CMP-MAN-MAW-VID/03
This is a small village surrounded by sea. All three ethnic groups lived in harmony here. There was a pond called Pallamadu. All three ethnic groups would go and bath in it and lived together here. When things were such, a conflict arouse between Muslims and Vidathal Theevu Christians. There was a man called Senior, everybody in the village know him, he died in a gunshot due to this conflict.
Our village is in a low land. During November, December time every year the sea water gets in and all our houses and lands would get flooded. One organisation came and put a bund and stopped this flooding. There are two churches. We all live in unity and goes to these churches to pray for our needs.
The Movement “Tigers” formed, for the course of liberation of our people, and Muslims were chased out from the village because of the issue of them being spies for the enemy. They got settled in Puttalam and live there. Now again they have come back here. But things are not the same, people don’t feel relaxed and peaceful, neither them nor us.
Due to the war our houses and all got damaged, we lost all our assets also lost lives. We lived in Puthumathalan in Mullaitheevu district and have returned here. Under Mahinda Rajapakshe’s government they locked us up in camps. People cannot live there even animals cannot live. We were locked up behind barbed wire fence; our ethnic people suffered the most there. This is the time for the government to think that houses should have toilets and they should kept clean, but instead in that place we were locked up, they dig hollows in the land where worms formed. Worms came to the places where we were staying. Like that the government did all that purposefully to destroy our ethnic group. Our people had suffered the most in our place. We went up to Mullaitheevu Maathalan and stayed there for up to 3 years. Later again we came and lived in camps. And there are no such sufferings like we have gone through in the camps.
All our houses got damaged due to shell attack. A shell fell just one km away from my house and a boy called Theva died on it. Many shells fell there in addition to that there were bomber and helicopter attacks, and all the houses got damaged. Our village faced the most deaths and damages due to war. It was all done by the government of that time. The government of UNP time and the government of Sri Lanka time both did such things. The Movement also attacked when the military attempts to enter, to protect them and their ethnic group. It’s the God who saved our ethnic people.
The Singhalese people should know why this conflict began in this country; they should know the reasons behind all these deaths and destruction of assets. In those times the education level was low. Now it’s a time that education is valued the most by all the communities. Our ethnic people should live freely; they should have a life just like the Sinhalese. The Movements started in our villages for that course. We have lost so many lives to get our ethnic people liberated. Even after losing so many lives still our ethnic people have not obtained liberty. We are in pain with that thought. For our ethnic people, Like how all the fingers are staying together we all should live together. The majority community –Singhalese should know this, they should realize that our people also should live like them. likewise Muslims should also realize that we all are brothers , we are only different in ethnicity but as humans we all are same.
An ethnic community would naturally fight for its liberty. Being a Tamil, in my opinion, I wouldn’t say it’s a crime. Even if I lose my life I wouldn’t say that. The fighters are giving their lives not for their parents and siblings. They are sacrificing their lives for an ethnic group at a young age like 22, 23 – the age to enjoy the life. So many young girls have stayed away from their parents. So I don’t have the to talk about them.
Military personals also giving their lives for their country. Fighters also giving their lives to their ethnic people. When things were such I don’t have the …. to talk about them. We cannot blame the military and we cannot blame the fighters as well. The majority Sinhalese people should realize why this had happened. We hear that .. Ponnambalam asked for 50:50, we don’t know any such things. We also heard that during D.S.Senanayaka’s time people were treated equally, we don’t know that. If the people had lived in harmony in those days why they couldn’t do the same now? Those leaders who advice haven’t done their job properly. Because of that people who live in that side couldn’t understand things properly. Even the Tamil people and the Sinhalese people and the Muslim people couldn’t understand things. Before one year, in the Sinhalese country they have destroyed the Muslim mosques and churches. They demolished Muslim shops. This happens because the leaders of that side are motivating the people to do so. Sinhalese people should be able to see this clearly. They should know the reality. All these things happened because the politicians were self-centered and they acted on behalf of them, to keep them in power. Sinhalese should realize this. They should know that Tamil people also were born in Sri Lanka and they too have rights. Realizing that they should support the good governance now. They should realize that Tamil people should live freely as brothers of the other communities of this country.
