Father died in camp

Life story of a person that filled with many troubles


මෙය විනෝද ක්රීඩාවක්

දුෂ්කරතා සහිත පැකේජ අත්දැකීම


அப்பா முகாமில் இறந்தார்

கஷ்டங்கள் நிறைந்த வாழக்கையில் அனுபவ தொகுப்பு



CMP/AMP/SAM/UTP/01
I lost my parents when I was very young. As long as I remember I never had my parents’ support. I was born with 12 siblings, but none of them supported me. Now only 3 of us are alive. My mother died when I was very young. But my father didn’t get married again. He is a drunkard. He fed us from his earnings but all the money that is left gone for his drink. Unlike some other fathers, he never got married again or left us, he took care of us as much as he could.
During the ethnic conflict we went to the refugee camp, where our father died. After that we felt lonely. We didn’t have anyone for us, we became orphans. We had our sister but she too got married. Had a brother but he also got married. After marriage they were busy with their own families. We didn’t have anyone.
My brother brought a proposal for me and married me off. But the marriage didn’t last for so long. He trades fish. Three months after marriage when we were in the refugee camp, he caught fish and brought some for me to make curry and then went to trade the rest, but he never return after that. At that time there were certain groups that handle family issues. There were particular unions to handle such things. We could inform through police. We sent messages everywhere and looked all over but we couldn’t find him.
After 4 days we got the body, it was floating in the sea. My life got destroyed just when it had begun. I expected to see him alive, but I got him as a dead body. They had broken his neck by twisting it with a fish horn. He was not identifiable. He was a thin man. He was in the sea for 4 days, tied up, and his body got bloated up, it was impossible to identify him. He had a birthmark in his hand; we were able to identify him with that.
After that I didn’t get married. Later when we moved to Sammanthurai again they brought a proposal and got me married off. Later when I got pregnant he beats me saying he doesn’t want that child and asked me to abort it. So many times I got beaten up and I somehow managed a life with him. But I couldn’t live with him anymore. Finally he said if I want him in my life I should abort the baby. Husband is not important to me than the child. You could find any number of matches somehow but so many people are suffering without a baby. The love I haven’t received from my husband could be enjoyed from a child. I didn’t want that life.
When I was one month pregnant he left me and went saying if you want the child go and live with your parents. He didn’t know when I gave birth to this child. He didn’t come even to register the child. I got the baby registered with the help of our marriage certificate. When my child was one year old, he got married to some other woman in Puttalam and brought her here. Everyone in the village scolded, saying “you have the registration certificate as a proof, report in the police station and take action”. So I went and reported in the police station and he got arrested.
Later I filed a case. I wasn’t confident enough. I didn’t have anyone to encourage me or take charge of things on behalf of me. There was no one to guide me saying what I should do or to give me confident. This WDF people came and gave me the confident. I received advice from them and filed the case accordingly, but finally my husband said this child was not his. My child is a girl child; her future should not get spoilt like mine. So I pleaded the judge requesting DNA test. I told him “it doesn’t matter if I don’t get an allowance but I want to prove who the father is for this child. You should somehow help me”. He asked me who is suspicious about it; I said it’s the father. So they said the father should bear the cost. And sent the case to Colombo.
At the beginning he went on hiding. If he is a good man he would have come. I again went and reported in the court. Again they caught him and did the DNA test immediately and we received the result in 4 months, mentioning who the father and mother are. So they locked him in jail. After proving who the parents are he has to pay the allowance. But he didn’t pay the allowance. He would go to jail and again come back home and it went on like that. I would carry my baby on my shoulders and walk to Kalmunai court without an umbrella. I didn’t have a person to take turns in carrying the baby; I was that much of an orphan. At court the baby should not make any noise, if that happens they would chase us out. But I have to be there, so somehow I stop her from making noise and stay, till the case is heard. But even after going through such difficulties he had never paid me an allowance.
I don’t mind not getting the allowance. I am satisfied with proving who the real father is. My intention is not getting his money to bring up my child. With the strength that God gave me, I have done house works and what ever hand works I could do and brought up my child. It’s because I had that courage I succeeded in the court in front of everyone.
