My son and I went to cut grass...
A mother from Samanthurai speaks about her most painful experience, the abduction of her son.
මමයි පුතායි තණකොළ කපන්න ගියා...
සමන්තුරේ ප්රදේශයේ මවක් ඇගේ දුක්බරම අත්දැකීම පිළිබඳ කතා කරයි, ඇගේ පුතුගේ අතුරුදහන් වීම
என் மகனும் நானும் புல் வெட்டுவதற்கு சென்றோம் ...
சம்மாந்துறையிலிருந்து வந்த ஒரு தாயார் தன் மகன் கடத்தப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்.
I was born in this house in Sammanthurai. I had 8 brothers. I married at the age of 16. I had 8 children. When they took my eldest son, he was 16. My husband was sick. So my son and I went to cut grass. Up to now, he is nowhere to be seen. The army told us, that they didn’t take him, when we persisted, they hit my husband.
මම ඉපදුණේ සමන්තුරෙයි දී මේ නිවසෙයි. මට සහෝදරයන් 8 දෙනෙක් සිටියා. මම වයස අවුරුදු 16 දී විවාහ වුණා. මට දරුවන් 8 දෙනෙක් සිටියා. ඔවුන් මගේ වැඩිමල් පුතා රැගෙන යනකොට ඔහුට වයස අවුරුදු 16 යි. මගේ සැමියා අසනීපෙන් හිටියේ. ඒ නිසා මගේ පුතායි මමයි තණකොළ කපන්න ගියා. අද වෙනතුරුත් ඔහු නැහඇ. හමුදාව අපිට කිව්වා, අපි එයාව අරගෙන ගියේ නැහැ, අපි දිගටම ප්රශ්න කරගෙන යනකොට මගේ සැමියාට පහර දුන්නා.
நான் சம்மாந்துறை. இந்த வீட்டிலதான் பிறந்தது. சகோதரர்கள் அண்ணன் தம்பிமார் 08 பேர். 16 வயதிலேயே எனக்கு கல்யாணம் கட்டித் தந்தது. அவருக்கு வருத்தம், எனக்கு விருப்பமில்ல. அவர் நல்லாதான் பார்த்தார். எனக்கு மொத்தம் 8 பேர் பிள்ளைகள். மூத்த மகன கொண்டு போகேக்க அவருக்கு 16 வயது. தகப்பனுக்கு (கணவர்) வருத்தம் அதனால அவரும் (மகன்) நானும் புல்லு புடுங்க போறது. 10 மணிக்கு வெளியில போனவர். இங்க செட்அப் செய்து வைச்சிட்டாங்க கொண்டு போறதுக்கு. இற்றவரைக்கும் அவர் இல்ல காணாமல் போனவர் இல்லன்னு பதிவெல்லாம் வச்ச. இல்ல இல்ல என்று சொல்ல கேட்காம திருப்பி திருப்பி கேட்க ராணுவம் அவருக்கு அடிச்சி போட்டாங்க.
Even if we get justice, there is no use. The police asked us for records. My son had nothing. They told us to come to Vanchikuda, Annamalai to register. I registered. We got nothing from it. There was no action taken. If my son comes back alive, that is the only thing that I want.
අපි යුක්තිය ලබා ගත්තත්, කිසිම වැඩක් නැහැ. පොලිසිය අපෙන් ලියකිවිලි ඉල්ලුවා. මගේ පුතාට කිසිම දෙයක් තිබුණේ නැහැ. අපිට වන්චිකුඩා, ආනාමාලෙයි වලට එන්න කිව්වා ලියාපදිංචි වෙන්න. අපිට ඒකෙන් කිසිම දෙයක් ලැබුණේ නැහැ. කිසිදු ක්රියාමාර්ගයක් අරගත්තේ නැහැ. මගේ පුතා ජීවතුන්ව ආයෙත් එනවා නම්, ඒක තමයි අපිට අවශ්ය.
நியாயம் கிடைச்சு என்ன செய்ய. பொலிசால வந்து பதிவெல்லாம் கேட்டாங்க. இவருக்கு ஒன்டும் இல்ல. வாஞ்சிக்குடா அண்ணாமலைக்கெல்லாம் வந்து பதிய சொன்னாங்க. பதிஞ்சி கொடுத்திருக்கிறன். அதால எதுவிதமானதும் கிடைக்கல. அதற்குப் பிறகு ஒரு நடவடிக்கையும் எடுக்கல. உயிரோட எப்ப வந்தாலும் என்றுதான் இருக்கு.
My other son met with a motor bike accident and died after 13 days in the ICU. It’s been 5 years. My husband died in 2004. My two younger brothers were captured and taken to Veeramunai and were burned.
මගේ අනෙක් පුතා මෝටර් සයිකල අනතුරකට හමුවී ඉන් දින 13 කට පසුව මිය ගියා. අවුරුදු 5 ක් ගත වෙලා. මගේ ස්වාමිපුරුෂයා 2004 දී මිය ගියා. මගේ බාල සොහොයුරන් දෙදෙනාව අල්ලාගෙන වීරමුනේයි ප්රදේශයට ගෙන ගොස් වෙඩි තියලා මරලා දැම්මා.
மற்ற மகன் மோட்டர் பைக்கில இருந்து விழுந்து அடிபட்டு 13 நாள் ஐ.சி.யூ வில் இருந்து செத்தவர் 5 வருடம் ஆயிற்று. எங்கட வீட்டுக்காரர் 2004 இல செத்தவர். எங்கட தம்பிமார் இரண்டு பேர் மார்கெட்டுக்கு போனவங்க பிடிச்சி கொண்டு போய் வீரமுனையில இருத்தி பத்த வச்சிட்டு போயிட்டாங்க. தம்பிமார் 3 பேர் இல்ல.
