I am in tears...

A story depicting the hardships and brutality of the war and camp life


මගේ ඇස්වලට කදුළු...

යුද්ධය සහ කඳවුරු ජීවිතයේ දුෂ්කරතා සහ ම්ලේච්ඡත්වය දැක්වෙන කතාවක්


நான் கண்ணீரில் இருக்கிறேன்

யுத்தகத்தினால் ஏற்பட்ட பாரிய உயிர், பொருட்சேதங்களையும் முகாம் வாழ்க்கையையும் இப்பெண்ணின் கதை வெளிப்படுத்துன்றது



I, Kristhuraja Fatima was born in 1971 at Aadkaddiveli village in Aaandankulam in Mannar district. My mother is a house wife and father was a coolly worker. I have two elder brothers and three elder sisters and I am the last child of the family. My brothers, sisters and I did not continue studies completely. As father was a coolly worker, he did not educate us well. I stopped studies after Grade 9 and did domestic work. My mother started to go to coolie work.

We have been experiencing many difficulties since our childhood. We had proper food after we started to go to work at lime quarry. Before that we had difficulties in finding food. After that, I too began to go to work. I could not go to work every day. I did gardening and domestic work.

All my brothers and sisters have got married and I got married lastly. My parents did not marry me. I myself loved a person and got married without the consent of my father and mother. I got a girl after one year of marriage. He goes for coolly work. Until my daughter becomes one year of age, he was happy. Every day, he went for work. Later, he started taking alcohol and did not go to work regularly. He started torturing me. He beat me asking what I had brought. I did not know what to do. I thought of bringing up my child. I started to go for work leaving my child at the neighbour’s house. Till then, my mother and father did not speak to me. Later, one day they came to my house hearing my sufferings. The saw all my sufferings and my mother asked me to go to work and she would look after my child. I started to go for work. Now, I have four children. I have educated them well. They have all got married and do well in life.

As clashes occurred between the army and movement very often, we displaced many times and experienced lot of hardships. As battle took place between army and movement, we displaced to Madu. There we had no facility to build a house and stayed in a school. Then again in 2008, clashes started between army and the movement. We displaced to Poonagari Pradesha Sabah area. We went to many villages; Jeyapuram, Vanneri, Akkarayan and Kilinochchi and finally via Mullivaikkal, we came to the army controlled area.

While displacing we had to undergo many sufferings. There was scarcity even for food and water. We still do not know how we survived without having food. Even today, we burst into tears thinking of that life. Clashes took place between army and movement but it was we who faced heavy destruction.

As the army fired cluster bombs, thousands of people were killed. We came to the army passing the dead bodies. We were very afraid to go to the army. What we could do and hoping that god would save us, we went to the army. On the way, my husband suffered small injuries due to shell attack. We covered the wound with a piece of sarong. We cannot explain in words, the sufferings of us and the people at large. We burst into tears. This situation should not surface again.

Had the government given the rights of the Tamil people, we need not have suffered this much. Now, at least, the present government should give the rights of the Tamil people. We came to the army only with the dress we were wearing. We were afraid to see them. They were showing us their guns and knives. They made all of us sit on an open lawn area under the hot son for four to five hours. There was no water even to drink. We suffered a lot. They inquired all the young boys and girls and took some of them. The cries of the parents of those youngsters are still heard in my ears.

Then they asked our names and registered us and made us walk for a long distance. Then they gave us bun and took us to Omanthai. There also they registered us. There was a large crowd and somehow we registered. They gave meal. Then we were taken to Vavuniya Kadirgamar Camp. They told us that “this is your house, stay here”. There were 19 people from 4 families in that house. We could not sleep or stay in. It did not seem to be a problem for us who have already suffered much.

We entered the camp in May 2009 and stayed there for five months. We were resettled in October 2009 in our own house. Now we have got electricity supply and all other facilities and live happily. We still think of the difficulties we had during the war.

The present government of good governance should provide permanent solution to the Tamil. Even good governance is taking place, the problem of the Tamil people are not solved yet. Their lands too have not yet been released. Their lands should be released and also they should be provided with facilities. No information regarding the missing persons is released so far. The parents of these missing persons still live with anxiety. Therefore, the government should give answer to them quickly. It is the duty of the government to mete out justice.

Nowadays, the younger generation is addicted to narcotics. Therefore, creating a drug–free society is the duty of all of us. We need to work towards this. As parents, we should show interest in this matter.

Therefore, I can write a lot about the incidents taken place in my life and the expectations to be fulfilled in future.