When my child turned 4 he couldn’t go to jail often anymore. His second wife also got a child. She had 7 siblings – elder brothers and younger brothers. They all together made a decision to pay me Rs 50,000 to sort out the matter. I asked them “am I a beggar to get Rs 50,000?”. I told them “I cannot beg Rs 50,000 from you, at least pay me Rs100,000”. After paying that one lakh till now I haven’t received any money. Now my child is going to be 8, he hasn’t even bought a toffee for her. Not even yearly a frock for her birthday.
He would buy for his child. When the bakery lorry goes he would stop and buy for him. My child would also be playing there. One day she told, “Mother, father is buying food for his son, I was also there mother, but he ignored me”. She cried saying this. I was very sad. He has a rock heart. He was buying things for his son, she too is his child. I consoled her saying ‘its okay’ and brought her with me.
He is having a comfortable life. He got everything. I don’t have any help. I have only one elder sister, she too is a widow. She is the one who went through difficulties did housework and took care of me and my child. Now she is weak. She is 55 years old, doesn’t have proper eye sight. She is just there as a companion for me. I bear the education expense of my child by doing housework. I don’t have anyone with whom I can have trust to leave my child. I don’t go to work for some time now. I only have Samurthi. I wish to educate my child and bring her up to a good position in life.


CMP/AMP/SAM/UTP/01
මම පොඩි කාලෙම මගේ අම්මයි, තාත්තයි නැතිවුනා. යමක් කමක් තේරෙන කාළේ ඉඳන්ම මට අම්මා තාත්තාගේ උදව්වක් නැහැ. සහෝදරයෝ දොළොස් දෙනෙක් එක්ක ඉපදිලත් කාගේවත් උදව්වක් නෑ. අන්තිමට ඉතිරිවෙලා ඉන්නේ ස‍හෝදරයෝ තුන් දෙනයි. මම පොඩි කාළෙම අම්මා නැති වුනා. අම්මා නැතිවුනාට පස්සේ තාත්තා වෙන කෙනෙක් බඳින්නේ නැතිව හිටියත් හරියට බොනවා. එයා හම්බකරගෙන ඇවිත් අපට කෑම දෙනවා. ඉතුරු සල්ලි ඔක්කොටම එයා බොනවා. වෙන තාත්තලා වගේ වෙනකෙනෙක් බැන්දේවත්, අපිව දාලා ගියේවත් නැහැ. තමුන්ට පුලුවන් ප්‍රමාණයෙන් අපිව බලාගත්තා. කැරළි කෝළාහල ආපු වෙලාවේ අපි කඳවුරට ගියා. කඳවුරට ගිය කාළේ තාත්තත් නැතිවුනා. තාත්තා නැතිවුනාම අපේ ජීවිතේ තනිවුනා. කවුරුවත් නැතිව අනාථ වුනා. අක්කා හිටියා එයත් බැන්දා. අයියා කෙනෙක් හිටියා එයත් බැන්දා. ඒගොල්ලෝ බැන්දට පස්සේ ඒගොල්ලන්ගේ පවුල් එක්ක හිටියා. අපිට කවුරුවත් නැහැ.
මගේ අයියා කෙනෙකුට කතා කරලා මාව බන්දලා දුන්නා. ඒ ජීවිතෙත් මට නිදහසක් නැහැ. එයා මාළු විකුණන එක්කෙනෙක්. බැඳලා මාස තුනයි. කඳවුරේ ඉන්නකොට එයා මාළු අල්ලගෙන ඇවිල්ලා මට උයන්න ටිකක් දීලා ඉතුරුටික විකුණලා එන්නම් කියලා ගියා. ආයෙත් ආවේ නැහැ. ඒ කාළේ එක එක කණ්ඩායම් හිටියා. ගෙවල්වල ප්‍රශ්න තියෙනවා නම් ‍ඒ කණ්ඩායම්වලට කියන්න පුලුවන්. සමිති තිබුනා. පොලිසිය මඟින් ‍දැනුම් දෙන්න පුලුවන්. හැමතැනම තොරතුරු කියලා හෙව්වත් හම්බ වුනේ නැහැ.
