A family destroyed because of the conflict

The story of a family that lost their lives due to the terror of armed Tamil groups


බිහිසුණු යුද්ධයට බිලි වුනු පවුලක්

යුධ සමයේදී දමිළ සන්නද්ධ කන්ඩායම් වල භීෂණයෙන් ජීවිත අහිමිවූ අතුරුදහන් වූ පවුලක කතාව විස්තර කරයි.


போர்ச்சூழலில் வெறிதாகிப் போன ஒரு குடும்பத்தின் கதை

இக்கதையானது யுத்த காலங்களில் தமிழ் ஆயுதக்குழுக்கிடையில் இடம்பெற்ற சகோதர படுகொலைகளினால் அழிந்து போன குடும்பத்தை பற்றி கூறுகின்றது.CMP/AMP/KAL/KAL/O1

This is a true story and nothing but the truth.
A story of a family during the war

Kanapathypillai was a popular trader in the 70s in Kalmunai. He was a widower. He has six girls from the 2nd marriage and a girl from the first. He had lot of wealth to marry off his daughters with houses and land. The last son was Kirubaraja. Kanapathypillai died without seeing his third daughter’s wedding. The youngsters were led to join terrorists group in 1990. But Kirubaraja without spending his time on his studies joined PLOT.
His involvement was only known when he was shot by the Tigers at the Pandiruppu temple festival on 23.08.1998. His sister’s son Ranjan was also killed. There's even poetry published about the funeral.

Kirubaraja’s 4th sister’s husband was a grama sevaka and was a Tiger supporter. Even gave his house for the Tigers but he couldn’t save Kirubaraja. He was also shot by the armed group opposing the Tigers. He was shot in front of his adopted son and wife. His son couldn’t bare his death. He publicly began to condemn the armed group. He was kidnapped during a temple festival on 31.08.2007 and his whereabout are not known up to now. His adopted mother lost her son and her husband fell sick with diabetes. She lost all her wealth on her treatment and finally, died. When she was alive she searched for her son to no avail.
The house stands empty. You can still hear their cries and tears.
P.Ganeshan
Kalmunai

• ත්‍රස්තවාදය
• ම්නිස් ඝාතනය’

මෙය කතාවක් නොව සැබෑවක්’ යුද්ධමය වාතාවරණය නිසා සුනුවිසුණු වී ගිය පවුලක කතාවක්’ ( නමි පමණක් උප කල්පනය-

හත්තෑ ගණන්වල කනපතිපිල්ලේ නැමැත්තා කල්මුණේ ප්‍රදේශයේ ප්‍රසිද්ධ වෙළඳ ව්‍යාපාරිකයෙක්’ භාර්යාව ම්ය ගියාට පසු අනත් පුරුෂයෙකු වන මොහුගේ දෙවන භාර්යාවට ගැහැණු දරුවන් හය දෙනෙකු සිටියා’ කලින් භාර්යාවට එක් ගැහැණු දරුවෙකු සිටියා’ ගැහැණු දරුවන් සියල්ලටම ගෙවල් දොරවල් ඉඩකඩමි ලබාදී විවාහ කර දීමට තරමි දේපල තිබුණා’ මොහුට අවසානයට ඉපදුණු එකම පිරිම් දරුවා කිරුබෙයිරාජා නැමැති අය’ කනපතිපිල්ලේ තමන්ගෙ තුන්වැනි ගැහැණු දරුවාගේ විවාහය බලන්නෙ නැතුවම මරණයට පත්වුණා’ අනූ ගණන්වල දෙමළ ත්‍රස්තවාදය උග්‍රවී තරුණයින්ව එවැනි ත්‍රස්තවාදී ව්‍යාපාර සඳහා ඇදගෙන යන වාතාවරණයක් මත සුරතලේට හැදණුූ කිරුබෙයි රාජා අධ්‍යාපනය අතහැර ඡඛධඔ නැමැති ත්‍රස්තවාදී ව්‍යාපාරයකට බැඳී කි්‍රයා කරම්න් සිටිය දී" කොටි සංවිධානය විසින් පාන්ඞ්රුප්පු කොවිල් උත්සවයේ දී" 1988’08’23 දින ඔහුව ඝාතනය කිරීමෙන් පසුව තමයි දැනගන්න ලැබුණෙ රංජන් යන නම්න් හැඳින්වෙන කිරුබෙයිරාජා ගේ පුංචි අමිමාගේ පුතාවත් කොටි සංවිධානය විසින් පැහැරගෙන ගොස් මෙසේ මරා දමා තිබෙනවා කියා’ කිරුබෙයි - රංජන් හදිසි මරණවල අවසන් කටයුතු වලදී කවියක් පළකර තිබුණා’