CMP-MAN-MAW-VID/03
මේක හතර පැත්තෙන්ම මුහුදෙන් වටවෙච්ච ගමක්. මේක ජාත් තුනේම කට්ටිය එකමුතුව ජීවත් වෙච්ච ගමක්. අපි ඉන්න තැන කල්ලමඩු කියලා වැවක් තියෙනවා. මේ වැවට තුන් ගොල්ලොම ගිහිල්ලා නාලා කරලා සහයෝගයෙන් ජීවත් වෙච්ච තැනක්. එහෙම හිටපු තැන මුස්ලිම් අයයි, ඉඩත්තල්තිව් හින්දු අයයි අතරේ ප්රශ්නයක් ඇති කරගෙන තුවක්කුවෙන් වෙඩි තියලා ගමේ හැමෝම දන්න සීනියර් කියන කෙනා මැරුණා.
අපේ ගම ටිකක් පාතයි. පාත නිසා සැප්තැම්බර් දෙසැම්බර් කාලෙට ගංවතුර එනවා. අපේ වතුවල ගෙවල්වල වතුර පිරිලා. හැම අවුරුද්දෙම අපේ තැනට මෙහෙම වෙනවා. එක ආයතනයක් ඇවිල්ලා ඇනිකට් එකක් දාලා දීලා දැන් ගංවතුර නැහැ. කෝවිල් දෙකක් තියෙනවා. අපි අපේ තැන සමාදානෙන් ඉඳලා කෝවිල්වලට ගිහිල්ලා අපේ දේවල් කරගෙන ජීවත් වෙනවා.
අපේ ජනතාවගේ නිදහස වෙනුවෙන් කොටි කියලා සංවිධානයක් හදාගෙන මුස්ලිම් අය පාවාදෙන ප්රශ්න තිබුන නිසා ඒ අය ගමෙන් පිටත් වෙලා යන්න ගියා. ඒ ගොල්ලෝ පුත්තලම දිස්ත්රික්කයට ගිහිල්ලා පදිංචි වෙලා ජීවත් වෙනවා. ඒ ගොල්ලෝ ආයෙත් ඇවිල්ලා ගමේ ජීවත් වෙනවා. ඒ වුනත් ඉස්සර තිබ්බ නිවිච්ච ගතිගුණ තිබ්බ මිනිස්සු නැහැ. ඒගොල්ලොත් නැහැ. අපිත් නැහැ.
යුද්ධය නිසා මිනිස්සුන්ගේ ගෙවල් දොරවල් හැම දේම කැඩිලා හැම දෙයක්ම නැති වෙලා ඒකෙන් ජීවිතත් නැතිවෙලා මුලතිව් දිස්ත්රික්කයේ පුදුමාතලන් කියන තැන ඉඳලා මෙහෙට ඇවිල්ලා ඉන්නවා. මහින්ද රාජපක්ෂ රජය විසින් අපිව අරන් ගිහිල්ලා කඳවුරු වලට දාලා හිටියා. කඳවුරුවල මිනිස්සුන්ට ජීවත් වෙන්න බැහැ. සතෙකුටවත් ඉන්න බැරි තැනක කටු කම්බි වැටකින් හිර කරලා අපේ ජාතිය ගොඩාක් දුක් වින්දා. ඒ කාලේ තමයි ගෙදරකට ටොයිලට් එකක් ඕනේ.. ගෙදර පිරිසිදුව තියෙන්න ඕන කියලා ආණ්ඩුව තීරණය කරපු කාළේ අපිව ඒ තැන හිර කරලා බිම වලක් කපලා ඒකෙන් පණුවො ඇවිල්ලා අපි හිටපු තැන සම්පූර්ණයෙන් පණුවෝ හැදුනා. ඒ විදියට එක ආණ්ඩුවක් අපේ ජාතිය නැති කරන්න ඕන කියලා කළා. අපේ තැන, අපේ ජනතාව ඒ තරම් දුක් වේදනා විඳගෙන ජීවත් වුනා. මුලතිව් මාතලන් වලට ගිහිල්ලා අවුරුදු තුනක් හිටියා. පස්සේ ආයෙත් ඇවිල්ලා කඳවුරේ නැවතිලා කඳවුරේ දී විඳපු දුක වගේ වෙන කිසිම දුකක් නැහැ.
