C.Sornamma
Malwatha – 04
Kanapathypuram
I was born and lived in Malwatha on 01.10.1961 and there were 07 in my family. I was married in 1978. He worked as a labourer and went fishing. His name is Megaraja. I had two children who have asthma. We lived in a hut.
In the 1990, there was a fight between LTTE and the police, the people ran from their homes to temples of Veeramunai and Karaithivu. When we were in Almarijan mosque, the army came and rounded us up and put us in three buses and showed them to the masked man.
Around 60 people were arrested and till now their whereabouts is not known. The relatives are told to look here and there but without any effect. In 1990 we were taken on lorries to Thirukovil, Manakkadu mosques and lived for three years with much difficulties.
They told us to go back to our village and transported to our village. Our house was not to be seen. I didn’t know what to do, I didn’t know any work. I didn’t know where my relatives were. I didn’t know how to raise my children without any support.
I went to the field to work, and made hoppers. With the little income I had, I raised my children and married off my two children. Now my daughter looks after me. My daughter has two children and pregnant . He came from abroad and he had to go abroad. My life goes on like this.
සි’සොර්නමිමා’
මල්වත්ත-04’
කනපතිපුරමි’
අපි ඉපදුණෙත් හැදුණෙත් මල්වත්තෙ තමා’ අපි පවුලේ 07 දෙනයි’ මම ඉපදුණේ 1961’10’01 දින’ මෙි ගමෙි කෙනෙක්ව තමයි මම විවාහ කරගත්තෙ 1878 වර්ෂයේ’ ඔහු කුලී වැඩ කරනවා’ මාz අල්ලන්න යනවා’ එයාගෙ නම මෙිකරාසා’ මට දරුවො 02යි (පිරිම් 01යි ගැහැණු 01- ඉතා අමාරුවෙන් පැල්පතක ජීවත්වෙම්න් සිටියදී’
1990 වර්ෂයේ ඛඔඔෑ එකයි පොලිසියයි අතර බරපතල සටනක්’ දෙපැත්තතෙන්ම මාරුවෙන් මාරුවට වෙඞ් තියනවා’ ම්නිස්සු දුවලා සමිමන්තුරේ’ වීරමුනෙයි’ කාරෙයිතීවු ප්රදේශයේ කෝවිල්වල’ පාසල්වල’ පල්ලිවල කඳවුරු ගහලා ම්නිස්සුන්ව නවත්තලා ඔවුන් යනවයි එනවයි ඔහොම ඉඳලා ඊට පස්සෙ අල්මරිජාන් පාසලේ හැමෝම නවත්තලා ර්ණරවුන්ඩප්ණී කළා’ බස් දෙකකට ම්නිස්සුන්ව පැටෙවිවා’ ඊට පස්සෙ තවත් බස් එකකට පටවලා ම්නිස්සුන්ව අරගෙන ගිහින් ඔz බොක්කට පෙන්නුවා’
ඒ විදියට ඔz බොක්කට පෙන්වූ අයගෙන් 60 ක් පමණ අදටත් ආ ගිය අතක් නැහැ’ ඒකට මගේ ස්වාම් පුරුෂයත් අහුවුණා’ සොයලා සොයලා එහෙ ගිහින් බලන්න’ මෙහෙ ගිහින් බලන්න කියලා කියනවා’ ඊට පස්සේ 1990 වර්ෂයේ හැමෝම ලොරියට පටවලා තිරුක්කෝවිල් සරස්වතී’ මනක්කාඩු යන පාසල් දෙකේම පැල්පත් හදලා නවත්තලා තිබුණා’ අවුරුදු 03ක් එහි සිටියා’ හරිම අමාරුයි’
ඊට පස්සෙ දවසක් 1993 දී ගමිවලට යන්න කියලා අපිව
03-02
පටවාගෙන ආවා’ බලන විට ගම හඳුනගන්නත් බැහැ’ කැලෑ වැවිලා’ ගෙවලුත් ඔක්කොම පිචිචිලා මොකක්වත් පේන්න තිබුණෙ නැහැ’ මොනවා කරන්නද කියා දන්නෙ නැහැ’ මට කිසිම වැඩක් කරන්න දන්නෙත් නැහැ’ පිස්සු වැටුණා’ ළමයි හදන්න මොකද කරන්නෙ’ ඥාතීන් අක්කලා නංගිලා කොහෙද ඉන්නෙ කියලවත් දන්නෙ නැහැ’ මොලේ අවුල් වුණා’ ස්වාම් පුරුෂයත් නැහැ’ සහෝදර සහෝදරියොත් නැහැ’ රැකියාවක් කරන්න දන්නෙත් නැහැ’ ළමයින්ව හදන්නත් ඔින’
