Let's live in harmony
A father from Sammanthurai speaks about the atrocities of the war
අපි සහයෝගයෙන් ජීවත් වෙමු
සමන්තුරෙයි ප්රදේශයේ පියෙකු යුද්ධයේ ම්ලේච්ඡත්වය පිළිබඳ කතා කරයි
நாம் ஒற்றுமையாக வாழ்வோம்
சம்மான்தூரில் இருந்து ஒரு அப்பா போரின் அட்டூழியங்களைப் பற்றி பேசுகிறார்
I was born in the village of Sitrandukudi in Batticaloa district. Then my parents moved to Alambadi Vembu village in Akkaraipatru. In Grade 1, I studied in Sinhala in a Sinhala school but after the ethnic unrest, I had to study in a Tamil school. Ours is an old village, where people lived in peace and unity. Because of the conflict in the 90s, those who were studying in the Sinhala school left because of security concerns and and were settled in Ampara. The school stopped functioning. Because of the war, my education was completely lost. It was a loss to all the students. When I went to school again, there was an age difference of 2 or 3 years between me and the other students in Grade 9. I had to leave the school because I was so embarrassed. I learned tailoring and built my life. I loved a girl and married her.
මම ඉපදුණේ මඩකලපුව දිස්ත්රික්කයේ සන්දන්දකුදි ගම්මානයේය. එතකොට මගේ අම්මා සහ තාත්තා අක්කරෙයිපත්රුවේ ඇලම්බාඩි වෙම්බු ගම්මානයට ගියා. පළමුවැනි ශ්රේණියේ සිංහල පාසැලක ඉගෙන ගත් නමුත් ජනවාර්ගික නොසන්සුන්තාවයෙන් පසු මම දෙමළ පාසලක පාඩම් කළෙමි. අපේ ගම පැරණි, ජනතාව එකමුතුව හා සාමයෙන් ජීවත් වුණා.90 දශකයේ ගැටුම් හේතුවෙන් සිංහල පාසලේ අධ්යාපනය හැදෑරූ අය ආරක්ෂක හේතුන් නිසා නික්ම ගිය අතර අම්පාරේ පදිංචි වූහ. පාසලද වසා දමන ලදී. යුද්ධ කාලයේ වයස වැඩි වීමෙන් 9 වසරේ ඉගෙනුම ලබන ළමයින්ගේ වයසයි මගේ වයසයි අතර පරතරය අවුරුදු 2 - 3 ක් වැඩි වී තිබුණා. ලැජ්ජාව නිසා පාසල අතහැර යන තත්ත්වයක් ඇති වුණා. මම මැහුම් කර්මාන්තය ඉගෙන ගෙන එම කර්මාන්තය කරලා දියුණුවෙලා මම ගෑනු ළමයෙක්ට ආදරෙ කරාමගේ කැමැත්තට විවාහ කරගත්තා.
நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிற்றாண்டுகுடி என்ற கிராமத்தி;ல் பிறந்தனான். அதன் பிறகு தாய் தகப்பன் இடம் பெயர்வு காரணமா அக்கரபத்து என்ற கிராமத்தில் ஆலம்படி வேம்பு என்ற இடத்தில் வசித்து வந்தனான். சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றனான். 1ம் வகுப்பு வரை படிச்சு இனப்பிரச்சனை காரணமாக தமிழ் ஸ்கூலில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. 9 வயதில் திரும்பவும் 1ம் ஆண்டிலிருந்து கல்வி கற்க வேண்டி வந்தது. யுத்த காலத்தில் வயசு கூடி 9ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களின் வயசுக்கும் எனது வயசுக்கும் இடைவெளி 2,3 வருடம் அதிகமாக இருந்ததால் வெட்கம் காரணமாக பாடசாலையை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு தொழில் செய்து முன்னேற்றம் அடைந்தபோது விரும்பி திருமணம் முடித்தன். நடைபெற்ற யுத்தத்தின் பிரகாரம் என்னுடைய கல்வி முற்றாக மழுங்கடிக்கப்பட்டது. இது பாரிய மனவேதனையை தந்தது. அந்தக் காலத்திலே கல்வி கற்ற சகல மாணவர்களுக்கும் இது பேரிழப்பாக இருக்கிறது. தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை இருந்ததால கூலி தொழில் செய்துதான் ஐPவனம் நடத்த வேண்டியிருந்தது.
Because of the war, my education was completely lost. It was a loss to all the students. When I went to school again, there was an age difference of 2 or 3 years between me and the other students in Grade 9. I had to leave the school because I was so embarrassed. I learned tailoring and built my life. I fell in love with a girl and married her.
