There is a reason I wear white...
An ex-JVP member speaks of the pain he suffered during his arrest
සුදු ඇඳීමට හේතුවක් තිබේ...
හිටපු ජ.වි.පෙ සාමාජිකයෙකු ඔහු අත්අඩංගුවට ගැනීමෙන් පසු පීඩාවට පත්වූ වේදනාව ගැන කතා කරයි
வெள்ளை அணிய
முன்னாள் ஜே.வி.பி. தனது கைதுக்குப் பின்னர் ஏற்பட்டதுடன் வலி பற்றி பேசுகிறார்
This is Yahamulla in Akuressa in the Matara district. I have two sons and one daughter. We didn’t have much. We didn’t get anything because once you are a JVPer, no one gives any support. I raised them with much difficulty. Because of this, I am no longer involved in politics - I won’t even vote.
මේක මාතර දිස්ත්රික්කයේඅකුරැස්ස කොට්ටාශයේ යහමුල්ල තමයි. මටහිටියා ළමයි තුන්දෙනෙක් - පුත්තුදෙන්නයි එක දුවයි. අපිට කිසිමදෙයක් නෑ. මොකෝ ජේවීපීවුණායින් පස්සේ ඒක දෙන්නෙත්නෑනේ. බොහොම අමාරුවෙන්ස්වයං උත්සාහයෙන් හැදුවෙවැඩුවෙ. නමුත් අවසානයේවැරදියි කියන තැන තමයි හිටියේ. මම දේශපාලන මට්ටමෙන් කිසිමදෙයකට ඊට පස්සේ ඡන්දය කියනඑක නම් දාන්නේ නෑ. දේශපාලනයක්දැනට නෑ.
இது மாத்தறை பிரதேசத்திலுள்ள அக்குரஸ்ஸவிலுள்ள யாகமுல்ல கிராம சேவகர் பிரிவுக்குற்பட்டது. எனக்கு இரு புதல்வர்கள் மற்றும் ஒரு பெண்பிள்ளை. எங்களுக்கு ஒன்றுமே இல்லை. எங்களுக்கு பாடசாலையிலிருந்தும் ஒரு உதவி கிடையாது. நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரானதும் ஒரு உதவியும் கிடைக்கவில்லை. சரியான கஷ்டத்தின் மத்தியில் அவர்களை வளர்த்தேன். நாங்கள் சரியோ பிழையோ எங்களுக்கு இருக்க நேர்ந்தது. ஆனால் கடைசியில் பிழை சொல்லும் இடத்தில் தான் நாங்கள் இருந்தோம். நான் அரசியல் ரீதியில் இதற்கு பிறகு ஒரு வாக்கு கூட போட மாட்டேன்
There is a reason that I only wear white. That is because I died on 8th August 1991. That night while I was with the JVP I was arrested. In those days of terror, it was like what happened in the North - if you were taken today, you weren’t kept around to see tomorrow. Yet, I survived.
මම සුදු අදින්නේ තේරුමක් ඇතුව. මොකද ඒ හේතුව මම 1991 අගෝස්තු 8 වෙනිදා රෑ 4.40 න්පස්සේ එවැනි තීරණයක් ගත්තේමම ඔය ජාතික විමුක්ති පෙරමුණ පක්ෂේ ඉන්දෙද්දීඑදා රාත්රියේ තමයි මාව අවසන්ගමන් ගියේ. මාව අත්අඩංගුවටගත්ත. ඒ භීෂණ සමවල් වලඋතුරේ තිබුනා විදියට අද ගෙනිච්චනම් ආයේ හෙට වෙනකන් තියන්නේනෑනේ. එකෙන් මං බේරුණා.
நான் வெள்ளை உடுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் 1991 ஆகஸ்ட் 8ம் திகதி இரவு 4.40ற்கு நான் அந்த தீர்மானம் எடுத்தேன். என்னுடை கடைசி பிரயாணம் மக்கள் விடுதலை முன்னணியின் இருக்கும் போது அந்த இரவு என்னை கைது செய்து என்னை கொல்ல பார்த்தார்கள். நான் ஒரு மாதம் அங்கிருந்தேன். வடக்கிலிருந்தது போல் கைதாகினால் அடுத்த நாளை யாரும் பார்க்க இயலாது. ஆனால் நான் தப்பி பிழைத்தேன்.
We got only one meal a day; but sometimes it could have been every few days…they would put sand, stones and glass in the food. It was in the nights that they would question us, beat us, torture us or kill us. They would throw people onto logs, or tyres. We could hear people scream or moan. They were burning people. I was taken a few times but not burned.
දවසට එක වේලක් විතර ආහාරවේලක් හම්බ වෙනවා, සමහර විටඒක දවස් හතරකට පහකට වෙන්නපුළුවන්… එකෙත් ඔය වැලි ගල්දාල විදුරු කටු දාලනේ දෙන්නේ. රාත්රීකාලයේ තමයි මේ ප්රශ්න විචාරඔක්කොම තියෙන්නේ. ගහන්නේදඩුවම් දෙන්නේ මරන්නේ. දර ගොඩවල් වලට වැටෙනවා, ටයර් ගොඩවල් වලට වැටෙනවා, මිනිස්සු කෑ ගහනවා. කෙදිරිගානවා. මේ ගෙනියන්නේ පුච්චන්න තමයි, එහෙම කීප සැරයක්ගෙනිහිල්ලත් මාව පිච්චුනේ නැ.
