No more war, please!

A woman from the Mannar district speaks of her experiences after being displaced by the war


යලිත් යුද්ධයක් අපිට එපා

මන්නාරම දිස්ත්‍රික්කයේ කාන්තාවක් යුද්ධයෙන් අවතැන්වීමෙන් පසු මුහුණදුන් අත්දැකීම් පිළිබඳ කතා කරයි


இனியும் ஒரு யுத்தம் வேண்டாம்

மன்னாரை சேர்ந்த பெண்ணொருவரின் இடப்பெயர்வு வாழ்க்கை தொடர்பான அனுபவ பகிர்வு



My name is A. Parameswary, born on 5th May 1970. My father’s name is Aiyathurai. I was born in Adamban. Father was a farmer. I have 9 siblings. My mother passed away of cancer when I was small. My father looked after me and my siblings after my mother’s death. My sister took me with her when she got married. She looked after me well and sent me to school as well. I studied at Koyilkulam Hindu College up to 5th grade.
Our father brought us to our own village Iththikkandal, Adamban. One of our brothers was killed by forces at the age of 25. And he was married with 3 kids.

In 1987, at the age of 18 I married for love. My husband was a fisherman and was from Puttalam. I had 4 kids-2 girls and 2 boys. The eldest one was born in Mannar. At the end of 1988 we all moved to my husband’s village Kalpity. My second son was born in Kalpity. My 3rd daughter was born in Vidakkatheevu Pallamadu. And the fourth daughter was born in Madu refugee camp.

First we were displaced to Erukalapity, Mannar in 1990 beginning. Then to Kuththikkandal, Adamban in 1990 latter part. From 1992 to 1994, we were in Thadchanamadu camp.

When we were displaced, UNHCR helped us with furniture. Then governments helped.
In 1996, we came to Iththikkandal. Then during the final war we moved again to Madu in 2006.

We stayed in Uyilankulam refugee camp which was under the government forces and then in Vavuniya until we settled in our own village after the war ended.
My house was flattened and destroyed when we came back. We managed to put up a temporary hut with the help of others. We cleaned our place and started living. In 2005, we received the housing project allocation and lived in that.

Now we have cows. My husband is doing farming and fishing. My kids are working. Now, we have a permanent house and are living happily. My youngest daughter is working for ‘Viluthu” foundation.

We are leading a safe life. When the Tigers ruled there were some good controls. But now there are no controls for young ones. They are falling prey for drinking, unwanted expenditure and travelling.

We don’t want any more war. We would like to live happily with freedom. We cannot experience any hardship any more.
We kindly request to release the prisoners in the detention camps.

A.Parameswary
Iththikkadal


මගේ නම ඒ.පරමේශ්වරී. උපන් දිනය 08.05.1970. පියාගේ නම අය්යාතුරේයි. මම ඉපදුනේ අඩම්පන් ප්‍රදේශයේ. මගේ පියා ගොවියෙක්. මට සහෝදර සහෝදරියන් 9 දෙනෙක් සිටිනවා. මගේ කුඩා කාලයේම මව පිළිකා රෝගයක් හේතුවෙන් මිය ගියා. මවගේ මරණයෙන් පසු මගේ පියා, මව හා මගේ සහෝදර සහෝදරියන් රැක බලා ගත්තා. මගේ සහෝදරිය විවාහ වීමෙන් පසුව ඇය සමඟ මාවත් එක්ක ගියා. ඇය මාව පාසල් යවා හොඳට බලා ගත්තා. මා කෝවිල්කුලම් හින්දු විද්‍යාලයේ 5 වෙනි ශ්‍රේණිය දක්වා අධ්‍යාපනය ලැබුවා.

පසුව අපගේ පියා අපගේ මුල් ගම වන අඩම්පන් ඉන්දික්කන්ඩල් ගම්මානයට මාව රැගෙන ආවා. යුද්ධයේදී මගේ සහෝදරයෙක් හමුදා වෙඩි පහරින් මිය ගියා. මිය යන විට ඔහුගේ වයස 35 යි. ඔහු විවාහ වී සිටි අතර, දරුවන් තිදෙනෙක් සිටියා.
1987 වසරේ මා වයස අවුරුදු 18 දී පෙම් සබඳතාවයකින් විවාහ වුණා. මගේ සැමියා ධීවර කර්මාන්තයේ යෙදී සිටියා. ඔහුගේ ගම පුත්තලම ප්‍රදේශය. මට දරුවන් 4 දෙනෙක් ඉන්නවා. පිරිමි දරුවන් දෙදෙනෙක් ඉන්නවා. ගැහැණු දරුවන් දෙදෙනෙක්. වැඩිමහල් දරුවා ඉපදුනේ මන්නාරමේ. 1988 අවසන් භාගයේ මගේ සැමියාගේ ගම වන කල්පිටිය ප්‍රදේශයට ගියා. දෙවෙනි පුතා ඉපදුනේ එහිදී තුන්වෙනි දුව පල්ලමඩු ප්‍රදේශයේ අප සිටින විට ලැබුණා. 4 වෙනි දුව මඩු ප්‍රදේශයේදී ඉපදුනා. බාලම දියණිය ඉපදෙන විට අපි සිටියේ මඩු කඳවුරේ.