මද සුළඟට මුසුවී
මා හදවතේ මුල් ඇදී පිපී තිබෙන රෝස කැකුලනි
කිරුබෙයි රංජා
තපසුන්ගේ සාපයට ගොදුරු වුණා නේද

පෙති පෙති ගලවා විසිකර දැමුවා
අහිංසකයන් ඔබව
මා ළඟ කොහෙද සාCෂි
දෙනෙතින් හැලෙන කඳz බිඳු හැර’

01- 02
කොයි යමි මලක් පොඞ් කළත් කඳුz හලන්නෙ මම
ඔබ ඇණ ගහපු කුරුසයක් ඉදිරියේ පමණක්
ගල් ගැසී සිටින්නේ කෙසේද@

විමුක්තියක් අපට අවශ්‍ය තමා
පිරිසිදු අත් වලින් ඔවුන් අපගේ දොරට තටිටු කරපුදෙන්’
මගේ හදවතේ මුල් ගලවා විසිකර දමා ලබාගත් විමුක්තිය
මොකටද අපට

පිස්සන් හපලා කාපුදෙන්’
වන ගතවීමට ඉඩ දෙනු ම්තුරනි
කුරුසයේ වැදිලා ඉරිගොස් තිබෙන
මගේ පුංචි මල් කැකැz වලට - මම
නැවත පණ දෙන්න ඔින’

මරා දැමූ කිරුබෙයිරාජගේ හතරවැනි අක්කගේ ස්වාම් පුරුෂයා ග්‍රාම නිලධාරි වරයෙක්’ කමලන් නැමැති ඔහු කොටි සංවිධානයට සහාය දුන්නා’ තමන්ගේ ගෙදරම කොටි සංවිධානයට නවතින්න ඉඩ දුන් කෙනෙක්’ එසේ කළත් කොතරමි උත්සාහයක් දරලත් තමන්ගේම මස්සිනාව බෙිරගන්න බැරිවුණා ඔහුට’ විවිධ සංවිධාන කි්‍රයාත්මකව තිබියදී කොටි සංවිධානයට පමණක් ගෙදර නවාතැන් දුන් ග්‍රාම නිලධාරිව කොටි සංවිධානයට විරුද්ධ තවත් සංවිධානයක් විසින් ඔහුගේ ගෙදරදීම වෙඞ් තබා මරා දැමුවා’ දරුවා" ඔහුගේ හදාගත්තු දරුවා රාමු සහ ඔහුගේ භාර්යාවගේ ඇස් ඉදිරි පිටදීම වෙඞ් තබා මරා දැමුවා’ කුඩා කාලයේ සිට පියෙකු ලෙස සුරතල් කර හදා වඩාගත් තමන්ගේ පියාව තම ඇස් ඉදිරිපිටදී වෙඞ් තබා මරා දැමු සිද්ධ්ය ඔහට දරාගන්නට නොහැකි වුණා’ එකී සන්නද්ධ කල්ලියේ නොහොබිනා කටයුතු පිළිබඳව ඔහු ප්‍රසිද්ධ්යේ විවෙිචනය කරන්න පටන්ගත්තා’ ඒ බව දැනගත් එම සන්නද්ධ කල්ලිය රාමුව ඉලක්ක කරම්න් සිට කෝවිල් උත්සවයේ දී 2007’08’31 දින පැහැරගෙන ගොස් අද දක්වා ඔහු ගැන ආරංචියක් නැති නිසා ඔහුව හදාගත්තු මව දුක්වෙිදනා විඳිම්න්

