A message from the Komari village

A man from Komari speaks of the important memories of his village, the happy as well as the sad.


කෝමාරි ගම්මානයෙන් පණිවුඩයක්

විවාහ වී කෝමාරි ගම්මානය් පදිංචියට පැමිණි අයෙකු තම ගම්මානයේ මිහිරි හා අමිහිරි මතකයන් ගැන කතා කරයි.


கோமாரியிலிருந்து ஒரு செய்தி

திருமணம் முடித்து கோமாரி பிரதேசத்திற்கு குடியேறிய நபர் தனது தான் அக்கிராமத்தில் கண்ணுற்ற முக்கிய நிகழ்வுகள், அசம்பாவிதங்கள், அனர்த்தங்கள் பற்றி கூறுகின்றார்.



My birth place was Akkaraipatru, Kolavil, I married and went to live in Komari village.
When I came to live in this village, it was dark. When I worked as a temporary postal worker in the Akkaraipatru post office, I came home from work at 8 or 9 pm. I travelled by bus, when I saw Komary at night, it was like a black cave.I could see only few houses had kerosene lamps.. I used to run home when I got down from the bus, as the road (only now a gravel street) was through a jungle, and there were unknown noises.
When I came, the villagers cut wood, broke stones, and did cultivation before 1990. During that time every body had freedom to go everywhere.

Later the incidents which happened turned the life of villagers around. The bomb blasts which happened often, made the villagers' lives difficult. The Special Task Force made their first camp in our village. Searches, round ups, often happened in our village. Many houses were burnt. Some youths were taken for inquiry and never returned, their relatives said.

Even when the Government said the war was over, the villagers didn’t have the freedom to cultivate their lands. If you ask the reason for this, they will tell you the information. The villagers lived in untold hardships and the tsunami came on 2004.12.26.

I can’t even put in words the destruction that fell on the village, wife who lost her husband, husband who lost the wife, parents who lost their children, those who lost their houses and belongings, there were untold destructions. There were screams of the Sea was coming, and it was heart breaking to see the difficulties the villagers faced after that. We didn’t know where to run. As the old bridge to Potuvil was destroyed, there’s no chance to go anywhere. . Only after few days we got to know who went where and who lived.

We lived as refugees for one year. We were given yellow card and white card for food. Even to get the things we faced difficulties. It was very difficult to get drinking water. We can see the food given to the people were wasted by them.

The small village we lived in became a big village after the tsunami destruction.. The SOS organization built 300 houses and people who were affected by the tsunami were settled here and the village was called

Selvapuram. Kalugalla village, Manalsenai village was restored by NGO’s and now villagers live in a good position now.

As the financial position of the villagers was not good, families, children faced many changes. Uneducated parents and hardships, many children were led in a wrong path. If the parents and guardians are given good counseling the children can be led positively. That’s my news.



අක්කරෙයිපත්තු කෝලාව්ල් ගමෙි පදිංචි මාර්‍ණ කාගේ පිහිටක්ද දන්නෙ නැහැ’ 1972 වර්ෂයේ ව්වාහය නිම්ත්තෙන් දැනට පදිංචිව සිටින කෝමාරි ගමිමානයට පදිංචියට ආවා’

මා එනව්ට මෙම ගමිමානය අඳුරුදර්ශී ගමිමානයක් ලෙස මට පෙනුණා’ හේතුව ඒ කාලයේ මා අක්කරෙයිපත්තු තැපැල් කාර්යාලයේ තාවකාලික සේවකයෙකු ලෙස වැඩ කරලා රාති්‍ර 8.00 ට 9.00ට ව්තර තමයි ගෙදර එන්නෙ’ බස් එකේ එනව්ට කෝමාරි ගම අඳුරු ගුහාවක් ලෙස තමයි පෙනෙන්නෙ’ සමහර පොල් අතු ගෙවල්වල ලාමිපු තෙල් පහන් පත්තුවෙනවා’ මම බස් එකෙන් බැහැලා මගේ ගෙදරට දුවලා තමයි යන්නෙ’ හේතුව අපේ ගෙදරට යන පාර දෙපස (දැන් තමයි බොරz පාර- ඝණ කැලෑ හා ඒ තුලින් එන අමුතු ශබිද’

