FInd our missing children
A mother from Pottuvil speaks about the unfortunate incidents she faced during the war
අපේ ළමයි අපිට සොයා දෙන්න
පොතුවිල් ප්රදේශයේ මවක් යුද්ධය හේතුවෙන් මුහුණ පෑ අවාසනාවන්ත සිදූවීම් පිළිබඳ කතා කරයි
எங்கள் காணாமற்போன குழந்தைகளைக் கண்டுபிடி
யுத்தத்தின் போது சந்தித்த துரதிருஷ்டவசமான சம்பவங்கள் பற்றி பொத்துவில் இருந்து ஒரு தாய் பேசுகிறார்
My name is Yamunadevi. I was born in Pothuvil. When I was 7, my father died. Altogether there were 4 children, my elder brother, my younger brother and my sister. When my elder brother was 22, he hanged himself,. When I was 17, I was married off. He was not a good person. He left me and went, and I had nothing to do with him. I brought up my 3 children with much difficulty.
මගේ නම යමුනාදේවී. පොතුවිල් ගම්මානයේ තමයි මම ඉපදුනේ. මට වයස අවුරුදු 7දී තාත්තා නැතිවුණා. අයියයි මල්ලියි නංගියි අපි ඔක්කොම ළමයි 4 දෙනයි. අයියට වයස අවුරුදු 22දී බෙල්ලෙ වැළදාගෙන මැරුණා. මාව වයස අවුරුදු 17 දී විවාහ කර දුන්නා. ඔහුත් හොඳ කෙනෙක් නොවෙයි. විටින් විට මාව අතහැරදාලා ගිහිල්ලා එකපාරට මාව එපාම කිව්වා. දරුවො 3 දෙනයි මට, දුක්මහන්සි වෙලා හැදුවා.
எனது பெயர் யமுனாதேவி. பொத்துவில் கிராமத்தில் பிறந்தனான். எனக்கு 7 வயது இருக்கேக்க அப்பா மோசம் போயிட்டார். அண்ணாவும் தம்பியும் தங்கச்சியுமா எல்லோரும் 4 பிள்ளைகள். அண்ணாவிற்கு 22 வயதில் வந்து தூக்கு போட்டு செத்திட்டார். எனக்கு 17 வயதில் கல்யாணம் கட்டிக் கொடுத்த்hங்க. அவனும் நல்லவனில்ல. என்னை விட்டு விட்டு போனதால் ஓரேயடியா நான் வேண்டாம் என்னிட்டன். 3 பிள்ளைகள் கஸ்டப்பட்டு வளர்த்து வந்தனான்.
The war started for us in 1990. We were displaced and walked all the way to Komari. We didn’t have anything to eat or drink. Nobody looked after us. I went abroad from Komari. I couldn’t send any mails home. I didn’t know the address. The person who sent me took all the money I sent home. I was abroad for two years When I came back, there was only the jungle and the soil left in our land. I saved some money and with that I built a room and raised my children there.
1990 වර්ෂයේ යුද්ධය. ඒ කාලෙ අවතැන්වී කෝමාරි වලට ගියා. පයින්ම ගියා. කන්න කෑම නැහැ. වතුරත් නැහැ. සොයා බලන්න කෙනෙක් ඇත්තෙත් නැහැ. ඒ වාගේ තත්ත්වයකින් තමයි කෝමාරි වලට ගියේ. කෝමාරිවල ඉඳලා පිටරට ගියා. ගමට ලියුම් එවන්න බැහැ. ලිපිනය දන්නෙත් නැහැ. මාව යවපු මිනිහා එවපු ඔක්කෝම සල්ලි අරගත්තා. අවුරුදු දෙකක් රට හිටියා. නැවත ආපු වෙලාවේ අපේ ඉඩමේ පස් ටික හැර වෙන කිසිවක් තිබුණෙ නැහැ. කැලයයි පසුයි විතරයි තිබුණේ. සල්ලි ටිකක් ගෙනාවා. ඒකෙන් කාමරයක් හදාගෙන ළමයි ටික තියාගෙන හිටියා.
90ம் ஆண்டு யுத்தம். அந்த நேரம் இடம் பெயரந்து கோமாரிக்குப் போனோம். நடந்து போனோம். சாப்பிடறதுக்கு சாப்பாடு இல்ல. தண்ணியுமில்ல. கவனிக்கிறதுக்கும் ஆளில்ல. அப்படியான நிலையிலதான் கோமாரிக்குப் போனோம். கோமாரியில இருந்து வெளிநாடு போனன். ஊருக்கு காகிதம் அனுப்ப ஏலாது. ஆட்ரஸ{ம் தெரியாது. அனுப்பினவன் அவ்வளவு காசையும் அனுப்ப அனுப்ப அவன் எடுத்திட்டான். 2 வருடம் வெளிநாட்டில இருந்தன். திரும்பி வந்த நேரம் எங்கட நிலத்தில மண்ணைத் தவிர எதுவுமேயில்ல. காடும் மண்ணும் மட்டும்தான் இருக்கு. கொஞ்ச காசு கொண்டு வந்தனான். அதில ஒரு அறையைக் கட்டிக்கொண்டு பிள்ளைகளை வைச்சு கொண்டிருந்தனான்.
