The frightened mother searched for the son...

A lady from Batugoda speaks of her experience of trying to find her neighbour's abuducted son


බියට පත් අම්මා පුතා සොයා ගියා

බටුගොඩ ප්‍රදේශයේ කාන්තාවක් තම අසල්වැසියකුගේ පැහරගත් පුතා සොයා ගැනීමට ගිය ඇගේ අත්දකීම ගැන කතා කරයි


அவளுடைய மகனை தேடுகிறாள்

அயலவரின் மகன் கடத்தப்பட்ட சம்பவமொன்றை தாயொருவர் கூறுகிறார்.In my neighboring house, there was a mother and her son. They were my relations. The son is an innocent person who earned from farming and selling vegetables. Other siblings lived in Colombo. In the day when this happened, he plucked vegetables and went to town in the morning, but he didn’t come back in the evening. Youths were killed here and there at this time, so mother went searching for him but she didn’t meet him. One person who had witnessed the incident has told mother that he was taken by a jeep. This mother came home and cried aloud. After hearing her cry, I ran to their house. Her elder daughter had come home but she didn’t come to search him. I told mother that I will search him, consoled her and went to the police with a neighbor. When we asked from the police about him, they told that they didn’t bring such a person.
Again we went by foot to Kiyanduwa and Henagama army camps and searched for him. They told there is no such a person. At that time, I told them that this person has not joined any such projects and he is an abnormal innocent person and an innocent boy who helps his mother. But I understood that he was kept in that army camp. I came home and went to the temple with the mother and after offering flowers we tied a coin in the Devalaya. Again we went to the camp by foot. That mother fell in front of the army officer and cried a lot. Again I told them that the mother will not survive without the son. Told to give the boy. After one hour, an officer came and told me to go home with the mother and they will send the son home. When we came home, the boy was left at home. That mother was so happy. The boy was looking down shyly because he couldn’t look at me, because he was not in good mood with me. He thanked me for helping him although he had lot of siblings and relations. I don’t need positions and respects. I have a heart of helping people who are helpless.
The following day, I went to the temple with the mother and son and released my wow. This is an unforgettable event. How many young lives were lost who had no connection with any organization? Such unfortunate things should never happen in this country. May peace and unity dawned! Nothing can be achieved by hatred but from kindness.
Be kind to all living beings.


අම්මා සහ පුතා පමණි. ඔවුන් මාගේ ඥාතීන්ය. ඒම පුතා ඒළවලු වගා කර ඒහි ආදායමෙන් ජීවත් වන අහිංසක තරුණෙයකි. අනිත් සහෝදරයන් කොළඹ ප්‍රදේශයේ ජීවත් වෙයි.

මේ සිද්ධිය සිදු වූ දින උදේ සුපුරුදු පරිදි ඒළවලු කඩාගෙන පොළට ගියත් මෙදින ඔහු ගෙදර පැමිණීයේ නැත. මේ දින වල තැනින් තැන තරුණයන් මරා දමා තිබෙන නිසා බියට පත් අම්මා පුතා සොයා ගියත් පුතා හමුවුනේ නැත. ජීප් රථයක දමා ගෙන ගිය බව ඇසින් දුටු අයෙකු මේ මවට පවසා ඇත. මේ අම්මා ගෙදර පැමිණ විලාප තබමින් අඩන්නට පටන් ගත්තා. විලාප හඩ ඇසී මමද ඒහි දුව ගියෙමි. ඒ අම්මාගේ වැඩිමහල් දියණිය ඒහි පැමිණ සිටියත් ඇය තම සොයුරා සොයා යාමට පැමිණියේ නැත. ඒ අම්මාගේ විලාප හඩ නිසා මා ඔහු සොයා ගෙන ඒන බව පවසා ඒ අම්මා සන්සුන් කර අසල්වැසියෙකු සමග ඔහු සොයා පළමුව පොලීසිය වෙත පැමිණියා. පොලිසියෙන් ඔහු ගැන විමසද්දී ඒවැනි අයෙකු ඒහි ගෙන ආවේ නැති බව පැවසීය.