01- 03
තමන්ට උදවිවට සිටි එකම පුතාවත්" ස්වාම් පුරුෂයාවත් අහිම් කරගෙන" ඇයට කලින් සිටම තිබුණු දියවැඞ්යා රෝගය දරුණු වී වකුගඩුව නරක් වී ලCෂ ගණන් දේපල විකුණා ප්‍රතිකාර කරලත් සුව කිරීමට නොහැකි තත්ත්වයක් මත ඇය ම්ය ගියා’ ඇය ජීවතුන් අතර සිටියදී තමාගේ පුතාව සොයා ගැනීමට ගත් උත්සාහ සියල්ලක්ම අසාර්ථක වූ තත්ත්වයක් මත ඇය ම්ය ගියා’

දැන් ඒ ගෙදර පාzවට තිබෙනවා’ තුන්වන ඇස හා හයවන චිත්තවෙිගයකින් යුතුව සවන් දෙන්නේ නමි" මෙහි ඔවුන්ගේ කඳුz පිරි මරණීය හඬ අසන්නට පුzවනි’
CMP/AMP/KAL/KAL/01

பயங்கரவாதம்
படுகொலை

இது கதையல்ல நிஜம்
(பெயர்கள் மட்டும் கற்பனை)

எழுபதுகளில் கணபதிப் பிள்ளை கல்முனையில் ஒரு பிரபலமான வர்த்தகராக இருந்தவர். மனைவி இறந்த பின் தபுதாரரான இவரது இரண்டாவது மனைவிக்கு ஆறுபெண் பிள்ளைகள், முதல் மனைவிக்கு ஒரு மகள். ஒவ்வொரு பெண் பிள்ளைகளையும் வீடு வளவுகளுடன் திருமணம் செய்து வைக்கக் கூடிய சொத்துக்களை வைத்திருந்தார். இவருக்கு கடைசியாகப் பிறந்த ஒரே ஆண் மகன்தான் கிருபைராஜா என்பவர். கணபதிப்பிள்ளை தனது மூன்றாவது மகளின் திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்து விட்டார். தொன்னூறுகளில் தமிழ் தீவிரவாதம் மும்முரமடைந்து இளைஞர்கள் அத்தகைய தீவிரவாத இயக்கங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் செல்லமாக வளர்ந்த கிருபைராஜா படிப்பில் கவனம் செலுத்தாமல் புளொட் என்ற தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டமை அவன் விடுதலைப்புலிகளினால் பாண்டிருப்பு கோவில் உற்சவத்தின் போது 23.08.1988 கொல்லப்பட்ட பின்பு தான் தெரிய வந்தது. ரஞ்சன் என்ற கிருபைராஜாவின் சின்னம்மாவின் மகனும் கடத்தப்பட்டு புலிகளினால் இவ்வாறு கொல்லப்பட்டான். கிருபை, ரஞ்சன் அகால மரணம் பற்றி ஈமக்கிரியையின் போது பின்வரும் கவிதை ஒன்றும் வெளியிடப்பட்டது.

தென்றலில் கோர்த்து
என்னிதயத்தில் வேர் விட்டு பூத்த ரோஜா மலர்களே
கிருபை ரஞ்ச
எனக்காக விமோசனம் தேடிப் புறப்பட்ட
தபசிகளின் சாபங்களுக்கு பலியாகிப் போனீர்களே

இதழ் இதழாகப் பிய்த்து வீசப்பட்டிர்களா
அப்பாவிகள் நீங்கள்
என்னிடம் எங்கு சாட்சியங்கள்
வெடித்துச் சிதறும் என் கண்ணீர் குழம்புகளைத் தவிர!