ගෙවල් දොරවල් ඔක්කොම ෂෙල් වැටිලා කැඩිලා. මගේ ගෙදර ඉඳන් කිලෝ මීටරයක් එහායින් ෂෙල් වැටිලා ඒකෙන් දේවා කියන කොල්ලෙක් මැරුණා. වැඩියෙන්ම ෂෙල් වැටිලා බෝම්බ වෙඩි එහෙම ඇවිල්ලා අපේ ගමට වැටිලා ගෙවල් ඔක්කොම කැඩුනා. අපේ ගමේ යුද්ධය නිසා ජීවිත දේපළ ගොඩාක් නැතිවුනා. ඒ ඔක්කොම ඒ කාළේ හිටිය ආණ්ඩුව තමයි කළේ. යූ එන් පී කාළේ හිටපු ආණ්ඩුවත් කළා. ශ්රී ලංකා කාළේ හිටපු ආණ්ඩුවත් කළා. එතකොට සංවිධානේ ඒගොල්ලෝ බේරෙන්න ඕන නිසා ඒගොල්ලන්ගේ ජාතිය බේරගන්න ඕන නිසා හමුදාව එනකොට පහර දෙනවා. දෙවියෝ තමයි අපේ මිනිස්සු ජීවත් වෙන්න ඕන කියලා ආරක්ෂා කරගෙන තියාගෙන ඉන්නේ.
වැඩිපුර සිංහල මිනිස්සු. මොකටද මේ රටේ මේ ප්රශ්නේ සිද්ධවුනේ. මේ ජීවිත, දේපළ ඇයි ඔක්කොම නැතිවුනේ කියලා ඒ ගොල්ලෝ දැනගන්න ඕන. ඒ කාළේ ඉගෙනීමක් නැහැ. දැන් කාළේ එහෙම නෙවෙයි ඉගෙනීමට තැන දීලා හැමෝම ඉන්න කාලයක්. අපේ ජාතිය නිදහසේ ජීවත් වෙන්න ඕන. සිංහල අය කොහොම ජීවත් වෙනවද ඒ විදියට දෙමළ අයත් ජීවත් වෙන්න ඕන. ඒක නිසා තමයි අපේ ගමේ සංවිධාන ඇතිවෙලා ජාතියට නිදහස ඕන කියලා ජීවිත ගණනාවක් නැතිවුනේ. ඒ තරම් ජීවිත ගණනාවක් නැතිවෙලා අපිට ඒ කියන නිදහස තාම ලැබිලා නැහැ. ඒ නිසා අපි දුකෙන් ජීවත් වෙනවා. අපේ ජාතියේ ඇඟිලි ඔක්කොම එකතුවෙලා තියෙනවා වගේ හැමෝම එකතුවෙලා ඉන්න ඕන. මේක මහජාතිය වන සිංහල කට්ටිය දැනකියාගෙන අපේ අයත් ඒගොල්ලෝ වගේ ජීවත් වෙන්න ඕන කියලා දැනෙන්න ඕන. ඒ වගේම මුස්ලිම් අයත් හැමෝම එකම සහෝදරයෝ ජාතියෙන් වෙනස් වුනාට, මනුෂ්යයෙක් හැටියට ඉපදෙන එකේ වෙනසක් නැහැ කියලා හැමෝම තේරුම් ගන්න ඕන.