ඉන් පසු නැවතත් පයින්ම කියාඩුව හේනෙ ගම හමුදා කදවුරු වලට ගොස් සොයා බැලුවත් ඒවායේද නැති බව ඒම නිලධාරින් පැවසූහ. මා විසින් ඒම අවස්ථාවේ ඔවුන්ට කියා සිටියේ මේ ළමයා ඔය කියන ව්‍යාපාර වලට සම්බන්ධ නැති බවත් මානසික ලෙඩකින් පසුවන අහිංසක තරුණයෙකු බවත් අම්මාට උදව් කරන අහිංසකයෙකු බවයි. නමුත් මට තේරුම් ගියා ඒ හමුදා කදවුරේ ඔහු රදවාගෙන ඇති බව. මා නැවතත් නිවසට පැමිණ ඒම අම්මා සමග විහාරයට ගොස් මල් පහන් පූජා කර පඩුරක් දේවාලයේ ගැට ගසා නැවතත් අම්මා සමග පයින්ම හමුදා කදවුරට ගියා. ඒ අම්මා හමුදා නිලධාරීන්ගේ දෙපතුල ලග වැටී හඩන්නට පටන් ගත්තා. මා නැවතත් ඔවුන්ට කියා සිටියේ මේ අම්මා පුතා නැතුව ජීවත් වෙන ඒකක් නැහැ. ඒ ළමයා දෙන්න කියාය. ඉන් පැයකට පමණ පසු නිලධාරියෙකු පැමිණ කීවා අම්මත් සමග ගෙදර යන්න ඒ ළමයා ගෙදර ඒවන්නම් කියා. අම්මා සමග මා ගෙදර ඒන විට ඒ අම්මාගේ පුතා ගෙදරට දමා ගොස් තිබුණි. ඒ අම්මාට ඇති වූ සතුට කියා නිම කිරීමට නොහැක. ඒ පුතාට නම් මගේ මුහුණ බැලීමට ලැජ්ජා නිසා බිම බලාගෙන සිටියේය. එනම් ඔහු අප සමග තරහින් සිටි අපට කරදර කල කෙනෙකි. කෙතරම් නෑදෑයින් සහෝදරයන් සිටියත් අන්තිමට පිහිට වූ මා හට ස්තූති කළේය. මා හට ස්තූති, තාන්න, මාන්න අවශ්‍ය නැත. මා තුල ඇත්තේ අසරණ වූ අයට පිහිට වන හදවතකි.

මා පසුවදා ඒ අම්මා සහ පුතා සමග විහාරයට ගොස් මල් පහන් පූජා කර තෙරුවන් වැද මා විසින් භාර වූ ඇපය නිදහස් කළේය. මා හට ජිවිතයේ අමතක නොවන සිද්ධියකි. කිසිම සංවිධානයකට සම්බන්ධ නැති අහිංසක තරුණ ජිවිත කීයක් නැති වී ගියාද ? මෙවැනි අවාසනාවන්ත සිද්ධීන් අප රටට සිදු නොවේවා. මෛත්‍රියෙන් හැර වෛරයෙන් ක්‍රෝධයෙන් ලගා කර ගත හැකි දෙයක් නැත.
සියලු සත්වයන්ට මෛත්‍රී කරන්න.


