May God guide us to happiness!

A horrific tale from Sammanturai of assassinations and disapearances in the '90s.


දෙවියනි අපට සතුටට මාර්ගය පෙන්වා දෙන්න!

1990 දශකයේ යුද්ධයේ බිහිසුණු මතකයන් ගැන ආවර්ජනයකි මේ.


இறைவன் எங்களின் ஆனந்தக் கண்ணீருக்கு வழிகாட்டுவான்

இந்த அனுபவ பகிர்வானது 1990களில் காணப்பட்ட யுத்த சூழ்நிலை மற்றும் அப்போதைய காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், இடப்பெயர்வுகள் குறித்து நிற்கின்றது.CMP/AMP/SAM/BLJ/05
U.L Abukkar
142, Block J west II
Thennampillai village
Sammanthurai

The history of the conflict of 89-90

The block J West II village was called Kaikaati Palli Vasal earlier. In 1989-1990 a Jihad group was in place at Jariya Mosque. This group was people oriented and did service to the people. There was conflict between LTTE and Jihad. Suddenly the mosque announced through PA system to get together in mosque. Every body was running everywhere in fear. There was gunshots . Later we heard that LTTE shot 06 people in mosque and some lost their legs by mines and some houses were burnt at Mattakalapu tharavai, Udayapuram shore areas.
There were screams from people whose son, husbands disappeared. The government sent army which became a nuisance to some and advantage for some. People who were affected got frightened by the army. We were afraid to go home and went to relative place. There was deep longing to see our homes. We went to our homes because people saw suspected persons brought by bus and burnt. Fearing for our lives we ran from home. We thought to fight for our country and joined this group to advise people. To this day we are in the group and write the history of our people.

We were living in the dark in 89,90 but now we are in the light because of our effort. If you wipe our tears, god will show happiness to you. I end my story.


U.L අබූබක්කර්
142 බිලොක් J බටහිර ෂෂ
තෙන්නමිපිල්ලෙයි ගමිමානය"
සමිමන්තුරේ’

 ම්නිස් ඝාතනය’
 යුද්ධමය වාතාවරණය’
 අවතැන්වීමි’

89 - 90 වර්ෂවල ඇතිවූ ආපදාවන් පිළිබඳ ඉතිහාසය’

අපගේ සුන්දරවත් සමිමාන්තුරේ ප්‍රදේශයේ බිලොක් J බටහිර ෂෂ නැමැති ගමිමානයේ මුල් කාලයේ කෛකාටිටි පල්ලිය කියා කියනවා’ දැනට කාරියප්පා ජුමිමා පල්ලිය යැයි පවසන මුස්ලිමි පල්ලියේ 89 - 90 වර්ෂවල ජිහාත් නැමැති කණ්ඩායමක් පල්ලියේ කි්‍රයාත්මකව තිබුණා’ එම කණ්ඩායම ජනතාවට රැකවරණය ලබාදීම පිළිබඳව ලැදියාව ඇති කණ්ඩායමක් ලෙස කි්‍රයාත්මක වුණා’ ඒ කාලයේ මෙම ජනවාර්ගික අර්බුධ පටන්ගෙන තිබුණා’ ඒ වෙලාවෙි ඛගඔගඔගෑ සංවිධානය මෙි ජිහාත් කණ්ඩායමට පහරදුන් බවත්" ජිහාත් කණ්ඩායම ඛගඔගඔගෑ සංවිධානයට පහරදුන් බවත් ගම තුල විශාල කලබලයක් ඇතිවෙලා තිබුණා’ ඒ වෙලාවෙි පල්ලියේ වාංගු ශබිදය ඇහුණා’ ම්නිස්සු හැම දෙනාටම ගෙවල් අතහැර දාලා එක තැනකට රැස්වෙන ලෙස පල්ලියෙන් නිවෙිදනයක් කළා’ ඉන්පසු ම්නිස්සු කලබල වී අතේ අත දරුවන් සමග හඬා වැලපිලා ඒ මෙි අත දුවගෙන ගියා’ හතර වටෙිටම වෙඞ්ශබිද ඇහුණා’ ම්නිස්සු බයවෙලා දුවගෙන ගොස් හැංගුණා’ පසුව ආරංචි වුණා ඛගඔගඔගෑ සංවිධානය පල්ලියේ 06 දෙනෙකුට වෙඞ් තබා මරාදැමූ බවත්" කුඹුරු වැඩට ගිය ම්නිසුන්ගේ බෙල්ල කැපූ බවත්" බිමි බෝමිභ තබා ඇතැමි අයට කකුල් අහිම්වූ බවත්" වීZරමුණෙයි" මඩකලපුව තරවයි" උදයපුරමි හා වෙරළබඩ ප්‍රදේශවල ජීවත්වෙන ජනතාවගේ නිවෙස් වලට වෙඞ් තබා ගිණි තැබූ බවත් ආරංචි වුණා’ කඳුz හැලූවා" දුක්වුණා’ එපමණක් නොවෙි කූමුරට ගිය මගේ ස්වාම් පුරුෂයා ආවෙි නැහැ කියා බෙරිහන් දෙන හඬ" වැඩට ගිය මගේ පුතා ආවෙි නැහැ කියා කෑගහන හඬ" ගේතුල නිදාගෙන සිටි දරුවා නැහැ කියා කෑගහන හඬ අපේ