මම ආපු කාලයේ එම ගමෙි පදිංචිව සිටි ජනතාව තමන්ගේ ජීවනෝපාය සඳහා වැඞ් වශයෙන් ගොඩ ගොව්තැන් තමයි කළේ’ ඊළඟට දර කැපීමර්‍ණ ගල් කැඩීම (1990ට පෙර- වැනි දේවල් තමයි කරගෙන සිටියෙ’ ඒ කාලේ ඔිනෑම කෙනෙකුට ඔිනෑම තැනකට යන්න නිදහස තිබුණා’

ඉන්පසු ඇති වූ සිද්ධීන් අපේ ජනතාවගේ ජීවන චක්‍රය වෙනස් අතකට නැඹුරු කළා’ නිතර නිතර අපේ ගමිමානයේ සිදුවන බෝමිභ පිපිරීමි වැනි සිදුවීමි හේතුවෙන් අපේ ගමිමානය ව්ඳපු දුක්ගැහැට වචන වලින් කියා නිම කරන්න බැහැ’ ව්ශේෂයෙන් නැගෙනහිර පළාතේ ව්ශේෂ හදිසි බලකාය (ීඔF- කඳවුරු ගහගෙන සිටි ස්ථානය අපේ ගමිමානයයි’ 1990 වර්ෂයේ හදිසි වැටලීමි හා සෙවීමි නිතර නිතර සිදු වෙනවා’ ගෙවල් කිහිපයක් ගිණි තැබුවා’ සමහර තරුණයින්ව ව්මර්ශනය සඳහා කැඳවාගෙන ගිය නමුත් ඔවුන් ආපසු ආවෙි නැහැ කියා ඔවුන්ගේ ඥාතීන් දැනටත් කියම්න් සිටිනවා’

ඒ ව්තරක් නෙමෙයි’ යුද්ධය අවසන් වුණා කියලා රජය කීවත් තවමත් අපේ ගමෙි ජනතාවට නිදහසේ ඔවුන්ගේ හේන් ගොව්තැන් කරගෙන යන්නට බැරි තත්ත්වයකින් තමයි ජීවත් වෙන්නෙ’ හේතුව කුමක් ද කියා වගා කරන ගොවීන්ගෙන්ම ව්මසන්න’ ඔබට අවශ්‍ය තොරතුරු ලබාගන්න පුzවනි’ මෙසේ දුක් කරදර බොහොමයක් ව්ඳලා ටික කලක් නිදහසේ ජීවත්වූ අපේ ජනතාවට නැවතත් ශෝකය’ ඒ තමයි 2004’12’26 දින පැවැති සුනාම්ය’

එම ඛෙිදවාචකයෙන් අපේ ගමට සිදුවෙචිච හානිය පාඩුව වචන වලින් කියා නිම කරන්න බැහැ’ ස්්වාම් පුරුෂයා අහිම් වූ භාර්යාවර්‍ණ භාර්යාව අහිම් වූ ස්්වාම් පුරුෂයා’ දරුවන් අහිම් වූ දෙමවිපියන්ර්‍ණ නිවාස හා දේපල අහිම් වූ මහ ජනතාව’ මෙි ව්දියට බොහෝ දෙනෙකු ව්පතට පත්වුණා’ 2004’12’26 දින උදේ මුහුද ගොඩ ගලනවා කියා කෑගහන හඬ ඇසුණු ව්ගස ජනතාව ව්ඳපු දුක ඉතාමත් ශෝක ජනකයි’ කොයි දිසාවට ද දුවන්නෙ කියාවත් දන්නෙ නැතුව සිටියා’ ඒ වෙලාවෙි ගමෙි ඉඳලා පොතුව්ල් වලට යන පාරෙ තිබුණූ පරණ පාලමත් කැඩී ගිය නිසා කොයි පැත්තටවත් යා ගන්න බැරි තත්ත්වයකින් තමයි ම්නිස්සු හිටියෙ’ කවිරු කවිරු කොහේ කොහේ ගියාදර්‍ණ ජීවතුන් අතර සිටිනවාද නැද්ද කියාවත් දන්නෙ නැහැ’ දවස් 2ර්‍ණ 3කින් පසුව තමයි ටිකින් ටික තොරතුරු ලැබුණෙ’