எனது வீட்டுக்குக் கீழ்வீட்டில் ஒரு அம்மாவும் மகனும் இருந்தார்கள். அவர்கள் என் சொந்தக்காரர்கள். அந்த மகன் மரக்கறித் தோட்டம் செய்து கிடைக்கும் வருமானத்திலேயே வாழ்க்கை நடாத்தும் அப்பாவி இளைஞனாகும். மற்றொரு சகோதரன் கொழும்பு பிரதேசத்தில் வாழ்கிறார்.
இந்தச் சம்பவம் நடந்த அன்றைய நாள் காலையிலேயே வழக்கம் போல காய்கறிகளைப் பறித்துக்கொண்டு சந்தைக்குப் போனாலும் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நாட்களில் ஒவ்வொரு இடங்களிலும் இளைஞர்களைக் கொன்று போடுவதால், பயந்த அவரின் அம்மா மகனைத் தேடிச் சென்று போனாலும் மகன் கிடைக்கவில்லை. ஜீப் வண்டியில் போட்டுக்கொண்டு போனதாகக் கண்ணால் கண்ட சிலர் இந்த அம்மாவிடம் சொல்லியிருக்கிறார்கள். இந்த அம்மா வீட்டுக்கு வந்து கத்திக் கதறி அழுவதற்குத் தொடங்கினாள். அக்கதறலைக் கேட்டு நானும் அங்கே ஓடிச் சென்றேன். அந்த அம்மாவின் மூத்த மகளும் அங்கே வந்திருந்தாலும் அவள் தனது சகோதரனைத் தேடிச் செல்ல வரவில்லை. அந்த அம்மாவின் கதறல் சத்தத்தால் அவள் தேடிக்கொண்டு வருவதாகச் சொல்லி அந்த அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டுப் பக்கத்து வீட்டாருடன் அவரைத் தேடி முதலாவதாகப் பொலிஸிற்குச் சென்றோம். பொலிஸில் அவரைப்பற்றி விசாரித்த பொழுது அதுபோன்ற நபரை இங்கே கொண்டு வரவில்லை என்று சொன்னார்கள்.
அதன்பிறகு மீண்டும் நடந்தே கியாம்புவ ஹோமாகம இராணுவ முகாமிற்குச் சென்று தேடிப்பார்த்தாலும் அங்கேயும் இலலையென்றே அங்குள்ள அதிகாரிகள் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் அவர்களுக்கு இந்தப் பையன் நீங்கள் சொல்லும் இந்த இயக்கங்களுடன் தொடர்பு உள்ளவர் இல்லையென்றும், மன நோயால் பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞன் என்றும், அம்மாவிற்கு உதவி செய்யும் அப்பாவி என்றும் சொன்னேன். ஆனால், அந்த இராணுவ முகாமில் தான் இவரைத் தடுத்து வைத்திருப்பார்கள் என எனக்கு விளங்கியது. நான் மீண்டும் வீட்டுக்கு வந்து அந்த அம்மாவுடன் விகாரைக்குச் சென்று பூக்கள், விளக்கு வைத்துப் பூஜை செய்து காணிக்கை ஒன்றைக் கோயிலில் கட்டிவிட்டு மீண்டும் அம்மாவுடன் இராணுவ முகாமிற்குச் சென்றோம். அந்த அம்மா இராணுவ அதிகாரியின் காலில் விழுந்து அழுவதற்குத் தொடங்கிவிட்டார்.
நான் மீண்டும் இந்த அம்மா மகன் இல்லாமல் உயிர் வாழமாட்டார். அந்த மகனை இவரிடம் கொடுத்துவிடுங்கள் என்றேன். பின் ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் ஒரு உத்தியோகத்தர் வந்து அம்மாவுடன் வீட்டுக்குச் செல்லுங்கள். அந்தப் பையனை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொன்னார். அம்மாவுடன் நான் வீட்டுக்கு வரும்பொழுது அந்த அம்மாவின் பையனை வீட்டில் விட்டுவிட்டுப் போயிருந்தார்கள். அந்த அம்மாவிற்கு அப்போது ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்லி முடிக்க முடியாது. அந்த மகனுக்கு என் முகத்தைப் பார்ப்பதற்கு வெட்கம் என்பதால் கீழே பார்த்துக்கொண்டிருந்தான். ஏனென்றால், அவன் எங்களுடன் கோபமாகவும், எங்களுக்குப் பிரச்சினைகளைக் கொடுத்ததாலும் ஆகும். எவ்வளவு சொந்தங்கள், சகோதரங்கள் இருந்தாலும் கடைசிவரை இருந்த எனக்கு நன்றி சொன்னார்கள். எனக்கு நன்றியோ, பட்டம் பதவியோ தேவையில்லை. என்னுள் இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் இதயமாகும்.
நான் மறுநாள் அந்த அம்மாவுடன் மகனையும் கூட்டிக்கொண்டு விகாரைக்குச் சென்று பூக்கள், விளக்கு வைத்துப் பூஜை செய்து கடவுளை வணங்கி என்னால் வைக்கப்பட்ட நோ்த்தியை நிறைவேற்றினேன். எனக்கு இது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். எந்த ஒரு இயக்கத்திற்கும் தொடர்பில்லாத அப்பாவி இளைஞர்கள் எத்தனை போ் இல்லாமல் போயிருப்பார்கள். இதுபோன்ற துரதிஷ்டமான சம்பவங்கள் எமது நாட்டில் இனிமேலும் நடைபெறவே கூடாது. சமாதானம், ஒற்றுமை நிகழட்டும். கருணையினால் அன்றி குரோதத்தால் பெற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. அனைத்து உயிர்களுக்கும் கருணை காட்டுங்கள்.

A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License