තමුන්ගේ ජාතියට නිදහස ඕන කියලා එක ජාතියක් විරෝධතා කරන්න පුලුවන්. මං ගැන කිව්වොත් මම දෙමළ මනුෂ්යයෙක් වෙලා ඉඳගෙන ඒක වැරදි කියන්නේ නැහැ. ජීවිතය ගියත් කියන්නේ නැහැ. සටන් කරන අයත්, තමුන්ගේ ජීවිතයේ වටිනාකම හිතන්නේ නැතුව ජීවිතය දුන්නේ නැහැ. අම්මා තාත්තා සහෝදරයෝ වෙනුවෙන් ජීවිතය දුන්නේ නැහැ. එක ජාතියක් වෙනුවෙන් තමුන්ගේ ජීවිතය 22, 23 වයස්වල දී ජීවිතය දුන්නා. කොච්චරනම් ගෑණු ළමයි තමුන්ගේ අම්මා, තාත්තා නැතුව ඉඳලා තියෙනවද? ඒ නිසා එයාලා ගැන කතා කරන්න මට සුදුසුකමක් නැහැ.
හමුදාවත් තමුන්ගේ රට රැක ගන්න තමුන්ගේ ජීවතය දුන්නා. සටන් කරුවොත් තමුන්ගේ ජාතිය රැකගන්න තමුන්ගේ ජීවිතය දුන්නා. එහෙම තියෙන කොට ඒ ගොල්ලෝ ගැන කතා කරන්න මට පුළුවන්කමක් නැහැ. හමුදාවටත් වැරදි කියන්න බැහැ. සටන් කරුවන්ටත් වැරදි කියන්න බැහැ. මේක ඇයි ඇතිවුනේ කියලා බහුතර සිංහල ජනතාව තේරුම් ගන්න ඕන. කුමක් වෙනුවෙන් මේක වුනාද කියලා හිතන්න ඕන. ජී. ජී. පොන්නම්බලම් එහෙම පනහට පනහ ඉල්ලුවා කියලා කියනවා. අපි ඒක දන්නේ නැහැ. ඒකේ දී ඩී එස් සේනානායක එහෙම අපි ඔක්කොම එකවගේ කියලා ජීවත්වුන කාලයක් ඇහුවා ඇරෙන්න අපි වෙන මොකුත් දන්නේ නැහැ. එහෙම ඒ කාළේ දී සමාදානයෙන් ජීවත් වෙච්ච ජනතාව ඇයි අද සහයෝගයක් නැතිව ඉන්නේ. ගැටෙන්නේ... නායකයෝ ඒ දේවල් හරියට කිව්වේ නැහැ. ඒ නිසා ඒ පැත්තේ ඉන්න ජනතාවට හරියට තේරුනේ නෑ. දෙමළ අයටත් මුස්ලිම් අයටත් සිංහල අයටත් තේරුනේ නැහැ. අවුරුද්දකට කලින් සිංහල රටේ මුස්ලිම් අයගේ පල්ලි, කෝවිල් කඩලා මුස්ලිම් අයගේ කඩ එහෙම කඩලා තිබුනා. ඒකට හේතුව නම් එහෙ හිටපු නායකයෝ ඒ තැන්වල දී කියලා කියලා යවනවා, සිංහල ජනතාවට මේ ගොල්ලෝ පැහැදිළිව තේරුම් ගන්න ඕන. සිංහල අය ඒක තේරුම් ගන්න ඕන. තම තමුන්ගේ අරමුණු වෙනුවෙන් දේශපාලනය එහෙම වෙන්න ඉඩ තියපු නිසා තමයි මේක වුනේ. ඒක සිංහල අය දැනගන්න ඕන. දෙමළ අයත් ලන්කාවේ උපන් අය තමයි. එයාලටත් අයිතියක් තියෙනවා කියල තේරුම්ගන්න ඕනි. තේරුම්ගෙන දැන් තියෙන යහපාලන රජයත් එක්ක එකතුවෙලා දෙමළ ජනතාව නිදහසේ සහෝදරයෝ වගේ ජීවත් වෙන්න ඕන කියලා තේරුම් ගන්න ඕන.
