The group asked for one person..
A woman from the Salampan village speaks about the sacrfices she made to save her sisters
ත්රස්ත කල්ලිය ගෙදරකින් එක්කෙනෙක්ව දෙන්න කිව්වා..
සලම්පාන් ගම්මානයේ කාන්තාවක් ඇය ඇගේ බාල සහෝදරියන් රැක ගැනීමට කල කැපකිරීම් පිළිබඳ කතා කරයි
குழு வீட்டுக்கு வந்து ஒரு நபர் கேட்டார் ..
சாலம்பன் கிராமத்தில் இருந்து ஒரு பெண் தன் சகோதரிகளை காப்பாற்றுவதற்காக செய்த புனித நூல்களைப் பற்றி பேசுகிறார்
My father is unable to do anything as he was burnt at the age of 3 and he has a nervous disorder. He has no male children and I am the eldest. There were 3 sisters after me. I looked after my father. My mother used to make Chili powder and pound flour to raise us. I go to work and also to school. During the conflict a group came to the house and asked for one person from our home to fight the war. I was about to sit for the O/L exam. So I decided to go instead of my sister, as they had to study. They told me to give my name and a date, so I said April 7th. I told my parents that if I didn’t go they would take my sisters and went to them in August 2006.
පියා නොහැකියාවට පත්වූ කෙනෙක්, එ ඔහු වයස අවුරුදු 3 දී ගින්නට පිළිස්සුණු නිසා ස්නායු දුර්වලවීමකින්. පිරිමි දරුවෝ නැහැ. මම තමයි වැඩිමහලා. මගෙන් පස්සෙ නංගිලා තුන්දෙනයි. පියාගේ කුඹුරු වැඩ සියල්ලක්ම කරන්නෙ මමයි. අම්මා මිරිස් කුඩු කොටලා, පිටි කොටලා තමයි අපිව ජීවත් කෙරෙව්වේ. මම වැඩට යනවා. ඉස්කෝලෙ යනවා. යුද්ධ කාලයේ O/L ලියලා ගෙදර ඉන්නකොට තමයි ත්රස්ත කල්ලිය ඇවිල්ලා ගෙදරකින් එක්කෙනෙක්ව අල්ලනවා කියා කියනවිට, නංගිලා ඉගෙන ගත්තදෙන්, මම එනවා කියා කීවා. එවිට මගේ නම ලියාගෙන ඔබ කැමැති දිනයක් දෙන්න කිව්වා. එවිට මම අප්රේල් 07 වෙනිදා දුන්නා. මම සතුටින් අම්මා තාත්තා ඉදිරියේ මම නොගියත් නංගිලාව අල්ලාගෙන යන නිසා 2006 වර්ෂයේ 08 වැනි මාසයේ ගියා.
அப்பா ஏலாத ஆள்.அப்பாவிற்கு 3 வயதில் நெருப்பில் எரிந்ததால் நரம்பு தளர்ச்சி மாதிரி ஆம்பிள பிள்ளை இல்ல. நானதான் மூத்தவள். எனக்கு பிறகு 03 தங்கச்சிமார். அப்பாவோட வெள்ளாமை வேலை செய்வது சகலதும் நான்தான். அம்மா தூள் இடிச்சி மாவிடிச்சுதான ;எங்கள வளர்த்தது நான் வேலைக்கு போறது ஸ்கூலுக்குப் போறது ஆண்டான் குளத்திற்கு நடந்து போய்தான் படித்தது. யுத்தகாலத்தில் ழுஃடு எழுத போகும்போதுதான் இயக்கம் வந்து வீட்டிற்கு ஓர ஆள் பிடிக்கிறண்டு சொல்லும்போது தங்கச்சிமார் படிக்கட்டும் நான் வருவன் என்டபோது என்ட பெயரை எழுதி நீங்க விரும்பிய டேட்ட தாங்க என்று சொன்னபோது நான் சித்திரை மாதம் 7ம் திகதியை கொடுத்தேன் நான் சந்தோசமாக அப்பா அம்மாவிற்கு முன்னால் நான் போகாட்டியும் தங்கச்சியை பிடிப்பார்கள் என்பதானல் 2006ம் ஆண்டு 8ம் மாதம் போனேன்.
