A.Fathumma
Alhidaya School Road,
Kotugal
Hidayapuram
Pothuvil-20
I live in Pothuvill at the above address. I was married at age of 9 by parents. I attained puberty at 11 years and my elder son was born when I was 13. My husband did labour work in the fields. I have 8 children, 05 boys and 03 girls. When my husband goes to work he comes only once a week. My son also went to work in the fields and stays there too.
My husband disappeared on 1991.08.18. When we searched for him, we found him tied up and shot by LTTE near Stone Mountain. My 19 year old son was also missing. I heard the news and searched for him.
The body was not found, we searched everywhere. My husband's body was burned by the police on 20.08.1991. We heard that the body of my son was found at Aalankulam in Akkaraipatru. The name and the village was written on the body. My elder son and relatives went there.
When we went there we heard that four STF men died in explosion when they went to retrieve the body as a bomb was in the body. We went to the police and came back home.
Now we had 09 mouths to feed. We lived with poverty and hardship. I went to weed grass and cut paddy. I also wove mats. We ate with the money we earned. We went to GS office and filled out a form for people who were affected by terrorism. Some days later the GS were called to GS office and compensation of 50000 was given for my husband and 25000/- for my son.
When he was alive one of my daughter was married. Now all of them got married. I didn’t give a house for anybody. One of my daughter went abroad and built a house here. Now I am unable to work, I can’t hear or see well. I can’t walk much either, so I stay with my elder daughter. The is my tearful story.
Fathumma’s left thumb
Impression
අ’පාත්තුමිමා’
අල්-හිතායා පාසල් පාර’
කොටිටුක්කල්’
හිතායාපුරමි’
පොතුවිල් - 20
’
මා පොතුවිල් ප්රදේශයේ ඉහත ලිපිනයේ පදිංචිව සිටිනවා’ මට වයස අවුඃ09 දී මගේ අමිමා විවාහ කර දුන්නා’ වයස අවුඃ 11 දී මා වැඞ්වියට පැමිණියා’ වයස අවුඃ 13 දී ලොකු පුතා ඉපදුණා’
මගේ ස්වාමි පුරුෂයා මාව බැඳපු කාලෙ ඉඳලාම කුඹුරුවල කුලී වැඩ තමයි කරන්නෙ’ මට දරුවො 08 දෙනයි’ පිරිමි 05යි’ ගැහැණු 03 යි’ හරි අමාරුයි මොනවා කරන්නද’ එයා රොටිටෙයි යන ස්ථානයේ කුඹුරු වැඩ කරනවා’ කුඹුරු වැඩ පටන් ගත්තොත් එහේ තමයි වාඞ්යෙ ඉන්නෙ’ සතියකට වරක් තමයි ගමට එන්නෙ’ මගේ පුතෙකුත් එහි ඉන්නවා’ සමහර වෙලාවට ඇවිල්ලා බඩු අරගෙන යනවා’ කුඹුරු වැඩ ඉවර වෙනතුරු වාඞ්යෙ තමයි නවතින්නෙ’
1991’08’18 දින තාත්තා නැහැ කියලා සොයලා බලන විට ගල්කන්දෙ අත් දෙක බැඳලා ඛගඔගඔගෑ එකෙන් වෙඞ්තියලා තිබුණා’ මළ ම්නිය සොයා ගත්තා’ තාත්තා සමග සිටි වයස අවුරුදු 19 පුතාත් නැතිවුණා කියා ම්නිස්සු සොයනවා’ කලබල වලින් තාත්තට වෙඞ් වැදිලා පුතා නැහැ කියා ම්නිස්සු කථා වෙනවා මගේ කණට ඇහුණා’ රොටිටෙයි වලට සොයාගෙන ගියා’