දවස් හතරකට පස්සේ මිනිය හම්බ වුනා. මුහුදේ පාවෙනවා කියලා. පටන්ගත්ත ගමන් මගේ ජීවිතේ විනාශ වුනා. එයා පණපිටින් එයි කියලා මම බලාපොරොත්තු වුනා. පණපිටින් ආවේ නැහැ. මළ මිනියක් විදියට තමයි ආවේ. මුහුදේ දවස් හතරක් තිබිලා බෙල්ල මිරිකලා බෙල්ල හැරවෙලා තිබුනා. එයාව අඳුනාගන්න බැහැ. එයා කෙට්ටු කෙනෙක්. දවස් හතරක් මුහුදේ තිබිලා ඉදිමිලා එයාව අඳුනගන්නම බැහැ. එයාගේ අතේ පච්චයක් තිබුනා. ඒකෙන් තමයි අඳුනගත්තේ.
ඊට පස්සේ මම බඳින්නේ නැතිව හිටියා. ආයේ සමන්තුරෛයි ඇවිත් ඉන්නකොට කතා කරලා තමයි බැන්දෙව්වේ. බැඳලා ළමයෙක් බඩට ආවා විතරයි මට මේ ළමයා එපා.. නැතිකරගනින් කියලා එයා මට ගැහුවා. කොච්චරහරි ගුටිකාලා මට පුලුවන් තරමින් ඉවසගෙන ජීවත් වුනා. මට එයත් එක්ක ජීවත් වෙන්න බැරිම තත්ත්වයක් ආවා. අන්තිමට කිව්වා මං උඹත් එක්ක ජීවත් වෙන්නේ ළමයා නැති කළොත් විතරයි කියලා. මට ළමයට වඩා මිනිහා වැදගත් නැහැ. මිනිස්සු ඕන තරම් ගන්න පුලුවන්. ළමයෙක් නැතිව ගොඩක් අය දුක් විඳිනවා. මිනිහගෙන් ලැබෙන්නේ නැති ආදරය ළමයාගෙන් ලැබෙයි කියලා. ඒ ජීවිතය මට එපා.
ළමයා ‍ඕන නම් අම්මා තාත්තා ළඟට යන්න කියලා ළමයට එක මාසයක් වෙලා තියෙද්දී මාව අතහැරලා ගියා. ගියාට පස්සේ ළමයා කොහොම ඉපදුනාද මම දන්නේ නැහැ. ළමයට නම තියන්නවත් ආවේ නැහැ. විවාහ ලියාපදිංචිය පෙන්නලා ළමයාගේ උප්පැන්නය ලිව්වා. ළමයට හරියටම අවුරුද්දයි. වෙන ගෑණු කෙනෙක් බැඳගෙන පුත්තලමේ ඉඳන් එයා ආවා. ගමේ ඔක්කොම මට බැන්නා. උඹට විවාහ සහතිකේ තියෙනවානේ... පොලිසියට ගිහිල්ලා පැමිණිල්ලක් කරලා පියවර ගන්න පුලුවන් කිව්වහම මම පොලිසිට ගිහිල්ලා පැමිණිලි කරලා පියවරක් ගත්තට පස්සේ වරෙන්තු දාලා එයා අත්අඩංගුවට ගත්තා.
ඊට පස්සේ මම නඩුවක් දැම්මා. මට ධෛර්යයක් තිබුනේ නැහැ. අපිට ඉස්සරහින් ඉඳගෙන උනන්දු කරන්න කවුරුවත් හිටියේ නැහැ. කරන්න ඕන දේ කියලා දීලා මෙහෙම කළොත් මෙහෙම වෙනවා කියන්න මට කවුරුවත් හිටියේ නැහැ. මේ ගොල්ලන්ගේ (කාන්තා සංවර්ධන පදනම) මඟින් ඇවිල්ලා මට ඒ ධෛර්යය දුන්නා. ඒ ගොල්ලෝ කිව්ව උපදෙස්වලට අනුව ඒ විදියට ගිහිල්ලා නඩුවක් දාලා අන්තිමේ දී මේ දරුවා මගේ විතරක් නෙමෙයි කිව්වා. මගේ ළමයා ගෑණු ළමයෙක් නිසා මගේ අනාගතය විනාශ වුනා වගේ ඒ ළමයාගේ ජීවිතය විනාශ වෙන්න හොඳ නැහැ කියලා ඩී එන් ඒ ටෙස්ට් කරන්න ඕන කියලා මම ඉල්ලා හිටියා. මට සල්ලි නැතිවුනත් කමක් නැහැ වන්දි නැතිවුණත් කමක් නැහැ මේ ළමයා කාගෙන්ද හැදුනේ කියලා පෙන්නන්න ඕන. මේකට ඔයා උදව් කරන්න ඕන කියලා මම ජජ්ගෙන් ඉල්ලාහිටියා. මාව සැක කරනවා කිව්වා. සැක කරන්නේ කවුද කියලා ඇහුවාම තාත්තා තමයි සැක කරන්නේ කියලා කිව්වම ඒ ගොල්ලෝ එයාට කිව්වා උඹ තමයි මේකට සල්ලි බඳින්න ඕන කියලා කොළඹට භාරදුන්නා.
