A plea for better medical facilities

A beloved husband speaks about the lack of medical facilities in the Akuressa area and pleads for better facilities


වඩා හොඳ සෞඛ්ය පහසුකම් සඳහා ඉල්ලීමක්

ආදරණීය ස්වාමි පුරුෂයෙක් අකුරැස්ස ප්‍රදේශයේ වෛද්‍ය පහසුකම් නොමැතිකම ගැන සහ වඩා හොඳ පහසුකම් ඉල්ලා සිටියි


சிறந்த மருத்துவ வசதிகளுக்கான வேண்டுகோள்

அகுரஸ்ஸ பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் ஒரு நேசமுள்ள கணவன் பேசுகிறார், மேலும் நல்ல வசதிக்காக வேண்டுகோள் விடுகிறார்



To Hon. Minister of Health,
My name is D.L. Sirisena. My wife suddenly got ill. She got medicine from a Doctor in Akurassa. She was sent to the Hospital after taking medicines few times to take a blood report. Blood report was fine. And later she was sent again. Three or four times she was sent like that. Finally she was asked to be admitted to the hospital for a small examination. Blood was taken again, yet again the blood test was normal. After that, machines were inserted here and there but everything was ok. They told to get an injection because there is phlegm. Then I asked why do you inject her miss, she told it was to reduce the phlegm. Phlegm was not reduced, her neck was swollen over and over again. After that, I asked her to go to Colombo Hospital. She told she can’t. Doctors told they will take a piece from the neck and send to Maharagama. We allowed it also and waited. After that, they told that she had a cancer. We were too late to go to Colombo. They didn’t send her to Colombo. I have the report of it. After that, they told like that and sent her to Karapitiya.
We went to Karapitiya and waited. They left her in corner chair. We waited and waited but no medicine. Three days she stayed like this. She was put in to a bed when she was serious. She told daughter that she wanted to go to toilet. When she was going to toilet, her legs became numb and she fell. The people put her back to bed. She has been unable to talk after that. Then the daughter has gone and informed a nurse that her mother was unable to talk. Then she has come in a hurry and gave one oxygen. She passed away at about 12.00. There were no Doctors that day because they were on strike. At night I was informed, I thought how to go with my son and daughter. After that, I told the villagers and came in a vehicle. When I went at 6 in the morning, the body was on the bed, and my daughter was leaning against a table. After that we came with the body to Akuressa. There was flood in Akuressa. When we came to house, all had been done by the villagers. My wife lived smiling and talking with everybody in the village. Now I live because of my two daughters and son. Son is preparing for the Ordinary Level this year. Younger daughter doesn’t have a job yet. Elder daughter is married. We all live on the income of her husband. I told this story because I lost my wife because of the irresponsibility of the Doctors in that hospital. I remember another thing also. When my wife was in the hospital, there was the incident of cutting off the hand of a University student.