In 1990, there was heavy fire around. We couldn’t also stay and moved from our town. There were checkpoint everywhere. My father, mother and my children went and I was pregnant with the fourth child. We walked, got on to a tractor and got down at Attalaichenai and walked again to aunty’s place at Akkaraipatru. I gave birth to the child. From there we had to run and faced many difficulties. My father died at the camp.
1990 දී විශාල ගින්නක් ඇති වුනා. අපේ නගරයේ ඉන්න බැරිවුනා එ නිසා අපි එහෙන් ගියා. සෑම තැනකම මුරපොලවල් තිබුණා. මගේ තාත්තා, අම්මා සහ මගේ දරුවන් ගියා. මම සිව්වන දරුවා ගැබ්ගෙන සිටියේ. අපි ඇවිදලා, ට්රැක්ටරයට නැග්ගල අට්ටාලිචේනියට, එතනින් පස්සේ ඇවිදගෙන ගියා අකකරේයිපත්තුවල මගේ නැන්දාගෙ ගෙදරට. එහේ මට දරුවා ලැබුනා. එතැන් සිට අපි බොහෝ දුෂ්කරතාවලට මුහුණ දුන්නා. මගේ තාත්තා කඳවුරේදී මියගියා.
1990ம் ஆண்டு வெடி சுட்டு வாராங்கள். சனமெல்லாம் போயிட்டு நாங்க இருக்க ஏலாது எண்டு போனது. செக்கிங் நடக்குது. நானும் அப்பாவும் அம்மாவும் 3 பிள்ளைகளும் போறம். 4வது பிள்ள வயத்தில. நடந்து போய் மிசின் பெட்டியில போய் அட்டாளைச்சேனையில் போய் இறங்கி அங்கிருந்து நடந்து அக்கரப்பத்தில அன்ரியிட வீட்டுக்குப் போனம். அங்க எனக்கு பிள்ள பிறந்தது. அங்கேயும் ஓட்டம்தான். கஸ்டம்தான். அப்பாவும் இறந்திட்டார் முகாமில.
When we came back, there was nothing. My house was vandalized. The Muslims did it with the help of the army. There was no house for us to live. The government gave us 25000/=. We did the roof with it.
අපි ආපසු පැමිණි විට කිසිවක් නැත. මගේ ගෙදර විනාශවෙලා තිබ්බේ. මුස්ලිම්වරුන් ඒක කළේ හමුදාවත් එක්ක එකතුවෙලා. අපිට ජීවත් වෙන්න තැනක් තිබුණේ නැහැ. ආණ්ඩුව අපට ලබා දුන්නේ 25000 / =. අපි එකෙන් වහල හදාගත්තා.
மறுக நாங்க வந்த நேரம் ஒன்றுமே இல்ல. வீடெல்லாம் அடிச்சி உடைச்சி இருந்தது. அது மூஸ்லீம் ஆட்கள்தான். ராணுவத்துடன் சேர்ந்துதான் மூஸ்லீம் ஆட்கள் செய்தது. குடியமர்த்தக்க வீடெல்லாம் இல்ல. அரசாங்கத்தால 25 ஆயிரம் கொடுத்தவங்க. அதில கூரை எல்லாம் இணைச்சி செய்து நாங்க இருந்த.
I always went ahead like a male. I had that kind of courage. I still have it. I built the fence alone and collect grass alone. I used to pack 25-30 sacks of paddy. As I was brave, I educated my children up to O/Ls. Our time has gone. Our children’s future should be better than the hardships we faced.
මම හැම විටම පිරිමියෙක් වගේ ඉදිරියට ගියා. මට එවන් ධෛර්යයක් තිබුණා. මට තවමත් එය තියෙනවා. මම තනියම තමයි මේ වැට හැදුවේ, තණකොළ එකතු කරන්නේත් තනියම. මම වී ගොයම් 25-30 ක් ඇසුරුම් කරා ඉස්සර. මම නිර්භීතව, මගේ දරුවන්ට උගන්න ගත්තා. අපේ කාලය දැන් ඉවරයි. අපි මුහුණ දුන් ප්රශ්න නැති හොඳ අනාගතයක් අපේ දරුවන්ට ලැබිය යුතුයි.
ஒரு ஆம்பிள மாதிரி நான் முன்னுக்கு நிப்பன். ஒரு ஆம்பிள மாதிரி தைரியம் அந்த நேரம். இப்பவும் அந்த தைரியம் இருக்குதான். வேலி கட்டுறதும் தனியாதான் நான் கட்டுவன். புல்லுக்கு போறனான். நெல்லு 25 மூட்டை 35 மூட்டை கட்டுறனான். பிள்ளைகளையும் கூட்டிப் போறனான். தைரியமாய் இருந்ததால் தான் மக்கள வளர்த்து O/L வரைக்கும் படிக்க வச்சன். எதிர்காலத்தில நம்ம எப்படி இருந்தாலும் நம்மட பிள்ளைகள் நல்லா இருக்கணும். நம்மட காலமெல்லாம் போயிட்டு நம்ம கஸ்டப்பட்டது போல இல்லாம நல்ல வாழ்க்கை கிடைச்சி நம்மட பிள்ளைகள் எதிர்காலம் நல்லா இருக்கணும்.