலில சேர்ந்து 5ம் வகுப்புதான் படிச்சனான். அந்த சின்ன பருவத்திலேயே என்னய ஒருத்தர் விரும்பி அவங்கட அம்மாவங்க சொன்னாங்க புள்ளய நாங்க செய்து கொடுக்க மாட்டம் சின்ன பிள்ள என்டு அப்பா அம்மாவோட பிரச்சனபட்டுட்டு, அப்பா சொல்லிட்டாரு நான் அந்த பொடியனுக்குத்தான் செய்து கொடுப்பன் என்க, அம்மா சொன்னா நீங்க சைவம் எங்கட வேதத்திற்கு வரோணும் அப்பத்தான் பிள்ளய கட்டித் தருவன் பிள்ள அட்டெண்ட பண்ணனும் அதுவரைக்கும் நீங்க இருங்க என்டு சொல்ல அவர் நஞ்சுப் போத்தலோட வந்திட்டார். பிறகு அக்கம் பக்கத்தாக்கள் பிடிச்சி விலக்கி விட்டுட்டாங்க. பிறகு வேலைக்கு போயிட்டாரு. 16 வயசில நான் அட்டெண்ட் பண்ணினன். எங்கட அப்பா அம்மா சின்னப்பருவத்திலேயே கல்யாணம் செய்து கொடுத்திருவாங்க. 15 வயசிலேயே என்ன ஸ்கூல் போக விடாம திருமணம் செய்து கொடுத்திட்டாங்க. அந்த டைமில எனக்கு எந்த புத்தியும் தெரியாது. நான் அந்த டைமில விளையாட்டு பிள்ள மாதிரி திரிஞசி கொண்டு இருந்தன்.
அவர் வந்து கல்யாணம் கட்டி 18 வயசில மகன் பிறந்திட்டார் 78 ம் வருசம் 8ம் மாசம் மகன் பிறந்தார். அந்த நேரம் ஒன்றரை வயசிருக்கும் மகனுக்கு. இவர் பஸ் லைசன்ஸ் எடுத்து லொறிதான் ஓட்டிக் கொண்டிருந்தவர். அந்த நேரம் பிரச்சன வந்தது. LTTE க்கு சப்போட் என்டு இவரக் கொண்டு போய் கேம்பில சங்கிலியால கட்டி வச்சி அடிச்சிப் போட்டாங்க. பிறகு எந்த பிரச்சனைக்கும் போகக் கூடாது என்டு சொல்லி விட்டாங்க. விட்டோன வந்திருந்தவர். மாசம் மாசம் வந்து சைன் வைக்க சொன்னவங்க. அவர் மாசம் மாசம் சைன் வைக்கேலாது நான் தூர வேலைக்கு போறன் என்டு சொன்னோன, கட்டாயம் மாசம் மாசம் சைன் வைக்கோணும் என்டு சொன்னாங்க. இவருக்கு பயம் மாதிரி. அவரிட அக்கா கொழும்பில இருந்தாங்க அங்க வேலைக்கு என்டுதான் போனவர். இற்றவரைக்கும் அவர நான் காணேல. அவர் போனது 1991 தை மாசம் 17ம் திகதி வீட்ட விட்டு போனவர் அந்த நேரம் கடைசி மகனுக்கு 1 வயசு. அந்தப் பிள்ளைக்கும் புட்டிப்பால். மூத்த மகனுக்கு 13 வயசு மகளுக்கு 10 வயசு
91ல போனவர். கொழும்பிற்கு போய் அவரிட அக்கா வீட்டில பார்க்க, அவர் வந்தவர் பிறகு வீட்ட போறன் என்டு சொல்லிட்டு போயிட்டார் என்டாங்க அதுக்குப் பிறகுதான் அவங்களுக்கும் தெரியும் அவர் இல்ல என்டு. நான் அங்க இருக்கிறார் என்டு நினைச்சிட்டு இருந்தன். அவங்க வீட்ட வந்திட்டார் என்று நினைச்சிட்டு இருந்தாங்க என்ன நடந்தது என்று தெரியாது இராணுவத்தால எதுவும் செய்தாங்களா ஒன்டும் தெரியாது போனவர் இல்ல. அவ்வளவு அன்பா இருக்கிறவர். உயிர் இல்லாததாலதான் எங்கள்ட வரலேல. யுத்த நிறுத்தம் எல்லாம் நடந்தது. அந்த நேரம் எவ்வளவோ பேர் வந்திருக்கிறாங்க பிள்ளைகள ஒரு அரை நிமிசம் பார்க்காம இருக்க மாட்டேர். ஒரு கம்பு துண்டு எடுத்து பிள்ளைகள அடிச்சிருக்க மாட்டார் எனக்கு அடிச்சிருக்க மாட்டார் லொறியில ஏத்திக் கொண்டு போய்த்தான் எங்களுக்கு செருப்போ உடுப்போ வாங்கித் தருவார். அவர் இருக்கேக்க பொட்டு வச்ச பூ வச்ச இப்ப பொட்டோ பூவோ வைக்க என்ர புருசன் இல்ல.
