The insurgency period
A mother speaks about the atrocities that took place during the JVP insurrection.
කැරලිකාරී කාලය
ජ. වි.පෙ කැරැල්ලේදී සිදු වූ ම්ලේච්ඡත්වය පිළිබඳ මවක් කතා කරයි.
கிளர்ச்சி காலம்
ஜே.வி.பி கிளர்ச்சியின் போது நடந்த அட்டூழியங்களைப் பற்றி ஒரு தாய் பேசுகிறார்.
In this area, oh, God…! Doors of houses had to be closed at six or seven in the evening. There were lots of troubles. In an emergency… we come out from the back of the house and not from the front side. All our identity cards were also collected by them. No boy was safe, somehow, they were recruited to it. It was the JVP group. So, the boys would talk to them, even unwillingly…. but they had to go. At that time, in this area and from all the places around here, they captured young boys and conducted lectures and this and that… everywhere.
මේ පැත්තේ, ඒ කාලේ, බුදු අම්මේ හය හත වෙන කටෙ දොරවල් වහනවා. සෑහෙන භීෂණයක් තිබුණා. හදිස්සියකට ගෙදර පස්ස පැත්තෙන්නේ එන්නේ. ඉස්සරහ පැත්තෙන් එන්නේ නෑනේ. අයිඩින්ටිටි සේරමත් එකතු කරන් ගියා. පිරිමි ළමයින්ට ඉන්න දුන්නේ නෑ. කොහොමහරි එතෙන්ට බන්දව ගන්නවා, මේ ජෙවිපි කාණ්ඬේ වැඩ තමයි. අකමැත්තෙන් තමයි පිරිමි ළමයි කතා කරන්නේ, ඒත් ඉතින් යන්න එපැයි යන්නේ නැත්නම් ඒගොල්ලන්ගේ දරුණු නීති තිබුණේ. ඒ කාලේ මේ පැත්තේ හැම තැනම පුංචි කොල්ලෝ අල්ලගෙන දේශනා, අරවා මේවා පැවත්වුවා.
இந்தப் பகுதியில… கடவுளே… ஆறு ஏழு மணிக்கே கதவெல்லாம் மூடுவோம். நிறைய கலவரங்கள் நடந்தது. அவசரத்துக்கு பின்புறமாகத்தான் வாறது. முன்பக்கமாக வருவதில்ல. ஐடின்டிடி எல்லாத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போனாங்க. ஐடின்டிடி எல்லாத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போனாங்க. அந்தக் காலத்துல இந்தப் பகுதில எல்லா இடத்திலயிருந்தும் சின்ன பொடியன்களைப் பிடிச்சுக்கொண்டு….. அந்த இந்த இதுகள நடாத்துவாங்க. பிரச்சாரங்கள் அதை இதை நடாத்துவாங்க. அது ஜேவீபி குழு. விருப்பமில்லாமல்தான் கதைப்பது… ஆனாலும் போக வேண்டுமே… போகல்லாட்டி அவங்கட கடுமையான சட்டங்கள்தானே இருந்தது…
There were guns at that time. During that period… if somebody talked against to them, they come at night, open the doors, take them away and kill them. Ask nothing…That was how it was. Several people were killed here in that manner. Those people... some of them covered their faces. They would go along this road. Some people from this village also had links with them. It was very fierce in Kudawella and Kottegoda. But it was not very dangerous here. There were only two or three persons here, that had joined it. They work and then they conduct lectures in the forests. At that time boys were dragged by force. They were dragged. It was compulsory to go. If not, they would have been dragged away at night. Such things happened.
