Dream of a widowed mother

A young widowed mother, speaks of her sacrifices, suffering and dream of bringing up her children as an equal in society.


වැන්දඹු මවකගේ සිහිනය

වැන්දඹු මවක් තම දරුවන් සමාජය තුල උස් මහත් කිරීමට දරණ අසාහය වෑයමක් පිළිබඳ කතාවකි


விதவைத்தாயின் திடசங்கற்பம்

தியாகங்களையும், அனுபவிஇக்கதையானது ஒரு இளம் விதவைத் தாய் தனது பிள்ளைகளை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு செய்த த்த கஷ்டங்களையும் வெளிப்படுத்துகின்றது.



MP/AMP/ALA/AKK/02 -01

My family Story
My name is Koneswary. I live in Sidamparapillai Street, Akkaraipatru -7/1. I was born 0n16.07.1963. My mother’s name is Thangapillai. My father’s name is Vannamani. My father is a farmer who looked after the family with the income he received from cultivation. There are seven members in my family. There are five females including me and 2 males. As there are many members in the family, my father’s income was not enough to look after the family. My mother also sold paddy and I also helped her in her work.
We didn’t have facilities to study as our family lived in hardship. My parents married me to Podi mathaya in 1985. I lived with my new family and a new life. My husband worked as a driver in a private bus. We lived happily. My eldest son was born after two years. After that a son and a daughter. I had three children.
All five of us lived happily . The elder son was five years old and younger one was 3 years old and the youngest girls was 6 months old. On the 2nd of June 1992 when my husband was driving to pothuvil, near 60th mile post, near Etham, unidentified persons got into the bus and cut him down.
My family went upside down. I couldn’t bear the loss of my husband. My family situation turned bad. I was so distraught. I cried a lot and I didn’t know whether to live or die. My relations didn’t help. We didn’t have food to eat. I suffered with my children. Others help me by giving rice and dried rations. I used to cook and give my children.
I lost my peace thinking about how to raise my children. I thought I should do something about it and I took strength in my belief. I started selling hoppers and there was little income with this I brought up my children.
I expanded my business little by little . I got up early in the morning and completed my work. My income increased a little. The time came to send my children to school. I sent them to school without any assistance from anybody. I faced a lot of difficulties. I alone did all the work and looked after my family.
My children studied up to grade 8 and 11, I didn’t have the facility to educate them further. My father and mother also lived with me. When I was preparing to make hoppers early one morning, my neighbours told me the army was coming. My father shut the door and hearing that noise the army shot towards my house thinking that someone was hiding. I was shot in my leg. We shouted. I was taken to the hospital and from there to Batticaloa hospital.
I was there for a month. My family situation turned bad. There was no income and it was difficult to feed the family. My mother and sister took over my job and also made curd and sold it and looked after me.
I took over the job after I was cured. My sons found jobs and without assisting me, got married and went separately. I wanted to give my daughter a good life and faced many difficulties but I couldn’t build a house for her.
I married her off to my husband’s relation in 2009. I saved little by little and with the help of my son-in-law finished the house. He took care of the family well. My father died. My mother and I lived with my daughter. We constructed a shop with the saving that I had and with a loan. Through the business in the shop, I earned 4000/= . I didn’t stop making hoppers. I pay off my loan with the two jobs that I have. My family hardships have reduced a lot. I think nobody face the same situation that I had.
When I lived with my mother, I learned all the work, so when my family was in difficulty, I was able to bear that burden. I was able to raise my children. Now I am happy and contended with my grand children






වයස 53

මගේ පවුලේ කතාව

මගේ නම කොනේෂ්වරී. මම සිදම්බරපිල්ෙලෙ වීÈ අක්කරෙයිපත්තු 7/1 ලිපිනයේ පÈංචිව සිටිමි. මම 1960-07-16 Èන ඉපදූනෙමි. මගේ මවගේ නම තංගප්පිල්ෙලෙ. පියා වන්නමනී. මගේ පියා සාමාන්‍ය ගොවියෙක්. ගොවිතැන් කිරීමෙන් ලැබුන මුදලෙන් පවුල රැක බලා ගත්තා. පවුලේ සාමාðකයන් 7 දෙනායි. මා ඇතුලූව ගැහැණු අය 5 දෙනායි. පිරිමි දෙදෙනායි. පවුලේ සාමාðකයන්ගේ සංඛ්‍යාව වැඩි නිසා පියාගේ ආදායම ප්‍රමාණවත් වුයේ නැත. ඒ නිසා මගේ මව නිවසේ වී කොටා හාල් විකිණීම වැනි ආදායම් මාර්ගවලට උපරිම සහාය ලබා දූන්නා. මමද මවත් සමඟ එකතුවී ඒ වැඩවලට උදව් වූයෙමි.