K.Fatima
Aandankulam
Aadkaaddiveli.



මගේ නම ක්‍රිස්තු රාජා ෆ්තීමා. මා 1971 වසරේ මන්නාරම දිස්ත්‍රික්කයේ ආන්ඩාන්කුලම් ආට්කාට්ටිවෙලි ගමේ ඉපදී හැදී වැඩුණා. මගේ මව ගෘහණියක්. පියා කුලී වැඩ කිරමින් ජීවත් වුණා. මට අයියලා දෙදෙනෙක් හා අක්කලා 3 දෙනෙක් ඉන්නවා. මම බාලම දරුවා. මගේ සහෝදර සහෝදරියන් හා මා අධ්‍යාපන කටයුතු සම්පූර්ණයෙන් අවසන් කළේ නැහැ. පියා කුලී වැඩ කරපු නිසා අපට හොඳ අධ්‍යාපනයක් ලබාදීමට ඔහුට හැකියාවක් තිබුණේ නැහැ. මා 9 වෙනි පන්තියෙන් අධ්‍යාපනය නතර කළා. ගෙදර දොර වැඩ කටයුතුවල යෙදුණා. මව කුලී වැඩ කිරීම සඳහා පිට යනවා.
අප සියලූ දෙනාම කුඩා කල සිටම විවිධ දුක් කරදර වලට මුහුණ දුන්නා. අයියලා වැඩට ගිය පසුවයි අපට පිළිවෙලකට ආහාරයක් ලැබුණේ. ඊට පෙර එදිනෙදා ආහාර ලබා ගැනීම ඉතා දුෂ්කර වුණා. ඉන්පසු මමත් වැඩට ගියා. මට සැම දිනම වැඩට යාමට බැරි වුණා. ගෙවතු වැඩ හා ගෙදර වැඩවල යෙදී සිටියා.
මගේ සහෝදර සහෝදරියන් සියලූ දෙනාම දැන් විවාහ වී සිටිනවා. මම අවසන් වරට විවාහ වුණා. මගේ විවාහය දෙමව්පියන් විසින් සිදුකර දුන්නේ නැහැ. මම ආදර සම්බන්ධයක් හරහා මවගේ කැමැත්තෙන් තොරව විවාහ වුණා. ඉන් වසරකට පසු ගැහැණු දරුවෙක් ලැබුණා. සැමියා කුලී වැඩ කරනවා.
දුවට වසරක් වන තෙක් පමණක් සැමියා සතුටින් සිටියා. සෑම දිනම වැඩට ගිහින් ආවා. ඉන්පසු ඔහු බීමට පටන් ගත්තා. නිසි පරිදි වැඩටත් ගියේ නෑ. මට විවිධ ආකාරයෙන් අඩන්තෙට්ටම් කෙරුවා. හැමදාම පහර දුන්නා. එයට හේතුව මම දන්නේ නැහැ. මගේ දරුවා හොඳට හදා ගන්න ඕනෑ යැයි සිතුවා. දරුවා ළඟ නිවසක තබා වැඩට ගියා. ඒ වෙන තෙක් මාගේ දෙමාපියන් මාත් එක්ක කිසිම සම්බන්ධයකින් තොරවයි සිටියේ. පසුව එක් දවසක් මම දුක් විදිනවා දැක ඔවුන් නිවසට පැමිණියා. මම විදින දුක සියල්ල ඔවුන් දැක්කා. එවිට මගේ "දරුවා මම බලා ගන්නම්. ඔයා වැඩට යන්න" කියා මගේ මව කිව්වා. මමත් වැඩට යන්න පටන් ගත්තා. දැන් දරුවන් 4 දෙනෙක් ඉන්නවා. ඔවුන්ට හොඳ අධ්‍යාපනයක් ලබා දුන්නා. ඔවුන් දැන් විවාහ වී හොඳ ජීවිතයක් ගත කරනවා.
විවිධ අවස්ථාවල හමුදාව හා කොටි සංවිධානය අතර ගැටුම් සිදුවුණා. බොහෝ අවස්ථාවල අපි අවතැන්වී දුක් කරදර මැද්දේ ජීවත් වුණා. හමුදාව හා කොටි සංවිධානය අතර ගැටුම් ඇවිලූණ නිසා අපි මඩු ප්‍රදේශයට ගියා. එහි අපට නිවසක් තනා ගැනීමට පහසුකමක් තිබුණේ නැහැ. පාසල් ගොඩනැගිල්ලක තමයි රැඳී සිටියේ. නැවත 2008 වසරේ හමුදාව හා කොටි සංවිධානය අතර යුද්ධය ඇවිලූණා. අපි පූනගරි කොට්ඨාශයට අවතැන්වී ගියා. එහි විවිධ ගම්මානවල ජීවත් වුණා. ඉන්පසු ජයපුරම්, වන්නේරි, අක්කරයකුලම්, කිලිනොච්චි වැනි ප්‍රදේශවල සිට අවසානයේ මුල්ලිවයික්කාල් හරහා හමුදා පාලන ප්‍රදේශයට පැමිණියා.
අවතැන්වෙන විට අපි විවිධ දුක් කරදර වලට හා දුෂ්කරතාවයන්ට මුහුණ දුන්නා. ආහාර, ජලය යන කිසිම දෙයක් ලැබුනේ නැහැ. ඒ ජීවිතය නැවත මතක් කරන විට මගේ ඇස්වලට කදුළු උනනවා. හමුදාව හා කොටි සංවිධානය අතර සිදුවූ යුද්ධය නිසා විශාල විනාශයක් ඇති වුණා. එම සියලූ විනාශයන්ට මුහුණ දීමට සිදුවුනේ අපිටයි.