We had to get up at 4 a.m. and run 15 rounds. Everyone cried and I was also cried. They told me that if I didn’t run they would take my sister so I ran. I cried so much. I did the exercise without eating or drinking water sometimes. I had to walk across a high wire as high as the electricity wires. There was fire and we had to cross it. I knew that these kinds of exercises couldn’t be done by my sisters - that’s why I joined. They put us in the Muhamalai front lines in July 2007. We were 100 meters infront of the army. We ate only vadai and water for 5 days.
පුහුණු කඳවුරට එක්කගෙන ගියා. 4.00ට නැගිටින්න ඕන. රවුම් 15ක් දුවන්න ඕන. හැමෝම අඬ අඬා ඉන්නකොට ඔයගොල්ලො රවුම් දුවන්නෙ නැත්නම් නංගිලාව උස්සනවා කියා කියපු නිසා මම කරන්නම් කියලා අඬ අඬා කෑමක් බීමක් නැතිව හරියට දුක් විඳලා පුහුණු වුණා. කරන්ට් වයර් තිබෙන උසට නගින්න ඕන. රිම් වගේ එකක් ඇතුළේ ගින්දර පත්තු වෙනවා. ඒකට උඩින් පනින්න ඕන. ඒ වාගේ පුහුණු අපේ නංගිලාට කරන්න බැරි නිසා තමයි මම නැවතුණේ. 2007 වර්ෂයේ 07 වැනි මාසයේ මුගමාලෙයි ලයින් එකට දැම්මා. එහෙදිත් දුක් විඳලා ආමි එකේ ඉඳලා මීටර් 100 යි. දවස් 5ක් වඩේ එකකුයි, වතුර පැකට් එකකුයි එනවා. ඒවා කකා හිටියා.
பயிற்சி முகாமிற்கு கூட்;;டிக் கொண்டு போனார்கள் 4 மணிக்கு எழும்போனும். 15 ரண் ஓடோனும். ஏல்லோரும் அழுது கொண்டிருக்க நானும் அழுது கொண்டிருக்க நீங்க ரன் ஓடாட்டி தங்கச்சியை தூக்குவம் என்று சொன்னதால் நான் செய்வன் என்று சொல்லி அழுது அழுது சாப்பாடில்லாமல் தண்;ணீர் இல்லாமல் சரியான கஸ்டப்பட்டு பயிற்சி எடுத்தனான்.கரண்ட் வயர் இ:ருக்கிற உயரத்திற்கு நடக்கணும். ரிம் மாதிரி ஒன்றுக்குள்ள நெருப்பு எரியும். ஆத தாண்டனும். ஆப்படியான பயிற்சிகளை எங்கட தங்கச்சிகள் எடுக்காது எண்டுதான் நான் நிண்டது.2007 ஆணடு 07ம் மர்தம் 9ம் திகதி முகமாலை லைனில் விட்டார்கள் அங்கையும் கஸ்டப்பட்டு ஆமியில் இருந்து 100 மீட்டர் 5 நாள்; நின்று ஒரு வடை தண்ணீர் பக்கட் வரும் அத சாப்பிட்டுகொண்டு இருந்தது
I was hit on my leg and was taken to Kilinochchi Hospital. I was there for 15 days. Again I went to Muhamalai and worked as a driver. Again I was hit in the chest, wounded and stayed in Matale Hospital. When everybody went to the camp, I joined my father and mother there. When we went from there, a shell fell near us. My father and mother got injured. My sister got shrapnel in her lungs and died. They told us even if you were with the group for one day, we had to go to the camp. When my mother got to know that I had to go to the camp coupled with the death of my sister, that made her crazy. But if one marries in the camp, then the Government won’t take me to a detention camp. So I was married in a Hindu tradition in the camp.