When my elder son was 15, Karuna’s people took our children. Prabaharan didn’t take our children. We have never seen Prabaharan’s people in our village. My son escaped and came back. But when he ran off, they shot him in the leg. They came home and beat him and took him to the Vanni because they thought he would come back. I put a police entry and got a letter from the police. I took back my son from the rebels and registered him in the courts and surrendered him to the Army. For 12 years thereafter he was here, married with three children. As the children escaped, they took all the mothers to Kokkaticholai and Karuna’s men beat us. They told us to give their sons for the rebel cause and beat us.
වැඩිමහල් පුතාට වයස අවුරුදු 15යි. 10 වසර ඉගෙන ගනිමින් සිටියදී කරුණාගේ කල්ලිය තමයි අපේ දරුවො ටික අරන් ගියේ. ප්රභාකරන් අපේ දරුවන්ව අරන් ගියේ නැහැ. ප්රභාකරන්ගේ කටිටියව අපේ ගමේ දී අපි දැකලම නැහැ. මගේ පුතා නැවත පැනලා ආවා. ඔහු දුවගෙන එනවිට කකුලට වෙඩි තියලත් තිබුණා. දුවගෙන ආපු දරුවට ආයෙත් ඉන්න දෙන්නෙ නැතිව ගහලා අරගෙන ගියා. මෙහේ හිටියොත් ආපහු එයි කියලා වන්නියට අරන් ගියා. මම පොලිසියට පැමිණිලි කරලා පොලිසියෙන් ලියුමක් අරගෙන මගේ පුතාව සියලූම සංවිධාන මඟින් ආරක්ෂා කරගෙන අරන් ආවා. උසාවියේ ඇන්ට්රි දාලා හමුදාවට බාර කරලා අවුරුදු 12ක් මගේ පුතා ගෙදර හිටියා. විවාහ වුණා. ළමයි 3 දෙනෙක් ඉන්නවා. ළමයි දුවලා ආපු එකට අම්මලාව අරගෙන ගිහිල්ලා කොක්කඩිචෝලෙයි වලදී කරුණාගේ කටිටිය ගැහුවා. ළමයින්ව සංවිධානයට දෙන්න කියලා ගැහුවා.
மூத்;த மகனுக்கு 15 வயது 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கருணாட ஆட்கள்தான் எங்கட பிள்ளைகளை கொண்டு போனது. பிரபாகரன் வந்து எங்கட பிள்ளைகளை கொண்டு போகல்ல. பிரபாகரன்ட ஆட்களை எங்கட ஊரில நாங்க கண்டதேயில்ல என்ட மகன் திரும்பி ஓடி வந்திட்டான். அவன் ஓடி வந்தபோது காலிலயும் சுட்டுப் போட்டாங்க. ஓடி வந்த பிள்ளையை திரும்ப இருக்க விடாம அடிச்சு திரும்ப கொண்டு போயிட்டு இங்க இருந்தான் என்டா வந்திருவான் என்டு வன்னிக்கு கொண்டு போயிட்டாங்க. நான் பொலிசில் என்ரி போட்டு பொலிசில ஒரு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு என்ட மகனை அத்தனை இயக்கத்திற்கு மத்தியில என்ர மகன காப்பாத்திக் கொண்டு வந்தனான். நீதி மன்றத்தில் என்ரி போட்டு ராணுவத்தில சரண்டர் ஆக்கி 12 வருடம் என்ர மகன் வீட்டில இருந்தான். கல்யாணமும் கட்டிட்டார். 3 பிள்ளைகள் பிள்ளைகள் ஓடி வந்ததற்கு தாய்மாரை எல்லாம் கொண்டு போய் கொக்கட்டிச் சோலையில வச்சு கருணாட ஆட்கள் அடிச்சாங்க. பிள்ளைகளை இயக்கத்திற்கு தாங்கண்டு அடிச்சாங்க.
The army came and kidnapped my son in April 2008. I saw my son in the army camp. Not only I, my fellow villagers also saw him, but they denied that they brought him. I don’t know whether he is alive. I notified the Red Cross. I asked them to get my son released but they told me that we wouldn’t be able to get him out during this government, unlike during Chandrika’s Government. We could only give letters, even those were not answered.