මුලදී එයා හැංගුනා. හොඳ මිනිහෙක් නම් එනවානේ. පස්සේ මම ආයෙත් උසාවියට ගිහිල්ලා කිව්වා. ඊට පස්සේ එයාව අත් අඩංගුවට අරගෙන ගෙනහිල්ලා ඩී එන් ඒ ටෙස්ට් එකක් අරගෙන මාස හතරකින් රිපෝට් එක අතට ආවා. මෙයා තාත්තා මෙයා අම්මා කියලා. එහෙමම එයාව අල්ලගෙන එයාව හිරේ දැම්මා. ඇත්තම අම්මයි තාත්තයි කියලා කිව්වට පස්සේ එයා සල්ලි බඳින්න ඕන. එයා වියදම ගෙව්වේ නැහැ. එයා හිරේ යනවා ගෙදර එනවා. ළමයව වඩාගෙන කුඩයක්වත් නැතුව මම කල්මුනේ උසාවියට යනවා. ළමයව පොඩ්ඩක්වත් වඩාගන්නවත් කවුරුවත් නැහැ. මම ඒ තරම් අසරණ වුනා. උසාවියේ දී ළමයගේ සද්දයක්වත් ඇහෙන්න හොඳ නැහැ. ළමයා ඇඬුවොත් එළියට දානවා. අපි ඉන්න ඕන. ඒ නිසා ළමයව කොහෙම කො‍හොම හරි බලාගෙන උසාවිය ඉවරවෙනකම් ඉඳලා එනවා. ඒ තරම් දුක් විඳලත් මූ මට කිසිම මුදලක් දුන්නේ නැහැ.
මට සල්ලි නැති වුනත් කමක් නැහැ. උඹ තාත්තා කියලා ඔප්පු කරපු එක මට ඇති. උඹෙන් සල්ලි අරන් ජීවත්වෙන්න ඕන මගේ ළමයා හදාගන්න ඕන කියලා මගේ අරමුණක් නැහැ. මට දෙයියෝ දුන්න බලෙන් කොහේ හරි ගෙදරක වැඩක් කරලා හරි දෑතේ වැඩක් කරලාහරි තමයි මගේ ළමයව ලොකු කළේ. එහෙම ධෛර්යයක් මට තිබ්බ නිසා ඒ ධෛර්යයෙන් මම උසාවියේ දී හැමෝම ඉස්සරහ දී ඔප්පු කළා. ‍
ළමයට අවුරුදු 04 ක් වුනාට පස්සේ ඒ ගොල්ලන්ට හිරේ යන්න එන්න බැහැ. දෙවැනි ක‍සාදෙන් එයාට ළමයෙක් ඉන්නවා. එයාගෙ නන්ගිට අයියලා මල්ලිලා හත් දෙනෙක් ඉන්නවා. හත්දෙනා එකතුවෙලා පනස්දාහක් ගෙවලා ප්‍රශ්නේ ඉවර කරමු කිව්වා. එතකොට මම ඇහුවා පණස් දාහක් කියන්නේ මට හිඟමන් ආධාරයක් ද කියලා. ඒ හිඟමන ඔයාල මට දාන්න ඕනි නැහැ. මට ලක්ෂයක්වත් ඕන කියලා මම කිව්වා. ඒ ලක්ෂය දුන්නට පස්සේ අද වෙනකම් මට කිසිම මුදලක් දුන්නේ නැහැ. ළමයට දැන් අවුරුදු 08 ක් වෙන්න යනවා. අද වෙනකම් ළමයට ටොපියක්වත් අරන් දීලා නැහැ. උපන් දිනේට අවුරුද්දකට එක ඇඳුමක්වත් අරන් දෙන්නේ නැහැ.
