I faced unbearable hardships..
A mother from Kumanaykulam speaks about her painful unforgettable experiences from the war
මට දරාගත නොහැකි දුෂ්කරතාවන්ට මුහුණ දුන්නා..
කුමනේකුලම් ප්රදේශයේ මවක් ඇයට අමතක කල නොහැකි කුරිරූ යුද්ධයේ මතකයන් පිළිබඳ කතා කරයි
நான் தாங்க முடியாத கஷ்டங்களை எதிர்கொண்டேன்..
கன்னம்குளூலிலிருந்து வந்த ஒரு தாயார் போரில் இருந்து மறக்க முடியாத அனுபவங்களைப் பற்றி பேசுகிறார்
There were 8 girls and 4 boys in my family. My father didn’t work, so I went to work at 19. I worked in the filed harvesting and seeding. I married at the age of 29. He treated me well for 5 years. Then in 1993, he went off with another woman, leaving me and my children. I swore that even if I beg, I would raise my children well, for him to see, and had nothing to do with him after that.
අපේ පවුලෙ ගැහැණු දරුවො 8 දෙනයි. පිරිමි සහෝදරයින් 4 දෙනයි. තාත්තා හොඳ නැහැ. හම්බකරලා දෙන්නෙ නැහැ. මම වයස අවුරුදු 19 දී වැඩට ගියා. ගොයම් කපන්නයි, හිටවන්නයි ගියේ. වයස අවුරුදු 29 දී මම විවාහ වුනා. අවුරුදු 5ක් මට හොදට සැලකුවා. 1993 වර්ෂයේ මාවයි දරුවො ටිකයි අතහැරදාලා වෙනත් ගැහැණියක් එක්ක පැනලා ගියා. මම එයාට දිවුරලා කිව්වා හිගාකාලා හරි මම මගේ ළමයි ටික හදා ගන්නවා කියලා. නුඹේ ඇස් ඉදිරිපිටදීම හදනවා. නුඹ මට එපා කියලා, අතහැරදාලා ගියා .
எங்கட குடும்பத்தில 8 பொம்பிள பிள்ள. 4 சகோதரங்கள். அப்பா சீர் இல்ல. உழைச்சுத் தரமாட்டார். 19 வயதில நான் வேலைக்கு போனது. அரிவி வெட்டப்போறது, நாத்து நட போறது. 5 பேர் இருந்து வேலை செய்து 4 தங்கச்சிய கட்டி கொடுத்தனான். 2 தம்பிய படிக்க வைச்சுக் கொண்டிருக்க 29 வயதிலதான் கலியாணம் முடிச்சனான். 5 வருடம் நல்லா வைச்சிருந்தார். 93ம் ஆண்டு என்னையும் பிள்ளைகளையும் விட்டு போட்டு ஒரு பொம்பிளையை கூட்டிக் கொண்டு ஓடிட்டார். நான் பிச்சை எடுத்து எண்டாலும் என்ர பிள்ளைகளை வளர்ப்பன். உன்ர கண்ணுக்கு முன்னால வளர்ப்பன் நீ எனக்கு வேணாம் என்டு கழட்டிவிட்டன். நான் கஸ்டப்பட்டு வேல செய்துதான் மகளையும் மகனையும் படிக்க வைச்சன். 2001ம் ஆண்டில் வெளிநாடு ஜோர்தானுக்கு போனன். சரியான கொடுமை. 2 வருடம் இருந்திட்டு வந்திட்டன்
We stayed in the jungle from 1985 to 1990. The Army was beginning to come through the jungle and we didn’t know from where they would come. The Group [LTTE] informed us, so we were always ready with cooked food in a basket. If the Army came, we took the basket fist. We stayed in the jungle for 15 -20 days, cleared the land and built sheds. It couldn’t be seen from above, as if they were visible, they would bomb us from the helicopters.
