Help the people in need
A lady from Sammanthurai area speaks about the need to help others in need along with the struggles she faced with her family during the conflict.
උපකාර අවශ්ය පුද්ගලයන්ට උපකාර කරන්න
සමන්තුරේ ප්රදේශයේ කාන්තාවක් ගැටුම හේතුව්වෙන් ඇගේ පවුලේ අය සමඟ මුහුණ දුන් ගැටළු සමඟ අනිත් අයට උපකාර කිරීමේ වැදගත්කම පිළිබඳ කතා කරයි.
தேவையில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்
சம்மான்தூரில் இருந்து ஒரு பெண்மணி மற்றவர்களிடம் உதவி தேவைப்படுவதைப் பற்றி பேசுகிறார், மோதலின் போது அவள் குடும்பத்தினர் சந்தித்த போராட்டங்களுடன் சேர்த்து.
My name is Renuka. In 1990, when I was studying in Grade 7, the conflict was all around. I moved to Karaitivu and studied there up to O/L.
මගේ නම රේණුකා 7වන ශ්රේණියේ ඉගෙනුම ලබන විට 1990 වර්ෂයේ කලබල ඇති වුණා. එහි සිට කාරෙයිතිවු වලට ඇවිත් O/L දක්වා ඉගෙන ගත්තා. අපේ තාත්තව 1990 දී හමුදාව අරන් ගිය නිසා, ඊට පස්සෙ ඉගෙන ගන්න බැරි වුණා. පිරිමි සහෝදරයො නැහැ. මල්ලි විතරයි. අනික් හැමෝම ගැහැණු සහෝදරියන්.
எனது பெயர் ரேணுகா. தரம் 7 படிக்கேக்க 90ம் ஆண்டு பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. அங்கிருந்து காரை தீவு வந்து ழுஃடு வரை படிச்சன் எங்கட அப்பாவ 90ம் ஆண்டு ராணுவம் கொண்டு போனதால படிப்பை தொடர முடியல. ஆண் சகோதரர்கள் இல்ல. தம்பி மட்டும்தான். மற்ற எல்லோருமே பெண் சகோதரர்கள்.
When we were going to Karaitivu, many houses were torched. They put 6 or 7 boys in a house and burnt them. We were small then, but we saw these incidents with our own eyes. Once, to escape the army two men jumped into a well thinking there would be water, but there was no water in the well. The soldiers who were there threw a big stone and killed them. When we saw these things, we cried. My father told us that we would go somewhere else and took us away.
කාරෙයිතීවු ප්රදේශයට යන අතර මඟදී ගෙවල් බොහොමයක් ගිණි තියලා තිබුණා. තරුණයෝ 6, 7 දෙනෙකුව එක ගෙයක් තුළට දාලා ගිණි තියලා තිබුණා. පොඩි කාලෙ කෙළින්ම එම සිද්ධ්න් දුටුවා. අයියලා දෙදෙනෙකු හමුදාව අතට හසු නොවී බේරෙන්න වතුර තිබෙනවා කියා සිතා ගෙන ළිඳකට පැන්නා. ඒ ළිඳේ වතුර නැහැ. එතන සිටි හමුදාව ලොකු ගලක් උස්සලා ඔවුන්ගේ ඇඟට උඩින් දාලා ඒ ගොල්ලන්ව මරා දැම්මා. ඒ දෙස බලා අඬ අඬා සිටින විට අපේ තාත්තා කීවා අපි වෙන තැනකට යමු කියලා, අපිව එක්කගෙන ගියා
காரைத்தீவிற்கு போற இடைவெளியிலேயே நிறைய வீடுகள பத்த வச்சிட்டாங்க. 6,7 பொடியங்களையும் ஒரு வீட்டுக்குள்ள போட்டு எரிச்சிட்டாங்க. சின்ன ஆட்களா இருக்கேக்க நேரடியா அந்த சம்பவங்கள கண்டோம். இரண்டு அண்ணன்மார் இராணுவத்திட்ட கையில சிக்கக் கூடாது என்றதுக்காக தண்ணி இருக்கிறது என்ற எண்ணத்தில ஒரு கிணற்றில பாஞ்சிட்டாங்க. அதில தண்ணி இல்ல. அதில நின்ற இராணுவம் பெரிய கல்லத் தூக்கி அவங்கட மேலே போட்டு சாகடிச்சிட்டாங்க. இதெல்லாம் பார்த்து அழுதிட்டு இருந்தபோதுதான் எங்கட அப்பா சொன்னாரு நாங்க வேறிடத்திற்கு போவோம் என்டு கூட்டிட்டு போயிட்டாரு
When we were staying at the Veeramunai temple, the army took our father. Our father raised us without ever beating us when we were naughty. But when they took our father and beat him, we cried and held their feet. We begged them not to beat him. My father didn’t even kill an ant. And yet they took such a kind man.