එයාගේ ළමයට අරන් දෙනවා. බේකරි ලොරිය යනකොට නවත්තලා බනිස් එහෙම අරන් දෙනවා. මගේ ළමයත් එතනම සෙල්ලම් කර කර ඉන්නවා. දවසක් ළමයා ඇවිල්ලා මට කිව්වා අම්මෙ තාත්තා ඒගොල්ලන්ගේ පුතාට කෑම අරන් දෙනවා මමත් එතන හිටියා මගෙන් මොනවද ඕන කියලවත් ඇහුවේ නැහැ... කියලා අඬනවා. එතකොට මට හරි දුකයි. මූ මහ ගල් හිතක් තියෙන එකෙක්. උගේ ළමයට අරන් දෙනවා. මෙයත් උගේ ළමයා නේද කමක් නැහැ වරෙන් පුතේ කියලා එක්කගෙන ගියා.
හැම පහසුකමක්ම එයාට තියෙනවා. හොඳට ඉන්නවා. මට කිසිම උදව්වක් නැහැ. මට ඉන්නේ එකම එක අක්කා කෙ‍නයි. එයාටත් මිනිහා නැහැ. එයා තමයි මාවයි මගේ ළමයවයි බලාගත්තේ. දැන් එයාට බැහැ. වයස 55 යි. ඇස් පේන්නෙත් නැහැ. මට උදව්වට තමයි එයා ඉන්නේ. මම ගෙවල්වල වැඩට ගිහිල්ලා තමයි මගේ ළමයාගේ ඉගෙනීමේ වැඩ කරගන්නේ. විශ්වාස කරලා ළමයව දාලා යන්න කෙනෙක්වත් මට නැහැ. හුඟ දවසකින් මම වැඩට ගියෙත් නැහැ. මට සමෘද්ධිය විතරයි තියෙන්නේ. මගේ ළමයා හරි හොඳට ඉගෙනගෙන හොඳ තැනකට එනවා දකින එක තමයි මගේ ආශාව.


CMP/AMP/SAM/UTP/01
என்ட சின்ன வயசிலேயே என்ட தாய் தகப்பன நான் இழந்திட்டன். விபரம் தெரிஞ்ச காலத்தில் இருந்து எனக்கு தாய் தகப்பன்ட உதவியில்ல. 12 சகோரத்தோட பிறந்து ,ஒருத்தர்ட உதவியும் இல்ல. கடைசியா மிஞசியிருக்கிறம் 3 சகோரங்கள். சின்னத்திலேயே தாய் செத்துப் போயிட்டா. தாய் செத்ததுக்குப் பிறகும் தகப்பன் வேறு கல்யாணம் முடிக்காமல், அப்பா குடிக்கிறவர் சரியா. அவர் உழைச்சிட்டு வந்தாலும் எங்களுக்கு சாப்பாட்டை தருவாரு. மீதிக் காசெல்லாம் அவர் குடிப்பாரு. வேற தகப்பனாரைப்போல வேறு கல்யாணம் முடிக்கவோ எங்கள விட்டுட்டு போகவோ இல்லாம தன்னால இயன்ற முயற்சியில எங்களப் பார்த்தாரு.
இனக்கலவரத்தில அகதி முகாமுக்குப் போனனாங்க. அகதி முகாமிற்கு போன இடத்தில அப்பாவும் செத்திட்டார். அப்பாவும் சாக எங்கட வாழ்க்கை தனியா போயிட்டு. ஒருவரும் இல்ல அனாதையாயிட்டோம். அக்கா இருந்தவ அவவும் கல்யாணம் முடிச்சிட்டா. அண்ணன் ஒரு ஆளும் இருந்தார் அவரும் கல்யாணம் முடிச்சிட்டார். அவவங்க கல்யாணம் முடிச்சிட்ட பிறகு அவங்கட குடும்பமும் அவங்களாகவும் இருந்திட்டாங்க. எங்களுக்கு யாருமில்ல.