කන්වල දෝංකාර දෙනවා’ මෙම කලබල නවත්වන්න ඔින කියලා රජයේ හමුදාව කියන හමුදාවට විතරයි මෙි ප්‍රශ්නෙ විසඳන්න පුzවන් කියා සිතා හමුදාව එවලා තිබුණා’ එය ඇතැමි පිරිසකට සාධකවුණා’ ඇතැමි පිරිසකට පාධකවුණා’

ආපදාවෙන් විපතට පත්වූ ජනතාව හමුදාව දැකලා කලබල වුණා’ ඉන්පසු ජීවිත හානිය" දේපල හානිය ඇතිවූ අය ගැන සිතා දුක්වුණා’ කඳුz හැලූවා’ මොනවා කරන්නද දෙවියන් වහන්සේගේ කි්‍රයාව කියා සිතා අපේ නිවෙස්වල ඉන්න බය හිතුණා’ අපේ ගෙවල් අතහැරදාලා ඥාතීන්ගේ ගෙවල් වලට ගොස් නතරවුණා’ මාස කිහිපයක් ඔවුන්ගේ නිවෙස්වල නැවැතී සිටි නිසා ඔවුන්ට අපි ගැන කලකිරීමක් ඇති වුණා’ පහු පහු වෙනකොට කොහු කොහු වෙනවා කියනවානෙ’ ඒවාගේ සිතලා ඔවුන් වෙනස්වුණා’ ඉන්පසු අපිම හිතුවා අපි මෙහි සිටියොත් ඔවුන්ටත් කරදරයක්නෙ’ ඒ නිසා අපිම සිතලා අපේ ගෙවලවල නැවැතී සිටියා’ බය එක් පැත්තක" අනික් පැත්තෙන් අපටම කියා ගෙයක් නැහැනේ කියන ශාංඛාව තව පැත්තකින්’ ඒ සියල්ල ගැන සිතා අපේ ගෙවල වලට ගොස් නැවැතී සිටියා’ ආයෙත් දවසකින් දෙකකින් අපේ ගෙවල් අතහැර දාල දිවිවා’ ඊට හේතුව තමයි වෑන් වලිනුත්" බස් වලිනුත් සැකසහිත පුද්ගලයන්ව රැගෙනවිත් ගිණි තබනවා දුටු ජනතාව කලබල වී දුවනවා’ එය දුටු අපිත් බයවෙලා අපේ ගෙවල් අතහැර දාලා දුවන්න සිද්ධවුණා’ මෙි සියල්ල මතක් වනවිට තවදුරටත් අපි ජීවතුන් අතර සිටිය යුතුද කියා අපටත් සිතුණා’ ආයෙත් කල්පනා කළා අපි රට වෙනුවෙන්් සටන් කළ යුතුයි’ අපි අන් අය සමග සටන් කළයුතුයි කියා සිතුවා’ අන් අයට දැනමුතුකමි කිව යුතුයි කියා සිතුවා’ එදින සිට මෙදින දක්වා එම සංවිධානවල ජීවත්වන ජනතාව තමයි මෙම ඉතිහාසය ලියන්නෙ’