2008.04.01 දින රාත්රී 12.00 න් පස්සෙ හමුදාව ඇවිල්ලා පැහැරගෙන ගියා. හමුදා කෑම්ප් එකේ මගේ පුතාව මම දැක්කා. මම විතරක් නෙවෙයි ගමේ ම්නිස්සුත් දැක්කා. ගෙනාවෙ නැහැ.... ගෙනාවෙ නැහැ..... කියලා කියනවා. ඒගොල්ලො කොහොමද ගෙනාවෙ නැහැ කියලා කියන්නේ.... මේ දක්වා තියාගෙන ඉන්නවාද දන්නේ නැහැ මම වහාම රෙඩ්කෝර්ස් කෑමිප් එකට දැනුම් දුන්නා. මගේ පුතාව අරන්දෙන්න කියලා. ඒගොල්ලො කීවා චන්ද්රිකා මැතිණියගේ ආණ්ඩුවේ තමයි අපට කරන්න පුළුවන් වුණේ. මේ ආණ්ඩුවේ ඇතුළට ගිහිල්ලා බලන්න බැහැ. ලියුම් තමයි දෙන්න පුළුවන් වෙන්නේ. ලියුමක් දීලා, ඒ ලියුමට විසඳුමක් ලැබුණෙ නැහැ.
2008 4ம் மாதம் 1ம் திகதி இரவு 12 மணிக்குப் பிறகு ராணுவம் வந்து கடத்திக் கொண்டு போனது. ராணுவ காம்பில என்ர மகன நான் கண்டனான். நான் மட்டுமல்ல ஊராக்களும் கண்டவங்க. கொண்டு வரல்ல கொண்டு வரல்லன்டு சொல்றாங்க. அவங்க எப்படி கொண்டு வரல்லண்டு சொல்லலாம். இதுவரைக்கும் வைச்சிருக்காங்களா இல்ல அவங்களுக்கு பசியில சாப்பிட்டாங்களா ஒன்டும் தெரியாது. நான் உடனே ரெட் குரஸ் கேம்பிற்கு அறிவிச்சனான். என்ர மகனை எடுத்துத் தாங்கண்டு சொன்னதற்கு அவங்க சந்திரிக்கா அம்மாவோட அரசாங்கத்திலதான் நாங்க செய்யலாம் இந்த அரசாங்கத்தில உள்ள போய் பார்க்க ஏலாது. கடிதம்தான் கொடுக்கலாம் கடிதத்தை கொடுத்து அந்த கடிதத்திற்கு முடிவு சொல்லல.
We were beaten up by the army. They did these atrocities because they accused us of joining the rebels. They took 25 persons and burnt all of them alive at the police station grounds. My aunt’s son was one of them. Earlier, Muslims, Tamils, Sinhalese were like brothers. After the 90’s conflict the Muslims betrayed us. The Muslims took all our possessions. Muslims also betrayed us. Even for some innocent persons, they informed that they are with rebels.
හමුදාවෙන් කොච්චරක් නම් බැට කන්නට ඇද්ද, අපි.... කොටි සංවිධානයට ගියා කියලා මොන තරම් අපරාධයක් නමි කළා ද, 1990 වර්ෂයේ අපි අවතැන්වී වෙන තැනකට ආවා. 25 දෙනෙක්ව දක්කාගෙන ගියා. පොලීසිය ඉස්සරහ පිටිටනියක එම 25 දෙනාවම පණ පිටින් දාලා තමයි ගිණි තිබ්බේ. අපේ පුංචි අම්මාගේ පුතෙක්වත් පිච්චුවා. මුල් කාලයේ දී මුස්ලිම් දෙමළ සිංහල හැමෝම සහෝදරයො වගේ තමයි හිටියේ. 1990 කලබල වලින් පස්සෙ තමයි මුස්ලිම් මිනිස්සුත් පාවා දෙන්න පටන්ගත්තේ... අපට හමුදාවත් අපරාධ කළා. මුස්ලිම් ම්නිස්සුත් බඩුමුටිටු ඔක්කෝම අරන් ගියා. මුස්ලිම් ම්නිස්සුත් පාවා දුන්නා තමයි. නිකන් හිටපු දරුවන්ව කොටි කොටි කියලා පාවාදීපු එක තමයි කළේ.