ම්නිස්සුත් එක්ක එකතුවෙලා කුඹුරු වලට ගියා’ කරල් ඇහින්දා’ ඊට පස්සෙ ආප්ප හැදුවා’ මම රැකියාවක් කරන්නෙ නැතිව ඔහුගෙන් යැපුණු නිසා ඔහු නැතිවුණාට පසුව තමයි මට ඒක තේරෙන්නෙ’ පොඞ් රැකියාවක් කරලා ලැබෙන අදායමෙන් ළමයි හදලා දැන් ළමයි දෙදෙනාම විවාහවෙලා ඉන්නවා’ දැන් මගේ දුව තමයි මාව බලාගන්නෙ’ මම පොඞ් පැල්පතක ඉන්නෙ’ දුවට පුතාලා 02 ක් ඉන්නවා’ දැන් බඩෙත් දරුවෙකු ඉන්නවා’ බෑනගෙනුත් ප්රශ්නයක් නැහැ’ රට ගිහිල්ල ආවා’ ආයෙත් යයි’ මෙි විදියට මගේ කාලෙත් ගෙවී යනවා’
சி. சொர்ணம்மா
மல்வத்தை 4
கணபதிபுரம்
நான் மல்வத்தையில் பிறந்து வளர்ந்து நாங்கள் எல்லாம் 7 பேர் நான் பிறந்த 1961.10.01ம் திகதி. இந்த ஒரு ஆளத்தான் நான் கலியாணம் முடிச்ச 78ம் ஆண்டு. அவரு கூலித் தொழில் மீன் பிடிக்கப் போற கஷ்டம் தான். அவற்ற பேரு மேகராசா. எனக்கு 2 பிள்ளைகளும் ஆண் பிள்ளையும், கஷ்டப்பட்டு குடிசையில் வாழ்ந்து வரும்போது…
1990ம் ஆண்டு எல்.ரி.ரி.ஈக்கும் பொலிசாருக்கும் சண்டை ஆள் ஆளுக்கு சுட்டாங்கள். கடுமையான சண்டை. சனங்கள் எல்லாம் ஓடி சம்மாந்துறை வீரமுனை காரைதீவு ஊருக்குப் போய் பள்ளிகூடத்துக்குள்ள தஞ்சம் அடைஞ்சன். பள்ளிக்குள்ள முகாம் கட்டி சனத்த தங்க வைச்சாங்கள். அதுக்கு பிறகு போறதும் வாறதுமாக இருந்து அதுக்குப் பிறகு அல் மரிஜான் பள்ளிக்குள்ள எல்லாரையும் தங்க வைச்சி றவுட்டப் பண்ணினாங்கள். 2 பஸ் நிறைய சனத்த ஏத்தினாங்கள். அதுக்குப் புறகும் 1 பஸ் சில ஏற்றி பஸ் சனத்தக் கொண்டு போய் பொம்மைக்கு கிட்ட காட்டினாங்கள்.
அதில கிட்டத்தட்ட 60 பேர் இருக்கும். அவனுகள் (பொம்மை) காட்டின. அவங்கள் அவளவு பேரும் இன்று வரைக்கும் இன்னமும் இல்லை. அது என்ற புருசனும் தேடித் தேடி அங்க போய்ப் பாரு இஞ்ச போய் பாரு என்று சொல்லுவானுகள். அதுக்குப் பிறகு 90 ஆண்டு லொறியில எல்லாரையும் ஏற்றி திருக்கோவில் சரஸ்வதி மணக்காடு ரெண்டு பள்ளிக்குள்ளயும் கொட்டில் அடிச்சி வைத்திருந்தாங்கள். 3 வரிசம் அங்க இருந்தம். கடும் கஸ்ரப்பட்டம்.
அதுக்குப் புறகு ஒரு நாள் 93ம் ஆண்டு ஊருக்கு போங்க என்டு எங்கள ஏற்றிக் கொண்டு வந்தால் ஊரை மதிக்க ஏலாமல் காடு எழும்பி இருந்தது. வீடும் இல்ல. எல்லாம் பற்றி ஒன்டும் தெரியாமல் இருந்தது. என்ன செய்ற என்டு தெரியாது. எனக்கு ஒரு தொழிலும் தெரியாது. பைத்தியமாக இருந்துருந்து பிள்ளைகளை வளக்கிறதுக்கு என்ன செய்ற. சொந்தக்கார ஆக்கள் அக்கா தங்கச்சி எங்கங்க இருக்கிறாங்கள் என்டே தெரியாது குளறினான். புருசனும் இல்ல. சகோதரங்களும் இல்ல. தொழிலும் தெரியாது. பிள்ளைகள வளக்க வேணும்.
வட்டைக்குள்ள போனன். கதிரு புறக்கினன். ஆக்களோட சேர்ந்து அதுக்குப் பிறகு அப்பம் சுட்டன். நான் தொழில் தெரியாமல் அவரில தங்கி வாழ்ந்தன். இல்லாத நேரம் தான் தெரியுது. சின்ன தொழிலால கிடைக்கிற வருமானத்தில பிள்ளைகளை வளத்து வந்து ரெண்டு பிள்ளைகளும் கலியாணம் முடிச்சிற்றுதுகள். இப்ப என்ன மகள் தான் பாக்கிற. நான் குடில் என்மில இருக்கிறன். மகளுக்கு 2 பிள்ளைகள் உண்டு. இப்ப பிரச்சினை ஒன்றுமில்லை மருமகனும் பிரச்சினை இல்ல. வெளியில போய் வந்தா திரும்பவும் போவாரு. இப்பிடித் தான் என்ட காலமும் போய் கொண்டிருக்கு.