எங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நேரம் தான் உணவு. ஒரு சில நேரங்களில் 4- 5 நாட்களுக்கு பிறகுதான். மற்றும் உணவில் மணல் போட்டு கண்ணாடி துண்டுகள் போட்டு கொடுப்பார்கள். ஆனாலும் நாங்கள் சாகவில்லை. அந்நேரத்தில் இருந்த விசேட அதிரடி படையோ கருப்பு பூனைகளோ எனக்கு தெரியாது. இரவு நேரமே எங்களுடைய விசாரணைகள் தொடங்கும். அடிப்பதும். தண்டனை கொடுப்பதும் அந்த நேரமே. எங்களுக்கு மற்றவர்கள் இருப்பது தெரியாது. ஆனால் உணர்ந்தோம். டயர்களில் விறகுகளில் தூக்கி போடப்பட்டவர்கள் கத்தி அலறுவார்கள் முனகுவார்கள். என்னை பல தடவைகள் கொண்டு சென்றார்கள். ஆனால் என்னை எறிக்கவில்லை
There are tortures that hurt to speak about…they would make us drunk, then strip us. Then make us sit on bottles…how can we do that? That was torture. Sometimes they would put oil in our food but not give us water after. Sometimes, they would use electricity on our fingers.
හිරිහැරද කියන්නේ විවෘතව කතාකරොත් කියන්න බැරි හිරිහැරතියෙනවා. ඒ කියන්නේ මත්පැන්බොන්න දීලා නිර්වස්ත්ර කරලා බීමබෝතලේ තියෙන්නේ, ඒක උඩඉදගන්න පුලුවන්ද ගුද මාර්ගේතියල.. බෑ නේ? ඒ කියන්නේ දඩුවමදෙන්නේ එහෙම. අනිත් එක තමයිකන්න දෙන්නේ තෙල් දාපුවා දීලාවතුර නොදී අරිනවා. ඔය වගේදඩුවම් දෙනවා. ඊටපස්සේ මේඇගිලි දෙකෙන් එල්ලෙන කරන්ට්එක අල්ලනවා.
அந்த சித்திரவதைகளை பற்றி நான் வெளிப்படையாக கூற முடியாது. அவர்கள் எங்களை குடிக்க வைத்து, உடைகளை கழற்றிஇ எங்களை போத்தலின் மேல் உட்கார வைப்பார்கள். எங்களுக்கு எப்படி அதை செய்ய முடியும்? எங்களுக்கு தண்டனை கொடுத்தது அவ்விதத்தில். எங்கள் உணவில் எண்ணெய் ஊற்றி சாப்பிட்டவுடன் குடிக்க தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். விரல்களில் மின்சாரம் செலுத்துவார்கள். பிறகு எங்களை தண்ணீரில் வீசுவார்கள். எங்கள் இரத்தம் உறைந்து போகும்.
I was thrown onto some hay. My eyes were bound. They gave me some advise before letting me go - ‘ you do as we say. You run, don’t stop. If you stop, you won’t get far”. That time, I took their advise.
ඔය පිදුරු ගොඩ උඩට මාව දැම්ම. මගේ ඇස් දෙක බැදලා තිබුණු එකආපහු ලිහල වෙන අදිනහරගැටයක් වෙන්න ඇති දාල පිදුරුගොඩට විසි කරා. විසි කරන්නඉස්සෙල්ල මට පොඩි ඇඩ්වයිස්එකක් දුන්නා. “උඹ මේ කියන විදියටකරපන්. උඹ දුවපන් දුවලම පලයන්යන තැනක, නවතින්න එපා. උඹනැවතුනොත් උඹට යන්න බෑ.” මංඑත් හැබැයි ඒ වෙලාවේ ඒ කියපුටික ඇහුව.
நான் வைக்கோலில் தூக்கி எறியப்பட்டேன். என் கண்கள் இறுக்கமாக கட்டப்பட்டு எறியப்பட்டேன். எறிய முன்னால் எனக்கு ஒரு புத்திமதி வழங்கப்பட்டது. “நாங்கள் சொல்லும்படி கேள். நீ ஓடு ஓடும்போது நிற்காதே. நீ நின்றால் உனக்கு போக முடியாது” நான் அந்த நேரத்தில் அவர்கள் சொன்னதை கேட்டேன்.
Personally, I feel that there is no such thing as Tamil, Muslim, Burgher. There is no such thing because we are all human. The reason for division is the people in power that divide us.
පුද්ගලික වශයෙන් එහෙම කරුණුකතා කරොත් දෙමල මුස්ලිම්බර්ගර් කියල එහෙම ජාතියක් නෑ. අන්න එතෙන්දි අපි මනුස්සයෝ මෙතන හේතුකාරක ඔක්කොමකරේ මේ ඉන්න රදල කොටස. නැත්නම් මනුස්සයෝ අපි.
தனிப்பட்ட ரீதியில், நான் தமிழ், முஸ்லிம், பேர்கர் என்று வித்தியாசங்கள் இல்லை என்று நினைக்கிறேன். சமய கோட்பாட்டில் இது ஒரு சிக்கலான விடயம். அந்த நிலையில் இப்படிப்பட்ட தமிழ், முஸ்லிம், பேர்கர் என்று பிரிவினை கிடையாது. இப்பிரிவினையை உண்டாக்கியது அதிகாரத்தில் உள்ளவர்கள். இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் மனிதர்கள்