இது நாலு பக்கமும் கடலால சூழப்பட்ட ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமத்தில 3 இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த கிராமம். எங்கட இடத்தில பள்ளமடு என்ட குளம் இருக்கு. இந்த குளத்தில 3 இனமும் போய் குளிச்சு முழுகி வாழந்து ஒற்றுமையா இருந்த இடம். அப்படி இருந்த இடத்தில முஸ்லீம் ஆட்களுக்கும் விடத்தல் தீவு வேதக்கார ஆட்களுக்கும் ஒரு பிரச்சனை உருவாகி துவக்கினால சூடுபட்டு சீனியர் என்று ஊரில எல்லாருக்கும் அவர தெரியும் இறந்திட்டார்.
எங்கட ஊர் வந்து ஒரு பள்ளமான இடம். பள்ளமான இடத்தில கார்த்திகை மார்கழி பிறந்தா கடல் வெள்ளம் பெருக்கெடுத்து எங்கட வளவுகள், வீடுகள் எல்லாம் தண்ணிகள் நிறைஞ்சு இப்படி ஒவ்வொரு வருசமும் எங்கட இடத்தில் நடக்கிறது. ஒரு நிறுவனம் வந்து அணைக்கட்டு போட்டுத் தந்து இந்த வெள்ளத்த தடுத்து நிறுத்தி இருக்கு. இரண்டு ஆலயங்கள் இருக்குது. நாங்கள் எங்கட இடத்தில எல்லாம் ஒற்றுமையாக இருந்து ஆலயங்களில போய் எங்கட தேவைகளுக்கு வேண்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்கட மக்களின் விடுதலைக்காக புலிகள் என்ர இயக்கம் ஒன்று உருவாகி முஸ்லீம்கள் காட்டிக் கொடுக்கிற பிரச்சனைகள் இருந்ததால அவங்கள ஊரைவிட்டு களைச்சு விட்டாங்க. அவங்க புத்தளம் மாவட்டத்தில போய் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கினம். மீண்டும் அவங்க திரும்பி வந்து ஊரில வாழ்ந்து கொண்டு இருக்கினம். இருந்தாலும் முதல் இருந்த நிம்மதியான நிலையில ஆட்கள் இல்ல. அவயளும் இல்ல. நாங்களும் இல்ல.
யுத்தத்தால மக்கள் தங்கட வீடு வாசல்கள் எல்லாம் உடைஞ்சு சகல சொத்துக்களையும் இழந்து அதோட உயிர்;களையும் இழந்து முல்லைத் தீவு மாவட்டத்தில புது மாத்தளன் என்ற இடத்தில இருந்து இங்க வந்திருக்கிறம். மகிந்த ராஐபக்ச அரசில எங்கள கொண்டு போய் முகாமில அடைச்சு முகாம்களில மனிதர் வாழ ஏலாது. மிருகங்கள் கூட வாழ ஏலாத ஒரு இடத்தில முள்ளுக் கம்பி வேலிக்குள்ள அடைச்சு வச்சு எங்கட இனம் கூடுதலா வேதனைப்பட்டது அந்த இடத்திலதான் ஒரு வீட்டில டொய்லட் வேணும். வீடு துப்பரவாக இருக்க வேணும் என்று அரசாங்கம் தீர்மானிக்கிற நேரத்தில அந்த இடத்தில எங்கள அடைச்சு வச்சு நிலத்தில கிடங்க வெட்டி புழு வந்து நாங்க இருந்த இடத்தில எல்லாம் புழு வந்தது. அப்படி ஒரு அரசு எங்கட இனத்தை அழிக்கோணும் என்று செய்தது. எங்கட இடத்தில எங்கட மக்கள் அவ்வளவு வேதனைப்பட்டு வாழ்ந்து வந்தவங்க. முல்லைத் தீவு மாத்தளம் வரையும் போய் 3 வருடம் இருந்தனாங்க பிறகு மீண்டும் வந்து முகாமில தங்கி முகாமில பட்ட வேதனை போல ஒரு வேதனை இல்ல.