பேப்பருக்கு போட்டோவ கொடுத்தன். போட்டாங்களா இல்லையா என்டு தெரியாது பிள்ளைகள பார்க்கிறதா அவரத் தேடுறதா இத்தவரைக்கும் அவர் இருக்கிறார் என்றுதான் நான் இருந்தன் ஆணைக் குழு வந்து அக்கரப்பத்தனயில பதிஞ்சு AGA ட்ட சைன் வாங்க போன இடத்தில அவர் என்ன ஏசினவர். இத்தன வருசம் அவர் இருப்பாரா என்டு உடனே மரண சர்டிபிகேட் எடுக்கச் சொல்லி மரண சர்டிபிகேட் எடுத்து தந்தவர் எந்த நிறுவனத்திலிருந்தும் ஒரு சாமானோ எதுவுமே எனக்கு கிடைக்கேல
சவர்காரம் இல்ல உடுப்புகள சும்மாதான் கழுவிறது. பச்சரிசி இல்ல புழுங்கல் அரிசிய இடிச்சி கஞ்சி காச்சி வச்சிட்டு வயல்வெளியில புல் புடுங்கப் போவன். மண் சுவர் வைக்கிறனான் 200 ரூபா 300 ரூபா பேசி வைப்பன். கிடுகு இழைச்சு கொட்டில் பிள்ளைகளுக்கு சமைச்சு கொடுத்து ஆஸ்பத்திரியில யாரும் நிற்கச் சொல்லி கூப்பிட்டா நாள் சம்பளத்திற்கு போவன். பிள்ளைகள படிப்பிக்கிறதோ எல்லா செலவும் பார்த்தன் இப்படியெல்லாம் கஸ்டப்பட்டு மகள 10ம் ஆண்டு வரை படிப்பிச்சன்.
இளைய மகன் படிக்கேல அ என்டது தெரியாது நான் வெளியில போனதால இவங்க ஸ்கூலுக்கு போறதில்ல. ஒருநாள் மகனிட்ட அக்கரபத்து பஸ்ச பாரு என்டு சொல்ல போய் அம்பாறை பஸ்சில அ போட்டிருக்கம்மா அக்கரபத்து பஸ் இருக்கு வாங்க என்டு சொல்லி பஸ்ல ஏறினதுக்கு பிறகுதான் தெரியும் அம்பாற என்டு. அப்படி வாசிக்க தெரியாது. அவர் இருந்திருந்தா பிள்ளைகள படிப்பிக்காம விட்டிருப்பாரா. என்னால ஏலுமட்டும் படிப்பிச்சன். ஒரு உத்தியோகம் பார்க்கிற அளவு படிப்பிக்கேல. மற்ற இரண்டு பேரும் எழுத வாசிப்பாங்க
மகன யார் கூட்டிக் கொண்டு போனாங்களோ தெரியாது மகனும் இல்ல பிள்ளைகள் இரண்டையும் பக்கத்து வீட்டுக்காரர்ட கொடுத்திட்டு நான் வெளியில போறன். வளவ பத்தாயிரம் ரூபாவிற்கு அடவு வச்சி அந்த நேரம் காசு கட்டித்தான் வெளியில போற போனன். கடிதம் எழுதவும் தெரியாது பீஸ்கள் பதிஞ்சி அனுப்பினாலும் இங்க வாரதில்ல. பிள்ளைகள் அனுப்பினாலும் அந்த வீட்டுக்காரர் எனக்குத் தாரதில்ல. அப்படி இருக்க இருக்க எனக்கு மனநோய் மாதிரி ஆயிட்டு. அங்க போய் பிள்ளைகளும் இல்லாம யோசிட்டு இருந்து எனக்கு கால் எல்லாம் வீங்கி நெஞ்செல்லாம் அடைக்கிறமாதிரி வரத் தொடங்கிட்டு. அவங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்க. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோன அங்க சொன்னாங்க இவவுக்கு மனநோய் மாதிரி இருக்குது நீங்க அவவ சிறிலங்காவிற்கு அனுப்புங்க என்டு சொல்லிட்டாங்க. சொன்னோன அவங்க என்ன 11 மாதத்தால என்ன இங்க அனுப்பி வச்சாங்க. அந்த டைம்ல 400 ரூபா மாச சம்பளம் அத எடுத்திட்டு காணிய திருப்பிஎடுத்திட்டு மகனத் தேடிக் கொண்டிருந்தன். மகனும் கிடைக்கேல.