என்ட அண்ணன் ஒரு ஆள் பேசி எனக்கு முடிச்சித் (கல்யாணம்) தந்தவர். அந்த வாழ்க்கையும் எனக்கு அமையேல. அவர் மீன் விற்று வியாபாரம் செய்தவர். முடிச்சித் தந்து 3 மாசத்தில முகாமுக்க இருக்கையில அவர் மீன் பிடிச்சிட்டு வந்து எனக்கு கறிக்குத் தந்திட்டு மிச்சத்த விற்றுட்டு வாரன் என்டு போனவர் வீடு திரும்பேல. அந்த நேரம் குழுக்கள் இருந்தது. ஏதும் குடும்பத்தில பிரச்சனை என்றால் குழுக்களிட்ட சொல்லலாம் அதற்குரிய சங்கங்கள் இருந்தது. பொலீஸ் மூலமா அறிவிக்கலாம். எல்லா இடத்திலும் தகவல் சொல்லித் தேடிப் பார்த்தும் கிடைக்கேல.
நாலு நாளில பொடிதான் வந்து கிடைச்சது கடலால மிதக்குது என்டு. ஆரம்பமே என்ட வாழ்க்கை சீரழிஞ்சுது. உசிரோட அவர் வருவார் என்டு எதிர்பார்த்தேன். உசிரா வரேல செத்த பிணமாத்தான் வந்து சேர்ந்தார். கடல்ல 4 நாளுக்குப் பிறகு உம்புத் திருக்கையிட கொம்பால கழுத்த திருக்கி முறிச்சி அனுப்பியிருந்தாங்க. அவர மதிக்கேலாது. அவர் மெல்லிய ஆள். கடல்ல 4 நாள் கட்டிப்போட்டு ஊதி வரக்கேல ஆள அடையாளம் கண்டு பிடிக்க முடியேல. அவரிட கையில ஒரு மச்சம் இருந்தது. அத வச்சுத்தான் கண்டு பிடிச்ச.
அதற்கு பிறகு நான் கல்யாணம் முடிக்காமல் இருந்தன். திரும்ப சம்மாந்துறைக்கு வந்து இருக்கையில பேசி முடிச்சித்தான் முடிச்சவங்க. முடிச்சி பிள்ள வவுத்துல வந்ததும் எனக்கு இந்த பிள்ள வேணாம் கர்ப்பத்த கரை என்டு சொல்லி என்ன அடிச்சவர். எத்தனையோ முறை நான் அந்த அடிகள வேண்டிட்டு என்னால எவ்வளவு சமாளிக்க முடியுமோ அவ்வளவுக்கு சமாளிச்சு வாழ்ந்து வந்தன். என்னால கடைசிவரைக்கும் அவனோட வாழ முடியாமப் போயிற்று. கடைசியா சொல்லிட்டான் நான் உன்னோட வாழுறதா இருந்தா பிள்ளைய கரைச்சாத்தான் நான் வாழுவன் என்டு சொன்னான். நான் பிள்ளையை விட எனக்கு புருசன் முக்கியமில்ல எத்தனையோ புருசன எடுக்கலாம் ஒரு பிள்ள இல்லாமல் எத்தனையோ சனங்கள் தவிக்குது. புருசன்ட கிடைக்காத அன்பு பிள்ளையிட்ட கிடைக்கும் என்று அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்
புள்ள வேண்டும் என்றா நீ அம்மா அப்பாவோட போயிரு என்று ஒரு மாசம் பிள்ள வயித்தில என்ன விட்டு விட்டு போனவர். போனவர் பிள்ளையை நான் பெத்தது தெரியா. பிள்ளைக்கு பதிவு வைக்கக் கூட வரேலே. கல்யாண பதிவை வச்சுத்தான் பிள்ளையை பதிஞ்ச. பிள்ளைக்கு சரியா ஒரு வயசு. வேற பெண்சாதியை புத்தளத்திலிருந்து கட்டிக் கொண்டு வந்தவர். ஊரில எல்லாரும் பேசினாங்க. நீ பதிவு வச்சிருக்கிற ஆதாரம் உன்னட்ட இருக்கு நீ பொலீஸில போய் சொல்லி நடவடிக்கை எடுக்கலாம் என்டு சொல்ல அதற்குப் பிறகு நான் போய் பொலிஸில சொல்லி நடவடிக்கை எடுத்து பிடி வாரண்ட் போட்டு பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்க.