පලමුවෙන්ම 1990 වසරේදී අවතැන්වී මන්නාරම එරුක්කලම්පිටි ප්‍රදේශයේ ජීවත් වුණා. එම වසරේ අවසානයේදී අඩම්පන් ඉන්දික්කන්ඩල් ගමේ සිටියා. පසුව 1992 සිට 1994 දක්වා තට්චිනාමඩු කඳවුරේ ජීවත් වුණා.

අවතැන්වී සිටි කාලයේදී UNHCR සංවිධානය ලී බඩු වැනි දේවල් ලබාදී අපට උදව් කෙරුවා. ඉන්පසු රජයෙන් යම් යම් සහනාධාර ලැබුණා. පසුව 1996 ඉන්දික්කන්ඩල් ගම්මානයට පැමිණියා. අවසන් යුද්ධ කාල වකවානුවේදී (2006) නැවතත් මඩු ප්‍රදේශයට ගොස් ආපදු ගමට ආවා.

2006 වසරේ හමුදා පාලනය යටතේ තිබූ උයිලම්කුලම් කඳවුරේ සිටියා. ඉන් ටික කලක් වවුනියා ප්‍රදේශයේ ජීවත් වුණා. යුද්ධය අවසානයේදී නැවත මුල් ගමට පැමිණ යළි පදිංචි වුණා.

අප අපගේ ගමේ යළි පදිංචි වීමට පැමිණි අවස්ථාවේ අපේ ඉඩම සම්පූර්ණයෙන් විනාශ වී තිබුණා. ගෙවල් කැඞී බිදී ගොස් තිබුණා. ඉන්පසු තාවකාලික නිවාස තනා ගැනීම සඳහා ටකරන් වැනි දේවල් ලැබුණා. අපේ ඉඩම පිරිසිදු කර එහි පදිංචි වුණා. 2005 වසරේදී නිවාස යෝජනා ක්‍රමයේ නිවසක් ලැබුණා. ඉන්පසු එම නිවසේ ජීවත් වුණා.

දැනට අප සතුව ගවයන් තිබෙනවා. සැමියා ධීවර කර්මාන්තය හා කෘෂි කර්මාන්තයේ යෙදෙනවා. මගේ දරුවනුත් දැන් වැඩ කරනවා. ස්ථිර නිවසකුත් අපිට තිබෙනවා. සතුටින් ජීවත් වෙනවා. මගේ බාල දියණිය විළිඳු රාජ්‍ය නොවන සංවිධානයේ වැඩ කරනවා.

ප්‍රජාව තුළ ආරක්ෂාකාරීව ජීවත් වෙනවා. කලින් පැවැති ආරක්ෂාව දැන් අපිට තිබෙනවා. දරුවනුත් අධ්‍යාපනය ලබා රැකියාවල යෙදී සිටිනවා.

කොටි සංවිධානය පැවැති කාලයේ ළමයින් යම් පාලනයකින් යුතුව හැසිරුණා. දැන් කිසිම පාලනයක් නැහැ. මත්පැන් භාවිතය, අනවශ්‍ය වියදම් කිරීම, ගමන් බිමන් යාම වැනි දේවල් වැඩිවෙලා තිබෙනවා.

රජය ගැන කිසිම වැරැද්දක් කියන්නට බැහැ. ස්ථිරසාර සාමයක් පවතින රටක ජීවත්වීමට කැමැතියි. නැවත අපට යුද්ධයක් එපා. නැවතත් දුක් කරදර වලට මුහුණ
පෑමට අපි කැමති නෑ. සාමයෙන්, නිදහසෙන් ජීවත්වීමට කැමතියි.
රඳවා ගෙන සිටින රැඳැවියන් නිදහස් කරන ලෙස ඉල්ලා සිටිනවා.

ඒ.පරමේශ්වරී
ඉන්දික්කන්ඩල්




எனது பெயர் அ. பரமேஸ்வரி. நான் 1970.5ஆம் மாதம் 8 ஆம் திகதி பிறந்தேன். அப்பாவின் பெயர் ஐயாத்துரை. நான் அடம்பனில் பிறந்தேன். எனது அப்பா விவசாயம் செய்து வந்தார். எனக்கு 9 சகோதரர்கள். எனது அம்மா நான் சிறுவயதில் இருக்கும் போதே புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். அம்மா இறந்த பின்பு எனதுதந்தை என்னையும் சகோதரர்களையும் பார்த்து வந்தார். என் சகோதரி திருமணம் முடித்த பின்னர்என்னை அவரோடுஅழைத்துச் சென்றார். என்னை அவர்வைத்து பாடசாலைக்குஅனுப்பி பராமரித்து வந்தார். நான் கோயில் குளம் இந்துக் கல்லூரியில் 5ஆம் தரம் வரை கல்வி கற்றேன்.