1985 වර්ෂයේ සිට 1990 දක්වා කැලෑ පැත්තට තමයි, දුවගෙන ගියේ. ආම් එක කැලෑ පැත්තෙන් එන්න පටන් ගත්තා. කොයි පැත්තෙන් එනවාද කියා දන්නෙ නැහැ. LTTE එකෙන් අපිට විස්තර දුන්න, අපි කොයි වෙලෙත් බාස්කට්වල කැම උයාගෙන ලැස්ති වෙලා හිටියේ. ආමි එක එනවා කියලා දැන ගත්ත ගමන් අපි කරන්නෙ ඔය බස්කට් එක අරගෙන යන එක. දවස් 15 - 20 කැලෑ ඇතුළෙ බිම සුද්ධ කරලා, පැල්පත් ගහගෙන ඉන්නවා. උඩට පේන්න හොඳ නැහැ. දැක්කොත් හෙලිකොප්ටරය බෝම්බ දානවා.
85ம் ஆண்டிலிருந்து 90 வரை காட்டுப்பக்கம்தான் ஓடினம். ஆமி காட்டுப்பக்கத்தால வர வெளிக்கிட்டது. எங்கால வாராங்க என்டு தெரியாது. இயக்கம் சொல்லும். எந்த நேரமும் பாஸ்கட்டில் சமைச்சு சாப்பாடு இருக்கும். ஆமி வந்திட்டான் என்டால் தூக்கிறது முதலில் அந்த கூடைதான். 15 – 20 நாள் காட்டில கீழே துப்பரவு பண்ணி போட்டு கொட்டில் அடிச்சு இருப்பம். மேலே தெரியக் கூடாது. தெரிந்தால் டெலி அடிப்பாங்க.
In late August, there were no people as they had all left to India. The fishing boats would come beyond Thiruketheeswaram. They took the people at night without the Army’s knowledge and left us as Pallimunai. We got to the village and then walked 23 kilometers to the beach. If the Army saw us, they would shoot. We had to hire boats and gave them 400 or 500 per person. They loaded us between 2 to 3 a.m. in the morning. If we had been seen, we would have been arrested or shot. In this way, 15 people went missing from our village since 1985.
1985 අගෝස්තු මාසය අවසානයේ මිනිස්සු කිසිවෙකු නැහැ. මිනිස්සු ගියා, ඉන්දියාවට. ඉන්දියාවෙන් තිරුක්කේදීස්වරමි පැත්තට මාළු අල්ලන බෝටිටු එනවා. ආම් එකට හොරා රාති්ර කාලයේ බෝට්ටුවට දාගෙන ගිහිල්ලා, පල්ලිමුනෙයිවල බස්සනවා. පල්ලිමුනෙයිවල ඉඳලා පයින් යන්න ඕන. එතනින් එහාට වාහන නැහැ. ගමට ගහිල්ලා එතන ඉඳලා කි.මී. 23 ක් පයින් ගිහිල්ලා, මුහුදු වෙරළට යනවා. ආම් එක දැක්කොත් වෙඩි තියනවා. එතන ඉඳලා බෝට්ටුවක් හයර් කරගෙන, එක්කෙනෙකුට රු:400/= ක් රු: 500/= අරගෙන ගෙන ගොස් බස්සනවා. පාන්දර 2ට 3ට විතර තමයි, බෝට්ටුවට නගින්න දෙන්නෙ. අතරමඟදි දැක්කොත් අල්ලා ගන්නවා. අතරමඟදි අල්ලාගෙන වෙඩි තියලත් තිබෙනවා. අපේ ගමේම 1985 වර්ෂයේ මුහුදට ගිය මිනිස්සු තවමත් 15 දෙනෙකු නැහැ.