වීරමුනෙයි කෝවිලේ සිටින විට තමයි හමුදාව ඇවිල්ලා අපේ තාත්තවත් අරන් ගියා. බොහෝ දෙනෙකුව බස් එක පිරෙන්නම පැටෙව්වා. එහි ගෙන ගොස් මරා දැමුවාද නැත්නම් දැනටත් ඉන්නවාද කියා කිසිවෙකු දන්නේ නැහැ. නිතර නිතර හමුදාව ඇවිල්ලා පාසල් සිසුන්ව අරගෙන ගිහිල්ලා පිටිටනියේ තියලා පරීක්ෂණය කියන නමින් දස වධ දුන්නා. එහිදීත් බොහෝ දෙනෙකුව අරගෙන ගියා. අපේ තාත්තා, අපිට ගහන්නේ නැතිව තමයි හැදුවේ. නමුත් අපේ තාත්තාව අරගෙන ගිහිල්ලා ගහන විට අපි හරියට ඇඬුවා. කකුලේ වැටිලා වැඳලා, පවා ඉල්ලූවා. නමුත් අතහැරියේ නැහැ. අපේ තාත්තා කූම්බියෙකුටවත්හිරිහැර කරන්නෙ නැහැ. ඒ වාගේ සිටි එක්කෙනාවත් අරගෙන ගියා.
வீரமுனை கோயிலில தங்கியிருக்கும்போதுதான் எங்கட அப்பாவையும் ராணுவம் வந்து கொண்டு போயிட்டாங்க. நிறைய பேர பஸ் புல்லா ஏத்தினாங்க. அங்க கொண்டு போய் சாக வச்சாங்களா இப்பவும் இருக்காங்களா எண்டது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. அடிக்கடி இராணுவத்தினர் வந்து ரவுண்ட் அப் பண்ணி பாடசாலை மாணவர்கள் எல்லாரையும் கொண்டு போய் மைதானத்தில் வச்சு விசாரணை என்ற ரீதியில கடும் சித்திரவதைபடுத்தினாங்க. எங்கட அப்பா எங்;கள அடிக்காமலயே வளர்திட்டாரு. ஆனா எங்கட அப்பாவ கொண்டு போய் அடிச்சபோது நாங்க கடுமையா அழுதிட்டம். காலில எல்லாம் விழுந்து கெஞசி கேட்டம் ஆனா விடவேயில்ல எங்கட அப்பா ஒரு சின்ன எறும்புக்கு கூட துரோகம் நினைக்க மாட்டாரு. அப்படி இருந்தவரையே கொண்டு போயிட்டாங்க.
We searched for our father everywhere including Colombo. We keep asking for information about our father still, but we’ve learned nothing. They gave us a death certificate from the DS office for the missing persons which we have with us.
අපේ තාත්තව එක එක තැන්වල සොයන්න පටන් ගත්තා. කොළඹ දක්වා සොයා බැලූවා. කොහේදීවත් අපට පෙන්නුවේ නැහැ. ඉන්න බවට ආරංචියක්වත් නැහැ. මේ දක්වා අපේ තාත්තා ගැන තොරතුරු සොයනවා මිස ලැබුණෙ නැහැ. ඩිඑස් ඔපිස් එකෙන් අතුරුදහන් වූ අයට මරණ සහතික වලට ලීවා. ඒක අපි ගාව තියෙනවා
எங்கட அப்பாவ ஒவ்வொரு இடமா தேட ஆரம்பிச்சோம். கொழும்புவரையும் தேடினம். எங்கயும் எங்கட்ட காட்டவும் இல்ல. இருக்கிறாரா என்கிறதுக்கு ஆதாரமும் எங்களுக்கு தரல. இதுவரை எங்கட அப்பாவைப் பற்றி தகவல் கேட்கிறோமே தவிர கிடைக்கல்ல. டி எஸ் ஒபீஸ் ஆல காணாமல் போனவங்களுக்கு மரண பதிவு வச்சாங்க அத வச்சிருக்கிறம்
We came back to our home in 1992. There were bodies, dragged out and eaten by dogs. There was a bad smell, which we couldn’t bear. We made small huts and had no electricity. We lived there, until the Red Cross gave us some assistance.