ඒකාලේ තුවක්කු තිබුණා. මම නම් දැක්කේ නෑ. ඒ කාලේ කවුරුහරි විරුද්ධව කථා කලොත් රෑට ඇවිල්ලා දොරවල් ඇරලා අරන් ගිහිල්ලා මරනවා. එහෙම එකක් තිබුණා. මුකුත් අහන්නේ නෑ. එහෙම කිහිප දෙනෙක් මැරුවා මෙහේ. ගමේ මිනිස්සුත් කිහිප දෙනෙක්ම හිටියා ඒ කටිටිය ඉතින් සමහරු මූණු වහගෙනනේ එන්නේ. මේ පාරේ ගියා. මේ ගමේ මිනිස්සු සම්බන්ධ වෙලා හිටිය හොරාට. හැබැයි වැඩි දෙනෙක් නෙමෙයි. ඒක නිසා මේ පැත්තේ තත්වය එච්චරම නරක නැහැ. නමුත් කෝට්ටේගොඩයි, කුඩාවෙල්ල පැතිවල දරුණුවටම තිබ්බා. මේ කැලවල් වල තමයි දේශනා අරව මේවා තිබුනේ. බලෙන් කොල්ලෝ ඇදන් ගියා.අනිවාර්යයෙන් යන්න ඕන. නැත්නම් ඊළගට ඇද ගෙන යනවා රැට ඇවිල්ලා. මේ වගේ දේවල් ඒ කාලේ වුනා.
அந்தக் காலத்துல துப்பாக்கி இருந்ததானே… நானென்றா காணல்ல. அந்தக் காலத்துல யாராவது எதிராகப் பேசினால் இரவில் வந்து கதவுகளைத் திறந்து பிடிச்சிட்டுப் போய் கொன்றுபோடுவாங்க. அப்படியான ஒன்றுதான் இருந்தது. அந்த ஆட்கள்… இனி… சில ஆட்கள் முகத்தை மூடிக்கொண்டுதானே வருவாங்க. இந்த ஊர்க்காரங்களும் தொடர்புபட்டு இருந்தாங்கதானே. களவுல அதில் சேர்ந்திருந்தாங்க. இந்தக் காடுகளுக்குள்ளதானே பிரச்சாரங்கள் அதை… இதை நடாத்தினாங்க. ஊர்க்காரங்கள் பலரும் இருந்தாங்க.இளைஞர்கள் என்றது… ஏதொவொன்று இருந்தது… ஆட்கள் ஒன்றுசேர்ந்து… எப்படியோ காடுகளில் ஒன்று சேர்வது ஒன்று. இங்க அந்தளவு கடுமையாக இருக்கல்ல. அந்த குடாவெல்ல… கோட்டேகொட எல்லாம் மிகக் கடுமையாக இருந்தது. இவை இங்கு அந்தளவு கடுமையாக இல்லை. இங்கு ரெண்டு மூணு பேர்தான் இருந்தாங்க அதில் சேர்ந்தவங்க என்று. எங்கேயாவது காட்டில் ஒன்றுசேர்ந்து பிரச்சாரங்கள நடாத்தி… இனி அவர்களுக்கு இருக்குதானே வேலைகள்
We talk about certain things at the shop, and here and there against the JVP. One such person [from this village] had talked against it. They came at night and knocked at the door. The door was opened. He was killed on the spot at his own doorstep. Two gunshots... Yes. When taking that body to be buried, it was held near the ground like this [below the knees]. We could not carry it. I think he was a well-built tall person. I don’t know that much of detail. He might have talked unnecessarily at the shop.