අපේ පවුල දූප්පත් පවුලක් නිසා අධ්‍යාපනය ලබා ගැනීමට තරම් අවශ්‍ය පහසුකම් අවස්ථාවක් අපට ලැබුනේ නැත. මෙලෙස අපේ පවුලේ ජීවිතය ගෙන යාමේ§ 1985 § උගඵග පොඩි මහත්තයා යන පුද්ගලයාට මා විවාහ කර දූන්නේය. අලූත් පවුලක් අලූත් ජීවිතයක් යැයි මාද මේ ජීවිතය පටන් ගත්තෙමි. සැමියා පෞද්ගලක බස් රියදූරෙක් ලෙස සේවය කළා. පවුල ගොඩාක් සතුටින් ජීවිතය ගත කළා. විවාහවී අවුරුදූ දෙකෙන් පසුව මට මගේ පළමු දරුවා ඉපදුනා. ඔහු පුතෙක්. ඔහුට පසුව තව පුතෙක් ඔහුට පසුව තව දූවෙක් ලෙස දරුවන් තුන් දෙනෙකුගේ මවක් උනෙමි. දරුවන් තුන්දෙනා මගේ සැමියා මම ඇතුලූව පස්දෙනාම සතුටින් ජීවත් වූයෙමු. එකමුතුව ජීවත් වූයෙමු. පළමු දරුවාගේ වයස අවුරුදූ 5 යි. දෙවෙනි දරුවාට වයස අවුරුදූ 3 යි. තුන්වෙනි දරුවාට වයස අවුරුදූ මාස 6 යි. මේ තත්ත්වයේ§ 1992 § හයවැනි මාසයේ 2 වැනි Èනයේ§ අක්කරෙයිපත්තුවේ සිට පොතුවිල් යන අතර මඟ (බසය රැගෙන යාමේ§- 60 කනුව ඒත්තම යන තැනෙහි ගමන අවහිර කර නොඅඳූරන පිරිසක් විසින් කපා කොටා ඝාතනය කරන ල§.

මගේ පවුලේ තත්ත්වය සහමුලින්ම වෙනස් විය. මගේ සැමියාගේ ජීවිතය අහිමිවීම මට දරා ගත නොහැකි විය. පවුලේ තත්ත්වය නරක අතට හැරුනි. කුමක් කළ හැකිද කියා අ~ අ~ා ජීවත් වන්නද නැතහොත් මැරෙන්නද කියා හිතාගෙන නොහැකි විය. නෑදෑයනුත් මට උදව්වීමට ඉÈරිපත් වූයේ නැත. කෑම වේලක්වත් නැතිව ළමයින් තියාගෙන දූක් වින්දෙමි. නෑදෑයින් නැති වෙනත් අහල පහළ අය මට හාල්" කෑම වැනි බඩු ගෙනවිත් දූන්නේය. ඒ දේවලින් ළමුන්ගේ කුසගින්නද නිවා මාද කෑම කන්නෙමු.

කුමක් කරන්නද යැයි හිතා ගත නොහැකිව ළමුන් තිදෙනා කෙසේ ඇති දැඩි කරන්නද යැයි සිතා ගත නොහැකිව මම මානසික පීඩනයට ලක් උනෙමි. පසුව කල්පනා කර ළමුන් තුන්දෙනාව ඇති දැඩි කළ යුතුයි. ඒ දරුවන්ව හොඳ තත්ත්වයට ගෙන ආ යු=තුයි. මම තමයි මේ දේ කළ යුත්තේ යැයි අධිෂ්ඨාන කරගෙන හිතේ ධෛර්්‍යයක් ඇති කරගෙන මට හොඳට කළ හැකි ආප්ප හදා විකිණීමේ රැකියාව පටන් ගත්තෙමි. මෙයන් සු¿ ආදායමක් ලැබුනි. මේ ආදායමෙන් දරුවන්ගේ කුසගින්න නිවා ඇති දැඩි කළෙමි.