85 ஆவணி கடைசி ஒரு சனம் இல்ல. சனம் வெளிக்கிட்டுது இந்தியாவிற்கு. இந்தியாவிற்கு திருக்கேதீஸ்வரத்திற்கு அங்கால மீன் பிடிக்கிற போட்டுகள் வரும். ஆமிக்குத் தெரியாம இரவு டைம் ஏற்றிக் கொண்டு போய் பள்ளி முனையில விடுவாங்க. பள்ளிமுனையிலிருந்து அங்கால நடந்து அங்கால போனாலும் வாகனம் இல்ல. கிராமத்திற்கு போய் அங்கிருந்து 23 கிலோ மீட்டர் நடந்து கடற்கரைக்கு போறது. ஆமி கண்டால் சுடுவான். அங்கிருந்து போட் அயர் பேசி ஒரு ஆளுக்கு 400, 500 பேசி கொண்டு விடுவாங்க. விடியப்புறம் 2 மணி 3 மணிக்குத்தான் ஏத்துவாங்க. இடையில் கண்டா பிடிச்சிருவாங்க. இடையில் பிடிச்சி சுட்டிருக்காங்க. எங்கட ஊரிலேயே 15 பேர் இல்ல. 85ம் ஆண்டு கடலுக்குள்ள போனவங்க இன்னமும் இல்ல.
There was an announcement that there should be a fighter from every house given to them. They took the children from their homes. I hid my child in the garden amidst the manioc and banana trees. Some people told the Group [LTTE] that I didn’t send my child, so they came back and took my child away.. I wrote my family’s details to Prabaharan and gave it to the Political wing of the Group. Within 5 months, my child was back at home with a letter signed by Prabaharan. They told me that they won’t take my child and told me to show the letter to anyone who came. Now she works as a nurse after completing a course.
2006 වර්ෂයේ ගෙදරකින් එක් සොල්දාදුවෙකු ඕන කියලා, හැම ගෙදරකින්ම ළමයින්ව අරගෙන ගියා. දරුවා අල්ලාගෙන යන්න එයි කියලා මඤ්ඤොක්කා පඳුරු අස්සෙයි, කෙසෙල් ගස් අස්සෙයි හැන්ගුවේ. මගේ දරුවා යැව්වේ නැහැ කියලා, මිනිස්සු කියලා තිබුණු නිසා කොටි සංවිධානය ගෙයි ඇතුළට ඇවිල්ලා දරුවාව අරගෙන ගියා. මම අපේ පවුලේ විස්තර ලියලා ලියුමක් දුන්නා කොටි සංවිධානයේ දේශපාලන කණ්ඩායමකට. මාස 5කට පස්සෙ දරුවාව එවලා තිබුණා. ප්රභාකරන්ගේ අත්සනින් ලියුමක් දුන්නා. කොහේ ගියත් ඔබගේ දරුවා අල්ලන්නෙ නැහැ. කව්රු ආවත්, මේ ලිපිය පෙන්නන්න කියා කීවා. දැන් ඇය හෙදියක් අවුරුදු 3ක් ඉගෙන ගෙන වැඩ කරනවා.
2006 இல் வீட்டோட போராளி வேண்டும் என்று எல்லா வீட்டிலும் பிள்ளைகளை கொண்டு போயிட்டாங்க. பிள்ளையை பிடிக்க வருவாங்க எண்டு மரவள்ளிக்குள்ளையும் வாழைக்குள்ளயும் ஒளிக்கிறதுதான் வேல. என்ர பிள்ளையை அனுப்பேல்ல என்று சனம் எல்லாம் சொன்னதால இயக்கம் வீட்டுக்குள்ள வந்து பிள்ளையை கொண்டு போனாங்க. எல்லா இடங்களுக்கும் கடிதம் கொடுங்க பிரபாகரனிடம் போகட்டும். பிரபாகரனால பிள்ளை வீட்ட வரும் என்று சொன்னதால குடும்ப விபரத்தை எழுதி அரசியல் துறையில் கடிதம் கொடுத்து 5 மாதத்திற்குப் பிறகு பிள்ளையை அனுப்பினாங்க. பிரபாகரன்ட சைன்னோட கடிதம் தந்தாங்க. எங்க போனாலும் உங்கட பிள்ளையை பிடிக்க மாட்டாங்க நீங்க யார் வந்தாலும் இந்த கடிதத்தை காட்டுங்க என்று சொன்னாங்க இப்ப அவ நேர்ஸிங் 3 வருடம் படிச்சி வேலை செய்றா.
In 2009, we went to Udayar Katu on foot. We stayed there for 15 days. When we went back on the road the Army shelled and 15 people died on the spot that day. Even people staying inside a bunker died. We got into the water and ran across the road but the Army came and stopped us. The Army was behind us and the Group was in front of us. My mother and brother died in the shelling.