සෞඛ්‍ය අමාත්‍යතුමා වෙත,

මගේ නම ඩී.එල්.සිරිසේන. මගේ හාමිනේ හිටිහැටියේම අසනීප වුනා. අකුරැස්ස වෛද්යවරයෙක්ගෙන් තමයි එයා බෙහෙත් ගත්තේ. දෙතුන් පාරක් බෙහෙත් අරගෙන ඉස්පිරිතාලෙට පිටත් කරනවා මාතර ඉස්පිරිතාලට ලේ එකක් චෙක් කරන්න. ලේ එක බැලුවම හොදයි. අයෙත් පිටත් කරනවා. ඔහොම තුන් හසර සැරයක්ම පිටත් කරා. අන්තිමට කිවුවා පොඩි පරීක්ෂණයක් කරන්න තියෙනවා ඉස්පිරිතාලෙන් ගිහින් නතර වෙන්න කියලා. ඉඉට පස්සේ ආයෙත් ලේ අරන් තිබ්බා ඒත් හොදයි. ආයෙත් උගුරට මැෂින් නර්ස්ලා එහෙන් මෙහෙන් මැෂින් දාල චෙක් කරලා තිබ්බා. එත් හොදයි. සේම තමි තියෙන්නේ කියලා බෙහෙත් විදින්න කිවුවා. මම ඇහුවා ඇයි මේ බෙහෙත් විදින්නේ කියලා. ඊට පස්සේ කිවුවා සේම අඩු වෙන්න කියලා. සේම අඩු විඉමක් වුනේ නෑ. එන්න එන්න බෙල්ල මහත් වුනා. ඊට පස්සේ මන් ආයේ ගිහින් කතා කළා හාමිනේට කොළඹ යන්න එන්න කියලා. ඊට පස්සේ එයා කිවුවා බෑ කියලා. වෛද්‍යවරු කිවුවා බෙල්ලෙන් කෑල්ලක් කපල මහරගම පිටත් කරනවා කියලා. ඉතින් ඊකටත් ඉඩ දීල ඉදියා. ඊට පස්සේ කියනවා මෙයාට තියෙන්නේ පිළිකාවක් කියලා. එතකොට කොළඹ යන්න වෙලාව තිබුනෙත් නෑ. කොළඹ යවල තිබුනෙත් නෑ. මන් ලග තියෙනවා ඒකේ රිපෝර්ට් එකක්. ඊට පස්සේ එහෙම කියලා පිටත් කළා කරාපිටියේ. ඉතින් කරාපිටි ගිහින් ඇතුල් වෙලා ඔන්න ඉතින් බලාගෙන ඉන්නවා. ඊට පස්සේ අයිනේ පුටුවකට දැම්මා. දාල බලාගෙන හිටිය හිටිය බෙහෙතුත් නෑ. එහෙම ඉදල දවස් තුනයි. තුන් වෙනි දවසේ අමාරු වෙද්දී ඇදකට දැම්මා. ඉතින් ඔය ඇදේ ඉන්නකොට වැසිකිලි යන්න ඕනි කියල දුට කිවුවා. දු ලග ඉදියේ. දුත් එක්ක ගිහින් වැසිකිලියට එක්ක යනකොටම කකුල් දෙක පන නැතුව එතනම වැටුනා. එතන කට්ටියක් ඉදියා. ඒගොල්ලෝ ගෙනත් ඇදෙන් තිබ්බා. ඇදෙන් තිබ්බට පස්සේ කතා කරන්න බැරි වෙලා තියෙනවා. ඊට පස්සේ දු ගිහින් මිසී කෙනෙක්ට කියලා තියෙනවා මිසී මෙහෙමි අම්මට කතා කරන්න බැහැ කියලා. ඊට පස්සේ ටක් ටක් ගාල දුවල ඇවිත් දීල තියෙනවා ඔක්සිජන් එකක්. ඔක්සිජන් එක නහයට දාල තිබිල, ඊට පස්සේ 12ට වගේ නැති වුනා. එදා ඩොක්ටර්ස්ලා ඉදියේ නැහැ. ඉස්ට්‍රික් එකක්. ඊට පස්සේ රෑ මට කෝල් කරා. මම කල්පනා කරා දුවයි පුතයි එක්ක කොහොමද යන්නේ කියලා. ඊට පස්සේ ගමේ කට්ටියට කියලා වාහනයක් අරගෙන ආවා. ඒ වෙලාවේ මට මොනම දෙයක්වත් තේරුමක් නෑ. උස්සලා අතෑරියා වගේ. මමත් ගියා ඒ ගොල්ලන් එක්ක ගිහින් උදේ 6 ට ගියා බලන්න වාට්ටුවේම තිබුනා. දරුවත් මේසෙට ඔලුව ගහගෙන හිටියා. ඊට පස්සේ මියත් අරගෙන ආවා. අකුරැස්සට එද්දී අකුරැස්සට ගං වතුර ගලලා. ගෙදරට එද්දී එහේ ගමේ කට්ටිය ගෙදර වැඩ ටික සේරම කරලා ඉවරි. මගේ හාමිනේ ජිවත් වෙලා ඉද්දි ගමේ හැමෝම එක්ක බොහොම විහිළුවෙන් තහළුවෙන් ජීවත් උන කෙනෙක්. ඉතින් මම දැන් ජිවත් වෙන්නේ මගේ දුල දෙන්නයි, පුතයි නිසා. පුතා මේ පාර සාමාන්‍ය පෙළ ලියනවා. පොඩි දුවට තාම රැකියාවක් නෑ. ලොකු දුව විවාහ වෙලා ඉන්න පුතා හොයන ආදායමෙන් තමයි අපි සේරම ජිවත් වෙන්නේ. මන් මේ කතාව කිවුවේ ඒ රෝහලේ ඉදපු වෛද්‍යවරුන්ගේ කිසි වගකීමක් නැති නිසා තමයි මගේ හාමිනේට මෙහෙම වුනේ. මේ වෙලාවේ මට තව දෙයක් මතක් වෙනවා. අර කැම්පස් ළමයෙක්ගේ අතක් කැපුවේ. එත් මගේ හාමිනේ හොස්පිටල් ඉන්න දවස් වලම තමයි.