පසුව ඒ රැකියාවම හොඳ විශ්වාසයකින් යුතුව වැඩිදූර කරන්නට පටන් ගත්තෙමි. උදේ පාන්දර නැගිට එළිය වැටෙන්නට කලින් වැඩ සේරම කර නිම කරන්නෙමි. මෙලෙස ආදායම සු¿ වශයෙන් වැඩිවිය. ළමයි පාසල් යන වයසට පැමිණීමෙන් මේ ආදායමෙන් ළමයින් පාසලට යැවිවෙමි. මට කිසිදූ උදව්වක් නැත. අධික ලෙස මහන්සි වුනෙමි. ළමයින්වත් රැකියාවත් දෙකම කරගෙන යෑමේ§ ඉතා වෙහෙසට පත් වුනෙමි. මට මමම අනුකම්පා කරගෙන පවුල නඩත්තු කළෙමි. මගේ ගෙදරට වෙඩි තිබ්බේය. ඒ වෙලාවේ මගේ කකුලට වෙඩි වැදූනි. අපි කෑගැසුවෙමු. පසුව මාව රෝහලට ගෙන ගොස් මෙහෙ වෛද්‍යවරයා හමුවීමට නොහැකිවූ නිසා මඩකලපුවට ගෙන ගියහ. එහෙ මාසයක් සිටියෙමි. මේ නිසා පවුල ඉතා අමාරු තත්ත්වය යළි පත්විය. ආදායමක් නැතිව කෑමට පවා අමාරු තත්ත්වයක් ඇතිවිය. මේ තත්ත්වය බැලු මගේ මවයි සහෝදරියයි මගේ රැකියාවම ආපහු කර මගේ පවුලයි මාවයි බලා ගත්හ.

රෝහලෙන් පැමිණ මාස දෙකක් මට කිසිවක් කළ නොහැකි විය. මගේ අසනීපය හොඳ තත්ත්වයට පැමිණීමෙන් පසුව ආපහු මගේ රැකියාව පටන් ගත්තෙමි. පවුලේ වගකීම දැරුවෙමි. මේ තත්ත්වයේ මගේ පිරිමි දරුවන් දෙදෙනාම තමන්ට රැකියාවක් සොයා ගෙන අමාරුවෙන් හදා වඩා ගත් මට නොසලකා කසාදයක් කරගෙන ගියහ. ඔවුන්ගේ පවුල බලා ගත්තේය. මම මගේ ගැහැණු දරුවාට විවාහයක් කර§මට ගොඩාක් මහන්සි උනෙමි.

මෙලෙස ජීවත්වීෙමි§ මගේ සැමියාගේ නෑදෑයින් තම පුතාට මගේ දූවව විවාහ කර§මට යෝජනාවක් කළේය. ඒ යෝජනාව කථා කර දූවට 2009 § විවාහයක් කර දූන්නෙමු. පසුව ටික ටික එකතු කර බෑනාගේ උදව්වෙන් නිවසක් තනා නිම කළෙමි. බෑනා අපේ පවුල හොඳට රැක බලා ගන්නවා. මගේ පියාත් නැති වුනා. මමත් මගේ අම්මාත් දූවත් එක්කම එකට වාසය කරමු. ඉතුරු කළ මු¿ මුදලත් සමඟ ණයක් අරගෙන කඩයක් හදා සු¿ ව්‍යාපාරයක් පටන් ගත්තෙමි. දැනට එම කඩයෙන් Èනකට රුපියල් 4000 ක ආදායමක් ලැබෙයි. ආප්ප හදන එකත් අපි නතර කලේ නැත. මේ ස්වයං රැකියා දෙකෙන්ම ලැබෙන ලාභයෙන් ණය ගෙවන්නෙමි. දැනට මගේ පවුල් බර අඩුවී ඇත. සැනසීමෙන් ජීවත් වෙමු. පසුගිය කාලවල මම වින්ද දූක් කරදර වෙන කිසිවෙකුටත් ඇති නොවිය යුතුයි.

අම්මාත් එක්ක ගෙදර හිටපු කාලයේම අම්මට උදව්වී වැඩ කටයුතු කළ නිසා එයින් හොඳ අත්දැකීමක් ලැබුන නිසා මගේ පවුලට උදව්වීමට කිසිදූ කෙනෙක් නැති වුවත් ඒ අමාරුකම මට දරා ගැනීමට හැකි වුනා. ඒ නිසා මගේ දරුවන්ව හදා උස්් මහත් කර හොඳ තත්ත්වයට ගෙන ඒමට හැකි වුනා. දැන් මානසිකව හොඳ සැනසීමෙන් සතුටින් මුණුබුරන් සමඟ වෙසෙමි.