அதற்குப் பிறகு நான் வழக்குப் போட்டனான். எனக்கு தைரியம் இல்லாமல் இருந்தது. நமக்கு முன்னால நிண்டு செய்ய ஊக்குவிக்கக் கூடிய ஆட்கள் இல்ல. தைரியத்த சொல்லி நீ இந்த வழியில போனா இப்படி வரும் என்டு சொல்லுறதுக்கு எனக்கு ஒருவரும் இல்ல. இவங்கட(WDF) மூலமா வந்து எனக்கு அந்த தைரியத்த தந்தாங்க. இவங்க சொன்ன ஆலோசனையை நான் கேட்டு அதன்படி போய் வழக்கை போட்டு கடைசியா இந்த பிள்ளை எனக்கு பிறக்கில்ல என்டு சொன்னான். என்ட பிள்ள பொம்பிள பிள்ளை என்ட எதிர்காலம் பாதிச்ச மாதிரி அந்த பிள்ளையிட எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்டு டிஎன்ஏ செய்யோனும் என்டு ஐட்டிட்ட கெஞ்சிக் கேட்டன். எனக்கு காசில்லாட்டியும் பரவாயில்ல தாபரிப்பு இல்லாட்டியும் பரவாயில்ல இந்த பிள்ளைய நான் எவனுக்கு பெத்தன் என்டு காட்டோணும் இதற்கு நீங்க உதவி செய்யோணும் என்க சந்தேகப்படுறது யார் என்டு கேட்க தகப்பன்தான் சந்தேகப்படுற சொல்ல தகப்பன்ட சொன்னாங்க நீதான் இதற்கான செலவுகள கட்டோணும் என்டு சொல்லி கொழும்புக்கு தந்தவங்க.
ஆரம்பத்தில இவர் ஓடி ஒளிஞ்சிட்டேர். வரேல நல்லவன் என்டா வந்திருப்பான் திரும்ப நான் கோர்ட்ஸ்ல வந்து சொன்னனான். திரும்ப அவர கையும் களவுமா பிடிச்சி உடனடியா கொண்டு போய் டிஎன்ஏ டெட்ஸ் எடுத்து 4 மாசத்தால ரிப்போர்ட் கைக்கு வந்தது இவர் தகப்பன் இவ தாய் என்டு சொல்லி உடனே அவர பிடிச்சி மறியல் ஆக்கினது. உரிய தாய் தகப்பன் என்டு சொன்னதுக்குப் பிறகு இவர் செலவு கட்டத்தானே வேணும். இவர் செலவு கட்டேல. இவர் மறியல் போறதும் திரும்ப வீட்ட வாரதும் இப்படியே இருந்தாரு. நான் பிள்ளையை தோளில போட்டுக் கொண்டு கையில குடையும் இல்லாம நடந்து கல்முனை கோர்ட்ஸ்க்கு போவன். பிள்ளையை மாறி பிடிக்கக் கூடி ஒருவரும் இல்ல எனக்கு. அந்தளவிற்கு நான் அனாதையாய் போயிட்டன். கோர்ட்ஸில பிள்ளையிட சத்தம் கூட கேட்கக் கூடாது. சத்தம் கேட்டா வெளிய விரட்டிடுவாங்க. நாம நிற்கோணுமே அதனால பிள்ளைய மாறி மாறி அமைத்தி வச்சுக்கொண்டு கோர்ட்ஸ் முடியும்வரை நின்டுட்டு வருவன். அப்படி எல்லாம் வந்தும் எனக்கு ஒரு காசும் அவன் கட்டினதேயில்ல.