சுகாதார அமைச்சர் அவர்களுக்கு,

எனது பெயர் D.I. சிரிசேன. எனது மனைவி திடீரெனச் சுகயீனமுற்றார். அகுரஸ்ஸ வைத்தியர் ஒருவரிடம் தான் அவர் மருந்து எடுத்தார். இரண்டு மூன்று முறை மருந்து கொடுத்துவிட்டு மாத்தறையில் உள்ள வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை ஒன்று செய்துகொண்டு வருமாறு சொல்வார். இரத்தப் பரிசோதனை நன்றாக இருக்கும். மீண்டும் அனுப்புவார். இதுபோன்று இரண்டு மூன்று முறை அனுப்புவார். கடைசியாக ஒரு பரிசோதனை செய்ய இருக்கிறது. அதனால் வைத்தியசாலைக்குச் சென்று தங்குமாறு சொன்னார். அதன் பிறகும் இரத்தம் எடுத்திருந்தார். அதுவும் நல்லது. அதைத் தொடர்ந்து கழுத்தின் குரல் வளைக்கு ஒரு மெஷினைப் பூட்டினார்கள். அங்கேயும் இங்கேயும் மெஷினைப் பூட்டி வேறு வேறாக வைத்திருந்தார்கள். சளி தான் இருக்கிறது என்று ஊசி போடச் சொன்னார்கள். ஏன் இந்த ஊசி ஏற்றுகிறீர்கள் என்று கேட்டேன். சளியைக் குறைப்பதற்கு என்று சொன்னார்கள். சளி குறையவில்லை. வரவரக் கழுத்து தடிப்பாகத் தொடங்கியது. அதன்பிறகு என் மனைவியைக் கொழும்பிற்குக் கூட்டிச்செல்லக் கூப்பிட்டேன். அவள் வர மறுத்தாள். பின்னர் வைத்தியர்கள் சதை ஒரு துண்டை வெட்டி மஹரகம வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டும் என்றார்கள். அதற்கு நான் சரி என்றேன். அதன்பிறகு இப்போ அவளுக்குக் கென்சர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்போ எங்களுக்குக் கொழும்பிற்குச் செல்ல நேரம் கிடைக்கவில்லை. பரிசோதனைப் பதிவுகளைக் கொழும்பிற்கு அனுப்பி வைக்கவுமில்லை. என்னிடமே அந்தப் பதிவுகள் இருந்தன. அதன்பிறகு கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். அங்கே சென்றதும் ஓரத்தில் ஒரு கதிரையில் அமரச் சொன்னார்கள். ஒரு மருந்தும் இால்லை. இன்னும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அப்படியே இருந்து 3 நாளாகின்றது. மூன்றாவது நாள் வருத்தம் அதிகரிக்கவும் கட்டிலுக்குப் போட்டார்கள். அப்படியே இருக்கும்போது மகளிடம் மலசல கூடம் போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறாள். மலசல கூடம் போய் வரும்போது கால் இரண்டிலும் சக்தி இல்லாமல் போய் அந்த இடத்திலேயே விழுந்துவிட்டாள். அதந் இடத்திலிருந்த கொஞ்சப் போ் அவளைக் கட்டிலில் கொண்டுவந்து சோ்த்துள்ளார்கள். கட்டிலுக்கு வந்ததிலிருந்து கதைக்க முடியாமல் உள்ளது என்று சொல்லி இருக்கிறாள். அதன்பிறகு ஓடி வந்து ஒக்ஸிசன் (காற்றழுத்தி) ஒன்றைப் போட்டுள்ளார்கள். அதன்பின்னர் 12 மணியளவில் அவள் இறந்துவிட்டாள். அன்று வைத்தியர்களும் இருந்திருக்கவில்லை. அன்று வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. எனக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. நான் மகளையும் மகனையும் எப்படிக் கூட்டிச்செல்வது என யோசித்தேன். ஊர் மக்களிடம் சொல்லி வாகனம் ஒன்றைக் கொண்டுவந்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைச் சுற்றிவிட்டது போலிருந்தது. நானும் ஊராருடன் போனேன். காலை 6 மணியானது பலஹேன வாட்டில இருந்தது. பிள்ளைகள் மேசையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள். நாங்கள் உடலை எடுத்துக்கொண்டு அகுரெஸ்ஸ வரும்போது அகுரெஸ்ஸையில் வெள்ளமாக இருந்தது. அத்தோடு வீட்டுக்கு வரும்போது வீட்டில் ஊர் மக்கள் மற்ற வேலைகள் எல்லாம் செய்து முடித்திருந்தார்கள். எனது மனைவி ஊர் மக்களுடன் கலகலப்புடன், சந்தோஷமாக வாழ்ந்தவள். நான் இப்பொழுது மகள் இருவருக்காகவும் மகனுக்காகவும் தான் வாழ்ந்து வருகிறேன். மகன் இம்முறை சாதாரண தரம் எழுதுகிறார். சின்ன மகளுக்கு இன்னும் தொழில் ஒன்றும் கிடைக்கவில்லை. பொிய மகள் திருமணம் முடித்திருக்கும் மருமகனின் வருமானத்தில் தான் நாங்கள் அனைவரும் வாழ்கிறோம். நான் இந்தக் கதையச் சொல்வது அந்த வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களால் ஒரு பிரயோசனமும் பொறுப்பும் இல்லாததால் தான் என் மனைவிக்கு இவ்வாறு நடந்தது என்பதைச் சொல்லவேயாகும். இந்த எனக்கு இன்னொன்றும் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தப் பல்கலைக்கழக மாணவனின் கையை வெட்டியதும் என் மனைவி வைத்தியசாலையில் இருக்கும்போது தான்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License