பின்னர்என் தந்தை எங்கள் சொந்த இடமான அடம்பன் இத்திக்கண்டலுக்கு எடுத்து வந்தார். எனது ஒரு சதோரன் யுத்தத்தின் போது இராணுவம் சுட்டு இறந்து விட்டார். அவர் இறக்கும் போது அவருக்கு 35 வயது. அப்போது அவருக்குத் திருமணமாகி 3 பிள்ளைகள் இருந்தனர்.

நான் 1987இல் எனக்கு18 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டேன். எனதுகணவன் கடற்றொழில் செய்து வந்தார். எனதுகணவன் புத்தளத்தைச் சேர்ந்தவர். பின் எனக்கு4 பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆண் பிள்ளைகள் 2 பெண் பிள்ளைகள். மூத்தப் பிள்ளை மன்னாரில் பிறந்தார். பின்னர் 1988 இறுதியில் எனதுகணவனின் சொந்த இடமான கற்பிட்டிக்குசென்றோம். என் இரண்டாவது மகன் அங்குதான் பிறந்தார். மூன்றாவது மகன் விடக்கத்தீவு பல்லமடுவில் பிறந்தார். 4வது மகன் மடுவில் பிறந்தார்.

என் கடைசி மகன் பிறக்கும் போது மடு முகாமில் இருந்தோம்.

முதல் முதலில் 1990இல் இடம்பெயர்ந்து மன்னார் எருகலப்பிடியில் இருந்தோம். பின் 1990 இறுதியில் இத்திக்கண்டல் இடம்பனில் இருந்தோம். பின் 1992இலிருந்து 1994 வரை தட்சனாமடு முகாமில் இருந்தோம்.

இடம்பெயர்ந்து இருந்த காலத்தில் யுஎன்.சி.ஆர் நிறுவனம் தளபாடங்கள் தந்து உதவியது. பின் அரசாங்கத்தினால் நிவாரண உதவிகள் கிடைத்தன.

பின்னர்1996இல் இத்திக்கண்டலுக்கு வந்தோம். பின் இறுதி யுத்தத்தின் போது மீண்டும் மடுவுக்கு போனோம். (2006) பின் திரும்பவும் சொந்த இடத்திற்கு வந்தோம். பின் 2006இல் இராணுவக் கட்டுப்பாட்டில் உயிலங்குளம் முகாமில் இருந்துபின் வவுனியாவில் இருந்து பின் இறுதி யுத்த முடிவின் போது மீள் குடியேறி சொந்த இடத்திற்கு வந்தோம்.

நாங்கள் மீள் குடியேறி வரும் போது எங்கள் நிலம் தரை மட்டமாகி இருந்தது. வீடுகள் உடைந்த நிலையில் இருந்தது. பின் தற்காலிக வீடுகள் அமைக்க தகரம் போன்றவற்றை தந்து உதவினார்கள்.

பின்னர் காணிகள் துப்பரவு செய்து காணியில் வாழ்ந்து வந்தோம். பின்னர் 2005இல் வீட்டுத் திட்டம் கிடைத்தது. பின்னர் வீட்டுத் திட்டத்தில் கிடைத்த வீட்டில் வாழ்ந்து வந்தோம்.

இப்பொழுது மாடுகள் வைத்து இருக்கிறோம். கணவர் கடற்தொழில் விவசாயம் போன்றவை செய்கிறார். என் பிள்ளைகளும் வேலை செய்கிறார்கள். இப்பொழுது நிரந்தரமான வீடு வைத்திருக்கிறோம். சந்தோசமாக இருக்கிறோம். எனது கடைசி மகள் விழுது நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம். முன்பு இருந்த பாதுகாப்பு இப்போது உண்டு. பிள்ளைகளும் படித்து தொழில் செய்கின்றார்கள்.

இயக்கம் இருக்கும் போது பிள்ளைகள் கட்டுப்பாட்டோடு இருந்தார்கள். இப்பொழுதுஎந்தவித கட்டுப்பாடும் இல்லை. மது அருந்துதல். வீணாக செலவு செய்தல் பிரயாணம் செய்தல் போன்றன அதிகம் காணப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு சொல்ல எதுவும் இல்லை. நாடு நிரந்தரமான சமாதானத்தோடு வாழ இருக்க விரும்புகிறேன். இனியும் ஒரு யுத்தம் வேண்டாம். இனியும் கஸ்டப்பட நாம் விரும்பவில்லை. சமாதானத்தோடு சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்.

தடுப்பில் உள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அ பரமேஸ்வரி
இத்திக்கண்டல்






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License