ராணுவத்திட்ட எவ்வளவு அடி வாங்கியிருப்போம். இயக்கத்திற்கு போனது எண்டு எவ்வளவு அநியாயம் எல்லாம் செய்தாங்க. 90ம் ஆண்டு நாங்க இடம் பெயரந்து மாறி வந்தனாங்க. 25 பேரை சாச்சி;ட்டு போனான். பொலிஸிற்கு முன்னால திடலில அந்த 25 பேரையும் உயிரோட உயிரோட போட்டுத்தான் நெருப்பு வைச்சாங்க. எங்கட சின்னம்மாட மகன் ஒருவனையும் எரிச்சாங்க ஆரம்ப காலத்தில் முஸ்லிம்ää தமிழ்ää சிங்களம் எல்லாம் சகோதரர்கள் போலதான் இருந்தாங்க. 90ம் ஆண்டு பிரச்சனைக்குப் பிறகுதான் முஸ்லீம் ஆட்களும் காட்டிக் கொடுத்தது. எங்களுக்கு ராணுவமும் அநியாயம் செய்தது. முஸ்லிம் ஆட்களும் சாமான்கள் எல்லாம் எடுத்திட்டு போனாங்க. முஸ்லிம் ஆட்களும் காட்டி கொடுத்ததுதான். சும்மா இருந்த பிள்ளைகளை புலி புலி என்டு காட்டிக் கொடுத்ததுதான்.
The present government hasn’t done anything for our children. I was raising my grandchildren because their mother was abroad. They haven’t given us food ration cards as their mother was abroad. We are living under this kind of government; are we to live or die? If it is good governance, for the sake of our children, they have to find our [missing] children from whichever camps they are in. There shouldn’t be a war like this in future. We don’t want to lose our children. We want our children to study and become good citizens. With that pledge I am raising my three grandchildren. If this government treats us well, there won’t be any war.
මේ ආණ්ඩුව මේ දක්වා මේ දරුවන්ට කිසිවක් කරලා නැහැ. මේ ගොල්ලන්ගෙ අම්මා රටගිය නිසා තමයි, මේ දරුවන්ව මම හදන්නෙ. අම්මා රට ගියා කියලා ආහාර මුද්දර පවා අපට දුන්නෙ නැහැ. ඉතින් මොන වාගේ ආණ්ඩුවක් යටතේ අපි ජීවත් වෙනවාද කියලා බලන්නකෝ.... අපි ජීවත්වෙනවාද නැත්නම් මැරෙනවාද?.. හොඳ ආණ්ඩුවක් නම් දරුවන්ගේ මුහුණ දිහා බලලා හරි, ඒගොල්ලන්ව කොයි කෑම්ප් එකේ තියාගෙන හිටියත් අපට හොයලා දෙන්න ඕන. ඉදිරි අනාගතයේදී මේ වාගේ යුද්ධයක් ඇති වෙන්න එපා. දරුවන්ව අපිට අහිමි කරන්න ඉඩ දෙන්නත් බැහැ. අපේ දරුවො හොඳට ඉගෙන ගන්න ඕන. යහපත් පුරවැසියන් වෙන්න ඕන. ඒ වාගේ අධිෂ්ඨානයකින් තමයි මේ මගේ මුණුබුරන් තුන්දෙනාව හදන්නේ. යුද්ධයක් ඇති නොවෙන්නට නම් හොඳ රජයක් විධිමත් පාලනයක් කරගෙන ගියොත් තමයි යුද්ධය ඇති වෙන්නේ නැත්තේ...
இந்த அரசாங்கம் இதுவரைக்கும் இந்த பிள்ளைகளுக்கு எதுவுமே செய்ததில்ல. இவங்கட தாய் வெளிநாடு போனதாலதான் இந்த பிள்ளைகளை வளரக்கிறன். தாய் வெளிநாடு போன எண்டு உணவு முத்திரையும் எங்களுக்குத் தரல. அப்ப எப்படியான அரசாங்கத்தில நாங்க சீவிக்கிறோம் பாத்தீங்களா நாங்க வாழறதா சாகிறதா நல்ல அரசாங்கம் எண்டா பிள்ளைகளிட முகத்திற்காகவாச்சும் அவங்க எந்த கேம்பில வைச்சிருந்தாலும் எங்களுக்குத் தேடித் தரோணும். நல்ல அரசாங்கம் நல்ல அரசாங்கம் எனடுதான் சொல்றாங்க நல்ல அரசாங்கம் எண்டா இந்த 10 வருடத்திற்கு இந்த அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவியும் செய்யேல்ல எங்கட முயற்சியிலதான் நாங்க வாழுறம எதிர்காலத்தில் இப்படி ஒரு யுத்தம் வரக் கூடாது. பிள்ளைகளை நாங்க இழக்கவும் கூடாது. எங்கட பிள்ளைகள் நல்லா படிக்கோனும். நல்ல பிரiஐயா வரோனும். அந்த வைராக்கியத்தில்தான் இந்த 3 பிள்ளைகளை வளர்கிறன். யுத்தம் என்றது வராம இருக்கோனும் என்றா நல்ல அரசாங்கம் நல்ல முறையில் நடத்தினால்தான் யுத்தம் என்றது வராமல் இருக்கும்.