අවුරුද්දක් අනාත කඳවුරුවල ජීවත්වුණා’ කෑම ටික ගන්න කහපාට කාඩිපත්" කොළ පාට කාඩිපත් කියලා දීලා තිබුණා’ ඒ බඩු ටික ලබා ගන්නත් හරි අමාරුයි’ ඊට වඩා දුක් ව්න්දා ම්නිස්සු පානීය ජලය ලබාගන්න’ එහෙත් බොහෝ දෙනෙකු කෑම නාස්ති කරනවත් දකින්න ලැබුණා’ මෙම සුනාම් ආපදාව නිසා කුඩා ගමිමානයක්ව තිබුණු අපේ ගම ව්ශාල ගමිමානයක් වුණා’ සුනාම් ආපදාව නිසා ව්පතට පත්වූ අපේ ගමෙි ජනතාවට ීධී සංව්ධානයෙන් නිවාස 300 ක් සාදා දුන්නා’

සුනාම්යෙන් විපතට පත්වූ ජනතාව එහි පදිංචි කරලා දැනට සෙල්වපුරමි ගමිමානය යන නම්න් හැඳින් වෙනවා’ ඒ වාගේම කzගොල්ල" මනල්චෙිනයි යන ගමිමානත් රාජ්‍ය නොවන සංවිධාන වලින් පුනරුතAථාපනය කර නිවාස ඉදිකර දී දැනට තරමක් දුරට හොඳ තත්ත්වයකින් ජීවත් වෙනවා කියා කියන්න පුzවනි’

එහෙත්" තවමත් අප ජනතාවගේ ආර්ථීක තත්ත්වය යහපත් අතට හැරී නොමැතිවීම නිසා ඇතිවන අපහසුතා හේතුවෙන් පවුල් අතර" ළමුන් අතර සුz සුz මතිමතාන්තර ඇති වෙනවා’ පවුලේ ආර්ථීක ප්‍රශ්නය හෝ දෙමවිපියන්ගේ අධ්‍යාපන මටිටම ප්‍රමාණවත් නොමැති නිසා ළමුන් නොමග යන තත්ත්වයක් උදාවී තිබෙනවා’ ඔවුන්ව හොඳ තත්ත්වයකට ගෙන එන්නට නමි" ඔවුන්ගේ දෙමවිපියන් හා භාරකරුවන්ට ප්‍රමාණවත් දැනුවත් කිරීමක් කළ යුතුයි යනු මගේ පණිවිඩයයි’







அக்கரைப்பற்று கோளாவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் யாருடைய அருளோ தெரியாது 1972ம் ஆண்டு திருமணம் நிமித்தம் தற்போது குடியிருந்து வாழும் கோமாரிக் கிராமத்தில் வசித்துவருகின்றேன்.

நான் வரும் வேலை இக்கிராமம் இருள் சூழ்ந்த கிராமமாகவே எனக்கு தென்பட்டது. காரணம் அந்நாளிள்ல நான் அக்கரைப்பற்று தபாலகத்தில் தற்காலிக ஊழியராக சேவையாற்றி விட்டு இரவு 8-9 மணிக்கு தான் வீடு திரும்புவேன். பஸ்ஸில் பிரயாணம் செய்து வரும் போது கோமாரிக்கிராமம் ஒர் இருள் குகை போல் தான் காணப்பட்டது. சில சில குடிவீடுகளில் மண்ணெண்ணை விளக்குகள் எரிவதைக் காணக்கூடியதாக இருந்தது. நான் பஸ்ஸை விட்டு இறங்கி எனது வீட்டிற்கு ஓடித்தான் சென்றுள்ளேன். காரணம் வீட்டிற்குச் செல்லும் ஒழுங்கையின் (இப்போது தான் கிறவல் வீதி) இருபக்கமும் அடர்ந்த காடுகளும், அதற்குள் இருந்து வரும் தெரியாத சத்தங்களும்.

நான் வந்த காலத்தில் அக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத் தொழிலாக முக்கியமாக மேட்டு நில பயிர்ச் செய்கையினையே மேற்கொண்டிருந்தனர். அடுத்து விறகு வெட்டுதல் கல் உடைத்தல் (1990 ஆண்டுக்குமுன்பு) போன்றவற்றையே செய்து வந்தனர். அக்காலத்தில் எவரும் எவ்விடத்திற்கும் போகலாம், வரலாம் என்ற சுதந்திரம் இருந்தது.

அதற்குப் பின் ஏற்பட்ட ஏற்பட்ட காரணங்கள் எமது கிராம மக்களின் வாழ்க்கையினையே திசை திருப்பி விட்டன. அடிக்கடி எமது பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக எமது கிராம மக்கள் அனுபவித்த துன்பங்கள் வார்த்தையில் சொல்ல முடியாது. முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக விசேட அதிரடிப்படையினர் முகாமிட்ட இடம் எமது கிராமமாகும். 1990ம் ஆண்டில் சுற்றிவளைப்புக்களும் தேடுதல் களம் அடிக்கடி இடம் பெற்றுக் கொண்டேயிருந்தன. பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு சில வாலிபர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்கள் திரும்பவில்லை என உறவினர்கள் இன்றும் கூறிக் கொண்டே இருக்கின்றனர்.