හමුදාව පොකුරු බෝම්බ පාවිච්චි කළා. එම නිසා දහස් ගණන් ජනයා ජීවිතක්ෂයට පත්වුනා. අපි මියගිය අයගේ මළ කඳන් පහු කරමින් ඇවිද ගෙන හමුදා පාලන ප්‍රදේශයට ආවා. හමුදාව වෙත එනකොට අපි බියෙන් තමයි ආවේ. දෙවියන් වහන්සේ අපිට ආරක්ෂාව ලබාදෙයි යන විශ්වාසය මත තමයි එසේ පැමිණියේ. එසේ එන විට මගේ සැමියාට ෂෙල් ප්‍රහාරයක් එල්ල වී ඔහුගේ පාදයේ තුවාලයක් ඇති වුණා. එය සුළු තුවාලයක්. අපි එය රෙදි කෑල්ලකින් බැඳ හමුදා පාලන ප්‍රදේශයට ආවා. අවසන් යුද්ධයේදී අප විඳපු දුක - දෙමළ ජනතාව විඳපු දුක - වචනයෙන් විස්තර කළ නොහැකියි. එය හිතන කොට ඇඬෙනවා. එවැනි තත්ත්වයක් යළි කිසි දිනක අපිට ඇති නොවිය යුතුයි.
දෙමළ ජනතාවට හිමිවිය යුතු අයිතිවාසිකම් රජය විසින් ලබාදී තිබුණ නම් අපි මෙලෙස දුක් විදින්නට සිදුවෙන්නේ නැහැ. දැනට මේ රජය වුනත් දෙමළ ජනතාවගේ අයිතීන් ලබාදිය යුතුයි. අපි ඇඳි වස්ත්‍ර සමඟ පමණයි හමුදා පාලන ප්‍රදේශයට ආවේ. ඔවුන් තුවක්කු හා පිහි අමෝරා ගෙන අප දෙස බලා ගෙන හිටියා. ඔවුන් අපිව පිට්ටනියක රඳවා තිබ්බා. එම පිට්ටනියේ දැඩි අව් රශ්මිය මත පැය 4 ක් 5 ක් අපි එහි සිටියා. බීමට ජලය තිබුණේ නැහැ. හරියට දුක් වින්දා. එහි පැමිණි තරුණ තරුණියන් ඔක්කොම කැදවලා ප්‍රශ්න කළා. සමහර අයව රැගෙන ගියා. එසේ සිය දරුවන් යනවිට දෙමව්පියන් හඬා වැළපුණා. එම ශබ්දය අදටත් මගේ කන්වලට ඇහෙනවා.
ඉන්පසු සියලූ දෙනාගේම නම් අසා ඔවුන් අපිව ලියාපදිංචි කළා. වැඩි දුර ප්‍රමාණයක් අපිව පයින් එක්ක ගියා. පසුව බස් රථයකට නංවා කෑමට බනිස් ගෙඩියක් ලබා දුන්නා. ඉන් පසුව අපව ඕමන්තයි ප්‍රදේශයේ බස් රථයෙන් බැස්සුවා. එහිදීත් අපව ලියාපදිංචි කළා. එහි අපට ආහාර ලබා දුන්නා. ඉන්පසු වවුනියා කදිරගාමර් කඳවුරට රැගෙන ගියා. මේ තමයි ඔබගේ නිවස. නිවසේ රැඳී සිටින්නැයි අපට කීවා. පවුල් 4 කට අයත් 19 දෙනෙක් එම නිවස තුළ සිටියා. නිදා ගන්න ප්‍රමාණවත් ඉඩක් තිබුණේ නැහැ. වාඩිවෙන්නත් බැහැ. මෙසේ දුක් කරදර මැද්දේ අපි ජීවත් වුණා. නමුත් එය අපට ලොකු ප්‍රශ්නයක් වුණේ නැහැ.
2009 වසරේ මැයි මාසයේදී මෙම කඳවුරට පැමිණි අප මාස 5 ක් පමණ කාලයක් කඳවුරේ ජීවත් වුණා. ඔක්තෝබර් මාසයේ 1 වෙනි දින අපිව යළි පදිංචි කළා. අපගේ මුල් ගමට පැමිණියා. නිවසක් තනා දුන්නා. දැන් අපි සතුටින් ජීවත් වෙනවා. යුද්ධයේදී අපි විඳපු දුක අදත් නැවත සිතා බලනවා.
දැන් බලයට පත්වී සිටින යහපාලන රජය දෙමළ ජනතාවට ස්ථිර විසඳුමක් ලබාදිය යුතුයි. යහපාලනය සිදු වන නමුත් දෙමළ ජනතාවගේ ප්‍රශ්න තවමත් විසදිලා නැහැ. ඔවුන්ගේ ඉඩම් නැවත ලබාදිය යුතුයි. ඒවාගේම අනෙකුත් පහසුකම් රජය විසින් ලබාදිය යුතුයි. අතුරුදහන් වූ පුද්ගලයන් පිළිබඳ අද වන තෙක් කිසිම තොරතුරක් නැහැ. තමන්ගේ දරුවන්ට සිදුවූ දෙය ගැන සිතා අදත් දෙමව්පියන් දැඩි වේදනාවෙන් දුකින් ජීවත් වෙනවා. එමනිසා ඒ අතුරුදහන් වූ පුද්ගලයන් වෙනුවෙන් රජය විසින් වහාම ක්‍රියාත්මක වී ඔවුන්ගේ පවුල් වලට යුක්තිය ලබාදිය යුතුයි.
වත්මන් යුගයේ තරුණ පරම්පරාව මත්ද්‍රව්‍ය වලට ඇබ්බැහිවී සිටිනවා. එමනිසා මත්ද්‍රව්‍ය වලින් තොර ලෝකයක් බිහි කිරීමේ වගකීම අප සියලූ දෙනාටම තිබෙනවා. මේ සඳහා වැඩ කළ යුතුයි. දෙමව්පියන් වන අපි මේ ගැන උනන්දුවක් දැක්විය යුතුයි.
කේ. පාතිමා
ආන්ඩාන්කුලම්
ආට්කාට්ට්වේලි