சுனாமியில ஒரு தையல் மெசின் மகா சக்தியால தந்திருக்காங்க சுனாமியில வீடு சாமான் எல்லாம் போயிட்டு நான் மகளிட்ட 24ம் திகதி இங்க வந்து 26ம் போறன் ஒரு சாமானும் இல்ல. வீடு எல்லாம் போயிட்டு. அதுக்குதான் வீடு தந்தவங்க
அதற்குப் பிறகு இப்படியே கஸ்டப்பட்டு இந்த பிள்ளைகள வளர்த்து அவங்கள கல்யாணம் கட்டிக் கொடுத்திட்டன். அந்நேரம் கஸ்டப்பட்டது இப்ப எனக்கு நோய். இப்பயும் ஒரு இடத்திற்கு போய் எல்லாம் செக் பண்ணுனது 5000 ரூபாக்கு கொலஸ்ரோல் இருக்காம் என்று பத்தியமான சாப்பாடுதான் சாப்பிடுறன். எனக்கு அரசாங்கத்தால சுனாமியில வீடு வளவு தந்தவங்க இந்த வீடு வளவு மகன் யுத்தத்தில வன்னியில இருந்து பெண்சாதி பிள்ளைகள கூட்டிக் கொண்டு வந்திட்டாரு எனக்கு கொஞ்சம் கடனாயிட்டு ஒரு லட்ச ரூபாய்க்கு இந்த வளவ வச்சித்தான் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தன். அதனால ஒன்டும் செய்ய ஏலாது அத 3 லட்ச ரூபாய்க்கு வித்திட்டு மகளுக்கும் இரண்டு மகனுக்கும் பிரிச்சி கொடுத்திட்டு தனியாளா இப்ப இருக்கிறன். ஏனென்றா அந்த வீடு வளவு இருந்தா 3 மக்களும் என் கண் முன்னால சண்ட பிடிப்பாங்க. அதனால 3 பேருக்கும் அத பிரிச்சு கொடுத்திட்டு நானும் கொழும்பில வேலைக்குப் போய் 11 மாசம் வேலை செய்து என்னால ஏலாம கால் எல்லாம் வீங்கிட்டுது. இப்ப வந்து ஒரு வருசம்தான். இப்ப மகளோட பயிர் போட்டுக் கொண்டு 5,6 கோழிகள வளர்த்துக் கொண்டிருக்கிறன். மகளோட வந்து செத்தாலும் அவ பாக்கட்டும் என்டு அவவோட இருக்கிறன். நான் எவ்வளவு கஸ்டப்பட்டு இந்த பிள்ளைகள வளர்திருப்பன் என்டு ஆண்டவனுக்குதான் தெரியும். எனக்கு இப்ப 56 வயசு. இந்த வயசில எவ்வளவு எல்லாம் சாதிக்க வேண்டியிருக்கு இதுதான் என்ட வாழ்க்கையின் சரித்திரம்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License