මරණය දුටුවා’ ඉන්පසු ඈතින් සිටි වෙනත්"
02-02
……………………ග පිටු පස්සට බැඳගෙන අරන් යනවා කියා කීවා’ කුඹරුවල හැම තැනම ම්නිස්සුයි අපියි සෙවිවා’ සොයාගන බැරිවුණා’ එයාගෙ මරණය පොලිසිය මගින් භ=මදානය කළා’ ඊට දවස් තුනකට පස්සෙ 1991’08’20 දින පොලිසිය මගින් අපට අරෙංචියක් ලැබුණා අක්කරෙයිපත්තුවෙි ආලංකුලමි ප්රදේශයේ හුඹසකට හේත්තු කරලා තිබෙනවා කියා’ ඒකෙ නමයි ගමයි ලියලා තිබෙනවා කියා මගේ ලොකු පුතාත් තවත් නෑදෑයොත් බලන්න ගියා’
එහෙ ගියාට පසුව තමයි බැලූවෙි පිපිරිලා මරණය ගන්න බැරිව තිබුණා’ සොයා බැලූ විට මහ ජනතාවගෙන් ලැබුණු අරෙංචියක් මත ීඔF හුඹස ළඟට ගොස් බලනවිට ඔහුගේ ඇඟේ බෝමිභයක් බැඳලා තිබිලා තිබෙනවා’ ීඔF එක එය අල්ලා බලන විට පිපිරුණු බවත් ීඔF එකෙන් 04 දෙනෙකු මරණයට පත්වූ බවත් කීවා’ ඉන්පසු මරණය ගත්තෙත් නැහැ’ බැලූවෙත් නැහැ’ ගමට ඇවිල්ලා පොලිසියට ගිහිල්ලා ගෙදර ගියා’
මරණයේ වියෝවය ඉවසා ගන්න බැහැ’ ඊට පස්සෙ පවුලේ 09 දෙනෙකු කන්න ඔින’ දිළිඳුකම තදින් දැණුනා’ හරි අමාරුයි’ දවස ගාණෙ කුඹුරු වලට ගොස් කරල් ඇහිඳිනවා’ තණකොළ උගුලනවා’ පැදුරු වියනවා’ කුලී වැඩට යනවා’ ඒකෙන් ලැබෙන මුදල් වලින් එක වෙිලක් කන්නත් හරි අමාරුයි’ ඊට පස්සෙ ග්රාම නිලධාරි පෝමි පුරවනවා කියා ආරංචිවෙලා ප්රදේශිය ලේකමි කාර්යාලයට ගියා’ ත්රස්තවාදී කලබල වලින් විපතට පත්වූ අයට පෝමි පිරෙවිවා’ ටික දවසකට පස්සෙ ග්රාම නිලධාරි එන්න කියලා ප්රදේශිය ලේකමි කාර්යාලයට ගියා’ තාත්තට 50"000/} යි’ පුතාට 25"000/} යි දුන්නා’
02-03
ඊට පස්සෙ වරදක් නැහැ’ එයා ඉන්නකොට එක ගැහැණු ළමයෙක් විතරයි බැඳලා හිටියෙ’ දැන් හැමෝම බැඳලා’ මම කාටවත් ගෙවල් දුන්නෙ නැහැ’ ඒ ගොල්ලො තමයි හමිබ කරලා ඔවුන්ගේ ස්වාම් පුරුෂයන් එක්ක ගෙවල් හදාගත්තා’ එක දුවෙක් රට ගිහිල්ලා ගේ හදා ගත්තා’ දැන් මට මොකුත් කරන්න බැහැ’ ඇස් පේන්නෙත් නැහැ’( පෙනීම දුර්වලයි- කන් ඇහෙන්නෙත් නැහැ’ දැන් ඇවිදින්නත් බැහැ’ ලොකු දුව සමග ඉන්නවා’ දෙන දෙයක් කාලා ඉන්නවා’ එචිචර තමයි මගේ කථාව යැයි කියා ඇඬුවා’
අ’පාත්තුමිමා’
වමි අතේ ඇඟිලි සලකුණ’
அ. பாத்துமா
அல்ஹிதாயா பாடசாலை வீதி
கொட்டுக்கள்
ஹிதாயபுரம்
பொத்துவில் 20
நான் பொத்துவில் பிரதோசத்தில் குறிப்பிட்ட முகவரியில் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு எனது உம்மா வாப்பா 9 வயதில் கலியாணம் முடிச்சி வைச்சாங்க. எனக்கு என்ன தெரியும் பிறகு 11 வயதில் பருவம் அடைந்தேன். அதுக்குப் பிறகு 13 வயதில் மூத்த மகன் பிறந்தான்.
என்ற மாப்பிளை கூலி வௌ்ளாமைக்கு. எனக்கு 8 புள்ளைகள். 5 பொடியனும். 3 பொட்டையும் பெரிய கஷ்டம் என்ன செய்ற அவரு றொட்டை என்ற இடத்தில வௌ்ளாமைக்கு நிக்கிற வௌ்ளாமை வேலை தொடக்க அங்கதான் வாடியில தங்கி கிழமைக்கு ஒருக்காத்தான் ஊருக்கு வருவாரு. என்ட ஒரு பொடியனும் அங்க நிக்கிற சில வேளை வந்து சாமான் கட்டி எடுத்துப் போவான். வயல் வேலை முடியும் வரை வாடியில தான் தங்குவாள்.