எந்தப் பூவின் சக்குதல்களுக்கும் கண்ணீர் சிந்துபவன் நான்
உங்களை ஆணி அறைந்த சிலுவையின் முன் மாத்திரம் கல்லாக நிற்பதும் எவ்வாறு

விமோசனம் எமக்குத் தேவைதான்
சுத்தமான கரங்களடன் அவர்கள் ஏன் கதவுகளைத் தட்டட்டும்
என் இதயத்து வேர்களை பிய்ந்து எறிந்த பெறும் விமோசனம்
எனக்கெதற்கு

பித்துப் பிடித்தவர்கள் சப்பித் தின்னட்டும்
கானகம் செல்ல வழி விடுங்கள் தோழர்களே
சிலுவையில் அறையப்பட்டு கிழிந்து கிடக்கும்
எனது சின்னஞ் சிறு பூக்களை நான்
உயிர்ப்பிக்க வேண்டும்?


கொல்லப்பட்ட கிருபைராஜாவின் நான்காவது அக்காவின் கணவர் ஒரு கிராம சேவக உத்தியோகத்தராக இருந்தவர். கமலன் என்ற இவர் புலிகளின் ஆதரவாக செயற்பட்டார். தனது வீட்டிலே புலி தீவிரவாதிக்கு இடமளித்து செயற்பட உதவியவர். அவ்வாறு இருந்தும் எவ்வளவோ முயன்றும் தனது மைத்துனனான கிருபைராஜாவை புலிகளிடமிருந்து அவரால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. பலவேறு ஆயுதக்குழுக்கள் இயங்கிய நிலையில் புலியை வீட்டில் தங்க வைத்திருந்த இந்த கிராம சேவக உத்தியோகத்தர் புலிகளுக்கு எதிரான மற்றுமொரு ஆயுதக் குழு ஒன்றினை அவரது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். குழந்தை அவரது வளர்ப்பு மகனான ராமு மற்றும் அரவது மனைவியின் முன்னிலையிலேய சுட்டுக் கொல்லப்பட்டார். சிறு பருவத்தில் இருந்தே ஒரு தந்தையா சீராட்டி தன்னை வளர்த்து வந்த தனது தந்தை தனது கண் முன்னிலையிலே சுட்டுக் கொல்லப்பட்டமையை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. குறித்த ஆயுதக் குழுவின் அடாவடித்தனத்தை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினான். இதனை அறிந்த குறித்த ஆயுதக் குழு ராமுவை குறித்து வைத்து காத்திருந்து கோயில் உற்சவத்தின் போது 2007.08.31ஆம் திகதி கடத்தப்பட்டு இன்று வரை எங்கிருக்கிறான் என்பதை அறிய முடியாதுள்ளது. அவனை வளர்ப்புத் தாய் பரிதவித்து பரிதவித்து தனக்கு உதவியாக இருந்த ஒரே மகனையும் கணவனையும் இழந்த நிலையில் ஏற்கனவே அவருக்கு இருந்த நீரிழிவு நோய் தீவிரமடைந்து சிறுநீரகம் பாதிப்படைந்து லெட்சக்கணக்கான சொத்துக்களை விற்று சுகமடையாத நிலையில் இறுதியில் மரணமடைந்தார். அவர் உயிருடன் இருந்த போது காணாமல் போன தனது மகனைத் தேடிக் கண்டறிய எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்காத நிலையில் அவர் மரணமடைந்தார்.

இப்போது அந்த வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. மூன்றாவது கண்ணுடன் ஆறாவது உணர்வுடன் காது கொடுத்தால் இங்கு அவர்களுக்கு கண்ணீர் ஓலங்களைக் கேட்கலாம்.

பி. கணேசன்
கல்முனை

A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License