යුද්ධ කාලයේ වයස වැඩි වීමෙන් 9 වසරේ ඉගෙනුම ලබන ළමයින්ගේ වයසයි මගේ වයසයි අතර පරතරය අවුරුදු 2 - 3 ක් වැඩි වී තිබුණා. ලැජ්ජාව නිසා පාසල අතහැර යන තත්ත්වයක් ඇති වුණා. මම මැහුම් කර්මාන්තය ඉගෙන ගෙන එම කර්මාන්තය කරලා දියුණුවෙලා මම ගෑනු ළමයෙක්ට ආදරෙ කරාමගේ කැමැත්තට විවාහ කරගත්තා.
யுத்த காலத்தில் வயசு கூடி 9ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களின் வயசுக்கும் எனது வயசுக்கும் இடைவெளி 2,3 வருடம் அதிகமாக இருந்ததால் வெட்கம் காரணமாக பாடசாலையை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு தொழில் செய்து முன்னேற்றம் அடைந்தபோது விரும்பி திருமணம் முடித்தன்.
If we have a festival, whether it was a Tamil or Muslim, all the people participated. We lived like that. Because of the war, schools were closed, temples were destroyed. Tamils couldn’t go to a Muslim area and work and Muslims couldn’t go to a Tamil area and cultivate.
අපේ අවුරුදු ගැන කියනවා නම් දෙමළ අවුරුද්ද හෝ වේවා මුස්ලිම් අවුරුද්ද හෝ වේවා හැම අවුරුද්දකටම හැමෝම එන තත්ත්වයක් තමයි තිබුණේ. ඒ විදියට ජීවත් වුණ මේ මහ පොළොවේ යුද්ධය නිසා තමයි පාසල් වසා දැමුවේ. දේවාල කැඩුවා. බොහෝ කලබල ඇති වුණා. දෙමළ ජනතාවට මුස්ලිම් ප්රදේශ වලට ගොස් රැකියා කරන්න නොහැකි තත්ත්වයක් ඇති වුණා. මුස්ලිම් ජනතාවට දෙමළ ප්රදේශ වලට ගොස් ගොවිතැන් කරන්න නොහැකි තත්ත්වයක් ඇති වුණා.
எங்கட பண்டிகையை எடுத்துக் கொண்டால்; தமிழ் பண்டிகையானாலும் சரி முஸ்லீம் பண்டிகை என்றாலும் சரி எல்லாப் பண்டிகைக்கும் எல்லா மக்களும் கலந்து கொள்ளக் கூடிய நிலைதான் இருந்தது. அப்படி வாழ்ந்த இந்த மண்ணில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக பாடசாலை மூடப்பட்டன. ஆலயங்கள் இடிக்கப்பட்டன. பல பிரச்சனைகள் உருவாக்கப்பட்டது. தமிழர்கள் முஸ்லீம்களின் ஏரியாவுக்குள் சென்று தொழில் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. முஸ்லீம்கள் தமிழ் பிரதேசங்களுக்குள் சென்று விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
Muslims have taken over the land belonging to Korako Vinayagar temple. They told us that they would build a school, but instead they have built a mosque in a Tamil village. This has angered the Tamil people. Even after Good Governance and when people are living happily after the war, incidents like this, perpetuated by Muslims will create a disastrous backlash.
කෝරෙකෝ විනයාගර් විහාරයට අයත් ඉඩමක් මුස්ලිම්වරුන් විසින් පවරා ගෙන තිබෙනවා. ඔවුන් පාසලක් ගොඩනඟන බව අපට පැවසුවත් ඒ වෙනුවට ඔවුන් දෙමළ ගම්මානයක මුස්ලිම් පල්ලියක් ඉදි කරා. මෙය දෙමළ ජනතාව කෝපයට පත් කර ඇත. යහපාලනයෙන් පසුව, ජනතාව සතුටින් ජීවත් වන කාලයක මෙවැනි ආකාරයේ මුස්ලිම්වරුන අනුමත කරන ලද සිද්ධීන් ව්යසනකාරී පසුබෑමක් නිර්මාණය කරයි
கோரக்கோ விநாயகர் பெருமான் ஆலயத்திற்கு சொந்தமான காணித் துண்டை முஸ்லீம்கள் சுவீகரித்து விட்டார்கள். ஆந்த இடத்தில் பள்ளி வாசல் அமைக்காமல் கல்வி கற்பதற்கான சாலை ஒன்றை அமைப்பதாக கூறியிருந்தார்கள். ஆதனை மறுத்து விட்டு வேண்டும் என்று தமிழ் கிராமத்தில் பள்ளி வாசலை கட்டி மக்களுடைய வெறுப்பினை பெற்று இருக்கிறார்கள். நல்லாட்சி எனும் அடிப்படையில் சுமுகமான தீர்வு வழங்கப்பட்டு எல்லோரும் சந்தோசமாக வாழந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் குறிப்பிட்ட முஸ்லீம்கள் ஏற்படுத்தும் சம்பவங்களால் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். இவை நிறுத்தப்பட வேண்டும்
The assistance given by the Government should be given legally to those who need it most at the correct time. There are laws but these laws should be implemented. Only through education can we conquer the world. I am poor because I didn’t receive proper education.