1991.08.18ம் திகதி வாப்பாவை காணலை என தேடிப்பார்த்த நேரம் கல்லு மலையில கையை கட்டி எல்.ரி.ரி.ஈயினரால் சுடப்பட்ட நிலையில் மையத்து கண்டுபிடிக்கப்பட்டது. வாப்பாவோட நின்ற 19 வயது மகனையும் காணல. என சனங்கள் தேடின. பிரச்சினை என்று வாப்பாவ சுட்டுக்கிடக்கு. மகனை காணல. என்று எனக்கு கதை காதில் விழுந்தது. றொட்டைக்கு தேடி ஓடினோம்.
மையத்தைக் கண்டோம். அதுக்கு புறகு தூரத்தில் உள்ளவங்க பின்னுக்கு கூட்டி கொண்டு போறாங்க என்று சொன்னங்கள். பக்கம் எல்லாம் ஆக்களும் நாங்களும் தேடினோம். காணல. அவர்ட மையத்தை பொலிஸ் மூலம் அடக்கம் செய்யப்பட்டது. அதுக்குப் பிறகு மூன்று நாளுக்கு பிறகு 91.08.20ம் திகதி அன்டைக்கு பொத்துவில் பொலிஸ் மூலம் எங்களுக்கு விசனம் கிடைச்சது. அக்கரைப்பற்றில ஆலங்களுத்தில் புத்து ஒன்டி சாத்தி வைச்சிக்கம். என்றும் அதில பேரும் எந்த ஊர் என்றும் எழுதி இருக்கிதாம் என்றதும் என்ட மூத்த மகன் இன்னும் சொந்தக்கார ஆக்களும் போனாங்கள்.
அங்க போய் சேந்ததுக்குப் பிறகு பாத்தோம். வெடித்து மையத்து எடுக்க ஏலாமல் இருந்ததைக் கண்டோம் விசாரித்த போது பொதுமக்கள் தகவல் கொடுத்து எஸ்.ரி.எப் போய் தொட்டுபார்த்த போது. அவற்ற உடலில் பம் கட்டி வைச்சிரிக்கிறாங்க. அத எஸ்.ரி.எப் தொட்டு பார்த்த போது வெடிச்ச என்டும் 4 எஸ்ரி.எப் மௌத்து என்டும் சொன்னாங்கள். அதுக்கு பிறகு மையத்தை எடுக்க இல்லை பாக்கவும் இல்லை. ஊர் வந்து சேர்ந்து பொலிஸுக்கு போய் வீடு வந்தோம்.
மரணப் பதிவு வைக்கப்பட்டது. இதுக்குப் பிறகு குடும்பத்தில் 8 பேர் சாப்பிட வேணும். கடும் வறுமை கஷ்டம். நாளாந்தம் வட்டைக்குள் கதிரு புறக்கப் போற. புல்ல புடுக்க போற பாய் இழைக்கிற கூலி வேலைக்கு போற அதால கிடைகிற காசை கொண்டு ஒரு நேரம் சாப்புடுற கடும் கஷ்டப்பட்டு. இதுக்கு பிறகு விதானையா என்னவோ போம் நிரப்புறாங்களாம் என்டு டி.ஸ் கந்தோருக்கு போய் பயங்கவரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆக்களுக்கு போம் நிரப்பப்பட்டது. கொஞ்ச நாளுக்குப் பிறகு விதானையார் டிஎஸ் கந்தோருக்கு வரட்டாம் என்றுசொல்லி வாப்பாக்கு 50,000உம், மகனுக்கு 25,000உம் காசிம் தந்தாங்க.
அதுக்குப் புறகு கொஞ்சம் பரவாயில்ல. அவரு இருக்கக்குள்ள ஒரு பொம்புளப் பிள்ளை மட்டும் கலியாணம் முடிச்சி இருந்த. இப்ப எல்லா புள்ளைகளும் முச்சிற்றாங்க. நான் வீடு ஒத்தருக்கும் குடுக்கல அவங்கள்தான் உழைச்சியும் மாப்புளைமாரும் கட்டி எடுத்தாங்கள். ஒரு மகள் வௌிநாடு சென்று வீடுகட்டி குடுத்தா இப்ப எனக்கு ஒன்டுக்கும் ஏலாது. காது கேக்குறதில்ல, கண் தெரிவதில்லை. (பார்வை குறைவு) இப்ப நடக்கவும் ஏலாது. மூத்த மகளோட இருக்கிறன். கஞ்சோ கூலோ குடிச்சிக் கொண்டு இருக்கிறன். அவ்வளவுதான் என்ட கதை என்று சொல்லி கண்ணீர் வடித்தார்.
அ பாத்தும்மாவின் இடது கை பெ. அடையாளம்