கிருஸ்துராசா பாத்திமா ஆகிய நான் 1971ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் ஆண்டான்குளம் ஆட்காட்டி வௌி கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்தேன். எனது தாய் வீட்டுப் பணி. தந்தை கூலி வேலையினையே செய்துவந்தார். எனக்கு2 அண்ணன்களும் 3 அக்காக்களும். நான் கடைசி பிள்ளையாவேன். எனது சகோதரங்கள் மற்றும் நான் படிப்பினை முழுமையாக தொடரவில்லை. அப்பா கூலி வேலை செய்து வந்ததனால் எங்களை நன்றாக படிக்க வைக்கவில்லை. நான் 9ம் வகுப்புடன் படிப்பினை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளைப் பார்த்தேன். அம்மா கூலி வேலைக்கு போக வௌிக்கிட்டா.

நாங்கள் சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறோம். அண்ணாக்கள் வேலைக்கு போக வௌிக்கிட்ட பிறகு நாங்கள் ஒழுங்கா சாப்பிட்டனாங்கள். அதற்கு முதல் சாப்பாட்டுக்கே சரியான கஷ்டம். பேந்து நானும் வேலைக்கு போக வௌிக்கிட்டன். என்னால ஒவ்வொரு நாளும் வேலைக்கு போக முடியவில்லை. நான் தோட்டவேலை மற்றும் வீட்டு வேலையினையே செய்து வந்தேன்.