කකුලෙ කිලිර් එකක් වැදිලා තුවාල වෙලා කිලිනොචිචි හොස්පිටල් එකට ගත්තා. දවස් 15ක් එහේ ඉඳලා ඊට පස්සෙ මුගමාලෙයි වලට අරගෙන ඩ්රයිවර් කෙනෙක් හැටියට වැඩ කළා. මට ආයෙත් පපුවට වැදිලා තුවාල වෙලා මාතලේ හොස්පිටල් එකේ තියාගෙන හිටියා. අන්තිමට හැමෝම කඳවුරට ගිය වෙලාවේ මම අම්මා තාත්තා සමඟ එකතුවුණා. මෙහෙ ඉඳලා යනකොට ශෙල් වැදිලා අම්මා තාත්තා නංගී ඔක්කෝටම තුවාල වෙලා තිබුණා. එක නංගි කෙනෙකුට ස්වසන පද්ධතියේ රවුන්ස් වැදුණු නිසා මැරුණා. දවසක් ත්රස්ත සංවිධානයේ හිටියත් පුනරුත්ථාපන කඳවුරට එන්න ඕන කියලා කියපු හැටියේ නංගිත් මැරුණු නිසා අම්මා පිස්සුවෙන් වාගේ කඳවුර ඇතුළෙ දුවන්න පටන් ගත්තා. විවාහ කර ගත්තොත් පුනරුත්ථාපන කඳවුරට රැගෙන යන්නෙ නැහැ. ඒනිසා කඳවුර ඇතුළෙ සිටියදීම හින්දු ආගමේ සම්ප්රදායට අනුව මගේ විවාහය සිදුවුණා.
காலில் கிளிர் ஒன்று அடிச்சு காயப்பட்டு கிளிநொச்சி nஉறாஸ்பிட்டலுக்கு எடுத்தார்கள். 15 நாள் அங்கிருந்து பின்னர் முகமாலைக்கு எடுத்து பிறகு டிரைவராக இருந்தேன். திரும்ப பொக்ஸ் அடித்து நெஞ்சில் காயப்பட்டு மாத்தள nஉறாஸ்பிட்டலில் வைத்திருந்தார்கள். கடைசியாக எல்லாரும் முகாமிற்கு போனபோது நான் அம்மா அப்பாவுடன் சேரந்து விட்டேன் இங்கிருந்து போனபோது ஷெல் விழுந்து அப்பா அம்மா தங்கச்சி எல்லோருக்கும் காயம். ஒரு தங்கச்சிக்கு சுவாசப்பையில் ரவுண்ட்ஸ் பட்டதால் செத்திட்டா ஒரு நாள் இயக்கத்தில் இருந்தாலும் சரி தடுப்பு முகாமிற்கு வரவேணும் என்று சொல்லிட்டாங்க. என்னை தடுப்பு முகாமிற்கு கொண்டு போகப் போகிறார்கள் என்றதும் தங்கச்சியும் செத்ததால் அம்மாவிற்கு லூஸ் மாதிரி ஆகி விட்டது. முகாமிற்குள் ஓட வெளிக்கிட்டா கல்யாணம் செய்தால்தான் தடுப்புக்கு ஏத்த மாட்டார்கள் என்பதால் முகாமில் சைவ முறைப்படி கலியாணம் நடந்தது
I came to Salman Village in 2010. Our bishop built us a house. I have a bullet inside me and they say that even if it is taken out, I will face problems. Even after marriage, I faced many difficulties as I did in my childhood. There was harassment from CID. When I was in the camp they asked me often where I stayed and with whom I stayed when I was in the group. Even after coming here, I face this harassment. All the missing persons and those who were taken - where are they, are they dead or alive? If they are alive, there should be evidence for that. We expect justice. Even if they give 5 or 10 rupees, it should be given equally. Equal rights for all.
2010 දී සාල්මන් ගම්මානයට ආවා. පූජ්ය රදගුරුතුමා ගෙයක් හදලා දුන්නා. විවාහ කරගත්තට පස්සෙත් ප්රශ්න තමයි. මගේ ඇගේ උන්ඩයක් තිබෙනවා. ඒක ඉවත් කළත්, නොකළත් ප්රශ්න කියලා කියනවා. පුංචි කාලෙ කොචිචර දුක් විඳගෙන හිටියද ඒ විදියටම තමා බැන්දට පස්සෙත් දුක් විඳලා තිබෙනවා. CID එකේ කරදර එක පැත්තකින්. බොහෝ දුරට කඳවුරේ සිටි කාලයේ නිතර නිතර කථාකරලා ත්රස්ත සංවිධානයේ හිටියද, කාත් එක්කද හිටියේ කියා අහලා සටහන් කරගන්නවා. මෙහෙ ආවට පස්සෙත් ඒ වාගේ කරදර තිබුණා. අතුරුදහන්වූ අය, අල්ලාගෙන ගිය අය කෝ ! ඔවුන් ඉන්නවාද මැරිලාද ඉන්නවා නම් ඒවාට අදාල සාධක පෙන්වන්න ඕන. සාධාරණය කියලා ඒක තමයි බලාපොරොත්තු වෙන්නෙ. රුපියල් 5ක් දුන්නත් 10ක් දුන්නත් සමානව දෙන්න ඕන. හැමෝටම සමාන අයිතිවාසිකම් ලබාදෙන්න ඕන.