ඒ කාලයේ 89 - 90 වර්ෂවල අඳුරු කාමරවල ජීවත්වූ අපි අද ආලෝකයේ ජීවත්වෙනවා කියන්නෙ අපගේ උත්සාහය තමයි එයට හේතුව’ අපගේ දුක් කඳුz පිස දැමුවොත්" දෙවියන් වහන්සේ ඔබට සතුටු කඳz සැලීමට මග පාදා දෙනවා කියා පවසම්න් මගේ ජීවිත කතාව අවසන් කරනවා’
யு.எல். அபூபக்கர்
142 புளக்ஜேமேற்கு 2
தென்னம்பிள்ளைக்கிராமம்
சம்மாந்துறை

இனப்படுகொலை
யுத்தசூழல்
இடப்பெயர்வு

89-90ம் ஆண்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் வரலாறு

எங்களின் பசுமை நிறைந்த சம்மாந்துறை ஊரில் புளக்ஜேமேற்கு 2 என்னும் கிராமத்தில் ஆரம்பத்தில் கைகாட்டி பள்ளிவாசல் என்று கூறுவார்கள். தற்போது ஜாரிய்யா ஜும்மாப் பள்ளிவாசல் என்று கூறப்படும் பள்ளிவாசலில் 89-90ம் ஆண்டில் ஜிய்யாத் எனும் பள்ளிக்குருப் இயங்கிக்கொண்டு வந்திருந்தது. அந்தக் குழு மிகவும் மக்களை பராமரிப்பதில் ஆர்வம் உள்ள ஒரு குழுவாக அமைந்திருந்தது. அந்தநேரம் இந்த இனக்கலவரங்கள் ஆரம்பமாக உள்ளது. அதே நேரம் எல்.டி.டி என்னும் இயக்கத்தினர் அவர்கள் இவர்களைத் தாக்கியதாகவும் இந்த ஜிய்யாத் குழுக்கள் எல்.டி.டியைத் தாக்கியதாகவும் ஊருக்குள் மிகவும் கலவரமாகி உள்ளது. அந்த நேரம் மக்கள் எல்லாரையும் பள்ளிவாசலில் வாங்கு சத்தம் ஒலித்தது. மக்கள் எல்லோரையும் வீட்டை விட்டு ஒரு இடத்தில் ஒன்றுகூடுமாறு ஓசை கேட்டது. அதன் பின்னர் சனங்கள் அலறி துடித்து கையில் குழந்தையும் கண்ணீரோடும் அங்கும் இங்கும் ஓடிச்சென்றார்கள். வெடிச்சத்தம் நாலாபக்கமும் கேட்டது. மக்கள் அச்சத்தினால் ஓடி ஒழிந்தார்கள். பின்னர் கேள்விப்பட்டோம். எல்.டி.டி இயக்கத்தினர் பள்ளிவாசலில் 6 பேரைச் சுட்டுக் கொண்டதாகவும் வயல் வேலைக்குச் சென்றவர்களை கழுத்தால் வெட்டியதாகவும் மிதிவெடில்கள் வைத்து ஒரு சிலரின் கால்கள் இழந்து போனதாகவும் வீரமுனை, மட்டக்களப்புத்தரவை, உதயபுரம் கரையோரப்பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகளை வெடில் வைத்து தீ வைத்து எரித்ததாகவும் கேள்விப்பட்டோம். கண்ணீர் விட்டோம். கவலை அடைந்தோம். அது மட்டுமல்லாமல் வயலுக்குப் போன எனது கணவரைக் காணவில்லை என்று கத்தும் ஓசை, வேலைக்குப் போன மகன் வரவில்லை என்று கத்தும் ஓசை, வீட்டுக்குள் படுத்த எனது பிள்ளையைக் காணவில்லை என்று தேடும் ஓசை எங்கள் காதைத் துளைத்தது. மேலும் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்று எண்ணி அரசாங்கம் இராணுவம் என்னும் படையினரால் மட்டுமே இப்பிரச்சினையத் தீர்க்கலாம் என்று எண்ணி இராணுவப்படையினரை அனுப்பிவைத்தார்கள். அது சில மக்களுக்கு பாதகமானதாகவும், சில மக்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

