Ramalingam Savunthala
Inspector Etham
Pottuvil
During the riots occurred in 1990, we were displaced to Komari. After three days, the Komari Special Task Force told us that there was no more problems in our village and asked us to go back to our village. We returned to our village. The next (1990.07.31) morning, the Special Task Force and the Police rounded up our village. Then they took my husband Sannasi Subramaniyam for inquiry and told us that they would send him after inquiry. The whereabouts of my husband who was taken on that day is still not known. When I went to the Pottuvil Police with my three children in search of my husband, they told me that they had not taken him and asked to check with Komari Special Task Force. When we asked them, they said that they had not taken him and told us to ask at Arugambe Camp. When we went there, they told us that they had not brought him and asked us to check with the Police. The Police told that they were unaware of him and they had not brought him.
Thus, I went here and there to these three places. They told that my husband was not anywhere. Then, I complained to the Human Rights Commission. I complained to the Batticaloa Red Cross Society. There was no use. To this date, I do not know where my husband is. I looked after my three children earning from coolly work. My two eyes have been operated. Therefore, I request you to help me to find my husband. Twenty six years have passed, since my husband disappeared. I did not receive any information of my husband. I was not given any compensation. I beg of you to help me to get proper solution.
Wife,
R.Savunthala
රාමලිංගම් සවුන්තලා
ඉන්ස්පෙක්ටර් ඒත්තම්,
පොතුවිල්.
1990 වර්ෂයේ ඇති වූ ජාතිවාදී අරගලය මොහොතේ ස්ථානය මාරු කර කෝමාරි යන ගමට ගියෙමු. දවස් තුනකට පසු කෝමාරි විශේෂ හමුදා භටයින් පැමිණ ඔබගේ ගමේ කිසිම ප්රශ්නයක් නැහැ, ඔබ ඔබගේ ගමට යන්න ලෙස පවසන ලදි. අපි අපගේ ගමට පැමිණියෙමු. එයට පසු දවස (1990.07.31) උදෑසන විශේෂ හමුදාවත් පොලිසියත් අපගේ ගම වටකරන ලදි. එදින ඔවුන් මගේ ස්වාමි පුරුෂයා සන්නාසි සුබ්රමනියම්ප්රශ්න කිරීමකට කියා කැඳවා ගෙන ගියා. එදින ඔවුන් කැඳවා ගෙන ගිය මගේ සුවාමි පුරුෂයා සන්නාසි සුබ්රමනියම් යන අය ප්රශ්න කර නැවත එවන බව කියා කැඳවා ගෙන ගියහ. එදින කැඳවා ගෙන ගිය මගේ ස්වාමි පුරුෂයා අද වනතුරුත් කොහේද සිටින්නෙ කියා දන්නේ නැත. මාගේ ස්වාමි පුරුෂයාව සොයා මාගේ දරුවන් තිදෙනා රැගෙන පොතුවිල් පොලිසියට ගොස් අසා බැලීමේදී අපි ගෙනාවේ නැහැ, කෝමාරි විශේෂ හමුදා භටයින්ගෙන් අසා බලන ලෙස පැවසූහ. එහි ගොස් අසා බැලීමේදී අපි ගෙනාවෙ නැහැ, පොලිසියෙන් අසා බලන්න යනුවෙන් කියූහ. පොලිසියත් අපි දන්නෙ නැහැ, අපි ගෙනාවෙ නැහැ යැයි පවසති. මේ අකාරයට ස්ථාන තුනකට සොයා ඇවිද්දෙමි. මාගේ ස්වාමි පුරුෂයා කොහෙවත් නැහැ යැයි කීය. එයට පසු එයට පසු මානව හිමිකම් කොමිසමට පැමිණිලි කලෙමි. මඩකලපුව රතු කුරුස සංගමයට පැමිණිලි කලෙමි. කිසිම පිළිතුරක් ලැබුනේ නැත. මාගේ ස්වාමි පුරුෂයා කොහේද සිටින්නේ කියා අදවනතුරුත් දන්නේ නැත. මම මාගේ දරුවන් තිදෙනාම කුලී වැඩ වලට ගොස් උස් මහත් කලෙමි. මාගේ ඇස් දෙකටම සැත්කම් කර ඇත. ඒ නිසා ඔබගෙන් ඉල්ලා සිටින්නේ මාගේ ස්වාමි පුරුෂයාව සොයා ගැනීමට උදව් කරන්න. මාගේ ස්වාමි පුරුෂයා අතුරුදහන් වී අදට වසර 26 කි. මාගේ ස්වාමි පුරුෂයා සම්බන්ධ කිසිම තොරතුරක් ලැබුනේ නැත. මාහට කිසිම වන්දි මුදලක් ලැබුනේ නැති බවත් දැනුම් දෙමි. මාහට හරියාකාර තීරණයක් ලැබීමට උපකාර කරන මෙන් ඔබගෙන් යටහත්ව ඉල්ලා සිටිමි.