வீடுகள் வாசல்கள் எல்லாம் செல் விழுந்து உடைஞ்சு என்ர வீட்டில இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில செல் விழுந்து அதில தேவா என்ர பொடியன் இறந்திட்டுது. கூடுதலான செல்லுகள் விழுந்து பொம்பர்கள் டெலி எல்லாம் வந்து எங்கட ஊரில விழுந்து வீடுகள் எல்லாம் உடைஞ்சிட்டுது. எங்கட ஊரில யுத்தத்தால கூடுதலான உயிரிழப்புகளும் சேதங்களும் நிகழ்ந்தது. அதெல்லாம் அந்த நேரத்தில இருந்த அரசாங்கம்தான் செய்தது. யு என்பி காலத்தில இருந்த அரசாங்கமும் செய்தது சிறிலங்கா காலத்தில இருந்த அரசாங்கமும் செய்தது. அதோட இயக்கமும் தங்கள பாதுகாக்கிறதுக்காக தங்கட இனத்த பாதுகாக்கோணும் என்டதால இராணும் வர வெளிக்கிடக்கேக்க தாக்குதல் செய்வாங்க. கடவுள்தான் எங்கட மக்கள் வாழோணும் என்று காப்பாற்றி வச்சிருக்கிறார்.
கூடுதலா சிங்கள மக்கள் என்னத்திற்காக இந்த நாட்டில இந்த பிரச்சனை நடந்தது இந்த உயிர் இழப்புகள் ஏன் நடந்தது சொத்து சுகங்கள் எல்லாம் ஏன் அழிந்தது என்றத அந்த மக்கள் அறியோணும். ஆந்த காலத்திலதான் கல்வி அறிவில குறைவாக இருந்தாங்க இந்த காலத்தில கல்வி அறிவில கூடுதலான இடம் கொடுத்து எல்லாம் மக்களும் இருக்கின்ற காலம். எங்கட இனம் சுதந்திரமா வாழோணும். சிங்கள மக்கள் என்ன மாதிரி வாழ்கிறாங்களோ அதே மாதிரி தமிழ் மக்களும் வாழோணும். அதாலதான் எங்கட ஊரில இயக்கங்கள் என்று தோன்றி இனத்திற்கு விடுதலை வேண்டும் என்று எத்தனையோ உயிர்கள் போயிருக்கு. அவ்வளவு உயிர்கள் போயும் எங்களுக்கு இன்னும் இந்த சுதந்திரம் கிடைக்கேல அதனால நாங்க வேதனைப்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறோம்.
எங்கட இனத்திற்கு கை விரல்கள் எல்லாம் ஒன்டா இருக்குமாப்போல எல்லாரும் ஒன்டா இருக்கோணும். இத பெரும்பான்மையான சிங்கள மக்கள் அறிஞ்சு உணர்ந்து எங்கட மக்களும் அவங்களபோல வாழணும் என்றதை உணரனும். அதேபோல முஸ்லீம் மக்களும் எல்லாரும் ஒரே சகோதரங்கள் இனத்தில வேறே ஒழிய மனித பிறப்பில வேறுபாடு இல்ல என்றத எல்லாரும் உணரணும்.