எனக்கு காசு இல்லாட்டியும் பரவாயில்ல. உரிய தகப்பன் நீ என்டு நிரூபிச்சதே எனக்கு போதும் உன்ட காசை வாங்கி சாப்பிடோணும் என்ட பிள்ளையை வளர்க்கோணும் என்ட நோக்கமில்ல எனக்கு ஆண்டவர் கொடுத்த பலத்தால எங்கேயாவது வீட்டு வேலை செய்து என்னால ஏன்ட கைத்தொழிலாவது செய்துதான் இவ்வளவு நாள் என்ட பிள்ளையை வளர்த்தன் அப்படி ஒரு தைரியம் எனக்குள்ள இருந்தபடியால் அந்த தைரியத்திலதான் நான் கோர்ட்ஸில எல்லாருக்கும் முன்னால நான் சாதிச்சனான்.
பிள்ளைக்கு 4 வயசான பிறகு அவங்களால மறியல் போய் போய் வரேலா. அதோட கல்யாணம் கட்டி இரண்டாவது பொண்சாதிக்கும் பிள்ள பிறந்திட்டுது. அவட அண்ணன் தம்பிமார் 7 சகோதரங்கள் 7 சகோதரங்களும் ஒத்தா முடிவெடுத்து 50 ஆயிரம் கொடுத்து பிரச்சனையை முடிச்சிருவோம் என்டு. அப்ப நான் கேட்டன் 50 ஆயிரம் என்ன எனக்கு பிச்சையா என்டு. இந்த பிச்சையை நீங்க எனக்கு போடத் தேவையில்ல எனக்கு கடைசி ஒரு லட்சமாவது கட்டு என்டு சொன்னனான். அந்த ஒரு லட்சம் கட்டின பிறகு எனக்கு இதுவரைக்கும் எதுவித காசும் கட்டேல. பிள்ளைக்கு இப்ப 8 வயசாகப்போகுது இதுவரைக்கும் பிள்ளைக்கு ஒரு டொபி கூட வாங்கிக் கொடுக்கேல பிறந்த நாள் வரும்போது வருசத்திற்கு ஒரு சட்டையாவது வாங்கிக் கொடுத்ததில்ல.
அவன்ட பிள்ளைக்கு வேண்டிக் கொடுப்பான். பேக்கரி லொறி போகேக்க நிப்பாட்டி வாங்கிக் கொடுப்பான் என்ட பிள்ளையும் அவ்விடத்தில விளையாடிக் கொண்டிருக்கும் ஒருநாள் வந்து சொல்லுறா அம்மா அப்பா அவங்கட தம்பிக்கு சாப்பாடு வேண்டிக் கொடுக்கிறார் நான் நிண்டனம்மா என்ன என்னென்டு கேட்கேயில்ல என்டு சொல்லிக் குழறுறாள். அப்ப எனக்கு சரியான கவலை. இவன் ஒரு கல்லு மனம் படைச்சவன்; அவன்ட பிள்ளைக்கு வேண்டிக் கொடுக்கிறத இவளும் அவன்ட பிள்ளதானே பரவாயில்ல வாம்மா என்டு கூட்டிக் கொண்டு வந்தன்
நல்ல வசதியா இருக்கிறான் எல்லா வசதியும் இருக்கு. எனக்கு எந்தவிதமான உதவியும் இல்ல. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு அக்காதான். அவவிற்கும் புருசன் இல்ல. அவதான் கஸ்டப்பட்டு ஒரு வீட்டு வேலையும் செய்து என்னையும் என்ட பிள்ளையையும் காப்பாற்றியது. இப்ப அவவிற்கு ஏலாது. 55 வயசு கண் பார்வையுமில்ல. எனக்கு ஒரு துணைக்குதான் இருக்கிறா. நான் வீட்டு வேலைக்கு போய்த்தான் என்ட பிள்ளையிட படிப்பு செலவையும் பார்த்து வாரன். பிள்ளையை நம்பி விட்டு விட்டு போகிறதுக்கும் எனக்கு யாருமில்ல. கொஞ்ச நாளா நான் வேலைக்கும் போறதில்ல. எனக்கு சமுர்த்தி மட்டும்தான் இருக்கு. என்ட பிள்ளையாவது நன்றாக படிக்க வச்சு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே என்ட ஆசை





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License