1992 වර්ෂයේ නැවතත් අපට අපේ තැනට එන්න සිද්ධ වුණා. මෙහි ආවාට පසු මළ මිනිවල කෑලි බල්ලෝ පාරට ඇදගෙන ගිහිල්ලා දාලා ගඳේ බැහැ. ඉන්නවත් බැරි වුණා. අපි ඇවිල්ලා කුඩා පැල්පත් හදා ගෙන හිටියා. කරන්ටි නැහැ. ඒ පැල්පත්වල තමයි, ජීවත්වුණේ. පසුව තමයි රෙඩ්කෝස් එකෙන් ඇවිල්ලා පොඩි පොඩි උදවි කළේ.
92ம் ஆண்டு திரும்பவும் நாங்க எங்கட இடத்திற்கு வரவேண்டி இருந்தது. இங்க வந்தபோது பிணங்களாக கிடந்த அரைகுறைகள நாய்கள் ரோட்டில இழுத்துப் போய் கடிச்சி நாத்தம் இருக்க முடியாத அளவுக்கு இருந்திச்சி. நாங்க வந்து சின்ன குடிசைகள் அமைச்சு கரண்ட் இல்ல. அந்த குடிசையிலதான் வாழ்ந்து வந்தோம். பிறகுதான் ரெட்குரஸில இருந்து வந்து சின்ன சின்ன உதவிகள் செய்தாங்க.
I fell in love and married my husband in 1996. We lived happily with our extended family. I want to support the education of other students like I want my own children to study. I tried to get educational material for the orphaned children here. I am doing many projects in collaboration with organizations, for widows and people who have lost their children. My aim is to live for other people and dedicate my life to social service and I have taught my children the same.
මම ආදරය කර මගේ ස්වාමිපුරුෂයා සමඟ 1996 දී විවාහ වුණා. අපි අපේ පවුල සමඟ සතුටින් ජීවත් වුණා. මගේ දරුවන් වාගේම මට අනෙකුත් දරුවන්ද අධ්යාපනය ලබනවා දකින්න මට අවශ්යයි. මෙහෙ ඉන්න අනාථ ළමුන් සඳහා අධ්යාපන උපකරණ ලබා ගැනීමට මම උත්සාහ කළා. මම වැන්දඹුවන්ට හා දරුවන් අහිමි වූවන්ට උපකාර කරන සංවිධාන සමග සහයෝගයෙන් බොහෝ ව්යාපෘති කරමින් සිටිනාවා. මගේ ඉලක්කය වන්නේ අන් අය සඳහා ජීවත් වීම සහ මගේ ජීවිතය සමාජ සේවය සඳහා කැප කිරීමයි. එය මම මගේ දරුවන්ටද කියාදී තිබෙනවා.
எனது கணவரை விரும்பி 96ம் ஆண்டு கல்யாணம் கட்டினனான். எல்லோருமே கூட்டு;க் குடும்பமாக சந்தோசமாக இருக்கிறோம். என்னுடைய பிள்ளைகளை ஒரு பிரண்டாக நினைச்சித்தான் பழகிறன். எல்லா பேரண்ட்ஸிட்டையும்தங்கட பிள்ளைகளை பிரண்ட்ஸா நினைச்சுப் பழகவேண்டும் என்று சொல்லுவன் வாழ்க்கையை சமூக சேவை என்ற ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறன். பிள்ளைகளிட கல்வியை எந்தளவிற்கு கொண்டு போகோனும் என்று நினைக்கிறேனோ அதுபோல ஏனைய மாணவர்களின் கல்விக்காக பல நிறுவனங்களிட்ட கதைச்சிருக்கிறன். தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்காக கல்விக்கான உபகரணங்களை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறன். அத்தோட வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட கணவனை இழந்தவங்க பிள்ளைகளை இழந்தவங்களுக்காக பல வேலைத்திட்டங்களை நிறுவனங்களோட சேர்ந்து செய்து கொண்டிருக்கிறன். மக்களுக்காக வாழ வேண்டும் என்ற நோக்கமே தவிர எனக்காக வாழ வேண்டும் என்ற நோக்கம் இல்ல அதைத்தான் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறன்.