எனது சகோதரர்கள் எல்லோரும் கலியாணம் கட்டிப்போட்டினம். நான் தான் இறுதியான கலியாணம் கட்டினன். எனக்கு அப்பா அம்மா கலியாணம் கட்டி வைக்கவில்லை. நானாகத்தான் காதலிச்சுஅப்பா அம்மாவின்ட சம்மதம் இல்லாமல் கட்டினனான். கலியாணம் கட்டி ஒரு வருசத்திலயே எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அவர் கூலி வேலைக்குத்தான் போவார்.

என்ர மகளுக்கு ஒருவயது வரைக்கும்மட்டும் அவர் சந்தோசமாக இருந்தார். ஒவ்வொருநாளும் வேலைக்கு போய் வந்தார். பேந்து அவர் குடிக்க வௌிக்கிட்டார். வேலைக்கும் ஒழுங்கா போறது இல்லை. என்னை துன்புறுத்த வௌிக்கிட்டார். என்னடி நீ கொண்டு வந்தனி. என்று கேட்டு அடிச்சார். என்னால என்ன செய்யிறது என்டே தெரியலை. என்ர பிள்ளையினை வளக்க வேண்டும் என்று நினைச்சன். என்ர பிள்ளையினை பக்கத்து வீட்டில விட்டுட்டு வேலைக்குப் போக வௌிக்கிட்டன. அதுவரைக்கும் என்ர அம்மா அப்பா என்னோட கதைக்கிறது இல்லை. பேந்து ஒருநாள் நான் கஸ்டபடுறதை கேட்டுவீட்டுக்குவந்தாங்க. நான் படும் கஸ்டத்தினை எல்லாம் பாத்தாங்க. அம்மா சொன்னா நான் பிள்ளையப் பாக்கிறன். நீ வேலைக்குபோ என்டு சொன்னாங்க. நானும் வேலைக்கு போக வௌிகிட்டன். தொடர்ந்து எனக்குஇப்ப 4 பிள்ளைகள் இருக்கிறாங்க. அவங்களை நல்லா படிப்பிச்சிருக்கிறன். அவங்களும் கலியாணம் கட்டி நல்லா இருக்கிறாங்க.

ஆமிக்கும், இயக்கத்துக்கும் நிறைய தடவை சண்டை நடந்ததால நாங்க பல தடவை இடம்பெயர்ந்து பல கஸ்டங்களை அனுபவிச்சனாங்கள். ஆமிக்கும் இயக்கத்துக்கும் சண்டை நடந்ததினால நாங்க இடம்பெயர்ந்து மடுவுக்கு சென்றோம். அங்க எங்களுக்கு வீடு கட்டி இருக்க வசதி இல்லை. பள்ளிக்கூடத்திலையே இருந்தோன். பேந்து 2008ம் ஆண்டு மீண்டும் ஆமிக்கும் இயக்கத்துக்கும் சண்ட வந்திட்டுது. நாங்கள் இடம்பெயர வௌிக்கிட்டம். பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்கு இடம்பெயர்ந்தோம். அங்கேயே கன கிராமத்திற்கு சென்றனாங்கள். பின்னர் ஜெயபுரம், வன்னேரி, அக்கராயன், கிளிநொச்சி என இடம்பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தனாங்கள்.

நாங்கள் இடம்பெயரும் போது பல கஸ்டங்களை அனுபவிச்சனாங்கள். உணவு நீர் என்பதுக்கு சரியான கஸ்டம். என்னெண்டுதான் சாப்பிடாம உயிர் வாழ்ந்தோமோ என்று தெரியவில்லை. அந்த வாழ்க்கையினை நினைத்தால் இன்னும் அழுகைதான் வரும். ஆமிக்கும் இயக்கத்துக்கும் சண்டை நடந்தது. பெரும் அழிவுகளை சந்தித்தது நாங்கள்தான்.

ஆமிக்காரர் கொத்துக் குண்டு அடிச்சாங்க. அதால ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். நாங்க செத்தவங்கட உடம்ப எல்லாம் தாண்டிக் கொண்டு தான் ஆமிட்ட வந்தனாங்க. ஆமிட்ட வரும் போதும் சரியான பயம். என்ன நம்பிக்கையில இங்கால வந்தம். வரும் போது என்ர அவருக்கு செல் பீஸ் பட்டு காயம் காலில என்ன செய்வது சிறு காயம் தான். சறத்துணியினால கட்டிப் போட்டு வந்திட்டம். கடசி சண்டையின் போது நாங்கட்ட கஸ்டம், ஏன் தமிழ் மக்கள்பட்ட கஸ்டத்தினை சொல்லால சொல்ல முடியாது. அழுகைதான் வரும். இந்த நிலைமை இனி எங்களுக்கு வரக்கூடாது.