அதுமட்டுமில்லை யுத்தம் முடிவுக்கு வரப்பட்டுள்ளது என அரசினர் கூறிய போதிலும் இன்னும் எமது கிராமமக்கள் சுதந்திரமாக தங்களது வாழ்வாதாரத் தொழிலான சேனைப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியாத கஷ்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காரணத்தை பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளும் பயனாளிகளிடம் கேட்டால் எங்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும். இப்படியான பல கஷ்டங்களையும் துயரங்களையும் அனுபவித்து சிறிது காலம் நிம்மதியுடன் வாழ்ந்த எம் மக்களுக்கு மீண்டும் ஓர் துயரம் அதுதான் 2004.12.26ம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவு.

இந் நிகழ்வினால் எமது கிராமத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் அழிவுகளையும் எழுத்தில் சொல்ல முடியாதது. கணவனை இழந்தமனைவி, மனைவியை இழந்தகணவன், பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், வீடுகளை, உடமைகளை இழந்த பொதுமக்கள் எனப் பலரும் பாதிப்புற்றனர். 2004.12.26ம் திகதி காலை கடல்மேலெழுந்து வருகின்றது எனக் கூக்குரல் சத்தம் கேட்டதும் மக்கள் பட்ட கஷ்டம் மிகவும் பரிதாமாக இருந்தது. எத்திசைக்கு ஓடுவதென்றே தெரியாமல் இருந்தது. அவ்வேளை கிராமத்தில் பொத்துவில் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த பழைய பாலமும் உடைந்து போனதால் ஒரு பக்கமும் செல்ல முடியாத நிலையிலேயே மக்கள் இருந்தனர். எங்கெங்கே யார் யார் போயுள்ளார்கள். உயிரோடு இருக்கின்றார்களா? என்ற முடிவுகள் 2/3 நாட்களுக்குப் பின்பு தான் படிப்படியாக தெரியவந்தது.

ஒரு வருடம் அகதி முகாம் வாழ்க்கை வாழ்ந்தோம். மஞ்சள் அட்டை, வௌ்ளை அட்டை என்பன உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்தும், அப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் சிரமமே ஏற்பட்டது. அதைவிட குடிநீர் பெறுவதில் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இருந்த போதிலும் உணவுப் பொருட்கள் பல பொதுமக்களினால் வீண்விரயம் செய்யப்ப்டதையும் காணக்கூடியதாக இருந்தது. சுனாமி அனர்த்தத்தினால் சிறு கிராமமாக இருந்த எமது கிராமம் ஓர் நீண்ட கிராமமாகி விட்டது. சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புற்ற எமது கிராமமக்களுக்கு எஸ்.ஓ.எஸ் நிறுவனத்தினால் சுமார் 300 வீடுகள் அமைக்கப்பட்டு அதில் சுனாமியினால் பாதிப்புற்ற மக்கள் குடியேற்றப்பட்டு இன்று செல்வபுரம் கிராமமாக அழைக்கப்படுகின்றது. அதே போல் களுகொல்ல கிராமம், மணற்சேனை கிராமம் என்பனவும் அரசசார்பற்ற நிறுவனங்களினால் புனரமைப்பு செய்யப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டு இன்று ஓரளவு நல்ல நிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்றும் கூறலாம்.

இருந்தபோதிலும் இன்றும் எமது மக்களின் பொருளாதார நிலை நல்ல நிலைமையடையாத காரணத்தினால் ஏற்படும் கஷ்ட நிலைமை காரணமாகவே குடும்பங்களிடையேயும் சிறுவர்களிடமும் சில மாறுதல்கள் ஏற்படுகின்றன. குடும்பத்தின் கஷ்டநிலை அல்லது பெற்றோரின் கல்வியறிவு போதாமை காரணமாக சிறுவர்கள் பலர் வழிதவறிச் செல்கின்றனர். இவர்களை ஓர் நல்லவழிக்குக் கொண்டுவர வேண்டுமானயால் அவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர் போன்றவர்களுக்குப் போதிய அறிவூட்டல் வழங்கப்படல் வேண்டும் என்பது தான் எனது செய்தியாகும்.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License