අපි කඩවල් ගාවදි නිකන් අරව මේවා කතා කරනවනේ, ඉතින් ජ.වි.පෙට විරුද්ධව ඒක මනුස්සයෙක් එහෙම කථා කරලා රාත්රියේ ඇවිත් දොරවල් වලට ගහලා. දොර ඇරලා තිබිලා. දොරකොඩම තියලා වෙඩි උන්ඩ දෙකකින් මරල දැම්මා. ඔව්..මරණේ වල දාන්න ගෙනියන්න මෙහෙම පොළොවට පහත් කරලා. උස්සන් යන්න තහනම්. මම හිතන්නේ එය උස මහත් එක්කෙනෙක්. ඇත්තටම මම වැඩි විස්තරයක් දන්නේ නැහ. එයා සමහරවිට නිකන් කියවලා ඇති කඩේ ලඟ
நாங்க கடைகளுக்குப் பக்கத்தில... அங்க இங்கென்று கதச்சிட்டிருப்போம்தானே… இனி அதுக்கு எதிராக… ஜேவீபிக்கு எதிராக… அந்த மனி~ன் அப்படி ஒன்றக் கதச்சி… இரவு வந்தாங்க.. கதவுகளுக்கு அடிச்சாங்க. கதவைத் திறந்த. அய்யோ பாவம்… அந்த இடத்திலயே போட்டு கொன்னுட்டாங்க. அதாவது கதவடியிலயே வெச்சு… ரெண்டு முறை சுட்டாங்க. அந்த சாவு… இப்போ சாவைப் புதைப்பாங்கதானே… அடக்கம் செய்ய இப்படி நிலத்தில் சாய்த்துக்கொண்டு அப்படிக் கொண்டு போனது எரிக்க… கொண்டுபோக விடவே இல்ல. நான் நினைக்கிறன்… பல வரு~ங்களுக்கு சாகாத ஒரு சிறந்த திடகாத்திரமான ஒரு மனி~ன். சும்மா… இனி அங்க… இங்க என்று அவ்வளவு விளக்கம் தெரியாது. வாய் உளறியிருக்கும் கடையடிய அப்படி. இதற்கு கீழ்ல கடையொன்று இருக்குது. இனி.. அதற்குப் பக்கத்தில அவங்க ஒவ்வொருத்தரப் போட்டிருந்தாங்க போல அவங்களுக்கு எதிரா கதைக்கிறாங்களா என்று பார்க்கச் சொல்லி. அப்படியொரு கலவரம் இருந்தது.
There were guns and all that stuff during that period. Everything was there, they were ready for that [a fight]. They were in the forests. They were caught from time to time. Not at once because they were hiding here and there. Most of them were killed. Yes, the JVP cadres were killed. They were suppressed. The army did it by shooting and killing each one. The missing, there was no use in telling [the police]. The police was also not that interested [in searching for the missing] during that period.
ඒකාලේ තුවක්කු අරෙහේ මේවා නැති දෙයක් නෑනේ. ඒවටම ලේස්ති වෙලානේ ඉන්නේ. කැලෑවලලු කට්ටිය හිටියේ. ටික ටිකනේ ඉතින් ඇල්ලුවේ. එක පාරට නෙමෙයි. හැංගිලා හිටිය. අරෙහෙ මෙහේ හැංගි හැංගි හිටියනේ. හුගක් දෙනෙක් මැරුවා ඉතින්. ඔව් ජෙවිපි කාරයෝ.ඉවර වුනේ කියන්නේ මේ හමුදාවෙන් වෙඩි තිය තිය තමයි මරධනය කරේ. අතුරුදහන් වුනා ගොඩක් අය. ඒත් ගිහිල්ලා ඉතින් කිව්වට වැඩක් වුනේ නැහැනේ ඉතින්. පොලිසියත් ඉතින් එච්චර ඒ කාලේ ඒවා ගනන් ගත්තේ නැහැ
அந்தக் காலத்துல துப்பாக்கி இருந்ததானே… நானென்றா காணல்ல. அந்தக் காலத்துல யாராவது எதிராகப் பேசினால் இரவில் வந்து கதவுகளைத் திறந்து பிடிச்சிட்டுப் போய் கொன்றுபோடுவாங்க. அப்படியான ஒன்றுதான் இருந்தது. இல்லாமல் போனது என்று சொன்னா… ராணுவம் சுட்டு சுட்டு இது செய்ததால… அப்படியே அடக்கி ஒடுக்கிட்டாங்க... கொஞ்சம் கொஞ்சமாகத்தானே பிடிச்சாங்கள். ஒரேயடியாக அல்ல. ஒளிஞ்சிருந்தாங்க. அங்க இங்க என்று ஒளிஞ்சி ஒளிஞ்சி இருந்தாங்க. நெறையப் பேரக் கொன்றாங்க. பொலீசும் இனி அந்தளவு அந்தக் காலத்துல… மிச்சம் இருந்ததே அந்தக் காலத்துல துப்பாக்கி அது இது… இல்லாத ஒன்றும் இல்லயே… அதற்கென்றே ஆயத்தமாகத்தானே இருந்தது. காடுகளுக்குள்ளதான் இருந்ததாம் ஆட்கள்…
. [After the war], the change is that we can now live, minding our own business. Those days, we were afraid to go out, even to work. There was no certainty or hope, that the person who leaves [in the morning], would return. These memories will be there only until we live. The children have no interest in that.