நாங்கள் தமிழ் மக்கள் எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளினை அரசாங்கம் குடுத்திருந்தால் நாங்கள் இப்படி துன்பப்பட்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இப்ப இந்த அரசாங்கம் என்டாலும் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். நாங்கள் போட்ட உடுப்புமட்டும்தான் கொண்டு ஆமிட்ட வந்தனாங்கள். அவர்களை பார்க்கவே எங்களுக்கு பயமாக இருந்தது. அவர்கள் துவக்கை நீட்டிக் கொண்டும் கத்தியினைக் காட்டிக் கொண்டும் இருந்தாங்க. எங்களை எல்லாரையும் பச்சை புல்மோட்டை வௌியில் அந்த வெளியில் இருத்தினாங்க. 4,5 மணித்தியாலம் நடு வெயிலில் இருந்தோம். குடிக்க தண்ணியும் இல்லை. சரியா கஸ்டப்பட்டோம். அங்க வந்த இளம் பெடி பெட்டயலை எல்லாம் கூப்பிட்டு விசாரிச்சாங்க. சில பேரை அவங்க கூட்டிக் கொண்டு போனாங்க. அவங்கட தாய் தகப்பன் கதறிய கதறல்கள் இன்மைக்கும் என்ர காதுக்குள்ள கேட்டுக் கொண்டே இருக்கு.

பேந்து எங்களை எல்லாம் பெயரைக் கேட்டு பதிஞ்சாங்க. நிறைய தூரம் நடத்திக் கூட்டிக் கொண்டு போனாங்க. எங்களை எல்லாம் பஸ்சில ஏத்தினாங்க. ஏத்தும் போது பனிஸ் தந்தாங்க. சாப்பிட்டுக் கொண்டு போனோம். பேந்து ஓமந்தையில இறக்கினாங்க. பதிஞ்சாங்க. அங்கை தந்தாங்க. சாப்பிட்டு இருந்தோம். பேந்து எங்களை கூட்டிக் கொண்டு போய் வவுனியா கதிர்காமர் முகாமுக்க விட்டாங்க. இதுதான் உங்கட வீடு இதுக்க இருங்க என்டாங்க. அந்த வீட்டுக்க நான்குகுடும்பத்தினைச் சேர்ந்த 19 பேர். அதுக்க படுக்கவும் முடியாது. இருக்கவும் முடியாது. என்ன செய்யறது பல கஸ்டத்தினை பட்ட எங்களுக்குஇதுபெரும் பிரச்சினையாக தெரியவில்லை.

2009ம் ஆண்டு 5ம் மாதம் கொடுக்க வந்த நாங்கள் 5 மாதம் முகாமுக்க இருந்தம். 10ம் மாதம் 2009ம் ஆண்டு எங்களை மீளக்குடியமர்த்தினாங்க. எங்கட சொந்த இடத்தில… இடமொன்று கட்டித் தந்தாங்க. நிறுவனம் இன்றுஇப்ப நாங்க கரன்ட் எடுத்து எல்லா வசதி வாய்ப்புக்களுடனும் சந்தோசமாக இருக்கிறம். போரின் போது பட்ட கஸ்டத்தினை இன்டைக்கும் நினைச்சு பாக்கிறதுதான்.

இப்ப வந்திருக்கிற நல்லாட்சி அரசாங்கமானது தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும். நல்லாட்சி இடம்பெறுகின்ற போதும் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அவர்களின் காணிகளும் இன்றும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இன்று காணாமல் போனவர்களின் தகவல்கள் எதுவும் இன்றுவரைக்கும் வௌியிடப்படவில்லை. அவர்களின் பிள்ளைகளின் நிலை குறித்து இன்றும் பெற்றோர் ஏக்கத்துடன் வாழ்ந்து வரும் நிலையே காணப்படுகின்றது. எனவே அவர்களுக்கான பதிலை அரசு விரைவாக வழங்க வேண்டும். அவர்களுக்கான நீதியையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை அரசுக்கு உரியதாகும்.

இன்றைய காலத்தில் இளம் சமூகம் போதைக்கு அடிமையாகி உள்ளது. எனவே போதை அற்ற உலகை உருவாக்க வேண்டிய பொறுப்பு எம் எல்லோருக்கும் உள்ளது. பெற்றோர்களாகிய நாங்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும்.

எனவே, இவ்வாறாக எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் என பல விடயங்களை எழுதிக் கொண்டே போகலாம்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License