CMP/AMP/ALA/AKK/02

எனது குடும்ப கதை

வயது 53

எனது பெயர் கோணேஸ்வரி நான் சிதம்பரப் பிள்ளை வீதி அக்கரைப்பற்று 7.1 எனும் விலாசத்தில் வசித்து வருகிறேன். நான் 1963.07.16ம் திகதி பிறந்தேன். எனது தாயின் பெயர் தங்கப்பிள்ளை தந்தை வன்னமணி ஆகும். எனது தகப்பன் ஒரு சாதாரண விவசாயி. விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை பராமரித்தார். குடும்பத்தில் மொத்தம் 7 பிள்ளைகள் நான் உட்பட 5 பெண்களும் 2 ஆணும் ஆகும். குடும்பத்தில் அங்கத்தவர்கள் அதிகம் என்பதால் தந்தையின் வருமானம் போதுமானதாக இல்லை. ஆகவே எனது தாயார் வீட்டில் நெல் குற்றி வருமானத்திற்கு பாடுபட்டார் நானும் அவருடன் இணைந்து வேலைகளைச் செய்தேன்.

குடும்பம் கஷ்டமான நிலை என்பதனால் கல்வி கற்பதற்கு உரிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவ்வாறு எனது குடும்பம் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் 1985ம் ஆண்டு ஜி.எம் பொடிமாத்தயா என்பவரை எனது பெற்றோர் எனக்குத் திருமணம் முடித்து வைத்தனர். புதிய குடும்பம், புதிய வாழ்க்கை என வாழத் தொடங்கினேன். கணவர் தனியார் பஸ் சாரதியாக பணி புரிந்தார். குடும்பம் மிகவும் சந்தோசமாக போனது. இரண்டு வருடங்களின் பின் மூத்த மகன் பிறந்தான். அவருக்கு பிறகு ஒருமகன் ஒருமகள் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

மூன்று பிள்ளைகள் எனது கணவன் நான் ஐந்து பேரும் மிகவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தோம். மூத்த மகன் 5 வயது இளையவன் 3 வயது. கடைசி பெண் பிள்ளை 6 மாதம். இந்நிலையில் 1992ம் ஆண்டு 6ம் மாதம் 2ம் திகதியன்று அக்கரைப்பற்று இருந்து பொத்துவில் செல்லும் வழியில் (பஸ் ஒட்டும் போது) 60ம் கட்டை ஏத்தம் எனும் இடத்தில் பஸ்ஸை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

எனது குடும்பம் நிலை குலைந்து போனது. எனது கணவனின் இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குடும்பத்தின் நிலை மிகவும் சோகமான நிலைக்குத் தள்ளப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் அழுது அழுது வாழ்வதா சாவதா என்று விளங்காமல் தவித்தேன். சொந்தங்களும் எனக்கு உதவுவதற்கு முன்வரவில்லை. சாப்பாடும் இல்லாமல் பிள்ளைகளை வைத்து கஷ்டப்பட்டேன். சொந்தமில்லாதவர்கள் ஒரு சிலர் எனக்கு அரிசி, வேறுசாப்பாட்டு பொருள் தருவார்கள். அதை சமைத்து பிள்ளைகளுக்கும் கொடுத்துசாப்பிடுவேன்.

என்ன செய்வதென்று தெரியவில்லை, எப்படி பிள்ளைகளைக் கரை சேர்ப்பேன் என்றும் தெரியவில்லை. யோசித்து யோசித்து எனது நிம்மதியையும் இழந்து விட்டேன்.

பின்பு யோசித்தேன் பிள்ளை வளர்க்க வேண்டும். நல்ல நிலைக்கு சேர்க்க வேண்டும் நான் தான் இதைச் செய்ய வேண்டும். என்று மனதில் தைரியத்தை வரவைத்து எனக்கு மிகவும் தெரிந்த அப்பம் சுட்டு விற்கும் தொழிலை ஆரம்பித்தேன்.இதில் ஓரளவு சிறிய வருமானம் கிடைக்கத் தொடங்கியது. இதனைக் கொண்டு பிள்ளைகளின் சாப்பாட்டைச் சமாளித்து வளர்த்து வந்தேன்.

பின் அத்தொழிலையே விடாமுயற்சியுடன் கொஞ்சம் அதிகமாகச் செய்யத் தொடங்கினேன். அதிகாலையில் எழுந்து விடியுமுன் வேலைகளை முடித்துவிடுவேன். இதன் மூலம் வருமானமும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தது. பிள்ளைகளும் பள்ளிக்கூடம் செல்லும் வயது வந்து விட்டது. கிடைக்கும் வருமானத்துக்குள் அவர்களை பாடசாலைக்கும் அனுப்பிப் படிக்க வைத்தேன். எனக்கு ஒரு உதவியும் இல்லை. கடும் கஷ்டப்படுவேன். தனி ஆளாக வேலையும் பிரச்சினைகளையும் சமாளிக்க எனக்கு நானே ஆறுதல் சொல்லிவிட்டு குடும்பத்தை பராமரித்து வநதேன்.