නීතිය ගැන කියනවා නම්, රජයෙන් ලබාදෙන ආධාර සුදුසු පුද්ගලයන්ට සුදුසු කාලසීමාව තුල ලබා දෙන්න ඕන. පාසල් නොයන ළමුන් අනිවාර්යයෙන්ම අධ්යාපනය ලබන්න ඕන කියන නීති රීති ඇවිත් තිබුණත් ඒවා ක්රියාත්මක කරන්න ඕන. අධ්යාපනය තුළින් පමණයි, ලොව දිනාගන්න පුලූවන් වෙන්නෙ. මට අධ්යාපනය නොලැබුණු නිසා තමයි, මම දුප්පත්වෙලා ඉන්නේ.
சட்டம் எனும் விடயத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் பொருத்தமானவரகளுக்கு பொருத்தமான நேர காலப் பகுதியிலே வழங்கப்பட வேண்டும். பாடசாலைக்கு செல்லாமல் இருக்கின்ற மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற சட்ட திட்டங்கள் வந்திருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கல்வியால் மாத்திரம்தான் உலகத்தை வென்றெடுக்க முடியும்.
We say again, if there are problems within races, our country’s development will be completely stunted. We don’t want that bitter experience again. We should live together without any racial, religious bias. Politicians should stop rousing problems. The speeches and projects, that they do for their own profit are the main reason for the tensions between races. Our people are uneducated and poverty stricken. Let them live their lives. Don’t use them for your own profit and for a vote. My humble request to politicians is that you should stop using our people like knives at a fight for your own gain.
දැන් වුණත් අපි කියන්නම්. ජාතීන් අතර කලබල ඇති වන විට අපේ රටේ දියුණුව සහමුලින්ම නැතිවෙන තත්ත්වයක් තිබෙනවා. එම නීරසැති අත්දැකීම් නොමැතිව අපේ ජනතාව අපි හැමෝම එකතුවෙලා ජාතී ආගම් භේදයකින් තොරව එකට ජීවත්වීමේ කාලයක් උදාවෙන්න ඕන. ඒකට ඇතැම් දේශපාලඥයින් කරන කථා නවත්වන්න ඕන. ඔවුන්ගේ ලාභ ප්රයෝජන සඳහා කරන කථාවත්, ඔවුන්ගේ ක්රියාවන් නිසා තමයි ජාතික සමගිය නැති වී යන්නේ. මම අහන්නෙ අපේ ජනතාව, සාමාන්ය ජනතාව. සාමාන්ය ජනතාවට සාමාන්ය විදියට ජීවත් වෙන්න ඉඩ දෙන්න. දේශපාලන ලාභ ප්රයෝජන සඳහා ඔබට ලැබෙන ඡන්දය කියන කාඩ්පතක් වෙනුවෙන් අපේ ජනතාවට විරුද්ධව ඔබ පිහි උස්සාගෙන සණ්ඩු සරුවල් කරන ක්රියාදාමයන් නවත්වන්න ඕන. ඒකයි මගේ බැගෑපත් ඉල්ලීම.
இப்போது கூட நாங்கள் சொல்கிறோம். இனங்களுக்கிடையே பிரச்சனை வரும்போது எங்கள் நாட்டு முன்னேற்றம் முற்றாக தடைப்படக் கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன. அந்த கசப்பான அநுபவம் இல்லாது எங்கள் மக்கள் நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இனமத வேறுபாடின்றி ஒன்றாக வாழக்கூடிய அந்த தன்மை வர வேண்டும். அதற்கு சில அரசியல்வாதிகளுடைய பேச்சு நிறுத்தப்பட வேண்டும். அவர்களுடைய லாபத்திற்காக பேசக் கூடிய பேச்சையும் அவர்களின் செயற்திட்டங்களும்தான் இந்த இனமுறுகல்களுக்கு காரணமாக இருக்கின்றன. நான் கேட்கிறது என்னவென்டால் எங்கள் மக்கள் பாமர மக்கள். பாமர மக்களை பாமர மக்களாக வாழ விடுங்கள் அரசியல் லாபத்திற்காக உங்களுக்கு கிடைக்கிற வோர்ட் என்ற அட்டைக்காக எங்கட மக்களை நீங்க கத்தி தூக்கி சண்டையிடும் செயற்திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து