2010 இல சால்மன் கிராமம் வந்தோம். பிஷப்பால வீடு கட்டித்தந்தார்கள்.கலியாணம்செய்த பிறகும் கஸ்டம்தான். எனக்கு ரவுண்ட்ஸ் ஒன்று இருக்கு எடுத்தாலும் பிரச்சனை எடுக்காட்டியும் பிரச்சனை என்கிறார்கள்.சின்னன்ள எப்படி கஸ்டப்பட்டு இருந்தேனோ அப்படித்தான் கலியாணம் கட்டினபிறகும் கஸ்டப்பட்டு இருக்கிறன். ஊஐனு மாரின் தொல்லை அதிகம் முகாமில் இருந்தபோது அடிக்கடி கூப்பிட்டு இயக்கத்தில் இருந்தாயா யாரோட இருந்தாய் என்று விசாரிப்பது பதியிரது இங்க வந்த பின்னரும அப்படியான தொல்லை இருந்தது காணாமல் போன ஆட்கள் கொண்டு போன ஆட்கள் எங்க. அவர்கள் இறந்திட்டார்களா இருக்கிறார்களா இருந்தால் எங்க அதற்கான அத்தாட்சிய காட்டணும். நீதி என்றால் அதத்தான் எதிர்பார்க்கிறன். 5 ருபா கொடுத்தாலும 10 கொடுத்தாலும் சமமாக கொடுத்தல் வேண்டும். எல்லாருக்கும் சம உரிமை கொடுத்தல் வேண்டும்ஃ
All politicians will come to your doorstep and tell you that they would do this and do that. But after they leave, we never see them. After they get votes, they won’t see us either. It shouldn’t be like this. We have created a women’s political organization called “The good governance” and there are 10 of us, including me standing for election. First they said that they won’t let us stand but when we asked as an organization, they gave us the forms. There were 1000 votes. Our parish priest supports us. I will win and do something. When I go anywhere or for any meeting, my husband never asks me anything. He says that he will look after the children, and tells me to go. I have to thank my husband for my progress. I have to thank my husband and God.
දේශපාලඥයින් ඔක්කෝම දොරකඩට ඇවිල්ලා ඉන්නවා. ඔයගොල්ලන්ට ඒක කරන්නම්, මේක කරන්නම් කියනවා. දොරකඩ පසු කරගෙන ගියාට පස්සෙ දකින්න හම්බවෙන්නෙත් නැහැ. ඡන්දෙ ගත්තට පස්සේ අපිව අමතකයි. මෙහෙම වෙන්න ඉඩ දෙන්න බැහැ යහ පාලනය කියලා සංවිධානයක් පිහිටුවාගෙන තියෙනවා. මාත් එක්ක කාන්තාවො 10 දෙනෙකු ඡන්දෙ ඉල්ලනව. මුලදි දෙන්නෙ නැහැ කිව්වා. පසුව සංවිධානය මගින් ඉල්ලූවාට පස්සෙ දුන්නා. ඡන්ද 1000ක් තිබෙනවා. පූජක තුමා අපිට උදව් කරනවා කියලා තියෙනවා. මම දිනලා මොනාම හරි දෙයක් කරනවාමයි. මම කොහේ ගියත් රැස්වීමකට කියා ගියත් මගේ ස්වාමි පුරුෂයා ඇයි කියලා අහන්නෙ නැහැ. මම ළමයි ටික බලා ගන්නම් ඔයා ගිහිල්ලා එන්න කියලා තමයි කියන්නෙ. මම මෙතරම් දුරට දියුණුවීම ගැන මගේ ස්වාමි පුරුෂයාට තමයි ප්රශංසා කරන්න ඕන. දෙවියන් වහන්සේටත් මගේ ස්වාමි පුරුෂයාටත් ස්තුතිවන්ත වෙන්න ඕන.