எனது பிள்ளைகள் மூவரையும் பெரிய அளவில் படிப்பிக்க இல்லை. என்றாலும் எனது வசதிக்கேற்றாற்போல 8-11 வரையும் படிக்க வைத்தேன். இவ்வாறான நிலையில் எனது அப்பா அம்மா இருவரும் என்னுடனே இருந்தனர். ஒருநாள் அதிகாலை எழுந்து அப்பம் சுடுவதற்கு தயாராகி கொண்டு இருக்கும் போது ராணுவம் சுட்டு வருவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறினார்கள். அதனைக் கேட்ட எனது அப்பா கதவை அடைத்தார். கதவு அடைப்பட்ட சத்தம் கேட்டதும், ராணுவம் வீட்டுக்குள் யாரோ ஒழிந்து இருக்கின்றனர் என்று எனது வீட்டை நோக்கி சுடத் தொடங்கினர். சுட்ட நேரம் எனது காலில் வெடிபட்டது. நாங்கள் கத்தினோம். பிறகு என்னை இங்கு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்று இங்கு வைத்தியம் பார்க்க முடியாமல் மட்டக்களப்பிற்கு அனுப்பி விட்டார்கள்.

அங்கு 1 மாத காலம் இருக்க வேண்டி வந்தது (வைத்தியம் செய்ய) இந்நிலையில் குடும்பம் மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. வருமானம் இல்லை. சாப்பாட்டுக்கும் கஷ்டம் திரும்பவும் வந்து விட்டது. இதனை பார்த்த எனது தாயும் தங்கையும் நான் செய்த தொழிலையும் அதோடு தயிர் போட்டும் விற்று எனது குடும்பத்தையும் என்னையும் பராமரித்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து வந்து 2 மாதம் வரை என்னால் வேலைகள் செய்ய முடியாமல் உடல் வருத்தமாக இருந்தது. பின்பு எனது உடல் நிலை சரிவந்ததன் பின் பழைய மாதிரி எனது தொழிலை தொடங்கினேன். குடும்பம் பொறுப்பையும் ஏற்று சமாளித்து வந்தேன். இந்நிலையில் எனது இரு மகன்மாரும் தமக்கென தொழிலைத் தேடினர். ஆனால் கஷ்டப்பட்டு வளர்த்த எனக்கு உழைத்து வருமானம் பெற்றுத் தராமலே திருமணம் செய்து போய்விட்டனர். தங்களது குடும்பத்தை பராமரித்தனர். நான் எனது பெண் பிள்ளைக்கு ஒருவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். வீடுகட்டி முடிக்க இயலவில்லை.

இவ்வாறு வாழும் காலகட்டத்தில் எனது கணவரின் உறவுக்காரரின் மகனை எனது மகளுக்கு பேசி 2009ம் ஆண்டு திருமணம் செய்துவைத்தோம். பின் சிறிது சிறிதாகச் சேர்த்து மருமகனின் உதவியோடு வீடும் கட்டி முடித்தேன். மருமகன் குடும்பத்தை நல்ல முறையாக கவனித்தார். எனது தந்தை இறந்து விட்டார். நானும் எனது தாயும் மகளுடனேயே இருக்கின்றோம். பிற்பாடு கொஞ்சம் சேர்த்து வைத்த காசுடன் கடனும் வாங்கி கடை ஒன்றை கட்டி வியாபாரமும் தொடங்கினேன்.

அக்கடையின் மூலம் ஒருநாளைக்கு ரூ 4000 வருமானம் கிடைக்கின்றது. அப்பம் சுடுவதையும் நிறுத்தவில்லை. இரண்டுதொழில் மூலமும் பெறும் இலாபத்தை கடன் செலுத்தி வருகிறேன். தற்போது எனது குடும்ப கஷ்டம், பாரம் எல்லாம் குறைந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறேன். கடந்த காலம் நான் பட்ட கஷ்டம் யாரும் படக் கூடாது என எண்ணுகிறேன்.

தாயுடன் இருந்த காலங்களில் அவருடன் சேர்ந்து வேலைகள் செய்து கற்றுக் கொண்டதால் தான் என்னுடைய குடும்பம் ஆதரவில்லாமல் இருந்த போது அதனை நானே சுமந்து தாங்கினேன். இதனால் எனதுபிள்ளைகளை பராமரித்து வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கென ஒரு நிலையை உருவாக்கி விட்டேன். தற்போது மன ஆறுதலுடன் திருப்தியாக சந்தோசமாக பேரப்பிள்ளைகளுடன் இருக்கின்றேன்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License