මෙයට ,
භාර්යාව,
ඉ.සවුන්තලා.
இராமலிங்கம் சவுந்தலா
இன்ஸ்பெக்டர்ஏத்தம்
பொத்துவில்
1990ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது நாங்கள் கோமாரிக்கிராமத்திற்கு இடம்பெயர்ந்து சென்றோம். மூன்று நாட்களின் பின் கோமாரி விசேட அதிரடிப்படையினர் உங்கள் ஊரில் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் எங்கள் ஊருக்கு வந்தோம் வந்து மறுநாள் காலையில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் எங்களது கிராமத்தை சுற்றிவளைத்தனர். அன்று அவர்கள் எனது கணவரான சன்னாசி சுப்ரமணியம் என்பவரை விசாரணை செய்துவிட்டு அனுப்புகின்றோம். என்று கூறி அழைத்துச் சென்றார்கள். அன்று அவர்கள் அழைத்துச் சென்ற எனது கணவர் இற்றைவரைக்கும் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. எனது கணவரை தேடி எனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பொத்துவில் பொலிசில் சென்று கேட்டபோது நாங்கள் கொண்டுவரவில்லை. கோமாரி விசேட அதிரடிப்படையினரிடம் கேட்கும்படி கூறினார்கள். அங்கு சென்று கேட்டபோது நாங்கள் கொண்டு வரவில்லை அறுகம்மை கேம்பில் கேட்கும்படி கூறினார்கள். அங்கு சென்று கேட்டபோது அவர்கள் கூறினார்கள். நாங்கள் கொண்டுவரவில்லை. பொலிசாரிடம் கேட்கும்படி கூறினார்கள். பொலிசார் எங்களுக்கு தெரியாது நாங்களும் கொண்டுவரவில்லை என்றார்கள். இவ்வாறாக மூன்று இடத்திற்கும் அழைந்துதிரிந்தேன். எனது கணவர் எந்த இடத்திலும் இல்லை என்றார்கள். அதன் பின் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தேன். மட்டக்களப்பு செஞ்சிலுவை சங்கத்திடம் முறைப்பாடுசெய்தேன். எந்த பயனும்கி டைக்கவில்லை. எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்று இற்றைவரைக்கும் தெரியாது நான் எனது மூன்று பிள்ளைகளையும் கூலிவேலை செய்து வளர்த்தேன். எனக்கு இரண்டு கண்களும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆகவே தங்களிடம் கேட்கின்றேன் எனது கணவரை கண்டுபிடித்து தருவதற்கு உதவிசெய்யுங்கள். எனது கணவர் காணாமல்போய் இன்றுடன் 26 வருடங்கள் ஆகின்றது. எனது கணவருக்கும் சம்பந்தமான எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனக்கு எந்தவிமான நட்டஈடுமே வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு முறையான தீர்வு கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வண்ணம்
மனைவி