2009යේ පයින්ම ටැක්ටර්යට බඩු ටික පටවලා උඩයාර්කටිටු වලට ගිහිල්ලා දවස් 15ක් හිටියා. පාරෙ යනවිට මිනිස්සු වැටිලා, මැරෙනවයි තුවාල වෙනවයි තමා. ආම් එක ගහපු සෙල් එකෙන් එක තැන 15 දෙනෙක් මැරුණා. මිනිස්සු බංකර් ඇතුළෙ ඉඳලත් මැරෙනවා. අපි වතුරට බැහැලා පාරෙන් එගොඩ වෙලා දිව්වා. ආම් ඇවිල්ලා හරස් කළා. ආම් එක අපේ පිටු පස්සෙන්. කොටි කල්ලිය ඉස්සරහින්. අම්මයි මල්ලියි ශෙල් ප්රහාරයකින් මැරුණා.
2009 இல கால்நடையாக டிரெக்டரில் சாமான் ஏற்றி உடையார் கட்டில் 15 நாள் இருந்தம். ரோட்டில் போகும்போது சனமெல்லாம் சாகிறதும், விழுந்து காயப்படுறதும்தான். ஆமி அடிச்ச ஷெல்லில் ஒரே இடத்தில் 15பேர் செத்திட்டாங்க. சனமெல்லாம் பங்கருக்குள் இருந்தும் சாகிறது. ஷெல் வருது, ரவுண்ட்ஸ் வருது. தண்ணீருக்குள் இறங்கி ரோட்டைத் தாண்டி ஓடினம். ஆமி வந்து மறிச்சிட்டான். ஆமி எங்களுக்கு பின்னுக்கு இயக்கம் முன்னுக்கு அம்மாவும் தம்பியும் ஷெல்லில் செத்திட்டாங்க.
There should be a memorial. Let’s say a fighter died; he would have achieved so many things, if the memorial is there, we would remember his achievement. By fighters, I mean our children, who went to safeguard our land. We would like to have the “Thuyilum Illam” There should be no war and no Group. Everone should live in peace and happiness. The past should never return.
ස්මාරකයක් අනිවාර්යයෙන්ම ඕන. දැන් සටන්කාමියෙකු මැරුණයි, කියමු කෝ. ඔහු කොතරම් මෙහෙයක් කරන්නට ඇත් ද... ඒ වාගේ ස්මාරකයක් තිබුණොත් මේ වාගේ මෙහෙයක් කළා නේද කියලා මතකයේ තිබෙනවා. සටන්කාමින් කියන්නෙ, අපි බිහිකළ දරුවන් නේද, ගියේ. අපේ රට අපි ආරක්ෂා කරන්න ඕන කියලා නේ ගියේ. අපට තුයිලූමි ඉල්ලමි (සටන්කාම්න්ගේ සොහොන) ඕන කියන ආශාවක් තිබෙනවා.
இப்ப இருக்கிற நிலை நல்லம். இப்படியே இருக்கணும். இனி யுத்தமோ இயக்கமோ வரக்கூடாது. சமாதானமா எல்லா மக்களும் இப்படியே சந்தோசமாக இருக்கவேணும் என்ற ஆசைதான். எங்களுக்கு அப்படி ஒரு காலம் இனிமே வரக் கூடாது. நினைவுச் சின்னம் கட்டாயம் வேண்டும். ஒரு போராளி இருந்து செத்திட்டார் என்று வையுங்க. அவர் எத்தனையோ சாதனை செய்திருப்பார். அந்த நினைவு சின்னம் இருந்தா அந்த சாதனையை செய்தாரே என்ற நினைவு இருக்கும். போராளி என்று சொல்லும்போது பெத்த பிள்ளைகள்தானே போனது நம்மட நாட்டை நாம பாதுகாக்கனும் என்றுதானே போனது. எங்களுக்கெல்லாம் துயிலும் இல்லம் வர வேண்டும் என்ற ஆசை.