தன்ர இனத்திற்கு விடுதலை வேண்டும் என்று ஒரு இனம் வெளிக்கிட்டு போராடத்தான் செய்யும். என்னைப் பொறுத்த மட்டில நான் ஒரு தமிழனாக இருந்து கொண்டு அத குற்றமாக சொல்ல மாட்டன். என்ர உயிர் போனாலும் சொல்ல மாட்டன். போராளிகள் தங்கட உயிர துச்சமாக கருதி தாய் தகப்பன் சகோதரங்களுக்காக உயிர கொடுக்கேல. ஒரு இனத்திற்காக வேண்டி வாழ்ற வயதில 22> 23 வயதில தங்கட உயிரக் கொடுத்தவங்க. எத்தனையோ குமர் பிள்ளைகள் தங்கட தாய் தகப்பன விட்டு இருந்திருக்கிறாங்க. அதனால அவையள பற்றி கதைப்பதற்கு எனக்கு தகுதியில்ல
இராணுவமும் தன்ர நாட்டை காப்பாற்றுவதற்காக தன்ர உயிரக் கொடுக்கிறான். போராளிகளும் தன்ர இனத்த காப்பாற்றுவதற்காக தன்ர உயிரக் கொடுக்கிறான். அப்படி இருக்கேக்க அவங்களப் பற்றி கதைக்கிறதுக்கு எனக்கு அருகதை கூட இல்ல. இராணுவத்தையும் குற்றம் சொல்ல முடியாது. போராளிகளையும் குற்றம் சொல்ல முடியாது. இது ஏன் நடந்தது என்றதை பெரும்பாலான சிங்கள மக்கள் உணரோனும். என்னத்திற்காக இது நடந்தது என்று உணரோனும் ஐp.ஐp பொன்னம்பலம் எல்லாம் 50ற்கு 50 கேட்டதாம் என்று எங்களுக்கு கேள்வி எங்களுக்கு அது தெரியாது. அதில டி.எஸ் சேனநாயக்க எல்லாம் நாங்க எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி வாழ்ந்த காலமாம் என்று கேள்விப்பட்டோமே தவிர வேற எங்களுக்குத் தெரியாது
அப்படி அந்த காலத்தில ஒற்றுமையா வாழ்ந்த மக்கள் இன்டைக்கு ஏன் ஒற்றுமை இல்லாம இருக்கிறது போதிக்கிற தலைமைப் பீடங்கள் அந்த போதனைகள சரியாக சொல்லேல அதனால அங்கால இருக்கிற மக்களுக்கு சரியாக விளங்கேல தமிழ் மக்களுக்கும்தான் முஸ்லீம் மக்களுக்கும்தான் சிங்கள மக்களுக்கும்தான் விளங்கேல ஒரு வருசத்திற்கு முதல் சிங்கள நாட்டில முஸ்லீம்கள்ட பள்ளி வாசல்கள் வேதக் கோயில்கள் எல்லாம் இடிச்சு உடைச்சு முஸ்லீம்களிட கடைகள் எல்லாம் அடிச்சி நொறுக்கி அதற்கான காரணம் என்டா அங்க உள்ள தலைமைப் பீடங்கள் அந்த இடங்கள சொல்லிச் சொல்லி ஊரில தூண்டி தூண்டி விடுறாங்க
சிங்கள மக்களுக்கு இவைகள் வெளிச்சமாக தெரியோணும். சிங்கள மக்கள் இத அறியோணும். தங்கட தங்கட சுயநலத்திற்காக வேண்டி அரசியல எப்படி தக்க வைக்க வேண்டி அரசாங்கம் செய்ததாலதான் இது நடந்தது. இத சிங்கள மக்கள் உணரோணும். இலங்கை நாட்டில பிறந்தவன்தான் தமிழ் மக்களும் அவனுக்கும் உரிமை இருக்கு என்பதை அறியோணும். அறிஞசு இப்ப உள்ள நல்லாட்சி அரசாங்கத்தோட சேர்ந்து அவங்களுக்கு துணையாக இருந்து தமிழ் மக்கள் சுதந்திரமாக சகோதரங்களாக சீவிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்