உதாரணம். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவப்படையினரைக் கண்டு மிகவும் அல்லோலப்பட்டார்கள். மேலும் இதற்குப் பின்னர் உயிரை இழந்தவர்கள், உடமை இழந்தவர்கள். இவர்களை நினைத்து கவலை அடைந்தோம். கண்ணீர் வடித்தோம். என்ன செய்யலாம்? இறைவனின் செயல் என்று நினைத்து எங்களின் வீட்டில் இருப்பதற்கு அச்சம் ஒன்று வந்தது. எங்களின் வீட்டை விட்டு மறுபடி எங்களின் சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கினோம். ஒரு சில மாதங்கள் அவர்களின் வீட்டில் தங்கியது அவர்களுக்கும் எங்களின் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டது. பழகப் பழக பாலும் புளிப்பது போல் என்று எண்ணி அவர்கள் மாறிவிட்டார்கள். அதன் பின் நாங்களே நினைத்தோம் நாங்கள் இருப்பது அவர்குளுக்கு சிரமத்தைக் கொடுப்பது என்று நாங்களே நினைத்தோம். எங்கள் வீட்டில் தங்கினோம். பயம் ஒரு பக்கம். மறு பக்கம் நமது சொந்த வீடு இல்லை என்ற ஏக்கம் மறுபக்கம் எல்லாத்தையும் நினைத்து எங்களின் வீடுகளில் தங்கினோம். பின்னர் இரண்டொரு நாட்களில் எங்கள் வீட்டைவிட்டு ஓடினோம். ஏன் காரணம் என்று சொன்னால் புன்களிலும் பஸ்களிலும் சந்தேகத்திற்கு ஏற்பட்ட நபர்களை ஏற்றி வந்து தீயில் எரிப்பதனைக் கண்ட மக்கள் பதறியடித்து ஓடினார்கள். அதனைக் கண்ட நாங்களும் அச்சத்தினால் எங்களின் வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பம் வந்தது. இவையெல்லாம் நினைக்கும்போது உயிரோடு நாமும் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. மறுபடி நினைத்தோம் நாம் நாட்டுக்ககாப் போராட வேண்டும் நாம் நினைத்து மற்றவர்களுடன் போராட வேண்டும். மற்றவர்களுக்கு புத்தி கூற வேண்டும் என்று எண்ணி அன்று தொடக்கம் இன்று வரை இந்த இயக்கத்தில் வாழும் மக்கள் தான் இந்த வரலாற்றை எழுதுகிறோம்.

அந்த நேரம் 89 90ம் ஆண்டில் இருட்டறையில் வாழ்ந்த நாங்கள் இன்று வெளிச்சத்தில் வாழ்கின்றோம் என்றால் எங்களின் முயற்சி தான் எங்கள் சோகக் கண்ணீரைத் துடைத்தால் இறைவன் எங்களின் ஆனந்தக் கண்ணீருக்கு வழிகாட்டுவான் எனக்கூறி எனது சொந்தக்கதையை முடிக்கின்றேன்.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License