எல்லா அரசியல்வாதிகளும் வாசலுக்கு வந்து நிற்பார்கள். உங்களுக்கு அது செய்வோம்ää இது செய்வோம் என்று நிற்பார்கள். வாசலை விட்டு போனபின்னர் அவர்களை காண முடியாது. வாங்கி முடிய அவங்க யாரோ நாங்க யாரோ அப்படி இருக்கக் கூடாது நல்லாட்சி என்ற பெண்கள் அமைப்பொன்றை உருவாக்கி பெண்கள் 10 பேர் எலெக்ஷன் கேட்கிறோம். அதில் நானும் கேட்கிறேன். முதலில் தரமாட்டேன் என்று கூறி பின்னர் அமைப்பு ஊடாக கேட்டதும் பேர்ம் தந்திட்டினம் 1000 வோட்ஸ் இருக்கு எங்கட பங்குத் தந்தையும் சப்போட்டாக இருக்கிறார். வெல்லுவன் செய்வன் நான் எங்க வெளிக்கிட்டாலும் கூட்டம் என்று வெளிக்கிட்டாலும் கணவர் கேட்பதில்லை நான் பிள்ளைகளை பார்த்துக் கொள்றன் நீ போ எனறுதான் சொல்வார். நான் இவ்வளவு முன்னேற்றத்திற்கு வந்ததற்கு கணவரைத்தான் பாராட்ட வேண்டும். கடவுளுக்கும் கணவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.
A memorial should be built, but not to bring up the past memories. The army should leave the graves alone. Even if they don’t rebuild them, they must still not be there. When people go there to cry, when they let out all the pain from their minds, even if they simply light a candle, they will find relief. If they don’t, they will keep it all in their minds and they will be mentally affected. If peace has to prevail, all of us should be united without religion or ethnicity. Justice and freedom should be achieved. They said good governance will undo the economic hardships. Everyone should do what they said they will, even if it is the President.
අනිවාර්යෙන්ම ස්මාරක ඉදිකරන්න ඕන. පැරණි මතකයන් සිහිපත් කරන්නට නෙමෙයි. ද්රවිඩ සටන්කාමීන්ගේ සොහොන් බිමෙන් හමුදාව ඉවත් වෙන්නට ඕන. නැවත ඉදිකර නොදුන්නත් එම ස්ථානයෙන් ඉවත්වෙන්න ඕන. එතනට ගිහිල්ලා හඬාලා විලාප තියලා හිතේ දුක නිවා ගත්තොත් ඔවුන්ට ප්රශ්නයක් නැහැනේ. හිතේ තියාගෙන ඉඳලා ඉඳලා අන්තිමට මානසික රෝගීන් වෙලානෙ එන්නෙ. ඉටිපන්දමක් අරන් ගිහිල්ලා පත්තු කරලා ආවොත් හිතට සැනසුමක් දැනෙනවා. සාමය උදාවීමට නම් සියලූ දෙනාම ජාතී ආගම් භේදයක් නොබලා සමගියෙන් ඉන්න ඕන. සාධාරණය හා නිදහස ලැබෙන්න ඕන. යහපාලන ආණ්ඩුව පත්වුණොත් ආර්ථික ප්රශ්න අඩු කරනවා කිව්වා. ජනාධිපති වුණත් හරි කව්රුවුණත් හරි කියන දේ කරන්න ඕන.
கட்டாயம் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். பழைய நினைவுகளை கொண்டு வாரதற்கு என்று இல்ல.துயிலும் இல்லத்தில் இருந்து ராணுவம் எழும்ப வேண்டும். பழையபடி கட்டித் தராட்டியும் கூட அங்க இருக்கக் கூடாது. அங்கு சென்று கதறி மனதில் உள்ளதை வெளிக் கொணர்ந்து விட்டால் அவர்களுக்கு பிரச்சனை இல்லைதானே.மனதுக்குள்ளேயே போட்டு போட்டு வைத்து கடைசியா மனநிலை பாதிக்கப்பட்ட ஆளாகத்தானே வருவாங்க. ஒரு மெழுகுதிரியை கொண்டு போய் கொழுத்தி விட்டு வந்தால் திருப்தியாக இருக்கும் சுமாதானம் நிலவ வேண்டும் என்றால் எல்லாரும் இன மதம் என்று பராமல் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும் நீதியும் விடுதலையும் கிடைத்தல் வேண்டும் நல்லாட்சி அரசாங்கம் வந்து பொருளாதார நெருக்கடியை குறைப்போம் என்றார்கள். ஐனாதிபதி என்றாலும் சரி யார் என்றாலும் சரி சொல்வதை செயற்படுத்த வேண்டும்