(යුද්ධෙන් පසු ) වෙනස ඉතින් තම තමන්ගේ රැකියාව කරන් ජීවත් වෙන්න පුලුවන් වෙලා තියෙනව. නැත්නම් ඉතින් රැකියාවකට යන්නත් බයයිනේ, ගිය මනුස්සයා ගෙදර එනකන් විශ්වාස නැහැ ඒ කාලේ. අපිට නම් ඉතින් අමතක වෙන්නේ නැහැ කිසි කෙනෙකු, අපි ජීවත් වෙනකල් ඒවා තියෙයි. ළමයින්ට නම් ඒවා එච්චර වැදගත් නැහැ.
யுத்தம் முடிஞ்சதப் பற்றி மாற்றம் என்னன்றா… இனி… தத்தமது தொழில்களச் செய்திட்டு வாழ முடியுமாயிட்டுதுதானே… இல்லையென்றா தொழிலுக்குப் போகவும் பயம்தானே. இப்போது வெளிய சென்ற மனி~ன் வீட்டுக்கு வரும்வரைக்கும் நம்பிக்கையில்லயே இல்லாட்டி… எங்களுக்கென்றா மறக்காது யாருக்கும்… ஏனைய புள்ளைகளுக்கு அது கணக்கிலில்லதானே.
I think, the children nowadays do not care for what we say. Children are such, these days. It's not a lie. They are not listening. We would watch over our children with care those days. But it is not like that now. In some places there are children who do not even listen to their parents. It is at such times, that such incidents [as told above] happen.
මට නම් ඉතින් කියන්න තියෙන්නේ, දැන් ඉන්න ළමයි අපි කිව්වට ගණන් ගන්නේ නෑ. එහෙම ළමයි දැන් ඉන්නේ. බොරු නෙමෙයි. දැන් ඉන්න ළමයි අහන්නේ නැහැ. අපිනම් අපේ ළමයි ප්රවේශම් කරගෙන අපි හිටියා. එහෙම නෙමෙයි සමහර තැන්වල ඉන්න ළමයි, අම්මල තාත්තලා කියන දේවත් අහන්නේ නෑ. එහෙම වුනාම තමයි මම කලින් කිව්ව දේවල් වෙන්නෙ.
எனக்கென்றா இனி… இப்போதுள்ள புள்ளைகள் நாம சொன்னாலும் கணக்கெடுக்க மாட்டாங்க. அப்படியான புள்ளைகள்தான் இப்ப இருக்காங்க. பொய்யில்ல. இப்போதுள்ள புள்ளைகள் கேட்க மாட்டாங்கள்… நாங்களென்றா… எங்களின்ற பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொண்டு நாங்க இருந்தோம். அப்படியல்ல சில இடங்களில் உள்ளவங்க. அம்மா அப்பா சொல்கின்ற பேச்சைக்கூட கேட்க மாட்டாங்க. அப்படி நடந்தால்தான் அத்தகைய சம்பவங்கள் நடக்குது.